Archive for the ‘ஷிர்க்’ category

சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில் இட-ஒதுக்கீடு கேட்பதுஏன்?

திசெம்பர் 20, 2022

சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில்  இட-ஒதுக்கீடு கேட்பது ஏன்?

சமத்துவம், சகோதரத்துவம், பேசும் மதங்களில் திடீரென்று எப்படி ஜாதி வந்தது?: சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம், இப்பொழுது சதவீதத்தில் இட-ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளன. எங்களிடமும் ஜாதி, ஜாதித்துவம், பிரிவுகள் உள்ள என்று ஒப்புக் கொள்ளும் வரைக்கு வந்து விட்டன. இதுவரையில் ஏன் இன்னும், இந்துமதம் தான் ஜாதிய கட்டமைப்பிற்கு காரணனம் என்று சொல்லிக் கொண்டு வரும் நிலையில், இந்த பிரகடனங்கள் செய்யப் பட்டு வருகின்றன. கிருத்துவ டினாமினேஷன்கள் இனி ஜாதிப் பிரிவுகள் ஆகலாம். சுன்னி, ஷியா, அஹமதியா, போரா, போன்றவை இச்லாமிய ஜாதிகள் ஆகலாம். சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்டுள்ள வகுப்பினர்களுக்கு (Socially and educationally backward classes) இட-ஒதுக்கீடு என்பதை, ஜாதி ரீதியில் திரித்து பேசி, விளக்கம் கொடுக்கப் பட்டு வருகிறது. OBC (Other Backward Classes) என்றதிலும், மதரீதியில் இட-ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகிறது. அதில், முஸ்லிம்கள் சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் பெற்று வருகின்றனர்.

50% / 69% கணக்கை சுற்றி வளைக்க உள்-இட-ஒதுக்கீடு கொடுத்தது: அ.தி.மு.க, 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்தது[1]. மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, 2007 செப்டம்பர் 15 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடாக 3.5%-ஐ முஸ்லிம்களுக்கும், 3.5%-ஐக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கியது[2]. இது இந்திய அரசியல்நிர்ணயச்சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்றாலும், மற்ற மாநிலங்களில் இத்தகைய இட-ஒதுக்கீடு கொடுக்கப் பட்டு, எதிர்க்கப் பட்டு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கு நிலுவையிலுள்ளது. ஆகையால், கொடுத்து வைப்போம், அவர்களும் இட-ஒதுக்கீடு பெற்று அனுபவிக்கட்டும். பிறகு, கொடுத்து விட்டதால், அவர்கள் அனுபவித்து வருவதால், அதனை திரும்பப் பெறக்கூடாது என்றும் மேல்முறையீடு செய்யலாம், அரசியல் ரீதியில், எதிர்ப்பு மனு இருக்காது. ஆக, அப்படியே அமைதியாக விவகாரத்தை மூடி விடலாம் என்றும் திட்டம் போட்டிருக்கலாம்.

முஸ்லிம்களின் மக்கள் தொகையும், இடஒதுக்கீடும்: முஸ்லிம்களின் மக்கள் தொகை முஸ்லிம்களின் மக்கள் தொகை நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை, கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை 24 சதவீதம் அதிகரித்துள்ளது[3]. 2022ல் மேலும் உயர்ந்துள்ளது. போதாகுறைக்கு, பன்களாதேசத்திலிருந்து வேறு உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். அஸாமில் இதுவே 5 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சினையாகி, இப்பொழுது அமுக்கப் பட்டு விட்டது. இதன் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் சதவீதம் 13.4-ல் இருந்து 14.2 ஆக உயர்ந்துள்ளது[4]. பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இசுலாமியர்களின் மேம்பாட்டிற்காக, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு அரசு அரசாணை எண். 85. பிற்படுத்தப்பட்டவகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 29.7.2008 இன் படி பிற்படுத்தோர் வகுப்பினர்க்கான 30% இட ஒதுக்கீட்டில் இசுலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 3.5% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1992ல் இது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், மத்திய அரசின் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. இதன் காரணமாக, 1980ல்இருந்து தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது.

முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு;  இது குறித்து ஏப்ரல் 2022ல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் பைசல் அகம்மது கூறியதாவது: “இந்தியாவில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13.4 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்[5]. ..எஸ் பணியில் 3 சதவீதம், பட்டப் படிப்பு படித்தவர்கள் 3 சதவீதம், ரயில்வேயில் 4.5 சதவீதம் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்[6]. இந்நிலையில் 2007ம் ஆண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்திய சமூகங்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகளை நீதிபதி சச்சார் கமிஷன் கண்டறிந்தது. இந்த இரு கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீட்டை திமுக அமல்படுத்தியது. தமிழகத்தில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வரும் 22ம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது”.

17-07-2022 அன்று கோரிக்கை 20-12-2022 அன்றும் வைத்தது: ராமநாதபுரத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் உமா் பாரூக் தலைமை வகித்தார். மாவட்டப் பேச்சாளா் பரகத் அலி வரவேற்றார். மாநில துணைத்தலைவா் ஆல்பா நசீா், மாநிலச் செயலாளா் முஹமது ஃபரூஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்[7]. முஸ்லிம்களுக்கு தமிழக அரசு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது[8]. இப்பொழுது மறுபடியும், 20-12-2022 அன்று இதே கோரிக்கையை, தவ்ஹீத் ஜமாத் வைத்துள்ளது. 7% எப்படி எங்கிருந்து வந்தது, எப்படி அமூல் படுத்தப் படும் என்று கவனிக்க வேண்டும்.

இஸ்லாம், ஜாதி, ஒதுக்கீடு: இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பது குரான்படி அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு எதிராக எந்த உண்மையான முஸ்லீமும் இஸ்லாத்தில் ஜாதி உண்டு, ஆகையால் அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய ஏமாற்றுவேலையல் முஸ்லீம்கள் செய்து வருகிறார்கள். இப்பொழுது, வெளிப்படையாக கோரிக்கைகளும் வைக்கப் படுகின்றன. அதாவது குரானை மதிக்காமல், முஸ்லீம்கள் மாறாக செயல்பட்டு வருகிறர்கள். இங்கு அவர்களின் அல்லாவின் கோபத்தைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது. முஸ்லீகளிடையே உள்ள முரண்பாடுகளை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர். இறையியல் வல்லுனர்களும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். 50% மற்ரும் 69% என்னாகும் என்று தான் கவனிக்க வேண்டும்.

இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா? இஸ்லாத்தில் சமத்துவம், தோளோடு தோள் தொட்டுக்கொண்டு, ஒட்டிக்கொண்டு, கட்டிக்கொண்டு இருப்போம், தொழுவோம்……………என்றெல்லாம் பேசி, பிர்ச்சாரம் செய்யும் வேலையில், எப்படி, இப்படியொரு கோரிக்கை இடுவர்? இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா, இல்லையா என்று அவர்கள் வெளிப்படையாக தமது சித்தாந்தத்தை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களது இறையியல் வல்லுனர்களே விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், இரண்டு விதமாக பேசிவருவது மக்களுக்கு விசித்திரமாக உள்ளது. இருப்பினும் ஏதோ காரணங்களுக்காக இட-ஒதுக்கீடு கோரிக்கையை மட்டும் ஆதரிப்பது போலத் தெரிகிறது.

இந்தியர்களை ஏமாற்றும் வேலை: அம்பேத்காரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லை, நேருவே ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மதரீதியில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் என்ன விஷயம் என்று இந்தியர்களுக்கு விளங்கவில்லை. சட்டரீதியாக முடியாது என்பதனை, ஒரு அரசியல் கட்சி முடியும் என்று வாக்குறுதி கொடுப்பது, இப்படி அழுத்தத்தை ஏற்படுத்துவது, மக்களை ஏமாற்றுவது என்ற முறையில் செல்லும் இந்த விவகாரத்தை இந்தியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இப்பொழுது தலித் போர்வையில் எஸ்சி முஸ்லிம்களுக்கும் இட-ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் கேட்கப் பட்டுள்ளது. மத்திய அரசு பரிசீலினையிலும் உள்ளது.

© வேதபிரகாஷ்

20-12-2022


[1] தமிழ்.இந்து, முஸ்லிம் உள் இடஒதுக்கீடு: சட்ட மறுசீரமைப்பு நடக்குமா?, புதுமடம் ஜாபர் அலி, Published : 13 Sep 2022 07:10 AM, Last Updated : 13 Sep 2022 07:10 AM

[2] https://www.hindutamil.in/news/opinion/columns/865866-muslim-internal-reservation-1.html

[3] தமிழ்.இந்து, 2001-2011-ம் ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரிப்பு, பிடிஐ, Published : 23 Jan 2015 10:35 AM, Last Updated : 23 Jan 2015 10:35 AM.

[4] https://www.hindutamil.in/news/india/27909-2001-2011-24.html

[5] தினமலர், முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பாளை.,யில் 22ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம், Added : ஏப் 19, 2012  01:59

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=450943

[7] தினமணி, முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், By DIN  |   Published On : 17th July 2022 11:13 PM  |   Last Updated : 17th July 2022 11:13

[8] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2022/jul/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3881897.html

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (1)

திசெம்பர் 4, 2022

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (!)

கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதமாற்றம் ஏன் நடக்கிறது?: தமிழகத்தில் இந்துக்கள் மதம் மாறுவது நடந்து கொண்டே இருக்கிறது. தீண்டாமை மற்றும் ஜாதி, ஜாதிக் கொடுமைகள் காரணமாக எடுத்துக் காட்டப் பட்டு, கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டால், அத்தகைய வேறுபாடுகள், வித்தியாசங்கள், பாகுபாடுகள் முதலியன மட்டுமல்லாது, சமுத்தவம், சகோதரத்துவம், சம-அந்தஸ்து எல்லாம் கொடுக்கப் படும் அல்லது கிடைக்கும் என்று அறிவிக்கப் பட்டு அல்லது பிரச்சாரம் செய்யப் பட்டு, அத்தகைய மதமாற்றங்கள் நடந்தன, நடந்து வருகின்றன. இவையெல்லாம், ஆன்மீகம், தத்துவம், மெய்யியல் போன்றவற்றைக் கடந்து திட்டமிட்டு நடந்து வருகின்றன என்பது அரசாங்க, நிறுவனங்கள் ஆராய்ச்சிகள், தரவுகள் முதலியவை மூலம் அறியப் பட்டுள்ளன. மீனாக்ஷிபுரம் மதமாற்றம் அதனால் தான் பெரும் சர்ச்சையை உண்டாக்கி அடங்கி விட்டது. அதனால், எத்தனை மதம் மாறிய இந்துக்கள் பணக்காரர்கள் ஆனார்கள், உயர்ந்த சமுக்கத்தின் பெண்களை கல்யாணம் செய்து கொண்டார்கள், சிறந்த நிலையை அடைந்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.

மதமாற்றத்தால் உயர்ந்த நிலை கிடைத்ததா இல்லையா?: மண்டல் கமிஷன் தீர்ப்பு இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் இடையேயும் ஜாதிகள் உண்டு என்றவுடன், சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகளின் ஆதாரமாக, அவர்கள் இடவொதிக்கீடு கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், Caste [காஸ்ட்] மற்றும் class [கிளாஸ்] என்றவற்றிற்குள் இருக்கும் உண்மையினை அறிந்து கொள்ளாமல், உணர்ச்சி, அரசியல், சித்தாந்தம் போன்றவற்றால் உந்தப்பட்டு, மற்றவர்களையும் உசுப்பி விட்டு, பிரச்சினைகளை வளர்த்து வருவதும் தெரிகிறது. ஒரு பக்கம் எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம-உரிமைகள், எல்லோருக்கும் எல்லாம் என்றெல்லாம் பேசிக் கொண்டே, “எல்லாமே எனக்குத்தான்” என்று பல கூட்டங்கள் பெருகி வருவதைக் காணலாம். இங்கு தான், அப்பிரச்சினைகள், பெரிதாகி நீதிமன்றங்கலுக்குச் செல்கின்றன. அங்கு உண்மைகள் ஆராயும், அலசும் மற்றும் முடிவில் தீர்ப்புகளாக வரும் பொழுது, பிடித்தும்-பிடிக்காமலும் போகும் நிலை உண்டாகிறது. இப்பொழுது, இந்த தீர்ப்பும் அவ்வாறே இருக்கிறதா . இல்லையா என்று கவனிப்போம்.

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு: மதுரைக்கிளை உயர் நீதிமன்றம் ‘இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மாதத்துக்கு மாறியவரை பிசி முஸ்லிம் ஆக கருத வேண்டும்’ என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது[1]. இது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தாலும், வழக்கம் போல, “பி.டி.ஐ” பாணியில், “தமிழ்.இந்துவில்” வந்ததை மற்ற ஊடகங்கள் அப்படியே / வேறு தலைப்புகள் இட்டு / சிறிது மாற்றி வெளியிட்டுள்ளன. ஊடக வித்தகர்களும், நிருபர்களும், அப்படியே செய்தியை போட்டு, அமைதியாகி விட்டனர். இவ்வழக்கில் பாதிக்கப் பட்டவரிடம் சென்று பேட்டி காணவில்லை, முஸ்லிம் அரசியல் கட்சிகள், இயக்கத்தினர்களிடம், துறை அமைச்சர்களிடம் கமென்ட் / விளக்கம் கேட்கவில்லை, அன்று மாலையிலேயே, டிவிசெனல்களில் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. சமூகநீதி வித்தகர்கள், சமத்துவ சித்தாந்திகள், சமவுரிமை போராளிகள், சமன்பாட்டு வித்தகர்கள் முதலியோரும் காணப்படவில்லை.

காஜி கொடுத்த முஸ்லிம் சான்றிதழ், கேட்கும் பிசி அந்தஸ்து, மறுத்த TNPSC:  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு.அக்பர் அலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]. நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து 2008-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறினோம்[3]. நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் (a group within Muslim community which has been notified as a backward class) என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2015-ல் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்[4]. 2018-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பிசி முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன்[5]. எழுத்துத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன்[6]. இறுதி தேர்வுப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை[7]. தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது என் பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல், பொதுப்பிரிவில் பரிசீலித்துள்ளனர்[8]. என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்கக்கோரி அளித்த மனுவை டிஎன்பிஎஸ்சி செயலாளர் 28.7.2021ல் நிராகரித்து உத்தரவிட்டார். [இந்த TNPSC அதிகாரி வருவாய் அதிகாரியை விட பெரியவர்களா அல்லது அவர்கள் கொடுக்கும் சான்றிதழை மறுக்க அதிகாரம் உள்ளதா?]

லெப்பை முஸ்லிமா, பிற்படுத்தப் பட்ட முஸ்லிமா, ஜாதியா?: என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது[9]. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு[10]. “தமிழகத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுவதில்லை.மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார்[11]. அதில் சத்திய மூர்த்தி என்பவர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது[12]. அதை தவிர – அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை தவிர – சான்றிதழில் வேறு ஏதும் இல்லை. மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என அரசு காஜியார் அறிவிக்க முடியாது. அப்படியிருக்கும்போது மதச்சார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீட்டு சலுகையை அனுபவித்து வந்த ஒருவருக்கு மதம் மாறிய பிறகும் இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது[13]. அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது இந்த நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது[14].  [காஜி தனது மத இறையியலின் படி தீர்மானிக்கிறரா அல்லது வேறு ஏதோரு அதிகாரம் அல்லது அதிகார ஆணை மூலம் தீர்மானிக்கிறாரா என்றும் கவனிக்க வேண்டும். எப்படியிருந்தாலும்,ஐஸ்லாமிய இறையியலின் படி முஸ்லிமுக்கு இரண்டு வித சமூக நிலை, அந்தஸ்து. இடவொதிக்கீடு எல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.]

© வேதபிரகாஷ்

04-12-2022 


[1] தமிழ்.இந்து, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு, கி.மகாராஜன், Published : 02 Dec 2022 08:22 PM; Last Updated : 02 Dec 2022 08:22 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/909128-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders.html

[3]காமதேனு, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பி.சி முஸ்லிமாக கருத முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு, கி.மகாராஜன், Updated on :  2 Dec, 2022, 9:40 pm.

[4]  https://kamadenu.hindutamil.in/national/a-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders-action

[5] ஜி.7.தமிழ், இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் உத்தரவு  | hindu convert to islam cannot be considered a bc muslim high court orders || G7TAMIL, By g7tamil -December 2, 2022.

[6] https://g7tamil.in/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

[7] தமிழ்.மினட்ஸ், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறியவருக்கு BC வகுப்பா? மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு, by Bala S, December 3, 2022.

[8] https://tamilminutes.com/madurai-high-court-rejected-religion-changed-case/

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முஸ்லிம் மதம் மாறிய இந்து பிற்படுத்தப்பட்டவர் அல்ல.. மதுரை உயர்நீதிமன்றம், Written by WebDesk, Madurai, December 3, 2022 2:22:42 pm

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/the-madurai-high-court-has-ordered-that-a-hindu-convert-to-islam-is-not-a-backward-class-552158/

[11] இ.டிவி.பாரத், மதம் மாறியவரை BC முஸ்லிமாக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் மதுரைக்கிளை, Published on December 03, 2022; Updaed; December 04, 2022.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/a-convert-cannot-be-considered-a-bc-muslim-high-court/tamil-nadu20221203130924644644445

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Madurai HC: ‘டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுநீதிமன்றம், Karthikeyan S, 03 December 2022, 15:10 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-hc-rejects-backward-quota-claim-of-hindu-man-converted-to-muslim-131670060279181.html

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – மற்ற முயற்சிகள், முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் மூலம் தொடருமா? (3)

செப்ரெம்பர் 25, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்மற்ற முயற்சிகள், முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் மூலம் தொடருமா? (3)

முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் (Muslim Rashtriya Manch (MRM) – 2002ல் துவக்கி வைக்கப் பட்டது: கே. எஸ். சுதர்சன் எப்படி கிருத்துவர்களுடன் உரையாடல் ஆரம்பித்தாரோ, அடே போல, முஸ்லிகளுடனும் உரையாடல் வைத்துக் கொள்ள, முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் / முஸ்லீம் தேசிய மன்றம் ஆரம்பித்து வைக்கப் பட்டது[1]. இந்திய முஸ்லீம்களின் அமைப்பான இது ராஷ்டிரிய சுயமசேவாக் சங்கத்துடன் இணைந்தது. இவ்வமைப்பு ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே. எஸ். சுதர்சன் என்பவரால் 24 டிசம்பர் 2002 அன்று நிறுவப்பட்டது. இவ்வமைப்பின் நோக்கம் முஸ்லீம் சமூகத்தில் இந்திய தேசிய உணர்வு, நாட்டுப் பற்று ஊட்டுவதுடன், சங்கப்பரிவாரின் இந்துத்துவா கொள்கைகளை இந்திய முஸ்லீம்கள் அறியச் செய்வதாகும். இதன் தேசியத் தலைவராக முகமது அப்சல் உள்ளார். இந்தியாவின் 26 மாநிலங்களில் உள்ள 300 மாவட்டங்களில் 10 இலட்சம் உறுப்பினரகள் இவ்வமைப்பில் உள்ளனர். உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோகா குறித்து 2015-இல் முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் யோகா மற்றும் இஸ்லாம் தலைப்பில் நூல் ஒன்றை இசுலாமியர்களுக்காக வெளியிட்டது. முஸ்லீம் இராஷ்டிரிய மஞ்சின் மகளிர் அணி, இந்தியாவில் முத்தலாக் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதை வரவேற்றுள்ளது.

15-09-1984 – அப்துல் சமதுசூரியநாராயண ராவ் சந்திப்புதுக்ளக்: முஸ்லிம் லீக் – ஆர்.எஸ்.எஸ் சந்திப்பு என்று துக்ளக்கில் அப்துல் சமது-சூரியநாராயண ராவ் உரையாடல் வெளிவந்தது. அதில் சில சுமுகமான கருத்துகள் வெளிவந்தன. இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலான முஸ்லிம்கள் முன்னர் இந்துக்களாக இருந்தனர், மதம் மாறினர், ஒற்றுமையாக இருக்க வேண்டும் போன்ற கருத்துகள் பேசப் பட்டன. அப்துல் சமது தம் முன்னோர்கள் இந்துக்கள் என்பதனையும் ஒப்புக் கொண்டார். பிறகு ஆத்ரவு-எதிர்ப்பு-கண்டன விமர்சனம் முதலியன நடந்தன. அவற்றில் சில துக்ளக்கில் “வாசகர் கடிதம்” பக்கத்தில் வெளியிடப் பட்டது. பிறகு, அல்லயன்ஸ் பதிப்பகம் அவற்றைத் தொகுத்து புத்தகமாகக் கூட வெளியிட்டது. ஆனால், பிறகு அது மறக்கப் பட்டது எனலாம். ஏனெனில், அத்தகைய உரையாடல்கள் நடக்கவில்லை அல்லது அந்த அளவுக்கு நெருங்கி வரவில்லை. அரசியல், கூட்டணி போன்ற விவகாரங்களால், விலகி சென்றனர் போலும்.

வடவிந்தியாதென்னிந்தியா வேற்றுமை: வட இந்தியாவில், பொதுவாக, இந்துக்கள்-முஸ்லிம்கள் சேர்ந்து வாழ்கிறார்கள், தினசரி வேலைகளில் பங்கு கொள்கிறார்கள். இந்து பண்டிகைகளில், பெரும்பாலும், முஸ்லிம்களின் பங்கு உள்ளது. நவராத்திரி-தசரா விழாக்களில் பந்தல், சிலைகள், அலங்காரம் முதலியவற்றை அமைப்பதில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர். வைஷ்ணவி தேவி கோவில் பக்தர்களுக்கு உதவுவதிலும், அவர்கள் பெரும் பங்கு வகுக்கின்றனர். இவையெல்லாம் அவர்களுக்கு வியாபாரமாக, வாழ்வாதார தொழிலாகக் கூட இருக்கலாம். இருப்பினும், அத்தகைய இணைந்து செல்லும் போக்கு உள்ளது. ஆஜ்மீர் மற்ற தர்காக்களில் இந்துக்களும் பெருமளவில் வந்து செல்கின்றனர். அதே போல, தெற்கில் நாகூருக்கு  இந்துக்கள் பெருமளவில் வந்து செல்கின்றனர். ரம்ஜான் இஃப்தர் பார்ட்டிகளிலும் இணைகின்றனர். சேர்ந்து உண்கின்றனர், பொழுது போக்குகின்றனர். பெரும்பான்மையான முஸ்லிம்களும் இதைத்தான் விருமுகின்றனர். தெற்கில் குறிப்பாக, கேரளா, தமிழகம், கர்நாடகா, தெலிங்கானா போன்ற மாநிலங்களில் சில இயக்கங்கள், முஸ்லிம்களை பிரித்து, அடிப்படைவாதிகளாக, பயங்கரவாதிகளாக, தீவிரவாதிகளாக, மாற்ற முயல்கின்றனர். அதனால், இரு சமூகங்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. மோதல்களும் ஏற்படுகின்றன. ஆனால், முஸ்லிம்கள், மிக மோசமாக, எல்லைகளைக் கடந்து வன்முறைகளுக்குச் சென்று விடுகிறார்கள். குண்டு வைத்தல், கலவரங்களை உண்டாக்குதல், அப்பாவி மக்களைக் கொல்லுதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இதனால், பிளவுகள் அதிகமாகின்றன, தீவிரமடைகின்றன.

தமிழகத்தில் இத்தகைய உரையாடல்ளுக்கு வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை: ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் இஸ்லாத்தை விட்டு விரட்ட வேண்டும் என தமிழக ஜாமஅத்துல் உலமா சபைக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளது[2]. சில நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, அத்தகைய இணைப்புகளை எதிர்க்கிறது. ஆகையால் தமிழ் நாட்டிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் ஜாமத்துல் உலமா சபை முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை இஸ்லாத்தை விட்டு நீக்கி அவர்களுடன் முஸ்லீம்கள் எந்தவொரு தொடர்பும் வைக்க கூடாது என மார்க உத்தரவு போடவேண்டும். அதே போல் தமிழக அரசும் உளவுத்துறை மூலம் ஆர்எஸ்எஸ் பாஜகவின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளை சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 2022ல் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான் என்று மோஹன் பகவத் பேசியது: இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் அனைவராலும் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், `இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஓர் இந்து கூறுகிறார் என்றால், அவர் ஒரு இந்துவே அல்ல’ என்றும், `இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான்’ என்றும் நேற்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார்.. உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமியப் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டத்தில், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அவருக்கு ஆலோசகராக இருந்த முனைவர் க்வாஜா இஃப்திகார் அஹ்மத் என்பவர் எழுதிய ‘தி மீட்டிங்ஸ் ஆஃப் மைண்ட்ஸ்: எ பிரிட்ஜிங் இனிஷியேட்டிவ்’ (The meeting’s of mind’s : A bridging initiative) என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “நாம் அனைவரும் கடந்த 40,000 ஆண்டுகளாக ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. இந்திய தேசத்தின் மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான். எனவே, இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேறு வேறு குழுக்கள் அல்ல. ஏற்கெனவே இணைந்துதான் இருக்கிறார்கள். எனவே, அவர்களை இணைப்பதற்குப் புதிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஓர் இந்துவே அல்ல[3]: தொடர்ந்து மோஹன் பகவத் பேசியது, “இங்கு அரசியலால் சில பணிகளைச் செய்ய முடியாது. அதன் மூலம் மக்களை இணைக்க முடியாது. அரசியல் எப்போதும் மக்களை இணைக்கும் கருவியாக இருக்காது. அது மக்கள் இடையிலான ஒற்றுமையைச் சிதைக்கும் ஆயுதமாக எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஓர் இந்துவே அல்ல[4]. பசு புனிதமான விலங்குதான், ஆனால், மற்றவர்களைக் கொலை செய்பவர்கள்கூட இந்துத்துவா தத்துவத்துக்கு எதிரானவர்களே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்[5]. இத்தகையவர்களைச் சட்டம் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தண்டிக்க வேண்டும். மேலும், நாம் இந்தியாவில் வாழ்கிறோம், இங்கு இந்துவோ, இஸ்லாமியரோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது, இந்தியர்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும்,” என்றார்[6].

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை[7]: தொடர்ந்து மோஹன் பகவத் பேசியது, “தற்போது இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் இருப்பது போன்ற மாய பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாம் அந்தச் சதி வலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது. இங்கு இஸ்லாமியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்[8]. இந்தியாவில் ஒற்றுமை இல்லையென்றால் வளர்ச்சி என்பது துளியும் சாத்தியமில்லை. எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்கள் இயக்கத்துக்குக் கட்சி அரசியலில் விருப்பமில்லை. தேசத்தின் நலனே எங்களுக்கு முக்கியம்,” என்றார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்தப் பேச்சை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்[9]. உத்தரப்பிரதேசத்தில் இந்துத்துவா சித்தாந்தத்தை வலுப்படுத்த பாஜக-வின் யோகி ஆதித்யநாத் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளையில், ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இந்த ‘இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு’ பேச்சு அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது[10].

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கருத்து: ஓவைசி ஆவேச ட்வீட்: மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு அனைத்திந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்[11]. இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், “பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது கும்பல் வன்முறையில் ஈடுபடுவது இந்துத்துவாவிற்கு எதிரானது என ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் கூறுகிறார். ஆனால் இந்த வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஜூனைத், அக்லக், பெலு, ரக்பர், அலிமுதீன் என்ற பெயர் வைத்திருப்பவர்களை கொல்ல வேண்டும் என்று மட்டும் தெரிகிறது. அந்த குற்றவாளிகளிக்கு இந்துத்துவா அரசு ஆதரவளிக்கிறது. அலிமுதீனின் கொலையாளிகள் மத்திய அமைச்சரின் கையால் மாலை அணிவிக்கப்படுகிறார்கள்,” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்[12]. இதற்கு ட்விட்டரில் பலர் எதிர்க் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

25-09-2022


[1] It was on December 24, 2002 a group of nationalist Muslims and functionaries of the Rashtriya Swayamsevak Sangh (RSS) came together in Delhi. http://muslimrashtriyamanch.org/default.aspx

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், RSS-ன் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச்சில் உள்ளவர்களை இஸ்லாத்தில் இருந்தே விரட்டுங்க.. தடா ரஹீம்., Ezhilarasan Babu, Chennai, First Published Jul 4, 2022, 12:10 PM IST.

https://tamil.asianetnews.com/politics/remove-from-islam-those-in-muslim-rashtriya-manch-which-is-a-subsidiary-organization-of-rss-tada-rahim–rehh84

[3] தமிழ்.நியூஸ்18, இந்தியாவில் முஸ்லீம்கள் வாழக்கூடாது எனக்கூறுபவன் இந்துவே அல்லஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு, NEWS18 TAMIL, Published by:Ramprasath H, First published: July 05, 2021, 06:40 IST; LAST UPDATED : JULY 05, 2021, 06:46 IST

[4] https://tamil.news18.com/news/national/anyone-who-says-muslims-should-not-live-in-india-is-not-hindu-mohan-bhagwat-hrp-496409.html

[5] தமிழ்.சமயம், முஸ்லிம் வாழக்கூடாது என்று சொல்லும் இந்து இந்துவே அல்லஆர்.எஸ்.எஸ். தலைவர் அதிரடி,  Divakar M | Samayam Tamil | Updated: 4 Jul 2021, 9:48 pm

[6] https://tamil.samayam.com/latest-news/india-news/it-is-not-the-hindus-who-say-that-muslims-should-not-live-saying-mohan-bhagwat/articleshow/84119597.cms

[7] தினமலர், முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை” – மோகன்பகவத், Updated : ஜூலை 05, 2021  09:41 |  Added : ஜூலை 05, 2021  09:38

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2796967

[9] விகடன், இஸ்லாமியர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொல்பவர் இந்துவே கிடையாது!’ –ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், சே. பாலாஜி, Published: 05 Jul 2021 9 AM; Updated: 05 Jul 2021 9 AM.

[10] https://www.vikatan.com/government-and-politics/politics/if-a-hindu-says-no-muslim-should-live-here-that-person-not-be-hindu-says-rss-chief-mohan-bhagwat

[11] நியூஸ்.தமிழ்.7, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கருத்து: ஓவைசி ஆவேச ட்வீட், by Gayathri VenkatesanJuly 5, 2021.

[12] https://news7tamil.live/asaduddin-owaisi-on-rss-chiefs-remarks.html

வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல்சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளன?

செப்ரெம்பர் 17, 2022

வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளன?

பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் தில்லி மாடலா, திராவிட மாடலா?: வக்பு விவகாரங்களில் இந்தியாவில் மாநிலங்களில் பலவிதமான அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. சம்பந்தப் பட்ட முஸ்லிம்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களும் அதில் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்விவகாரங்களில், பெரும்பாலாக, கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்று வருகின்றன. துலுக்கர், மொஹம்மதியர் மற்றும் இன்றைக்கு முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்ளும் அந்நிய-அரேபிய வகையறாக்கள் தாங்கள் குரான், ஷரியத் மற்றும் ஹதீஸ் போன்ற புத்தகங்கள், சட்டநெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம் என்று சொல்லிக் கொண்டாலும், அது நாட்டிற்கு நாடு, பிரிவிக்குப் பிரிவு மாறித்தான் உள்ளது. இவையெல்லாம் அவர்களின், அதாவது, துலுக்கர், மொஹம்மதியர் மற்றும் இன்றைக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், பலவிதமான அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள் என்று வரும் போது, அரசு, ஆட்சி, அதிகாரம், மோசடிகள், ஊழல்கள் முதலியவற்றில், புதிய பரிமாணங்கள் வருகின்றன. அதனால் வக்பு வாரிய மோசடிகள், ஊழல்கள் முதலியவையும் அவ்வாறே உள்ளன. தில்லி மாடல், திராவிட மாடல்………என்றெல்லாம் கூறிக் கொண்டாலும், நடப்பவை இவ்வாறுத் தான் உள்ளன.

2016லிருந்து தில்லி மாடல் வக்பு ஊழல் நடைபெறுகிறதா?: சமீபத்தில் வக்பு வாரிய அடாவடித் தனம், ஹிந்துக்களின், கோவில்களின் நிலம் அபகரிப்பு மற்றும் கோவிலே தமது நிலத்தில் உள்ளது போன்ற விவகாரங்களில் வெளிப்பட்டன. மேலும், துலுக்கரின் உள்-விவகார ஊழல்களும் வெளிவந்தன. அந்நிலையில் தில்லி வக்பு ஊழல் விவகாரமும் சேர்கிறது. பிப்ரவரி 8ஆம் தேதி 020 வக்ஃபு வாரிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ஏஏபி எம்எல்ஏ, வக்ஃபு வாரியத் தலைவர் அமனத்துல்லா கான் ( AAP MLA Amanatullah Khan) ஆகியோரை ஊழல் தடுப்புக்கிளை (Anti-Corruption Branch (ACB)  ஏசிபி) புதன்கிழமை 08-02-2020 அன்று வழக்குப்பதிவு செய்தது[1]. பின்னர், வக்ஃபு வாரிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், ‘ஒழுங்கற்ற ஆள்சேர்ப்பு’ செய்ததாகவும் ஏ.சி.பி. தலைவர் அரவிந்த் தீப் தெரிவித்தார்[2]. இது குறித்து அமனத்துல்லா ​​கானிடம் கேட்டபோது, “நான் முதலில் புகாரை முழுமையாகப் படித்துப் பார்க்கிறேன், அதன் பிறகு அதைப் பற்றி பேசுகிறேன்,” என்றார். கடந்தாண்டு வக்ஃபு வாரியத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டது குறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது[3]. இரண்டு ஆண்டுகளாகப் படித்துக் கொண்டே இருந்தார் போலும். அதற்குள் ஊழல் தடுப்புத் துறைக்குத் தெரிந்து விட்டது போலும்.

மத்திய-மாநில அரசுகளின் மோதல்கள், அரசியல் குழப்பங்கள்: டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது[4]. அங்குச் சமீபத்தில் தான் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடுகளில் ரெய்டு நடத்தி இருந்தனர்[5]. இதுபோன்ற ரெய்டுகள் இப்போதைக்கு அங்கு முடிவதாகத் தெரியவில்லை. இப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் ஊழல் புகார் ஒன்றில் செய்யப்பட்டு உள்ளார்.  பிஜேபி-அல்லாத மேற்கு வங்காளம், பஞ்சாப், தில்லி, கேரளம் முதலிய மாநிலங்கள் – மாநில அரசாளும்  ஆட்சியாளர்கள், ஆளும் மத்திய அரசுடன் எப்பொழுதும் பிரச்சினை செய்து கொண்டு வந்தது தெரிந்த விசயமே. ஆளுநர் விவகாரம் என்று வைத்துக் கொண்டு அவ்வாறு கலாட்டா செய்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், திராவிட மாடல், என்றெல்லாம் கூவிக் கொண்டு, முழுமையாக மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடித்து வருகிறது. இதற்கு, திராவிடத்துவ சித்தாந்திகள் திராவிடியன் ஸ்டாக், ஒன்றிய அரசு, மாநில சுயயாட்சி போன்ற குப்பையில் வீசப் பட்ட சித்தாந்தங்களையும் துடைத்து கையில் எடுத்துள்ளனர்.

விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது என்றால் அதை இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர்?: இஸ்லாமிய மத மக்கள் அவர்களின் சொத்துக்களை வக்பு பத்திரம் மூலம் இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களுக்கு தானமாக கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு கொடுக்கப்படும் சொத்துக்கள், நிலங்களை பராமரிக்க, நிர்வகிக்க பொது மற்றும் தனியார் வக்பு வாரியங்கள் உள்ளன. நம்பிக்கையாளர்கள் அல்லாவுக்கு பயந்து, பய-பக்தியுடன் செயல் படவேண்டும், செயல் பட்டிருக்க வேண்டும். ஆனால், இவற்றில் எப்படி ஊழல் வந்தது என்பதனை அல்லாவிடாம் தான் கேட்க வேண்டும் போலிருக்கிறது. இதனிடையே, டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான். இவர் 2016-ல் ஆண்டு டெல்லி வக்பு வாரிய தலைவராக செயல்பட்டார். தலைவராக இருந்த காலத்தில், விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது[6], பணமோசடியில் ஈடுபட்டதாக அமனத்துல்லா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது[7]. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியின் வீட்டில் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 24 லட்ச ரூபாய், உரிமம் இல்லாத 2 கைத்துப்பாக்கிகளை கைப்பற்றினர்.

வக்பு வாரியத்திற்கு பணி நியமனம் செய்ததில்  முறைகேடு செய்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்த வழக்கு: அப்படியென்றால், இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர், மற்ற வக்பு போர்ட் உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்? போன்ற கேள்விகள் எழுகின்றன. வக்பு வாரிய ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானை லஞ்ச ஒழிப்புத்துறை (ஏசிபி) போலீசார் 16-09-2022 அன்று கைது செய்தனர்[8]. டெல்லி வக்பு வாரியத்தின் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் ஓக்லா தொகுதி எம்எல்ஏ அமனதுல்லா கான் இருந்து வருகிறார்[9]. இவர், வக்பு வாரியத்திற்கு பணி நியமனம் செய்ததில் முறைகேடு செய்ததாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில், ரூ.12 லட்சம் ரொக்கம், உரிமம் பெறாத துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, 1609-2022 அன்று நண்பகலில் விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, விசாரணைக்கு ஆஜரான அவரை, போலீசார் திடீரென கைது செய்தனர்.

வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார்: தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார் அளித்துள்ளது[10]. இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹர்னாம் சிங், பர்வேஷ் ஆலம், அலி மெஹந்தி, பர்வேஷ் முகமது, அன்ஸார் -அல்-ஹக், ஜாவேத் செளத்ரி ஆகியோர் அடங்கிய பிரதிநிதிக் குழு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை 15-09-2022 வியாழக்கிழமை அன்று சந்தித்து மனு அளித்தது[11]. அதில், தில்லி வக்ஃபு வாரியத்தில் அமைச்சர் அமானதுல்லா கான் அவரது உறவினர்களை முறைகேடாக நியமித்துள்ளார். இதுபோன்று முறைகேடாக 33 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் ஹர்னாம் சிங் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என துணைநிலை ஆளுநர் உறுதியளித்துள்ளார்’ என்றார். பர்வேஷ் ஆலம் கூறுகையில், “தில்லி வக்ஃபு வாரிய நியமன முறைகேடுகள் தொடர்பாக அதன் அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடைபெறும்’ என்றார். ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள், இங்கு நடக்கும் வக்பு ஊழல்கள், முறைகேடுகள், கோவில் ஆக்கிரமிப்புகள் பற்றி மூச்சு விடுவதில்லை. இது காங்கிரஸ் மாடல் போலும்.

எழும் இக்கேள்விகளுக்கு, பிரச்சினைகளுக்கு பதில் கிடைக்குமா?:

  1. தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார் அளித்துள்ளது.
  • அதாவது, தில்லி வக்ஃபு வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதை ஒப்புக் கொண்டு தில்லி வக்ஃபு வாரியத்தின் அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
  • ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள், இங்கு நடக்கும் வக்பு ஊழல்கள், முறைகேடுகள், கோவில் ஆக்கிரமிப்புகள் பற்றி மூச்சு விடுவதில்லை.
  • இது காங்கிரஸ் மாடல் போலும், தில்லி மாடல் அவ்வாறு இருக்கும் பொழுது, திராவிட, வங்காள மாடல்களும் அப்படியே உள்ளன!
  • பஞ்சாப, சிந்து, குஜராத, மராடா, திராவிட, உத்கல, வங்கா – கூட பொறுந்துகிறது. ஆனால், இந்த கூட்டணி பார்முலா செல்லுமா என்று பார்க்க வேண்டும்.
  • வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளது?
  • குரான், ஷரியத் மற்றும் ஹதீஸ் போன்றவற்றை எப்படி அந்த முகமதியர்-முஸ்லிம்கள் மீற முடியும், ஊழல் செய்யக் கூடும், அல்லா அனுமதி அளித்தாரா?
  • மோமின்கள் எப்படி காபிர் அதிலும் நாத்திக, கம்யூனிஸ காபிர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியும்? யார் அனுமதித்தது?
  • மோமின்–காபிர் கூட்டு, சகவாசம், கூட்டணி ஹராமா-ஹலாலா, இதனால் கிடைப்பது சொர்க்கமா-எரியும் நரகமா, அல்-கிதாபியா என்ன சொல்கிறது?
  1. தமிழகம் போல, தில்லியிலும் இந்துக்கள், கோவில் நிலங்களை முகமதியினர் ஆக்கிரமித்து உள்ளார்களா? வக்பிடம் சான்றிதழ் கொடுக்க ஆணை போட்டுள்ளார்களா?

© வேதபிரகாஷ்

17-09-2022


[1] இ.டிவி.பாரத், வக்ஃபு வாரிய நிதி முறைகேடு: தலைவர் அமனத்துல்லா கான் கருத்து, Published on: January 30, 2020, 4.33 PM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/bharat-news/delhi-acb-books-aap-mla-amanatullah-khan-for-alleged-misuse-of-waqf-board-funds/tamil-nadu20200130163314221

[3] A case against Khan was filed in 2016, following a complaint from the sub-divisional magistrate (headquarters), revenue department, alleging that appointments to various “existing and non-existing posts” in the Waqf Board were “arbitrary and illegal”. The ACB registered an FIR in January 2020, under Section 7 (public servant taking gratification) of the Prevention of Corruption Act, and Section 120-B (criminal conspiracy) of the IPC.

https://indianexpress.com/article/cities/delhi/aaps-amanatullah-khan-raided-acb-finds-pistol-and-cash-8155646/

[4] தமிழ்.ஒன்.இந்தியா, ஊழல் புகார்.. ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கான் கைது! இரு துப்பாக்கிகளும் பறிமுதல்! டெல்லியில் பரபர, By Vigneshkumar Published: Saturday, September 17, 2022, 0:00 [IST].

[5] https://tamil.oneindia.com/news/delhi/after-raids-aap-mla-amanatullah-khan-arrested-in-2-year-old-allegation-476093.html

[6] தினத்தந்தி, வக்பு வாரிய முறைகேடு: ஆம் ஆத்மி எம்.எல்.. கைதுலட்ச கணக்கில் பணம், துப்பாக்கி பறிமுதல், தினத்தந்தி Sep 17, 2:08 am

[7] https://www.dailythanthi.com/News/India/aaps-amanatullah-khan-arrested-after-raids-794221

[8] தினகரன், வக்பு வாரியத்தில் ஊழல் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி, 2022-09-17@ 02:26:04

[9] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=799774

[10] தினமணி, தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு விவகாரம்: துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்,  By DIN  |   Published On : 12th July 2019 07:20 AM  |   Last Updated : 12th July 2019 07:20 AM.

[11] https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/jul/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3190553.html

மொஹரம் கடைப்பிடிப்பதில் சுன்னி-ஷியாக்களில் வித்தியாசம் ஏன், துக்கம்-சந்தோஷம் ஏன்?

ஓகஸ்ட் 11, 2022

மொஹரம் கடைப்பிடிப்பதில் சுன்னிஷியாக்களில் வித்தியாசம் ஏன், துக்கம்சந்தோஷம் ஏன்?

பாரம்பரிய முறைப்படி மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள்:  மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஷியா இஸ்லாமியர்கள் பேரணியாகச் சென்று தொழுகையில் ஈடுபட்டனர்[1]. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜானி ஜான் கான் சாலையிலிருந்து ஷியா முஸ்லிம்கள் ஏராளமானோர், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டனர்[2]. பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேரணியாகச் சென்றனர். ராயபேட்டையில் நடக்கும் இந்த சடங்குகள் மற்ற ஊர்வலங்கள் எல்லாம் ஊடகங்களில் காட்டுவதில்லை. தஞ்சையை அடுத்த காசாநாடு புதூர் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக மொஹரம் பண்டிகை கிராம விழாவாக கொண்டாடப்பட்டது. ஊரின் மையப் பகுதியில் உள்ள அல்லாசாமி கோவிலில் வைத்து பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, ஏராளமானோர் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சில இடங்களில், இந்துக்களும் கலந்து கொண்டார்கள் போன்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

மொஹரம் ஏன், எப்பொழுது?: மொஹரம், முஃகர்ரம் (முகரம், அரபி: محرم) என்பது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப் படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரிகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது / மாறுவது போன்று காட்சியளிக்கும். இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் / ஜிஹாத் புரிவதாயினும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட இடங்களில் வன்முறைகள் இருக்கின்றன. சில இஸ்லாமியர் இம்மாதத்தின் ஒன்பதாம் நாளிலும் பத்தாம் நாளிலும் உண்ணா நோன்பு இருத்தல் வழக்கமாகும். முஃகர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் (அரபு மொழியில்ஆஷுரா / ஆசூரா) அன்று தியாகத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு அன்று ஷியா இஸ்லாமியர் உண்ணாதிருப்பர். மொஹரம் மதத்தின் 10 வது நாளைத்தான் `ஆஷூரா’ என்று இஸ்லாமிய வரலாறு அழைக்கிறது. ஆஷூரா எனும் அரபுச்சொல்லுக்கு `பத்தாவது நாள்’ என்றுதான் பொருள். சுன்னி-ஷியாக்களில் நாளைக் கணக்கிடுவதில் வேறுபாடு உள்ளது.

ஷியாக்களுக்கு துக்கநாள், சுன்னிகளுக்கு கொண்டாடும் நாள்: ஹுசைன் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பாலைவனத்தில் விடப்பட்டு எதிரி வீரர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்ட நாளை இது குறிக்கிறது. இந்த நாளில் தான் மொஹரம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டாலும், அது ஒரு துக்க நாள். அதன்படி இம்மாதத்தின் பிறை 9, 10 ஆகிய தினங்களில் முஸ்லிம்கள் நோன்பு வைப்பார்கள். முஃகர்ரம் பண்டிகை (Remembrance of Muharram) கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை ஷியாக்களால் நினைவுகூறப்படுகிறது. ஷியா முஸ்லிம்கள் அல்லாத சுன்னி இஸ்லாமியர் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் வைக்கப்படும் நோன்பானது, தான் கடவுள் என்று கூறிய அரசன் ஃபிர்அவ்ன் / எகிப்து அரசன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக வழிபடும் நிகழ்வு. ஆக ஷியாக்களுக்கு துக்கம், சுன்னிகளுக்கு மகிழ்ச்சி.

ஷியா முஸ்லிம்கள் என்று குறிப்பிட ஏன் தயங்க வேண்டும்?: நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், யாத்ரீகர்கள் குழப்பமடைந்தனர்[3]. இப்படி ஊடகங்கள் குறிப்பிட்டாலும், யார் அந்த “இரு தரப்பினர்” என்று குறிப்பிடவில்லை. பொதுவாக, இந்துக்கள் மற்றும் இந்துக்கள்-அல்லாதவர் என்று குறிக்க, ஊடகங்கள் அத்தகைய சொற்பிரயோகங்கள் செய்வதுண்டு. “சிறுபான்மையினர்” என்று குறிப்பிட்டால், முஸ்லிம், கிருத்துவர் என்றாகும். இங்கு சுன்னி மற்றும் ஷியா பிரிவினர் என்று சொல்ல ஏன் தயங்குகின்றனர் என்று தெரியவில்லை. இதே கோணத்தில், பாகிஸ்தானில், ஷியா முஸ்லிம்கள் கொல்லப் படும் போது, அவர்கள் மசூதிகளில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடக்கும் பொழுதும், இங்கிருக்கும் முஸ்லிம்கள் கண்டு கொல்ல மாட்டார்கள். பிறகு, சென்னை-ராயபேட்டையில் அத்தனை முகமதியர் மொஹரம் கொண்டாடும் பொழுது, அவர்கள் ஷியாவாகத்தான் இருக்க வேண்டும். பிறகு, அவர்களும் பாகிஸ்தானில், ஷியா முஸ்லிம்கள் கொல்லப் படும் போது, அவர்கள் மசூதிகளில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடக்கும் பொழுதும் ஏன் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்று விசித்திரமாக இருக்கிறது.

ஃபதிஹா / அஷுரா ஆகூர் தர்காவில் தடுக்கப் பட்டது ஏன்?: முகம்மது நபியின் பேரனான இமாம் ஹுஸைன் இபின் அலியின் தியாகத்தை நினைவு கூற, மொஹரத்தின் ஒன்பதாவது நாளன்று, ஃபதிஹா என்றதை ஓதி, தொழுகை நடத்தி போற்றுவது ஷியாக்களின் கடமை. கர்பலாவில் நடந்த அந்த உயிர்தியாகத்தை, அஷுரா என்றும் தம்மை துன்புருத்திக் கொண்டு நினைவு கூர்வார்கள். இது நாகை அடுத்த நாகூர் ஹஸரத் ஷாஹுல் ஹமீது தர்காவில், ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கூடி  ஃபதிஹா ஓதி, தொழுகை செய்வது வழக்கம். இம்முறை தர்கா புதிய நிர்வாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடால், மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்துவதில் பிரச்னை எழுந்தது[4]. பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் தொழுகை நடத்துவது குறித்து, தர்கா நிர்வாகிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப், நாகை, ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு அளித்தார்[5]. இரு தரப்பினருக்கு இடையே, ஆர்.டி.ஓ., என். முருகேசன் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில், தர்காவின் பராம்பரியத்தை பாதுகாக்கவும், தர்காவின் உட்புறத்தில் வழிபாடு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது[6].

மொஹரம் தொழுகை ரத்து செய்யப்பட்டது: நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கோட்டாட்சியரின் தடையை மீறி பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் சார்பில், மொஹரம் தொழுகை ரத்து செய்யப்படுவதாக, தர்கா வளாகத்தில் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் தர்காவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உண்மையில் ஊடகத்தினர், இந்த மொஹரத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமல், “பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது,” என்றெல்லாம் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இது உண்மையில் ஒரு துக்ககரமான நிகழ்ச்சி, ஏனெனில், கர்பலா போரில், ஹுஸைன் மற்றும் அஸன் கொல்லப் படுகின்றனர், அந்த உயிர்பலி, தியாகத்தை நினைவு கூருகின்றனர்.

பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது: இந்நிலையில் டிரஸ்டிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் தலைமையில், தர்காவின் உட்புறம் உள்ள யாஹூசைன் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது[7]. இதில், ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். “தலைமுறைகளாக என்னுடைய முன்னோர்கள், இந்த ஃபதிஹா சொல்லி தொழுகை செய்து வருகின்றனர். அதனால், நான், இதை நிறுத்த முடியாது,” என்றார்[8]. தர்கா புதிய நிர்வாகிகள் கருத்து வேறுபாடால் வெளியூரில் இருந்து மொஹரம் சிறப்பு தொழுகையில் பங்கேற்க வந்த யாத்ரீகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதையே, ஜீ.நியூஸ் இவ்வாறு குறிப்பிடுகிறது[9], “இந்த நிலையில், நாகூர் தர்கா நிர்வாகத்தின் டிரஸ்டிகளுள் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் காவல்துறையின் தடையை மீறி முஹர்ரம் பண்டிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். நாகூர் தர்கா உள்ளே அமைந்துள்ள யாஹுசைன் பள்ளி வாசலில் நடைபெற்ற முஹர்ரம் சிறப்பு துவாவில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்”.  கோலாகலமாக நடைபெற்ற முஹர்ரம் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் நாகூர் தர்காவில் குவிந்து வரும் நிலையில், நிர்வாகிகள் மத்தியில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக தர்காவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது[10].

© வேதபிரகாஷ்

10-08-2022


[1] ஜெயா.நியூஸ், நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் தீ மிதித்து வழிபாடு, Aug 9 2022 5:13PM

[2] http://jayanewslive.com/spiritual/spiritual_189099.html

[3] தினமலர், மொஹரம் தொழுகை நாகூர் தர்காவில் சர்ச்சை, Added : ஆக 10, 2022  07:19

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3096668

[5] நியூஸ்.7.தமிழ், நாகூர் தர்காமுஹரம் பண்டிகை கொண்டாடுவதில் ஏற்பட்ட சர்ச்சை, by EZHILARASAN DAugust 9, 2022.

[6] https://news7tamil.live/nagor-dargah-controversy-over-the-celebration-of-muharram.html

[7] Indian Express, Nagapattinam: Trustee board fallout leads to cancellation of Muharram prayers at Nagore Dargah, Published: 10th August 2022 05:58 AM  |   Last Updated: 10th August 2022 05:58 AM.

[8] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/aug/10/nagapattinam-trustee-board-fallout-leads-to-cancellation-of-muharram-prayers-at-nagore-dargah-2485906.html

[9] ஜீ.நியூஸ் .இந்தியா, Muharram 2022: நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை, Written by – Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2022, 02:30 PM IST.

[10] https://zeenews.india.com/tamil/tamil-nadu/muharram-2022-controversy-in-nagore-dargah-muharram-celebrations-405760

பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!

மே 15, 2022

பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!

கடவுளின் தேசமான கேரளாவில் மாணவி மேடைக்கு வந்தது சர்ச்சையானது: “கடவுளின் தேசம்” என்று பறைச்சாற்றிக் கொள்ளும் கேரளாவில், சிறுமியை இஸ்லாமிய உலேமா உதாசீனப் படுத்தியுள்ளது திகைப்பாக உள்ளது. அதிக படிப்பறிவு உள்ள மாநிலமும் கேரளா தான். பிறகு, ஏன், எதற்கு இந்த முரண்பாடு? கேரளாவில் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து விருது வழங்கியதற்காக விழா அமைப்பாளர்களை முஸ்லிம் மத குரு ஒருவர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மத குருவின் செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது[1]. சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு) என்பது கேரள சன்னி மத குரு சங்கமாகும். இந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து சான்றிதழை பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளது[2]. கேரள மாநிலம் மல்லாபுரத்தில் மதரஸா கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது[3]. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு செய்யது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு விருது வழங்கினார்[4].

முசலியார் மேடையில் இருக்கும் போது பெண்கள் வரக்கூடாதாம்கோபித்துக் கொண்டு திட்டிய உலேமா: வழக்கம் போல முதலமைசர் மற்றும் ஆளும் கட்சியினர் அமைதியோடு இருந்தனர். “குர் ஆன் கட்டளைகளை மீறி முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இச்சம்பவம் இன்னொரு உதாரணம்,” என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையோடு தெரிவித்துள்ளார்[5]. கேரள சமூகவலைதளங்களில் வைரலான ஒரு காணொளியே ஆளுநரையும் சங்கடப்படுத்தியுள்ளது[6]. கேரளத்தின் மளப்புரத்தில் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் மதரஸா பள்ளியில் (அரபு பாடம்) பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் விருது வழங்கப்பட்டது. மதரஸா நிர்வாகி அந்த மாணவியின் பெயரைச் சொல்லி விருது வாங்க வர மேடைக்கு அழைத்தார். மாணவியும் மேடைக்கு வந்தார். இதைப் பார்த்ததும் சமஸ்தா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.டி.அப்துல்லா முசலியார், பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண்ணை எப்படி பொதுமேடைக்கு அழைக்கலாம். என்னைப் போன்ற மதக்குருக்களை மேடையில் வைத்துக்கொண்டே நீங்கள் இப்படிச் செய்யலாமா? என சிறுமியை மேடைக்கு அழைத்தவரை கடுமையாகத் திட்டினார்.

உங்களுக்கு மத விதிகள் தெரியாதா எனவும் எச்சரித்தார்: இந்த சிறுமியை அழைத்ததற்குப் பதில் அவரது பெற்றோரை அல்லவா அழைத்திருக்க வேண்டும் எனவும் அப்துல்லா முசலியார் திட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து சிறுமி கீழே அனுப்பப்பட்டு, அவரது பெற்றோர் மேடைக்கு வந்தனர். இது சிறுமியை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கேரள மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி, “படித்தவர்கள் அதிகம் நிறைந்த, பெண்கள் அதிகம் வாழும் கேரளத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சமூகத்தை பல தலைமுறைகளுக்கு கீழ் நோக்கி இழுப்பவர்களிடம் இருந்து மக்கள் விழிப்படைய வேண்டும்,” என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிராகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் இவ்விவகாரத்தை அமுக்கி வாசித்தனர்.

பெண்கள் தனிமைப் படுத்தப் படவேண்டும் என்பது விதியல்ல: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் தன் ட்விட்டர் பக்கத்தில்[7], “திருக்குரானின் கட்டளைகளையும் மீறி, முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததால் தகுதியான விருதைப் பெறும்போது மேடையில் அவமானப்படுத்தப்பட்டதைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. மதகுருமார்கள் குரானின் கட்டளையை மீறியும், அரசியலமைப்பு சட்டத்தை மீறியும் முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவது, அவர்களின் ஆளுமையை நசுக்குவது ஆகியவற்றுக்கு இதுவும் ஒரு உதாரணம்,” என வேதனையோடு கூறியுள்ளார்[8]. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்[9]. இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் தரப்பையும் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்[10]. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்[11], “இந்த விவகாரத்தில் கேரளா ஆளும் தரப்பினர் மௌனம் குறித்து வருத்தம் அளிக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி அனைவருமே இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றனர். நமது வீட்டுப் பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியம் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் இது குறித்துப் பேச வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்களை விட (கேரள அரசு) நான் அதிகம் பேசி உள்ளேன்,” என்றார்[12].

அடிப்படைவாத இஸ்லாமில் பெண்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர்: முஸ்லிம் பெண்கள் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு சமமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடக் கூடாது, காஜி, மௌலானா, உலேமா முன்பாக முகத்தைக் காட்டிக் கொண்டு வரக் கூடாது, பர்தா / ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டும், முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம், தலிபன் போன்ற அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் ஆணையிடுவதை செய்திகளாகப் படிக்கலாம். விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தடை. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என பெண்களை வீட்டில் முடக்கும் வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதாவது ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற நான்கு நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் தான் தற்போது ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது[13]. ஆப்கனில் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கணவன்-மனைவி உள்பட எத்தகைய உறவாக இருந்தாலும் கூட ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும்[14]. இதுபற்றி ஆப்கனின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛உணவகங்களில் ஆண்கள், பெண்களை பிரித்து உணவு சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] டாப்.தமிழ்.நியூஸ், கேரளாவில் பள்ளி மாணவியை மேடைக்கு அழைத்த விழா அமைப்பாளர்களை கண்டித்த முஸ்லிம் மத குரு.., By KRISHNA G Wed, 11 May 20225:48:27 AM

[2] https://www.toptamilnews.com/india/Samastha-Kerala-Jem-iyyathul-Ulama-leader-MT-Abdulla/cid7371111.htm

[3] விகடன், `பெண்களை பரிசு பெற மேடைக்கு அழைக்கக்கூடாது!’ – கேரள இஸ்லாமிய தலைவரின் செயலால் கொதித்த கவர்னர், சிந்து ஆர், Published:12 May 2022 6 PMUpdated:12 May 2022 6 PM.

[4] https://www.vikatan.com/news/india/kerala-muslim-body-leader-scolds-members-for-inviting-girl-student-on-stage-draws-flak

[5] காமதேனு, முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவதா?’- மதக்குருக்களை எச்சரிக்கும் கேரள ஆளுநர்,என்.சுவாமிநாதன், Updated on : 12 May, 2022, 3:37 pm.

[6] https://kamadenu.hindutamil.in/national/religious-people-who-isolate-muslim-women-kerala-governor-warns

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பெண்கள் மேடைக்கு வரக்கூடாது..!! இந்த காலத்தில் இப்படி ஒரு இசுலாமிய அமைப்பா.? கொந்தளிக்கும் ஆளுநர், Ezhilarasan Babu, Chennai, First Published May 13, 2022, 1:44 PM IST; Last Updated May 13, 2022, 1:44 PM IST

[8] https://tamil.asianetnews.com/politics/women-should-not-come-on-stage-is-there-such-an-islamic-organization-in-this-period-governor-condemned–rbtavy

[9] தினமணி, மலப்புரத்தில் சிறுமி அவமதிப்பு விவகாரம்: அரசியல் தலைவா்களின் மெளனம் ஏமாற்றமளிக்கிறது, By DIN  |   Published On : 13th May 2022 03:01 AM  |   Last Updated : 13th May 2022

[10]https://www.dinamani.com/india/2022/may/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3843656.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, அவர்களின் மவுனம் ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது!” கேரள அரசை சாடும் ஆளுநர் ஆரிப் கான்எதற்கு தெரியுமா, By Vigneshkumar Updated: Friday, May 13, 2022, 0:18 [IST].

[12] https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-governor-questions-silence-of-leadership-on-girl-humiliated-on-stage-issue-458104.html

[13] தமிழ்.ஒன்.இந்தியா, ஓட்டலில் ஆண்பெண் சேர்ந்து சாப்பிட தடை! ஆப்கனில் அமலான புதிய கட்டுப்பாடுகள்! தாலிபான் ஆட்டம், By Nantha Kumar R Updated: Saturday, May 14, 2022, 12:36 [IST]

[14] https://tamil.oneindia.com/news/international/in-afghan-taliban-bans-men-and-women-dining-together-458287.html

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா?

ஒக்ரோபர் 28, 2021

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா, ஹலாலாஹரமா, ஷிர்க்காஇல்லையா?

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா, ஹலாலாஹரமா, ஷிர்க்காஇல்லையா?: ஸ்டாலின் என்னத்தான் சப்பைக் கட்டினாலும், தன்னுடைய நாத்திகம் இந்துவிரோதம் தான் என்று வெளிப்படுகிறது. திமுக இந்துவிரோத கட்சி இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், ஸ்டாலின் பேசுவது, நடந்து கொள்வது இந்துவிரோதமாகத்தான் இருந்து வருகிறது. பிறகு தொண்டர்களிடம் எப்படி சகிப்புத் தன்மை, நேயம், வெங்காயம், வெள்ளைப்பூண்டு எல்லாம் எதிர்பார்க்க முடியும். அது தான் லடந்த 70 வருட திரவிடத்துவ ஆட்சியில் நிரூபிக்கப் பட்டு வருகிறது. இதில் பெரியார் என்பதெல்லாம், ஒரு சாக்கு-போக்குதான். செக்யூலரிஸமே, கம்யூனலிஸமாகத்தான் உள்ளதுந்தமிழகத்து முதலமைச்சர் என்ற அடிப்படையே தெரியாத ஆளகத்தான் ஸ்டாலின் இருந்து வருகிறார். துலுக்கர்-கிருத்துவர்களுடன் உறவாடி, கஞ்சி குடித்து, கேக் தின்று பரஸ்பர நெருக்கங்களுடன் இருந்து, இந்துக்களை சதாய்த்து வருகின்றனர். இடையிடையே திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம் (கொளத்தூர் மணி), திராவிடர் கழகம், (கோவை ராமகிருஷ்ணன்) என்று பல பேனர்களில் பூணூல்களை அறுப்பது, தாலிகளை அறுப்பது, பன்றிக்கு பூணூல் போடுவது, அப்பாவி பிராமணர்களை வெட்டுவது, கோவில்களில் புகுந்து அடிப்பது, சிலைகளை உடைப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீலாது நபியும், இந்திய அரசியலும்: மொஹம்மதுவின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்று ஆசார இஸ்லாம் கூறுகிறது. ஏனெனில், அது உருவ வழிபாட்டிற்கு வழி வகுக்கும் என்று அவர்கள் வாதிடுவர். மொஹம்மதுவின் கல்லறையினை நீக்கி விட்டதாகவும் தெரிகிறது. ஏனெனில், முஸ்லிம்கள் அங்கு சென்று வழிபடுவதை ஆசார இஸ்லாம் எதிர்க்கிறது. தர்கா வழிபாட்டை, தமிழக முகமதியரே எதிர்த்து ஷிர்க் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். மீலாது நபிக்கு துலுக்க நாடுகளில் கூட விடுமுறை கிடையாது. கொண்டாடுவதும் கிடையாது. முன்பு விடுமுறையும் விட்டது கிடையாது. வி.பி.சிங்கின் செக்யூலரிஸ / கம்யூனல் ஆட்சியில், அரசியலில் அது ஆரம்பித்து வைக்கப் பட்டது. அதனால், தமிநாட்டிலும் ஆரம்பம் ஆகியது.

ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்து[1]: யாரோ எழுதிக் கொடுத்ததை, வாழ்த்தாக, அறிவிக்கப் பட்டுள்ளது. அது, ஊடகங்களில் அப்படியே வெளி வந்துள்ளன[2].

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான ‘மீலாதுன் நபி’ திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்[3].   நபிகள் நாயகம் இளம்பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்[4].   ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.   அவரது போதனைகளும் அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள். அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைபிடித்து வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மக்களால் அமைய பெற்ற கழக அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்,” என்று இ.டிவி.பாரத், தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது[5]. மற்றவை, அப்படியே, பி.டி.ஐ பாணியில் செய்தி வெளியிட்டன[6].

18ம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப் படும் நிகழ்ச்சி: மௌலித் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தரித்தல், வம்சாவளி என்ற பொருள்தருகின்ற அராபிய வேர்ச்சொல் (அரபு மொழி: ولد) இடமிருந்து பெறப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு பிறப்பு, குழந்தையின் பிறப்பு, வம்சாவளி போன்ற கருத்துக்கள் வழங்கப்படுகின்றது. தற்காலப் பயன்பாட்டில் இச்சொல் முகமது நபி பிறந்தநாளைக் குறிப்பதாகவே உள்ளது. இந்நிகழ்வு ஏனைய சொற்களாலும் அழைக்கப் படுகின்றது. 1. பரா வபாத், 2. ஈத் அல்-மவ்லித் அந்-நபவி, 3. ஈத் இ மீலாத்-உந் நபவி மற்றும் 4. ஈத் இ மீலாதுன் நபி. இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சியா முஸ்லிம்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் முகமது நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சன்னி முஸ்லிம்கள் இதனை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் கொண்டாடுகின்றனர். இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாதலால், கிரெகொரியின் நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.

ஆசார இஸ்லாம் எதிர்க்கிறதுஸலபிகள் அல்லது வஹாபிகள் கொண்டாட்டத்தை எதிர்க்கின்றனர்: விகிபிடீயா மழுப்பலாக, இவ்வாறு கூறுகிறது, “பாரம்பரிய சன்னி மற்றும் சீயா இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன்நபி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கடந்த இரண்டரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் தோற்றம் பெற்ற ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம் உலகின் பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன் நபி கொண்டாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர். எனினும் ஸலபிகள் அல்லது வஹாபிகள் எனும் பிரிவினர் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை அது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர்”. இது இஸ்லாத்தில் நுழைக்கப் பட்ட கெட்ட நூதன அனுஸ்டானம் என்றும் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. திராவிடத்துவவாதிகளுக்கு, சுன்னி-ஷியா பிரிவுகள், இறையியல் வேறுபாடுகள், வழிபாட்டு மாறுபாடுகள் முதலியவற்றை அறிவார்களா இல்லையா என்று அவர்கள் மற்றும் துலுக்கர் வெளிப்படுத்திக் காட்டியதில்லை. இருப்பினும் ஸ்டாலின் வாழ்த்து சொன்னதை எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை.

தமிழக ஓட்டுவங்கி அரசியல், செக்யூலரிஸம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மறைக்கும் போக்கு: ஓட்டுவங்கி உள்ளது, சில தொகுதிகளில் உறுதியாக வெற்றிக் கிடைக்கிறது என்பதால், திமுக-அதிமுக முஸ்லிம்கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு வருகின்றன. ஆனால், முஸ்லிம்கட்சிகள் தோற்றாலும், வெற்றிப் பெற்றாலும், ஒன்றாக இருந்து சாதித்துக் கொள்கின்றன. தமிழக அரசியல்வாதிகளுக்கு கடல்கடந்த நலன்கள், ஆதாயங்கள், வியாபார பலன்கள், கிடைப்பதால், துலுக்கருடன் கூட்டு வைத்துக் கொள்கின்றன. ஆப்கானிஸ்தானில் இவ்வளவு நடந்தும், ஒன்றுமே நடக்காதது போல, தெரியாதது போல நட்த்து வருவது, பெரிய நடிகத்தனம், சாமர்த்தியம் எனலாம். அதாவது, இங்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பது போல இருப்பர். பங்களாதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும், நடந்து கொண்டிருக்கும் குற்றங்கள், கொடுமைகள், வன்முறைகள் பற்றி பேச மாட்டார்கள், ஆனால், காஷ்மீரில் துலுக்க பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டாலும், போராட்டம் நடத்துவர். செக்யூலரிஸம் இவ்விதமாகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

28-10-2021


[1] மாலைமலர், மு..ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து, பதிவு: அக்டோபர் 18, 2021 13:42 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2021/10/18134208/3112279/Tamil-News-Chief-Minister-Greets-Miladi-Nabi.vpf

[3] தினத்தந்தி, மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கவர்னர், மு..ஸ்டாலின் வாழ்த்து, பதிவு: அக்டோபர் 19,  2021 03:29 AM

[4] https://www.dailythanthi.com/News/State/2021/10/19032910/Milad-Nabi-Festival-Celebrated-Today-Greetings-from.vpf

[5] இ.டிவி.பாரத், இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்: மீலாதுன் நபி வாழ்த்து, Published on: Oct 19, 2021, 7:02 AM IST; Updated on: Oct 19, 2021, 9:14 AM IST

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/cm-stalin-greeted-milad-un-nabi-wishes-for-islamic-people/tamil-nadu20211019070231454

ரம்ஜான் கஞ்சிக்கு அரிசியா, செக்யூலரிஸ அரசியலுக்கு கூழ்-அரிசியா, இலவச அரிசியா, மானிய விலை அரிசியா – உண்மை என்ன?

மே 14, 2018

ரம்ஜான் கஞ்சிக்கு அரிசியா, செக்யூலரிஸ அரசியலுக்கு கூழ்-அரிசியா, இலவச அரிசியா, மானிய விலை அரிசியா – உண்மை என்ன?

TN free rice announced for Ranzan gruel - 14-05-2018

11-05-2018 – நம்பிக்கையான துலுக்கருக்கு செக்யூலரிஸ அரிசி இலவசம்: செக்யூலரிஸம் பெயரில் ஏதாவது ஒரு பழக்கம் ஆரம்பித்து வைக்கப் பட்டால், அரசியல்வாதிகள் அதனைத் தொடர்ந்து கடைபிடிப்பது சகஜமாகி விட்டது. ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது[1]. இதுகுறித்து தமிழக அரசு 11-05-2018 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை[2]: “ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது[3]. இதன் மூலம் தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல் பயன்பெறும்[4]. பள்ளிவாசல்களுக்கு தேவையான மொத்த அரிசியை வழங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரிசி வழங்குவதன் மூலம் தமிழக அரசுக்கு, ரூ.12.97 கோடி கூடுதல் செலவாகும்,” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. சென்ற வருடம் 2017- ரம்ஜான் கஞ்சி தயாரிக்க 4,900 டன் அரிசி வழங்கப்பட்டது[6]. 2011லிருந்து, ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த, இந்த பழக்கம் “இலவச அர்சி அரசியல்” தொடர்கிறது[7]. ரூ 12 கோடி செலவாகும் என்று குறிப்பிடுவதன் அவசியம் என்ன என்று பொது மக்களுக்கு விளக்கவில்லை. அதாவது “நீ கட்டும் வரி பணத்தைத் தான் இப்படி இலவசமாகக் கொடுக்கிறேன்,” என்று சொல்வது புரிந்து கொள்ள வேண்டும்.

TN free rice announced for Ranzan gruel - Tamil Hindu-11-05-2018

ரம்ஜான் பெயரில் துலுக்கருக்கு அளிக்கப்படுவது இலவச அரிசியா, மானிய விலை அரிசியா?: அரசு அறிவிப்பு, “இலவச அரிசி” எனும்போது, “மானிய அரிசி” என்று  துலுக்கர் குறிப்பிடுவது விசித்திரமாக உள்ளது. ரம்ஜான் மாதம் 16-05-2018 அன்று தொடங்க உள்ள நிலையில், பள்ளிவாசல்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படவேண்டிய மானிய விலை அரிசி இதுவரை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது[8]. அரசு அறிவித்தப் பிறகு, கொடுக்கவில்லை என்பது உண்மையாக இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், இதில் ஏதோ அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. இஸ்லாமியர்கள், தங்களது புனித மாதமான ரம்ஜான் மாதம், வரும் புதன்கிழமை துவங்க உள்ளது. ரம்ஜான் மாதத்தின் 30 நாள்களும் பகல் முழுவதும் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல், நோன்பு இருப்பது வழக்கம். சூரியன் மறைந்த பின்னர், தினசரி மாலையில் நோன்பை முடிப்பார்கள். அப்போது, நோன்புக் கஞ்சி எனப்படும் அரிசிக்கஞ்சி குடிப்பது வழக்கம். இதற்காக, அரசு மானிய விலையில் அரசி வழங்கிவருகிறது. இந்த வருடம், நோன்புக்கஞ்சி காய்ச்ச வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான அரசியை எந்த மாவட்டத்திலும் வழங்கவில்லை என்று தெரிகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 126 பள்ளிவாசல்களுக்கும் அரிசி வழங்கவில்லை என இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சிரிடம் புகார் அளித்தனர்[9]. இதுகுறித்து ஜமாத் நிர்வாகிகள் கூறுகையில், `நாளை அல்லது நாளை மறுநாள் நோன்பு பிடிக்க வேண்டும். ஆனால், அரசு இதுவரை நோன்புக் கஞ்சி தயாரிக்க அரிசி கொடுக்கவில்லை. ஒருவாரமாக, இன்று வாருங்கள்நாளை வாருங்கள், மாலை வாருங்கள் என்று கூறி அலைக்கழிக்கின்றனர். மானிய விலை அரிசியைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், கொடுக்க முடியாது என்று கூற வேண்டும். இதுபோன்று இழுத்தடிப்பு செய்யக் கூடாது’ என்றனர்[10]. மேலும், புகாரைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்[11].

TN free rice not given, muslims complain- 14-05-2018

1947க்கு முன்னும், பின்னும் நடக்கும் ஹஜ், ரம்ஜான் கஞ்சி, இப்தர் விருந்து முதலியன: 1927லிருந்து “ஹஜ் கமிட்டி” செயல்பட்டு வருகிறது, அரசு உதவி “ஹஜ் யாத்திரிக்கைக்கு” செய்யப்பட்டு வருகிறது. 1947ற்கு பிறகும் தொடர்கிறது[12]. செக்யூலரிஸம் பின்பற்றிய நிலையில், எந்த அரசும் இதனை நிறுத்தவில்லை. ஆசார துலுக்கரும் இதனை ஒவ்வாதது “ஷிர்க்” என்று மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை. தமிநாட்டு ஹஜ் கமிட்டி 1958ல் அமைக்கப்பட்டது, பாரத வெளியுறவுத் துறை விதிகளின் படிதான் [Haj Committee Act, 2002, (Central Act No.35 of 2002) செயல்பட்டு வருகிறது[13].

TN free rice announced for Ranzan gruel - Tamil Hindu-11-05-2018

அதன் படி மற்றும் திமுக மூஸ்லிம்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் நிலையில், ஹஜ்ஜிற்கு போவது என்பது திராவிட கட்சிகள், விழாவாகவே கொண்டாடி பிரயாணிகளை வழியனுப்பி வைத்தனர். இப்தர் என்கின்ற இறுதி நாள் “சாப்பிடும் விழாவும்” அவ்வாறே, லட்சங்கள் செலவழித்து நடத்தப் பட்டு வருகின்றன. இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. ஆனால், சமூக வலைத்தளங்கில் எதிர்க்கும் சிலர், அடிப்படை விசயங்கள் தெரியாமல், தனை செய்து வருகின்றனர். மோடியே இந்த வருடம் “அட்வான்சாக,” ரம்ஜான் முபாரக் “மன் கி பாத்” மூலம் தெரிவித்து விட்டார்!

Modi Ranzan Mubarak

இஸ்லாமும், ஆசாரமும் [ஹலால்], அநாசாரமும் [ஹராம்]: உண்மையான துலுக்கர் உலகத்தை “தாருல்-இஸ்லாம்,” மற்றும் “தாருல்-ஹராம்” என்று பிரித்துள்ளனர். “தாருல்-ஹராம்” பகுதிகளில் “காபிர்கள்” இருப்பதால், “ஜிஹாத்” மூலம் அங்குள்ள “குப்ரு தன்மை” முழுவதாக துடைத்தெரிய வரை, பொறுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது என்கிறார்கள்.  அதாவது “ஜிஹாத்” தொடர்ந்தாலும், அவர்களுடைய பொருட்களை, சொத்துகளை அனுபவிப்பது கூட “ஜிஹாத்” தான் என்ற விளக்கம் கொடுத்து, “ஜிசியா” பாணியில், கிடைப்பதை / கொடுப்பதை விடாதே, தட்டிக் கேள், உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொள், என்று தான், தக்லைவர்கள் அறிவுரை கொடுக்கிறார்கள். அதனால் தான் 11-05-2018 அன்று அறிவித்தவுடன், “அரிசி கொடு,” என்று கேட்டுவிட, அவர்கள் முறையாக, ஆவணங்களுடன் வந்து கேட்டார்களா இல்லையா, என்பதை எல்லாம், சரி பார்க்காமல், “நோன்புக் கஞ்சிக்கான மானிய விலை அரிசி வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! ஆட்சியரிடம் புகார்”, “ரமலான் நோன்பு கஞ்சிக்கு மானியம் அரிசி வழங்கவில்லை: ஜமாத் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!”, என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்!

Haj annonucement by GOI - 2018

மோமின்கள், காபிர்களை வகைப்படுத்தும் முறையும், அவர்களின் பொருட்களை அனுபவிக்கும் உரிமைகளும்: மத்தியில் பிஜேபி ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும், “ஹஜ் உதவி” தொடர்கிறது, நாளைக்கு பிஜேபி தமிழகத்தை ஆண்டாலும், தொடரும்.  துலுக்கர், இந்தியா தங்களால் ஆளப்பட்ட இடம் என்று தான் கருதிக் கொண்டு, உள்ள இந்துக்களை “திம்மிகளாக” மதிக்கிறார்கள். அதனால் தான், அவர்களிடத்தில் அந்த ஆணவம், அகம்பாவம் முதலியவை உள்ளன. அதே நேரத்தில், ஜைனர் போன்ற நம்பிக்கையாளர்கள் உபவாசம் இருந்து இறக்கிறார்கள். இவர்களோ உபவாசம் பெயரில் தின்று வாழ்கிறார்கள். இடைக்காலத்தில், ஜைனர்கள் மத்தியதரைக்கடல் பகுதிகளில் இருந்ததாலும், அவர்கள் துலுக்கரான போது, பழக்க-வழக்கங்களை “தலைகீழாக” மாற்றியதாலும், இவ்வாறு உண்மையான உண்ணா நோன்பு, காலை முதல் மாலை வரை என்றாகியது போலும்!

Fasting by Jains - to kill themselves

  1. உண்மையான ஆசார துலுக்கன், காபிரிடமிருந்து எதையும் பெறக்கூடாது, ஆனால், ஒருகாலத்தில் எங்களின் அடிமைகள் தான் என்ற நினைப்பில் பெறுகிறார்கள்.
  2. காபிர்கள், திம்மிகளிடமிருந்து அல்லாவே கொடுக்க வைக்கிறார் என்று நியாயப்படுத்திக் கொண்டும் வாங்கித் தின்கிறார்கள்.
  3. திம்மி, தாருல்-இஸ்லாமின் சட்டப்படியான குடிமகன், ஹரபி தாருல்-இஸ்லாமின் புறம்போக்கு குடிமகன், அதனால் அனுபவிக்கலாம்.
  4. முனாபிக், துலுக்கனைப் போல நடிப்பவன், அதனால், இவன் மிகவும் மோசமானவன், முர்தத், முந்தைய துலுக்கன் – அடுத்த துரோகி, அரிசி வேகுமா?
  5. Fasting cum feasting by Muslims
  6. முஷ்ரிக் – பல கடவுளரை வணங்கும் கேடு கெட்டவன், தஹ்ரிய்யா – படைப்பில் உள்ள அனைத்தையும் நம்புகிறவன், அரிசி வேகுமா?
  7. முல்ஹித் – நாத்திகர், ஜின்டீக் – நபிக்கு பின்னால் நபி வருவர் போன்றதை நம்பும் வகையறாக்கள் – நாத்திக-திராவிடர் கொடுக்கும் அரிசி வேகுமா?
  8. அல்-கிதாபி – இறைவனால் வெளிப்படுத்திய புனித நூல்களைக் கொண்டவர் – யூதர் மற்றும் கிருத்துவர் மட்டும், பெரியாஸ்டுகள் அரிசி ஏற்குமா, வேகுமா?
  9. வேகும் – தின்கலாம் என்று எடுத்துக் காட்டப்பட்டதால், அந்த முறையை பின்பற்றுகின்றனர்.

© வேதபிரகாஷ்

14-05-2018

TN free rice politics- 11-05-2018

[1] தினமலர், ரம்ஜான் நோன்புக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி, Added : மே 10, 2018 18:54

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=2018316

[3] தி.இந்து, நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 5,145 டன் அரிசி: தமிழக அரசு அனுமதி, Published : 11 May 2018 07:45 IST; Updated : 11 May 2018 07:45 IST.

[4] http://tamil.thehindu.com/tamilnadu/article23845467.ece

[5] https://www.dailythanthi.com/News/State/2017/05/24190434/Ramzan-Festival–4900-tonnes-of-rice-for-school-gates.vpf

[6] மாலைமலர், ரமலானை முன்னிட்டு மசூதிகளுக்கு 5 ஆயிரம் டன் இலவச அரிசி வழங்க முதல்வர் உத்தரவு, பதிவு: மே 10, 2018 20:07

[7] https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/10200753/1162169/TN-to-provide-5000-tons-of-free-rice-to-mosques-during.vpf

[8] விகடன், நோன்புக் கஞ்சிக்கான மானிய விலை அரிசி வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! ஆட்சியரிடம் புகார், அருண் சின்னதுரை அருண் சின்னதுரை, Posted Date : 17:20 (14/05/2018); Last updated : 17:20 (14/05/2018)

[9] https://www.vikatan.com/news/tamilnadu/124989-muslim-jamath-peoples-files-complaint-against-officials-over-delay-in-distributing-rice-for-ramzan-gruel.html

[10] தமிழ்.ஈநாடு, ரமலான் நோன்பு கஞ்சிக்கு மானியம் அரிசி வழங்கவில்லை: ஜமாத் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!, Published 14-May-2018 17:06 IST

[11] http://tamil.eenaduindia.com/State/Madurai/2018/05/14170627/Ramalan-does-not-grant-to-Kanji-Jamaat-executives.vpf

[12] http://hajcommittee.gov.in/

[13] http://hajjtn.com/

 

பிணத்தை வைத்து மதவாதம் செய்தல் – மும்தாஜ் பேகம் முதல் வன்னியம்மாள் வரை – பெண்னை மதிக்கத் தெரியாதவர்கள், “தலித்-முஸ்லிம்” கூட்டு பேசி அரசியல் செய்வது எப்படி?

மே 9, 2018

பிணத்தை வைத்து மதவாதம் செய்தல்மும்தாஜ் பேகம் முதல் வன்னியம்மாள் வரைபெண்னை மதிக்கத் தெரியாதவர்கள், “தலித்முஸ்லிம்கூட்டு பேசி அரசியல் செய்வது எப்படி?

Ahmadiyya , Kumudam Reporter, 11-06-2009

முகமதியர், முஸ்லிம், துலுக்கர்இவர்களின் போலித்தனம்: இஸ்லாமியர் ஏதோ தாங்கள் ஆகாயத்திலிருந்து நேரே இறங்கிவிட்டவர் மாதிரி பாவித்துக் கொண்டு பேசுவர். முகமதியரோ தங்களது 1300 ஆண்டுகள் பெருமையை வர்ணிப்பர்.  முஸ்லிம்களோ தாங்கள் தான் ஒட்டுமொத்த மனித இனத்தின் எஜமானர் என்பது போல எதேச்சதிகார மதவாதத்தை பிரகடனம் செய்வர். ஆனால், துலுக்கரின் மனங்களில் என்ன இருக்கிறது என்பது ஜிஹாதி குரூர-கொடூர குண்டுவெடிப்புக்காரர்கள், கொலைகாரர்கள் மூலம் 1300 வருடங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், அறிவுஜீவித் தனத்துடன், “தலித்-முஸ்லிம்” கூட்டு, ஒற்றுமை மற்றும் ஓட்டு வங்கி என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டிருப்பர். எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், பெண்கள் என்று எல்லா ஒடுக்கப்பட்ட, அமுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இவர்களை சேர்த்துவிட்டால், இந்தியாவில் “இந்துக்கள்” 15-25% சதவீதம் தான் என்றும் கணக்குப் போடும் கில்லாடிகள் இருக்கின்றனர்[1]. அந்நிலையில் தான், அவர்களது போலித் தனத்தை “பிண அரசியல்” வெளிப்படுத்துகிறது. இன்றைக்கு வன்னியம்மாள் பிணம், மசூதி தெருவு வழியாக செல்லக் கூடாது என்ற மதவெறி-மிருகங்கள் தான், 2009ல் புதைத்தப் பிணதையே தோண்டியெடுத்துள்ளனர். இனி அந்த விவரங்களை கவனிப்போம். கருணாநிதி ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் [2006-2011] அந்த குரூரம் நடந்தது.

, No place for Ahmadi body in a Muslim graveyard, Pakistan 2010

பாகிஸ்தானில் நடந்து வருவது சென்னையில் 2009ல் நடந்தது: அஹமதியாக்கள் பஞ்சாப் மாநிலத்தில் தோன்றிய ஒரு இஸ்லாமிய பிரிவாகும். நபியின் தூதர்கள் மீண்டும் தோன்றுவார்கள் எனப் பல விசயத்தில் இவர்கள் சுன்னி முஸ்லீம்களுடன் வேறுபட்டிருக்கிறார்கள். ஷியாக்களும் “மெஹதி” என்பவரை எதிர்பார்த்துள்ளார்கள். ஒரிறைத் தத்துவம், ரமலான் நோன்பு, மெக்கா புனிதப்பயணம் என இப்படி ஒற்றுமைகள் இருந்தாலும் மற்ற முஸ்லீம்கள் இவர்களை “காபிர்” என்று அறிவித்து புறக்கணிக்கிறார்கள். பாகிஸ்தானில் அவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று அறிவிக்கப்பட்டனர். அதனால், அவர்கள் தொடந்து தாக்கப்படுவதுடன், அவர்களது மசூதிகளும் இடிக்கப் பட்டன. அவர்களது பிணங்களும் மற்ற முஸ்லிம்களின் பபரிஸ்தானில் புதைக்க அனுமதி இல்லை[2]. புதைத்தாலும், தோண்டி எடுத்து விடுவர்[3]. அதே நிலைதான், மே 2009ல் சென்னையில் ஏற்பட்டுள்ளது.  பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தாலும், இஸ்லாமிய ஆட்சியில், அஹ்மதியா முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப் படுகின்றன[4]. சமீபத்தில் [மார்ச் 2018] கூட பாகிஸ்தான் நாளிதழில், இது எடுத்துக் காட்டப்பட்டது[5]. இனி சென்னை பிண விவகாரத்தைப் பார்ப்போம்.

Ahmadiyya body exhumed in Chennai - Pudhiya Kalacharam Aug.2009

மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது (01-06-2009): சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த நிசார் அஹம்மது என்பவரின் 36 வயது மனைவி மும்தாஜ் பேகம், தலைமையாசிரியையாகப் பணியாற்றியவர். திடீரென்று மூளைக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய உறவினர்கள் உரிய அனுமதி பெற்று பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள முஸ்லீம்களின் கபரிஸ்தானத்தில் மே 31, 2009 அன்று மும்தாஜின் உடலைப் புதைத்திருக்கிறார்கள். இறந்து போனவர் அஹமதியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் அங்கே உடலைப் புதைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப்பின் கவனத்திற்கு இப்பிரச்சினை வந்தது. அவரது உத்திரவின் பெயரில் மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது. அதாவது இந்துக்கள் “காபிர்கள்” என்பதால், அங்கு புதைக்கப்பட்டது!

Body exhumed Dinakaran 02-06-2009
அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் தலைவர் பஷாரத் அஹ்மது கூறியது[6]: சென்னை அஹ்மதியா முஸ்லிம் ஜமா-அத் தலைவர் பஷாரத் அஹ்மது ஞாயிற்றுக்கிழமை செய்திய்யாளர்களிடம் கூறியது, “அஹ்மதி முஸ்லிம் சமயத்தை சேர்ந்த மும்தாஜ் பேகம் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். உவரது உடலை ஆதம்பாக்கம் முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முதலில் அனுமதியளித்த அந்த நிர்வாகம் திடீரென மறுத்தது. இதைத் தொடர்ந்து ராயப்பேட்டை மயானத்தில் முறையாக அனுமதி மெற்று மே 31ல் அடக்கம் செய்தோம், அப்பொழுது சிலர், ‘அஹ்மதி முஸ்லிம்கள், முஸ்லிம்களே அல்லஎன்று கூறி அடக்கம் செய்ய எதிர்ப்பு தெர்வித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். அவர்கள் உரிய பாதுகாப்பு வழங்குவதாக கூறியதைத் தொடர்ந்து நாங்கள் நிம்மதியடைந்தோம். அந்த பெண்ணின் உடல் தோண்டியெடுக்கப் பட்டு கிருஷ்ணாம்பேட்டை இந்துக்கள் மயானத்தில் அடக்கம் செய்யப் பட்ட தகவலை பத்திரிக்கைகளைப் பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். இது மனிதாபிமானன் அற்ற செயல்,” என்றார் அவர். அதனால், அஹ்மதி முஸ்லிம்களுக்கு, தனி மயானம் வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்[7].

Ahmadiyya want seperate burial ground- Chennai Dinamani, 08-06-2009

அல்லா சென்னை காஜியை தண்டித்தாரா?: தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப் சில நாட்களில் பதவி விலக நேர்ந்தது. அவர் பதவி விலக நேர்ந்ததற்கு, முஸ்லிம் இயக்கங்களில் தீவிரமான கருத்து வேறுபாடுகளும், அரசியலும் இருந்தது. காஜியோ அரசு அதிகாரி என்னை ஏமாற்றி விட்டார், என்றார்[8]. “வக்ப்ஃ போர்ட்” மாற்றியமைக்கப் படுவதால், அவ்வாறு செய்யப்பட்டது, என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப் பட்டது. அஹ்மதியா காஜி, “அல்லா தான் அவருக்கு தண்டனை அளித்தார்,” என்றார். இந்த விவரங்களை, இந்த வீடியோவில் காணலாம்[9]. ஈவு-இரக்கம் இல்லாமல், ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்த பிறகும், தோண்டியெடுக்க ஆணையிட்டது, அந்த காஜியின் ஞானத்தை கேள்விக் குறியாக்குகிறது. எல்லோருமே குரான், அல்லா பெயரைச் சொல்லி இத்தகைய மனிதத்தன்மையெற்ற காரியங்களை செய்தால், யார் பொறுப்பு என்பதனை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

Khaji removed, Deccan Chroniclel, 07-06-2009-3

அஹ்மதியா இறையிலும், அடிப்படைவாததீவிரவாத இஸ்லாமும்: இஸ்லாமிய நாடுகளில் “நபிகளை ஏற்றுக்கொள்ளவில்லை, குரானைத் திருத்த முயன்றார்கள்” என்றெல்லாம் கூறி அஹமதியா பிரிவினைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பலவிதமான அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றார்கள். இவ்வகையில் பாகிஸ்தானில் அஹமதியாக்கள் கொல்லப்படுவதும், அந்நாட்டில் முஸ்லீம்கள் என்பதற்கு பதிலாக அவர்களைச் சிறுபான்மையினர் என்றே வகைப்படுத்தப் பட்டுள்ளார்கள். இந்தியாவிலும் மற்ற முஸ்லீம்கள் அஹமதியா முஸ்லீம்களை ”காபிர்கள்” என்று தான் நடத்துகிறார்கள்[10]. மொஹம்மது நபியையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை முஸ்லீம்களிடம் வலுவாக இருக்கின்றது. அனால் நடைமுறையில் இந்த நம்பிக்கைகளைக் கள்ளத்தனமாகவோ, பணக்காரனுக்காகவோ இவர்கள் மீறத்தான் செய்கின்றார்கள். இறுதியில் கடுமையான ஒழுக்கத்தின்பாற்பட்ட மதம் என்பது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் மட்டுமே ஓதப்படுகின்றது. மேலும் இஸ்லாமியப் பெண்கள் ஏதாவது சில சுதந்திரமாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்தால் மறுகணமே அவர்கள் மீது பாய்ந்து குதறுவதற்கும் தயாராக இருப்பார்கள் இசுலாமிய வெறியர்கள்[11]. பெண்களுக்கு எல்லா உரிமைகள் இருக்கின்றன என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

Ahmadiyya body exhumed in Chennai IE_08-06-2009.

சகிப்புத் தன்மை அற்ற சென்னை முஸ்லிம்கள்: இஸ்லாமிய மாற்றுப் பிரிவு ஒன்றினைச் சேர்ந்த பெண்ணின் உடலை புதைத்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறியர்கள், அதைத் தோண்டியெடுத்து அனுப்பியிருக்கின்றார்கள் என்றால் அவர்களது கொலைவெறி மற்றும் மதவெறியை எவரும் புரிந்து கொள்ளலாம். அதுவும் அரசின் தலைமைக் காஜியே இந்தப் பாதகச் செயலுக்கு உத்திரவிட்டிருப்பதால் மற்ற வெறியர்களின் நிலைமையைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இந்தியாவில் பலமாக இல்லை. ஏனென்றால் இங்கே அது சிறுபான்மையினரின் மதம்.  2009லேயே, சென்னை முகமதியர் இப்படி இருந்தார்கள் என்றால், பத்தாண்டுகளில், 2018ல் – அவர்களது மனப்பாங்கு எப்படி வெறிகொள்ளும். அதுதான், ஐசிஸ்-க்கு ஆள் எடுப்பது, அனுப்பவது என்ற நிலைக்கு வந்துள்ளது, சென்னையிகேயே அத்தகைய பயங்கரங்கள் நடந்துள்ளன. அதனால் தான், வன்னியம்மாள் உடலைக் கூட “தங்கள் தெரு” வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என்று கலவரம் செய்துள்ளார்கள்.

Ahmadiyya , Tamizhaga Arasiyal, 11-06-2009-1

ஜிஹாதி இஸ்லாம் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை: முக்கியமாக வரதட்சிணைக் கொடுமை வழியே பல ஆண்கள் தமது மனைவிகளைச் சுலபமாக விவாகரத்து செய்வதை இந்த ஜமா அத்துகள் சுலபமாக நிறைவேற்றுகின்றன. இதில் மட்டும் ஆணாதிக்கத்தின் தயவு காரணமாக மதக் கோட்பாடுகளெல்லாம் வீதியில் தூக்கி வீசப்படுகின்றன. எப்போதுமே வறியவர்களுக்கும், எளியவர்களுக்கும் மட்டும்தான் விதிக்கப்பட்டிருக்கின்றன போலும் மதக் கட்டுப்பாடுகள். இப்படிப் பெண்களையும், ஏழைகளையும் ஒடுக்கும் இஸ்லாமிய மதவெறியர்கள் சற்றே மேலோட்டமான சீர்திருத்தம் பேசும் அஹமதியாக்களை முழுமையாக வெறுப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றது. அதன்படி நாளையே இவர்களது அதிகாரங்களும், வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் செல்லுபடியாகாமல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாக அஹமதியாக்களை துரோகிகள் போலச் சித்தரிக்கின்றார்கள், என்பதெல்லாம் பொய். ஏனெனில், உழைத்து முன்னேறி, சமூகத்தில் அந்தஸ்த்துடன் மற்றவர் போன்று வாழ வேண்டும் என்றால், அடிப்படைவாத, மதவாத, பயங்கரவாத, தீவிரவாத கும்பல்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள். ஆனால், தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகள், நேரிடையாகவோ-மறைமுகமாகவோ அவர்களுக்கு உதவுகிறார்கள் என்பது தெருகிறது. குறிப்பாக பெற்றோர், உற்றோர், மற்றவர் தடுக்காமல் இருப்பதோடு, பன உதவியும் செய்து வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

09-05-2018


Ahmadiyya , Kumudam Reporter, 11-06-2009-2

[1] “தலித்” போர்வையில், முகமதிய சஞ்சிகைகள் இந்த பொய்யை அதிகமாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றன.

[2] Express Tribune, No place for Ahmadi body in a Muslim graveyard, Pakistan, Published: November 2, 2010.

[3] https://tribune.com.pk/story/71177/no-place-for-ahmedi-body-in-a-muslim-graveyard/

[4] Daily Times, Forbidden truth: Ahmadis in the social fabric of Pakistan, Pakistan, by Busharat Elahi Jamil, MARCH 13, 2018.

[5] https://dailytimes.com.pk/214057/forbidden-truth-ahmadis-in-the-social-fabric-of-pakistan/

[6] தினமணி, அஹ்மதி முஸ்லிம்களுக்கு, தனி மயானம் அமைக்க கோரிக்கை, சென்னை, ஜூன். 8, 2009.

[7] Deccan Chronicle,  Jamaath seeks burial ground, Chennai, Jume 11, 2009.

[8] Deccan Chronicale, Official cheated me: Chief Kazi, June 6, 2009.

[9] https://www.youtube.com/watch?v=VrWFxK-SXss

[10] வினவு, அஹமதியா: பிணத்தைக் கூட சகிக்காத இசுலாமிய வெறியர்கள்!, இளநம்பி, –புதிய கலாச்சாரம், ஆகஸ்டு -2009, பக்கம்.9.

[11] https://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/

 

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

Wovs of talaq sufferings

முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது: தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் மார்ச் 30, 2017 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி 2017 முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி இஸ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலா‌க் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது[2]. இதுவிசயமாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், அவை அனைத்தும், மொத்தமாக விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Wovs of talaq sufferings- women demand justice

ஷரீயத் பிரிவு பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது: இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது[3]. முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது[4]. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ‌ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Talaq-talaq-talaq

பலமுறைகளில் தலாக், தலாக், தலாக் சொல்லி விவாகரத்து செய்வது: முஸ்லிம் கணவர்கள் எப்படி இந்த முத்தலாக்கை செய்து வருகின்றனர் என்று ஏராளமான செய்திகள் வந்துள்ளன. முன்பு, தபால் அட்டைல் தபால், கூரியர் என்றெல்லாம் இருந்து, பிறகு போன், டெலக்ஸ் என்று மாறி, இப்பொழுது, இணைதள அளவில், மெஸேஜ், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால், அதிகம் பெண்கள் பதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது[6]. ஆனால், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ansari wife- VP

முத்தாலிக், குரானில் இல்லை, மௌலானாக்களால் உருவாக்கப் பட்டதுசல்மா அன்சாரி: நாடு முழுவதும் ‘தலாக்’ விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை ‘தலாக்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் ‘தலாக்’ என்று விவகரத்து பெறுவதும் தபாலில் ‘தலாக்’ என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன. இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது[7]. இந்த நிலையில் ‘தலாக்’ குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[8].

muslim-act-misused-for-marrying-many-women

ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[9].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார். பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்[10]. ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது.  பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார். அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர்.  தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-04-2017

muslim-women-protection-divorce-act-1986

[1] மாலைமலர், முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பதிவு: மார்ச் 30, 2017 15:12.

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/30151231/1077027/SC-bench-refers-TripleTalaq-matter-to-constitution.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, முத்தலாக்அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில், By: Karthikeyan; Published: Tuesday, April 11, 2017, 3:31 [IST]

[4] http://tamil.oneindia.com/news/india/triple-talaq-makes-muslim-women-socially-financially-vulner-279416.html

[5] விகடன், முத்தலாக் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லைஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!, Posted Date : 02:59 (11/04/2017); Last updated : 02:59 (11/04/2017)

[6] http://www.vikatan.com/news/india/86044-triple-talaq-violate-right-to-equality—centre-tells-sc.html

[7] விகடன், முத்தலாக்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி, Posted Date : 21:37 (08/04/2017); Last updated : 21:37 (08/04/2017).

[8] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[9] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[10] http://www.dailythanthi.com/News/India/2017/04/09221142/350-cr-women-support-Shariyat-Triple-Talaq–AIMPLB.vpf