Archive for the ‘ஷாபானு’ category

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

Wovs of talaq sufferings

முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது: தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் மார்ச் 30, 2017 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி 2017 முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி இஸ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலா‌க் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது[2]. இதுவிசயமாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், அவை அனைத்தும், மொத்தமாக விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Wovs of talaq sufferings- women demand justice

ஷரீயத் பிரிவு பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது: இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது[3]. முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது[4]. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ‌ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Talaq-talaq-talaq

பலமுறைகளில் தலாக், தலாக், தலாக் சொல்லி விவாகரத்து செய்வது: முஸ்லிம் கணவர்கள் எப்படி இந்த முத்தலாக்கை செய்து வருகின்றனர் என்று ஏராளமான செய்திகள் வந்துள்ளன. முன்பு, தபால் அட்டைல் தபால், கூரியர் என்றெல்லாம் இருந்து, பிறகு போன், டெலக்ஸ் என்று மாறி, இப்பொழுது, இணைதள அளவில், மெஸேஜ், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால், அதிகம் பெண்கள் பதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது[6]. ஆனால், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ansari wife- VP

முத்தாலிக், குரானில் இல்லை, மௌலானாக்களால் உருவாக்கப் பட்டதுசல்மா அன்சாரி: நாடு முழுவதும் ‘தலாக்’ விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை ‘தலாக்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் ‘தலாக்’ என்று விவகரத்து பெறுவதும் தபாலில் ‘தலாக்’ என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன. இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது[7]. இந்த நிலையில் ‘தலாக்’ குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[8].

muslim-act-misused-for-marrying-many-women

ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[9].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார். பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்[10]. ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது.  பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார். அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர்.  தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-04-2017

muslim-women-protection-divorce-act-1986

[1] மாலைமலர், முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பதிவு: மார்ச் 30, 2017 15:12.

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/30151231/1077027/SC-bench-refers-TripleTalaq-matter-to-constitution.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, முத்தலாக்அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில், By: Karthikeyan; Published: Tuesday, April 11, 2017, 3:31 [IST]

[4] http://tamil.oneindia.com/news/india/triple-talaq-makes-muslim-women-socially-financially-vulner-279416.html

[5] விகடன், முத்தலாக் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லைஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!, Posted Date : 02:59 (11/04/2017); Last updated : 02:59 (11/04/2017)

[6] http://www.vikatan.com/news/india/86044-triple-talaq-violate-right-to-equality—centre-tells-sc.html

[7] விகடன், முத்தலாக்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி, Posted Date : 21:37 (08/04/2017); Last updated : 21:37 (08/04/2017).

[8] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[9] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[10] http://www.dailythanthi.com/News/India/2017/04/09221142/350-cr-women-support-Shariyat-Triple-Talaq–AIMPLB.vpf

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

talaq-case-nikkah-namah-divorce

காஜி வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது[1]: மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017

முஸ்லீம் லீக் வலியுறுத்துவது[2]: இத்தகைய குழப்பங்கள் அவ்வப்போது எழும் என்பதால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கீழ்க்கண்டவற்றை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

  1. முதலாவதாக, 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  2. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
  3. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இப்படிப்பட்ட தீர்மானங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடுகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காஜிகளுடைய அந்தஸ்தையும், கண்ணியத்தையும் நிலைபெறச் செய்வதற்கு இத்தகைய அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவது சமுதாயத்தின் இன்றைய கட்டாயக் கடமையாகும். இதனை விடுத்து வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் ஷரீஅத் சட்டப் பிரச்சனையிலும், குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிற குழப்பவாதிகள் தங்களை திருத்திக் கொண்டு காஜிகளுடைய அதிகார வரம்பை கூட்டுவதற்கும், அதன் மூலம் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தை நிலை நாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017-2

ஷபானு பிரச்சினை போன்று இதைத் திருப்ப முயற்சிக்கும் முஸ்லிம் இயக்கங்கள்: முஸ்லீம் லீக்கின் கருத்துகளை அலசவேண்டியுள்ளது:

  1. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.
  2. அதே காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது, அரசால் நியமிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.
  3. மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
  4. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை.
  5. அதாவது தீர்ப்புகளை முஸ்லிம்கள் ஏற்கலாம், ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இங்குதான், அடிப்படைவாத-தீவிரவாதிகளின் கட்டுப்பாடு வருகிறது. அவர்களது கருத்து, காஜிக்களின் கருத்துகளை மிஞ்சும் போது, அவர்களது பத்வா எடுபடுகின்றது.talaq-certificates-issued-by-cheif-kazi-no-legal-sanction-toi-high-court-12-01-2017
  6. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
  7. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது.
  8. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
  9. 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  10. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

ஏற்கெனவே, இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், முஸ்லிம் பெண்ணிய இயக்கங்கள் வழக்குத் தொடுத்துள்ளதாலும், இப்பிரச்சினையை பெரிதாக்க, முஸ்லிம்கள் விரும்பவில்லை, விளம்பரம் கிடைப்பதையும் விரும்பவில்லை.

© வேதபிரகாஷ்

18-01-2017

triple-talaq-certificate-issued-by-chief-kazi-illegal-the-hindu-12-01-2017

[1] http://www.muslimleaguetn.com/news.asp?id=3429

[2] கே.எம்.கே, , காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, மணிச்சுடர் Friday, January 12, 2007.

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது – முகமதியர் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை!

திசெம்பர் 21, 2016

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது – முகமதியர் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை!

muslim-women-divorce-act-1986

மனுதாரரின் மனுவை ஏற்க முடியாது[1]: போலீஸ் தரப்பு மனுவில் கூறியிருப்பது தொடர்கிறது[2]மேலும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் தலைமை ஹாஜிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, இரு தரப்பினரும் சம்மதத்துடன்தலாக்சொல்லி விட்டால், அது முஸ்லிம் சட்டத்தின்படி செல்லத்தக்கது தான். இதுதொடர்பான விசாரணையில், கணவன்மனைவி மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தலைமை ஹாஜி கூறியுள்ளார். எனவே மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும், ” இவ்வாறு துணை கமிஷனர் கூறியிருந்தார்[3]. அதாவது ஷரீயத் கோர்ட்டுக்கு ஆதரவாக இவர் கூறியிருப்பது தெரிகிறது. சட்டம் அமூல்படுத்தும் அரசு அதிகாரிகள், இவ்வாறு பாரபட்சமாக செயல்படுவதுதான், இந்திய செக்யூலரிஸத்திற்கு அபாயம், ஆனால், அவ்வாறு இருப்பதும் பெருமையாக கருதுகிறார்கள். முற்போக்கு இத்தாந்தம் என்றெல்லாம் பேசுபவர்கள் இத்தகைய அடிப்படைவாதத்தை ஆதரித்து வருவது திகைப்பூட்டுவதாக இருக்கிறது.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-sun-news

வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை[4]: இந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “துணை கமிஷனர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் நீதிமன்றத்தை போல வழிபாட்டு தலங்கள் செயல்படுவதையும் ஏற்க முடியாது. மேலும், மசூதிக்குள் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பதால், அந்த நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை என்று அரசு தரப்பு வக்கீல் கூறுவதையும் எங்களால் ஏற்க முடியவில்லை. வழிபாடு நடக்கும் இடம், அதாவது கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிப்பாட்டு தலமாக இருந்தாலும், வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும். எனவே, இதுபோன்ற செயல்களை தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுகுறித்த அறிக்கையை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற ஜனவரி 19–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்,”  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[5]. நீதிபதியின் ஆணையின் பேரில், அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. எதற்கு வம்பு என்று இருந்து விடுவார்களா? சன் – டீவி கொடுக்கும் விவரங்களை, இங்கே பார்க்கலாம்[6].

muslim-women-protection-divorce-act-1986

ஷாபானு வழக்கு போன்று மறக்கப்படுமா?: பொதுவாக முகமதியர் தங்களது மதசட்டத்தில் நுழைய யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று தான் ஆர்பரித்துக் கொண்டிருப்பர். ராஜிவ் காந்தி ஆட்சியின் போது, ஷாபானு வழக்கில், ஷரீயத்தின் படியில்லாமல், விவாகரத்து செய்யப்பட்ட ஷாபானுவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு சொன்ன நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்று கருவிய தில்லி இமாம், அவரை கைது செய்ய நீதிமன்றங்கள் கைது செய்ய ஆணை பிறப்பித்தது, ஆனால், ஒன்றும் நடக்காதது, நீதிமன்ற தீர்ப்பை நீர்க்கும் விதத்தில் புதிய சட்டத்தை எடுத்து வந்தது, வயதான ஷாபானு இறந்தது என்பதையெல்லாம் இப்பொழுது மறந்திருக்கலாம். வயதான மூதாட்டிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதை, இரக்கமில்லாமல், மதசட்டம் என்ற போர்வையில், ஒரு ஆண் அத்தகைய காரியத்தை செய்ததையும், பெண்ணியம், பெண்கள் இயக்கங்கள் கூட மறந்திருக்கலாம். அப்பொழுது பிறக்காதவர்களுக்கு, இப்பொழுது சொல்லும் போது, தமாஷாகக் கூட இருக்கலாம்.

muslim-act-misused-for-marrying-many-women

முகமதியர் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்களா?: ஆனால், இனி, முகமதியர், இத்தீர்ப்பை ஏற்பார்களா மாட்டார்களா என்று பார்க்க வேண்டும். இதுவரை, இதை எதிர்த்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஷாபானு விசயத்தில் அல்லோல-கல்லோலப் பட்டது என்பது தெரிந்த விசயம் தான். ஆனால், இப்பொழுது, எதையும் காணவில்லை. பொது சிவில் சட்டம் என்று சொன்னால் கூட குதிக்கும், முகமதியர், அரசியல்வாதிகள், இதைப் பற்றி கருத்து, எதிப்பு எதையும் தெர்விக்காமல் இருப்பதும் நோக்கத்தக்கது. இப்பொழுதுள்ள அரசியல் குழப்ப நிலையில், இப்பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று நினைக்கிறார்களா, அல்லது மேல் முறையீடு செய்யலாம் என்று இருக்கிறார்களா, அல்லது மனுதாரரை மிரட்டி வாபஸ் செய்ய கட்டாயப் படுத்துவார்களா என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

21-12-2016

madras-high-court-bans-sharia-court-woman-position

[1] Financial Express, Madras high court bans Sharia courts in mosques, By: FE Online | New Delhi | Updated: December 19, 2016 4:02 PM

[2] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article9435069.ece

[3] http://www.financialexpress.com/india-news/madras-high-court-bans-sharia-courts-in-mosquhttp://www.financialexpress.com/india-news/madras-high-court-bans-sharia-courts-in-mosques/479331/es/479331/

[4] Hindusthan Times, Madras high court bans unauthorised Sharia courts in Tamil Nadu , Updated: Dec 19, 2016 18:19 IST.

[5] http://www.hindustantimes.com/india-news/madras-hc-bans-unauthorised-sharia-courts-in-tamil-nadu/story-LAYh4RyesKrK5fZLvSuokK.html

[6] https://www.youtube.com/watch?v=a6Lf5L6TE6w