கரோனா வைரஸ் / கோவிட்-19 தொற்று வியாதியும், முஸ்லிம்களும், தனிமைப்படுத்தலும், நோய்தீர்க்கும் முயற்சிகளும், முஸ்லிம் நோயாளிகளின் அடாவடித் தனங்களும்! [2]
நாடு முழுவதும் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 25,500-க்கும் மேற்பட்டோர்– அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்– தனிமைப் படுத்தப் பட்டுள்ளனா்: நாடு முழுவதும் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 25,500-க்கும் மேற்பட்டோரும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்[1]. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் புண்ய சலீலா ஸ்ரீவாஸ்தவா, இந்தத் தகவலை தெரிவித்தார். இதுகுறித்து அவா், செய்தியாளா்களிடம் 06-04-2020, திங்கள்கிழமை மேலும் கூறியதாவது[2]: தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 9,000 போ் கலந்து கொண்டனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டினா் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனா். அவா்கள் மூலமாக பிறருக்கு தொற்று பரவி, மாநாடு முடிந்து ஊா் திரும்பியவா்களால், பலருக்கும் நோய்த் தொற்று வேகமாக பரவியது. இதனிடையே, ஹரியாணாவில் உள்ள 5 கிராமங்களில் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் தங்கியிருந்தனா். இதையடுத்து, அந்த கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அங்கு வசிப்பவா்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனா்.
தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் தனிமைப் படுத்தப் படுவது: மேலும், நாடு முழுவதும் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 25,500-க்கும் மேற்பட்டோரும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனா். இந்த மாநாட்டில் வெளிநாடுகளைச் சோ்ந்த 2,083 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். அவா்களில், 1,750 போ் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா். மத்திய, மாநில அரசுகளின் மாபெரும் தேடுதல் வேட்டைக்குப் பிறகு தில்லி ஜமாத் உறுப்பினா்களும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்துறைச் செயலா் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். மேலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் அவா் அறிவுறுத்தியுள்ளார் என்றார் ஸ்ரீவாஸ்தவா. அதாவது, இங்கு அவர்களை நோயாளிகளாகத்தான் மதிக்கிறார்களே தவிர, மதரீதியில் பார்க்கவில்லை.
முஸ்லிம்கள் மீது ஏன் குற்றாஞ்சாட்டப் படுகிறது?: இதேபோல மற்ற மாநிலங்களிலும், தப்லீக் உறுப்பினர்கள் ஆஸ்பத்திரிகளில் தாகாத செயல்களில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தன. உடனே, ஏதோ ஒட்டு மொத்தமாக ஊடகங்கள் இஸ்லாத்திற்கு எதிரானது போன்ற கூக்குரல்களும் எழுந்தன. இஸ்லாம் அரசியல் கட்சிகளுக்கு சார்பாக உள்ள அரசியல்கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து, அறிக்கைகள் விட்டன. அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. அசாமில், கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 8 பேருடன் தொடர்புடைய 42 பேர், குவாஹாட்டிக்கு அருகிலுள்ள கோலாகாட் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டிருந்தனர். அந்த 8 பேரும் டெல்லி நிஜாமுதீனில் நடந்த முஸ்லிம்மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌஹாத்தியில் அமைச்சர் வருகைக்கு முன்னதாக தனிமை வார்டில் இருந்தவர்கள் எச்சில் துப்பியதால் பரபரப்பு: இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 03-04-2020, மருத்துவமனைக்கு அமைச்சர் ஹிமந்தா வருவதாக இருந்தார். ஆனால் அதற்கு முன்னதாக தனிமை வார்டில் இருந்தவர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் எச்சில் துப்பினர்[3]. மேலும் ஜன்னல் வழியாகவும் எச்சிலைத் துப்பினர். எச்சில் மூலம் நோய் பரவும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தடுக்க வந்த டாக்டர்கள், செவிலியர்கள் மீதும் அவர்கள் எச்சில் துப்பினர்[4]. இதுகுறித்து அமைச்சர் ஹிமந்தா கூறும்போது, “இங்கு தனிமை வார்டில் வைக்கப்பட்ட 42பேரும் தங்களுக்கு நோய் இல்லை என்று நம்புகின்றனர். ஆனால் சந்தேகத்தின் பேரிலேயே அவர்களை நாங்கள் கட்டாயப்படுத்தி அழைத்து வந்துள்ளோம். இப்படி துப்பினால் மற்றவர்களுக்கும் நோய் பரவும் என்பதைஅவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் வீட்டைச் சேர்ந்தபெரியவர்கள் இதை அவர்களுக்கு புரியவைக்கவேண்டும். அவர்கள் எச்சில் துப்புவதைத் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார். இங்கும், அத்தனை நடந்தும் அவர்களை நோயாளிகள் போலத்தான் நடத்தப் பட்டனர். “இப்படி துப்பினால் மற்றவர்களுக்கும் நோய் பரவும் என்பதைஅவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் வீட்டைச் சேர்ந்தபெரியவர்கள் இதை அவர்களுக்கு புரியவைக்கவேண்டும்,” என்று சொன்னதை கவனிக்க வேண்டும்.
06-04-2020 முஸ்லிம் இயக்கங்கள் கூடி தீர்மானங்கள் போட்டது, ஊடகங்களுக்கு அறிவித்தது: ஊடரங்கு நீக்கப்படும்வரை பள்ளிவாசல்களில் கூட்டு தொழுகை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இதுதொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது- தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ மற்றும் தப்லீக் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் பங்கு கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை பெரியமேட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்[6]:
- நமது வாழ்நாளில் இதுவரை காணாத கொடிய கொரோனா நோய் கிருமி முழு உலகத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நமது சமூக மக்கள் அனைவரும் தொடர்ந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை. இதே நிலை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
- கொரோனா அவசர நிலையில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா எதிரொலியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் மருத்துவர்கள் உள்பட அனைத்து அரசு துறையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கொரோனா தொடர்பாக தமிழக அரசு நல்வாழ்வு துறையின் சார்பாக வீடுதோறும் நடைபெறும் ஆய்வுக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வலியுறுத்துகிறது.
- கொரோனா நோய், அதன் பரவல், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலியவை பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அனைத்தும் நம்பகத்தன்மை உடையது அல்ல. எனவே கேட்டதையெல்லாம் ஆய்வில்லாமல் பரப்புவது ஒரு முஸ்லிமின் பண்பு அல்ல. இந்த அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் வருபவை அனைத்தையும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
- கொரோனாவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படும் நிலையில் உள்ளவர்கள் தாங்கள் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பாமல் 7373736085 என்ற கொரோனா அவசர உதவி மையத்தின் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த எண்ணில் பதிவு செய்யும் தகவல்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இடர்பாடுகள் நீக்கப்பட வழி வகை காண்பதற்கு இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
© வேதபிரகாஷ்
07-04-2020
[1] தினமணி, தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 25,500 போ் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனா்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல், By DIN | Published on : 07th April 2020 02:44 AM
[2] https://www.dinamani.com/india/2020/apr/07/25500-tabliq-jamaat-members-have-been-rehabilitated-home-ministry-3395938.html
[3] தமிழ்.இந்து, அமைச்சர் வருகைக்கு முன்னதாக தனிமை வார்டில் இருந்தவர்கள் எச்சில் துப்பியதால் பரபரப்பு, செய்திப்பிரிவு, Published : 05 Apr 2020 08:12 am, Updated : 05 Apr 2020 08:12 am
[4] https://www.hindutamil.in/news/india/547986-corona-patients-spitting.html
[5] என்.டி.டி.வி.தமிழ், ‘ஊடரங்கு முடியும்வரை மசூதிகளில் கூட்டு தொழுகை நடைபெறாது‘ – இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு, Written by MusthakUpdated: April 06, 2020 10:52 pm IST.
[6] https://www.ndtv.com/tamil/mass-prayer-will-not-be-conducted-in-masjids-till-the-lock-down-end-said-tamilnadu-all-islamic-movem-2207184
அண்மைய பின்னூட்டங்கள்