Archive for the ‘வெடிபொருள் வழக்கு’ category
ஏப்ரல் 14, 2017
சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு அனுப்பியது, பிரஸர்-குக்கர் வெடிகுண்டுகள் தயாரித்தது, நான்கு மாநிலங்களில் வெடித்தது – இது ஒரு பரந்த ஜிஹாதி தீவிரவாதம் தான் (4)

நீதிமன்ற வளாகங்களில் 2016ல் வெடிகுண்டுகள் வெடித்தது: இந்திய நீதிமன்றங்களை நாங்கள் மதிக்க மாட்டோம், போலீஸார் எங்களை ஒன்றும் செய்யமுடியாது, ஆதாரங்களை அழித்தல்-மறைத்தல், உடனே அவர்களுக்கு ஆஜராகும் வக்கீல்கள், ஆள்-கொணர்வு மனு போடுதல், ஒரே குற்றத்தில் பலமுறாஇ சம்பந்தப்பட்டுள்ளது போல காண்பித்துக் கொள்வது போன்றவையும், அவர்களைக் காட்டிக் கொடுத்தது. ஆந்திரா மாநிலம் சித்துார் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடித்த வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அபுபக்கர், அப்துல்ரகுமான் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு பிரிவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்[1]. கடந்தாண்டு –
- ஏப்ரல்.,7 2016ல், ஆந்திரா மாநிலம் சித்துார் நீதிமன்ற வளாகம் மற்றும்
- ஜூன் 15ல் கேரளா கொல்லம் நீதிமன்றம்,
- ஆகஸ்ட்.,1ல் கர்நாடகா மைசூரு நீதிமன்றம்,
- செப்டம்பர்.,12ல் ஆந்திரா நெல்லுார்,
- நவம்பர்.,1ல் கேரளா மலப்புரம் நீதிமன்ற வளாகத்தில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.பி.,) விசாரணை நடத்தி வருகிறது[2]. இதில், தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்பிற்கு தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த அமைப்புடன் தொடர்பு உடைய, மதுரை இஸ்மாயில்புரம் அப்பாஸ் அலி உள்ளிட்ட 4 பேரை என்.ஐ.பி., கைது செய்தது. ஏற்கனவே, இவர்களின் வீடுகளில் என்.ஐ.பி., சோதனையிட்ட நிலையில், கடந்த மார்ச் 27ம் தேதி 2017 கேரளா போலீசார் மதுரையில் உள்ள அபுபக்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தினர்[3]. இந்நிலையில், நேற்று சித்துார் நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மதுரை செல்லுார் அபுபக்கர், மீனாட்சி பஜாரில் கடை வைத்திருக்கும் அப்துல்ரகுமான் ஆகியோரிடம் என்.ஐ.பி., அதிகாரிகள் விசாரித்தனர்[4]. ஏற்கனவே கடந்த ஜனவரியில் இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்தனர்[5]. அப்பொழுது சரிவர பதில் சொல்லவில்லை, ஒத்துழைக்கவில்லை. தற்போது அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தனர். சென்னையிலிருந்து மதுரைக்கு வெடிப்பொருட்கள் அனுப்பியது, கொரியர் கம்பனி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அபூபக்கருக்கு உள்ள தொடர்பும் கண்டுபிடிக்கப்பட்டது[6]. தீவிர விசாரணை மற்றும் ஆதாரங்கள் சரிபார்த்தவுடன் தான், இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்[7].

படித்த முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக தயாராவது: தீவிரவாதிகள் கைதானதும், பொதுவாக பெற்றோர், உற்றோர், மாற்றோர், “ஐயோ அந்த பிள்ளை, ரொம்ப நல்ல பிள்ளை, தானுண்டு, தன் வேலையுண்டு, என்றிருப்பான்”; “நல்ல முஸ்லிம், ஐந்து வேளை தொழுகை செய்வான், அவ்வளவுதான்”; “ஏதோ வெளியூரில் வேலை செய்கிறான் என்று அடிக்கடி சென்று வருகிறான், அவ்வளவு தான், மற்ற விவரங்கள் எங்களுக்கு ஒன்றும் தெரியாது”; “எதுக்கு, இதையெல்லாம் கேட்குறீங்க, பிறகு தீவிரவாதி என்று சொல்லவா?” – இப்படி பலதரப்பட்ட பேச்சுகளை விசாரிப்பவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். படித்த, நவநாகரிகத்துடன் காணப்படும், இந்த முஸ்லிம் இளைஞர்கள் ஏன், எப்படி தீவிரவாதிகளாக மாற முடியும் என்று யோசிக்க வேண்டும். ஆரம்பித்திலிருந்தே, நாங்கள் தனித்தவர், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர், தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே தாழ்ந்தவர்கள், காபிர்கள், இந்துக்கள், முன்னால் முகமதியர்களுக்கு அடிமைகளாக இருந்தவர்கள் என்ற எண்ணத்தி ஊட்டி, சிறுவய்திலிருந்து வளர்க்கப் படும் இவர்கள், தேவையில்லாமல், இந்துக்களை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள், பிறகு, ஐசிஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள், மாதம் நன்றாக சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறது. இதனால், தீவிரவாதமே, வேலையாக, தொழிலாக மாறிவிடுகிறது. “வேலை செய்கிறேன், சம்பளம் கொடுக்கிறார்கள்” என்ற நிலையில் தீவிரவாதத்தில் அமுங்கி விடுகிறார்கள். அவர்களை அதற்கும் மேலாக மூளைசலவை செய்ய வேண்டிய அவசியமே இல்லாதவர்களாகி விடுகின்றனர்.

2008 மும்பை மற்றும் தொடர்புடைய வழக்கில் 12-04-2017 அன்று தீர்ப்பு: கடந்த 2008-ம் ஆண்டு மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டில் 12-04-2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது[8]. சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும், அந்த ஆத்மாக்கள் சாந்தியடையாது. மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் கடந்த 2008-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து தீவிரவாத ஒழிப்பு படையினர் விசாரணை நடத்தினர்[9]. விசாரணையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாத ஒழிப்பு படையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர்[10]. இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக இந்திய முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்ந்த –
- சையது முகமது நவுசத்(வயது 28),
- அகமது பாஷா(35),
- அகமது(46)
- மொஹம்மது அலி, முக்கச்சேரியைச் சேர்ந்தவன்.
- ஜாவித் அலி (மேலே குறிப்பிட்டவனின் மகன்)
- மொஹம்மது ரபீக் போலந்தாரு பன்ட்நாலை சேர்ந்தவன்.
- சபீர் பட்கல் அல்லது ஷபிஇர் மௌலி,
ஆகியோர் உள்பட 7 பேரை பயங்கரவாத ஒழிப்பு படையினர் கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்தனர்[11].

மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை, நால்வர் போதிய அத்தாட்சி இல்லாததால் விடுவிப்பு: அவர்கள் அனைவரும் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள உல்லால் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கைதான 7 பேர் மீதும் தீவிரவாத ஒழிப்பு படையினர் மங்களூரு 3-வது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து, நீதிபதி புஷ்பாஞ்சலி தேவி கடந்த 10-ந் தேதி இவ்வழக்கில் சையது முகமது நவுசத், அகமது பாஷா, அகமது ஆகிய 3 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர்கள் 3 பேருக்குமான தண்டனை விவரங்கள் 12-ந் தேதி அறிவிக்கப்படும் என்று கூறி அவர் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 3 பேரைத் தவிர மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்[12]. இந்த நிலையில் நேற்று தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சையது முகமது நவுசத், அகமது பாஷா, அகமது ஆகிய மூன்று பேருக்குமான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன[13]. அதற்காக அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் நீதிபதி புஷ்பாஞ்சலி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி புஷ்பாஞ்சலி உத்தரவிட்டார்[14]. ஆனால், இவர்கள் மேல்முறையீடு செய்வார்கள், காலந்தாழ்த்துவார்கள். ஆனால், தீவிரவாதம் குறையுமா அல்லது இந்த ஜிஹாதிகள் தான் மாறுவார்களா?
© வேதபிரகாஷ்
14-04-2017

[1] தினமலர்,சித்தூரில் குண்டு வெடித்த வழக்கு : மதுரையில் 2 பேரிடம் விசாரணை, பதிவு செய்த நாள். ஏப்ரல்.10, 2017.23.58.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1749096
[3] http://english.mathrubhumi.com/news/kerala/malappuram-collectorate-blast-2-more-arrested-1.1860732
[4] Indian Express, Malappuram collectorate blast: Two men from al-Qaeda inspired group arrested in Madurai, By Express News Service | Published: 10th April 2017 09:21 PM, Last Updated: 10th April 2017 09:22 PM
[5] http://www.newindianexpress.com/states/kerala/2017/apr/10/malappuram-collectorate-blast-two-men-from-al-qaeda-inspired-group-arrested-in-madurai-1592145.html
[6] Times of India, Two accused in Malappuram blast case arrested from TN, TNN | Updated: Apr 11, 2017, 07.11 AM IST.
[7] http://timesofindia.indiatimes.com/city/kozhikode/two-accused-in-malappuram-blast-case-arrested-from-tn/articleshow/58116486.cms
[8] மாலைமலர், இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை: மங்களூரு கோர்ட்டில் தீர்ப்பு, பதிவு: ஏப்ரல் 13, 2017 01:32
[9] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/13013212/1079674/Mangalore-3-held-in-2008-on-charges-of-terror-and.vpf
[10] Indian Express, 2008 terror case: Three convicted, four acquitted, By Express News Service, Published: 11th April 2017 04:27 AM, Last Updated: 11th April 2017 04:27 AM
[11] http://www.newindianexpress.com/states/karnataka/2017/apr/11/2008-terror-case-three-convicted-four-acquitted-1592294.html
[12] Four others — Mohammed Ali of Mukkacherry, his son Javed Ali, Mohammed Rafique from Bolontharu in Bantwal and Shabbir Bhatkal alias Shabbir Maulvi — were let off due to lack of evidence.
[13] India Today, RI for three and four let out: IM, Published: 11th April 2017
[14] http://indiatoday.intoday.in/story/mangalore-3-held-in-2008-on-charges-of-terror-and-indian-mujahideen-links-get-life-term/1/927025.html
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, ஃபத்வா, ஃபிதாயீன், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், மைசூரு, மைசூர், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு, Uncategorized
Tags: குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, சித்தூர், நரபலி, நெல்லூர், பிரசர் குக்கர், பிரஷர் குக்கர், மதுரை, மல்லபுரம், மீனாக்ஷி பஜார், மீனாட்சி பஜார்
Comments: Be the first to comment
மார்ச் 26, 2013
ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

சூபி ஞானிகளை, மெய்ஞானிகளையே வென்றுவிடும் தோற்றம் – கைதாகிய நிலையில்.
மார்க்கண்டேய கட்ஜு யாதாவது ஒரு பெரிய பதவியை எதிர்பார்க்கிறாரா?: ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி என்ற பெண்ணும் அனீஸ் இப்ராஹிம் மற்றும் அபு சலீம் போன்ற தீவிர-பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[1]. ஆனால், மார்க்கண்டேய கட்ஜு, குறிப்பாக சஞ்சய்தத்திற்காக மட்டும் பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர்[2]. மறைமுகமாக, இதனை கேள்வி கேட்பது போல, ஊடகங்கள், அவனைத் தவிர இன்னுமொரு குற்றவாளியும் அதே குற்றத்திற்காக, ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அவளுக்காகவும் பரிந்துரைக்க வேண்டியதுதானே என்று கேட்க, ஆஹா, பேஷ், பேஷ், அதற்கென்ன செய்து விடலாமே என்று பாட்டுப் பால ஆரம்பித்து விட்டார்[3].

கைதாகி, வீர நடை போட்டு வரும், மெய்ஞான முனிவர் தோற்றத்தில்.
முஸ்லீம்–இந்து வேடங்களை வாழ்க்கையில் சஞ்சய் தத் போடுவது ஏன்?: சஞ்சய்தத் நடிகன் என்பதால், வேடம் போட அவனுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. திடீரென்று இந்து போல பெரிதாக நாமம், காவி துண்டு சகிதம் காட்சியளிப்பதும், பிறகு தாடி, பச்சைநிற துண்டு அல்லது உடை அணிந்து வருவதும், நீதிமன்றத்திலேயே பார்த்திருக்கலாம். நீதிமண்ரத்திற்கு வரும்போதே, ஒருமுறை ஏதோ முஸ்லீம் போல பெரிதாக தாடி வைத்துக் கொண்டு வருவது, மறுமுறை, பெரிய நாமம் போட்டுக் கொண்டு வருவது என்ற வேடங்களை பல புகைப்படங்களில் பார்க்கலாம்.

யாசர் அராபத்தை நினைவூற்றும் அந்த பாம்புத்தோல் டிஸைன் துண்டோடு.
முஸ்லீம்களான இந்தி நடிகர்கள் இந்துக்களைப் போல ஏன் நிஜ வாழ்க்கையில் நடித்து ஏமாற்ற வேண்டும்?: சுனில் தத், நர்கீஸ் என்ற முஸ்லீம் நடிகையை மணந்து கொண்டதும் முஸ்லஈம் ஆகிவிட்டார். அதாவது, ஒரு முஸ்லீமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், ஆணோ-பெண்ணோ முஸ்லீமாக வேண்டும். அப்பொழுது தான், நிக்காவே செய்து வைப்பார்கள். ஆனால், இந்தி நடிகர்கள் பெரும்பாலோனோர் முஸ்லீம்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்துக்கள் போல பெயர்களை வைத்துக் கொண்டு, உடைகள் அணிந்து கொண்டு, மீசை-தாடி இல்லாமல் நடித்து வந்தார்கள். சஞ்சய் தத் குடும்பமும் அவ்வாறே செய்து வந்துள்ளது. சஞ்சய் தத்,, அன்று தனது தந்தையிடம் சொன்னது, “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”, என்றதாகும். அதாவது, மொரிஸியசிலிருந்து திரும்பி வந்து போலீஸ் நிலையத்தில் இவ்வாறு சொல்கிறான்.

இது புதுவித தாடி-மீசை தோற்றத்தில்.
பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டியது ஏன்?: முதன் முதலில் இந்த தந்திரத்தைக் கையாண்டவர், முஹம்மது அஸாரத்தூனனென்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் தான். பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டிய ரஅசியத்தின் பிண்ணனி இதுதான். அதாவது, இந்திய சட்டங்கள் என்களுக்குப் பொருந்தாது, ஷரீயத் சட்டம் தான் எங்களுக்கு பொருந்தும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போலும்!

அஹா, நெற்றியில் நெடிய நாமம் – ஆமாம் “சாப்ரென் டெரர்” என்று சொல்கிறார்களே, அந்த நிறத்துடன்.
Rakesh Maria told Sanjay to tell his father the truth, and Sanjay conceded that he had been in possession of an assault rifle and some ammunition that he had got from Anees Ibrahim. Sunil Dutt wanted to know the reason why. He was not prepared for the answer[4]: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.” A crestfallen Sunil Dutt left the police headquarters. It was a moment almost worse than the shock of the previous day. |
ராகேஷ் மரியா என்ற போலீஸ் அதிகாரி, உண்மையைச் சொலும்படி கூற, சஞ்சய் தனது தந்தையிடம் அனீஸ் இப்ராஹிமிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றதை ஒப்புக்கொண்டான். சுனில் தத் காரணத்தைக் கேட்டபோது, அவனுடைய பதிலைக் கேட்க தயாரக இல்லை. அப்பொழுது சொன்னது தான், “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”! |

பக்தகோடிகளை முழிங்கிவிடும் அபாரமான தோற்றம் – பூஜாரி கெட்டார்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, “தெஹல்கா”விலிருந்து எடுத்தாளபட்டுள்ள விவரங்கள் ஆகும், அதற்கு “தஹல்கா”விற்கு நன்றி:

ஆளை விடுங்கய்யா, இதெல்லாம் சகஜம்.
Quite in contrast to what he felt in 1993, Sanjay’s forehead was smeared with a long red tilak on judgement day — November 28, 2006. The air inside the TADA courtroom was heavy with tension and fear. An ashen-faced Sanjay sat head down next to his friend and co-accused Yusuf Nullwala, whom he had called from Mauritius and asked to destroy one of the AK-56s in his possession. A few rows behind them was 64-year-old Zaibunissa Kazi, another co-accused[5]. |
ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி சஞ்சய்தத்திற்கு பின்னால் உட்கார்த்திருந்தாள். இவனோ நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான். |
ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி, சஞ்சய் கொடுத்த ஆயுதங்களை தனது வீட்டில் வைத்திருந்தாள். அதனால், அய்யுதங்கள் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டாள். |
The judge P. D. Kode then called out Zaibunissa Kazi’s name. Two of the three AK-56 rifles, some ammunition and 20 hand grenades returned by Sanjay had been kept at her house for a few days. The judgement was as severe as the previous one. She was held guilty under Section 3(3) of TADA. The sub-section defines a convict as one who “conspires or attempts to commit, or advocates, abets, advises or incites or knowingly facilitates the commission of a terrorist act or any act preparatory to a terrorist act.” |
Tension was visible on the face of Satish Maneshinde, one of Sanjay Dutt’s key lawyers. He was later to say this to a Tehelka spycam: “The moment she was convicted, I thought Sanjay too would be convicted under TADA.” (See box on Page 12) He had reasons for admitting this. Unlike his client Sanjay, who had asked for the weapons, stored them, asked for them to be destroyed and even admitted to his association with Anees Ibrahim, Zaibunissa Kazi had only stored them for a few days. Her role was in no way comparable to Sanjay’s and nobody knew it better than Sanjay’s lawyer. |
மும்பை வெடிகுண்டு கொலைகள் நடந்தேரியப் பிறகு, சஞய் வீட்டில், இந்த ஆயுதங்களில் சில கண்டெடுக்கப்பட்டன, மற்றவை ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைக்கப் பட்டன. வேறுவழியில்லாமல், சுனில் தத், போலீஸாருக்க்கு விஷயத்தை தெரிவித்தார். ஏப்ரல் 19, 1993 மொரிஸியஸிலிருந்து வந்த சஞ்சய் போலீஸரிடம் அரண்டர் ஆனான். |
குற்றத்தை மறைப்பதற்காக, மன்சூர் அஹ்மத் சஞ்சய் வீட்டிகுச் சென்று ஆயுதங்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைத்தனர். |
A day earlier, another co-accused Manzoor Ahmed had similarly been held guilty under Section 3(3) of TADA. Manzoor’s role too was clear in Maneshinde’s head: he had been called by gangster Abu Salem — like Manzoor, also from Azamgarh in UP — and the two had driven to Sanjay’s house to pick up the bag that was then kept at Zaibunissa Kazi’s house. Both she and Manzoor face the prospect of spending a minimum five years in jail, if not a life term. |
As for Zaibunissa Kazi, she had allowed her house to be used as a transit point. The weapons were meant neither for her nor for Manzoor. The evidence on record shows that their offence was minor when compared to that of Sanjay who kept three AK-56s and hand grenades for close to a week and continued to retain one assault rifle for almost a month after serial blasts rocked Bombay. Apprehending his arrest, Sanjay had the weapons destroyed and, quite unlike Manzoor, he made seven calls to Anees. |
விஷயத்தை அறிந்து கொண்டுதான், சஞ்சய் அந்த ஆயுதங்களை அழிக்க முடிவெடுத்துள்ளான். அதற்கு அனீஸ் இப்ராஹிம் உதவியுள்ளான். |
மூன்று கண்சாட்சிகளும் சஞ்சய் ஆயுதங்களை வைத்திருந்ததை உறுதி செய்துள்ளனர். ஆகையால், தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்தான் என்ற ஜோடிப்பு வாதம் பொய்யானது. |
At least three witnesses testified that Sanjay Dutt kept assault rifles and hand grenades. How does this justify his ‘self-protection’ theory. இருப்பினும் அவனுடைய வக்கீல் வாதாடி வந்துள்ளது நோக்கத்தக்கது[6]. |

நாமம் தான் காவியில் போட முடியுமா, இதோ துண்டும் போட முடியும்.
போலீஸார் இன்று கூட சொல்வதென்னவென்றால், சஞ்சய் ஆயுதங்களை மட்டு வைத்திருக்கவில்லை, இதற்கு மேலேயும் செய்துள்ளான் என்பதுதான்[7]. விசாரணையில் பல விஷயங்கள் வெளிவந்துள்ளபோதிலும், சுனில் தத், தன்னுடைய அரசியல் செல்வாக்கு வைத்துக் கொண்டு மறைக்க பாடுபட்டுள்ளார். தான் ஒரு முஸ்லீம் என்றும் சொல்லிக் கொண்டு மதரீதியில் பேசியுள்ளார்[8]மானால், மேலே குறிப்பிட்டுள்ளது போல், இவனோ சொன்னதற்கு மாறாக[9], நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான். மன்சூர் அஹமத்இன் மனைவி சொன்னதாவது[10], “சஞ்சய் பெரிய ஆள், நிறைய பேர்களை தெரியும், பணம் இருக்கிறது. நான் என்ன செய்வது, எனக்கும் பணம் இருந்தால் பெரிய வக்கீலை அமர்த்தியிருப்பேன்”

அட, நாமம் என்ன, என்னவேண்டுமானாலும் செய்வேன் – அமிர்தசர்சில் இந்த கோலம்!

அட போய்யா, நான் முஸ்லீம், இப்படித்தான் இருப்பேன் – ஆஜ்மீரிலோ இச்சுமைதான் – என்னே லட்சியம்!
© வேதபிரகாஷ்
24-03-2013
[8] In his first confessional statement, made to his father and Congress MP Sunil Dutt who wanted to know why he had been stashing deadly arms, Sanjay Dutt said: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.”
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், அடிப்படைவாதம், அடையாளம், அபு சலீம், அப்சல் குரு, அல்லா, அல்லா பெயர், அழுக்கு, அவதூறு, ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், ஆராய்ச்சி செய்யும் போலீஸார், ஆஸம் கான், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இந்து காதலனும் முகமதிய காதலியும், இந்து காதலியும் முகமதிய காதலனும்!, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஊடக வித்தைகள், ஓட்டு, ஓட்டுவங்கி, ஓம், கிரிக்கெட் விளையாட்டு, சரீயத், சரீயத் சட்டம், சின்னம், சிமி, சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சிறையில் அடைப்பு, சுனில் தத், சுன்னி, சுன்னி சட்டம், சுன்னி-ஷியா, சூழ்ச்சி, செக்யூலரிஸ ஜீவி, சைப்புன்னிஸா காஜி, சைப்புன்னிஸா காத்ரி, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜைப்புன்னிஸா காஜி, ஜைப்புன்னிஸா காத்ரி, தடை, தடை செய்யப்பட்ட துப்பாக்கி, தடை செய்யப்பட்ட ரகம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தேர்தல், தொப்பி, தொழுகை, நர்கீஸ் தத், நாட்டுப் பற்று, பிதாயீன், மதவாதம், மார்க்கண்டேய கட்ஜு, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், ரஜினி, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு, வெள்ளிக் கிழமை, வெள்ளிக்கிழமை, ஷியா-சுன்னி
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐதராபாத், காஷ்மீரம், குண்டு வெடிப்பு, குரான், சஞ்சய் தத், சிறுபான்மையினர், சுனில் தத், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், ஜைப்புன்னிஸா காஜி, நர்கீஸ் தத், பாகிஸ்தான், பிரியா தத், புனிதப்போர், மார்க்கண்டேய கட்ஜு, முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், ரஜினி, ரஜினி காந்த, ரீல். ரியல்
Comments: 8 பின்னூட்டங்கள்
மார்ச் 16, 2013
லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?

13-03-2013 புதன்கிழமைகாலை 11.00 மணி[1]: காஷ்மீரில் பெமினா என்ற இடத்தில் உள்ள பொது பள்ளிக் கூடத்திற்கு அருகில் CRPFயின் 73ம் முகாம் (CRPF’s 73rd battalion) உள்ளது. இந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், அப்பொழுது, மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பள்ளி மைதானத்தில் சிகப்பு டி-சர்ட், கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை டி-சர்ட், கருப்பு பேன்ட் அணிந்த இருவர் கிரிக்கெட் கிட்டுடன் மைதானத்தில் நுழைந்தனர். அருகில் பாதுகாப்பு வீரர்களும் நின்றிருந்தனர். சிறிது நேரம் விளையாடுபவர்களிடத்தில் பேச்சு கொடுத்தனர்.

13-03-2013 புதன்கிழமைகாலை 11.05 மணி[2]: பேசிக் கொண்டேயிருந்தவர்கள், திடீரென்று, கிரிக்கெட் கிட்டைத் திறந்து, ஏ.கே-47 மற்றும் கையெறிக் கொண்டுகளை எடுத்து, CRPF வீரர்கள் மீது வீசி, சுட ஆரம்பித்தனர். இதில் ஐந்து வீரர்கள் உடனடியாக இறந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர். விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ஓட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட வீரர்கள் தீவிரவாதிகளின் மீது சுட ஆரம்பித்தனர். பதினைந்து நிமிடம் துப்பாக்கி சூடு நடந்தது, இறுதியில் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் ஃபிதாயீன் என்ற ஜிஹாதித் தற்கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3].

கொல்லப்பட்டவீரர்கள்பலமாநிலங்களைச்சேர்ந்தவர்கள்: ஜிஹாதி தீவிரவாதம் காஷ்மீரத்தில் குரூரக்கொலையில் ஈடுபட்டாலும், கொலை செய்யப்பட்ட வீரர்கள் இந்தியாவின் பல மாரநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
- ஏ. பி. சிங் – assistant sub-inspector A.B Singh of Ujjan, Madhya Pradesh,
- ஓம் பிரகாஷ் – constable Om Prakash (Sehore, MP),
- எல். பெருமாள் – constable L. Perumal (Madurai, Tamil Nadu),
- சுபாஷ் – constable Subhash (Ranchi, Jaharkand) and
- சதீஷ் ஷா – constable Satish Shah (Mandya, Karnataka).

கைப்பற்றப்பட்டஆயுதங்கள்: கிரிக்கெட் கிட் என்று எடுத்து வந்ததில், உள்ளேயிருந்த ஆயுதங்கள்:
- இரண்டு ஏ.கே-47 துப்பாக்கிகள் – Two Ak-47 rifles,
- அதற்கான வெடிப்பொருட்கள் – five Ak magazines,
- ஆறுமுறை உபயோகிக்கக்கூடிய குண்டுகள் – six AK rounds,
- இரண்டு சீன கைத்துப்பாக்கிகள் – two Chinese pistols,
- இரண்டு முறை சுட குண்டுகள் – two pistol rounds,
- கைக்குண்டு தூக்கியெறியும் கருவி – one UBGL – Under Barrel Grenade Launcher,
- அதற்கான மூன்று குண்டுகள் – three UBGL grenades and
- நான்கு கையெறி குண்டுகள் – four hand grenades

கடந்த ஜனவரி 6-7, 2010 தேதிகளில் இதே மாதிரி, இந்த தீவிரவாதிகள், லால் சௌக்கில் ஒரு பஞ்சாப் ஓட்டலில் மறைந்து கொண்டு பாதுகாப்பு வீரர்களுடன் சண்டை போட்டனர். அப்பொழுது தங்களை லஸ்கர்-இ-தொய்பா என்று சொல்லிக் கொண்டனர். அதாவது “பிதாயீன்” என்பது பொதுப்பெயர், ஜிஹாதி போல!
தாக்குதலைநடத்தியவர்கள்யார்?: ஜிஹாதி தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று எல்லாவிதமான இஸ்லாமிய கொலைவெறிக் கும்பல்களுடன் மக்களில் பெரும்பாலோர் தொடர்பு வைத்திருப்பதனால், தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி, பலவிதமான செய்திகள் வெளிவந்த வண்னம் இருந்தன[4]. ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் தாக்கினர் என்று தொலைபேசி மூலம் யாரோ அறிவித்தாக மகூறி, பிறகு அவர்கள் மறுத்துள்ளதாக அறிவித்தனர். பிறகு லஸ்கர்-இ-தொய்பா தாக்குதல் மாதிரி இருக்கிறது என்று அபதுல் முஜாதபா என்ற போலீஸ் அதிகாரி கூறியதாக கூறினர். ஆனால் மாட்டிக் கொண்ட[5] “அபு தல்ஹா” என்ற ஜிஹாதியிடமிருந்து, இது “பிதாயீன்” வேலைதான் என்று தெரியவந்துள்ளது[6]. “பிதாயீன்” என்ற ஜிஹாதிகள் தம் உயிரையும் கொடுத்து காபிர்களைக் கொல்லும் ஜிஹாதிகள். குரான் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, இத்தகைய வேலைகளை செய்கிறார்கள். ஏனெனில் அல்லா அவர்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ளதாக நம்புகிறார்கள். முன்னர் ஷிண்டே ராஜ்ய சபாவில் பாகிஸ்தானிய தொடர்பு உள்ளதாக கூறியிருக்கிறார்[7]. பிறகு அந்த தலைவெட்டியானிடமே குர்ஷித்தை விட்டுக் கேட்டிருக்கலாமே?

ஜிஹாதி தாக்குதலில் தமிழக வீரர் இறப்பு: பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் பலியான மதுரை வீரர் எல். பெருமாள் உடல் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. செல்லூர் ராஜா – தமிழக அமைச்சர், அன்சுல் மிஸ்ரா – மாவட்ட கலெக்டர், ஓம் பிரகாஷ் -CRPF கமாண்டெர், பாலகிருஷ்ணன் – மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்[8]. அமைச்சர் ரூ. ஐந்து லட்சம் தொகைக்கான செக்கை குடும்பத்தாருக்கு அளித்தார். சேடபட்டி முத்தையா –திமுக, இல. கணேசன் – பிஜேபி, ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் முதலிய இயக்கத்தோடும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செல்லுத்தினர்[9].

ஜிஹாதி முஸ்லீம்கள் தாக்கிக் கொன்றுள்ளதால் பகுத்தறிவு தமிழர்கள் கண்டனம் செல்லுத்தவில்லையா?: ஜம்மு காஷ்மீரில் கடந்த (13 ம் தேதி) புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பெருமாள் என்பவரும் ஒருவர். இவரது உடல் நேற்று இரவு சென்னைக்கு வந்தது. இடையப்பாடியில் இருக்கும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுமார் 11 மணி அளவில் தும்மநாயக்கன்பட்டி கிராமத்திற்கு வந்தது. தெருக்கள் எல்லாம் கருப்புக் கொடிகளினால் துக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்: “இது போன்ற பயங்கரவாத சம்பவத்தை தடுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை”, என்றார். ஏன் மற்றவர்கள் எதுவும் சொல்லக்கூடாதா?
11 முறை தோற்று வெண்ர பெருமாள், 17-முறை தாக்கிய கஜினி முஹம்மது ஜிஹாதிக்கு பலியாகி விட்டாரா?: பலியானவர் பெருமாள் (வயது 29) மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை லிங்கம் ஆட்டோ டிரைவர் ஆவார். மொத்தம் 5 குழந்தைகள் பெற்ற இவருக்கு பெருமாள் என்பவர் மிக பாசமாக இருப்பாராம். பெருமாள் 10 ம் வகுப்பு வரை படித்து எப்படியாவது ராணுவ படையில் சேர வேண்டும் என்று பெரும் ஆவலோடும், லட்சிய கனவோடும் இருந்து வந்தாராம். இந்த படையில் சேருவதற்கான தேர்வில் பல முறை தோற்று போனாராம். குறிப்பாக 10 முறை இவர் தேர்வாகவில்லை இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து 11 வது முறை படைக்கு பிட் ஆனாராம். தேர்வு செய்யப்பட்ட தகவலை அவர் தனது கிராமம் முழுவதும், உற்றார் உறவினர்களிடம் பெரும் செய்தியாக தெரிவித்து மகிழ்ந்தாராம் பெருமாள்.

திருமணத்திற்கு ஜிஹாதிகள் பிணத்தை அனுப்பியுள்ளார்களே?: கடந்த 2010 ல் பணியில் சேர்ந்த பெருமாள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு பணியாற்றிய 3 ஆண்டில் தனது இன்னுயிரை இழந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முறை விடுப்புக்கு வந்த பெருமாள் திருமணம் செய்வது தொடர்பாக தனது உறவுக்கார பெண்ணை பார்த்து உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். வரும் ஜூன் மாதம் ஊருக்கு வருவேன் அப்போது திருமணம் செய்து கொள்வோம் என்று வாக்கு கொடுத்து சென்றவர் இன்று பிணமாக திரும்பியதை கண்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. இவரது உடல் இன்று சொந்த கிராமத்திற்குகொண்டு வரப்பட்டது.அமைச்சர் , மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக போலீசார் சார்பில் 21 குண்டுகளும், சி.ஆர்.பி.எப்., போலீசார் சார்பில் 21 குண்டுகளும் வானத்தை நோக்கி சுடப்பட்டன. வருவதையொட்டி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் காத்து நிற்கின்றனர். மதுரையில் மாவட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவ்வளவுதான், மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், ஏன் இப்படி இந்தியா வீரர்களை ஜிஹாதிகளுக்கு பலியாக்க வேண்டும்?

Karunanidhi-with-kulla
என்ன நடந்தாலும், குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கும் பட்டாளம் நஎப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் குர்ஷித் போன்ற பேனாக்களில் ரத்தத்தை நிரப்பும் முஸ்லீம்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், எதிரிகளுடன் உணவருந்துவார்கள்!
வேதபிரகாஷ்
16-03-2013
[4] Police say two pocket diaries; a SIM card of an Indian telecommunication company issued in Uri, an ointment tube made in Pakistan; an under-surveillance guerilla activity controlled by a Kashmiri militant for several weeks at Palhalan village of Baramulla; the Hizbul Mujahideen’s first-ever claim of owning up a suicide attack; the Lashkar-e-Taiba spokesman’s “meaningful quiet”; no local claim on the two bodies (of the militants); besides some telephonic intercepts and call detail records pieced together by the investigators make the fidayeen attack “a clear case of foreign terror.” “We have noticed the signature of the Lashkar-e-Taiba in this operation,” a senior official associated with the investigation told The Hindu. He refused to disclose details but was confident that a breakthrough was not far away. “An operation jointly planned and executed by the Kashmiri and Pakistani cadres of the LeT in coordination with the United Jihad Council,” he said when pressed to identify the actors.
பிரிவுகள்: ஃபிதாயீன், அடி, அடித்து சித்ரவதை, அடிப்படைவாதம், அடையாளம், அப்சல், அப்சல் குரு, அப்ஸல், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா சொன்னதால் சுட்டேன், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆப்கானிஸ்தான், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், ஈட்டிக்காரன், உதை, உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஓட்டு, ஓட்டுவங்கி, கசாப், கசாப்புக்காரத்தனம், கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காந்தஹார், குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குதாமுல் இஸ்லாம், கைது, கையெறி குண்டுகள், கொல், சித்திரவதை, சொர்க்கம், ஜவாஹிருல்லா, ஜிஹாதி நேயம், தாலிபான், திறப்பு, தும்மநாயக்கன்பட்டி, துருக்கர், துலுக்கன், நரகம், பத்தான், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், பிதாயீன், பிள்ளை, புனிதப் போர், பெருமாள், மதரஸாக்கள், மனித நேய மக்கள் கட்சி, மனித நேயம், மனித வெடிகுண்டு, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஸ்லீமின் மனப்பாங்கு, முஸ்லீம், முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், லிங்கம், வன்முறை, வாசல், வெடிகுண்டு பொருட்கள், வெடிபொருள் வழக்கு
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், அஹ்மதியா, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம் கொலை, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், குண்டு வெடிப்பு, கொலைவெறி, கோவில் சிலை உடைப்பு, சியா, சிறுபான்மையினர், சுன்னி, செக்யூலரிஸம், ஜவாஹிருல்லா, தும்மநாயக்கன்பட்டி, பரவும் தீவிரவாதம், பாகிஸ்தான், பெமினா, பெருமாள், போரா, மதுரை, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீம் கொலை, முஸ்லீம்கள், லப்பை, லிங்கம், ஹிஹாதி கொலை
Comments: 3 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 22, 2013
ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!
நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன. இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.
உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.
இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார். அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.
ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!
மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.
ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.
இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.
http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இரட்டை வேடம், உருது மொழி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊரடங்கு உத்தரவு, ஐதராபாத், ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரஸ், குஜராத், குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கைது, கையெறி குண்டுகள், செக்யூலார் அரசாங்கம், ஜமாத்-உத்-தாவா, ஜஹல்லியா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டெட்டனேட்டர்கள், தக்காண முஜாஹித்தீன், தருமம், தர்மம், தில்ஷுக், தில்ஷுக் நகர், துப்பாக்கி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, நூருல் ஹூடா, பட்கல், பட்டகல், பட்டக்கல், பள்ளிவாசல், பழமைவாதம், பீரங்கி, புனிதப் போர், பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட், பேட்டரி கட்டைகள், மக்கா, மஜ்லிச்துல் முஸ்லிமீன், மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், யுத்ததருமம், யுத்ததர்மம், ரத்தம், ரமலான், ரமழான், ரமஷான், ரம்ஜான், வஞ்சகம், வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு
Tags: இந்திய முஜாஹித்தீன், இந்து, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், ஐதராபாத், ஒவைசி, ஒவைஸி, கத்தி, குண்டு, குண்டு வெடிப்பு, கேமரா, கொலை, கொலைவெறி, கோயில், கோவில், சய்பாபா, சாய், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், துப்பாக்கி, பட்கல், பட்டகல், பாபா, பீரங்கி, புனிதப்போர், மதம், மருந்து, முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லீம், ரத்தம், ரியாசுதீன், வெறி
Comments: 3 பின்னூட்டங்கள்
ஜூலை 17, 2011
மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்
குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.
வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].
உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது. ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].
சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.
செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.
மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.
26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.
[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, 786, அடையாளம், அபு சலீம், அபு ஜிண்டால், அப்துல் அஜீஸ், அப்துல் கய்யூம் சேய்க், அப்துல் காதர், அப்துல் நாஸர் மதானி, அப்துல் பாசித், அப்துல்லா, அமீனுத்தீன், அமீன், அமெரிக்க ஜிஹாதி, அரேபிய ஷேக்கு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்ஜமீன், அல்லா, அஸ்ரப் அலி, அஸ்லாம் பாஷா, ஆப்கானிஸ்தான், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இமாம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, எல்லை, எஸ்.எம்.எஸ், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர்கள், காந்தஹார், காந்தாரம், கீழக்கரை, குஜராத், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குவைத், கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சாகுல், சாகுல் அமீத், சாதர், சானவாஸ், சிதம்பர ரகசியங்கள், சிமி, சியாசத், சுன்னத், சுன்னி, சுலைமான், ஜமாத், ஜிஹாதி அமெரிக்கர், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், டைம், த.மு.மு.க, தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தலிபான், தாலிபான், தாவுத் இப்ராஹிம், தாவூத் இப்ராஹிம், தாவூத் சையது ஜிலானி, தாவூத் ஜிலானி, தாவூத் மியான் கான், தாஹிர் ஷைஜாத், துபாய், துப்பாக்கி, தேசிய புலனாய்வு துறை, பங்களூரு வெடிகுண்டு, பலுச்சிஸ்தானம், பள்ளி வாசல், பழமைவாதம், பாகிஸ்தானின் தாலிபான், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, பைப் வெடிகுண்டு, மதானி, மதௌனி, முகமது ஆசிப், முகமது ஜியாஉல்ஹக், முஜாஹித்தீன், மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம், முஹம்மது, மௌதனி, மௌதானி, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு
Tags: அம்மோனியம் நைட்ரேட், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாம், சந்தேகிக்கப்படும் இயக்கங்கள், சிமி, செல்போன், டிபன் பாக்ஸ், தடை செய்யப்பட்டுள்ள சிமி, துணி, முகமது, மும்பை குண்டுவெடிப்பு, முஹமது, லஸ்கர்-இ-தொய்பா, ஸ்கூட்டர்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 23, 2010
யார் இந்த தடியன்டவிடே நசீர்?
தடியன்டவிடே நசீர் நிச்சயமாக இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பிடிபட்ட லஸ்கர் தீவிரவாதியாவான். தென்னிந்தியாவின் லஸ்கர்-இ-தொய்பா தலைவன் என்று கருதப்படுகிறான். இவனுடைய விவரங்கள் இதோ[1]:
பெயர் |
தடியன்டவிடே நசீர் / ஹாஜி / உம்மர் ஹாஜி / காலித் முதலியன[2]. |
பிறந்த தேதி |
ஏப்ரல் 23, 1977. |
பிறந்த நாடு |
இந்தியா |
படிப்பு |
ஒன்பதாவது பாஸ், ஏ.ஸி. மெகானிகல் சான்றிதழ் பெற்றுள்ளான்[3]. |
பெற்றோர் |
அப்துல் மஜீத் கம்படவிடா, கதீஜா |
மொழிகள் தெரிந்தது |
மலையாளம், அரேபிக், ஹிந்தி, உருது. |
அரசியல் சார்பு |
மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் (PDP), மற்றும் PDPயின் ரகசிய அமைப்பான, மஜ்லிச்துல் முஸ்லிமீன் என்பதன் தீவிரமான அங்கத்தினன்[4]. |
நாடுகள் சென்றுள்ளது |
சௌதி அரேபியா, பங்களாதேசம் |
உடல் அமைப்பு |
உயரம் – 5’10”, ஒல்லியான உடம்பு, மாநிறம், நீண்ட முகம், கூர்மையான மூக்கு, இடது கால் முட்டிக்கு கீழ் ஒரு பெரிய மச்சம், இடது நெற்றியில் ஒரு தழும்பு அடையாளம் |
அவன் ஒப்புக் கொண்டுள்ளது |
விவரங்களை, கீழே காணவும்: |
|
|
“தீவிரவாதம், வட இந்தியாவை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, தென்னிந்தியாவில் குறைவாகவே உள்ளது. வட இந்தியாவில் “தங்கி “வேலைசெய்ய” 26 இடங்கள் உள்ளன[5], அவை பாகிஸ்தானின் ஆணைகளை எதிர்பார்த்து வேலை செய்கின்றன. ஒரேயொரு ஆணை போதும், உடனே அவர் செயல்பட்டு தாக்குதலில் ஈடுபட தயாராக உள்ளார்கள். இப்பொழுது, தென்னிந்தியாவில் மூன்று குழுக்கள் உள்ளன.
“பங்களூரு குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, உடனடியாக, நான் பங்களாதேசத்திற்குத் தப்பிச் சென்று விட்டேன். சிட்டகாங்கில் உள்ள என்னுடைய சகளையுடன் மறைவாகத் தங்கிவிட்டேன். 2008ல், என்னுடைய லஸ்கர் தலைவர்களின் ஆணையின்படியே, அவ்வாறு செய்தேன்.
“அப்பொழுது, பாகிஸ்தானின் குடிமகன் மற்றும் லஸ்கர் வேலையாள், சம்சுதீனிடமிருந்துதான் லஸ்கரின், இந்தியாவில் தங்கி வேலைசெய்ய 26 இடங்கள் உள்ளன கேள்விப்பட்டேன். பெங்களூரு வெடிகுண்டு வேல்கையின் போது, நாங்கள் எப்பொழுதும் லஸ்கர் ஆட்களுடன் நேரிடையாக பேசியது கிடையாது. எங்களுடைய எஜமானன்களுடன் / பாஸ்களுடன், சர்ஃபாஸ் நவாஜ் என்பவன் மூலம் தான் பேசிவந்தோம். அவன் அந்நேரத்தில் மஸ்கட்டில் இருந்தான்.
“காஷ்மீரத்தில் லஸ்கர் கேம்பின் மீது தாக்குதல் நடந்த பிறகு, நவாஜ் என்னுடன் தொடர்பு கொண்டான். அதில் கேரளாவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உடனடியாக, நாங்கள் மும்பைக்குப் போனோம். அங்கிருந்து, நவாஜின் உதவியோடு, இந்தியாவை விட்டு வெளியேர உதவி கோரினோம்.
“ஜைல்தீன் என்பவனுடன் தொடர்பு கொள்ளுமாறு அவன் பணித்தான். அந்த ஏஜென்ட் நாங்கள் எல்லைகளைத்தாண்டி, பங்களாதேசத்திற்குள் நுழைய உதவிவான், என்றான். அதற்காக ரூ.3000/- நாங்கள் அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் சொன்னான்.
“ஹவுராவிற்குச் சென்றதும் ஜைல்தீனைத் தொடர்பு கொண்டோம். அவன் எங்களை, இந்திய-பங்களாதேச எல்லையில் உள்ள பங்கப்புர என்ற இடத்திற்கு வருமாறு பணித்தான். அந்த இடதிற்கு பேருந்தில் சென்றோம். அங்கிருந்து, படகில் பங்களாதேசத்தில் நுழைந்தோம். அங்கிருந்த இருவரிடம் நாங்கள் ஒப்படைக்கப்பட்டோம்.
“நாங்கள் அவர்களுடன் செல்வதற்கு முன்பு, சிறிது குழப்பம் ஏற்பட்டது. அவர்கள், எங்களிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். பிறகு ஜைல்தீன் பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்று சொல்லப்பட்டது. இரண்டு நாட்களுக்கு, ஒரு குடிசையில் வைக்கப்பட்டு, பிறகு, பேரூந்து மூலம் டாக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டோம்.
“டாக்கா பேருந்து நிலையத்தில் சலீம் என்ற மற்றொரு லஸ்கர் ஆளை சந்தித்தோம். அங்கிருந்து கடற்கரையிலுள்ள காக்ஸ் பஜார் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இந்த காலக்கட்டத்தில், குறைந்த பட்சம் 11 முறை, நாங்கள் எங்களது ஓட்டல்களை மாற்ற வேண்டியிருந்தது.
“அதே நேரத்தில், மறுபடியும் குழப்பம் ஏற்பட்டது, ஏனெனில், அந்நேரத்தில் மும்பையில் வெடிகுண்டு மற்றும் 26/11 தாக்குதல் ஏற்பட்டிருந்தது. பங்களாதேச போலீஸ் சலீமைத்தேட ஆரம்பித்தது. அவ்வாறே, போலீஸ் அவனைப் பிடித்து, பாகிஸ்தான் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டான். நாங்கள் பாகிஸ்தானிற்கு அனுப்பப்படமாட்டோம் என்று சொல்லப்பட்டது. பாகிஸ்தானில் இருந்த லஸ்கர், நாங்கள் வளைகுடா நாடுகளுக்கு நிரந்தரமாக சென்றுவிட்டு, அங்கிருந்து, எங்கள் வேலையைச் செய்ய வேண்டும் என்றது. அப்பொழுது நான் நவாஜை தொடர்பு கொண்ட்டேன், அவனும் எனக்கு பணத்தை அனுப்பிவைத்தான்.
“பிறகு ஆஸிஃப் என்ற கூட்டாளியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவன் எங்களுக்கு ஒரு ஈ-மெயில் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்தான். அதன்மூலம், வேண்டியபோது, நவாஜை தொடர்பு கொண்டால், அவன் பணத்தை ஏற்பாடு செய்து அனுப்பிவைப்பான் என்றான்.
“அவ்வாறே, நாங்கள் தொடர்பு கொண்டோம், பணம் வந்தது. ரூ.70,000/- ஹவாலா[6] மூலம் கிடைத்தப் பணம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, அதை வைத்துக் கொண்டு, வளைகுடாவில் எங்களது, அடித்தளத்தை அமைத்தோம்.
“பிறகு, ஒரு ஏஜென்டை அணுகி, துபாய்க்குச் செல்ல விசா ஏற்பாடு செய்துத் தருமாறு கோரினோம். அப்பொழுதுதான், எங்களை பங்களாதேச துப்பறிவாளிகள் கண்டுபிடுத்து, இந்தியாவினுடன் ஒப்படைத்தனர்”, என்று கூறி முடித்ததாக உள்ளது.
- maulana_madani_aggrressive
|
|
|
கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[7]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கேரள போலீஸாரை சந்தேகிக்கும் மத்திய புலனாய்வுத்துறை: “மதானிக்கு எதிராக தான் எந்த குற்றச்சாட்டையும் சொல்லவிலை என்று ஊடகக்காரர்களுக்கு கடந்த ஜூன் மாதத்தில் தடியன்டவிடே நசீர் சொல்லியிருப்பது பொய். அவன் மதானியுடனான தனது தொடர்பை தேசிய புலனாய்வுதுறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளான். ஆகவே, அந்நிலையில் எல்லாம் நஸீருடைய முகம் தெரியாதபோது, கொச்சியில் தெரியும்போது, கேரள போலீஸாரின் மீது சந்தேகம் ஏற்படுகிறது”, என்று மத்திய புலனாய்வுத்துறை கூறியுள்ளது. ஈ.கே.நாயனார் கொலைமுயற்சி, பேங்களூரு தொடர்குண்டு, கோழிக்கோடு இரட்டைக்குண்டு வெடிப்பு, மற்றும் தமிழக பஸ் எரிப்பு என்று பல வழக்குகளில் இவன் சம்பந்தப்பட்டுள்ளான் என்று கேரள போலீஸார் கூறியுள்ளனர்[8].
தாவூத் ஜிலானியுடன் சம்பந்தப்பட்டுள்ள தடியன்டவிடே நசீர்: தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[9]. அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும், வழக்குகள் நடக்கும்போது, குற்றவாளிகளைப் பற்றிய விவரங்கள் வெளிவர விரும்புவதில்லை, ஏனெனில், அங்குள்ள நிலைப்படி, குற்றவாளிகள், அப்படி வெளிவரும் விவரங்களை வைத்துக் கொண்டு, வழக்குகளை தமக்குச் சாதகமாக்கி விடுவர்; சாட்சிகளை கலைத்து / மாற்றி விடுவர், அல்லது பாதகமான ஆட்கள் வெளியேற்றப்படுவர் அல்லது நீக்கப்படுவர்.
[1] பெங்களுரு போலீஸார் தயாரித்துள்ள “டோசியர்” மீது ஆதாரமான விவரங்கள், தமிழில் மொழி பெயர்த்துத் தரப்பட்டுள்ளன.
[2] பாஸ்போர்ட்டுகளில், இப்படி பல பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான, அதாவது, அப்படி பல பெயர்களில் பாஸ்போர்ட்டுகள் எடுத்துள்ளான். இதற்காக ஆவன செய்வதெல்லாம், முஸ்லீம்கள் வைத்துள்ள சுற்றுப்பயண உதவி மையங்கள் (டிராவல் ஏஜென்டுகள்) தாம்.
[3] தீவிரவதிகளுக்கு படிப்பைத் தவிர, இப்படி பல தொழிற்துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது, ஏனெனில், நுணுக்கமான ஆயுதங்கள், கருவிகள் முதலியவற்றை அவர்கள், தங்களது தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு உபயோகப்படுத்த வேண்டியுள்ளது, அவற்றை கையாள வேண்டியுள்ளது. ஒன்று, இதற்காகவே, பொறியியல் படுப்புக் கூட படிக்கிறார்கள் அல்லது பொறியியல் படித்தவர்கள், இந்த வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.
[4] வங்கி கணக்குகள், இதர ஆவணங்கள், இந்த தொடர்பைக் காட்டியுள்ளன.
[5] அவை “powerful sleeper cells” என்று குறிப்பிடப்படுகின்றன. அங்கு அவர்களுக்கு மற்றும் தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு வேண்டியவை அனைத்தும் இருக்கும்.
[6] ஹவாலா பணம் எப்படி தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு பயன்படுத்தப் படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். முஸ்லீம்கள், இதனை மிகவும் சாமர்த்தியமாக உபயோகித்து, ஒன்று தங்களை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்திக் கொள்கின்றனர், இரண்டு மணத்தைப் பற்றிய போக்குவரத்து, எந்த கணக்கிலும் வராமல் இருப்பதால், எந்த வரியையும் அவர்கள் செல்லுத்துவதில்லை.
[7] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,
http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html
[8] http://www.asianetindia.com/news/kerala-seeks-custody-thadiyantavide-naseer_106730.html
[9] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html
பிரிவுகள்: அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, இந்தியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளே நுழைவது, கராச்சி திட்டம், காஃபிர், கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள முஸ்லீம் சேவை சங்கம், சம்சுதீன், சலாவுத்தீன், சாஸ்தாம்கோட்டா, சிமி, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உக்-ஃபர்கன், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, தடியன்டவிடே நசீர், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா, தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவுத் இப்ராஹிம், தாவூத் ஜிலானி, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு துறை, மசூதி, மஜ்லிச்துல் முஸ்லிமீன், மூளைசலவை, மூவாட்டுபுழா, மௌதனி, மௌதானி, லஸ்கர்-இ-தொய்பா, வங்காள தேசம், வன்முறை, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு
Tags: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உம்மர் ஹாஜி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், காலித், காஷ்மீரம், காஷ்மீர், சம்சுதீன், சலீம், ஜைல்தீன், தடியன்டவிடே நசீர், தேசிய புலனாய்வு துறை, நவாஜ், மஜ்லிச்துல் முஸ்லிமீன், லவ் ஜிஹாத், லஸ்கர்-இ-தொய்பா, ஹாஜி
Comments: 8 பின்னூட்டங்கள்
ஜூலை 8, 2010
வெடிபொருட்களை பதுக்கிய வழக்கில் ஏர்வாடி காசிமிற்கு ஐந்தாண்டு சிறை!
ஆகஸ்ட் 10,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=59107
பூந்தமல்லி :சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து, டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சி, கண்ணிவெடி, பைப் வெடிகுண்டு ஆகியவற்றை பதுக்கி வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஏர்வாடி காசிமிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. சென்னை, புளியந்தோப்பு மசூதி தெருவைச் சேர்ந்தவர் மஸ்தான் (50). கடந்த 1998ம் ஆண்டு இவர் வீட்டின் மாடியில் ஏர்வாடி காசிம், அஸ்ரப் அலி ஆகிய இருவரும் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர். இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூர் சென்று, 10 நாட்கள் ஆகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மஸ்தான், இது குறித்து புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் அவர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது –
384 டெட்டனேட்டர்கள்,
159 ஜெலட்டின் குச்சிகள்,
கண்ணாடி ஜாடியில் 3 கண்ணிவெடிகுண்டுகள்,
ஒரு பைப் வெடிகுண்டு ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
வெடி பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், கடந்த 1998ம் ஆண்டு மே 22ம் தேதி புளியந்தோப்பு போலீசார், ஏர்வாடி காசிமை கைது செய்தனர். அதே ஆண்டு ஜூன் 8ம் தேதி இந்த வழக்கு, பூந்தமல்லி, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில், அனைத்து கட்ட சாட்சியங்களும் விசாரித்து முடிக்கப்பட்ட பின், நீதிபதி வணங்காமுடி தீர்ப்பளித்தார். வெடிபொருட்கள் பதுக்கிய குற்றத்திற்காக ஏர்வாடி காசிமிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரான அஸ்ரப் அலி தொடர்ந்து தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெடிபொருள் வழக்கில் ஏர்வாடி காசிம்க்கு ஜாமீன்!
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33764
வெடிபொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏர்வாடி காசிம்க்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது: சென்னை: வெடிபொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏர்வாடி காசிம்க்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. அவர் மீதான வழக்கை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டத்தின் கீழ், கடந்த 98ம் ஆண்டு மே மாதம் ஏர்வாடி காசிம் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வேறொரு வழக்கில் எட்டு ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. எட்டு ஆண்டு சிறை தண்டனையையும் அனுபவித்து விட்டார். வெடிமருந்து சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

Erwadi-kasim-bailed-out
நிபந்தனையில் ஜாமீன்: இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் காசிம் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: ஒரு குற்றத்துக்கான தண்டனைக் காலத்தை விட, அதிக நாட்கள் சிறையில் இருந்தால் அந்த நபரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர் மீதான வழக்கு விசாரணையை ஏன் விரைந்து முடிக்கவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்க முடியவில்லை. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. பூந்தமல்லியில் தங்கியிருக்க வேண்டும். காலையில் கோர்ட்டிலும், மாலையில் போலீஸ் நிலையத்திலும் ஆஜராக வேண்டும். பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, ஆத்திரமூட்டும் வகையில் பேசக் கூடாது. தங்கியிருக்கும் இடத்தை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கை, இரண்டு மாதங்களில் பூந்தமல்லி சிறப்பு கோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
பிரிவுகள்: அஸ்ரப் அலி, ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், ஏர்வாடி காசிம், பைப் வெடிகுண்டு, வெடிபொருள் வழக்கு
Tags: அஸ்ரப் அலி, ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், ஏர்வாடி காசிம், கண்ணிவெடி, ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர், பைப் வெடிகுண்டு, வெடிபொருள் வழக்கு
Comments: Be the first to comment
அண்மைய பின்னூட்டங்கள்