Archive for the ‘வீடியோ’ category

8–சிமி குற்றவாளிகள் கொலை – ஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி? என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி?

நவம்பர் 1, 2016

 

8–சிமி குற்றவாளிகள் கொலைஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி? என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி?

people-gathered-on-hillock-where-the-smi-were-shot-dead-bodies-scatteredஊடகக்காரர்களின் பொறுப்பு முதலியனவெல்லாம் கூட தீவிரவாதிகளின் உரிமைகளைத் தான் ஆதரிக்கின்றன: இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுட்டுக்கொல்லப்பட்ட 8 பயங்கராவதிகளிடமிருந்து துப்பாக்கிகள், மூன்று கூர்மையான கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றார்[1].  பயங்கரவாதிகள் எந்தஒரு ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்று வெளியான தகவல்கள் வெளியாகியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜெயில் காவலர் கொல்லப்பட்டது கூட அவருக்குத் தெரியவில்லை / கவலையில்லை, ஆனால், இதுபோல கேள்வி கேட்க தயாராக உள்ளார். யோகேஷ் சவுதாரி, “இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார்.  இதற்கிடையே என்கவுண்டர் நடத்தப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அப்படியென்றால், இவற்றையெல்லாம் யாரோ கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்றாகிறது. அந்த அளவுக்கு யார் கவனிப்பது, வீடியோ எடுத்தது, தங்களது அடையாளங்களை மறைப்பது – இவற்றைச் செய்வது யார்?

people-gathered-on-hillock-where-the-smi-were-shot-deadஎன்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்.ஜி. யோகேஷ் சவுத்ரி: என்கவுட்னர் வீடியோக்கள் குறித்தளவை உண்மையா-இல்லையா என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்[2]. இந்த என்கவுன்டரில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக அவர்களை உயிருடன் பிடிக்க முயன்ற போலீசாரை பயங்கரவாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நடந்த என்கவுன்டரில் 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இல்லை அவர்களே தங்களை சுட்டுக் கொண்டனர் என்று கூட ஊடகக்காரர்கள் வாதிப்பார்கள் போலும். இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. அந்த இடத்தில் நடந்த சூழ்நிலையை பொறுத்து எடுக்கப்பட்ட முடிவு. இருப்பினும் என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். என்றார். இந்த சிமி பயங்கரவாதிகள் தொடர்ச்சியான குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர், அவர்கள் 2008, 2011-ல் போலீஸ் கான்ஸ்டபிளை கொலை செய்து உள்ளனர்[3]. பயங்கரவாதிகள் எப்படி சிறையில் இருந்து தப்பினர்கள், தப்பிய பின்னர் அவர்கள் எங்கு சென்றனர் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார்[4].

video-scenes-killing-simi-on-hillockஎன்கவுன்டர் வீடியோ வெளிவ்ந்தது எப்படி? யார் எடுத்தது?: என்கவுன்டர் வீடியோ பற்றி தான் இப்பொழுது ஊடக ஆராய்ச்சி அதிகமாகியுள்ளது[5]. திங்கட்கிழமை காலை 10.30 – 11.30 இடையில் இந்த சிமி-தீவிரவாதிகள் மற்றும் போலீஸார் மோதல் நடந்துள்ளது[6]. போலீஸார் எடுத்துள்ள வீடியோ தவிர மற்றவர்களும் வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது.

Ø  அப்படியென்றால், யார் எடுத்தது?

Ø  தீவிரவாதிகள் அங்குதான் இருக்கின்றனர் அல்லது போலீஸார் அங்கு வருவார்கள், இவ்வாறேல்லாம் நடக்கும், அப்பொழுது வீடியோ எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்?

Ø  அப்படியென்றால், “என்கவுன்டர்” பெயரில், இவர்களை சிறையிலிருந்து வெளியேற்றி, போலீஸாரை வைத்தே தீர்த்துக் கட்ட திட்டம் போட்ரது யார்?

Ø  அது யார் சார்பாக எடுக்கப்பட்டது?

Ø  போலீஸாருக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் எடுக்கப்பட்டதா?

Ø  அது ஊடகங்களுக்கு எப்படி கிடைத்தது?

ஊடகங்கள் எப்படி அவற்றை ஒலி-ஒளிபரப்பி விவதாங்களை உடனடியாக ஆரம்பி வைக்கலாம். உடனே தீவிரவாதிகளின் வழக்கறிஞர் அப்பிரச்சினையை எடுத்துக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கலாம்?

escaped-simi-killers-on-the-hillock-4-missingஸ்டில் டம்பளர், தட்டு கத்தியாக மாறியது, தலைமை கான்ஸ்டெபிள் கொல்லப்பட்டது எப்படி?: சிறையில் சிமி கைதிகளுக்குக் கொடுக்கப் பட்ட ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியன கூர்மையாக கத்திகளாக மாறியது எப்படி என்பதை யாரும் விள்ளக்குவதாக இல்லை. சிமிக்காரர்கள் அத்தகைய தொழிற்நுட்பங்களை சிறையிலேயே ஏற்படுத்டிக் கொண்டார்களா அல்லது வெள்ளியியிலிருந்து, அத்தகைய தொழிற்நுட்பங்கள் வரவழைக்கப்பட்டனவா என்றும் விவாதிக்கப்படவில்லை. சிறையிலேயே அவற்றை வளைத்து, வெட்டி, ராவி கூராக மாற்றியுள்ளனர் என்றால், எப்படி சாத்தியமாகும். பிறகு, சிறையிலேயே அவர்களுக்கு உதவ யாரோ இருக்கின்றனர் என்றாகிறது? அவர்கள் யார்? ராம்சங்கர் யாதவ் என்ற தலைமை கான்ஸ்டெபிள் தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார்[7]. டிசம்பர் 9, 2016 அன்று திருமணம் நடக்கும் என்றும் மிகவும் சந்தோசமாக இருந்தார், ஆனால், கொலைகாரர்கள் அவரைக் கொண்டு விட்டார்கள்[8]. இவரது உரிமைகள் பற்றி யார் பேசுவார்கள், விவாதம் நடத்துவார்கள்?

5-lalhs-announced-on-the-escaped-simi-killersபொறுப்புள்ள முஸ்லிம்கள் கேள்விகளைத் தவிர்ப்பது: குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது, கொள்ளைகள் நடந்தது, ஜெயிலிருந்து ஆயுதங்களுடன் தப்பியோடியது, போலீஸார் கொல்லப்பட்டது, சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது இவையெல்லாம் பொய்யா? இவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரது உரிமைகள் என்னாவது? ஐசிஸில் சேரத்துடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளார்களே? அதேபோலத் தானே, இந்திய முஜாஹித்தீன் வேலை செய்து கொண்டு வருகிறது. பிறகு ஏன், எப்படி இந்திய முஸ்லிம்கள் அதனை ஆதரித்து வருகிறார்கள்? உள்ளூர் தீவிரவாதம் அதிகமாகி, பெருகிவருவது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகள் இத்தகைய குண்டுவெடுப்புகளை ஆதரித்துக் கொண்டிருப்பர்? தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய காரியங்களை ஏன் அவர்களது பெற்றோர்ருறவினர், மற்றோர் தடுப்பதில்லை? இவற்றையெல்லாம் விடுத்து, “சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ” என்று வாதிடுவது, அத்தகையவரை ஊக்குவிப்பதாகத்தான் அமையுமே தவிர, அமைதியை உண்டாக்காது.

© வேதபிரகாஷ்

01-11-2016

escaped-simi-killers-on-the-mount-got-killed

[1] தினமலர், என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: .பி. .ஜி.பேட்டி, பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 19:43 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 20:36 PM IST.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1638739

[3] தினத்தந்தி, சிமி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது போலி என்கவுண்டர் என்ற விமர்சனத்தை நிராகரித்தது போலீஸ் , பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST.

[4] http://www.dailythanthi.com/News/India/2016/10/31210512/Police-rejects-criticism-of-fake-encounter-of-SIMI.vpf

[5] Indian Express, SIMI activists’ jailbreak: Video shows cop shooting at inmate on ground; in another, a talk of talks, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 1, 2016 5:49 am

[6] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-dead-video-jailbreak-undertrials-3731611/

[7] DNA, Bhopal jailbreak: Constable killed by SIMI activists was preparing for daughter’s wedding, Mon, 31 Oct 2016-09:45pm , PTI

[8] http://www.dnaindia.com/india/report-bhopal-jailbreak-constable-killed-by-simi-activists-was-preparing-for-daughter-s-wedding-2269076

நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்தவனுக்கு மரண தண்டனை!

மார்ச் 30, 2010

நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்தவனுக்கு மரண தண்டனை!

ஒரு சவுதி மந்திரவாதி!

பெண்களை மந்திரத்தாலே வசியப் படுத்துவதில் வல்லவனாம்!

அவ்வாறே அவன் வசியப் படுத்தி நூற்றிற்கும் மேலாக பெண்களைக் கற்பழித்து விட்டானம்!

ஒரு பத்திரிக்கை சொல்வதென்னவென்றால், “காதிஃப் மந்திரவாதி” (the “Qatif sorcerer”) முதலில் பத்தாண்டு சிறைவாசம் மற்றும் 1000 கசையடி என்று தண்டனை அளிக்கப் பட்டதாம். பிறகு அது மரண தண்டனையாக மாற்றப் பட்டதாம்!

அல்-ரியாத் நாளிதழ் சொல்வதவது, அந்த அடையாளம் தெரியாத மனிதன் காதிஃப் என்ற கிழக்கு நகரத்தில் இருந்து பெண்களை பல ஆண்டுகளாக மிரட்டி பயமுறுத்தி வந்தானாம்.

முதலில் எந்த பெண்ணவது “காதல் மந்திரத்தால் கட்டுப் பட்டிருந்தால்”, அக்கட்டை பிரித்துவிடுவேன் என்று ஆசைக்காட்டுவானாம். அப்படி அவர்கள் – காதல் கட்டுண்ட பெண்கள், தங்களது “காதல்-மந்திர-கட்டை” அவிழ்க்க வரும்போது, இவன் அவிழ்த்து லீலைகள் புரிவானாம். அதுமட்டும் அல்லாது நமது லெனின் குருப் / குருப் லெனின் மாதிரி திருட்டுத் தனமாக வீடியோவையும் எடுத்து விடுவானாம்!

பிறகு அதை தன்னால் கற்பழிக்கப் பட்ட பெண்னிடம் காட்டி மிரட்டி தனக்கு தன்னுடைய “மந்திரத் தொழிலில்” உதவுமாறு வற்புறுத்துவானாம். அதாவது அப்படியே மற்ற பெண்களை அங்கு அழைத்து வருவது, இவன் கற்பழிப்பது என்று உதவி செய்யத் தூண்டி மிரட்டுவானாம், அவர்களும் பயந்து கொண்டு அவ்வாறே செய்து வந்தார்களாம், அதாவது பெண்களை அழைத்து வந்து, இந்த காமுகனிடம் மாட்டி வைத்து கற்பழிக்க தோதுவாக இருந்தார்களாம்.

அரபு நியூஸ் சொல்வதென்னவென்றால், அவன் பல கேமராக்களை அவ்வாறு மறைத்து வைத்துள்ளதாகவும், 200ற்கும் மேலாக அத்தகைய கலவி-சரச வீடியோ டேப்புகள், 180 கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் தன்னால் கற்பழிக்கப் பட்ட பெண்களின் விவரங்கள் முதலியவற்றை தன்னுடையா வீட்டில் வைத்திருந்தானாம். [நல்ல வேளை நம்மூர் ஆட்களாக இருந்தால் அதை ரூ. 500/- என்று போட்டு விற்றிருப்பார்கள், பாவம், நக்கீரன் ஜொல்லுவிடுவதும், சன் –  டிவி மூச்சு விடுவதும் தெரிகிறது / கேட்கிறது].

அல்-ரியாத் சொல்வதாவது, அவன் அவ்வாறு 350 மேலாக பல பெண்களை மயக்கியிருப்பான்

கடைசியாக அவன் ஒருவனிடத்தில் மாட்டிக் கொண்டானாம். அதாவது ஒரு பெண் அவனிடத்தில் அகப்பட்டு தப்பி வந்தபோது, அவள் சொன்ன விஷயம் வைத்துக் கொண்டு அவன் பிடிக்கப்பட்டானாம். இவ்வழக்கு சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷனிடத்தில் அனுப்பப் பட்டுள்ளதாம்.

சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் என்பது சவுதி மத-போலீஸார் ஆவார்கள்! அதாவது மததைக் காக்கு  போலீஸார்!

இந்தியாவிற்கும் இத்தகைய போலீஸார் இன்று தேவைப் படுகின்றனர்!