Archive for the ‘விசாரணை’ category

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை – வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!

நவம்பர் 2, 2022

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரைவழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!

திருக்குறளை வைத்து பணம் டிபாசிட் பெற்று மோசடி செய்த ஷேக் முகைதீன்: திருக்குறள் புத்தகம் விற்பனை வாயிலாக, மதுரை தனியார் நிறுவனம், 65.46 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு விசாரணையை, மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் முடிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது[1]. மதுரை, சின்ன சொக்கிகுளம் ஹக்கீம் அஜ்மல்கான் ரோட்டில், பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டது[2]. இங்கு, ’10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, 100 திருக்குறள் புத்தகங்கள் வாங்க வேண்டும்; 37வது மாதத்தில், 46 ஆயிரத்து, 900 ரூபாய் முதிர்வுத் தொகை வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது[3]. இத்தவறான வாக்குறுதியை நம்பி, 45 ஆயிரத்து, 501 பேர், 65 கோடியே, 46 லட்சத்து, 87 ஆயிரத்து, 508 ரூபாய் முதலீடு செய்தனர்[4]. இதை முதலீட்டாளர்களுக்கு தராமல் ஏமாற்றியதாக நிறுவனம் மற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹுசைன் உட்பட சிலர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், 2010ல் மோசடி வழக்கு பதிந்தனர்[5].  இது பற்றிய விவரங்களை, எனது முந்தைய, சென்ற வருட பதிவில் காணலாம்[6].

பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் முதல் ஷேக் முகைதீன் வரை (2010-2021)[7]: மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் முகைதீனை (62), மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[8]. முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: “போலீஸ் துறையில் விரல் ரேகை பிரிவு நிபுணராக 1970ல் சேர்ந்தார். 2005ல் விருப்ப ஓய்வு பெற்றேன். சென்னையில் பசிபிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவர் கடிகாரம் வழங்கியது. அதைப்பார்த்து, தனியாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மதுரையில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினேன். இதன் நிர்வாக இயக்குனர்களாக நானும் (ஷேக்முகைதீன்), எனது மனைவி மனைவி ஜானு, மகன்கள் சர்தார் உசேன், யாகூப் உசேன் மற்றும் சிவக்குமார், முபாரக்அலி ஆகியோர் இருந்தோம்”.

2011ல் விசாரணைக்கு வழக்கு வந்தது: 06-05-2010 அன்று ஷேக் முகைதீன் கைது செய்யப் பட்டார். ஷேக் முகைதீன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர், 2005ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்தாண்டு டிசம்பர் 2009 வரை லாபத் தொகையை கொடுத்தார். இதன் பின், காலம் தாழ்த்தினார். சிலர், போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, முதலீடு பணத்தை திருப்பிக் கொடுத்தார். இன்னும் வாங்காதவர்கள் நேற்று நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருமங்கலத்தைச் சேர்ந்த தேவேந்திரன், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, ஷேக் மைதீனை இன்ஸ்பெக்டர் நேதாஜி கைது செய்தார். முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

2022ல் மறுபடியும் விசாரணைக்கு வழக்கு வந்தது: டான்பிட் எனப்படும் மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது[9]. பாதிக்கப்பட்டோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில், நீதிபதி எம். நிர்மல்குமார் முன் முறையிட்டதாவது: “டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக்கோரி ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹுசைன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டான்பிட் நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையில் முன்னேற்றம் இல்லை. விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு, ‘குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எங்கள் தரப்பில் தாமதம் ஏற்படவில்லை. 2,685 சாட்சிகளை விசாரித்து ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்கத் தயார்’ என, தெரிவித்தது. நீதிபதி, ‘பாதிக்கப்பட்டோரின் நலன் கருதி கீழமை நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மாதந்தோறும் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டார்.

மோசடி வழக்கை விசாரித்த மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றடான்பிட்நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு: “முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிக்கும் நோக்கில், எதிர்மனுதாரர்கள் மனுக்கள் மேல் மனு தாக்கல் செய்துள்ளனர். முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது.சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் கூறினார்.

மே 2023ற்குள் பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வழக்கு முடிய வேண்டும்: ஆக, இதை எதிர்த்து மேல்முறையீடு செய்து, உச்சநீதி மன்றத்திற்குச் சென்று காலந்தாழ்த்தி இருப்பதும் தெரிகிறது. அதனால் தான்  முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது, என்றாலும், ஷேக் முகைதுனுக்கு ஏதோ ஆதரவு உள்ளதால், இது நடந்துள்ளது. சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்றாலும், இழுத்தடிப்பு வேலை நடந்துள்ளது.  நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. நீதிபதி, ‘பாதிக்கப்பட்டோரின் நலன் கருதி கீழமை நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மாதந்தோறும் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டுள்ளார். இப்பொழுது நவம்பர் 2022, அதாவது, மே 2023ற்குள் பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வழக்கு முடிய வேண்டும். என்னாகுமோ பார்க்கலாம்.

வேதபிரகாஷ்

02-11-2022


[1] தமிழ்.இந்து, திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி: வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு, செய்திப்பிரிவு, Published : 01 Nov 2022 06:39 AM; Last Updated : 01 Nov 2022 06:39 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/890545-order-to-close-the-case-in-6-months.html

[3] தினமலர், திருக்குறள் புத்தகம் விற்பனை மோசடி விசாரணையை முடிக்க ஐகோர்ட் கெடு,  தமிழகம் செய்தி, Added : நவ 02, 2022  00:34

[4] https://www.dinamalar.com/news_detail.asp?

[5] ஜி.7.தமிழ், திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி: வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு, Order to close the case in 6 months, 1 day ago g7tamil

[6]  வேதபிரகாஷ், திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை,  ஆகஸ்ட் 8, 2021.

[7]  தினமலர், மோசடி நிதி நிறுவன உரிமையாளர் வீடுகளுக்கு ‘சீல்’, மே 10,2010,00:00  IST

[8] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18450

[9] https://g7tamil.in/tag/%E0%AE%B0%E0%AF%82-65-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)

24-10-2022 (திங்கட் கிழமை): ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். தீவிரவாத தொடர்புகளால் ஐந்து பேர் கைது செய்யப் பட்டனர். கார் வெடிப்பில் ஜமேசா உயிரிழந்த நிலையில், அவருக்கு உடைந்தையாக இருந்த –

  1. முகமது தல்கா (25),
  2. முகமது அசாருதீன் (23),
  3. முகமது ரியாஸ் (27),
  4. ஃபிரோஸ் இஸ்மாயில் (27),
  5. முகமது நவாஸ் இஸ்மாயில் (26)

ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டமும் பாய்ந்தது.

ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை: பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது. சதிச் செயலுக்கான பின்புலத்தில் இருந்ததால், ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய கோவையைச் சேர்ந்த எந்த ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை[1].  இதுகுறித்து பேசிய ஜமாத் நிர்வாகி ஒருவர்[2], “நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம். இதனால் பலரும் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், ஒருவரது உடலை அடக்கம் செய்ய வேண்டுமானால், ஏதாவது ஒரு ஜமாத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும், அவர் உறுப்பினராக இல்லை என்பதால், அவரை அடக்கம் செய்ய அனுமதி கடிதம் கொடுக்கப்படவில்லை,” என கூறினார்[3]. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது குடும்பத்தினரும், போலீஸாரும் தவித்தனர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், மனிதாபிமான அடிப்படையில் மேட்டுப்பாளையம் சாலை, பூ மார்க்கெட் அருகே உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசலில், லங்கர்கானா அடக்கஸ்தலத்தில்  ஜமாத் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது[4].

அமைதியை விரும்பினால், இளஞர்கள் திசை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: இதிலிருக்கும் மதநம்பிக்கையை விடுத்து, “குண்டு வெடிப்பு” கோணத்தில் அலசினால், மனைவி ஏன் கடிதம் கொடுக்கவில்லை, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. “பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது,” எனும் பொழுது, அவர்கள் நிச்சயமாக, பொறுப்பேற்று கடிதம் கொடுத்திருக்கலாம்.  கொரோனா காலத்திலேயே, முஸ்லிம் உடல்கள் எப்படியெல்லாம் புதைக்கப் படவேண்டும் போன்ற வாத-விவாதங்கள் வெளியாகியுள்ளன. அதே போல, கடந்த காலங்களிலும், தீவிரவாதிகள் உடல்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. ஆதவே இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை. “நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம், “ என்றால், அவ்வாறே முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸ் போன்ற அமைப்புகளுடம் இணையாமல் இருக்க, பெற்றோர்-மற்றோர் கவனிக்கலாம், தடுக்கலாம், அறிவுரை கூறலாம். ஆனால், தொடர்ந்து நடக்கின்றன என்பதால், இதில் என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை.

முகமது தல்கா (25): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்டவர்களில் முகமது தல்கா என்பவர் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர் நவாப்கான் என்பவரின் மகன் ஆவார்.  நவாப்கான் 1988 கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் கைதியாக மத்திய சிறையில் இருப்பவர். தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர்[5]. நவாப் கான், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது யாரை எல்லாம் சந்திதார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது[6]. தல்கா மூலம் தான் முபினுக்கு கார் கை மாறியுள்ளது.

முகமது அசாருதீன் (23): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்ட மற்றொருவரான முகமது அசாருதீன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை வெடிகுண்டு வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர். அப்போது கேரளா சிறையில் இருந்த அசாருதீனை முபின் சந்தித்தத் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

முகமது ரியாஸ் (27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

ஃபிரோஸ் இஸ்மாயில் (27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்;  ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

முகமது நவாஸ் இஸ்மாயில் (26): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்;  ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

25-10-2022 (செவ்வாய் கிழமை): இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் உயிரிழப்பு, வெடிப்பொருள் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சோதனையில் 75 கிலோ வெடிப்பொருட்கள் – ரசாயனங்கள் கண்டெடுக்கப் பட்டன. கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில், ” முபினின் வீட்டில் கைப்பற்றப்ட்ட மூலப்பொருட்கள் குறைந்த திறனுடைய வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுபவையாகும். அவர் மேலும் நிறைய வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது. அவரது வீட்டில் இருந்த மூலப்பொருட்களின் மாதிரிகளை தடயவியல் துறையினர் சோதனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன் அறிக்கை வந்தால் மட்டுமே எந்த மாதிரியான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும்[7]. வெடிப்பொருள்களை முபின் எப்படி வாங்கினார் என்பதை கண்டறிய முயன்ற போது அவை ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது[8]. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்றும்[9], முபின் தடை செய்யப்பட்ட பல இஸ்லாமிய இயக்கங்களின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கங்களை அவர் பார்வையிட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்[10]

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] தமிழ்.இந்து, ஜமேஷா முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாத், செய்திப்பிரிவு Published : 26 Oct 2022 06:11 AM; Last Updated : 26 Oct 2022 06:11 AM.

[2]  https://www.hindutamil.in/news/tamilnadu/887654-jamesha-mubins-body.html

[3] News.18.Tamil, ஜமோஷா முபினின் உடலை அடக்கம் செய்ய முன்வராத ஜமாத் நிர்வாகங்கள்.. கோவையில் பரபரப்பு..!, Published by:Anupriyam K, First published: October 26, 2022, 08:52 IST; LAST UPDATED : OCTOBER 26, 2022, 08:52 IST.

[4] https://tamil.news18.com/news/coimbatore/jamaat-authorities-did-not-come-forward-to-bury-jamoza-mubeens-body-in-coimbatore-824997.html

[5] தினத்தந்தி, 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவரின் மகன் கார் வெடித்த சம்பவத்தில் கைது, By தந்தி டிவி 27 அக்டோபர் 2022 12:27 PM.

[6] https://www.thanthitv.com/latest-news/1998-coimbatore-blast-case-inmates-son-arrested-in-car-blast-incident-144934

[7] காமதேனு, வெடிபொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து வாங்கிய ஜமேஷா முபின்: காவல் துறை அதிர்ச்சி தகவல்!, Updated on : 27 Oct, 2022, 11:24 am.

[8] https://kamadenu.hindutamil.in/national/jamesha-mubin-bought-the-explosives-by-ordering-them-from-amazon-and-flipkart-police-department-shocked

[9] மக்கள் குரல், வெடிப்பொருள் தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான், ப்ளிப்கார்ட் மூலம் வாங்கிய ஜமேஷா முபின், Posted on October 27, 2022

[10]https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1/

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [3]

மார்ச் 25, 2020

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [3]

Bangla wokers in Tamilnadu textile units

ஈரோட்டில் அந்நிய நாட்டவர், குறிப்பாக வங்காளா தேசத்தவர் வந்து போவது தெரிந்த விசயமாக இருக்கிறது: குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் வருகிற ஆபத்துகள் ஒருபுறம் இருக்க வயிற்றுப் பிழைப்புக்காக தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள், நேபாளம், மணிப்பூர், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து வந்து கூலி வேலை செய்யும் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தின் பல நகரங்களில் தங்கியுள்ளார்கள்[1]. குறிப்பாக ஜவுளி மற்றும் தொழில் நகரான கோவை, திருப்பூர், பெருந்துறை போன்ற ஊர்களில் பலர் குடும்பம் குடும்பமாக வசிக்கிறார்கள். இவர்களில் பலர் பாஸ்போட், விசா என எதுவும் இல்லாமல் தான் இங்கு வந்து கூலி வேலை செய்கிறார்கள். அப்படிப்பட்ட இந்திய குடியுரிமை இல்லாதவர்களை தீவிரமாக கண்டறியச் சொல்லி தமிழக அரசு உளவுத் துறை போலீசாருக்கு சமீபத்தில் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் முதலில் மாட்டியவர்கள் தான் இப்போது ஈரோட்டில் பிடிபட்டவர்கள்[2].

Bangla wokers in Tamilnadu

வங்கதேசத்தவர் நால்வர் கைது [பிப்ரவரி 2020]: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம்பாளையம் புதூர், மாகாளியம்மன் கோவில் அருகில், நேற்று காலை பெருந்துறை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், வாகன தணிக்கை செய்துக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வேலைக்கு செல்வதற்காக நடந்து வந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். நால்வரும் இந்தியில் பேசியதோடு அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற எந்த ஆவணமும் இல்லாமல் இங்கு தங்கி இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். இந்த நான்கு பேரும், பெருந்துறை, திருவேங்கிடம்பாளையம் புதூரில் தங்கிக் கொண்டு, பெருந்துறை, சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததையும் கூறியிருக்கிறார்கள். இதை போலீசாரும் அந்த தொழில் நிறுவனத்திற்குச் சென்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

The changung weapon of Jihad, illustration
கைதானவர் துலுக்கர் தாம்: விசாரணையில் வங்கதேசத்தில் உள்ள சத்கிரா மாவட்டம், சோபர்னாபாத், கோபுரஹலி பகுதியை சேர்த்த அபுபெக்கர் சித்திக் ஹாஜி என்பவரது மகன் பரூக் ஹாஜி, பேட்ஹலி, பிங்கர ஹள்ளி கிராமம், சோனத் ஹாஜியின் மகன் ஹிமுல் இஸ்லாம், டேப்ஹலி கிராமம், பொரேஸ் காஜி மகன் சிராஜ் ஹாஜி மற்றும் நங்களா மனரடி கிராமம், முகமது சஜான் சர்தாரின் மகன் ரொபுயுல் இஸ்லாம் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு இந்த நால்வரையும் பாஸ்போட், விசாவோ இல்லாத காரனத்தினால் சட்டவிரோதமாக இங்கு வந்து தங்கியதாக வழக்கு பதிவு செய்து பெருந்துறை காவல் ஆய்வாளர் சரவணன் கைது செய்ததோடு நால்வரையும் சென்னை கொண்டு சென்று புழல் சிறைக்கு அடைத்து விட்டனர். வங்கதேச எல்லையில் உள்ளவர்களின் உறவினர்கள் இந்தியாவின் மேற்கு வங்க எல்லையில் வசித்து வருகிறார்கள். அந்த எல்லைப் பகுதியில் வருவதும் போவதும் வழக்கமான நடைமுறை தான். அங்கு தொழில் இல்லாததாலும் குடும்பம் நடத்தும் அளவுக்கு கூலி கிடைக்காததாலும் ஏராளமானோர் வறுமை காரணமாக எல்லோருக்கும் வேலை கிடைக்கும் தமிழகத்தை தேடி வருவதாகவும் இங்கு நல்ல கூலி கிடைக்கிறது என்றும் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆக, இவையெல்லாம் தெரிந்த விசயங்கள் என்றாகின்றன.

Secular way od reporting, Carone affect, Mumbai Mirror, 24-03-2020

கேரளாவில் கரோனா வைரஸ் பாதித்த ஆட்கள் விசயங்களை மறைப்பதேன்?: கேரளாவில் கூட இத்தாலிக்குச் என்றவர்கள் சொல்லவில்லை என்ற செய்தி வருகிறது. ஆனால், பாஸ்போர்ட்டில் முத்திரை இருக்க வேண்டும். அப்படி முத்திரையே விழாமல் சென்று வந்துள்ளனர் என்பது வியப்பாக இருக்கிறது. அதேபோல, இன்னொருவர் [காசரகோடு] விசயத்தில், “அந்த ஆள் பல இடங்களுக்குச் சென்றான். பைபாடியில் உள்ள தன்னுடைய சகோதரன் வீட்டிற்குச் சென்றான். உள்ளூர் கிளப்பிற்குச் சென்றான். குழந்தைகளுடன் கால்பந்து ஆடினான். எரியல் என்ற இடத்தில் முடிவெட்டுக் கடைக்குச் சென்றான் மற்றும் ஆஜாத் நகரில் உள்ள நண்பர் வீட்டிற்குச் சென்றான். எரியல் ஜுமா மஸ்ஜித்திற்கு தொழுகைக்குச் சென்றான், கல்யாணம் மற்றும் ரிசப்சனுக்குச் சென்றான்,” என்றெல்லாம் விவரிக்கும் ஊடகங்கள், அவன் ஒரு முஸ்லிம் என்று சொல்ல தயங்குகின்றன[3]. “இந்தியா டுடே” படங்கள் எல்லாம் போட்டு வர்ணித்துள்ளது[4]. ஆனால், டுபாயிலிருந்து வந்தவன் யார், அவன் பெயர், புகைப்படம் முதலியவற்றை வெளியிடாமல், இப்படி போட்டிப் போட்டுக் கொண்டு ஊடகங்கள் வர்ணிப்பது வியப்பாக உள்ளது. குற்றம் செய்தவனை ஏதோ மறைமுகமாக பாராட்டுவது அல்லது விளம்பரம் கொடுப்பதை போல உள்ளது.

Map of Kasarkod Covid-19 patient

காசரகோடும், ஈரோடும்: இணைதளங்களிலிருந்து இருக்கின்ற / கிடைக்கின்ற விவரங்களை வைத்து, காசரகோடு போல, இந்த ஈரோடு கும்பலின் சென்று வந்த விவரங்களை இவ்வாறு வரிசைப் படுத்தலாம்:

  1. புகித் [Phuket[5]], தாய்லாந்திலிருந்து தில்லிக்கு விமானம் மூலம் வந்தது.
  2. தில்லியிலிருந்து சென்னைக்கு 11-03-2020 அன்று விமான மூலம் [?] வந்தது. சென்னை தப்ளிக் அலுவலகத்தில் இருந்தது [? – ஈரோடு காஜி சொல்வது]
  3. சென்னையிலிருந்து ஈரோடு ஸ்டேஷனுக்கு 03.2020 அன்று ஏழு பேர் வந்தது. சிலர் தனியார் வாகனத்தில் சென்றதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
  4. ஈரோட்டில் முதலில் ஒரு மசூதிக்குச் சென்றது, தங்கியது.
  5. பிறகு தப்ளிக் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டது, மூன்று மசுதிகளுக்குச் சென்றது.
  6. 14-03-2020 அன்று மூவர் கோயம்புத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டது.
  7. 15-03-2020 அன்று ஒருவன் தாய்லாந்திற்கு புறப்பட்டுச் சென்று விட்டது.
  8. இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.
  9. பெருந்துறை பட்டுள்ள ஐ.ஆர்.டி மருத்துவ கல்லூரி பிரிவுக்கு 16-03-2020 அன்று அனுப்பப்பட்டது.
  10. ஒருவன் சிறுநீரகப் பிரச்சினையால் 17-03-2020 அன்று உயிர் இழந்தது.
  11. மீதம் ஐந்து பேர் மருத்துவ மனையில் இருப்பது.

Map of Kasarkod Covid-19 patient-2

பதட்டமான நிலையில் உண்மையான செய்திகளை மக்களுக்கு அறிவிக்கப் படவேண்டும்: கரோனா விசயத்தில் மதத்தை நுழைக்க யாரும் விரும்பவில்லை. ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் வெளிப்படையாக இருந்திருக்க வேண்டும். கேரள ஊடகங்கள், தமிழக ஊடகங்கள், தேசிய ஊடகங்கள், அரசு அறிக்கைகள் எல்லாம் ஏதோ “செக்யூலரிஸ ரீதியில்,” ஜனரஞ்சகரமான போக்கில், பரபரப்பு செய்திகள் போல வெளியிட்டிருப்பது தான் வியப்பாக இருக்கிறது. ட்டுரிஸ்ட் விசா மூலம் மதப் பிரச்சாரகர்கள் வந்து பிரச்சினைகள் செய்வது, மதமாற்றம் செய்வது, விசா காலம் முடிந்தும் தங்குவது, பல ஆண்டுகள் அப்படியே இருந்து விடுவது போன்றவை ஏற்கெனவே அதிகமாக இந்தியாவில் நடந்துள்ளன. கேரளாவில் ஷேக்குகள் வந்து ரகசியமாக சுற்றிப் பார்த்து சென்றிருக்கின்றனர். பிறகு அது பிரச்சினையான போது, விவரங்கள் வெளி வந்தன. இப்பொழுது, எல்லாமே கரோனா வைரஸ் போக்கில் பார்க்கப் படுகிறது. அந்நிலையில், அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதும் தடுக்கப் படவேண்டும்.

© வேதபிரகாஷ்

25-03-2020

Map of Kasarkod Covid-19 patient-3

[1] நக்கீரன், உரிய பாஸ்போர்ட், விசா இல்லாத நான்கு பேர் ஈரோட்டில் கைது, ஜீவாதங்கவேல், Published on 20/02/2020 (10:37) | Edited on 20/02/2020 (10:42) ஜீவாதங்கவேல்.

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/passport-visa-erode-police-information

[3] India Today, From marriage functions to train journey to football match: Travel history of Kerala’s Kasaragod Covid-19 patient , P S Gopikrishnan Unnithan, Thiruvananthapuram, March 21, 2020UPDATED: March 21, 2020 19:36 IST

[4] https://www.indiatoday.in/india/story/coronavirus-india-kerala-kasaragod-covid-19-patient-travel-history-marriage-functions-train-journey-to-football-match-1658261-2020-03-21

[5] Phuket (/puːˈkɛt/ poo-KET; Thai: ภูเก็ต, pronounced [pʰūː.kèt]) is a city in the southeast of Phuket island, Thailand. It is the capital of Phuket Province.Phuket is one of the oldest cities in Thailand.[citation needed] It was an important port on the west of the Malay Peninsula where Chinese immigrants first landed.

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [2]

மார்ச் 25, 2020

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்! [2]

Erode Sultanpettai,mosque-what BBC tamil says

டூரிஸ்ட் விசாவில் தில்லியில் இருந்து சென்னைக்கு வந்த தப்ளிக் கோஷ்டி: கரோனா வைரஸ் தொற்றுள்ள தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈரோடு வந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு தலைமை காஜிக்கு கூட முன்கூட்டியே தெரியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது “டூரிஸ்ட் விசா”வில் வந்து, இத்தகைய வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றாகிறது. தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்தவர்களில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. [Patient 5 and 6: A 69 year old male and a 75 year old male from Erode, has tested positive for COVID-19 on 21.03.2020. He had travelled from to New Delhi to Erode railway station on 11.03.2020.(No. of Contacts Primary 13)] கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாடு முழுவதும் வெளிமாநிலம், வெளிநாட்டினர் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஈரோடு மசூதிகளில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து உளவுத்துறை மூலமாக காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. மார்ச் 11-ம் தேதி ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து மார்ச் 16-ம் தேதிதான் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவந்துள்ளது[1].

Erode issue- Dinamalar, Chennai, March 24 2020, p.14

கிருத்துவர்கள் வழியை துலுக்கர் பின்பற்றுகிறார்களா?: இதுவரை மிகப் பெரிய அனைத்துலகக் பிடோபைல் குற்றவாளிகள், சட்டங்களை மீறிய கற்ப்பழிப்பாளிகள், மதமாற்று மோசடி பேர்வழிகள், இவாஞெலிஸ்ட்டுகள் என்று பல கொடிய உருவங்களில் இந்தியாவில் நுழைந்து, சீரழித்ததை பார்த்தோம். உச்சநீதி மன்றம் வரை வழக்குகள், வி ஹியூம் போன்றோர் சிறை தண்டனை, மற்றவர் நாடு கடத்தல் என்றிருந்தன. இவர்கள் எல்லொருமே திருட்டுத் தனமாக, போலி பாஸ்போர்ட், பெயர் மாற்றம், டூரிஸ்ட் விசா என்று தான் உள்ளே நுழைந்து, தங்கும் காலத்தையும் மீறி குற்றங்களை செய்துள்ளனர். இப்பொழுது, துலுக்கரும் அதே முறையைப் பின்பற்றுகிறார்கள் என்று தெரிகிறது. ஆக, காஜி எனக்குத் தெரியாமல் வந்து விட்டனர் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். அப்படியென்றால், முதல் நாளே, 11-03-2020 அன்றே அவர், உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? ஆக இதனை மக்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

Erode issue, 11 ulemas in ward, Dinamalar, Chennai, March 24 2020, p.14

கரோனா ஜிஹாதா, வைரஸ் மூலம் இந்தியர்களைக் கொல்லும் திட்டமா?: காலத்திற்கு ஏற்ப துலுக்கர் தமது பிரயோக ஆயுதங்களை மாற்றியுள்ளனர். கத்தி மூலம் ஜிஹாத் என்று கொன்று குவித்து, இப்பொழுது – கடந்த 35-40 வருடங்களாக, குண்டு வெடிப்பில் அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். தற்கொலை குண்டுவெடிப்பு பிரசித்தியானது. ஏனெனில் அத்தகைய தற்கொலை குண்டு வெடிப்பாளி, “ஷஹீத்” ஆகிறான், உடனடியாக சொர்க்கத்திற்குப் போகிகிறான். அதாவது, அப்படியெல்லாம் சொல்லி மூளைசலவை செய்து தற்கொலை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை தயார் செய்தனர். அதே போல, ஒருவேளை, இந்த கரோனா வைரஸ் துலுக்கர், தங்களை அவ்வாறு உட்படுத்திக் கொண்டு, ஒட்டு மொத்தமாக, அனைவரையும் கொல்ல திட்டமிட்டுள்ளார்களா என்றும் கவனிக்க வேண்டும். ஏனெனில், அத்தகைய குரூரமான, வெறி பிடித்தவர்கள். செய்யவும் தயங்காதவர். முதலில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, இவர்கள் கூட எதிர்ப்புத் தெரிவித்தனர். “ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுத்து அடக்குமுறை என ஆவேசம் ஆனதாக வேதனை தெரிவிக்கின்றனர் அரசு அதிகாரிகள்,” என்று பாலிபர் நியூஸ் தெரிவித்தது[2].

What they did at Erode Sultanpettai,mosque
தப்ளிக் கோஷ்டி தெரிவிக்காமல் வந்தனர் என்றால், உள்நோக்கம் என்ன?: இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரசு காஜி முகம்மது கிபாயத்துல்லா கூறியதாவது[3]: “உலக அளவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் சமய அறிவு பற்றித் தெரிந்து கொள்ள வெவ்வேறு நாடுகளுக்கு செல்லும் குழுவினருக்கு தப்ளிக் என்று பெயர். இந்த குழுவினர் இந்தியா வரும்போது டெல்லியில் உள்ள மர்கஸ் என்ற தலைமையகத்திற்கு வருவார்கள். அவர்கள் எந்த மாநிலத்திற்கு, எந்த பகுதிக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தி அனுப்பி வைப்பர். தமிழகத்தில் தப்ளிக் குழுவினருக்கு சென்னையில் ஒரு மையம் உள்ளது. சென்னை மையம் வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேரும் ஈரோடு வந்துள்ளனர். இவ்வாறு தப்ளிக் குழுவினர் ஒரு மாவட்டத்திற்கு வரும்போது, அரசு காஜி மற்றும் எந்த மசூதிக்கு செல்கிறார்களோ அந்த மசூதியின் இமாம் மற்றும் முத்தவல்லிக்கு, தகவல் கொடுக்க வேண்டும். ஆனால், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள் அதுபோல எந்த தகவலும் அளிக்கவில்லை. தப்ளிக் குழுவினர் இங்குள்ள இஸ்லாமியர்களோடு இணைந்து புத்தகங்களைப் படித்து, வழிபாடு செய்வதற்காகவே வந்துள்ளனர். தப்ளிக் குழுவினர் முதலில் ஈரோடு சுல்தான்பேட்டை மசூதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து அடுத்த நாள் கொல்லம்பாளையம் மசூதிக்கு வந்துள்ளனர்,” என்று முடித்தார்[4].

Erode Sultanpettai,mosque

ஈரோட்டுக்கு வந்தது 11-03-2020 அல்லது 14-03-2020?: “மார்ச் 11-ம் தேதி ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் குறித்து மார்ச் 16-ம் தேதிதான் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவந்துள்ளது,” என்கிறது தமிழ்.இந்து[5]. “மார்ச் 14 ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குத் தனியார் வாகனத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த குழுவினர் வந்துள்ளனர்,” என்கிறது தமிழ்.பிபிசி[6]. அப்படியென்றால், தனித்தனியாக, வெவ்வேறு நாட்களில் புறப்பட்டு வந்தனரா என்று தெரியவில்லை. அந்த நிலையில்தான், கரோனா தொற்று குறித்த தகவலால் இருவர் [வந்த எழுவரில்] தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களோடு பழகிய 120 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், என்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்தனரா அல்லது ரயில் மூலம் வந்தனரா என்பது குறித்த எந்த விவரமும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இவர்கள் மூலம் எவ்வளவு பேருக்கு கரோனா தொற்று பரவியிருக்குமோ என்று மக்கள அச்சமடைந்துள்ளனர்.

Erode Junction Railway station

இருவருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டது: மார்ச் 14 ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குத் தனியார் வாகனத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த குழுவினர் வந்துள்ளனர்[7]. மார்ச் 15 ஆம் தேதி, குழுவைச் சேர்ந்த இருவர் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் தாய்லாந்திற்கு செல்ல கோவை விமான நிலையம் வந்துள்ளனர்[8]. அப்போது, இருவரையும் பரிசோதனை செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் டான் ரசாக் (வயது 49) என்பவருக்கு சளி மற்றும் இருமல் இருப்பதைக் கண்டறிந்து கொரோனா பரிசோதனைக்காக இருவரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[9]. அங்கு அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த டான் ரசாக் 17 ஆம் தேதி காலை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்[10]. இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீன் அசோகன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கையில், “அவரது இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்டது. அவருக்கு தீவிர சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறு இருந்துள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவித்தார். இந்நிலையில், டான் ரசாக்கின் குழுவிலிருந்த மற்றவர்களுக்கும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது[11]. அதில் இருவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது[12].

© வேதபிரகாஷ்

25-03-2020

The Five cae to Erode IE

[1] தமிழ்.இந்து, தலைமை காஜிக்கு தெரியாமல் ஈரோடு வருகை: கரோனா வைரஸ் தொற்றுடன் தாய்லாந்துதப்ளிக்குழுவினர், எஸ்.கோவிந்தராஜ், Published : 23 Mar 2020 08:14 am; Updated : 23 Mar 2020 08:14 am; covid-19-virus

[2] பாலிமர் நியூஸ், ஈரோட்டிற்கு கொரோனாவை கூட்டி வந்த 5 பேர், மார்ச்.24.2020. 07.05:32 AM. https://www.polimernews.com/dnews/104765/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81–%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D..!

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/545675-covid-19-virus-1.html

[4] டைம்ஸ்.தமிழ், ஈரோட்டில் கொரோனா நுழைந்தது எப்படி?..தாய்லாந்து நாட்டினர்தான் காரணமா, மார்ச். 23, 2020.

https://www.timestamilnews.com/home/details/how-corono-virus-enters-erode-19832

[5] தமிழ்.இந்து, தலைமை காஜிக்கு தெரியாமல் ஈரோடு வருகை: கரோனா வைரஸ் தொற்றுடன் தாய்லாந்துதப்ளிக்குழுவினர், எஸ்.கோவிந்தராஜ், Published : 23 Mar 2020 08:14 am; Updated : 23 Mar 2020 08:14 am; covid-19-virus

[6] பிபிசி.தமிழ், கொரோனா: தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்த இருவருக்கு வைரஸ் தொற்றுவிரிவான தகவல்கள், 22 மார்ச் 2020

[7] பிபிசி.தமிழ், கொரோனா: தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்த இருவருக்கு வைரஸ் தொற்றுவிரிவான தகவல்கள், 22 மார்ச் 2020

[8] https://www.bbc.com/tamil/india-51995532

[9] தினகரன், தாய்லாந்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஈரோட்டில் 20 பேரை கண்காணிக்க முடிவு, 2020-03-23@ 19:06:27

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=573912

[11] தமிழ்.ஒன்.இந்தியா, தாய்லாந்து பயணிகள் சென்று வந்த அத்தனை தெருவிலும் போக்குவரத்துக்கு தடை, கடை மூடல்.. பரபரப்பில் ஈரோடு , By Veerakumar | Published: Monday, March 23, 2020, 14:00 [IST]

[12] https://tamil.oneindia.com/news/erode/9-streets-locked-due-to-coronavirus-scare-in-erode-380599.html

“தலித்-முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவனின் தாமதமான விஜயம் (3)

மே 13, 2018

தலித்முஸ்லிம்மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவனின் தாமதமான விஜயம் (3)

L. Murugan visited and enquired 07-05-2018-5 DD

07-05-2018 அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அறிவிக்கப் பட்டது[1]: தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர், எல்.முருகன், 07-05-2018, திங்கள்கிழமை விசாரணை நடத்தினார், அன்றே அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அறிவித்தார்[2]. ஆனால், ஊடகங்களை இச்செய்தியை அமுக்கி வாசித்தன. ஆங்கில ஊடகங்கள் அடுத்த நாள் செய்தியாக வெளியிட்டன. அதாவது, அரசு தரப்பில், உடனடியாக நடவடிக்கை எடுத்தாகி விட்டது.  மேலும், இவர் பிஜேபியின் சார்பில் நியமிக்கப் பட்டவர் என்று தெரிகிறது. இருப்பினும், இதெல்லாம் சகஜமான விசயம் தான், ஏனெனில், அந்தந்த அரசு பதவிக்கு வரும்போது, இத்தகைய “நியமனங்கள்” எல்லாம் எல்லாதுறைகளிலும், பரிந்துரை பேரில் நடந்து வருகிறது. 70 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் மற்றும் மாநிலங்களில் திராவிடக் கட்சிகள் அந்த பலனை அனுபவித்துள்ளன. ஆனால், திருமாவளவன், அந்த நேரத்தில் தில்லிக்கு, அரசியல் செய்ய, கூட்டணி பேரம் பேச சென்று விட்டதால், இங்கு வரத் தயங்கினார். அதே நேரத்தில், கிருஷ்ணசாமி வேறு, தங்களது ஜாதியினருக்கு “பட்டியிலின” அந்தஸ்து தேவையில்லை என்று அறிவித்தார்[3]. புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு, விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் 06-05-2018 அன்று, கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், எஸ்.சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் வெளியேற வேண்டும் எனப் பிரகடனம் வெளியிடப்பட்டது[4]. இதெல்லாம் திருமா-துலுக்கக் கூட்டை அதிர வைத்தது. ஆக, அவர்கள், போலீஸாரிடம் புகார் கொடுப்போம் என்று கிளம்பினர்.

Dalit, Muslim dialogue, Bomminaickenpattu

09-05-2018 அன்று போலீஸாரிடம் புகார் கொடுக்க வந்த அரசியல் கட்சியினர்: தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில், கடந்த 24-04-2018 மற்றும் 05-05-2018 தேதிகளில் “தலித்-துலுக்கர்” இடையே மோதல் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவம் நடந்தது. திருமாவளவனே, “துலுக்கப்பட்டி” என்ற உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டதால், இனி, “துலுக்கர்” என்று கூட உபயோகிக்கலாம். பட்டியல் இனத்தவர், எஸ்சி, தலித் வசிக்கும் இடம் காலனி என்றால், துலுக்கர் வசிக்கும் இடம் துலுக்கப்பட்டி ஆகிறது. ஆனால், ஊடகங்கள், “இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்”, என்று தான் எழுதுகின்றன. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன், தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட செயலாளர் நாகரத்தினம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அகமது முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 09-05-2018 அன்று வந்தனர்[5]. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் அவர்கள், பொம்மிநாயக்கன்பட்டி பிரச்சினை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

Dalit, Muslim clash-Bomminaickenpattu-Hindu Makkal Katchi

மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய கோரிக்கை: அந்த மனுவில், ‘பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் போலீஸ் துறைக்கு பயந்து இருதரப்பிலும் ஆண்கள் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இரு பகுதியிலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டும் இருக்கிறார்கள். இக்கிராமத்தில் இயல்பு நிலைக்கு திரும்ப இருதரப்பு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றனர். கலெக்டரிடம் மொத்தமாக சென்று மனு அளிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மூன்று பேர் மட்டும் மனு அளிக்க அலுவலகத்துக்குள் செல்லுமாறும் அங்கிருந்த அலுவலர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால், மனு அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Dalit, Muslim dialogue, Bomminaickenpattu- Muslim version.2

இந்து மக்கள் கட்சி, இந்து எழுச்சி முன்னணி சார்பில் மனுக்கள்: இதேபோல், இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு மனு அளித்தனர். அப்போது இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அந்த மனுவில், ‘பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் இறந்த பெண்ணின் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தி, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அமைதியாக வாழ வழிவகை செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக, கலவரத்தில் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற கலைச்செல்வனை, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்[6]. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “இருபிரிவினருக்கிடையே நடந்த மோதலில் காயமடைந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த கடைகள், வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை நேரில் சந்தித்து திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் உரிய நேரத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார். அவரது கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை இந்து மக்கள் கட்சி ஆதரிக் கும்”, என்றார்[7].

Thiruma-at Bomminaicketpatti- looking at adamantly 12-05-2018

12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம்: 01-05-2018 அன்று ராகுல், யச்சூரி முதலியவர்களை சந்தித்தப் பிறகு, கூட்டணி பற்றி பேசுவதற்கே நேரமில்லாத திருமாவுக்கு, பொம்மிநாயக்கன்பட்டியில், எஸ்சிக்கள் கொதித்து போயிருக்கிறார்கள் என்பதனை அறிந்தார். எப்படியாவது, அவர்களை சென்று பார்க்க வேண்டி முக்கியமான செயலர்கள் மற்றும் தொண்டர்கள் அறிவித்தனர். ஆனால், முஸ்லிம் தரப்பில் அவரைத் தடுக்க பார்த்தனர். இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 12-05-2018 அன்று காலை 10.15 மணி அளவில், பொம்மிநாயக்கன்பட்டி சென்றார். அவருடன் ஏராளமான நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் இந்திராகாலனிக்கு சென்றனர். பாதிக்கப்பட்ட தலித் மற்றும் இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்தார். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் நடந்த கலவரத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், ஆறுதலும் கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் சிலர், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருமாவளவனுடன் வந்த தொண்டர்கள், அந்த பெண்களை சமதானப்படுத்தினர். இங்கு திருமா சேரில் உட்கார்ந்திருக்கிறார், இருக்கமான முகத்துடன் கையைக் காட்டி பேசுகிறார். அவர்கள் எல்லோரும், தனது தொண்டர்கள் என்ற மனப்பாங்கில் நடந்து கொண்டது தெர்கிறது.

Thiruma meets Muslims-at Bomminaicketpatti-with skull cap 12-05-2018

மசூதிக்கு சென்று குல்லா போட்டு சந்தித்த திருமாவளவன்: பின்னர் அங்கிருந்து பகல் 12.45 மணி அளவில் புறப்பட்ட திருமாவளவன் பள்ளிவாசலுக்கு சென்றார். அங்கு அவரை ஜமாத்தார்கள் வரவேற்றனர். “துலுக்க குல்லா” போட்டு அவர் பேசியது விசித்திரமாக இருந்தது. “இந்துக்களிடம்” பேசும்போது, அத்தகைய சின்னங்களை தரித்துக் கொள்ளாத நபர், துலுக்கரிடம் செல்லும் போது குல்லா போடுவது, செக்யூலரிஸத்தை ஏமாற்றுகிறது. மேலும் சுமார் 4ஒ நிமிடங்கள் முஸ்லிம்கள் சூழ மசூதியில் தரையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு முஸ்லிம் தலைவர் சொல்லியதை சாகவாசமாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்ததை ஒரு வீடியோ எடுத்துக் காட்டுகிறது[8]. இடது பக்கம் சாய்ந்து உட்காருவது, தண்ணீர் குடிப்பது போன்றவற்றைக் கவனிக்கலாம். முஸ்லிம் “இந்துக்கள்”, மீது அளந்த குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு, இறுதியில், திருமா “அந்த பக்கம் நாலுன்னா, இந்த பக்கம் ரெண்டுன்னு பேசித்தான் இருப்பாக்க…….நாம் தான் சுமுகமாக இருக்கணும்,” என்ற ரீதியில் பேசும் போது, அவ்வீடியோ முடிந்து விடுகிறது. பின்னர், அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார். அதேபோல பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். சுமூக முடிவு எடுக்க அறிவுறுத்தல் இரு தரப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்த பின்னர் சம்பவம் தொடர்பாக அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக நம்பிக்கை அளித்தார். மேலும் இரு தரப்பினரும் தங்களின் உள்ளார்ந்த பிரச்சினைகளை நயமாக பேசி தங்களுக்குள் சுமூக முடிவுகளை எடுத்து கொள்ளுமாறும் திருமாவளவன் அறிவுறுத்தினார்[9].

© வேதபிரகாஷ்

13-05-2018

Tiruma meets affected Muslims-at Bomminaicketpatti 12-05-2018

[1] Business Standard, Theni clashes: Compensation for Dalit victims announced, ANI | Theni (Tamil Nadu) [India], Last Updated at May 10, 2018 00:45 IST.

[2] In the aftermath of the recent clashes between Dalits and Muslims in Tamil Nadu’s Theni district, the National Scheduled Cast Commission (NSCC) has announced a compensation for the damages caused to Dalit houses by police while conducting searches and security drills in the area.

http://www.business-standard.com/article/news-ani/theni-clashes-compensation-for-dalit-victims-announced-118051000027_1.html

[3] விகடன், எனக்கும் பி.ஜே.பிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாதுமாநில மாநாட்டில் கிருஷ்ணசாமி பேச்சு!, அருண் சின்னதுரை அருண் சின்னதுரை ஆர்.எம்.முத்துராஜ், Posted Date : 05:30 (07/05/2018) Last updated : 07:30 (07/05/2018).

[4] https://www.vikatan.com/news/tamilnadu/124297-krishna-samy-says-he-has-no-link-with-bjp.html

[5] தினத்தந்தி, கலவரம் நடந்த பொம்மிநாயக்கன்பட்டியில் கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மே 10, 2018, 04:00 AM.

[6] https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/10002941/In-pomminayakkanpatti-Riots-The-peace-talks-should.vpf

[7] இந்த உதிரிகட்சியும் அரசியல் நோக்கில் வந்துள்ளது என்ரு தெரிகிறது. ஏனெனில், ரஜினி அரசியலை இங்கு சேர்த்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை.

[8] https://www.youtube.com/watch?v=Ujt3-PordME

[9] இவ்வீடியோவில் விவரங்களை பார்க்கலாம் – https://www.youtube.com/watch?v=CNt8Rq9My2Y

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

talaq-case-nikkah-namah-divorce

காஜி வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது[1]: மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017

முஸ்லீம் லீக் வலியுறுத்துவது[2]: இத்தகைய குழப்பங்கள் அவ்வப்போது எழும் என்பதால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கீழ்க்கண்டவற்றை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

  1. முதலாவதாக, 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  2. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
  3. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இப்படிப்பட்ட தீர்மானங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடுகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காஜிகளுடைய அந்தஸ்தையும், கண்ணியத்தையும் நிலைபெறச் செய்வதற்கு இத்தகைய அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவது சமுதாயத்தின் இன்றைய கட்டாயக் கடமையாகும். இதனை விடுத்து வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் ஷரீஅத் சட்டப் பிரச்சனையிலும், குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிற குழப்பவாதிகள் தங்களை திருத்திக் கொண்டு காஜிகளுடைய அதிகார வரம்பை கூட்டுவதற்கும், அதன் மூலம் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தை நிலை நாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017-2

ஷபானு பிரச்சினை போன்று இதைத் திருப்ப முயற்சிக்கும் முஸ்லிம் இயக்கங்கள்: முஸ்லீம் லீக்கின் கருத்துகளை அலசவேண்டியுள்ளது:

  1. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.
  2. அதே காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது, அரசால் நியமிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.
  3. மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
  4. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை.
  5. அதாவது தீர்ப்புகளை முஸ்லிம்கள் ஏற்கலாம், ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இங்குதான், அடிப்படைவாத-தீவிரவாதிகளின் கட்டுப்பாடு வருகிறது. அவர்களது கருத்து, காஜிக்களின் கருத்துகளை மிஞ்சும் போது, அவர்களது பத்வா எடுபடுகின்றது.talaq-certificates-issued-by-cheif-kazi-no-legal-sanction-toi-high-court-12-01-2017
  6. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
  7. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது.
  8. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
  9. 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  10. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

ஏற்கெனவே, இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், முஸ்லிம் பெண்ணிய இயக்கங்கள் வழக்குத் தொடுத்துள்ளதாலும், இப்பிரச்சினையை பெரிதாக்க, முஸ்லிம்கள் விரும்பவில்லை, விளம்பரம் கிடைப்பதையும் விரும்பவில்லை.

© வேதபிரகாஷ்

18-01-2017

triple-talaq-certificate-issued-by-chief-kazi-illegal-the-hindu-12-01-2017

[1] http://www.muslimleaguetn.com/news.asp?id=3429

[2] கே.எம்.கே, , காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, மணிச்சுடர் Friday, January 12, 2007.

துலாகரில் டிசம்பர் 13-15 தேதிகளில் நடந்த கலவரங்கள் – முஸ்லிம்கள் “மீலாது நபி” ஊர்வலம் நடத்தி இந்துக்களின் வீடுகளை சூரையாடி எரித்துள்ளனர்! – துலாகர் கலவரம் (1)

ஜனவரி 3, 2017

துலாகரில் டிசம்பர் 13-15 தேதிகளில் நடந்த கலவரங்கள் முஸ்லிம்கள் “மீலாது நபி” ஊர்வலம் நடத்தி இந்துக்களின் வீடுகளை சூரையாடி எரித்துள்ளனர்! துலாகர் கலவரம் (1)

dhulagarh-mamtas-suppression-of-facts

கலவரங்கள் நடந்த விவரங்களை மறைத்த மம்தா அரசு: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள துலாகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு – டிசம்பர் 13-15 தேதிகளில் – மத பேரணியில் இரு தரப்பினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. ஏற்பட்ட கலவரங்களில், இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், ஊடகங்களின் மீதான அடக்குமுறைகளினால், “சென்சார் / தடை” விதிக்கப்பட்டது போல நிலையினால், செய்திகள் அதிகமாக வெளிவராமல் மறைக்கப்பட்டன. ஆங்கில ஊடகங்களுக்கே இந்த கதி என்றால், தமிழ் ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒன்றுமே நடக்கவில்லை என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள். போதாகுறைக்கு 12-12-2016 அன்று வர்தா புயலினால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் தங்களது சொந்த வீடுகள், பொருட்கள், பணம் எல்லாம் இழந்து, அகதிகள் போல தெருக்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இக்கலவரங்கள் பற்றிய செய்திகள் கூட கொஞ்சமாக கடந்த இருநாட்களாக டிசம்பர் 31 2016 மற்றும் ஜனவரி 1, 2017 – வந்து கொண்டிருக்கின்றன.

18_Monday_2016_Police acts against the members of Tehreek-e-Hurriyat who were taking out a protest march against the killing of four persons in Handwara

முஸ்லிம் மக்கட்தொகை பெருகினாலே மதகலவரம் உருவாகும் என்ற நிலை: துலாகர் ஹௌரா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற் மற்றும் வியாபார ஸ்தலமாகும். கொல்கொத்தாவிலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது. சுமார் 45% முஸ்லிம்கள் உள்ளாதால், 2013லிருந்து, மத-கலவரங்கள் அதிகமாகி வருகின்றன. 2013ல் மட்டும் 106 கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. பிறகு, 15-20 என்று குறைந்துள்ளன[1], ஆனால், கலவரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மம்தா ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, ஏழ்மை மற்றும் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி வைத்துக் கொண்டு தனது பலத்தை ஸ்திரமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார். பங்களாதேச முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் மேற்கு வங்காள எல்லைகள் மூலம் நுழைந்து, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பரவி வருவது தெரிந்த விசயமே. முன்னர் அசாமில் இதுவே ஒரு பிரச்சினையாகக் கொண்டு அசாம் கணபரிஷத் 1980களில் போராடி ஆட்சிக்கு வந்தது. ஆனால், பிறகு அடங்கி விட்டது. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் உள்-நுழைந்த அந்நிய முஸ்லிம்களுக்கு, ரேசன் கார்ட், ஓட்டர் கார்ட் என்று கொடுத்து ஊக்குவித்து, ஓட்டுவங்கியை வளர்த்தனர். இப்பொழுது, ஆதார் கார்டுடன் வாழ்ந்து வருகின்றனர், தொடர்ந்து ஊக்குவிப்பது திரிணமூல் காங்கிரஸ். இதனால், வளர்க்கப்பட்ட மூஸ்லிம்கள் இந்துக்களுக்குத் தொல்லைக் கொடுத்து வருகின்றனர்.

dulagarh-attacked-on-14-12-2016-rioters-in-action

மீலாது நபிக்கு அடுத்த நாள் ஊர்வலம் நடத்தி கலவரத்தை உண்டாக்கியது: டிசம்பர் 12, 2016 மீலாது நபி நிமித்தம் மேற்கு வங்க அரசு விடுமுறை அளித்தது. ஆனால், டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் “ஈத்-இ-மிலத்-உன்-நபி” / மீலாது நபி ஊர்வலம் நடத்தியதில், முஸ்லிம் கும்பல், அப்பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டு இந்துக்களின் விடுகள் மற்றும் கடைகள் முதலியவை சூரையாடப் பட்டன. பொருட்கள் கொள்ளையிடப்பட்டதோடு தீயிட்டு கொளுத்தப் பட்டன.  இந்துக்கள் தங்களது பூஜை நேரத்தில், வேண்டுமென்றே, ஊர்வலம் நடத்தியதோடு, திட்டமிட்டு, ஆயுதங்களுடன் வந்து தாக்கி அவ்வாறு செய்துள்ளார்கள். முதலில் சில செய்திகள் வெளிவந்தாலும், வங்காள அரசின் அடக்குமுறைகளால், செய்திகள் வெளிவராமல் தடுக்கப்பட்டன. ஆனால், சமூக வலைத்தளங்களில், கலவரச் செய்திகள் பரவின. இருப்பினும், அரசு தொடர்ந்து கலவரம் நடந்ததை மறுத்து வந்துள்ளது. வி.பி. சிங் தான், மீலாது நபிக்கு அரசு விடுமுறை முதன்முதலில் அறிவித்தார் என்று, செக்யூலரிஸவாதிகள் பெருமையாகக் கூறுவர். இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத விடுமுறையை, இந்திய அரசியல்வாதிகள் அறிவித்துள்ளனர்.

dhulagarh_victims_are_terrified_and_worried_about_their_future

மார்கசிரிஷ பூர்ணிமாஅன்று மீலாது நபி ஊர்வலம் ஏன்?: டிசம்பர் 12ம் தேதி 2016 அரசு விடுமுறை தினமாக அறிவித்தது. அதாவது முஸ்லிம்களுக்கு அன்றுதான் கொண்டாட்டம், ஆனால், அடுத்த நாள் டிசம்பர் 13 அன்று முகமதியர் மீலாது நபி என்று ஊர்வலம் என்று தெருக்களில் வலம் வந்தனர். அதாவது 12ம் தேதி ஊர்வலம் போகாமல், அடுத்த நாள் போனது எப்படி என்று தெரியவில்லை. உள்ளூர் வழக்கம் தெரிந்த நிலையில், போலீஸார் எப்படி அனுமதி கொடுத்தனர் என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. சினிமா பாடல்களை சப்தமாக ஒலித்துக் கொண்டு தெருக்களில் சென்றனர். அன்று “மார்கசிரிஷ பூர்ணிமா” [Margashirsha Purnima] என்ற மங்களகரமான நாளை அன்று இந்துக்கள் கொண்டாடினர்[2]. 15ம் தேதியிலிருந்து “தனுர் மாதம்” தொடங்குகிறது என்பதால், தங்களது நோன்பு, விரதம் முதலியவற்றைத் தொடங்குவார்கள். பாரம்பரிய வங்காள மக்கள், இத்தகைய விழாக்கள், சம்பரதாயங்கள் முதலியவற்றை விடாமல் கொண்டாடி வருகின்றனர். அதனால், தங்களது சடங்குகளுக்கு தொந்தரவாக இருப்பதால், சப்தத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை.

dulagarh-attacked-on-14-12-2016-rioters-and-police

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூக்குரலிட்டு இந்துக்கள் வீடுகள்-கடைகள் தாக்கப்பட்டது: “செக்யூலரிஸம்”, சமதர்மம் மற்றும் உரிமைகள் பேசப்படும் இந்தியாவில் முஸ்லிம்கள் அதை மதிக்காமல் கலவரத்தை ஏற்படுத்த தீர்மானமாக இருந்தனர் போலும். இதை சாக்காக வைத்துக் கொண்டு, ஊர்வலத்தினர், இந்துக்களோடு வாய்சண்டை இழுத்து, கேலிபேசி, கிண்டலடித்து, திட்டியுள்ளனர். வாக்குவாதம் கைசண்டையாகி, முகமதியர் இந்துக்களைத் தாக்கியுள்ளனர். கலவரமாகியபோது, நாட்டு வெடிகுண்டுகளை வீடுகள் மற்ரும் கடைகள் மீது வீசினர். டிரம்களில் கெரோஸின் மற்றும் பெட்ரோல் முதலியவற்றையும் எடுத்து வந்து தீயிட்டுக் கொளுத்தினர்[3]. இக்கலவரம், டிசம்பர் 14ம் தேதியும் தொடர்ந்தது.  இதெல்லாம் திட்டமிட்டபடி நடந்த தாக்குதல் என்று தெரிகிறது. தாக்கியவர்களில் சிலர், “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்றெல்லாம் கத்தியதாக கூறினார்கள்[4]. முஸ்லிம்களின் இந்த மனோபாங்கு தான் விசித்திரமாக இருக்கிறது. 1947ல் தனிநாடு கொடுத்தப் பிறகு, இந்தியாவில் பிறந்து, வளர்ந்து வருபவர்கள் எப்படி, இவ்வாறு கத்த முடியும்? இக்கால முஸ்லிம்களுக்கு அதுகூட தெரியாதா அல்லது தெரியாமல் வளர்க்கப்பட்டுள்ளனரா? மேலும் அவர்களை கவனித்த, பாதிக்கப்பட்ட இந்துக்கள், “அவர்கள்” அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்றும் தெரிவித்தனர். அதாவது, கலவரத்திற்கு, வெளியிலிருந்து கூட்டி வரப்பட்டது தெரிகிறது.

dulagarh-attacked-on-14-12-2016-victim-explains-times-now

வீடுகளை சூரையாடி, தீயிட்டு கொளுத்த முயன்ற போது, செய்யாதே என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும், கொளுத்திவிட்டுச் சென்றது[5]: நாட்டு வெடிகுண்டுகள் போட்டு தாகியதை பாதிக்கப்பட்டவர் “டைம்ஸ் நௌ” டிவி பேட்டியில் கூறினார். மேற்கு வங்காள கலவரங்களில் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தப் படுவது, ஒரு தொடர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. 10-15 முறை வெடிக்க வைத்ததாக கூறினார். அவர்கள், வீடுகளை சூரையாடியப் பிறகு, தீயிட்டு கொளுத்த முயன்ற போது, அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும், விடாமல், பெட்ரோல்-கிரோஸின் ஊற்றி கொளுத்தி விட்டு சென்றனர். அதனால், இந்துக்களது வீட்டுப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. வந்தவர்கள் “புதியவர்களாக” தென்பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார். அருகில் இருந்த கார்கள்-லாரிகள் முதலியவற்றையும் விட்டு வைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இந்துக்கள், தாங்கள் மீளமுடியாத அளவுக்கு அழித்துவிட்டு சென்றுள்ளனர் என்று புலம்பினர்.

© வேதபிரகாஷ்

03-01-2017

Kerala, Kashmir becoming hub of ISIS

[1] Merchant, Minhaz (28 December 2016). “How Mamata tore the secular fabric of Bengal into shreds”Daily Mail. Retrieved 31 December 2016

[2] Daily Mail-UK, How Mamata tore the secular fabric of Bengal into shreds, by Minhaz Merchant, Published: 23:58 GMT, 28 December 2016 | Updated: 10:50 GMT, 31 December 2016

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4071842/How-Mamata-tore-secular-fabric-Bengal-shreds.html

[4] India Today, Rather than protecting, Bengal polica gave two minutes to flee our own homes: Dhulagarh riot victims tell India Today, Indrajit Kundu | Posted by Ashna Kumar, December 28, 2016 | UPDATED 13:25 IST.

[5] http://www.timesnow.tv/india/video/times-now-report-from-dhulagarh-the-story-india-isnt-reporting/53364

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (1)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (1)

டெக்கான் குரோனிகள் - அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

டெக்கான் குரோனிகள் – அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

ஜூலை.19 அன்று மார்டின் பிரேம்ராஜ் [C. Martin Premraj] கைது செய்யப்படவேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டது: ஜூன்.19 அன்று மார்டின் பிரேம்ராஜ் [C. Martin Premraj] கைது செய்யப்படவேண்டும் என்று ஆம்பூர் முஸ்லிம்கள் பிடிவாதமாக இருந்தனர், புகாரும் கொடுத்தனர். அவர் கைது செய்யப்பட்டதில் தாமதம் ஏற்பட்டதால் தான் கலவரம் ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின[1]. ஷமீல் அகமது மரணம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் காணாமல் இருந்து, பிறகு கைது செய்யப்பட்டவுடன், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்த பவித்ரா காணாமல் போனது தொடர்பான புகாரின்பேரில் ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமத்திடம் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஜூன் 15 முதல் 18 வரை போலீஸ் கஸ்டடியில் ஷமீல் அகமத் இருந்தார்[2]. பிறகு அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஆம்பூர் கலவரம் - மார்டின் இன்ஸ்பெக்டர்

ஆம்பூர் கலவரம் – மார்டின் இன்ஸ்பெக்டர்

ஷமீல்அகமது இறப்பு, தௌவீத் ஜமாத் ஆர்பாட்டம், மார்ட்டின் பிரேம்ராஜ் மருத்துவவிடுப்பு: ஜூன்.19 அன்று ஆம்பூரில் உள்ள பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார். ஜூன்.23ம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஜூன்.26ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அப்போது போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த ஷமீல்அகமது, சிகிச்சை பலனின்றி ஜூன் 26ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் இறந்தார்[3].  தௌவீத் ஜமாத் [Thoweed Jamath] ஆட்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பு கடந்த ஜூன் 27ம் தேதி ஆர்பாட்டம் செய்தனர் இதனால் ஆம்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டது[4]. அன்றிலிருந்தே, மார்டின் உடல்நலம் சரியில்லை என்று மருத்துவ-விடுப்பில் சென்று விட்டார்[5]. இதையடுத்து டிஜிபி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு வழக்கில் இவரது பெயர் சேர்க்கப்பட்டு[6] சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது[7]. ஒருபுறம் போலீஸார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். பெண் போலீஸார் தாங்கள் எப்படி துரத்தப் பட்டனர், மானபங்கத்திற்கு உள்ளாகினர் என்றெல்லாம் கதறியபடி தங்களது அனுபவங்களை சொல்லி வந்தனர். ஆனால், மறுபுறம் இந்நடவடிக்கையும் தொடர்ந்தது.

இறந்த ஷமீல் அகமது, ஆம்பூர்

இறந்த ஷமீல் அகமது, ஆம்பூர்

ஜூன்.19 முதல் 26 வரை சிகிச்சை அளித்தது: ஷமீல் அகமது எட்டு நாட்களில், மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைக்குட்படுத்தப் பட்டிருக்கிறார்.

சிகிச்சை தேதிகள் மருத்துவமனை, இடம் சிகிச்சை பெற்ற நாட்கள்
ஜூன்.19 முதல் 23. 2015 வரை ஆம்பூரில் உள்ள பொது மருத்துவமனை ஐந்து நாள் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஜூன்.23  முதல் 25. 2015 வரை அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மருத்துவமனை இரண்டு / மூன்று நாள் நாள் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஜூன்.26. 2015 சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை அன்று மாலை உயிரிழந்தார்.

அதனால், அங்கு இவருக்கு என்ன சிக்கிச்சை அளிக்கப்பட்டது, எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான, ஆவணங்கள் இருக்கும். எதனால், இறப்பு ஏற்பட்டது என்பதையும் மருத்துவரீதியில் இவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். போலீஸ் விச்சரணையின் போது மாமனார் என்.கே. முகமது கௌஸ் [N. K. Mohammed Ghouse, father-in-law of Shamim Ahmad] தான் ஷமீம் அகமதுவைப் பார்க்க தினமும் அங்கு சென்றுள்ளதாகவும், மார்டின் ஒரு விருந்தினர் மாளிகைக்கு, ஷமீம் அகமதுவை எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.  ஆனால் ஒரு பேட்டியில், ஜவஹருல்லா, மார்டின் தன்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தினார் என்கிறார்[8].

ஆம்பூர் கலவரம் - மார்டின் இன்ஸ்பெக்டர் கைது - மாலைமலர்

ஆம்பூர் கலவரம் – மார்டின் இன்ஸ்பெக்டர் கைது – மாலைமலர்

ஜூலை 31ம் தேதி மான் வேட்டையாடியதாக மார்டின் பிரேம்ராஜ் கைது: ஷமீல் அகமது இறந்த விசயம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது [the summons issued by the CB CID in the case under section 176 (inquiry by a magistrate into the cause of death)[9]]. ஆனால் அவர் ஆஜராகவில்லை, நண்பர்களுடன் தலைமறைவாக இருந்தார்[10]. மருத்துவவிடுப்பில் சென்றார் என்று முன்னரே குறிப்பிடப்பட்டது. போலீஸார் அவரைத் தேடி வந்தனர்[11]. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  அழகிய பாண்டியபுரம் வனச்சரக காடுகளில் மிளா / மான் வேட்டையாடியதாக [under Section 4 of the Wildlife Act ] மார்ட்டின் பிரேம்ராஜ் (50), பணி நீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டெபில் சி. கிறிஸ்டோபர்(51), டி. ஐயப்பன் (46), என். கோபாலகிருஷ்ணன் (22), முதலியோர்[12] வனத்துறையினர் உரிய வனச்சட்டதின் கீழ் ஜூலை 31ம் தேதி கைது செய்யப்பட்டனர்[13]. 40 கி இறைச்சி, மான் தோல், கொம்புகள் முதலியவற்றுடன் இரண்டு வண்டிகள், துப்பாக்கி முதலியன கைப்பற்றப்பட்டன[14]. பிறகு நாகர்கோவில் / பாளையகோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்[15]. அதில் மார்டின் பிரேம்ராஜ் தேடப்பட்டு வந்த இன்ஸ்பெக்டர் ஆவர்[16]. இதைதொடர்ந்து நேற்று காலை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் ஜே.எம்.2 கோர்ட் மாஜிஸ்திரேட் ரேவதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்[17]. அவருக்கு 5 நாள் காவல் அனுமதிக்கும்படி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 3 நாள் அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்[18]. இதையடுத்து மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[19].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Delay-in-Booking-Inspector-led-to-Ambur-Clash/2015/07/08/article2908517.ece

[2] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Kept-Youth-in-illegal-Custody-for-4-Days/2015/06/28/article2890411.ece

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1311782

[4]  தினமலர், ஆம்பூர் கலவர வழக்கு விவகாரம் இன்ஸ்பெக்டரிடம் 3 நாள் விசாரணை, ஆகஸ்ட்.8, 2015.

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-Launches-Manhunt-for-Inspector-in-Ambur-Case/2015/07/14/article2919051.ece

[6] http://www.deccanchronicle.com/150708/nation-crime/article/suspended-inspector-named-ambur-custody-death-absconding

[7] தினகரன், ஆம்பூர் ஷமீல் அகமது மரணம் குறித்து சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை, ஆகஸ்ட்.8, 2015.

[8]  ராஜ்-டிவி, கோப்பியம் நிகழ்ச்சி, https://www.youtube.com/watch?v=7RPBacw0F5Y

[9] http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbcid-takes-custody-of-pallikonda-inspector/article7505510.ece

[10]  தி இந்து, ஆம்பூர் கலவரத்தில் சஸ்பெண்ட் ஆன காவல் ஆய்வாளரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: வேலூர் நீதிமன்றம் உத்தரவு, Published: August 6, 2015 08:02 ISTUpdated: August 6, 2015 08:04 IST.

[11] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-Launches-Manhunt-for-Inspector-in-Ambur-Case/2015/07/14/article2919051.ece

[12]  The Hindu, Inspector suspended over Ambur clash held for hunting deer, Updated: August 1, 2015 05:53 IST.

[13] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-to-Grill-Premraj-for-3-days/2015/08/06/article2960000.ece

[14] http://www.thehindu.com/news/national/tamil-nadu/inspector-suspended-over-ambur-clash-held-for-hunting-deer/article7487594.ece

[15] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/08/05184106/Ambur-murder-case-of-a-young-man3-days-inspectorCipiciaiti.vpf

[16] During the questioning that followed it was found that they were C Christopher (51) of Kottricode, T Iyyappan (46) of Puthukadai, N Gopala Krishnan (22) of Puthukadai all from Kanyakumari district and C Martin Prem Raj (50) of Thirukoviloor in Villupuram district, said forest officials. All the four were booked under section 9 of Wild Life Protection Act on charges of trespassing into a reserve forest and poaching a sambar deer. They were arrested and were produced at the forest court, officials added. Of the arrested four Martin Prem Raj was an inspector of police who was on the look out list of Vellore police in connection with the Ambur riots in Vellore district recently.

http://m.newindianexpress.com/tamil-nadu/511278

[17] தினத்தந்தி, ஆம்பூர் வாலிபர் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டரை 3 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி..டி. போலீசார் விசாரணை வேலூர் கோர்ட்டு அனுமதி, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 06,2015, 2:30 AM IST; பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 05,2015, 6:41 PM IST.

[18]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7506466.ece

[19] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=160119