Archive for the ‘வாஹாபி இயக்கம்’ category

வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல்சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளன?

செப்ரெம்பர் 17, 2022

வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளன?

பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் தில்லி மாடலா, திராவிட மாடலா?: வக்பு விவகாரங்களில் இந்தியாவில் மாநிலங்களில் பலவிதமான அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. சம்பந்தப் பட்ட முஸ்லிம்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களும் அதில் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்விவகாரங்களில், பெரும்பாலாக, கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்று வருகின்றன. துலுக்கர், மொஹம்மதியர் மற்றும் இன்றைக்கு முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்ளும் அந்நிய-அரேபிய வகையறாக்கள் தாங்கள் குரான், ஷரியத் மற்றும் ஹதீஸ் போன்ற புத்தகங்கள், சட்டநெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம் என்று சொல்லிக் கொண்டாலும், அது நாட்டிற்கு நாடு, பிரிவிக்குப் பிரிவு மாறித்தான் உள்ளது. இவையெல்லாம் அவர்களின், அதாவது, துலுக்கர், மொஹம்மதியர் மற்றும் இன்றைக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், பலவிதமான அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள் என்று வரும் போது, அரசு, ஆட்சி, அதிகாரம், மோசடிகள், ஊழல்கள் முதலியவற்றில், புதிய பரிமாணங்கள் வருகின்றன. அதனால் வக்பு வாரிய மோசடிகள், ஊழல்கள் முதலியவையும் அவ்வாறே உள்ளன. தில்லி மாடல், திராவிட மாடல்………என்றெல்லாம் கூறிக் கொண்டாலும், நடப்பவை இவ்வாறுத் தான் உள்ளன.

2016லிருந்து தில்லி மாடல் வக்பு ஊழல் நடைபெறுகிறதா?: சமீபத்தில் வக்பு வாரிய அடாவடித் தனம், ஹிந்துக்களின், கோவில்களின் நிலம் அபகரிப்பு மற்றும் கோவிலே தமது நிலத்தில் உள்ளது போன்ற விவகாரங்களில் வெளிப்பட்டன. மேலும், துலுக்கரின் உள்-விவகார ஊழல்களும் வெளிவந்தன. அந்நிலையில் தில்லி வக்பு ஊழல் விவகாரமும் சேர்கிறது. பிப்ரவரி 8ஆம் தேதி 020 வக்ஃபு வாரிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ஏஏபி எம்எல்ஏ, வக்ஃபு வாரியத் தலைவர் அமனத்துல்லா கான் ( AAP MLA Amanatullah Khan) ஆகியோரை ஊழல் தடுப்புக்கிளை (Anti-Corruption Branch (ACB)  ஏசிபி) புதன்கிழமை 08-02-2020 அன்று வழக்குப்பதிவு செய்தது[1]. பின்னர், வக்ஃபு வாரிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், ‘ஒழுங்கற்ற ஆள்சேர்ப்பு’ செய்ததாகவும் ஏ.சி.பி. தலைவர் அரவிந்த் தீப் தெரிவித்தார்[2]. இது குறித்து அமனத்துல்லா ​​கானிடம் கேட்டபோது, “நான் முதலில் புகாரை முழுமையாகப் படித்துப் பார்க்கிறேன், அதன் பிறகு அதைப் பற்றி பேசுகிறேன்,” என்றார். கடந்தாண்டு வக்ஃபு வாரியத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டது குறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது[3]. இரண்டு ஆண்டுகளாகப் படித்துக் கொண்டே இருந்தார் போலும். அதற்குள் ஊழல் தடுப்புத் துறைக்குத் தெரிந்து விட்டது போலும்.

மத்திய-மாநில அரசுகளின் மோதல்கள், அரசியல் குழப்பங்கள்: டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது[4]. அங்குச் சமீபத்தில் தான் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடுகளில் ரெய்டு நடத்தி இருந்தனர்[5]. இதுபோன்ற ரெய்டுகள் இப்போதைக்கு அங்கு முடிவதாகத் தெரியவில்லை. இப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் ஊழல் புகார் ஒன்றில் செய்யப்பட்டு உள்ளார்.  பிஜேபி-அல்லாத மேற்கு வங்காளம், பஞ்சாப், தில்லி, கேரளம் முதலிய மாநிலங்கள் – மாநில அரசாளும்  ஆட்சியாளர்கள், ஆளும் மத்திய அரசுடன் எப்பொழுதும் பிரச்சினை செய்து கொண்டு வந்தது தெரிந்த விசயமே. ஆளுநர் விவகாரம் என்று வைத்துக் கொண்டு அவ்வாறு கலாட்டா செய்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், திராவிட மாடல், என்றெல்லாம் கூவிக் கொண்டு, முழுமையாக மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடித்து வருகிறது. இதற்கு, திராவிடத்துவ சித்தாந்திகள் திராவிடியன் ஸ்டாக், ஒன்றிய அரசு, மாநில சுயயாட்சி போன்ற குப்பையில் வீசப் பட்ட சித்தாந்தங்களையும் துடைத்து கையில் எடுத்துள்ளனர்.

விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது என்றால் அதை இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர்?: இஸ்லாமிய மத மக்கள் அவர்களின் சொத்துக்களை வக்பு பத்திரம் மூலம் இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களுக்கு தானமாக கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு கொடுக்கப்படும் சொத்துக்கள், நிலங்களை பராமரிக்க, நிர்வகிக்க பொது மற்றும் தனியார் வக்பு வாரியங்கள் உள்ளன. நம்பிக்கையாளர்கள் அல்லாவுக்கு பயந்து, பய-பக்தியுடன் செயல் படவேண்டும், செயல் பட்டிருக்க வேண்டும். ஆனால், இவற்றில் எப்படி ஊழல் வந்தது என்பதனை அல்லாவிடாம் தான் கேட்க வேண்டும் போலிருக்கிறது. இதனிடையே, டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான். இவர் 2016-ல் ஆண்டு டெல்லி வக்பு வாரிய தலைவராக செயல்பட்டார். தலைவராக இருந்த காலத்தில், விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது[6], பணமோசடியில் ஈடுபட்டதாக அமனத்துல்லா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது[7]. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியின் வீட்டில் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 24 லட்ச ரூபாய், உரிமம் இல்லாத 2 கைத்துப்பாக்கிகளை கைப்பற்றினர்.

வக்பு வாரியத்திற்கு பணி நியமனம் செய்ததில்  முறைகேடு செய்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்த வழக்கு: அப்படியென்றால், இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர், மற்ற வக்பு போர்ட் உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்? போன்ற கேள்விகள் எழுகின்றன. வக்பு வாரிய ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானை லஞ்ச ஒழிப்புத்துறை (ஏசிபி) போலீசார் 16-09-2022 அன்று கைது செய்தனர்[8]. டெல்லி வக்பு வாரியத்தின் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் ஓக்லா தொகுதி எம்எல்ஏ அமனதுல்லா கான் இருந்து வருகிறார்[9]. இவர், வக்பு வாரியத்திற்கு பணி நியமனம் செய்ததில் முறைகேடு செய்ததாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில், ரூ.12 லட்சம் ரொக்கம், உரிமம் பெறாத துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, 1609-2022 அன்று நண்பகலில் விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, விசாரணைக்கு ஆஜரான அவரை, போலீசார் திடீரென கைது செய்தனர்.

வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார்: தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார் அளித்துள்ளது[10]. இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹர்னாம் சிங், பர்வேஷ் ஆலம், அலி மெஹந்தி, பர்வேஷ் முகமது, அன்ஸார் -அல்-ஹக், ஜாவேத் செளத்ரி ஆகியோர் அடங்கிய பிரதிநிதிக் குழு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை 15-09-2022 வியாழக்கிழமை அன்று சந்தித்து மனு அளித்தது[11]. அதில், தில்லி வக்ஃபு வாரியத்தில் அமைச்சர் அமானதுல்லா கான் அவரது உறவினர்களை முறைகேடாக நியமித்துள்ளார். இதுபோன்று முறைகேடாக 33 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் ஹர்னாம் சிங் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என துணைநிலை ஆளுநர் உறுதியளித்துள்ளார்’ என்றார். பர்வேஷ் ஆலம் கூறுகையில், “தில்லி வக்ஃபு வாரிய நியமன முறைகேடுகள் தொடர்பாக அதன் அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடைபெறும்’ என்றார். ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள், இங்கு நடக்கும் வக்பு ஊழல்கள், முறைகேடுகள், கோவில் ஆக்கிரமிப்புகள் பற்றி மூச்சு விடுவதில்லை. இது காங்கிரஸ் மாடல் போலும்.

எழும் இக்கேள்விகளுக்கு, பிரச்சினைகளுக்கு பதில் கிடைக்குமா?:

  1. தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார் அளித்துள்ளது.
  • அதாவது, தில்லி வக்ஃபு வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதை ஒப்புக் கொண்டு தில்லி வக்ஃபு வாரியத்தின் அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
  • ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள், இங்கு நடக்கும் வக்பு ஊழல்கள், முறைகேடுகள், கோவில் ஆக்கிரமிப்புகள் பற்றி மூச்சு விடுவதில்லை.
  • இது காங்கிரஸ் மாடல் போலும், தில்லி மாடல் அவ்வாறு இருக்கும் பொழுது, திராவிட, வங்காள மாடல்களும் அப்படியே உள்ளன!
  • பஞ்சாப, சிந்து, குஜராத, மராடா, திராவிட, உத்கல, வங்கா – கூட பொறுந்துகிறது. ஆனால், இந்த கூட்டணி பார்முலா செல்லுமா என்று பார்க்க வேண்டும்.
  • வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளது?
  • குரான், ஷரியத் மற்றும் ஹதீஸ் போன்றவற்றை எப்படி அந்த முகமதியர்-முஸ்லிம்கள் மீற முடியும், ஊழல் செய்யக் கூடும், அல்லா அனுமதி அளித்தாரா?
  • மோமின்கள் எப்படி காபிர் அதிலும் நாத்திக, கம்யூனிஸ காபிர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியும்? யார் அனுமதித்தது?
  • மோமின்–காபிர் கூட்டு, சகவாசம், கூட்டணி ஹராமா-ஹலாலா, இதனால் கிடைப்பது சொர்க்கமா-எரியும் நரகமா, அல்-கிதாபியா என்ன சொல்கிறது?
  1. தமிழகம் போல, தில்லியிலும் இந்துக்கள், கோவில் நிலங்களை முகமதியினர் ஆக்கிரமித்து உள்ளார்களா? வக்பிடம் சான்றிதழ் கொடுக்க ஆணை போட்டுள்ளார்களா?

© வேதபிரகாஷ்

17-09-2022


[1] இ.டிவி.பாரத், வக்ஃபு வாரிய நிதி முறைகேடு: தலைவர் அமனத்துல்லா கான் கருத்து, Published on: January 30, 2020, 4.33 PM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/bharat-news/delhi-acb-books-aap-mla-amanatullah-khan-for-alleged-misuse-of-waqf-board-funds/tamil-nadu20200130163314221

[3] A case against Khan was filed in 2016, following a complaint from the sub-divisional magistrate (headquarters), revenue department, alleging that appointments to various “existing and non-existing posts” in the Waqf Board were “arbitrary and illegal”. The ACB registered an FIR in January 2020, under Section 7 (public servant taking gratification) of the Prevention of Corruption Act, and Section 120-B (criminal conspiracy) of the IPC.

https://indianexpress.com/article/cities/delhi/aaps-amanatullah-khan-raided-acb-finds-pistol-and-cash-8155646/

[4] தமிழ்.ஒன்.இந்தியா, ஊழல் புகார்.. ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கான் கைது! இரு துப்பாக்கிகளும் பறிமுதல்! டெல்லியில் பரபர, By Vigneshkumar Published: Saturday, September 17, 2022, 0:00 [IST].

[5] https://tamil.oneindia.com/news/delhi/after-raids-aap-mla-amanatullah-khan-arrested-in-2-year-old-allegation-476093.html

[6] தினத்தந்தி, வக்பு வாரிய முறைகேடு: ஆம் ஆத்மி எம்.எல்.. கைதுலட்ச கணக்கில் பணம், துப்பாக்கி பறிமுதல், தினத்தந்தி Sep 17, 2:08 am

[7] https://www.dailythanthi.com/News/India/aaps-amanatullah-khan-arrested-after-raids-794221

[8] தினகரன், வக்பு வாரியத்தில் ஊழல் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி, 2022-09-17@ 02:26:04

[9] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=799774

[10] தினமணி, தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு விவகாரம்: துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்,  By DIN  |   Published On : 12th July 2019 07:20 AM  |   Last Updated : 12th July 2019 07:20 AM.

[11] https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/jul/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3190553.html

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள் – ஆள்சேர்ப்பு,  மதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (2)!

நவம்பர் 5, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள்ஆள்சேர்ப்புமதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (2)!

Sathya Sarani PFI conversion factory-Vedaprakash

முகமதிய மற்றும் கிருத்துவர்களின்கர் வாபசிசெயல்கள்: “சத்திய சரனி” என்ற நிறுவனம்[1], அவ்வாறு பணம் பெற்றதையும் ஒப்புக் கொண்டார்[2]. அதேபோல, “சத்திய சரனி” யின் பெண்களின் பிரிவு தலைவி, ஜைனபா ஒரு பக்கம் தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறோம், அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப் படுகின்றன என்றும், இன்னொரு பக்கம், இல்லை, தங்களது நிறுவனம், இஸ்லாம் பற்றி போதிக்கிறது, அவ்வளவுதான், என்ற ரீதியிலும் பேசியுள்ளார்[3]. “சத்திய சரணி” இணைதளம், கிருத்துவர்கள், முஸ்லிம்களை ஏமாற்றி, அவர்களுக்கேற்ற முறையில், “கர்-வாபசி” போன்ற மதமாற்றம் செய்து வருகின்றனர், என்று குற்றஞ்சாட்டுகிறது[4]. அவர்கள் எப்படி ஏழை முஸ்லிம்களை மதமாற்றினார்களோ, அதேபோல, மறுபடியும், அவர்களை இஸ்லாத்தில் திரும்ப வரசெய்ய ஆவண செய்வதாகக் கூறிக்கொள்கிறது[5]. இத்தகைய, “கர்-வாபசி”களைப் பற்றி, அறிவுஜீவிகள் விவாதிப்பதில்லை. இத்தகைய மதமாற்றங்களும், “கடவுளின் சொந்த தேசத்தில்” பல கலவரங்களை உண்டாக்கலாம், அமைதியைக் குலைக்கலாம். ஐசிஸ்.ம் இதில் சேர்ந்து விடும் போது, பிரச்சினை தீவிரமாகி விட்டது.

PFI conversion factory- Nov.2017

மதமாற்றத்தில் போட்டியா, அடிப்படைவாதம் வேலை செய்து, தீவிரவாதத்தை அரங்கேற்ற முயற்சியா?: நூற்றுக்கணக்கில் கேரள முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸில் சேர்ந்தது, கொல்லப்பட்டது என்ற விவகாரங்கள் வெட்டவெளிச்சமாக, தினசரி செய்தியாகி விட்டது. போதாகுறைக்கு, அதில் மதமாற்றமும் சேர்ந்து விட்டதாலும், கிருத்துவ பெண்களும் பாதிக்கப் படுவதால், விவகாரம் முக்கியமாகி விட்டது. அதற்குள் இப்பொழுது ஐசிஸில் உள்ள ஆறுபேர் புகைப்படங்களை கேரள போலீஸார் வெளியிட்டது[6]:

  1. அப்துல் கையூம் [Abdul Ghayoom],
  2. அப்துல் மனஃப் [Abdul Manaf],
  3. ஷபீர் [Shabeer],
  4. சஃபான் [Safwan],
  5. சுஹைல் [Suhail] மற்றும்
  6. ரிஸ்வான், சுஹைலின் மனைவி [his wife Rizwana]

ஷாஜஹான் வெல்லுவ கன்டி [Shahjahan Velluva Kandy] என்பவன், தனது ஐசிஸ் தொடர்புகளை, பேஸ்புக் மூலமே தெரிவித்திருக்கிறான்[7]. அல்-குவைதா கவிதைகளை போட்டு, ஐசிஸ் போராளிகள் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கமும் கொடுத்துள்ளானாம்[8]. மதமாற்றம் என்பது கேரளாவில் பெரிய பிரச்சினையாக உள்ளது. கிருத்துவர்-முஸ்லிம்கள் இந்துக்களை மதம் மாற்றுவது என்ற நிலையுள்ளது தெரிந்த விசயமே, ஆனால், கிருத்துவர்-முஸ்லிம்கள் ஒருவரையொருவர் மதமாற்றி, தீவிரவாத காரியங்களில் ஈடுபட வைத்த நிலையில் தான் பிரச்சினை, பூதாகாரமாகி, வெளியில் தெரிய வந்தது. இதனை போட்டி என்றோ, கர்-வாபசி என்றோ சொல்லும் எல்லைகளைத் தாண்டியுள்ளது.

Kannur PFI members joined ISIS- photos- Dinakaran

ஐந்து பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது[9]: ஆறு பேர் கைது செய்யப்பட்டதை பொலீஸார் உறுதி செய்தது[10]. முன்னர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய  ஐந்து பேரை கைது செய்தனர் என்று செய்தி வந்தது[11]. இவர்களிடம் விசாரணை நடத்தியதில்  இந்த மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சிரியாவில் பலியானது உறுதியாகி உள்ளது. இறந்தவர்கள் –

  1. ஷநாத் (வயது 25) சலாட்பகுதியை சேர்ந்தவர்,
  2. ரிஷல் (30) வலாபட்டனம்,
  3. ஷமீர் (45)
  4. அவரது மகன் சல்மான் (20) பப்பினிசேரி,
  5. ஷாஜீர் (25) எச்சூர்

ஆகியோர் என அடையாளம் தெரிந்து உள்ளது[12]. ஆகவே, நிச்சயமாக, இவர்களது பெற்றோர்கள் மறுக்க, மறைக்க முடியாது. ஆனால், தெரிந்து அவர்கள் எப்படி, தம் மகன்கள் ஐசிஸில் சேர ஒப்புக் கொண்டார்கள் என்பது புதிராக உள்ளது. இல்லை, அந்த அளவிற்கு அவர்களும் மூளைசலவை செய்யப்பட்டுள்ளனர் போலும். மேலும் அதே பகுதியை சேர்ந்த 15 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கேரள போலீசாரால் அக்டோபர் 26 ம் தேதி கைது செய்யப்பட்ட U.K. ஹம்சா இவர்களை ஐ.எஸ் நெட்வொர்க்கில் சேர அழைத்துச் சென்றார். அவர்களில் சிலர் இன்னும் சிரியாவில் இருக்கிறார்கள்.

Five Kerala Muslims killed in ISIS

கேரளா ஏன், எப்படி, எவ்வாறு ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்கிறது?: ஐசிஸிக்கு, இந்த மலபார் பகுதியிலிருந்து, தீவிரவாதத்திற்கு எப்படி இளைஞர்கள் சுலபமாகக் கிடைக்கிறார்கள்?  இதைப் பற்றி அலசும் போது கவனிக்க வேண்டிய காரணிகள் சுருக்கமாகக் கொடுக்கப் படுகின்றன[13].

  1. முகமதியரிடையே ஒரு பக்கம் படிப்பின்மை, இன்னொரு பக்கம் ஐ.டி. இஞ்ஜினியரிங் என்று படித்துள்ள நிலை என்றுள்ளது.
  2. ஐ.டி படித்த இளைஞர்கள் சுலபமாக ஜிஹாதித்துவத்திற்கு மாறுவது, பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வது.
  3. மற்ற மத-அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிக் குழுக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது.
  4. வளைகுடா நாடுகளுடன் எல்லோருக்கும் தொடர்புகள் இருப்பது.
  5. வேலையின்மையைப் பயன்படுத்தி, வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்ற நிலையில் ஆள் சேர்ப்பது.

Jihadi terror- Asianet- modified- Vedaprakash

6. அதிக முகமதியர் மக்கட்தொகை உள்ள இடங்கள், கடைகள் முதலிய இடங்களில் முஸ்லிம் அல்லாத இளம்பெண்களை கவர்ந்து, மதம் மாற்றி, லவ்-ஜிஹாத் மூலம் கல்யாணம் செய்து வைப்பது.

7. லவ்-ஜிஹாத் மூலம் வசீகரித்து, பெண்ணோடு அனுப்பி வைப்பது.

8. சம்பந்தப் பட்ட குடும்பத்தினருக்கு தவறாமல், மாதன் தோறும் பணம் வந்துக் கொண்டிருப்பது.

9. விசா, பாஸ்போர்ட், மணி-எக்ஸ்சேஞ்ச், விமான டிக்கெட்,…..போன்றவற்றில் முகமதியர் ஆதிக்கம் செல்லுத்துவதால், பண-பரிமாற்றம், ஆட்கள் எளிதாகச் சென்று வருதல் போன்றவை சுலபமாக நடந்து வருகிறது. விவரங்களும் அவஎர்களுடனே இருந்து விடுகிறது.

10. அனைத்திற்கும் மேலாக அரசியல் செல்வாக்கு, போலிஸ் முதலிய துறைகளில் பெரிய பதவிகளில் இருக்கும் முகமதியர்களின் உதவி முதலியவை அவர்களை சட்டப்பிடிகளிலிருந்தும் தப்பித்துக்க் கொள்ள உதவுகிறது.

இப்பொழுது, கம்யூனிஸ கூட்டாட்சி வந்த பிறகு, அரசுக்கு சித்தாந்த போராட்டங்களில் ஈடுபடவே நேரமில்லாத நிலையில், ஜிஹாதிகள் சுலபமாக தங்களது செயல்களை செய்ய ஆரம்பித்து விட்டனர்[14].

© வேதபிரகாஷ்

04-11-2017

Caliphate of Kerala- Courtesy- Shanknad

[1] PO Karuvambram, Cherani, Manjeri – 676123, Kerala, India, Tel: +91 483 2765010, Email: saranimail@gmail.com,  http://www.sathyasarani.org/

[2] On Tuesday, 31-10-2017, India Today TV aired the explosive sting report which laid bare a nexus between Islamic extremist groups and Popular Front of India. Ahmed Shareef, a senior PFI leader and associate editor of group mouthpiece Gulf Thejas was the first to be caught on camera. He claimed before undercover reporters that a key aim of PFI was to create an Islamic state in India and later spread it to the rest of the world. He also revealed the modus operandi of illegal fund transactions from the Gulf to Kerala. Shareef said that Sathya Sarani in Malappuram, which is considered an Islamic education institution, received a lot of money through hawala.

India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST

[3] AS Zainaba, president of the AFI’s women’s wing, said on hidden camera Sathya Sarani is a conversion factory masquerading as an educational organisation. http://indiatoday.intoday.in/story/kerala-police-pfi-isis-kannur/1/1081364.html

[4] The website of the institution asserted that “Christian missionaries are targeting the poor Muslims from different parts of the state. They are brainwashed and driven to Christianity, exploiting their poverty and lack of religious awareness.” According to the website, Sathya Sarani “could identify such people (Muslims who have been converted to Christianity) and succeed in bringing them back to the faith by way of convincing them the concept of monotheism of Islam.”

https://timesofindia.indiatimes.com/city/kozhikode/sathya-sarani-attempted-gharvapasi-on-christian-converts/articleshow/61447210.cms

[5] Times of India, Sathya Sarani attempted ‘Gharvapasi’ on Christian converts?, M P Prashanth| TNN | Nov 3, 2017, 11:04 IST.

https://timesofindia.indiatimes.com/city/kozhikode/sathya-sarani-attempted-gharvapasi-on-christian-converts/articleshow/61447210.cms

[6] Hours after the India Today TV report , Kerala police released the names and photographs of half a dozen youngsters from the state who are currently with ISIS in Syria.The six, including a woman, have been identified as Abdul Ghayoom, Abdul Manaf, Shabeer, Safwan, Suhail and his wife Rizwana, all hailing from Kannur district. All the men were active PFI workers in Kannur.

India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST

[7] Shahjahan Velluva Kandy, a native of Kerala’s Kannur district, has also used Facebook to call Islamic State fighters ‘role models’ alongside posts on al- Qaeda ‘poetry’..

Daily Mail, Popular Front of India member exposed as ‘ISIS sympathiser’ on Facebook after failing to reach Syria three times and posting al-Qaeda poetry, By SHASHANK SHEKHAR and ARVIND OJHA PUBLISHED: 22:51 GMT, 1 November 2017 | UPDATED: 00:32 GMT, 2 November 2017.

[8] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-5040351/Popular-India-member-exposed-ISIS-sympathiser.html

[9] தினத்தந்தி, .எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி

[10] Deccan Chronicle, 6 more youth from Kerala join ISIS, confirm police, ANI, Published Nov 2, 2017, 7:10 pm IST; Updated Nov 2, 2017, 7:10 pm IST

[11] http://www.deccanchronicle.com/nation/current-affairs/021117/6-more-youth-from-kerala-join-isis-confirm-police.html

[12] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/28140247/Kerala-Police-confirm-deaths-of-five-ISlinked-men.vpf

[13] முதல் ஐந்து காரணிகள் ஏசியா நெட் செய்தியிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளது:

Asianet.newsable, Why India could soon be under a ‘Made in Kerala’ threat, by T. S. Sudhir, October 27, 2017. 10:51 am.

[14] http://newsable.asianetnews.com/editorial/why-india-could-soon-be-under-a-made-in-kerala-threat

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? – ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

ஏப்ரல் 3, 2017

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

Abdul Waheed before becominh Peer

இவனேமனநோயாளிஎன்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்?: பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர், பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் ஊடகங்கள் 03-04-2017 அன்று செய்திகளை வெளியிட ஆரம்பித்தாலும், 02-04-2017 மாலையில் முரண்பட்ட விவரங்கள் தான் பாகிஸ்தான் நாளிதழ்கள் மூலம் அறியப்பட்டன[1]. பக்தர்களை காப்பகத்தின் பொறுப்பாளர் தன்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பயந்து, கொன்றதாக செய்திகள் வெளிவந்தன[2]. தனக்கே விஷம் கொடுத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதால் தான், அவர்களை கொலை செய்ததாக கூறினான்[3]. சொத்து-அதிகாரம் போட்டி என்றால், தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத், அவன் மகன் மற்றவர்கள், இவர்களுக்கிடையில் தான் பகை-கொலை செய்யும் வெறி இருந்திருக்க வேண்டும்[4]. தர்காவை பிடிக்க திட்டம் போட்டவர்களுக்கும், சொகிச்சைப் பெற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்பது எப்படி “மனநோயாளிக்கு”த் தெரியும்? இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்? ஆகவே, எதையோ மறைக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

Sargohda - dargh inside - photos of peers

பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் குரூர சிகிச்சை அளித்த தர்கா: இந்திய விவகாரங்களில் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, விவரங்களை வெளியிடும் செக்யூலரிஸ ஊடகங்கள், பாகிஸ்தான் நாளிதழ்கள் சொன்னதை கூட போடாமல், திரித்து வெளியிட ஆரம்பித்துள்ளன. தினமணியில் தலைப்பே தமாஷாக இருந்தது! “பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி,” என்ற தலைப்பிட்டது[5]. மனநோயாளி எப்படி, அடுத்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தான், கொடுத்த பிறகு, வெட்டிக் கொன்றான் என்று விளக்கவில்லை[6]. கொலைசெய்கிறவன், வந்தவர்களின், ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக்கி, தடிகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தான் என்பது புதிராக உள்ளது. அதில் நான்கு பெண்களும் அடக்கம் எனும்போது, அவர்களை நிர்வாணமாக்கியவன், மருந்து கொடுத்து, மயக்கமடையச் செய்தவன், அப்படியே அடித்துக் கொன்றான, குத்திக் கொன்றானா, அல்லது பாலியல் பலாத்காரம் செய்தானா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

Abdul Waheed killed 20 at sargodha

பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது: மதநிர்வாக விவகார மந்திரி, ஜெயீம் காதரி, “ரகசிய புலனாய்வுத் துறைமூலம், இத்தகைய மதகாப்பங்கங்கள் பஞ்சாப் மாநிலத்தில் 552 இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இது பதிவு செய்யப்படாதது ஒன்றாகும். பேயோட்டுகிறேன் என்று இப்பகுதியில், இத்தகைய கொலைகள் நடப்பது மற்றும் அவர்களை உயிரோடு எரிப்பது, இந்நாட்டில் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கூட்டுக் கொலை நடப்பது, இதுதான் முதல் தடவை,” என்றார்[7]. அதாவது, “பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. யூத-கிருஸ்துவ-முகமதிய மதங்களின் படி, பேய்-பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனானப் பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே இப்பழக்கம் 20 நூற்றாண்டு வரை இருந்தது. பிறகு சட்டங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கைக்கள் மூலம் கட்டுப் படுத்தினர். ஆனால், இஸ்லாமிய நாடுகளில், மதநம்பிக்கை மூலம் நடப்பதால், அரசுகள் கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றன.

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.

விமான பாதுகாப்பிற்கு கருப்பு ஆடு பலிக் கொடுத்த பாகிஸ்தான் விமானத் துறை[8]: நான்கு மாதங்களுக்கு முன்னர் டிசம்பர் 2016ல், பாகிஸ்தானிய விமானத்துறை பாதுகாப்பு கோரி, ஒரு கருப்பு ஆட்டை அறுத்து பலியிட்டனர்[9]. பாகிஸ்தான் விமானங்கள் அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்கின்றன[10]. டிசம்பர் 7, 2016 அன்று நடந்த விபத்தில், விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பிரயாணம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அடிக்கடி பலிகள் நடப்பதால், ஏதோ தியசக்திதான் வேலை செய்கிறது, அதனை விரட்ட கருப்பு ஆடு பலியிட வேண்டும் என்று, மாந்தீரிகர்கள் அறிவுருத்தியதால், விமான ஆட்கள் அவ்வாறே செய்தனர்[11]. சமூக ஊடகங்கள், மற்றவர்கள் கிண்டலடித்தாலும், அவர்கள் கவலைப்படவில்லை. அதேபோல, பாலங்கள் கட்டுவது, பெரிய சாலைகள் போடுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கும் போதும் பலி கொடுக்கப் படுகின்ற்து. நம்ம வீரமணி போன்றோர் அல்லது ஷிர்க் கூட்டத்தால் கலாட்டா செய்யவில்லை.  பொதுவாக ஈத் அன்று 1,00,00,000க்கும் [ஒரு கோடி] மேலான விலங்குகள் பலியிடப் படுகின்றன. இதில் மதநம்பிக்கையை விட வியாபாரம் தான் பெரிதாக இருக்கிறது[12]. தோல் அதிகம் கிடைக்கும், அதனை ஏற்றுமதி செய்யலாம், ரூ 8 கோடிகள் கிடைக்கும் என்றுதான் கணக்குப் போடுகின்றனர்[13]. தோல் வியாபரக் கழகம் அதில் அதிகமாகவே சிரத்தைக் காட்டுகிறது[14]. மிருகங்களை அறுக்கும் போதே, தோலை யார் பெறுவது என்று சண்டை போட்டுக் கொள்வர் / அதையே விளையாட்டாக கொள்வர். அதிலும் அடிதடி-சண்டை நடைபெறுவதுண்டு.

© வேதபிரகாஷ்

03-04-2017

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.2

[1] Pakistan Observer, Sargodha Shrine custodian kills 20 devotees, April.3, 2017.

[2] http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[3] Geo.TV.news, Killed people because they had planned to poison me: Sargodha murder accused, Malik Asghar and Naveen Anwar, April.2, 2017.

[4] https://www.geo.tv/latest/136447-Killed-people-because-they-had-planned-to-poison-me-Sargodha-murder-accused

[5] தினமணி, பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி, ஏப்ப்ரல்.3, 2017.

[6] http://www.dinamani.com/latest-news/2017/apr/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-2677320.html

[7] Punjab Minister for Religious Affairs Zaeem Qadri said intelligence agencies along with police and the local government were investigating all aspects of the case. Qadri said that his department managed some 552 shrines in the province, but this one was not a registered with it.
“Investigators will also look into how this shrine was allowed to be set up on private land,” he said. Punjab Chief Minister Shahbaz Sharif has asked for a police report on the investigation within 24 hours, a senior government official said. There have been cases of people dying during exorcism ceremonies at some shrines across the country, but mass killings are rare.

http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[8] Daily Mail, Pakistan airline responds to safety fears after plane crash kills everyone on board one of its jets by sacrificing a goat , PUBLISHED: 12:01 BST, 19 December 2016 | UPDATED: 23:17 BST, 19 December 2016.

[9] http://www.dailymail.co.uk/news/article-4047924/Pakistan-airline-mocked-goat-sacrifice.html

[10] Daly Mail, PIA plane crash: Pakistan’s national airline sacrifices goat on Tarmac before test flight, Monday 19 December 2016 11:15 GMT

[11] http://www.independent.co.uk/travel/news-and-advice/pia-lane-crash-goat-sacrifice-pakistan-national-airline-tarmac-atr-grounded-benazir-bhutto-a7484081.html

[12] According to Gulzar Feroz, the central chairman at the Tanners’ Association, more than 2.7 million cows/bulls, four million goats, 800,000 lambs, and up to 30,000 camels will be sacrificed this year. He said that the hides of cows/bulls were expected to fetch a price of Rs1,600 in the market, while goat hides would fetch a market price of Rs 250 each. He said that hides of sacrificial animals fetched a total of Rs8 billion last Eid, but due to fall in prices this year, hides of sacrificial animals are expected to fetch around Rs7 billion this year.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[13] Geo News, Pakistanis to sacrifice over 10 million animals this Eid, September 12, 2016.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[14] https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

மார்ச் 22, 2013

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

லக்னௌவில் மதங்களுக்குள் உரையாடல் என்ற ரீதியில் “வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து” ஒரு  மாநாடு மார்ச் 20ல் நடந்தது. ஆனால், தமிழ் இணைதளங்களில் இதைப் பற்றி பேச்சு-மூச்சு காணோம்.

வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதம் சவுதி அரேபியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அது முஸ்லீம் சமூகத்தையே பாதித்து வருவதாகவும், முஸ்லீம்களை தவறான பாதையில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முஸ்லீம்களின் மதிப்புக் குறைந்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று மற்றவர்கள்  நினைக்கும்படி, பார்க்கும்படியான நிலை வந்திவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது.