Archive for the ‘வாபஸ்’ category

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

திசெம்பர் 20, 2013

பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)

Faizul complaintant getting undue publicity.2இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

  1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[1]
  2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[2]
  3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[3]

Faizul complaintant getting undue publicityநடிகை  ரா தா  திடீர்  பல்டி:   தொழிலதிபர் மீதான  வழக்கு வாபஸ்: எல்லா தமிழ் நாளிதழ்களும், மிகச்சிறிய மாற்றத்துடன், இந்த செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளன. 18-12-2-13 அன்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார் என்று தினமலர் கூறுகிறது[4]. கையோடு கொண்டு வந்திருந்த மனுவை அங்கிருந்த போலீசாரிடம் கொடுத்தார் என்று மாலைமலர் கூறுகிறது.  தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார்[5]. எனினும் அவர் வந்துள்ளது உண்மைதான் என்று தெரிகிறது, மனு கொடுக்கப்பட்டதும் நிஜமே.  மற்ற விசயங்களில் ஊடகங்களில் சட்டமேதைகள் போன்று விவாதிப்பார்கள். ஆனால், இப்பொழுது, அதை போலீசாரிடமே விட்டு விட்டார்கள் போலிருக்கிறது!

Faizul complaint by drug trafficking arrested affectedவடபழனி போலீசார் நிலை: இதே ராதா வடபழனி இன்ஸ்பெக்டர் பைசூலுக்கு ஆதரவாக வேலை செய்வதால், வழக்கை வேறு அதிகாரிக்கு / போலீஸ் ஷ்டேசனுக்கு மாற்ற வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். அப்பொழுது போலீசார் மிகவும் கடுப்பாகி விட்டனர். அதனால் இது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கில்லை என்றும்[6], இதை கோர்ட்டில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர்[7]. அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்[8]. நடிகை ராதாவின் இந்த திடீர் முடிவு போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், ஊடகக்காரர்களுக்கு வேடிக்கையாக இருந்தது போலும்! மற்ற நெரங்களில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், காத்து நிற்பதைப் போல 18-12-2013 அன்று ஊடகக்காரர்கள் நிற்கவில்லை போலும்!!

போலீசார்  விசாரணையைத்  தொடருவார்களா  அல்லது  விட்டு  விடுவார்களா?: தொழிலதிபர் பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா இதுபோல் திடீரென்று புகாரை வாபஸ் வாங்கி பல்டி அடித்து இருப்பது ஏன்? அதில் உள்ள மர்மம் என்ன? ராதாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்தும், இதன் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்[9].   இதனை ஏற்க மறுத்து, புதிய கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்[10].  இருப்பினும், புகார் கொடுத்தவரே, வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளதில் சட்டநிலைனை என்ன என்ற கேளிவியும் எழுகின்றது. போதை மருந்து கடத்தல், வேலை வாங்கித் தருவதாக ஆட்களை ஏமாற்றுதல், பெண்ணின் மீதே பலருடன் வாழ்ந்தவள், ஆதாரங்களை வெளியிடுவேன் என்றெல்லாம் பேட்டிக் கொடுத்துள்ள நிலை, ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக ஊடகங்களில் அளவிற்கு அதிகமாகவே வந்துவிட்ட நிலையில் போலீசார் சும்மா இருக்க முடியுமா?

பர்வீன்பைசூல்  அல்லது   ராதாஷ்யாம்  சமரசம்  செய்து  கொண்டனரா?: ராதா வழக்கை வாபஸ் பெற்றார்[11] என்பதை தவிர, பர்வீன்-பைசூல் அல்லது ராதா-ஷ்யாம் சமரசம் செய்து கொண்டதைப் போல, ஆங்கிலத்தில் சில இணைதளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Actress Radha Got Compromised[12]
Radha accused Faizul of blackmailing her to reveal their intimate photos and videos. She also made statements like the Police is not helping her and acting against her to help Faizul. Now the scene has completely changed. As a development, she reportedly has withdrawn the complaint and got compromised with Faizul.
நடிகைராதாசமரசம் நடிகை ராதா பைசூல் மீது, தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தார். போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாக பைசூலுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தார்.

ஆனால், காட்சி இப்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. இப்பொழுது பைசூல் மீது கொடுக்கப்பட்ட புகார் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், இதனால் பைசூலிடம் சமாசம் செஹ்ய்து கொண்டதாகவும் தெரிகிறது[13]. இதே மாதிரி மரியம் பீவி கொடுத்த புகார்[14], அக்ரம் கான் ஆட்கள் மிரட்டுகிறார்கள் என்றது[15] மற்றும் அக்பர் பாஷா கொடுத்த புகாரும் வாபஸ் பெற்றால், போதை மருந்து கடத்தல் முதலிய விவகாரங்களும் மறைக்கப்படுமா?

பைசூல்  எனது  கணவர்  தானே  என்றால்,   திருமணம்  இல்லாமலேயே  அந்த   அந்தஸ்து  எப்படி  கிடைக்கிறது?: ராதாவின் திடீர் பல்டி மற்றும் புகாரை வாபஸ் வாங்கியதற்கான காரணம் குறித்து கருத்து கேட்பதற்காக நடிகை ராதாவிடம் நிருபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர்[16]. அப்போது நடிகை ராதா, “ எது எப்படியோ  பைசூல் எனது கணவர்தானே, ஒரு வேகத்தில் புகார் கொடுத்துவிட்டேன். ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் இல்லை[17]. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்”, என்று கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்[18]. சரி, பிறகு வீட்டிற்கு நேராகச் சென்று பேட்டிக் கண்டு, விவரங்களை வெளியிட்டிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை.

பைசூல்எனதுகணவர்தானேஎன்றால், திருமணம்எப்பொழுதுநடந்தது?: அந்தர் பல்டி, வழக்கு வாபஸ் என்று தான், நமது சூரப்புலி ஊடகவீரர்கள் எழுதுகிறார்களே தவிர, திடீரென்று பைசூலுக்கு பர்வீன் எப்படி மனைவி ஆனாள் என்பது குறித்து ஒன்றும் யோசிக்கவில்லை போலிருக்கிறது. நித்தியானந்தா விசயத்தில் அப்படி குதித்த ஊடகக்காரடர்கள் இதை அப்படியே அமுக்கப் பார்க்கிறார்களா? லெனின் போன்ற வீராதி வீரர்கள் படுக்கை அறைக் காட்சிகளை வீடியோ பிடிப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே? பிறகெப்படி அமைதி காக்கிறார்கள். ராதாவுடன் படுத்த காட்சிகளையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளேன், அவற்றை இணைதளத்தில் போடுவேன் என்றெல்லாம் மிரட்டியதாக செய்திகளை வெளியிட்ட போது, எந்த பெண்ணிய வீராங்கனைகளும் இதைப் பற்றி கேட்கவில்லையே? ஆணுக்கும்-பெண்ணுக்கும் சண்டை வரலாம், ஆனால், அந்தரங்க படுக்கை விசயங்களை ஒரு ஆண் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறான் என்றால், அது எந்தவிதமான கலாச்சாரம், நாகரிகம் என்று எந்த தமிழ்-தெலிங்கு உணர்வுள்ள, இனமான ரோஷமுள்ள எவனும் கேட்கவில்லையே? ஏனிந்த மௌனம் அல்லது பாரபட்சம் அல்லது மறைப்பு?

பர்வீன்பைசூல்  அல்லது  ராதாஷ்யாம்  விவகாரங்களில்  பல  உண்மைகள்   மறைக்கப்படுகின்றன: கீழ் குறிப்பிட்டுள்ள விசயங்களில் பல கேள்விகள் எழும்புகின்றன:

  1. ஒரு பெண் இன்னொரு ஆணுடன் திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்டுறஆறுவருடம் வாழ்ந்தது.
  2. கருவுற்றபோது, அபார்ஷண் செய்து கொண்டது, அதற்கான சான்றிதழ்கள் பெற்றுக் கொண்டது.
  3. ஆண் அவ்வாறான படுக்கைக் காட்சிகளை, பெண்ணுக்குத் தெரியாமல் போட்டோ-வீடியோ எடுத்து வைத்துக் கொண்டது.
  4. ஒரு நாள் அப்பெண் இதனை அறிந்து ஏன் எடுத்தீர்கள், என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் அதனைப் பார்த்து ரசிப்பதற்கு என்றது.
  5. பெண் ஆணை தன்னை ஏமாற்றி விட்டான் என்று புகார் கொடுத்தது.
  6. தங்களது அந்தரங்க போட்டோக்களையும், வீடியோக்களையும் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியதற்காக புகார் கொடுத்தது.
  7. ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டார் என்றும் பெண் புகார் கொடுத்தது.
  8. ஆண் பல பெண்களுடன் / நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு கொண்டுள்ளார் என்றது.
  9. ஆண் பதிலுக்கு பெண்ணின் அந்தரங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியது.
  10. பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது என்று அந்த ஆண் பேசியது.
  11. ஆணின் தங்கை, அப்பெண் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்தது.
  12. அப்பெண் போலீசார் தனக்கு உதவுவதில்லை, மாறாராணுக்குத் துணை போகின்றனர் என்றேல்லாம் கூட புகார் கூறிவந்தது.
  13. இன்னொரு ஆள், அந்த ஆண் தன்னை போதை மருந்து கடத்தலில் மாட்டி விட்டார் என்று புகார் கொடுத்தது.
  14. மூன்று முறை முன் ஜாமீன் பெற மனு போட்டது.
  15. மூன்று முறையும்முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
  16. அந்த ஆணை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றது.
  17. ஆனால், இப்பொழுது, பெண் மட்டும் புகாரை வாபஸ் பெற்றுள்ளது.
  18. குறிப்பாக, இப்புகாரணனைத்துப் பெண் பொலீஸ் நிலையத்தில் கொடுக்கப் பட்டுள்ளதால், புகாரை முடித்துவிட முடியுமா?
  19. ஏற்கெனவே கோர்ட்டில் சென்றுள்ள வழக்குகள் என்னவாகும்?
  20. மேலாக, இதனை எந்த பெண் இயக்கமும், மனித உரிமைகள் என்றெல்லாம் பேசும் இயக்கங்களும் ஏன் கண்டுகொள்ளவில்லை.

வேதபிரகாஷ்

© 20-12-2013


[4] தினமலர், சென்னை பதிப்பு,

[5] மாலைமலர், நடிகைராதாதிடீர்பல்டி: தொழிலதிபர்மீதானவழக்கைவாபஸ்பெற்றார், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2:57 AM IST; மாற்றம் செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 19, 3:25 AM IST

[11] Actress Radha has suddenly withdrawn the case against entrepreneur Faizul. Police are conducting a new investigation on what is the mystery in her sudden decision. She who starred in “Sundara Travels” film lodged a complaint at Commissioner Office stating, Faizul of Triplicane had lived with her for 6 years as husband, cheated her Rs.50 lakh of money and also threatened her that he would make her private videos public. Vadapalani all-women police registered a complaint and began investigation.  In order to refrain arrest Faizul filed anticipatory bail petition 3 times which was dismissed by the court. In this situation, actress Radha challenged that she would see Faizul jailed. Meanwhile, actress Radha came to Vadapalani all-women police station yesterday and said she would withdraw the case against Faizul. While speaking to the reporter over phone she said, she was not willing to make her husband run around. However, police are investigating on the reason for her sudden change. http://indiaeng.tamil4.com/view.php?view=9000

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

மார்ச் 19, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2]. இப்படி முல்லாயம் பேசியவுடன், சோனியாவின் விசுவாசியான பேனி பேசியது இப்படித்தான்!

மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[3]. இருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார். “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய்.” பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[4]. இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[5], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[6].

மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்அதாவது பிஜேபியை வம்புக்கு இழுத்தார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

மாயாவதி அமைதியாக இருக்கும்போது, இன்னொரு கஞ்சிகுடித்தவர் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்: ஆமாம், கருணாநிதி வழக்கம் போல, தங்களது ஆதரவு பற்றி பரிசீலினை செய்ய வேண்டியிருக்கும் என்று பாடலை ஆரம்பித்தார். உடனே, இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக, திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் இன்று கருணாநிதியை சந்தித்து, அமெரிக்காவின் தீர்மானம் குறித்து விவாதித்தனர். கருணாநிதியின் சிஐடி காலனி வீட்டில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது.  முன்னதாக, இன்று காலையில், டெசோ உறுப்பினர் சுப. வீரபாண்டியன் மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இச்சந்திப்பில், மத்திய அமைச்சர்களுடன் என்ன பேசுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குலாம்நபிஆசாத் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: “தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரினார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திலும் திருத்தம் பற்றி விளக்கியிருந்தார். அது தொடர்பாகவும் நேரில் விவாதித்தோம். கருணாநிதியுடன் பேசியது பற்றி பிரதமரிடம் கூறுவோம். கருணாநிதியின் கோரிக்கை பற்றி பிரதமரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்.

சிதம்பரம்  இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியை , மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று வழக்கம் போல புன்னகையுடன் சொன்னார். பிறகு, “சி.ஏ.ஜி.க்கு கூடுதலாக உறுப்பினர்கள் நியமிக்கும் திட்டம் இல்லை”, என்றார்[7]. ஆனால், இதன் ரகசியம் என்ன, கருணாநிதி அவ்வாறு கேட்டுக் கொண்டாரா, அல்லது இவராகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு சிவகங்கைக்குச் சென்று ஏதாவது வங்கிக் கிளையை திறந்து வைப்பார் போலும்!

நாராயணசாமி இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[8]: “இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். இதற்கான அறிவிப்பை பிரதமர் விரைவில் அறிவிப்பார். மூவரும் ஒரே பாட்டை மாற்றிப் பாடியுள்ளனர்.

நாராயணசாமி விடுவாரா – அவரும் பிஜேபியை இழுத்துள்ளார்: கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை சீண்டி வரும் இவர், “கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. – காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதில் பிரிவு எதுவும் வராதா என்று பா.ஜனதா எதிர்ப்பார்க்கிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையை வரவேற்று பா.ஜனதா குட்டையை குழப்ப பார்க்கிறது. எதிர்கட்சியான அவர்களே இப்படி செய்யும் போது ஆளுங்கட்சியான நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. ஆக தேர்தலுக்காக இவ்வாறு எல்லோரும்மாடுகின்றனர் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர் மாயாவதி, முல்லாயம் சிங் யாதவ், மோடி, பீஜேபி என்று அனைவரையும் இழுத்து வசவு பாடியாகி விட்டது. பிறகு ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர்? ஒருவேளை புத்த பிக்குகளைத் தாக்கி அதனால் ஏற்படுத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், அவர் மீது அவதூறு ஏற்படும், அவரது ஆட்சியை கலையுங்கள் என்று கூட பேசலாம் என்று செய்ய ஆரம்பித்துள்ளனரா? வழக்கம் போல மம்தா-சமதா-அம்மா-மாயா சீண்டல்கள் ஆரம்பித்துள்ளன. பங்களாதேச முஸ்லீம்கள் விவகாரத்தில் மம்தா காங்கிரஸை மிஜ்சி விட்டார். சமதா கட்சி முதல்வர் தில்லிக்கே வந்து விட்டார். மாயாவைத் திட்டியாகி விட்டது. அதனால் அம்மாவை இப்படி சீண்டுகிறர்கள் போலும்!

முஸ்லீம் கூட்டுத் தேவை[10]: நிதிஷ் குமாரை கவனித்தாகி விட்டது; கருணாநிதியை சந்தித்தாகி விட்டது; ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[11]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[12], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு செய்வது விடுவார். தமிழகத்திலும் ஒரு முஸ்லீம் மாநாடு நடத்தி அதில் கருணாநிதி பங்கு கொள்ளலாம். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

19-03-2013


[1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

[2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html