Archive for the ‘வாடகை வீடு’ category

சாப்ட்வேர் இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு – அல்குவைதா அமைப்பில் இணைய இருந்தது – மொஹம்மது ஆரிபின் கதை!

பிப்ரவரி 12, 2023

சாப்ட்வேர் இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு – அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது – மொஹம்மது ஆரிபின் கதை!

துருக்கிசிரியா நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டாலும் சிரியாவுக்குச் செல்ல ஆசைப்படும் பெங்களூரு சாப்ட்வேர் ஆரிப்: துருக்கி-சிரியா நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டு விட்டனர், இடிபாடுகளில் இன்னும் மக்கள் சிக்கியுள்ளர், லட்சக்கணக்கில் மக்கள் அவதிபடுகின்றனர் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், ஐசிஸ், அல்-குவைதா போன்ற இஸ்லாமிக் தீவிரவாதிகள் தங்களது நாசகார வேலைகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள் அவ்வாறான இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, வேலைக்கு ஆள் சேர்த்து, துருக்கி வழியாக சிரியாவுக்குச் செல்வது என்பது சகஜமாகி விட்டது. சாப்ட்வேர், மெகானிகல் இஞ்சினியரிங் போன்றவர்களுக்கு அங்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது.  இஸ்லாமிக் தீவிரவாத அமைப்புகள் தீவிரவாத போரில் பங்கேற்க மாத சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால், நிறைய இளைஞர்கள் அதற்கு தயாராகி செல்கின்றனர். செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.

சாப்ட்வேர் இன்ஜினியர்சொந்தமாக, .டி., நிறுவனம்பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: உத்தர பிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்தவர் முகமது ஆரிப், 36. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக 2021-2023 பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, தனிசந்திரா மஞ்சுநாத் நகரில், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்[1]. இங்கு, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஆண்டு 2022ல் பணியில் இருந்து விலகினார்[2]. பின், சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் ஒன்றை துவக்கி, வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார். அதாவது அந்த அளவுக்கு அறிவை வளர்த்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியர் என்ற பெயரில் வலம் வந்த இவர், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி மறைமுகமாக செயல்பட்டு வந்தார். இதுதான் புதிராக உள்ளது. நன்றாக படித்து, புத்திக்கூர்மையுடன் சம்பாதித்து வரும் பொழுது, ஒழுங்காக மனைவி-மக்கள் என்று சந்தோசத்துடன் வாழ்க்கை வாழ்வதை விட்டு, ஏன் தீவிரவாத சம்பந்தங்கள்  ஐத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.

பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக, அல் குவைதா, ஐ.எஸ்., அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளிடம், ‘டெலிகிராம், டார்க்வெப்’ போன்ற சமூக வலைதள குழுக்களில் இணைந்து, அவற்றின் வாயிலாக பேசி வந்தார். இவரது நடவடிக்கைகள் பற்றி, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அடிக்கடி எச்சரித்து வருகிறார்கள்[3]. இந்திய பொருளாதாரத்தை சீர்ழிக்க வேண்டும் என்றால், பலர் இவ்வாறு இறங்கி வேலை செய்வதை கவனிக்க வேண்டும். பெங்களூருவுக்கு பயங்கரவாதிகளால் மிரட்டல்களும் வருகின்றன. அதன்படி, பெங்களூருவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பெங்களூருவில் எப்போதும் போலீசார் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.

என்..., அதிகாரிகள் கண்காணிப்பு: கடந்த சில மாதங்களாக முகமது ஆரிபின் நடவடிக்கைகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்[4]. நிச்சயமாக, இப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்கள், லட்சக்கணக்கில் சித்தாந்த தாக்குதல்களை ஊடகங்கள், சித்தாந்திகள், செக்யூலரிஸம், சமதர்மம், சமத்துவம், திராவிட மாடல், கம்யூனிஸம் என்றெல்லாம் பலவித கொள்கைகளில் வெளிப்படையாக இந்தியாவை, இந்தியநாட்டிற்கு பாதகமாக விமர்சனம் செய்து, செய்திகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இத்தகைய தாக்குதல்கள் நடந்து வரும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் மேற்காசிய நாடான சிரியா சென்று, அங்கு அல்- குவைதா பயங்கரவாத அமைப்பில் இணைய திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்[5]. இது பற்றிய தகவல் அறிந்ததும், 11-02-2023 அன்று அதிகாலை 4:00 மணியளவில் அவரது வீட்டில், உள்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்[6].

அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது: அவர் சர்வதேச பயங்கரவாத அமைப்பினருடன் பேசி, அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது, அவரது வீட்டில் கிடைத்த ஆதாரங்களில் இருந்து உறுதியானது[7]. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்[8]. அதாவது கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு போலீசாரும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் (என்.ஐ.ஏ.) இணைந்து அவரை கைது செய்திருந்தார்கள்[9]. வீட்டில் இருந்து லேப்டாப், இரண்டு ‘ஹார்டு டிஸ்க்’குகள் பறிமுதல் செய்யப்பட்டன[10]. தற்போது முகமது ஆரிப் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அதே நேரத்தில் அடுத்த மாதம் (மார்ச்) பெங்களூருவில் இருந்து ஈரானுக்கு சென்று, அங்கிருந்து சிரியாவுக்கு செல்லவும் ஆரிப் திட்டமிட்டு இருந்தார்[11]. இதற்கான விமான டிக்கெட்டுகளையும் அவர் முன்பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[12]. இதற்கு முன்பு ஒரு முறையும் ஈரானில் இருந்து சிரியாவுக்கு செல்ல ஆரிப் முயற்சி செய்திருந்தார்[13]. அந்த சந்தர்ப்பத்தில் அவரால் சிரியாவுக்கு செல்ல முடியாமல் போனதும் விசாரணையில் தெரியவந்துள்ளது[14].

பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது: அவர் சிரியா செல்ல இருந்ததால், மனைவி, குழந்தைகளை உத்தர பிரதேசத்தில் விட்டு செல்லவும், பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி உரிமையாளரிடம் பேசியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன[15]. அதே நேரத்தில் ஆரிப்பின் மனைவியிடமும் 12-02-2023 அன்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்[16]. அதாவது ஆரிப் எங்கெல்லாம் சென்று வந்தார்?. அவரை சந்திக்க யாரெல்லாம் வருவார்கள்? பயங்கரவாத அமைப்புடன் இருந்த தொடர்பு? உள்ளிட்டவை குறித்து ஆரிப்பின் மனைவியிடமும் போலீசார் விசாரித்து சில தகவல்களை பெற்றுக் கொண்டனர். மேலும் தற்போது அவர் வசித்து வந்த வீட்டை காலி செய்யவும் முடிவு செய்திருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர். மனைவி, பெற்றோர், உற்ரோர் முதலியோரும், இவருக்கு அறிவுரைக் கூறியதாகத் தெரியவில்லை. பெங்களூரில் நல்லவேலை, சம்பளம் இருக்கும் பொழுது, ஏன் இவன் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும், அதிலும் சிரியாவுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கவில்லை.

பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது

முகமது ஆரிப் கைது பற்றி கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியதாவது: “உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், பெங்களூரில் தங்கி சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார். புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். நம் நாட்டில் மத உணர்வுகளை துாண்டி விட்டு, அமைதியை சீர்குலைக்க திட்டமிடும் சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்த நபரும் ஒடுக்கப்படுவர்,” இவ்வாறு அவர் கூறினார். உடனே, இவர் பிஜேபிகாரர், இப்படித்தான் பேசுவார், “இஸ்லாமிக்போபியா,” என்றெல்லாம் கூட விளக்கம் கொடுப்பார்கள். அத்தகைய வாத-விவாதங்களும் ஊடகங்களில் நடந்து கொன்டுதான் இருக்கின்றன. ஆனால், தீவிரவாத செயல்களில் ஈடுபடும் மக்களில் ஏன் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று யாரும் பதில் சொல்வதாக இல்லை.

© வேதபிரகாஷ்

12-02-2023.


[1] தினமலர், பெங்களூருவில் அல் குவைதா பயங்கரவாதி கைது!, Updated : பிப் 12, 2023  03:58 |  Added : பிப் 12, 2023  03:56.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3240036

[3] தினத்தந்தி, பெங்களூருவில் பயங்கரவாதி கைது, பிப்ரவரி 12, 2:50 am.

[4] https://www.dailythanthi.com/News/India/nia-arrests-suspected-al-qaeda-terrorist-in-bengaluru-897842

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Al Qaeda: பெங்களூரில் சாப்ட்வேர் எஞ்சினியர் கைதுஅல்கொய்தாவுடன் தொடர்பு?, SG Balan, First Published Feb 11, 2023, 10:58 AM IST, Last Updated Feb 11, 2023, 12:19 PM IST.

[6] https://tamil.asianetnews.com/india/suspected-terrorist-alleged-to-be-linked-with-al-qaeda-has-been-arrested-in-bengaluru-rpwhvd

[7] தினமணி, பெங்களூருவில் அல்கொய்தா பயங்கரவாதி கைது: என்ஐஏ அதிரடி!, By DIN  |   Published On : 11th February 2023 04:20 PM  |   Last Updated : 11th February 2023 06:10 PM

[8] https://www.dinamani.com/india/2023/feb/11/nia-conducts-searches-in-mumbai-bengaluru-against-suspects-linked-to-isis-al-qaeda-3999212.html

[9] தினசரி, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு மென்பொறியாளர் கைது, Sakthi K. Paramasivam, February 11, 2023: 2.41 PM.

[10] https://dhinasari.com/india-news/277683-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, பெங்களூர் ஐடி ஊழியர் பேருக்குதான்.. பின்னணியில் தீவிரவாதி! பொறி வைத்து பிடித்த என்ஐஏ, By Vigneshkumar Updated: Saturday, February 11, 2023, 16:21 [IST]

[12] https://tamil.oneindia.com/news/bangalore/bangalore-techie-turned-terrorist-arrested-by-nia-officals-498246.html

[13] குளோபல்.தமிழ்.நியூஸ், அல்கய்தாவுடன் தொடர்பு? கர்நாடகாவில் IT ஊழியர் கைது!, February 11, 2023.

[14] https://globaltamilnews.net/2023/187397/

[15] நியூஸ்.4.தமிழ், தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ!, By Amutha, Published 20.00 hours February 11, 2023

[16] https://www.news4tamil.com/al-qaeda-terrorist-who-was-ready-to-network-in-the-isi-was-arrested-in-bangalore-nia-took-action/

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம்! (1)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம்! (1)

28-09-2022 அன்று [Popular Front of India (PFI)] தடை செய்யப்பட்டது[1]. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்பது இந்தியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய அரசியல் அமைப்பாகும், இது முஸ்லீம் சிறுபான்மை அரசியலின் தீவிர மற்றும் தனித்துவ பாணியில் ஈடுபடுகிறது. இந்துத்துவா குழுக்களை எதிர்க்க உருவாக்கப்பட்டது, என்று விகிபீடியா வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது. இது இந்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் 28 செப்டம்பர் 2022 [28-09-2022] புதன்கிழமை அன்று ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது[2]. UAPA வின் பிரிவு 2(1)(p) ஆனது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A அல்லது 153B பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்ட எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கை அல்லது குற்றத்தையும் அதன் பொருளுக்குக் கொண்ட ஒரு அங்கமாக “சட்டவிரோத சங்கம்” என்று வரையறுக்கிறது – அதாவது வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கிறது. மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான குற்றச்சாட்டுகள், வலியுறுத்தல்களை உருவாக்குதல். ஒரு சட்டவிரோத சங்கம் என்பது “எந்தவொரு சட்டவிரோத செயலை மேற்கொள்ள நபர்களை ஊக்குவிக்கும் அல்லது உதவுவது, அல்லது உறுப்பினர்கள் அத்தகைய செயலை மேற்கொள்வது முதலியவை அடங்கும்”.

கைதுகளும், அலுவலகங்களுக்கு சீல் வைத்தலும்: 27-09-2022 தடை அறிவித்தாலும், 13-10-2022 வரை அலுவலகங்களுக்கு சீல் வைப்பது தாமகம் ஆகியது. அப்பொழுதே கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு-ஆர்பாட்டங்கள் நடந்தன. தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் தலைமை அலுவலகம் உள்ளது[3]. 01-10-2022 அன்று இதற்கு சீல் வைக்கப் பட்டது[4].தமிழகத்தில் PFIன் அலுவலகங்கள் சீல் வைப்பது கூட தாமதமாகச் செய்யப் பட்டன. ஏற்கனவே சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது[5]. 13-10-2022 அன்று இந்நிலையில், கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள பி.எப்.ஐ தலைமை அலுவலகம் மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கு இன்று வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்[6]. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  27-09-2022 முதல் 13-10-2022 வரையில், தாராளமாக பல ஆவணங்கள், ஆதாரங்களை மறைக்கப் பட்டிருக்கலாம். அத்தகைய காலதாமதம் ஏன் என்று தெரியவில்லை. அப்படி காலதாமதம் செய்தும், சீல் வைத்தபோது, போலீஸ் பாதுகாப்பு ஏன், பதட்டம் ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. இந்தியா முழுவதும் நடைபெறுவது, தமிழகத்திலும் நடைபெறுகிறது, இதில் ஒன்றும் வித்தியாசமோ, மாறுபாடோ இருக்க முடியாது.

27-10-2022 முதல் என்.. விசாரணை, சோதனைகள் ஆரம்பம்: 23-10-2022 அன்று கோவை ஜமேஷா முபின்[7] நடத்திய குண்டு வெடிப்பு எதிரொலியாக பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி சென்னையில் மீண்டும் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்[8]. 27-10-2022 அன்று என்.ஐ.ஏவுக்கு இவ்வழக்கு ஒப்படைத்தப் பிறகு, கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றனர்[9]. 28-10-2022 அன்று NIA முதல் தகவல் அறிக்கை FIR போட்டது[10]. இருப்பினும், சிறப்பு காவல்துரையும் சோதனை எய்தனர் என்ற செய்திகளும் வந்து கொன்டிருந்தன. குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10-ம் தேதி [10-11-2022, வியாழக்கிழமை] சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்[11]. இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு, பண பரிவர்த்தனை ஆகியவை வழங்கி ஆதரவாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து தமிழக காவல் துறைக்கு அனுப்பியது[12]. அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பட்டியலில் உள்ள 4 பேர் வீடுகளில் சென்னை போலீஸார் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

10-11-2022 அன்று மேற்கொன்ட சோதனை: இதனை தொடர்ந்து 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் சென்னை போலீஸார் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஆக, இவ்வாறு தேதிகளில்-நாட்களில் இடைவெளி இருக்கும்பொழுது, 

  • 23-10-2022 முதல் 27-10-2022 வரை,
  • 27-10-2022 முதல் 10-11-2022 வரை
  • 10-11-2022 முதல் 15-11-2022 வரை

சம்பந்தப் பட்டவர்கள், தங்களைப் பற்றிய, மாட்டிக் கொள்ளும் வகையில் உள்ள ஆவணங்களை, சான்றுகளை அப்படியே வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இருப்பினும், சோதனைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.. தமிழக ஆளுனர் முன்பு இத்தகைய கேள்வியை எழுப்பினார் என்றும் கவனிக்கத் தக்கது. துப்பறியும் நிபுணத்துவ ஊடக வல்லுனர்கள் இதைப் பற்றியெல்லாம் மூச்சுக் கூட விடாமல் இருப்பதை கவனிக்கலாம். வெள்ளம் வரும் பொழுது, தடுக்காமல், தடுக்க நடவடிக்கை எடுக்காமல், பிறகு வந்து பார்த்துக் கொள்கிறேன் என்றால், என்னாகும்? அந்நிலைதான் ஏற்பட்டு வருகிறது. 1998ல் நடந்து விட்டது, 2022லும் அரங்கேறிவிட்டது, ஆனால், தப்பித்தாகி விட்டது.

15-11-2022 அன்று 43 இடங்களில் சோதனை: இந்த வழக்கு தொடா்பாக என்ஐஏ தமிழகத்தில் 42 இடங்களில் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. தமிழகத்தில் கோவை, சென்னை, திருவள்ளூா், திருப்பூா், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது[13]. கேரள மாநிலம், பாலக்காட்டில் ஓரிடத்தில் சோதனை நடைபெற்றது. அதேநேரத்தில், கோவையில் மட்டும் 33 இடங்களிலும், சென்னையில் 8 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது[14]. சென்னையில் புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவில் வசிக்கும் பழைய காா்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் மு.நிஜாமுதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை சோதனை செய்தனா். சுமார் 2 மணி நேர சோதனைக்குப் பின்னா், நிஜாமுதீனை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனா். கோவையில் வெடித்த பழைய கார் சுமார் 10 வியாபாரிகளிடம் கைமாறியிருப்பதும், அதில் நிஜாமுதீனும் அந்த காரை வாங்கி விற்றிருப்பதும் தெரியவந்ததால், அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோல என்ஐஏ அதிகாரிகள் வழங்கிய பெயா்ப் பட்டியலின் அடிப்படையில் 4 இடங்களில் சென்னை போலீஸார் சோதனை நடத்தினா்.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] Popular Front of India (PFI) is an Islamic political organisation in India,[5][6] that engages in a radical and exclusivist style of Muslim minority politics. Formed to counter Hindutva groups, it was banned by the Indian Ministry of Home Affairs under Unlawful Activities (Prevention) Act (UAPA) on 28 September 2022 for a period of five years.

[2] Section 2(1)(p) of the UAPA defines an “unlawful association” as an association which has for its object any unlawful activity or offence defined under Sections 153A or 153B of the Indian Penal Code — that is, promoting enmity between different groups and making imputations, assertions that are prejudicial to national integration. An unlawful association is also one that “encourages or aids persons to undertake any unlawful activity, or of which the members undertake such activity”.

[3] மாலைமலர், பாப்புலர் பிரண்ட் சென்னை அலுவலகத்துக்கு சீல்தமிழக அரசு அதிரடி நடவடிக்கை, By Maalaimalar, 1 அக்டோபர் 2022 11:45 AM.

[4] https://www.maalaimalar.com/news/district/tamil-news-pfi-head-office-sealed-in-chennai-519150

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், பி.எப். அமைப்புக்கு தடை: கோவையில் அலுவலகங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்,   Updated: October 14, 2022 3:44:56 pm

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/pfi-ban-officials-seal-offices-in-coimbatore-tamil-news-525222/

[7] Jameesha Mubin, who was questioned by the NIA in 2019 for alleged terror links, was charred to death in suspicious circumstances after an LPG cylinder inside a vehicle he was driving exploded near Kottai Eswaran temple in Ukkadam around 4am on October 23, a day before Diwali. The incident took place around 200 metres from a police patrol.

[8] தினத்தந்தி, #Breaking|| சென்னையில் ISIS அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை, By தந்தி டிவி 15 நவம்பர் 2022 8:06 AM.

[9] https://www.thanthitv.com/latest-news/houses-of-suspected-isis-affiliates-raided-in-chennai-148618

[10] In the FIR filed on October 28, the NIA said 109 articles, including Potassium Nitrate, Black Powder, match box, cracker fuse length of about 2 meters, nitroglycerine, PET powder, aluminium powder, and 9-volt battery, were recovered from Mubin’s residence.

[11] காமதேனு, பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு: சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை, Updated on: 15 Nov, 2022, 10:16 am.

[12] https://kamadenu.hindutamil.in/national/keeping-up-with-terrorist-movements-nia-raids-at-4-places-in-chennai

[13] தினமணி, தமிழகத்தில் 42 இடங்களில் என்ஏஐ சோதனை: கோவை காா் வெடிப்பு வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல், By DIN  |   Published On : 11th November 2022 01:04 AM  |   Last Updated : 11th November 2022 05:34 AM

[14] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/11/nai-raids-42-locations-in-tamil-nadu-important-documents-seized-in-coimbatore-car-blast-case-3947394.html

முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு இல்லையா? – வீடு கொடுக்க அச்சப்படவேண்டிய அவசியம் என்ன? அந்த அச்சத்தை உருவாக்கியது யார்?

மார்ச் 31, 2017

முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு இல்லையா? வீடு கொடுக்க அச்சப்படவேண்டிய அவசியம் என்ன? அந்த அச்சத்தை உருவாக்கியது யார்?

Manushyaputran article

முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு இல்லையா?: எஸ். அப்துல் ஹமீது என்கின்ற மனுஷ்ய புத்திரன் சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார். இவர் தி.இந்துவில் “சிந்தனைக் களம் » சிறப்புக் கட்டுரைகள்” என்ற பகுதியில் “எனக்கு ஏன் வீட்டை மறுக்கிறார்கள்?”, சிலரை பாதித்துள்ளது என்று தெரிகிறது. பொதுவாக, சமீப காலத்தில், டிவி நிகழ்ச்சிகளில் காரசாரமாக, ஆவேசமாக, கத்திக் கொண்டு விவாதம் புரிபவர்களில் ஒருவராக அடைஉயாளம் காணப்படுகிறார். செக்யூலரிஸாத்தோடு வாதம் புரிவது போலக் காட்டிக் கொண்டாலும், இஸ்லாத்தை ஆதரிப்பவராகத்தான் தெரிகிறார். ஆனால், நக்கீரன் இதழில், “ரிசானா – சிறுமிக்கு மரணதண்டனை – பதற வைக்கும் கொடுமை!” என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரைக்கு, முஸ்லிம்களில் சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்[1]. இப்பொழுது நாத்திகவாதி என்ற காரணத்திற்காக, பாரூக் என்ற முஸ்லிம் கொலை செய்யப் பட்டதற்கும், முஸ்லிம்கள் மற்றும் பகுத்தறிவுவாதிகள் அமுக்கி வாசித்து, அமுக்கியே விட்டனர். இந்நிலையில், மனுஷ்ய புத்திரன் கட்டுரையைப் பார்போம்.  ஜயமோகனும், இதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஒரு கட்டுரையை பதிவு செய்துள்ளார்[2]. அதைப் படித்த பிறகு, அவர் சொல்லாத விசயத்தை சொல்ல வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது.

Muslims denied rented house

ஃப்ளாட் கட்டுவதும், வீடு குடி பெயர்வதும்[3]: என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம்.

உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும். கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். ஃப்ளாட் கட்டுவதும், வீடு குடி பெயர்வதும், சென்னை மட்டுமல்ல, நகர விரிவாக்கம் செயல்பாட்டில், ஒரு சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது. 80-90 வயதான, வீட்டு சொந்தக்காரர்களுக்கு, அத்தகைய உணர்ச்சிகள் 10,000% அதிகமாகவே இருக்கும். ஆனானப் பட்ட பெரிய-பெரிய தலைவர்கள், தியாகிகள், புலவர்கள், அரசர்கள் முதலியோர்களது வீடுகள், அரண்மனைகள் முதலியன், இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துள்ள நிலையில், இவரது வருத்தம், ஒன்றுமே இல்லை.

நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது[4].

 

சார், நீங்க முஸ்லிமா?: ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது. நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார்.

அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார். நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார். ‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார். நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். முஸ்லிம் என்ற அடையாளத்தைக் காட்டிக் கொள்ள விரும்புவதே முஸ்லிம்கள் தான். 1950களிலிருந்து, இப்பொழுது வரை கவனித்தால், தாங்கள் முஸ்லிம்கள் என்று காட்டிக் கொள்ள செய்யும் செயல்களை மற்றும் அவர்களது பிடிவாதத் தனத்தைக் கவனிக்கலாம். தங்களை தனிமைப் படுத்திக் கொண்டு காட்டிக் கொள்வதே அவர்கள் தான். அதே போல குறிப்பிட்ட தெருக்களில் அதிகமாக இருக்கும் போது, மற்றவர்களின் மனங்களில் அச்சத்தை உருவாக்குவதும் அவர்கள் தான். பேருந்தில் கூட பக்கத்தில் வந்து உட்கார்ந்தால், குண்டு யாதாவது வைத்து விடுவானோ என்ற அச்சம் எழுவதை யாரும் மறுக்க முடியாது.

அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக்காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே!

ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன். மதச்சார்பின்மைக்காகவும் சமூக நீதிக்காகவும் ஏழுதினால் மரட்டும் போறாது, வாழ்ந்து காட்ட வேண்டும். சமதர்ம நோக்குடன் பிரச்சினைகளை அணுகியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகள் எனும்போது, முஸ்லிம்கட்சிகள், தலைவர்கள் முதலியோரை இவர் எதிர்த்தாரா என்று தெரியவில்லை. நாத்திக-திராவிட கட்சிகளைப் போன்று, இந்து ஆதரவு கட்சிகளை எதிர்ப்பதால் மட்டும், இவர் செக்யூலரிஸப்பழமாகி விட முடியாது.

 

கடக்க முடியாத தண்டனை: நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன்.

ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள். முஸ்லிம் பெயரைக் கேட்டு அஞ்சுவது என்பது குண்டுவெடிப்புகளுக்கு பிறகு ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். பிரெஞ்சு கார்ட்டூன் விசயத்தில், தனது அடிப்படைவாத கருத்தை சொன்னது, தாலி விசயத்தில் பேசியது, பர்தா, தலாக் விசயங்களில் அடக்கி வாசித்தது, முதலியவற்றில் இவரது முஸ்லிம் அடிப்படைவாதம் வெளிப்பட்டது கவனிக்க வேண்டும். . இந்துத்துவா அடிப்படைவாதிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்த்த காரணன்ங்கள் வேறு என்று அறிந்துகொள்வதற்கு ஒன் றூம் கஷ்டம் இல்லை.

மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’

 

என்ன ஆனது பாரம்பரியம்?[5]: சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது.

வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத்தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறையாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை! எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாகூர், நாகப்பட்டினம், கீழக்கரை, வாணியம்பாடி, வேலூர், ஆற்காடு, முதலிய ஊர்களில், இந்துக்கள் நிலையை ஆராயலாமே? கொஞ்சம்-கொஞ்சமாக இந்துக்கள் தங்களது வீடுகளை விற்று விட்டுதானே செல்கின்றனர். இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறையாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? …என்றெல்லாம் இவர் கூறுவது அபத்தமானது, ஏனெனில், முஸ்லிகள் இந்துக்களை காபிர்கள், அசுத்தமானவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ”இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக…” என்பதெல்லாம் அகம்பாவத்தைக் காட்டுகிறது.

என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும். எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’

© வேதபிரகாஷ்

31-03-2017

[1] http://onlinepj.com/unarvuweekly/manusyapuththirana_miruka_puththurana/

[2]  ஜெயமோகன், இஸ்லாமியர்களுக்கு வீடு;  http://www.jeyamohan.in/96889 – .WNyGI8vhXqA

[3] தி.இந்து, எனக்கு ஏன் வீட்டை மறுக்கிறார்கள்?, மனுஷ்ய புத்திரன்,Published: March 29, 2017 08:59 ISTUpdated: March 29, 2017 08:59 IST

[4]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9605234.ece

[5] – மனுஷ்ய புத்திரன், கவிஞர், பதிப்பாளர், ‘காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன்’, ‘எதிர்க்குரல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: manushyaputhiran@gmail.com