Archive for the ‘வளைகுடா’ category

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள் – ஆள்சேர்ப்பு,  மதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (2)!

நவம்பர் 5, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள்ஆள்சேர்ப்புமதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (2)!

Sathya Sarani PFI conversion factory-Vedaprakash

முகமதிய மற்றும் கிருத்துவர்களின்கர் வாபசிசெயல்கள்: “சத்திய சரனி” என்ற நிறுவனம்[1], அவ்வாறு பணம் பெற்றதையும் ஒப்புக் கொண்டார்[2]. அதேபோல, “சத்திய சரனி” யின் பெண்களின் பிரிவு தலைவி, ஜைனபா ஒரு பக்கம் தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறோம், அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப் படுகின்றன என்றும், இன்னொரு பக்கம், இல்லை, தங்களது நிறுவனம், இஸ்லாம் பற்றி போதிக்கிறது, அவ்வளவுதான், என்ற ரீதியிலும் பேசியுள்ளார்[3]. “சத்திய சரணி” இணைதளம், கிருத்துவர்கள், முஸ்லிம்களை ஏமாற்றி, அவர்களுக்கேற்ற முறையில், “கர்-வாபசி” போன்ற மதமாற்றம் செய்து வருகின்றனர், என்று குற்றஞ்சாட்டுகிறது[4]. அவர்கள் எப்படி ஏழை முஸ்லிம்களை மதமாற்றினார்களோ, அதேபோல, மறுபடியும், அவர்களை இஸ்லாத்தில் திரும்ப வரசெய்ய ஆவண செய்வதாகக் கூறிக்கொள்கிறது[5]. இத்தகைய, “கர்-வாபசி”களைப் பற்றி, அறிவுஜீவிகள் விவாதிப்பதில்லை. இத்தகைய மதமாற்றங்களும், “கடவுளின் சொந்த தேசத்தில்” பல கலவரங்களை உண்டாக்கலாம், அமைதியைக் குலைக்கலாம். ஐசிஸ்.ம் இதில் சேர்ந்து விடும் போது, பிரச்சினை தீவிரமாகி விட்டது.

PFI conversion factory- Nov.2017

மதமாற்றத்தில் போட்டியா, அடிப்படைவாதம் வேலை செய்து, தீவிரவாதத்தை அரங்கேற்ற முயற்சியா?: நூற்றுக்கணக்கில் கேரள முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸில் சேர்ந்தது, கொல்லப்பட்டது என்ற விவகாரங்கள் வெட்டவெளிச்சமாக, தினசரி செய்தியாகி விட்டது. போதாகுறைக்கு, அதில் மதமாற்றமும் சேர்ந்து விட்டதாலும், கிருத்துவ பெண்களும் பாதிக்கப் படுவதால், விவகாரம் முக்கியமாகி விட்டது. அதற்குள் இப்பொழுது ஐசிஸில் உள்ள ஆறுபேர் புகைப்படங்களை கேரள போலீஸார் வெளியிட்டது[6]:

  1. அப்துல் கையூம் [Abdul Ghayoom],
  2. அப்துல் மனஃப் [Abdul Manaf],
  3. ஷபீர் [Shabeer],
  4. சஃபான் [Safwan],
  5. சுஹைல் [Suhail] மற்றும்
  6. ரிஸ்வான், சுஹைலின் மனைவி [his wife Rizwana]

ஷாஜஹான் வெல்லுவ கன்டி [Shahjahan Velluva Kandy] என்பவன், தனது ஐசிஸ் தொடர்புகளை, பேஸ்புக் மூலமே தெரிவித்திருக்கிறான்[7]. அல்-குவைதா கவிதைகளை போட்டு, ஐசிஸ் போராளிகள் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கமும் கொடுத்துள்ளானாம்[8]. மதமாற்றம் என்பது கேரளாவில் பெரிய பிரச்சினையாக உள்ளது. கிருத்துவர்-முஸ்லிம்கள் இந்துக்களை மதம் மாற்றுவது என்ற நிலையுள்ளது தெரிந்த விசயமே, ஆனால், கிருத்துவர்-முஸ்லிம்கள் ஒருவரையொருவர் மதமாற்றி, தீவிரவாத காரியங்களில் ஈடுபட வைத்த நிலையில் தான் பிரச்சினை, பூதாகாரமாகி, வெளியில் தெரிய வந்தது. இதனை போட்டி என்றோ, கர்-வாபசி என்றோ சொல்லும் எல்லைகளைத் தாண்டியுள்ளது.

Kannur PFI members joined ISIS- photos- Dinakaran

ஐந்து பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது[9]: ஆறு பேர் கைது செய்யப்பட்டதை பொலீஸார் உறுதி செய்தது[10]. முன்னர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய  ஐந்து பேரை கைது செய்தனர் என்று செய்தி வந்தது[11]. இவர்களிடம் விசாரணை நடத்தியதில்  இந்த மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சிரியாவில் பலியானது உறுதியாகி உள்ளது. இறந்தவர்கள் –

  1. ஷநாத் (வயது 25) சலாட்பகுதியை சேர்ந்தவர்,
  2. ரிஷல் (30) வலாபட்டனம்,
  3. ஷமீர் (45)
  4. அவரது மகன் சல்மான் (20) பப்பினிசேரி,
  5. ஷாஜீர் (25) எச்சூர்

ஆகியோர் என அடையாளம் தெரிந்து உள்ளது[12]. ஆகவே, நிச்சயமாக, இவர்களது பெற்றோர்கள் மறுக்க, மறைக்க முடியாது. ஆனால், தெரிந்து அவர்கள் எப்படி, தம் மகன்கள் ஐசிஸில் சேர ஒப்புக் கொண்டார்கள் என்பது புதிராக உள்ளது. இல்லை, அந்த அளவிற்கு அவர்களும் மூளைசலவை செய்யப்பட்டுள்ளனர் போலும். மேலும் அதே பகுதியை சேர்ந்த 15 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கேரள போலீசாரால் அக்டோபர் 26 ம் தேதி கைது செய்யப்பட்ட U.K. ஹம்சா இவர்களை ஐ.எஸ் நெட்வொர்க்கில் சேர அழைத்துச் சென்றார். அவர்களில் சிலர் இன்னும் சிரியாவில் இருக்கிறார்கள்.

Five Kerala Muslims killed in ISIS

கேரளா ஏன், எப்படி, எவ்வாறு ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்கிறது?: ஐசிஸிக்கு, இந்த மலபார் பகுதியிலிருந்து, தீவிரவாதத்திற்கு எப்படி இளைஞர்கள் சுலபமாகக் கிடைக்கிறார்கள்?  இதைப் பற்றி அலசும் போது கவனிக்க வேண்டிய காரணிகள் சுருக்கமாகக் கொடுக்கப் படுகின்றன[13].

  1. முகமதியரிடையே ஒரு பக்கம் படிப்பின்மை, இன்னொரு பக்கம் ஐ.டி. இஞ்ஜினியரிங் என்று படித்துள்ள நிலை என்றுள்ளது.
  2. ஐ.டி படித்த இளைஞர்கள் சுலபமாக ஜிஹாதித்துவத்திற்கு மாறுவது, பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வது.
  3. மற்ற மத-அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிக் குழுக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது.
  4. வளைகுடா நாடுகளுடன் எல்லோருக்கும் தொடர்புகள் இருப்பது.
  5. வேலையின்மையைப் பயன்படுத்தி, வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்ற நிலையில் ஆள் சேர்ப்பது.

Jihadi terror- Asianet- modified- Vedaprakash

6. அதிக முகமதியர் மக்கட்தொகை உள்ள இடங்கள், கடைகள் முதலிய இடங்களில் முஸ்லிம் அல்லாத இளம்பெண்களை கவர்ந்து, மதம் மாற்றி, லவ்-ஜிஹாத் மூலம் கல்யாணம் செய்து வைப்பது.

7. லவ்-ஜிஹாத் மூலம் வசீகரித்து, பெண்ணோடு அனுப்பி வைப்பது.

8. சம்பந்தப் பட்ட குடும்பத்தினருக்கு தவறாமல், மாதன் தோறும் பணம் வந்துக் கொண்டிருப்பது.

9. விசா, பாஸ்போர்ட், மணி-எக்ஸ்சேஞ்ச், விமான டிக்கெட்,…..போன்றவற்றில் முகமதியர் ஆதிக்கம் செல்லுத்துவதால், பண-பரிமாற்றம், ஆட்கள் எளிதாகச் சென்று வருதல் போன்றவை சுலபமாக நடந்து வருகிறது. விவரங்களும் அவஎர்களுடனே இருந்து விடுகிறது.

10. அனைத்திற்கும் மேலாக அரசியல் செல்வாக்கு, போலிஸ் முதலிய துறைகளில் பெரிய பதவிகளில் இருக்கும் முகமதியர்களின் உதவி முதலியவை அவர்களை சட்டப்பிடிகளிலிருந்தும் தப்பித்துக்க் கொள்ள உதவுகிறது.

இப்பொழுது, கம்யூனிஸ கூட்டாட்சி வந்த பிறகு, அரசுக்கு சித்தாந்த போராட்டங்களில் ஈடுபடவே நேரமில்லாத நிலையில், ஜிஹாதிகள் சுலபமாக தங்களது செயல்களை செய்ய ஆரம்பித்து விட்டனர்[14].

© வேதபிரகாஷ்

04-11-2017

Caliphate of Kerala- Courtesy- Shanknad

[1] PO Karuvambram, Cherani, Manjeri – 676123, Kerala, India, Tel: +91 483 2765010, Email: saranimail@gmail.com,  http://www.sathyasarani.org/

[2] On Tuesday, 31-10-2017, India Today TV aired the explosive sting report which laid bare a nexus between Islamic extremist groups and Popular Front of India. Ahmed Shareef, a senior PFI leader and associate editor of group mouthpiece Gulf Thejas was the first to be caught on camera. He claimed before undercover reporters that a key aim of PFI was to create an Islamic state in India and later spread it to the rest of the world. He also revealed the modus operandi of illegal fund transactions from the Gulf to Kerala. Shareef said that Sathya Sarani in Malappuram, which is considered an Islamic education institution, received a lot of money through hawala.

India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST

[3] AS Zainaba, president of the AFI’s women’s wing, said on hidden camera Sathya Sarani is a conversion factory masquerading as an educational organisation. http://indiatoday.intoday.in/story/kerala-police-pfi-isis-kannur/1/1081364.html

[4] The website of the institution asserted that “Christian missionaries are targeting the poor Muslims from different parts of the state. They are brainwashed and driven to Christianity, exploiting their poverty and lack of religious awareness.” According to the website, Sathya Sarani “could identify such people (Muslims who have been converted to Christianity) and succeed in bringing them back to the faith by way of convincing them the concept of monotheism of Islam.”

https://timesofindia.indiatimes.com/city/kozhikode/sathya-sarani-attempted-gharvapasi-on-christian-converts/articleshow/61447210.cms

[5] Times of India, Sathya Sarani attempted ‘Gharvapasi’ on Christian converts?, M P Prashanth| TNN | Nov 3, 2017, 11:04 IST.

https://timesofindia.indiatimes.com/city/kozhikode/sathya-sarani-attempted-gharvapasi-on-christian-converts/articleshow/61447210.cms

[6] Hours after the India Today TV report , Kerala police released the names and photographs of half a dozen youngsters from the state who are currently with ISIS in Syria.The six, including a woman, have been identified as Abdul Ghayoom, Abdul Manaf, Shabeer, Safwan, Suhail and his wife Rizwana, all hailing from Kannur district. All the men were active PFI workers in Kannur.

India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST

[7] Shahjahan Velluva Kandy, a native of Kerala’s Kannur district, has also used Facebook to call Islamic State fighters ‘role models’ alongside posts on al- Qaeda ‘poetry’..

Daily Mail, Popular Front of India member exposed as ‘ISIS sympathiser’ on Facebook after failing to reach Syria three times and posting al-Qaeda poetry, By SHASHANK SHEKHAR and ARVIND OJHA PUBLISHED: 22:51 GMT, 1 November 2017 | UPDATED: 00:32 GMT, 2 November 2017.

[8] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-5040351/Popular-India-member-exposed-ISIS-sympathiser.html

[9] தினத்தந்தி, .எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி

[10] Deccan Chronicle, 6 more youth from Kerala join ISIS, confirm police, ANI, Published Nov 2, 2017, 7:10 pm IST; Updated Nov 2, 2017, 7:10 pm IST

[11] http://www.deccanchronicle.com/nation/current-affairs/021117/6-more-youth-from-kerala-join-isis-confirm-police.html

[12] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/28140247/Kerala-Police-confirm-deaths-of-five-ISlinked-men.vpf

[13] முதல் ஐந்து காரணிகள் ஏசியா நெட் செய்தியிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளது:

Asianet.newsable, Why India could soon be under a ‘Made in Kerala’ threat, by T. S. Sudhir, October 27, 2017. 10:51 am.

[14] http://newsable.asianetnews.com/editorial/why-india-could-soon-be-under-a-made-in-kerala-threat

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் மற்றும் வளர்க்கும் ஜாகிர் நாயக்கின் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் விதம்.

நவம்பர் 20, 2016

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் மற்றும் வளர்க்கும் ஜாகிர் நாயக்கின் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் விதம்.

Zakir supporting Osama bin laden

இஸ்லாமிய ஆராய்ச்சி பவுண்டேசனின் நடவடிக்கைகள்: மும்பையில் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] நடத்தி வந்தவர் மதபோதகர் ஜாகிர் நாயக். இவர் தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதிகளை எல்லாம் ‘பீஸ் டிவி’ என்ற சேனலுக்கு வழங்கி தனது பேச்சுக்களை ஒளிபரப்பச் செய்தார்[1].  இவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததால், அதை ஒளிபரப்ப இங்கிலாந்து, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது[2]. இப்போது இந்தியாவிற்கு வெளியில் இருக்கும் ஷாகிர் நாயக், ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்றும், அதாவது அமெரிக்காவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் முன்பு பல பிரசாரங்களில் கூறியிருக்கிறார்[3]. அனைத்து விசாரணைகளுக்கும் ஷாகிர் நாயக் ஒத்துழைப்பார் என்று அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்[4]. இருப்பினும் வெளிநாடு சென்ற நாயக் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை[5]. சென்ற வாரம் தனது தந்தை இறந்த போது கூட, வந்தால், கைது செய்யப் படுவோம் என்று அஞ்சி வராமல் தவிர்த்தார் என்று சொல்லப்பட்டது. இதையெல்லாம் கவனிக்கும் போது, வெளிநாட்டில் இருக்கும் நாயக்கிற்கு, விசயங்கள் சென்று சேர்ந்து வருகின்றன என்று தெரிகிறது.

preacher-zakir-naik-inspired-isis-terrorists-but-he-is-not-bothered

மாநில மத்திய அரசுகள் நடவடிக்கை எடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[6].  மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police]  மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[7]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[8]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[9]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல்  பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[10]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூரமாக தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப் படுத்தப்படுவதாக உறுதியானது.

nia-raided-zakir-naik-book-stall-seized-incriminating-documents19-11-2016 அன்று நடந்த சோதனைகள்: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் [National Investigation Agency], அவரது தொண்டு நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், தனது வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவதாக புகார் எழுந்தது. அந்தவகையில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஜாகிர் நாயக் ஐ.எஸ். அமைப்பில் இணைய வைத்ததாக கூறப்பட்டது. வங்காளதேசத்தில் கடந்த ஜூலை மாதம் 2016 நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஒருவர், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் தான் கவரப்பட்டதாக தெரிவித்து இருந்தார். பங்களாதேசமே இதை அறிவித்து, தடை செய்யுமாறுஈந்தியாவைக் கேட்டுக் கொண்டது. இதனால் அவரது உரைகளை இங்கிலாந்து, கனடா மற்றும் மலேசியா நாடுகள் தடை செய்துள்ளன. இதைத்தொடர்ந்து ஜாகிர் நாயக் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் அவரது கல்வி அறக்கட்டளைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய மராட்டிய போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

nia-raided-zakir-naik-global-educationமுறைப்படி மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள்: ஊடகங்கள் தினமும், அரசு நடவடிக்கைகளை பலவிதமாக வர்ணித்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. முக்கிய பிரச்சினைகளை விடுத்து, ஜாகிர் நாயக்கின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும், கைது செய்யப் பட்டால் என்ன செய்வார், ய்ஜடை செய்யப் பட்டால் மேல்முறையீடு செய்வாரா, என்றெல்லாம் விவாதம் என்ற பெயரில் நாயக்கிற்கு சாதகமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தீவிரவாத செயல்களை உலகளவில் கட்டுப் படுத்த எல்லா நாடுகளும் இறங்கியுள்ளன. இந்தியாவில் ஜி.எஸ்.டி அமூல் படுத்தியவுடன், அந்நிய நாடுகளின் முதலீடு அதிகமாகி, தொழிற்சாலைகள் நிறுப்பப்படும். அந்நிலையில், தீவிரவாதிகள் ஒன்றும் செய்யக் கூடாது. அத்தகைய, சுமூகமான நிலையை இந்தியா ஏற்ப்டுத்த வேண்டியுள்ளது. ஆகவே, ஜாகிர் நாயக்கின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்தது.

nia-raided-zakir-naik-irf-seized-incriminating-documentsமுறைப்படி விசாரணை, ஆதாரங்கள் முதலியவற்றுடன் வழக்கு பதிவு செய்த விதம்: சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனால், ஜாகிர் நாயக்கின் ஐ.ஆர்.எப். நிறுவனத்தில் வேலை செய்பவஎகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாயக்கின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், புத்தகங்கள் முதலியவை கொண்டு வரப்பட்ட முழுமையாக அலசிப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிக்கிறேன் என்ற போர்வையில், எவ்வாறு முஸ்லிம்-அல்லாதர்களின் மீது ஜிஹாத் என்ற போரை நடத்துவது, போன்ற தீவிரவாதத்தை போதிக்கும் போக்கு அறியப்பட்டது. இவரால் ஈர்க்கப் பட்டு, ஐசிஸ்.சில் சேர்ந்து, ஓடி வந்தவர்களிடம் விசாரித்து திட்டத்தையும் அறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 15–ந்தேதி [செவ்வாகிழமை 15-11-2016] அறிவித்தது[11]. மேலும் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. இதில் அடுத்த நடவடிக்கையாக ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (மத அடிப்படையில் பகை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் [ Unlawful Activities (Prevention) Act and the Indian Penal Code] பல்வேறு பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை 18-11-2016 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது[12]. தேசிய புலனாய்வுத்துறையின் மும்பை பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர்.

© வேதபிரகாஷ்

20-11-2016

nia-raided-zakir-naik-seized-incriminating-documents

[1] தினகரன், ஜாகிர் நாயக் மீது வழக்கு: 10 இடங்களில் சோதனை: என்.. நடவடிக்கை, Date: 2016-11-20@ 00:02:37.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=260007

[3] பிபிசி.தமிழ், இஸ்லாமிய போதகர் ஷாகிர் நாயக்கோடு தொடர்புடைய மும்பையின் 10 இடங்களில் சோதனை, நவம்பர் 20,2016,11.25 pm.

[4] http://www.bbc.com/tamil/india-38040016

[5]http://www.dinamani.com/india/2016/nov/16/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2599256.html

[6] Deccan Herald, Govt bans Zakir Naik’s organisation, Wednesday 16 November 2016
News updated at 2:37 AM IST.

http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html

[7] The Hindustan Times, IRF ban: Mumbai police await notification, clarity before initiating action, Saurabh M Joshi, Hindustan Times, Mumbai, Updated: Nov 16, 2016 01:10 IST

[8] http://www.hindustantimes.com/mumbai-news/irf-ban-mumbai-police-await-notification-clarity-before-initiating-action/story-iagR2YPHn98Qdxqq8OYIrL.html

[9] http://tamil.oneindia.com/news/india/zakir-naik-ngo-banned-five-years-267327.html

[10] http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html

[11] தினத்தந்தி, தொண்டு நிறுவனங்களில் சோதனை: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 2:26 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 3:45 AM IST

[12] http://www.dailythanthi.com/News/India/2016/11/20022625/Religious-preacher-Zakir-Naik-cases–National-intelligence.vpf

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (1)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (1)

Osama and Ayman Al-Zawahari

Osama and Ayman Al-Zawahari

ஜிஹாதியில் கலக்கும் போதைமருந்துஆயுதங்கள்பெண்கள் வியாபாரம்: ஐஎஸ்ஐஎஸ், தலிபான், அல் காயிதா, பொகோ ஹரம் முதலிய ஜிஹாதி, இஸ்லாமிய திவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் பற்றி அதிக அளவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் செயல்பாடுகள் பல நாடுகளில், பல இஸ்லாமிய இயக்கங்களின் பின்னணிகளில், உள்ளூர் முஸ்லிம்கள் கொடுத்து வரும் ஆதரவுகளில் வெளிப்படுகின்றன. அமெரிக்க உளவாளி ஏஜென்சிகள் இவற்றிற்குள் உள்ள தொடர்புகளை வெளிகாட்டி வருகின்றன[1]. இஸ்லாமிய நாடுகளில் அந்தந்த நாட்டில் நிலவும் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கேற்ப, தமது ஜிஹாதி திட்டங்களை மாற்றியமைத்துச் செயல்படுத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தானத்தில் ரகசியமாக கஞ்சாச் செடிகளை வளர்த்து, அவற்றின் மூலம் மருந்து தொழிற்சாலைகளில் போதை மருந்து தயாரித்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல வழிகளில் அடையச் செய்து விற்று வருகின்றன. இதனால், அவர்கள் சமூகம் பலவிதங்களில் பாதிக்கப்படுவதால், இத்தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் வரும் பணத்தில் ஆயுதங்களை வாங்கி, உலகத்தில் எங்கெல்லாம் சண்டை-சச்சரவுகள் நடந்து கொண்டிருக்கின்றனவோ, அந்த மோதல்களில், தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள இயக்கங்களுக்கு ஆயுதங்களை விற்கவும் செய்கின்றன. கலைசெல்வங்களைக் கொள்ளையெடுத்து, விற்றும் பணத்தைக் குவிக்கிறது. இந்நிலையில் தான், பெண்களை மோசமாக நடத்தும் போக்கு அவர்களிடம் வெளிப்படுவது திகைப்படையச் செய்வதாக உள்ளது.

பொகோ ஹரம் தலைவன்

பொகோ ஹரம் தலைவன்

பொகோ ஹராம் குறிப்பாக பெண்களை பாலியல் ரீதியில் தாக்குவது ஏன்?: ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக, பொகோ ஹராம் பெண்களின் மீதாக நடத்தப் படும் பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிர்ச்சியடைய வைக்கிறது. இடைக்காலத்தைப் போல, சிறுமிகள், இளம்-பெண்கள் மற்றும் பெண்களைக் கடத்துவது, செக்ஸுக்கு உபயோகப்படுத்துவது, பிறகு ஜிஹாதி தொழிஸ்சாலைக்குக் குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பது என்ற புதிய யுக்தியில் இறங்கியுள்ளதை அறிய முடிகிறது. ஆனால், அதே நேரத்தில், இன்னொரு வகையான இஸ்லாமிய சித்தாந்திகள், இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், பெண்களுக்கு முழு உரிமகளைக் கொடுக்கிறது, என்றெல்லாம் அதிரடியாக பிரச்சாரம் செய்து வருவார்கள். எனினும் எப்பொழுதெல்லாம், ஜிஹாதி குண்டுவெடிப்புகள், கொலைகள், கற்பழிப்புகள் முதலியவை நடக்கும் போது அமைதியாக இருப்பார்கள். இவ்வாறு இரட்டை வேடங்கள் போட்டுக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பொகோ ஹராம் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, முதன்முதலாக இஸ்லாமிய ராஜ்யத்தைத் தோற்றுவித்தோம் என்று பறைச்சாற்றிக் கொண்டு, எல்லோருடைய கவனத்தையும் இழுத்துள்ளது.

போகோ ஹராம் தீவிரவாத இயக்க தலைவன் அபுபக்கர் ஷெக்காவு.

போகோ ஹராம் தீவிரவாத இயக்க தலைவன் அபுபக்கர் ஷெக்காவு.

முஸ்லிம்கிருத்துவர்களாக மதமாற்றப் பட்ட நைஜீரிய மக்கள்: நைஜீரியா, கிழக்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடா பகுதியில் கடற்கரையைக் கொண்டுள்ள நாடாகும். வடக்கே நைஜர் மற்றும் சட் நாடுகள் உள்ளன; கிழக்கே சட் மற்றும் காமரூன், மேற்கே பேனின் நாடுகள் உள்ளன. இந்நாட்டில் 50% முஸ்லிம்கள், 48% கிறிஸ்தவர்கள் (அதில் 74% புரொடெஸ்டென்ட், 25% கத்தோலிக்க மற்றும் 1% மற்ற பிரிவுகள்), மீதம் 1.5% புராதன மதங்களைப் பின்பற்றுகிறார்கள். “உன் நம்பிக்கை உனக்கு, என் நம்பிக்கை எனக்கு” என்று மற்ற நம்பிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு, நம்பிக்கைகளுக்கு மற்றும் உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் அல்லது நியாயப்படி-சட்டப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இத்தகைய மதமாற்றம் அங்கு ஏற்பட்டிருக்காது. அதாவது, இப்பொழுது மதரீயில் முஸ்லிம்-கிறிஸ்தவர்களுக்கிடையில் கலவரங்கள் ஏற்படுகின்றன எனும்போது, சமூகத்தை எவ்வாறு மதமாற்றங்கள் பாதித்துள்ளன என்பதை மற்ற நாட்டு சமூகங்கள் கவனிக்க வேண்டும். பெட்ரோல்யத்தை நம்பி வாழும் இந்நாட்டு பொருளாதாரம் நன்றாக இருக்கும் நிலையில் தான் தீவிரவாதத்தின் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

Boko Karam hide-outs - Wall Street Journal picture

Boko Karam hide-outs – Wall Street Journal picture

ஜிஹாதித்துவமும், பொருளாஹாரமும்: கடந்த ஐந்தாண்டுகளில் முஸ்லிம்கள் ஜிஹாதி பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளதால், மதகலவரங்கள் ஆரம்பித்துள்ளன. கிருத்துவ அடிப்படைவாதிகளும் கலவரத்தைத் தூண்டி விட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இங்கு வேடிக்கை என்னவென்றால், இந்த நம்பிக்கையாளர்கள் எல்லாமே கருப்பின மக்கள் தாம்[2]. அவர்களை தங்களது சொந்த மதங்களினின்று மதமாற்றி, மக்களைப் பிரித்து மோதவிட்டுள்ளது போன்ற நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இதனைத்தான் உலக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமோ, கிருத்துவமோ மக்களை இணைக்காமல் பிரித்துக் கொண்டிருக்கிறது மற்றுமல்லாது, பிரித்துக் கொன்றுக் கொண்டிருக்கின்றன. இருமதங்களாலும் அமைதியை உண்டாக்க முடியாமல், சர்ச்சை-சண்டை-போர்-கலவரம்-தீவிரவாதம்-பயங்கரவாதம் இவற்றைத்தான் உண்டாக்கி வருகின்றன.

boko-haram-map

boko-haram-map

போகோ ஹராம்இஸ்லாமிய இயக்கமாசேனையா? பொகோ ஹரம் தோற்றுவித்தவனான மொஹம்மது யூசுப் என்பவனின் போதனைகளை அறிந்து கொண்டால், ஜிஹாத் எப்படி வேலை செய்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். 2010ல் அவன் சுத்தமான சலாபியத்துவ முஸ்லிம்களான கீழ்கண்டவர்களைப் பின்பற்றச் சொன்னான்[3]:

  1. அல்-குவைதாவைத் தோற்ருவித்த ஒசாம பின் லேடன்.
  2. தலிபன்.
  3. சையத் குதுப், எகிப்தைய சித்தாந்தி.
  4. இபின் தய்மியா

பொகோ ஹராம் என்றால் மேற்கத்தைய படிப்புமுறை எதிப்பு என்று பொருள் – (“Western education is forbidden”). பொகோ என்றால் போலி, ஹராம் என்றால் விலக்க / தடைசெய்யப்பட்டது, அதாவது, மேற்கத்தைய படிப்புமுறைக்குத் தடை என்ற பொருளில் உள்ளது. ஜமாது அஹ்லிஸ் சுன்னா லிட்ட-அவதி வல்-ஜிஹாத் [Jama’atu Ahlis Sunna Lidda’Awati Wal-Jihad (Arabic: جماعة أهل السنة للدعوة والجهاد‎, Jamā’at Ahl as-Sunnah lid-Da’wah wa’l-Jihād] என்று பெயரைக்கொண்டுள்ளது, மற்றும் மக்களுக்கு ஜிஹாத் போதிக்கும் அல்லது சுன்னாவுடனான னஜ்க்கள் அல்லது விலாயத் அல் சுடான் அல் கர்பி [Wilāyat al Sūdān al Gharbī (Arabic: ولاية السودان الغربي‎], மேற்காசிய பிரதேச ஜிஹாதி குழு, என்று பலவாறு அழைக்கப்படுகிறது. வடகிழக்கு நைஜீரியாவில் தனது மறைவிடங்களைக் கொண்டிருந்தாலும், அண்டைநாடுகளான நைஜர், சட், காமரூன் முதலிய இடங்களில்ய்ம் செயல்பட்டு வருகின்றது.

boko-haram-western education is a sin

boko-haram-western education is a sin

கடந்த ஐந்தாண்டுகளாக மதகலவரங்கள் நடப்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. இத்தகைய மத கலவரங்கள், கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள், சர்ச்சுகளின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது போன்ற தீவிரவாத காரியங்களுக்கு இஸ்லாமிய பொகோ ஹராம் என்ற இயக்கம் (The Islamist Boko Haram group) பொதுவாகக் குற்றம் சாட்டப்படுகிறது[4]. இது இஸ்லாம் பெயரால் கிருத்துவர்களை மட்டுமல்ல, முஸ்லீம்களையே கொன்று வருகிறது என்று எடுத்துக் காட்டுகின்றனர்[5]. ஜனவரி 3.2015 அன்று சுமார் 150 பேரைக் கொன்றுள்ளது, இது பாகா கொலை [2015 Baga massacre] என்றழைக்கப்படுகிறது[6]. ஜனவரி.12, 2015 அன்று காமரூனில் நுழைந்து, அரசு படைகளைத் தாக்கியது[7]. அரசு அறிக்கையின் படி 143 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஜனவரி.18, 2015 அன்று காமரூன் கிடராமங்களில் நுழைந்து 60-80 பேர்களைக் கடத்திச் சென்றது. அவற்றில் 50 பேர் 10-15 வயதைச் சேர்ந்தவர்கள். சுன்னி-ஷியா போர்கள், கொலைகள் முதலியவற்றை முகமதியர்கள் மறைத்தாலும், அவை இஸ்லாமிய நாடுகளிலேயே காலம்-காலமாக நடத்துக் கொண்டுதான் வருகின்றன. ஜிஹாதி சித்தாந்தத்தில் உருவான இவ்வியக்கம் முஸ்லீம்கள் அல்லாதவர்களின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 2012ல் மட்டும் சுமார் 380 பேர் மதகலவரங்களில் கொல்லப்பட்டுள்ளனர்[8]. நைஜிரிய மக்களுக்கிடையே இதைப் பற்றிய கருத்து மாறுபட்டதாக இருக்கிறது[9]. கென்யாவிலிருந்து கடத்தி வரப்படும் தந்தவியாபாரத்தில் ஈடுபட்டிப்பதாகவும் குற்றஞ்சாட்டப் படுகிறது[10]. பெட்ரோல், தந்தம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து கிடைக்கும் பணம் தீவிரவாதத்தை வளர்க்கத்தான் உபயோகப்படுத்தப் படுகிறது. ஆயிரக்கணக்கான அகதிகள் அண்டை நாடுகளுக்குச் செல்வதை அந்நாடுகள் தடுக்கின்றன. நைஜருக்கு வந்த 3,000 அகதிகள் திருப்பி அனுப்பப் பட்டனர்[11]. சட் எதிர்-தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவுகிறது[12]. கடந்த ஆண்டுகளில் இந்த இயக்கதினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத-ஜிஹாதி தாக்குதல்கள் கீழ்கண்டவாறுள்ளது[13].

6 June 2011 Bombing attack on a beer garden in Maiduguri, leaving 25 dead and 12 injured
10 July 2011 Bombing at the All Christian Fellowship Church in Suleja, Niger State
11 July 2011 The University of Maiduguri temperory closes down its campus citing security concerns
12 August 2011 Prominent Muslim Cleric Liman Bana is shot dead by Boko Haram
26 August 2011 2011 Abuja bombing
4 November 2011 2011 Damaturu attacks
25 December 2011 December 2011 Nigeria bombings
5–6 January 2012 January 2012 Nigeria attacks
20 January 2012 January 2012 Kano bombings
28 January 2012 Nigerian army says it killed 11 Boko Haram insurgents
8 February 2012 Boko Haram claims responsibility for a suicide bombing at the army headquarters in Kaduna.
16 February 2012 Another prison break staged in central Nigeria; 119 prisoners are released, one warder killed.
8 March 2012 During a British hostage rescue attempt to free Italian engineer Franco Lamolinara and Briton Christopher McManus, abducted in 2011 by a splinter group Boko Haram, both hostages were killed.
31 May 2012 During a Joint Task Force raid on a Boko Haram den, it was reported that 5 sect members and a German hostage were killed.
3 June 2012 15 church-goers were killed and several injured in a church bombing in Bauchi state. Boku Haram claimed responsibility through spokesperson Abu Qaqa.
Logo_of_Boko_Haram.svg

Logo_of_Boko_Haram.svg

பொகோ ஹராம் இயக்கத்திற்கு பணம் எப்படி கிடைக்கிறது: ஹக்காணி குழுமங்கள் மூலம் இவர்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. தவிர பரஸ்பர உதவிகளையும் செய்து கொண்டு வருகின்றன. பொகோ ஹராம் அவ்வப்போது செலவுகளுக்கு என்று வங்கிகளைக் கொள்ளையடிக்கிறது. வணிகர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோரை பயமுறுத்தி பணம் பறிக்கிறது. “பணம் கொடுக்காவிட்டால் கடத்தி விடுவோம்’’ என்பதுதான் அச்சுறுத்தல், இவையெல்லாம் எப்படி நக்சலைட், போடோ முதலிய குட்டங்கள் செய்து வருகின்றனவோ அத்தகைய பணம்-பரிக்கும் வேலை தான். சில சமயம் பெரும் தொழில் அதிபர்களை கடத்தி வைத்துக் கொண்டு அவர்களைப் பணயக் கைதிகளாக்கி பணம் பெறுவதும் உண்டு. வெளிநாட்டு செல்வந்தர்கள் என்றால் அதற்கான ரேட் அதிகம். சமீபத்தில் பிரெஞ்சு குடும்பம் ஒன்றை பணயக் கைதிகளாக்கி 30 லட்சம் டாலர்களைப் பறித்தது போகோ ஹராம்[14]. ‘’ஐ.எஸ். அமைப்புக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு’’ என்றிருக்கிறார். இராக், சிரியா பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் அமைப்பு ஐ.எஸ். இப்படி அதற்கான ஆதரவை வெளிப்படுத்தியதன் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள ஐ.எஸ்.போராளிகளின் ஆதரவைத் தாங்கள் பெற முடியும் என்று நம்புகிறது போகோ ஹராம்[15].

© வேதபிரகாஷ்

09-05-2015

[1]  Combating Terrorism Center brings out monthly CTC Sentinel issue that contains the global activities of Islamic terror groups, their network, funding agencies and other links with which they have been operating in many countries.

[2] இனரீதியில், இந்த சொற்றோடர் பிரயோகம் செய்யப்படவில்லை. அங்கு நடக்கும் சமூகவிரோத, மக்கள்விரோத குற்றங்களை ஆயும் ரீதியில் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது.

[3] https://www.ctc.usma.edu/posts/a-biography-of-boko-haram-and-the-baya-to-al-baghdadi

[4] http://www.nytimes.com/2012/02/26/world/africa/in-northern-nigeria-boko-haram-stirs-fear-and-sympathy.html?_r=1

[5] http://allafrica.com/stories/201206220837.html

[6] “Boko Haram crisis: Nigeria estimates Baga deaths at 150”. BBC News. 12 January 2015.

[7]  “Cameroon repels Boko Haram attack, says 143 militants killed”. Yahoo News. 12 January 2015.

[8]  http://news.antiwar.com/2012/06/17/39-killed-as-church-bombs-spark-religious-violence-in-nigeria/

[9] http://tribune.com.ng/index.php/opinion/42937-are-boko-haram-terrorists-human

[10] Kathleen Caulderwood (16 May 2014). “Fake Charities, Drug Cartels, Ransom and Extortion: Where Islamist Group Boko Haram Gets Its Cash”. International Business Times. Retrieved 10 January 2014.

[11] http://www.dinamani.com/world/2015/05/08/3000-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/article2802500.ece

[12] the Republic of Chad is building a reputation as a leading African state in the fight against terrorism. Chad will provide more than a third of the 8,700 soldiers—3,000 men, nearly as many as Nigeria’s 3,250—currently assigned to the African Union (AU) approved Multi-National Joint Task Force (MNJTF),1 and Chadian forces have already claimed successes against Boko Haram in its strongholds along Nigeria’s borders.

[13] http://en.wikipedia.org/wiki/Boko_Haram

[14] Kathleen Caulderwood (16 May 2014). “Fake Charities, Drug Cartels, Ransom and Extortion: Where Islamist Group Boko Haram Gets Its Cash”. International Business Times. Retrieved 10 January 2014.

[15] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3/article7010500.ece