Archive for the ‘வட்டிக்குக் கடன்’ category

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை – வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!

நவம்பர் 2, 2022

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரைவழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!

திருக்குறளை வைத்து பணம் டிபாசிட் பெற்று மோசடி செய்த ஷேக் முகைதீன்: திருக்குறள் புத்தகம் விற்பனை வாயிலாக, மதுரை தனியார் நிறுவனம், 65.46 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு விசாரணையை, மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் முடிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது[1]. மதுரை, சின்ன சொக்கிகுளம் ஹக்கீம் அஜ்மல்கான் ரோட்டில், பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டது[2]. இங்கு, ’10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, 100 திருக்குறள் புத்தகங்கள் வாங்க வேண்டும்; 37வது மாதத்தில், 46 ஆயிரத்து, 900 ரூபாய் முதிர்வுத் தொகை வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது[3]. இத்தவறான வாக்குறுதியை நம்பி, 45 ஆயிரத்து, 501 பேர், 65 கோடியே, 46 லட்சத்து, 87 ஆயிரத்து, 508 ரூபாய் முதலீடு செய்தனர்[4]. இதை முதலீட்டாளர்களுக்கு தராமல் ஏமாற்றியதாக நிறுவனம் மற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹுசைன் உட்பட சிலர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், 2010ல் மோசடி வழக்கு பதிந்தனர்[5].  இது பற்றிய விவரங்களை, எனது முந்தைய, சென்ற வருட பதிவில் காணலாம்[6].

பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் முதல் ஷேக் முகைதீன் வரை (2010-2021)[7]: மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் முகைதீனை (62), மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[8]. முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: “போலீஸ் துறையில் விரல் ரேகை பிரிவு நிபுணராக 1970ல் சேர்ந்தார். 2005ல் விருப்ப ஓய்வு பெற்றேன். சென்னையில் பசிபிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவர் கடிகாரம் வழங்கியது. அதைப்பார்த்து, தனியாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மதுரையில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினேன். இதன் நிர்வாக இயக்குனர்களாக நானும் (ஷேக்முகைதீன்), எனது மனைவி மனைவி ஜானு, மகன்கள் சர்தார் உசேன், யாகூப் உசேன் மற்றும் சிவக்குமார், முபாரக்அலி ஆகியோர் இருந்தோம்”.

2011ல் விசாரணைக்கு வழக்கு வந்தது: 06-05-2010 அன்று ஷேக் முகைதீன் கைது செய்யப் பட்டார். ஷேக் முகைதீன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர், 2005ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்தாண்டு டிசம்பர் 2009 வரை லாபத் தொகையை கொடுத்தார். இதன் பின், காலம் தாழ்த்தினார். சிலர், போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, முதலீடு பணத்தை திருப்பிக் கொடுத்தார். இன்னும் வாங்காதவர்கள் நேற்று நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருமங்கலத்தைச் சேர்ந்த தேவேந்திரன், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, ஷேக் மைதீனை இன்ஸ்பெக்டர் நேதாஜி கைது செய்தார். முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

2022ல் மறுபடியும் விசாரணைக்கு வழக்கு வந்தது: டான்பிட் எனப்படும் மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது[9]. பாதிக்கப்பட்டோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில், நீதிபதி எம். நிர்மல்குமார் முன் முறையிட்டதாவது: “டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக்கோரி ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹுசைன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டான்பிட் நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையில் முன்னேற்றம் இல்லை. விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு, ‘குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எங்கள் தரப்பில் தாமதம் ஏற்படவில்லை. 2,685 சாட்சிகளை விசாரித்து ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்கத் தயார்’ என, தெரிவித்தது. நீதிபதி, ‘பாதிக்கப்பட்டோரின் நலன் கருதி கீழமை நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மாதந்தோறும் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டார்.

மோசடி வழக்கை விசாரித்த மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றடான்பிட்நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு: “முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிக்கும் நோக்கில், எதிர்மனுதாரர்கள் மனுக்கள் மேல் மனு தாக்கல் செய்துள்ளனர். முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது.சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் கூறினார்.

மே 2023ற்குள் பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வழக்கு முடிய வேண்டும்: ஆக, இதை எதிர்த்து மேல்முறையீடு செய்து, உச்சநீதி மன்றத்திற்குச் சென்று காலந்தாழ்த்தி இருப்பதும் தெரிகிறது. அதனால் தான்  முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது, என்றாலும், ஷேக் முகைதுனுக்கு ஏதோ ஆதரவு உள்ளதால், இது நடந்துள்ளது. சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்றாலும், இழுத்தடிப்பு வேலை நடந்துள்ளது.  நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. நீதிபதி, ‘பாதிக்கப்பட்டோரின் நலன் கருதி கீழமை நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மாதந்தோறும் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டுள்ளார். இப்பொழுது நவம்பர் 2022, அதாவது, மே 2023ற்குள் பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வழக்கு முடிய வேண்டும். என்னாகுமோ பார்க்கலாம்.

வேதபிரகாஷ்

02-11-2022


[1] தமிழ்.இந்து, திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி: வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு, செய்திப்பிரிவு, Published : 01 Nov 2022 06:39 AM; Last Updated : 01 Nov 2022 06:39 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/890545-order-to-close-the-case-in-6-months.html

[3] தினமலர், திருக்குறள் புத்தகம் விற்பனை மோசடி விசாரணையை முடிக்க ஐகோர்ட் கெடு,  தமிழகம் செய்தி, Added : நவ 02, 2022  00:34

[4] https://www.dinamalar.com/news_detail.asp?

[5] ஜி.7.தமிழ், திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி: வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு, Order to close the case in 6 months, 1 day ago g7tamil

[6]  வேதபிரகாஷ், திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை,  ஆகஸ்ட் 8, 2021.

[7]  தினமலர், மோசடி நிதி நிறுவன உரிமையாளர் வீடுகளுக்கு ‘சீல்’, மே 10,2010,00:00  IST

[8] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18450

[9] https://g7tamil.in/tag/%E0%AE%B0%E0%AF%82-65-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/

அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?

நவம்பர் 12, 2010

அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?

இரண்டு குழந்தைகளுடன் தாய் கொலை: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா? மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கள்ளக்காதலர்களின் மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்[1]. ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு (24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் குப்பான்வலசையில் குடியேறினர். முத்துச்சாமி மதம் மாறி, அகமது என, பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு முகமது அஸ்லம் (7) அஜிராபானு (5) என்ற குழந்தைகள் உள்ளனர்.

08-11-2010 அன்று மாயமான ஆதிலாபானு, குழந்தைகள்; வேலைக்காக முத்துச்சாமி அகமது மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே மனகசப்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன் (ஆகஸ்ட் 2010), தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் பாரதிநகரில் ஆதிலாபானு குடியேறினார். கடந்த நவ., 8ம் தேதி ஆதிலாபானு, குழந்தைகள் மாயமாகினர். ஹம்சத்நிஷா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார். அதாவது தாய்க்கு தனது மகளின் கள்ள உறவுகள் தெரிந்தே இருக்கிறது.

11-11-2010 அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகள் பிணங்கள் கிடந்தன:  இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலை மதுரை நோக்கிச் செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு தரைப்பாலத்தின் கீழ், நேற்று (11-11-2010) அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு பிணமாக கிடந்தார். அருகே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் விராலிபட்டி பிரிவு பாலத்தின் கீழ், வெள்ளை வேட்டியில் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் முகமது அஸ்லம், அஜிராபானுவின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், பானுவின் தாயை அழைத்துக்கொண்டு வாடிப்பட்டி சென்றார்.

நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருந்ததனராம்: காதலுக்காக மதம் மாறி வந்த முத்துசாமியை இவ்வாறு மோசம் செய்யலாமா? கொலை சம்பவத்தில், கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலே காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவதால், இதில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு இந்து தேவநாதன் செய்தலால், தான் மனம் மாறி முஸ்லீமாக மாறினேன் என்ற்யு பெருமையாக சொல்லிக் கொண்டது நினைவிற்கு வருகிறது. இப்பொழுது, அந்த மாதிரி மதம் மாறிய இந்துக்கள் என்ன சொல்வர்? இவளும்தான், ஒரு பெண்-தேவநாதன் போலத்தானே நான்கு பேரிடத்தில் சோரம் போயுள்ளாள்.

கதறி அழுத அகமது என்ற முத்துசாமி – காதல் கணவர்: மனைவி, குழந்தைகள் இறந்த தகவலை மலேசியாவில் உள்ள முத்துச்சாமிக்கு அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்ட அவர், போனில் கதறி அழுதுள்ளார். “இறந்தவர்களை பார்க்கும் இடத்தில் கூட நான் இல்லையே,” என, கதறியுள்ளார். முஸ்லீமாக மாறியும், இவரது காதல் பாவமாகத்தான் போய் விட்டது. இது என்ன காதலோ, மத மாற்றாமோ? இப்பொழுது அழுவதனால் காதல் புதுப்பிக்கப்படுமா அல்லது காதலி உயிர் பெற்றெழுவாளா, அகமது என்பாளா, முத்துசாமி என்பாளா? அல்லாவிற்கே வெளிச்சம்.

மைனர் காதல் மங்கியது, வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது: தனது 16வது வயதில் வேறுபிரிவை சேர்ந்த முத்துச்சாமியை ஆதிலா பானு காதலித்ததற்கு ஊரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மறைந்த மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சீனிக்கட்டியின் கார் டிரைவராக முத்துச்சாமி பணியாற்றினார். சீனிகட்டியின் தாய் பசீர் அம்மாள் இவர்களது திருமணத்தை நடத்திவைத்தார். மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்தது. கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவித்த சாத்தான்குளத்தினர் இப்பொழுது என்ன சொல்லப்போகின்றனர்? முத்துசாமி ஆதிலா பானுவை காதலித்ததற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அகமது ஆனவுடன் முகமது மலர்ந்து அமையாகி விட்டனர் போலும். அனால், பிறகு, மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்த போது, கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டபோது, ஏன் அவர்கள் கண்டுகொள்ளவில்லை? இது சமூகப் பிரச்சினை மட்டுமல்லாது, மற்ற பிரச்சினைகளும் சம்பந்தப்பட்டுள்ளன. குறிப்பாக அந்த இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. இனியாவது, இத்தகைய பிரச்சினைகள் வராத மாதிரி செய்வதற்கு ஏதாவது வழி உண்டா?

வேதபிரகாஷ்

© 11-11-2010


[1] தினமலர், இரண்டு குழந்தைகளுடன் தாய் கொலை: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா? பதிவு செய்த நாள்: நவம்பர் 11, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=124503