பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)
மாநில சிபிசிஐடி போலீஸா, என்ஐஏ–வா என்ற வாதம்: பர்த்வான் குண்டுவெடிப்பு அந்த மாவட்டம் மட்டுமே தொடர்புடைய சம்பவமல்ல, அது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். அதில் அன்னிய சக்திகளுக்கும் தொடர்புள்ளது. முன்னதாக, பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மாநில சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மாநில அரசின் அதிகாரத்தில் தேவையில்லாத குறுக்கீடு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியிருந்தார். மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, கடந்த 2008-ஆம் ஆண்டில் என்ஐஏ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும் இவ்வாறு, ஒரு மாநிலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு தன்னிச்சையாக உத்தரவிட்டது இதுதான் முதன் முறையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், மற்ற விவகாரங்களையும் தெரிந்து கொண்ட நிலையில் (சாரதா-போன்ஸி பணம் முதலியவற்றை) அவர் அவ்வாறு எதிர்த்திருப்பாரா என்று தெரியவில்லை.
பர்த்வான் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்ட சென்னைவாசிகள்: இவர்களுக்கு உதவியர்கள் கேரளா, தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் உள்ளார்கள் என்பதால், விசாரணை அங்கும் ஆரம்பித்துள்ளன[1]. முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[2]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
கைதாகி சென்னையில் இருப்பவர்களுக்கும், இதற்கும் உள்ள தொடர்புகள்: இதேபோல், பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் வழக்கில் கியூ பிராஞ்ச் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. அருண் செல்வராசனுக்கும், ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஜாகீர் உசேனுக்கும் உள்ள தொடர்பு பற்றி கியூ பிரிவு போலீசார் ஏராளமான ஆவணங்களை அளித்துள்ளனர். அதில் ஜாகீர் உசேன் மூலம் அருண் செல்வராசன் கள்ளநோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான தகவல் அளிக்கப்பட்டிருந்தது.கடந்த 2012ம் ஆண்டு அருண் செல்வராசன் மாநகராட்சியில் போலி பிறப்பு சான்றிதழ் பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் எடுத்த தகவலும் தெரியவந்துள்ளது. கியூ பிரிவு போலீசார் அளித்த தகவல்கள் அடிப்படையில் 200 கேள்விகளை தயார் செய்து அருண் செல்வராசனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதிலும் பல திடுக் கிடும் தகவல்களை அவர் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களுடன் தேசிய புலானாய்வு அமைப்பின் எஸ்பி பிராபகர் ராவ் டெல்லி சென்றுள்ளார். சென்னை வரும் ராமசாஸ்திரி அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்தும் ஆலோசிக்க உள்ளதால் டெல்லியிலிருந்து பிரபாகர் ராவ் இன்று சென்னை திரும்புகிறார். சென்னையில் தங்கியுள்ள ராமசாஸ்திரி சென்னை தேசிய புலனாய்வு செயல்பாடுகள் மற்றும் அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை வழங்குவார்[3].
கொல்கத்தாவில் ரகசியமாக சிகிச்சைப் பெற்ற மூன்று நபர்கள்: சென்னையில் ரகசியமான மூன்று பேர்கள் இருந்தது போல, பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடைந்த மூவரை ரகசியமாக, ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க வைத்து,. சிகிச்சைக் கொடுத்ததை என்.ஐ.ஏ கண்டு பிடித்துள்ளனர். மேலும் அந்த வசதியை திரிணமூல் காங்கிரஸ்காரர் செய்து கொடுத்துள்ளார்[4]. பார்க் சர்கஸ் நர்சிங் ஹோம் என்ற மருத்துவ மனையில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. அவர்கள் முன்னுக்கு முரணாக பேசியுள்ளனர். அவர்கள் தாங்கள் பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடவில்லை, ஆனால், அக்டோபர்.5 அன்று மால்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்ததாகக் கூறிக் கொண்டனர். போலீஸார் நரேந்திர பூரில், இங்கிலீஸ் பஜாரில் குண்டு வெடுப்பு நடந்தத்யாக அறிவித்துள்ளனர். ஆனால், போலீஸார் இந்த மூவரை கொல்கொத்தாவிற்கு அனுப்பினாலும், மருத்துவமனை பெயரைக் குறிப்பிடவில்லை. இவ்வாறு, தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப் படுவது, சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.
சென்னை சென்ட்ரல் – பர்த்வான் குண்டுவெடிப்புகளுக்குள்ள தொடர்பு: மே.1, 2014வ் அன்று சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில், கௌஹாதி எக்ஸ்பிரஸில், குண்டுகள் இரண்டு வெடித்ததில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கொல்லப்பட்டாள் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்[5]. இப்பொழுது பர்தவான் குண்டுவெடிப்பை விசாரிக்கும் போது, இரண்டு குண்டுவெடிப்புகளுக்கும் உள்ள சம்பந்தம் வெளிப்படுகிறது, குறிப்பாக சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. இதுதவிர வெடிகுண்டுகளின் தயாரிப்பு முறை, உபயோகப் படுத்தப் பட்டுள்ள ரசாயனப் பொருட்கள் (அம்மோனியம் நைட்ரேட், காரீய ஆக்ஸைடு முதலியன), அவற்றின் கலவை விகிதம் ஒரே மாதியாக உள்ளன. குண்டுவெடிப்பின் தன்மையில் வேறுபாடுள்ளதே தவிர, மற்ற விசயங்களில், இரண்டும் ஒன்றே என்று எடுத்துக் காட்டுகின்றன. குண்டுகளைத் தயாரித்தவர்கள் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே இடத்தில் கற்றுக்கொண்ட முறையின் மூலம் கற்றுக் கொண்ட முறை என்று தெரிகிறது. மேலும் பர்த்வானில் குண்டு வெடித்தவுடன் ரஜிரா பீபி இந்த மூவருடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். இதன் மூலம் “ஸ்லீப்பர் செல்” முறையும் வெளிப்படுகிறது.
அருண் செல்வன் தொடர்பு, விசாரணை: மேலும் செப்டம்பரில் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் அருண் செல்வன் கைது செய்யப் பட்டதும் முக்கியமாகிறது. என்.ஐ.ஏ இந்த விசயத்தில் அவனிடம் விசாரணை மேற்கொண்டது. ஏனெனில், பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தப் பட்ட இடங்களில், தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களின் புகைப்படங்கள் சிக்கின. அவை அருண் செல்வராஜ் எடுத்து அனுப்பியிருக்கலாம் என்று கருதப் படுகிறது. மேலும் கௌஹாத்தி எக்ஸ்பிரசில் குண்டு வைக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் இருக்கக் கூடும், உண்மையில், தமிழகத்திலிருந்து வெடிப்பொருட்கள், ரசாயன கலவைகள் முதலியன அசாமிற்கு எடுத்தச் செல்ல முயன்றிருக்கலாம். அம்முயற்சியில், சரியாக கையாளப் படாதலால், தவறி வெடித்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. எது எப்படியாகிலும், தமிழகத்திற்கும் ஜிஹாதிகளுக்கும் உள்ள தொடர்பு மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.
சாரதா-போன்ஸி ஊழலுக்கும், வங்காளதேச தீவிரவாத குழுக்கும் உள்ள சம்பந்தம்[6]: சாரதா-போன்ஸி ஊழலில், பணம் வங்காள தேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய வங்கிற்குச் சென்றதை அமுலாக்கப் பிரிவு கண்டுபிடித்தது. இது ஊழல் பணத்தை நல்ல பணமாக்கும் அல்லது கணக்கில் உள்ள பணம் போல காட்டும் முயற்சி என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சுமார் ரூ.60 கோடிகள் இவ்வாறு வங்காளதேச இஸ்லாமிய வங்கிக்கு, மேற்கு வங்காள அரசியல்வாதிகள் மூலம் சென்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு விசாரணை மூலம், இவ்விவரங்களை ஆராய நேர்தால், திரிணமூல் முகமூடி கிழிந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள் போலும். ஒரு பக்கம் சாதாரண மக்களிடமிருந்து பணம் பெற்று, அவர்களை ஏமாற்றி, ஆனால், அதே பணத்தை தீவிரவாத செயல்களுக்கு திருப்பிவிடும், திரிணமூல் காங்கிரஸ்காரர்களைரேன் மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும். இந்த இஸ்லாமிய வங்கிற்கும், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கும் தொடர்புள்ளது. இதன் மூலம் ஜே.எம்.பிக்கு பணம் சென்று, அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் வந்திருக்கும்[7]. இப்பணத்தினால், இவர்கள் பர்த்வானில் இடத்தை வாங்கி, அங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியுள்ளனர்.
© வேதபிரகாஷ்
17-10-2014
[1] http://timesofindia.indiatimes.com/india/Bardhaman-blast-NIA-probe-leads-to-JK-Tamil-Nadu-Kerala/articleshow/44787458.cms
[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=113757
[3] தினகரன், பர்த்வான் குண்டுவெடிப்பு: சென்னையை சேர்ந்த 3 பேருக்கு தொடர்பு, 17-10-2014
[4] http://timesofindia.indiatimes.com/india/NIA-suspects-link-between-Bardhaman-Chennai-blasts/articleshow/44819492.cms
[5] http://timesofindia.indiatimes.com/india/NIA-suspects-link-between-Bardhaman-Chennai-blasts/articleshow/44819492.cms
[6] Abhishek Bhalla, Bangladesh terror group thought to be behind Burdwan blast were ‘funded by Saradha ponzi scam‘, Published: 23:36 GMT, 13 October 2014 | Updated: 23:36 GMT, 13 October 2014, Daily Mail, UK.
[7] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2791507/bangladesh-terror-group-thought-burdwan-blast-funded-saradha-ponzi-scam.html
அண்மைய பின்னூட்டங்கள்