Archive for the ‘ரேப்’ category

கற்பழிப்பு விசயத்தில் கற்பழித்த இமாமும், ஆஸம் கானும், ஒரே மாதிரி பேசுவதேன் – உபியில் கற்பழிப்பு வீடியோக்கள் விற்பதேன்?

ஓகஸ்ட் 31, 2016

கற்பழிப்பு விசயத்தில் கற்பழித்த இமாமும், ஆஸம் கானும், ஒரே மாதிரி பேசுவதேன் – உபியில் கற்பழிப்பு வீடியோக்கள் விற்பதேன்?

ஆஸம் கான் பேச்சு

.பி.யில் கற்பழிப்பு காட்சியை வீடியோ எடுத்து 150 ரூபாய் வரை விற்கும் கொடூரமும் நடக்கிறது[1]: உ.பி.யில் கற்பழிப்புகள் தொடர்கதையாகி விட்ட நிலையில், கற்பழிப்பு காட்சியை வீடியோ எடுத்து 150 ரூபாய் வரை விற்கும் கொடூரமும் நடக்கிறது. உ.பி.யில் அடிக்கடி கற்பழிப்பு குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த வெள்ளி(27-07-2016)யன்று இரவில் நெடுஞ்சாலையில் ஒரு காரை வழிமறித்து தாயையும் மகளையும் ஒரு கும்பல் கற்பழித்தது. சுமார் 3 மணி நேரம் கொடூரமான முறையில் நடந்து கொண்ட அந்த கும்பல், துப்பாக்கி முனையில் இந்த கொடுமையை அரங்கேற்றி உள்ளது. இது தொடர்பாக 3 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடுவதாக கூறுகிறார்கள். அதே இடத்தில் தொடர்ந்து 3 முறை இது போன்ற கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் ஒரு ஆசிரியை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். இப்படி தொடரும் இந்த கற்பழிப்புகளை வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர். இதை ஒரு தொழிலாகவே நடத்துவது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ காட்சியை இப்போது சிடி வடிவில் விற்கவும் துணிந்துவிட்டார்கள். உபி கடைவீதிகளில் 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.rape-video sale in UP 30 வினாடி முதல் 5 நிமிடம் வரை ஓடக்கூடிய வகையில் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் என்று பெயர் சொல்லியே விற்கப்படுவதாகவும் தினமும் ஆயிரக்கணக்கான சிடிக்கள் விற்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆபாச சிடி எல்லாம் காலம் கடந்தது. இப்போது இது நிஜத்தில் நடந்தது என்று கூறியே ஆக்ராவில் விற்பதாகவும் கூறப்படுகிறது. பென் டிரைவரை கொண்டு கொடுத்தால், அதில் பதிவு செய்தும் கொடுக்கிறார்கள். சமீபத்தில் பள்ளி மாணவி தனது பாய்பிரண்டுடன் வந்தபோது, அவனை அடித்து விரட்டிவிட்டு கற்பழித்த கொடுமையான காட்சியை, மாணவியை பிளாக்மெயில் செய்வதற்காக மொபைலில் எடுத்துள்ளனர். அதுதான் தற்போது விற்பனை ஆவது தெரிய வந்துள்ளது[2]. இமாம், ஆஸன்கான் போன்றே பேசியிருப்பதும் நோக்கத்தக்கது.

Maulana Anwarul Haq Imam announced 51 lakhsதாய்மகள் கற்பழிப்பும், ஆஸம்கானின் ஆபாச பேச்சும்[3]: உத்தரபிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27-07-2016) இரவு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நொய்டாவில் இருந்து ஷாஜகான் பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் புலந்த்‌ஷர் என்ற இடத்தில் இரும்பு கம்பியை போட்டு தடை ஏற்படுத்தி ஒரு கும்பல் காரை நிறுத்தியது. கார் நின்றதும் காரில் இருந்த ஆண்களை கட்டிப்போட்டு விட்டு தாய்-மகளை அந்த கும்பல் கற்பழித்தது. பிறகு நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்[4]. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.  இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற புலந்த்‌ஷர் கும்பல் பலாத்கார சம்பவத்தில் மேலும் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. அதில் முக்கியமான குற்றவாளியும் ஒருவர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச அமைச்சர் ஆசம் கான் நிருபர்களிடம் கூறுகையில், இது அரசுக்கு எதிரான சதி சம்பவம் என கூறியிருந்தார்[6].

Raped imam with CM Akhilesh Yadavபெண்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது: இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இனிமேலும் உத்தரபிரதேசத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை என கூறினர். மேலும், ஆசம்கான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர். இதுகுறித்து, விசாரித்த சுப்ரீம்கோர்ட், ஆசம்கான் போன்ற அரசியல்வாதிகள் கருத்து வழக்கின் போக்கை திசை திருப்பிவிடும் என்றும், தனது கருத்து குறித்து கோர்ட்டில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது[7]. ஆக, இவையெல்லாம் ஒரே நேரத்தில், வாரத்தில், மாதத்தில் நடப்பதாலும், பேச்சும்-செயலும்-நடவடிக்கைகளும் இருப்பதாலும், உண்மையில் சதி செய்வது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், இந்த இமாம் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

© வேதபிரகாஷ்

31-08-2016

Raped imam with Akhilesh Yadav

[1] தினமலர், கற்பழிப்பு வீடியோ கடைகளில் விற்பனை: உபியில் 150 ரூபாய்க்கு விலைபோகும் கொடூரம், 04 ஆகஸ்ட் 2016, 05:44 PM

[2] http://www.dinamalarnellai.com/cinema/news/12649

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சிறுமி, தாய் பலாத்காரம்.. கண்டபடி கருத்து கூறிய .பி அமைச்சர் மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல், By: Veera Kumar, Published: Monday, August 29, 2016, 12:44 [IST]

[4] மாலைமலர், புலந்த்ஷர் கற்பழிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளி உட்பட மேலும் 3 பேர் கைது, பதிவு: ஆகஸ்ட் 09, 2016 00:01

[5] http://www.maalaimalar.com/News/National/2016/08/09000139/1031529/Three-more-persons-including-the-main-accused-in-the.vpf

[6] http://tamil.oneindia.com/news/india/bulandshahr-rape-remark-sc-pulls-up-azam-khan-261428.html

[7] http://www.thehindu.com/news/national/sc-takes-note-of-azam-khans-remark-on-bulandshahr-gang-rape/article9045527.ece

கற்பழிப்பில் கூட மதம் பார்க்கும் முஸ்லிம்கள், முஸ்லிம்களை ஆதரிக்கும் முல்லாயம் சிங் யாதவ், தட்டிக் கேட்கத் தயங்கும் கூட்டணி சோனியா-பிரியங்கா பெண்மணிகள்!

ஏப்ரல் 27, 2014

கற்பழிப்பில் கூட மதம் பார்க்கும் முஸ்லிம்கள், முஸ்லிம்களை ஆதரிக்கும் முல்லாயம் சிங் யாதவ், தட்டிக் கேட்கத் தயங்கும் கூட்டணி சோனியா-பிரியங்கா பெண்மணிகள்! 

ராஜ் தாக்கரே, முல்லாயமிற்கு அம்மா, சகோதரிகள் எல்லோரும் இருக்கிறார்கள் அல்லவா என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.

ராஜ் தாக்கரே, முல்லாயமிற்கு அம்மா, சகோதரிகள் எல்லோரும் இருக்கிறார்கள் அல்லவா என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.

கற்பழிப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்ற முல்லாயம்: உத்தரபிரதேச மாநிலம், மொரதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம்சிங் கலந்து கொண்டு பேசினார்[1]. அப்போது அவர், “ பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள். அவர்கள் அப்படி-இப்படி என்றுதான் இருப்பார்கள். இளம் வயதினர் தவறிழைப்பது சகஜம். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பது சரியல்ல.  அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கக்கூடாது, மத்தியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால்,  கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை விதிக்கும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவோம்” என கூறினார்[2].  இதனை கட்சி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளனர். இந்தக்கருத்துசர்ச்சையைஏற்படுத்திஉள்ளது. வழக்கம் போல ஆஸம் கானும் பேசியிருக்கிறார். இதனால், உபி மக்கள் இத்தகைய அரசியல்வாதிகளை நம்பி ஆட்சியை ஒப்படைப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், முசபர்நகர் கலவரமே, முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை கலாட்டா செய்தது முதல் மானபங்கம், கற்பழிப்பு என்று வளர்ந்ததால் ஏற்பட்டது என்பது நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்[3]. ராஜ் தாக்கரே, முல்லாயமிற்கு அம்மா, சகோதரிகள் எல்லோரும் இருக்கிறார்கள் அல்லவா என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.

Azmi-mullayam-rape-graphic

Azmi-mullayam-rape-graphic

முல்லாயம் ஏன் கற்பழிப்பில் கூட முஸ்லிம்களை ஆதரிக்கிறார்: முல்லாயம் ஒன்றும் இப்படி திடீரென்று பேசிவிடவில்லை. அவர் எப்பொழுதும் முஸ்லிம்களை தாஜா செய்வதில் வல்லவர். சென்ற வருடம் முஹ்ஹமது ஆஸம் கான் (உபி அமைச்சர்) கூட்டு கற்பழிப்பு வழக்குகள் எல்லாம் ஒரு மாதத்தில் முடிக்கப் படவேண்டும் என்றார்[4]. முசபர்நகர் கலவரங்களுக்கு இவருக்கு பங்கு உள்ளது[5]. கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை கைது செய்ய வேண்டாம் என்று போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தார். ஆரம்பத்திலேயே, கற்பழிப்பில் ஈடுபட்ட முஸ்லிம்களை கைது செய்திருந்தால், கலவரமே நடந்திருக்காது. வழக்குகள் பொதுவாக ஆண்டுக்கணக்கில் நடக்கும். அவ்வாறு ஒருவேளை நீட்டித்தால், போலீசார் உண்மையினை சொல்லக் கூடும், சொன்னால், இவரது பங்கு வெளிப்பட்டு விடும். ஆனால் அவை மறைக்கப்பட்டது. மொஹம்மது ஆஸம் கான் என்ற பாராளுமன்ற விவகார அமைச்சர் பிப்ரவரி 2014ல், புதிய கற்பழிப்புச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப் படாது என்று உறுதி அளித்தார்[6]. இவையெல்லாம், கற்பழிப்பிலபீடுபட்ட முஸ்லிம் இளைஞர்களை காப்பாற்றுவதற்குத்தான் என்று ஊர்ஜிதம் ஆகிறது. நிர்பயா வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட முஸ்லிம் இளைஞன் சிறுவன் என்று சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கிறான்.

Mullayam, Abu Azmi rape islam - punishment - 2014.

Mullayam, Abu Azmi rape islam – punishment – 2014.

அபு ஆஸ்மி என்கின்ற அக்கட்சியின் இன்னொரு தலைவர் முஸ்லிம் என்ற ரீதியில் பேசியது: இந்த நிலையில் முலாயம்சிங் யாதவ் கருத்துக்கு நேர் எதிராக, அந்தக் கட்சியின் மராட்டிய மாநில தலைவர் அபு ஆஸ்மி,  மும்பையில் இருந்து வெளிவருகின்ற பிரபல மிட்-டே[7] என்கின்ற ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கருத்து வெளியிட்டார்[8]. ‘கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரணதண்ட னைகூடாது’ என்ற முலாயம் சிங்  யாதவ் கருத்து பற்றிய கேள்விக்கு அவர் விரிவான பதில் அளித்து கூறியதாவது: திருமண பந்தத்துக்கு அப்பால், எந்தவொரு பெண்ணும், மற்றொரு ஆணுடன் சம்மதித்தோ அல்லது சம்மதிக்காமலோ செக்ஸ் உறவு கொண்டால், அந்தப் பெண்ணை தூக்கில் போட வேண்டும்.  கற்பழிப்புக்கு ஆளாகிற பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்.  இஸ்லாமிய மதத்தில், கற்பழிப்புக்கு தூக்குதான் தண்டனை.  ஆனால் இங்கே பெண்களுக்கு எதுவும் நேர்வதில்லை.  பெண் குற்றவாளி என கண்டு கொண்டாலும் கூட. இந்தியாவில் நீங்கள் ஒரு பெண்ணின் சம்மதத்துடன் அவளோடு செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் அதில் பிரச்சினை இல்லை.  ஆனால், அந்தப் பெண் புகார் செய்தால் அது பிரச்சினை ஆகிவிடும். இப்போதெல்லாம் இப்படி நிறைய விவகாரங்கள் வருவதைப் பார்க்க முடிகிறது.தங்களை ஒருவர் தொட்டால் இளம்பெண்கள் புகார் செய்கிறார்கள்.  அப்படி தொடாவிட்டாலும் புகார் கூறுகிறார்கள். இதனால், அது பிரச்சினையாகிறது.  அந்த ஆணின் மதிப்பை சீரழித்து விடுகிறது. சம்மதித்தோ, சம்மதிக்காமலோ கற்பழிப்பு என்று ஒன்று நடந்தால்,  இஸ்லாமில் கூறி உள்ளபடி தூக்கில் போட வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.

Islam rape father-in-law  daughter-in-law 2014

Islam rape father-in-law daughter-in-law 2014

திருமணமானாலும் சரி, திருமணமாகாவிட்டாலும் சரி, ஒரு ஆணுடன் செல்கிறாள் என்றால், இருவரையும் தூக்கில் போட வேண்டும்: சரி, கற்பழிப்பு பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டபோது அபு ஆஸ்மி, “ஒரு பெண்ணின் சம்மதத்துடன் செக்ஸ் உறவு நடந்தாலும் சரி,  திருமணம் ஆகியிருந்தால் அதை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்[9].அபு ஆஸ்மியின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.  இப்படி அபு ஆஸ்மி சர்ச்சை கருத்துக்களை கூறுவது ஒன்றும் புதிதல்ல. டெல்லியில் துணை மருத்துவ மாணவி ஒருவர் பஸ்சில்  6 காமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது அபு ஆஸ்மி,  “உறவினர் அல்லாத ஆண்களுடன் பெண் வெளியே போகக் கூடாது.  உறவு இல்லாத ஒரு ஆணுடன் இரவில் சுற்றித் திரிவதற்கு அந்தப் பெண்ணுக்கு என்ன அவசியம் வந்தது? இதை தடுத்து நிறுத்த வேண்டும்”, என கூறியது நினைவு கூரத் தக்கது. இந்த அபு ஆஸ்மியின் மறுமகள், ஆயிஸா தகியா ஆஸ்மி, ஒரு கவர்ச்சி நடிகை, அவரது புகைபடங்களை பார்க்கும் போதே அவர் எப்படி நடிக்கத் தயாராக உள்ளார் என்பது தெரியும். நடிக்கும் போது, பல ஆண்களுடன் சென்றிருப்பார், சினிமாவில் நடிக்கும் போது பல ஆண்களும் தொட்டிருப்பார்கள். இவற்றை இஸ்லாம் அனுமதிக்காது என்றால், எந்த முஸ்லிம் பெண்ணும் சினிமாவில் நடிக்க முடியாது. அம்மறுமகள், தனது தந்தை கூறியது பற்றி மிகவும் அசிங்கப் படுகிறேன், வெட்கப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்[10]. மகன் பர்ஹன் ஆஸ்மியும் அவ்வாறே கூறியுள்ளார்[11].

Mullayam-Ragul-rape-2014

Mullayam-Ragul-rape-2014

மகாராஷ்டிரா பெண்கள் ஆணையம் முன்பு ஆஜராகி எழுத்து மூலம் கொடுத்த பதில்:  திருமண பந்தத்துக்கு வெளியே பாலியல் உறவுவைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போடவேண்டும் என்ற தனது கருத்தை மகாராஷ்டிரா பெண்கள் ஆணையத்தில் ஆஜராகி அபு ஆஸ்மி உறுதிப்பட தெரிவித்தார். பெண்கள் திருமணபந்தத்துக்கு வெளியே வேறு ஒரு ஆணுடன் உறவுவைத்தால்,  அந்த பெண்ணை தூக்கில் போடவேண்டும் என்று மராட்டிய மாநில சமாஜ் வாடி கட்சிதலைவரும், எம்.எல்.ஏ.வுமான அபு ஆஸ்மி சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார்[12]. பெண்களின் மனதை புண்படுத்தும்படி பேசியதற்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு மகாராஷ்டிரா பெண்கள் ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி,  அபு ஆஸ்மி நேற்று பெண்கள் கமிஷனில் அதன் தலைவர் சுஷிபென் ஷா முன்னிலையில் ஆஜரானார். அப்போது, எழுத்துப் பூர்வமாக அவர் விளக்கம் அளித்தார். அதில், திருமணபந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் தண்டிக்கப் படவேண்டும் என்ற தனது கருத்தை உறுதிப்பட தெரிவித்தார்[13]. பின்னர் அபு ஆஸ்மி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”எங்களது மதம் திருமணபந்தத்துக்கு வெளியே பெண்களை பாலியல் உறவுவைக்க அனுமதிக்காது. ஆணும்,  பெண்ணும் திருமணபந்தத்தை மீறியோ அல்லது பரஸ்பர சம்மத்துடன் உறவு வைத்தாலும் அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும்.  இது போன்ற சந்தர்ப்பங்களில், பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்.  தாமாக முன்வந்து ஆணுடன் பாலியல் உறவு வைத்து கொள்ளும் அவர்கள், பின்னர் ஆண்கள் மீது புகார் கொடுக்கிறார்கள்.  இதனால் பேரழிவு விளைவுகள் ஏற்படுகிறது”, என்றார்.

Mullayam-Ragul-rape-death- 2014

Mullayam-Ragul-rape-death- 2014

பெண்கள் ஆணையம்  பதிலடி: அபு ஆஸம் தனது, முஸ்லிம் என்ற போக்கில் ஏதோ இந்திய சட்டங்கள் தனக்கு ஒவ்வாது என்பது போல வாதிட்டதை விமர்சித்து, பெண்கள் ஆணைய தலைவர் சுஷிபென்ஷா, ”இந்திய அரசியலமைப்பு சட்டம், உச்சநீதி மன்றம் போன்றவை குடும்ப வன்கொடுமை சட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. முஸ்லிம் பெண்கள் உள்பட அனைத்து மதபெண்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது என்று கூறினார். நமது நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் சாதி, மதம், இனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பெண்களுக்கும் சமமானது.  சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் இதுபோன்ற பிற்போக்கு கருத்துக்களை வெளியிடக் கூடாது” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்[14].  என்னத்தான் நாகரிகமாக இருந்தாலும், அடிப்படைவாதம் முஸ்லிம்களை ஆட்டிப் படைக்கும் போது, அவர்கள் இப்படித்தான் உள்ளார்கள் என்று வெளிப்படுகிறது. இருப்பினும் செக்யூலரிஸப் பழங்கள் இதனைத் தட்டி கேட்கவில்லை.

Sonia Imam secularism 2014

Sonia Imam secularism 2014

குவியும்கண்டனம்…என்று “தி இந்து” வெளியிட்டுள்ளது[15]: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், மூத்த தலைவர் அபு ஆஸ்மி ஆகியோரின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  ஆண்களுக்கு கர்ப்பப்பை இருந்திருந்தால் இதை இயல்பானதாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுவார்களா? நமது ஆணாதிக்க,  சாதிய சமுதாயம் இப்படிப்பட்ட கருத்துகளை பேசக்கூடிய சௌகரியத்தை தந்திருக்கிறது. ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட பெண்களை சந்தோஷ கருவிகளாகத்தான் பார்ப்பார்கள் என்பதை இந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. என்று கூறியுள்ளது. சமூகஆர்வலர் வ. கீதா  கூறியது, “இவர்கள் வேண்டுமென்றே கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி பேசுகிறார்கள்.  பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை இயல்பாக எடுத்து கொள்ள வேண்டுமென்றால்,  இயல்பாக ஆண்கள் வக்கிர புத்தியுடையவர்கள், இம்சிக்கக் கூடியவர்கள் என்று கூறுகிறாரா? இவர்கள் பெண்களைப் பற்றி எப்போதுமே உயர்வாக பேசியதில்லை”. மருத்துவக் கல்லூரி மாணவி ஷில்பா கூறியது, “திருமண உறவுக்கு அப்பாற்பட்ட உடலுறவு கொள்ளும் பெண்களை தூக்கிலிட வேண்டுமானால், மனைவியைத் தவிரவேறு பெண்களுடனும், பாலியல் தொழிலாளிகளுடனும் உடலுறவு கொள்ளும் ஆண்களை என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள்? ஆண் தவறு செய்தால் “கொஞ்சம் அனுசரித்துப் போ” என்று கூறும் இந்த சமூகத்துக்கு பெண்ணை தூக்கிலிட வேண்டும் என்று கூறும் தகுதியில்லை”, என்றாராம்.

priyanka attacking modi 2014

priyanka attacking modi 2014

கற்பழிப்பில் யுபி முதலிடம்: ஆனால், இவையெல்லாம் அபு ஆஸம், ஆஸம் கான், முல்லாயம் சிங் முதலியோருக்கு எட்டப் போவதில்லை. கற்பழிப்பு என்று வரும்போது, 2011லிருந்து வடவிந்தியாவில் உபியில் தான் அதிகமாக உள்ளது[16]. கற்பழிப்பில் முதலிடம் அல்லது உபி மாடல் என்று இதை யாரும் பேசுவதில்லை. பெண்களான சோனியா, பிரியங்கா முதலியோர் உபியில் பிரச்சாரம் செய்யும் போது, இதைப் பற்றிப் பேசுவது கிடையாது. மத்தியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை விதிக்கும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவோம்” என கூறினார்[17]. இதனை கட்சி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஊடகப் புலிகள் இதைப் பற்றி அலசுவதில்லை. கூட்டணி சோனியா-பிரியங்கா பெண்மணிகளும் இதனைத் தட்டிக் கேட்கத் தயங்குகின்றன. மோடி “ஸ்னூப்பிங்” செய்கிறார் என்று கிண்டலடித்த பிரியங்காவிற்கு, இந்த ரேப் சமாச்சாரம் பெரிதாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

27-04-2014

[1] Samajwadi Party chief Mulayam Singh Yadav has sparked an outrage with his latest comments on rape. According to news reports, the SP leader said in a Moradabad rally in Uttar Pradesh that, ‘men commit mistakes but they can’t be hanged for it.’ Yadav was referring to the Shakti Mills gangrape case where the men were sentenced to death by a court for raping a photo-journalist under the new rape law. Yadav said, “Boy and girl develop differences later on in the relationship, when that happens, the girl goes on gives a statement saying that she was raped… Now those three have been sentenced to death…Kya rape main phansi di jayegi (Will you hand out death sentences in rape)…Ladke hain galti ho jati hai (they are boys they make mistakes.) This kind of law should be changed and we will do that.”

[2] http://www.firstpost.com/topic/person/mulayam-singh-yadav-profile-15081.html

[3] http://headlinestoday.intoday.in/programme/up-gangrape-victims-akhilesh-government-uttar-pradesh-government-submission-supreme-court/1/343212.html

[4]The Uttar Pradesh Urban Development minister yesterday (P ress Trust of India  |  Varanasi  February 4, 2013)  said here that witnesses turning hostile in such cases should be treated at par with the guilty and should be tried by law. He said police should expeditiously file chargesheets in such cases to enable trials to be completed within a month.

http://www.business-standard.com/article/pti-stories/trials-in-gang-rape-should-be-finished-in-a-month-azam-khan-113020400283_1.html

[5] Khan, the Muslim face of Akhilesh Yadav’s cabinet, allegedly put pressure on cops that people from one community should not be arrested. Headlines Today | September 18, 2013

http://indiatoday.intoday.in/video/muzaffarnagar-riots-operation-riot-for-votes-azam-khan-uttar-pradesh-police/1/310384.html

[6] Parliamentary affairs minister Mohammad Azam Khan on Tuesday assured the House that the government would find means to ensure the new rape law was not misused. Azam was replying on the concern raised by BJP MLA Suresh Khanna that the new rape law was being misused to settle scores with political opponents.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/No-misuse-of-rape-law-assures-Azam-Khan/articleshow/31012831.cms

[7] http://www.mid-day.com/articles/shocking-women-having-sex-should-be-hanged-says-abu-azmi/15222050#sthash.nSilsAtR.dpuf

[8] http://www.maalaimalar.com/2014/04/12092118/molested-woman-punishment-abu.html

[9]மாலைமலர்,கற்பழிப்புக்குஆளாகிறபெண்ணுக்கும்தண்டனைவிதிக்கவேண்டும்: அபுஆஸ்மி, பதிவுசெய்தநாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 12, 9:21 AM IST

[10] Ayesha Takia Azmi, a Bollywood actor, who is married to Azmi’s son Farhan, said on Twitter that she and her husband were “deeply embarrassed” and “ashamed” on his father-in-law’s remarks.

http://indiatoday.intoday.in/story/abu-azmi-remark-on-women-ayesha-takia-azmi-farhan-azmi/1/355159.html

[11] http://zeenews.india.com/news/nation/shamed-by-father-in-law-abu-azmi-s-statements-ayesha-takia_923734.html

[12] http://tamil.oneindia.in/news/india/sp-leader-abu-azmi-explains-his-punish-women-too-remarks-women-199264.html

[13]  தமிழ்ஒன்இந்தியா,திருமணபந்தத்துக்குவெளியேபாலுறவுகொள்ளும்பெண்களைதூக்கில்தான்போடனும்அபுஆஸ்மி, Posted by: Mayura Akilan, Updated: Saturday, April 26, 2014, 10:00 [IST]

[14] http://www.dailythanthi.com/2014-04-25-SP-leader-Abu-Azmi-explains-his-punish-women-too-remarks-to-Maharashtra-womens-commission

[15] http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/article5902912.ece

[16] SP’s manifesto has also promised that it will seek to change the new rape-law if it does come to power. When it comes to rape, UP had the highest rapes in any state in North India for 2011. For SP leaders to believe that rape isn’t such a serious problem and that it is the law that needs to change, just highlights how difficult it will be to tackle rape in UP.

[17] http://www.firstpost.com/topic/person/mulayam-singh-yadav-profile-15081.html