Archive for the ‘ரவிச்சந்திரன்’ category

“திருமணம் என்னும் நிக்காஹ்” படம், ஷியா முஸ்லிம்கள் எதிர்ப்பு, முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?

மே 30, 2014

“திருமணம்  என்னும் நிக்காஹ்”  படம்,  ஷியா முஸ்லிம்கள் எதிர்ப்பு,  முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?

திருமணம் என்னும் நிக்காஹ்.2

திருமணம் என்னும் நிக்காஹ்.2

இந்து பையன், முஸ்லிம் பெண் காதல் முதலியன:  “திருமணம் என்னும் நிக்காஹ்” என்ற தலைப்பும்,  அது எதைப் பற்றிய கதை என்ற தகவலும் வெளியானதிலிருந்தே,  அந்தப் படத்துக்கு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆட்சேபணை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப் பட்டது[1] என்று “தமிள்.ஒன்.இந்தியா” போட்டு வைத்தது.  சென்ற வருடமே வெளிவந்திருக்க வேண்டிய படம் வெளிவரவில்லை,  காரணமும் சொல்லப் படவில்லை[2]. மே 15  வெளிவருகிறது என்று அறிவித்தார்கள்,  ஆனால்,  தேதி தள்ளிவைக்கப்பட்டது என்றார்கள்[3]. “தி இந்துவில்”  வந்த விமர்சனம் இப்படத்தின் கதையை அலசியுள்ளது.  ஒரு இந்து பிராமண பையன், முஸ்லிம் பெண்ணைக் காதலிக்கிறான்.  இரு குடும்பங்களை மையமாக வைத்துக் கொண்டு விவரணங்கள் செல்கின்றன.  இத்தகைய படங்களை எடுப்பதில் அபாயம் இருக்கிறாதா என்ற கேள்வியை எழுப்பி, படத்தில் சரிசமமாக எல்லாவற்றையும் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படத்தில் மொஹ்ஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் விழாக்கள் விவரமாகக் காட்டப்படுகின்றன. அதேபோல, ஆவணிஆவட்டம்,  நவராத்திரி, கொலு போன்ற விழாக்களும் சித்தரிக்க ப்பட்டுள்ளன.  இது தவிர முர்ஸீத் என்ற இஸ்லாமிய கொலு போன்ற விழா பற்றியும் விளப்படுகிறது[4]

 

Indian Express photo

Indian Express photo

ஷியா முஸ்லிம்கள் இயக்கம் எதிர்ப்பு, நீதிமன்றத்தில் மனு: இம்மாதம்  14ம் தேதி வெளியிடுவதாக இருந்தது,  வெளிவரவில்லை[5].  ஆனால், கதை தொடர்ந்தது.  நஸ்ரியாவுக்கு இது திருப்புமுனை என்றெல்லாம் அளந்தார்கள்.  அந்நிலையில் தான், ஷியா முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். நடிகர் ஜெய்,  நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார், அனீஸ் இயக்கியுள்ளார். “திருமணம் எனும் நிக்காஹ்’  திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர்,  திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது[6].  இது தொடர்பாக தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்தின் துணைத்தலைவர் டேப்லெஸ் /  டப்ளஸ்  அலிகான் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: “திருமணம் எனும் நிக்காஹ்’  திரைப்படத்தை ஆஸ்கார் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன்  உரிமையாளர் வி. ரவிசந்திரன்.  அதை மே மாதம் 30-ஆம் தேதி திரையிடவும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  அந்தத் திரைப்படத்தில் முஸ்லிம்கள் தரக்குறைவாக சித்திரிக்கப் பட்டுள்ளனர்.  அதிலும்,  ஷியா பிரிவு முஸ்லிம்களை மிகவும் இழிவு படுத்தி சித்திரித்துள்ளனர். இதனால் மதக்கலவரம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.  எற்கெனவே,  இந்த படத்தின் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20–ந்தேதி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை[7].எனவே,  இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்”, என மனுவில் கோரப் பட்டுள்ளது.

 

Muharram festival

Muharram festival

விடுமுறை  நீதிமன்ற  இடைக்கால  நடவடிக்கை:  இந்த மனு விடுமுறைக் கால நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு வியாழக்கிழமை (மே 29) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜூன் 3- ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர்,  திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்[8]. மனுவுக்கு ஜூன் 4– ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்[9].  போற போக்கைப் பார்த்தால் எல்லா தமிழ்ச் சினிமாவையும் இனிமேல் கோர்ட்டு தான் ரிலீஸ் செய்யும் போலிருக்கு..  திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடைகேட்டு இன்றைக்கு கோர்ட் படியேறியிருக்கிறது, ஒருகூட்டம்[10] என்று காட்டமாகக் கூட ஒரு இணைதளம் கமென்ட் அடித்துள்ளது.

 

M2U00474

M2U00474

சினிமா தயாரிப்பாளர் விளக்கம்[11]: பட சர்ச்சை குறித்து ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் கூறுகையில்,  ‘‘படத்துக்கு தணிக்கைக் குழு ‘யு’  சான்றிதழ் தந்துள்ளது.  குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி படம் எடுத்திருந்தால் தணிக்கைக் குழு அனுமதிக்குமா? இது இஸ்லாம் மதத்துக்கு பெருமை சேர்க்கும் படம்.  படத்தை இயக்கியவர்,  இசையமைத்தவர், குறிப்பிட்ட நடிகர்கள் எல்லோரும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள்.  படம் வெளிவரும் முன்பே அவதூறாக கூறியாரும் விளம்பரம் தேடக்கூடாது. திட்டமிட்டபடி படம் வெளிவரும்.  எப்போது ரிலீஸ் என்பதை சனிக்கிழமை அறிவிப்போம்’’  என்றார்.

 

Muharram Hyderabad 2009

Muharram Hyderabad 2009

முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?:  ஷியா முஸ்லிம்கள் இப்படத்தை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  மொஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் முதலியவை சினிமாவில் காட்டுவதில் என்ன எதிர்ப்பு இருக்கிறது என்று தெரியவில்லை!   முதலில் இவற்றிற்கெல்லாம் விடுமுறை கூட இல்லை, ஆனால், செக்யூலரிஸ ஆட்சியாளர்கள் விடுமுறை அளித்து,  பிறகு அவற்றை தேசிய விடுமுறைகளாக்கினர். முஸ்லிம் நாடுகளிலேயே அவ்வாறு விடுமுறை அளிப்பது கிடையாது.  இப்படத்தில் மொஹ்ஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் விழாக்கள் விவரமாகக் காட்டப் படுகின்றன. அதேபோல,  ஆவணி ஆவட்டம்,  நவராத்திரி, கொலு போன்ற விழாக்களும் சித்தரிக்கப் பட்டுள்ளன.  இது தவிர முர்ஸீத் என்ற இஸ்லாமிய கொலு போன்ற விழா பற்றியும் விளப்படுகிறது[12].  ஆக  அந்த “முர்ஸித் / கொலு” தான் பிரச்சினை போலும்! ஒருவேளை, சுன்னி முஸ்லிம்கள் தூண்டி விட்டு, ஷியாக்கள் எதிர்த்திருக்கலாம். “மாரடி விழா” முதலிய ராயப்பேட்டையிலேயே மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஹைதரபாதில் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். மற்ற வட இந்திய நகரங்களில் அமர்க்களமாகக் கொண்டாடுவார்கள். ஆகவே, இவற்றைக் காண்பிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆகவே, வேறு பிரச்சினையை மதப்பிரச்சினையாக்கி, இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை.

 

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

© வேதபிரகாஷ்

30-05-2014

[1] http://tamil.oneindia.in/movies/news/petition-seeks-ban-on-thirumanam-ennum-nikkah-202275.html

[2] http://www.deccanchronicle.com/140514/entertainment-kollywood/article/thirumanam-ennum-nikkah-release-soon

[3] http://www.kollytalk.com/video/video-news/jai-nazriyas-thirumanam-ennum-nikkah-postponed-153313.html

[4] Are there any risks in making such a film? “The key is to ensure there is balance. While the film features the Muharram, Ramzan and Nikkah festivities in great detail, it also features Avani Avattam and Navarathiri Golu celebrations. In fact, I have even showcased a lesser known festival, the Murshid, which I believe is the Islamic equivalent of the Golu and celebrated privately in homes.” In fact, this is one of the reasons the film has been delayed so much. “I had to wait for these festivals,” he says.

http://www.thehindu.com/features/cinema/marriage-by-any-name/article5996427.ece

[5]Rumours were rife that Anis’s Thirumanam Ennum Nikkah, starring Jai and Nazriya, was postponed from May 15, the date slated for release, due to certain issues. However, when DC quizzed the director on it, he said, “There were plans of postponing it owing to trivial reasons. However, going by the present scenario, it is highly likely that the movie might release on the fixed date itself.” Thirumanam Ennum Nikkah, produced by Aascar Ravichandran, bagged a ‘U’ certificate recently. The songs scored by Ghibran has already topped the charts.

[6]தினமலர்,  “திருமணம்எனும்நிக்காஹ்திரைப்படத்துக்குதடைகோரிவழக்கு, By dn, சென்னை, First Published : 30 May 2014 03:09 AM IST

[7]தினத்தந்தி,திருமணம்என்னும்நிக்ஹாபடத்துக்குதடைவிதிக்கவேண்டும்; சென்னைஐகோர்ட்டில்வழக்கு, பதிவுசெய்தநாள் : May 30 | 12:20 am

[8]http://www.dinamani.com/cinema/2014/05/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/article2253242.ece

[9] http://www.dailythanthi.com/2014-05-30–marriage-nikha-film-to-be-banned-case-in-the-madras-hc

[10] http://www.tamilcinetalk.com/some-muslims-ask-ban-on-thirumanam-ennum-nikkah/

[11]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/article6064424.ece

[12] Are there any risks in making such a film? “The key is to ensure there is balance. While the film features the Muharram, Ramzan and Nikkah festivities in great detail, it also features Avani Avattam and Navarathiri Golu celebrations. In fact, I have even showcased a lesser known festival, the Murshid, which I believe is the Islamic equivalent of the Golu and celebrated privately in homes.” In fact, this is one of the reasons the film has been delayed so much. “I had to wait for these festivals,” he says.

http://www.thehindu.com/features/cinema/marriage-by-any-name/article5996427.ece

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (5): பாத்திமா முசாபர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்!

மார்ச் 25, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (5): பாத்திமா முசாபர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்!

முஸ்லீம் லீக் / கட்சிகள் எவ்வாறு சண்டை போடுவது போல நாடகம் ஆடி, தனித்தனியாக ஆறு தொகுதிகளைப் பெற்றுவிட்டன என்பதை எட்த்துக் கட்டப்பட்டது. அன்பழகனே பலிக்காடாவாக்கப் பட்டார்[1]. திமுக-அதிமுக இரண்டிலும் சேர்த்து ஆறு தொகுதிகலைப் பெற்றனர்[2]. அவ்வாறு இரட்டை வேடம் போட்டனர் என்று அப்பொழுதே எடுத்துக் கட்டப் பட்டது[3]. ஆக, ஏதோ சண்டைப் போட்டுக் கொண்டது போலவும், அதிரடியாக திட்டிக் கொண்டு, வசை பாடி, இணைத்தளங்களில் ஏதோ இவர்கள் எல்லோருமே அடிமையாகி சரண்டர் ஆகி விட்டது போல தோற்றத்தை உண்டாக்கி விட்டு, இப்பொழுது தனித்தனியாக ஆறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்[4]. இந்நிலையில், பாத்திமா முசாபர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது[5].

கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று கொடிபிடித்த பாத்திமா முசாபர் வெளியேற்றப் பட்டாராம்: ஒரு சீட்டு, காங்கிரஸுக்குக் கொடுக்கப் பட்டதற்கு, பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு சீட்டை திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்”, என்றார். ஆனால், 24-03-2011 அன்று, கட்சியின் விரோதமாக செயல்படுவதற்காக, அவர் கட்சியிலிருந்து வெளியெற்றப் பட்டுள்ளார்.

பாத்திமா முசாபர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார் : இந்திய யூனியன் முஸ்லிம் லீலிருந்து, அதன் தமிழ்நாடு மாநில மகளிரணி அமைப்பாளரான பாத்திமா முஸபர் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-  “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வரும் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் அவர்கள், கடந்த சில தினங்களாக இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பத்திரிக்கைகளிலும், தொலைகாட்சிகளிலும் இயக்க முடிவுகளுக்கு மாறான செய்திகள் வெளியிட்டும் வருவதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினர் தகுதி உட்பட அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களால் இன்று முதல் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருக்கிறார். இயக்கத் தோழர்கள் இயக்கம் சம்மந்தமாக அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்துல் சமதின் மகள் பாத்திமா முசாபர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் கட்சி மேலிட முடிவை எதிர்த்து மூத்த பெண் தலைவர் குரல் கொடுத்துள்ளார்[9]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா முசாபர். இவர் மறைந்த அப்துல் சமதின் மகளாவார். வரும் சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு திமுக 3 சீட் ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு 63 சீட் கொடுக்க தீர்மானித்ததால் சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய 3 சீட்களில் ஒன்றை திமுக வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது: இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு சீட்டை திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு சீட்டை விட்டுக் கொடுத்துள்ள எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு முஸ்லிம் சமுதாயம் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது”, என்றார். உண்மையிலேயே அவர்கள் ராஜினாமா செய்வார்களா அல்லது எதிர்த்து பிரச்சாரம் செய்வார்களா, ஆறு இடங்களிலும் சாதுர்யமாக வெல்வார்களா என்பது மே மாதத்தில் தெரிந்து விடும்.

யார் இந்த பாத்திமா முசாபர்? அஹமத் வோர்ட் டிராவல்ஸ் டூர்ஸ் & கார்கோ பிரைவேட் லிமிடெட்[6] என்ற கம்பெனியின் இயக்குனரான, இவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும், மறைந்த அப்துல் சமதின் மகளாவார். . கணவர் அல்ஹஜ் அஹமத் மேனேஜிங் டைரக்டர்[7]. ஏப்ரல் 2009ல் பாஸ்போர்ட் ஊழல் வழக்கில் இவர் சி.பி.ஐ.யினால் கைது செய்யப்பட்டார்[8]. பாஸ்போர்ட் வாங்குவதற்கு அதிகமாக பணம் வசூலித்ததாலும், அதனால் பாற்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரனுக்கு லஞ்சம் கொடுத்ததாலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்[9]. ரவிச்சந்திரன் தனியாக ஒரு பாஸ்போர்ட் அலுவலகமே நடத்தி வந்தனராம்[10]. இவர் அன்பழகின் மறுமகள்[11] என்றும் செய்திகள் கூறுகின்றன[12]. தயாநிதி மாறன் டெலிகம் அமைச்சரானதும், 2004ல் இவர் பாஸ்போர்ட் அதிகாரியாக நியமிக்கப் பட்டாராம். இதனால் அவரும் கைது செய்யப் பட்டார்[13]. கனிமொழிக்கு வேண்டியவர். ரம்ஜான் கஞ்சிக் கொடுக்கும் நோன்புக்குத் தப்பாமல் இப்பொழுதெல்லாம் வந்து விடுகிறார்.

அன்பழகன் என்பதால்தான் இந்த நாடகமா? அன்பழகனின் தியாகம், பாத்திமாவை நிச்சயமாக வருத்தமடையச் செய்திருக்கும். ஏனெனில், ஏற்கெனவே, அன்பழகனுடைய மறுமகளுக்கு – சுமதி ரவிச்சந்திரனுக்கு, இவரால் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், மறுபடியும், தங்கள் கட்சியால், அவருக்கு தொந்தரவு ஏற்பட்டிருப்பத் கண்டு, விசுவாசத்தின் அடிப்படையில், எதிர்த்திருப்பார்.

வேதபிரகாஷ்

25-03-2011


[1] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3),

https://islamindia.wordpress.com/2011/03/16/anbazhagan-scapegoat-sacrificed-iuml-dmk/

[2] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2),

https://islamindia.wordpress.com/2011/03/15/flip-floppin-iuml-muslims-dravidian-parties/

[3] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1),

https://islamindia.wordpress.com/2011/03/11/double-games-of-muslim-league-parties/

[4] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (4), https://islamindia.wordpress.com/2011/03/22/1370-three-plus-three-muslims-get-six/

[5] தினமலர், 25-03-2011, சென்னை, பக்கம்.2

[6] We are group of Young and Energetic Professionals from Travel Industry having decades of Experience. We feel the best way to serve is to serve personally. That is exactly what we specialise at AHMED WORLD TRAVELS TOURS & CARGO PVT LTD. Since 1989

http://www.ahmedworldtravels.com/

[8] According to a Superintendent of Police of the CBI, Fathima Muzaffar Ahmed, a travel agent of Ahmed World Travels, T.Nagar, allegedly demanded Rs.9,000 as bribe to be paid to the Regional Passport Officer from P.Lakshmanan of MGR Nagar, who had applied for a passport under the tatkal scheme. This was in addition to the prescribed fee and service charge of Rs.1,000.

http://www.dinamani.com/edition/story.aspx?artid=51752&SectionID=136&MainSectionID=134&SEO=&Title=

[10] Sumathi’s husband Ravichandran too has been arrested by the CBI. He stands accused of running a ‘parallel passport office’.

http://ibnlive.in.com/news/cbi-arrests-passport-officer-on-corruption-charges/91138-3.html

[12] The CBI’s anti-corruption wing has arrested the Chennai regional passport officer, who is the daughter-in-law of finance minister K Anbazhagan of Tamilnadu. Sumathi, an Indian Postal Service officer, was appointed RPO in 2004 with the blessings of then Union communications minister Dayanidhi Maran of the DMK.
CBI arrests minister kin who is the daughter-in-law of finance minister K. Anbazhagan