முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?
முஸ்லிம்களுக்கான தனித்த அடையாளம் எதுவும் இன்றி வந்திருந்தார்: இந்நிலையில் யுசரா பங்கு கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி பற்றி செய்தி ஒன்று இப்படி வந்துள்ளது. ஒரு தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான நடிகர் கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த கைவல்யாவுக்கும் கோவையில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என திரையுலமே திரண்டு வந்து வாழ்த்தியது. இதில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவர் யுவன் சங்கர் ராஜா. அவர் முஸ்லிமாக மாறிவிட்டார் என்ற தகவல் பரவியிருந்த நேரத்தில் அவரது வருகை முக்கியமாக பார்க்கப்பட்டது. செய்திகளில் வந்தது போன்று அவர் தாடி எதுவும் வைத்திருக்கவில்லை. முஸ்லிம்களுக்கான தனித்த அடையாளம் எதுவும் இன்றி நீல நிற ஜீன்ஸ், வெள்ளை சட்டை அணிந்து வழக்கம்போல “எளிமையாக” வந்திருந்தார். ஆனால் முகத்தில் உற்சாகம் இல்லை.

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்
அருகில் சிகப்பு நிறத்தில் துப்பட்டா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் அடிக்கடி யுவனிடம் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார்: வந்தவர் மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்திவிட்டு சிறிது நேரம் மேடையில் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் சிகப்பு நிறத்தில் துப்பட்டா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் நின்று கொண்டிருந்தார். அடிக்கடி யுவனிடம் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். யுவன் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணா? அல்லது அந்த பெண்ணின் உறவுக்கார பெண்ணா அவர் என்று எல்லோரும் முணுமுணுத்தார்கள். இதுபற்றி சில பத்திரிகையாளர்கள் விஷணுவர்த்தனிடம் கேட்டபோது அவர் எனது நண்பர்களில் ஒருவர் அவ்வளவுதான் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு திருமண வேலைகளில் பிசியாகிவிட்டார். திருமணத்துக்கு வந்தவர்கள் எதுவும் பிடிபடாமல் சந்தேகத்தோடு சென்றனர். இதனால் வரவேற்பு நடந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் ஏன் நேரிடையாக அந்த பெண்ணிடமோ, யுவராவிடமோ கேட்கவில்லை என்பதும் விசித்திரம் தான்!
முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக்கொள்ள சினிமாக்காரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்[1]: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர். இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[2]. இதைப்பற்றியும் பகுத்தறிவு ஜீவிகள், முற்போக்குவாதிகள், பரந்த-விரிந்த பொதுவுடமைக்காரர்கள், ஜனநாயக தோழர்கள், அதிநவீனசித்தாந்திகள் முதலியோர் ஒன்றும் சொல்லாமல் இருப்பதும் தெரியவில்லை.
தொழுகை செய்கின்றவன் எல்லோரும் முஸ்லிம் தான் (பெருநியூஸ்): “பெருநியூஸ்” என்ற ஒரு முஸ்லிம் இணைதளம் இதைப் பற்றி ஒரு விளக்கமே கொடுத்துள்ளது, “ஒருவர் எந்த நாட்டை சேர்ந்தவராயிருந்தாலும் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் , எந்த நிறத்தை உடையவராக இருந்தாலும் , எந்த மொழியை பேசினாலும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவர் தான் முஸ்லிம்!! எந்த ஒரு மனிதனும் பிறப்பால் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான், முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் முஸ்லிம் இல்லை. முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி). தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி). அருமை சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுக்கு அல்லாஹ் தவ்பீக் செய்துள்ளான் எனவே இவர் இஸ்லாத்தை படிப்படியாக சரியாக உணர்ந்து கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் நல்லதொரு முஸ்லிமாக , இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஆக்கிக்கொண்டு தொடர்ந்து நேர்வழியில் நிலைத்திருக்க எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் .. இந்த பதிவைப் படிப்பவர்களும் துஆ செய்யுங்கள் .. இன்ஷா அல்லாஹ்”. என்று யுவராவை வரவேற்றுள்ளது . குறிப்பு: இந்த பதிவில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒரு சில படிப்பினைகளோ, செய்திகளோ, நினைவூட்டல்களோ உள்ளது[3], என்றும் சேர்க்கப்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியது ஏன்…? இயக்குநர் அமீர் விளக்கம்! பணம், புகழ், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை,பொதுவாக வாழ்க்கையின் முதல்பாதியில் அமைதியாக இருப்பவர், இரண்டாம் பாதியில் ஆட்டம் போடுவார். அதுபோன்று தான் இப்போது நீயும் செய்கிறாய். என் அனுபவத்தில் சொல்கிறேன், இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம். புகழ், பணம், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை. சினிமாவில் பாதிபேரோடு வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது. சினிமாவில் மிச்சமாவது இந்த வெறுமை மட்டும்தான். ஒருத்தர் சினிமாவில் எவ்வளவு ஜெயிச்சாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று என்னால் முடிந்தளவுக்கு அட்வைஸ் செய்தேன்.என் தேடுதலுக்கான விடை இஸ்லாம் மதத்தில் இருக்கிறது. ஒருநாள் என்னிடம் தான் முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று யுவன் கூறினார். ஏன்? என்று கேட்டபோது என் மனதில் நிம்மதி இல்லை, அமைதி இல்லை, என்னுள் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது. இவை எல்லாவற்றுக்குமான விடையும், என்னுள் இருக்கும் தேடுதலுக்கான விடையும் இஸ்லாம் மதத்தில் உள்ளது. அதனால் தான் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறினார். யுவன் இப்படி கூறுவதற்கு முன்பாக அவரை நான் ஒருமுறை சந்தித்தபோது, வாழ்க்கையில் அவர் எதையோ தொலைத்து தேடுவது போன்று எனக்கு தோன்றியது என்றார்[4].
யுவனை தொடர்ந்து இஸ்லாத்தைத் தழுவப்போகும் 2 இளம் ஹீரோக்கள்! தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமாக எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே? அப்படியே மற்றொரு காரணம் அவர் புதிதாக தாடி வளர்த்து வருகிறாம். இதனால் இனி அவர் முழு இஸ்லாமியராக தோற்றமளிக்கப்போகிறாராம். தற்போது இவரைத் தொடர்ந்து தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாத்தைத் தழுவப் போகிறார்களாம்[5]. இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்றும் சினிமா வட்டாத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இதில் இரண்டு முன்னணி ஹூரோக்களின் பெயர்கள் பரவலாக பேசப்படுகின்றன. இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். கோடம்பாக்கத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறதோ? அதில் இரு ஹீரோக்களைப் கிசுகிசுவாக தகவல்கள் வெளியாகியுள்ளன[6].
1. அப்பாவின் செல்லப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயமானதால் இன்றைய கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராராம்[7].
2. இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறாராம். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியாக்கள் சித்தரித்து வந்தன[8].
இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். தினமணியும் “குசுகுசு”க்களில் இறங்கிவிட்டதா என்று தெரியவில்லை. பொதுவாக அறிவிஜீவிகள் மற்ற சித்தாந்திகள் எல்லாம் தினமலர், தினமணி என்றால் “பார்ப்பன நாளேடுகள்”, “பார்ப்பனத் தூக்கிகள்” “இரண்டையும் ஒழிப்போம்” என்றெல்லாம் கூறுவார்கள், எழுதுவார்கள், பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், அவர்களே இவற்றைக் குறிப்பிட்டு எழுதுகிறார்கள்.
வேதபிரகாஷ்
© 13-02-2014
[1] https://islamindia.wordpress.com/2014/02/10/yuvan-sankar-raja-converting-to-islam-for-convenience-or-faith-or-circumvent-law/
[2] http://articles.timesofindia.indiatimes.com/2009-06-21/view-from-venus/28160163_1_hindu-marriage-act-hindu-man-islam
[3]http://berunews.wordpress.com/2014/02/11/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/
[4]http://berunews.wordpress.com/2014/02/11/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/
[5]http://berunews.wordpress.com/2014/02/12/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/
[6]http://www.dinamani.com/cinema/2014/02/11/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81/article2051109.ece
[7] தினமணி, யுவனை தொடர்ந்து இஸ்லாத்தைத் தழுவப்போகும் 2 இளம் ஹீரோக்கள்??, By Web Dinamani, சென்னை, First Published : 11 February 2014 07:33 PM IST
[8]http://www.dinamani.com/cinema/2014/02/11/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81/article2051109.ece?pageToolsFontSize=130%25
அண்மைய பின்னூட்டங்கள்