Archive for the ‘மௌலானா புகாரி’ category

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

மார்ச் 10, 2013

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

Ajmer-Sharif-shrine-chief-boycotted-but-deputed-others

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.

உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

Ajmer Sharif Mannat

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.

தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Qawwali  dance ajmeeri dargah

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.

தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

Sufi dance dailyfresher.com

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Sufi dance at Ajmir dargah Urs festival 2012

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

Pakistan urs festival - Kalandar

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!

பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

760th Urs celebrations of Hazarat Lal Shahbaz Qalander RA in Sehwan Sharif Pakistan

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!

இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

Khushi dance at Ajmir Sharif Urs

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

Khushi dance at Ajmir Sharif Urs festival

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

Ajmer-dargah-map

வேதபிரகாஷ்

10-03-2013


உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன் – சொன்னது / எழுதியது தலைவெட்டிராஜா!

மார்ச் 10, 2013

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன்  –  சொன்னது  /  எழுதியது தலைவெட்டிராஜா!

Raja Parvez Ashraf  inside the dargah of Khwaja Moinuddin Chishti

முஸ்லீம் பிரதம மந்திரியின் தர்கா வழிபாடு: பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் சனிக்கிழமை (09-03-2013) அன்று ஆஜ்மீரில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரைப் புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தாலும், வந்தவருக்கு எல்லாம் மரியாதைகளும் செய்யப்பட்டன. மேளாதாளத்துடன் வரவேற்கப்பட்டார்[1] [ Ashraf was welcomed in the dargah with the beating of drums and the representatives of Dargah Committee and Anjum Khuddam Syedzadgan received him at the entrance gate]. தர்கா வாசலில் இப்படி மேளதாளம் அடிக்கலாமா என்று தெரியவில்லை[2]. தலையில் தலைப்பாகை வைப்பது,தௌடை அளித்தது, இத்யாதிகள் எல்லாமே நடந்தன.

Raja Parvez Ashraf with his family at the shrine of Khwaja Moinuddin Chisht

உலகத்திற்குஅமைதிவேண்டும், பாகிஸ்தானிற்குவளம்வேண்டும்: எல்லாவற்றையும் விட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த தலைவெட்டியான் தான் , “உலக அமைத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டேன்” – சொன்னது / எழுதியதுதான்! இப்படித்தான் பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டது[3]. ஆனால், அந்த தலைவெட்டி ராஜா முழுக்க எழுதியுள்ளது – “....I wish for peace in the world and for peace and prosperity in Pakistan”! “பாகிஸ்தானிற்கு வளம் வேண்டும்” என்று சேர்த்துதான் எழுதியுள்ளான்[4]. அதாவது, உலகத்தில் அமைதி வேண்டும் என்றால், உலகத்திற்கு இஸ்லாம் வேண்டும் என்ற பொருளும் உண்டு. அதனால், உலகத்திற்கு அமைதியும், பாகிஸ்தானிற்கு வளமும் வேண்டும் என்று இந்தியாவிற்கே வந்து எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வழக்கம் போல, நமது ஹிந்துவோ, ““I and my family members are fortunate to get an opportunity to visit the dargah. I express gratitude to Gharib Nawaz for this,” he wrote in Urdu.” என்று குறிப்பிட்டுள்ளது! அதாவது, இந்த தர்காவிற்கு நானும் எனது குடும்பத்தாரும் வந்ததற்காக பாக்கியத்தை செய்துள்ளோம். இதற்கான நன்றியை நான் கரீப் நவாஜிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருதுவில் எழுதியுள்ளார்[5].

Raja Parvez Ashraf shook hands with Khushid

பீரே வா என்றால், சோனியா வராதே என்றா சொல்வார்?: காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்‘ என்றார். அதனால் தான், பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன் என்று மிரட்டிய, குர்ஷித் அனுப்பப்பட்டார், நன்றாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது, டாடா காண்பித்துவிட்டு சென்றுவிட்டார் தலைவெட்டி ராஜா!

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: தர்கா வேறு, மசூதி வேறு என்று ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. ஆனால், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

வேதபிரகாஷ்

10-03-2013


[2] மசூதி முன்னால் மேளதாளம் அடிக்கக் கூடாது என்று அலரும் முஸ்லீம்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? தர்காவிற்கு பக்கத்தில் மசூதி கட்டி, சுவரை வேறு கட்டி வைக்கிறார்கள்.

[4] “…I wish for peace in the world and for peace and prosperity in Pakistan,” Ashraf wrote in Urdu in the visitors book after spending 30 minutes at the shrine.  http://zeenews.india.com/news/nation/pakistan-pm-raja-pervez-ashraf-prays-at-ajmer-sharif_834170.html

பத்திரிக்கையாளரை அடித்த டில்லி இமாம் மற்றும் அவரது ஆட்கள்!

ஒக்ரோபர் 15, 2010

பத்திரிக்கையாளரை அடித்த டில்லி இமாம் மற்றும் அவரது ஆட்கள்!

 

கலக்கும் டில்லி இமாம்கள்: டில்லி இமாம் புகாரி என்றுமே பெயர் போனவர். அடிப்பேன், உதைப்பேன், கை-கால்களை வெட்டுவேன், கழுத்தை அறுப்பேன், என்று கத்துவதும், மிரட்டுவதும், உண்மையிலேயே அடிப்பது, குத்துவதும் கூட சகஜமானவைதான். அப்பாவிற்கு தப்பாத பிள்ளையன்பது போல[1],  இப்பொழுதும், மௌலானா அஹமது ஷா புகாரி, ஒரு பத்திரிக்கையாளரை அறைந்து குத்தியிருக்கிறார்.

 

இமாமின் பேட்டியும், பிரச்சினையும்: லக்னோவில், ஒரு ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பேட்டியில் வியாழக்கிழமையன்று (14-10-2010), அலஹாபாத் தீர்ப்பைக் மிகக்கடுமையாக கண்டித்து சாடியதுடன்,  சமரசப்பேச்சு வார்த்தைகளைக்கும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்[2].

 

வசதியில்லாத கேள்வியைக் கேட்டால் அறை, குத்து: காரணம் – அந்த பத்திரிக்கையாளர் தனக்கு வசதியில்லாத கேள்வியைக் கெட்டுவிட்டாராம்! “தஸ்தான்–ஏ-அவத்” என்ற பத்திரிக்கையின் நிருபர் அப்துல் வஹீத் கிஸ்தி, “1528ம் வருடத்தைய வரி தஸ்ஜாவேஜ் ஆவணம் ராஜா தசரதனுடைய அரண்மனை அங்குதான் இருந்தது என்று காட்டும்போது, மேலும் உயர்நீதி மன்றமே அந்த இடத்தை ராம் லல்லாவிற்கு கொடுக்கப்படவேண்டும் என்ரு ஆணையிட்டப் பிறகும் கூட, தாங்கள் ஏன் இப்படி முஸ்லீம்களுக்கு தவறான விளக்கம் அளிக்கிறீர்கள்”, என்று கேட்டதும், ஷாஹி இமாமிற்கு கோபம் வந்துவிட்டபடியால், “ஏய், வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்து கிட………….., உன்னைப்போன்ற துரோகிகளினால்தான் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது[3]……………….நீ ஒரு காங்கிரஸின் ஏஜென்ட்………….. தொலைத்துவிடுவேன் (கழுத்தை வெட்டிவிடுவேன்)” என்று கத்தவும் செய்தார்[4].

 

சூஃபிக்கள் துரோகிகளா? அப்துல் வஹீத் கிஸ்தி ஒரு சூஃபி நம்பிக்கையாளர். அவர் தம்மை அகில பாரத சுஃபி சங்கத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்துக் கொண்டார், ஆனால், மௌலானா அவரை “துரோகி” என்றார்[5].

 

அடி வாங்கிய அப்துல் வஹீத் கிஸ்தி: பேட்டி முடிந்தவுடன், மற்ற பத்திரிக்கையாளர்கள் அப்துல் வஹீத் கிஸ்தியை சூழ்ந்து கொண்டு அவருடைய கருத்தைக் கேட்க முற்பட்டபோது, அவர் சொன்னதாவது, “மௌலானா ஒரு மரியாதைக்குரிய மதத்தலைவர். ஆனால், இன்று அவர் நடந்து கொண்டுள்ள விதம், ஒரு ரௌடியைவிட கேவலமாக உள்ளது[6]. அதை கவனித்த இமாம் உடனே தமது ஆட்களை அனுப்பி அதை தடுக்கச் சொன்னார். ஷாஹி இமாமின் ஆட்கள், அவரை இழுத்துக் கொண்டு போய் நன்றாக அடித்து உதைத்தனர்[7]. மக்கள் மற்றும் பத்திரிக்கையளர்களுக்கக கண்ணெதிரிலேயே இவையெல்லாம் நடந்தேரின. இருப்பினும் பத்திரிக்கையாளரை அடித்ததற்காக, போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்!

 

இமாமின் நடத்தையினால் வருத்தப் பட்ட ஹாஷிம் அன்ஸாரி: ஹாஷிம் அன்ஸாரி என்ற ஆரம்பத்திலிருந்து இவ்வழக்கின் ஒரு பிரதிவாதியாக இருக்கிறார். அவர் இமாமின் நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தார், “பொறுப்பில்லாமல் பேசுகிறார்………………அவமானமாகயிருக்கிறது……………………….”, என்று வருத்தப்பட்டார்.


[1] இந்தியாவின் மூன்றிற்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறபித்தபோதும், கைது செய்யாப்பாடாமல், பாகிஸ்தானிற்கு சென்று, “பாரத மாதா ஒரு தெவிடியா” என்று பேசி வந்த புகஷ் பெற்ற இமாம் தான் இவரது தந்தையார்!

[3] At one point, he even said, “It is because of traitors like you that Babri Masjid was demolished”, andtold the journalist to shut up and leave.

Bukhari later dubbed the journalist a “Congress agent” and alleged that the party was engineering such incidents to ensure Muslims do not challenge the high court verdict in the apex court.

http://www.dnaindia.com/india/report_imam-bukhari-s-men-attack-scribe-asking-difficult-questions_1452714

[5] Bukhari also called Waheed Chishti, who introduced himself as general secretary of the Akhil Bharatiya Maha Sufi Sangh Seva Samity, a “traitor”.

http://www.telegraphindia.com/1101015/jsp/frontpage/story_13060680.jsp

[6] “The maulana is a respected cleric, but the way he acted today, it was worse than a hooligan,” Chishti told reporters soon after the melee ended.

[7] Bukhari’s supporters then thrashed the journalist in full public glare. People like him will “not be tolerated by Muslims at any cost,” the Shahi Imam said before leaving the press conference.

Read more at: http://www.ndtv.com/article/cities/delhi-journalist-thrashed-by-shahi-imams-supporters-59775?trendingnow&cp

http://www.ndtv.com/article/cities/delhi-journalist-thrashed-by-shahi-imams-supporters-59775?trendingnow