Archive for the ‘மோஹன் பகவத்’ category

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – மற்ற முயற்சிகள், முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் மூலம் தொடருமா? (3)

செப்ரெம்பர் 25, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்மற்ற முயற்சிகள், முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் மூலம் தொடருமா? (3)

முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் (Muslim Rashtriya Manch (MRM) – 2002ல் துவக்கி வைக்கப் பட்டது: கே. எஸ். சுதர்சன் எப்படி கிருத்துவர்களுடன் உரையாடல் ஆரம்பித்தாரோ, அடே போல, முஸ்லிகளுடனும் உரையாடல் வைத்துக் கொள்ள, முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் / முஸ்லீம் தேசிய மன்றம் ஆரம்பித்து வைக்கப் பட்டது[1]. இந்திய முஸ்லீம்களின் அமைப்பான இது ராஷ்டிரிய சுயமசேவாக் சங்கத்துடன் இணைந்தது. இவ்வமைப்பு ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே. எஸ். சுதர்சன் என்பவரால் 24 டிசம்பர் 2002 அன்று நிறுவப்பட்டது. இவ்வமைப்பின் நோக்கம் முஸ்லீம் சமூகத்தில் இந்திய தேசிய உணர்வு, நாட்டுப் பற்று ஊட்டுவதுடன், சங்கப்பரிவாரின் இந்துத்துவா கொள்கைகளை இந்திய முஸ்லீம்கள் அறியச் செய்வதாகும். இதன் தேசியத் தலைவராக முகமது அப்சல் உள்ளார். இந்தியாவின் 26 மாநிலங்களில் உள்ள 300 மாவட்டங்களில் 10 இலட்சம் உறுப்பினரகள் இவ்வமைப்பில் உள்ளனர். உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோகா குறித்து 2015-இல் முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் யோகா மற்றும் இஸ்லாம் தலைப்பில் நூல் ஒன்றை இசுலாமியர்களுக்காக வெளியிட்டது. முஸ்லீம் இராஷ்டிரிய மஞ்சின் மகளிர் அணி, இந்தியாவில் முத்தலாக் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதை வரவேற்றுள்ளது.

15-09-1984 – அப்துல் சமதுசூரியநாராயண ராவ் சந்திப்புதுக்ளக்: முஸ்லிம் லீக் – ஆர்.எஸ்.எஸ் சந்திப்பு என்று துக்ளக்கில் அப்துல் சமது-சூரியநாராயண ராவ் உரையாடல் வெளிவந்தது. அதில் சில சுமுகமான கருத்துகள் வெளிவந்தன. இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலான முஸ்லிம்கள் முன்னர் இந்துக்களாக இருந்தனர், மதம் மாறினர், ஒற்றுமையாக இருக்க வேண்டும் போன்ற கருத்துகள் பேசப் பட்டன. அப்துல் சமது தம் முன்னோர்கள் இந்துக்கள் என்பதனையும் ஒப்புக் கொண்டார். பிறகு ஆத்ரவு-எதிர்ப்பு-கண்டன விமர்சனம் முதலியன நடந்தன. அவற்றில் சில துக்ளக்கில் “வாசகர் கடிதம்” பக்கத்தில் வெளியிடப் பட்டது. பிறகு, அல்லயன்ஸ் பதிப்பகம் அவற்றைத் தொகுத்து புத்தகமாகக் கூட வெளியிட்டது. ஆனால், பிறகு அது மறக்கப் பட்டது எனலாம். ஏனெனில், அத்தகைய உரையாடல்கள் நடக்கவில்லை அல்லது அந்த அளவுக்கு நெருங்கி வரவில்லை. அரசியல், கூட்டணி போன்ற விவகாரங்களால், விலகி சென்றனர் போலும்.

வடவிந்தியாதென்னிந்தியா வேற்றுமை: வட இந்தியாவில், பொதுவாக, இந்துக்கள்-முஸ்லிம்கள் சேர்ந்து வாழ்கிறார்கள், தினசரி வேலைகளில் பங்கு கொள்கிறார்கள். இந்து பண்டிகைகளில், பெரும்பாலும், முஸ்லிம்களின் பங்கு உள்ளது. நவராத்திரி-தசரா விழாக்களில் பந்தல், சிலைகள், அலங்காரம் முதலியவற்றை அமைப்பதில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர். வைஷ்ணவி தேவி கோவில் பக்தர்களுக்கு உதவுவதிலும், அவர்கள் பெரும் பங்கு வகுக்கின்றனர். இவையெல்லாம் அவர்களுக்கு வியாபாரமாக, வாழ்வாதார தொழிலாகக் கூட இருக்கலாம். இருப்பினும், அத்தகைய இணைந்து செல்லும் போக்கு உள்ளது. ஆஜ்மீர் மற்ற தர்காக்களில் இந்துக்களும் பெருமளவில் வந்து செல்கின்றனர். அதே போல, தெற்கில் நாகூருக்கு  இந்துக்கள் பெருமளவில் வந்து செல்கின்றனர். ரம்ஜான் இஃப்தர் பார்ட்டிகளிலும் இணைகின்றனர். சேர்ந்து உண்கின்றனர், பொழுது போக்குகின்றனர். பெரும்பான்மையான முஸ்லிம்களும் இதைத்தான் விருமுகின்றனர். தெற்கில் குறிப்பாக, கேரளா, தமிழகம், கர்நாடகா, தெலிங்கானா போன்ற மாநிலங்களில் சில இயக்கங்கள், முஸ்லிம்களை பிரித்து, அடிப்படைவாதிகளாக, பயங்கரவாதிகளாக, தீவிரவாதிகளாக, மாற்ற முயல்கின்றனர். அதனால், இரு சமூகங்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. மோதல்களும் ஏற்படுகின்றன. ஆனால், முஸ்லிம்கள், மிக மோசமாக, எல்லைகளைக் கடந்து வன்முறைகளுக்குச் சென்று விடுகிறார்கள். குண்டு வைத்தல், கலவரங்களை உண்டாக்குதல், அப்பாவி மக்களைக் கொல்லுதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இதனால், பிளவுகள் அதிகமாகின்றன, தீவிரமடைகின்றன.

தமிழகத்தில் இத்தகைய உரையாடல்ளுக்கு வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை: ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் இஸ்லாத்தை விட்டு விரட்ட வேண்டும் என தமிழக ஜாமஅத்துல் உலமா சபைக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளது[2]. சில நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, அத்தகைய இணைப்புகளை எதிர்க்கிறது. ஆகையால் தமிழ் நாட்டிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் ஜாமத்துல் உலமா சபை முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை இஸ்லாத்தை விட்டு நீக்கி அவர்களுடன் முஸ்லீம்கள் எந்தவொரு தொடர்பும் வைக்க கூடாது என மார்க உத்தரவு போடவேண்டும். அதே போல் தமிழக அரசும் உளவுத்துறை மூலம் ஆர்எஸ்எஸ் பாஜகவின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளை சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 2022ல் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான் என்று மோஹன் பகவத் பேசியது: இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் அனைவராலும் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், `இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஓர் இந்து கூறுகிறார் என்றால், அவர் ஒரு இந்துவே அல்ல’ என்றும், `இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான்’ என்றும் நேற்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார்.. உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமியப் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டத்தில், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அவருக்கு ஆலோசகராக இருந்த முனைவர் க்வாஜா இஃப்திகார் அஹ்மத் என்பவர் எழுதிய ‘தி மீட்டிங்ஸ் ஆஃப் மைண்ட்ஸ்: எ பிரிட்ஜிங் இனிஷியேட்டிவ்’ (The meeting’s of mind’s : A bridging initiative) என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “நாம் அனைவரும் கடந்த 40,000 ஆண்டுகளாக ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. இந்திய தேசத்தின் மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான். எனவே, இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேறு வேறு குழுக்கள் அல்ல. ஏற்கெனவே இணைந்துதான் இருக்கிறார்கள். எனவே, அவர்களை இணைப்பதற்குப் புதிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஓர் இந்துவே அல்ல[3]: தொடர்ந்து மோஹன் பகவத் பேசியது, “இங்கு அரசியலால் சில பணிகளைச் செய்ய முடியாது. அதன் மூலம் மக்களை இணைக்க முடியாது. அரசியல் எப்போதும் மக்களை இணைக்கும் கருவியாக இருக்காது. அது மக்கள் இடையிலான ஒற்றுமையைச் சிதைக்கும் ஆயுதமாக எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஓர் இந்துவே அல்ல[4]. பசு புனிதமான விலங்குதான், ஆனால், மற்றவர்களைக் கொலை செய்பவர்கள்கூட இந்துத்துவா தத்துவத்துக்கு எதிரானவர்களே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்[5]. இத்தகையவர்களைச் சட்டம் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தண்டிக்க வேண்டும். மேலும், நாம் இந்தியாவில் வாழ்கிறோம், இங்கு இந்துவோ, இஸ்லாமியரோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது, இந்தியர்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும்,” என்றார்[6].

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை[7]: தொடர்ந்து மோஹன் பகவத் பேசியது, “தற்போது இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் இருப்பது போன்ற மாய பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாம் அந்தச் சதி வலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது. இங்கு இஸ்லாமியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்[8]. இந்தியாவில் ஒற்றுமை இல்லையென்றால் வளர்ச்சி என்பது துளியும் சாத்தியமில்லை. எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்கள் இயக்கத்துக்குக் கட்சி அரசியலில் விருப்பமில்லை. தேசத்தின் நலனே எங்களுக்கு முக்கியம்,” என்றார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்தப் பேச்சை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்[9]. உத்தரப்பிரதேசத்தில் இந்துத்துவா சித்தாந்தத்தை வலுப்படுத்த பாஜக-வின் யோகி ஆதித்யநாத் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளையில், ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இந்த ‘இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு’ பேச்சு அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது[10].

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கருத்து: ஓவைசி ஆவேச ட்வீட்: மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு அனைத்திந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்[11]. இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், “பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது கும்பல் வன்முறையில் ஈடுபடுவது இந்துத்துவாவிற்கு எதிரானது என ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் கூறுகிறார். ஆனால் இந்த வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஜூனைத், அக்லக், பெலு, ரக்பர், அலிமுதீன் என்ற பெயர் வைத்திருப்பவர்களை கொல்ல வேண்டும் என்று மட்டும் தெரிகிறது. அந்த குற்றவாளிகளிக்கு இந்துத்துவா அரசு ஆதரவளிக்கிறது. அலிமுதீனின் கொலையாளிகள் மத்திய அமைச்சரின் கையால் மாலை அணிவிக்கப்படுகிறார்கள்,” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்[12]. இதற்கு ட்விட்டரில் பலர் எதிர்க் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

25-09-2022


[1] It was on December 24, 2002 a group of nationalist Muslims and functionaries of the Rashtriya Swayamsevak Sangh (RSS) came together in Delhi. http://muslimrashtriyamanch.org/default.aspx

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், RSS-ன் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச்சில் உள்ளவர்களை இஸ்லாத்தில் இருந்தே விரட்டுங்க.. தடா ரஹீம்., Ezhilarasan Babu, Chennai, First Published Jul 4, 2022, 12:10 PM IST.

https://tamil.asianetnews.com/politics/remove-from-islam-those-in-muslim-rashtriya-manch-which-is-a-subsidiary-organization-of-rss-tada-rahim–rehh84

[3] தமிழ்.நியூஸ்18, இந்தியாவில் முஸ்லீம்கள் வாழக்கூடாது எனக்கூறுபவன் இந்துவே அல்லஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு, NEWS18 TAMIL, Published by:Ramprasath H, First published: July 05, 2021, 06:40 IST; LAST UPDATED : JULY 05, 2021, 06:46 IST

[4] https://tamil.news18.com/news/national/anyone-who-says-muslims-should-not-live-in-india-is-not-hindu-mohan-bhagwat-hrp-496409.html

[5] தமிழ்.சமயம், முஸ்லிம் வாழக்கூடாது என்று சொல்லும் இந்து இந்துவே அல்லஆர்.எஸ்.எஸ். தலைவர் அதிரடி,  Divakar M | Samayam Tamil | Updated: 4 Jul 2021, 9:48 pm

[6] https://tamil.samayam.com/latest-news/india-news/it-is-not-the-hindus-who-say-that-muslims-should-not-live-saying-mohan-bhagwat/articleshow/84119597.cms

[7] தினமலர், முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை” – மோகன்பகவத், Updated : ஜூலை 05, 2021  09:41 |  Added : ஜூலை 05, 2021  09:38

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2796967

[9] விகடன், இஸ்லாமியர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொல்பவர் இந்துவே கிடையாது!’ –ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், சே. பாலாஜி, Published: 05 Jul 2021 9 AM; Updated: 05 Jul 2021 9 AM.

[10] https://www.vikatan.com/government-and-politics/politics/if-a-hindu-says-no-muslim-should-live-here-that-person-not-be-hindu-says-rss-chief-mohan-bhagwat

[11] நியூஸ்.தமிழ்.7, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கருத்து: ஓவைசி ஆவேச ட்வீட், by Gayathri VenkatesanJuly 5, 2021.

[12] https://news7tamil.live/asaduddin-owaisi-on-rss-chiefs-remarks.html

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பு, அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்குஅழைப்பு விடுத்தது (1)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (1)

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்: முன்னர் ஶ்ரீசுதர்ஷன்ஜி என்பவர் சங்கசாலக் / தலைவராக இருந்த போது, ஆர்எஸ்எஸ் கேரள கிருத்துவர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டது[1]. அப்பொழுது கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் மோதல்கள் இருந்து வந்தன. பிறகு நிலைமை சுமுகமானது. இப்பொழுது, கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் உறவுகள் இன்னும் மேன்பட்டுள்ளது. மோடியை கிருத்துவ மதத் தலைவர்கள் வரவேற்கிறார்கள். வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம், முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்து, அதன் தொடர்பாக ஒரு இந்து கொலை செய்யப் பட்டது மற்றும் கர்நாடகாவில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை என இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில் அமைதியின்மை நிலவிவந்த நிலையில், அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அகமது இல்யாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சில வாரங்கள் முன்பு தான் “ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேடிச் செல்ல வேண்டாம்,” என்று மோகன் பாகவத் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக சந்திப்பு நடத்தியிருப்பது முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளது: அகில இந்திய இமாம் அமைப்பு, இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது[2]. உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு கருதப்படுகிறது[3]. இந்த அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசி. இவர், ஒரு மசூதிக்குள் வசிக்கிறார்[4]. அவரது வீடும் மசூதியும் ஒன்றுதான். அதில் ஒரு மதரஸாவையும் நடத்தி வருகிறார்[5]. இதை பார்வையிட, இமாம் இல்யாசி மோகன் பாகவத்தை அழைப்பு விடுத்திருந்தார். பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசி, “எங்களது அழைப்பை ஏற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் அலுவலகத்திற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நமது நாட்டின் தந்தை. நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாஜ்வீதுல் குரான் மதரசாவை அவர் பார்வையிட்டார். அங்கு கல்வி பயிலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, நமது மரபணு ஒன்றுதான் என்றும், கடவுளை வழிபடும் முறைதான் வேறானது என்றும் மோகன் பாகவத் கூறினார்,” எனத் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான வெளிப்பாடு, நல்ல சகுனமாக இருக்கிறது எனலாம்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மசூதி மற்றும் மதரஸாவுக்கு விஜயம் செய்தது: இருப்பினும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள மசூதி, மதரசாவுக்கு 22-09-2022 அன்று திடீரென சென்றார்[6], என்று தினகரன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதரசாவில் உள்ள முஸ்லிம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்[7]. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லி கஸ்துாரிபாய் காந்தி மார்க்கில் உள்ள மசூதி மற்றும் ஆசாத்பூரில் உள்ள ஒரு மதரசாவுக்கு நேற்று சென்றார்[8]. மதரசா மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். பகவத் உள்ளே சென்றதும் மாணவர்கள் வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என கோஷமிட்டு வரவேற்றனர்[9]. மோகன் பகவத் மதரசா செல்வது இதுவே முதல் தடவை என்று ஆர்எஸ்எஸ் பிரமுகர் தெரிவித்தார். இதெல்லாம்,ஈந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான சிறந்த முயற்சியாகவே தென்படுகிறது. இன்றைய உலக சூழ்நிலைகளிலும், மக்களிடையே நட்புறவு மிக அத்தியாவசமாக தேவைப் படுகிறது. குறிப்பாக, பொருட்களை பகிர்ந்து நுகரும் நிலையில் உலக மக்கள் உள்ளார்கள். உக்ரைன்–ரஷ்யா போர் அதனை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளது. அதில் மதம், மொழி, முதலியவை பார்க்க முடியாது.

சுமுகமான பரஸ்பர பேச்சு: மோகன் பகவத் மாணவர்களிடையே பேசிய பகவத், ‘ஒவ்வொரு மதத்தினரின் வழிபாட்டு முறைகள் வேறு விதமானதாக இருந்தாலும், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்,’ என்பதை வலியுறுத்தினார். இது பற்றி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்பி அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். முஸ்லிம் உயர் குடிமக்கள் சிலரை அவர் சந்தித்துள்ளார். அடிமட்டத்தில் உள்ளவர்களை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது,’ என்றார்[10]. ஒருவேளை, இவ்வாறு இந்து-முஸ்லிம் தலைவர்கள் நெருங்கி வருவது அவருக்குக் காட்டமாக இருக்கிறது போலும். ஒருவேளை அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு விசயங்கள் புரியாமல், தெரியாமல் இருந்தால், அவர்களையும் உரையாடலுக்கு அழைக்கலாம். ஏனெனில், பெரும்பாலான மக்கள் சாதாரண மக்களே, அவர்கள் தினம்ம்-தினம் தங்களின் வேலை, தொழில், கடமைளை செய்ய  வெளியே வந்து கொண்டிருப்பார்கள், சந்திப்பார்கள், பழகுவார்கள். தேசத் தந்தை பகவத்: இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் உமர் அகமது பேசுகையில், ‘மோகன் பகவத் இந்த நாட்டின் தேச தந்தை’ என்று புகழ்ந்தார். ஆனால். உடனே குறுக்கிட்ட மோகன் பகவத், ‘நாட்டுக்கு ஒருவர்தான் தேச தந்தை. நாம் அனைவரும் தேசத்தின் குழந்தைகள்,’ என்றார்[11]. அதாவது, மஹாத்மா காந்தி தான், தேசப் பிதா என்று வற்புருத்தியுள்ளதைக் கவனிக்கலாம்.

மதரஸாவுக்கு வருமாறு அழைத்த இமாம் இல்யாசி: “நீங்கள் மதரஸாவிற்குச் சென்று பாருங்கள். இப்போதெல்லாம் மதரஸாக்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நீங்களே பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும்,” என்று இமாம் இல்யாசி அழைப்பு விடுதத்தன் பேரில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சந்திப்பு திட்டமிடப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுவாக நேரில் சந்தித்து பேசும் பொழுது, பெரும்பாலான சந்தேகங்கள், தவறான புரிதல்கள் மற்றும் கருத்துகள் முதலியவற்றை உண்மை நிலை அறிந்து மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த சந்திப்பு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்திரபிரதேசம், ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம் என்று பல மாநிலங்களில் மதரஸா செயல்பாடுகள், வக்பு சொத்துகள் பற்றிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. உபியில் மதரஸாக்களை பார்த்து, அளவிடும் வேலைகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான, முஸ்லிம் அமைப்புகள், இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1]  Inter-religious dialogue – மதங்களுக்குள் இடையிலான உரையாடல் என்ற முறையை கிருத்துவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். முஸ்லிம்கள் அதில் ஈடுபடாமல் இருந்தாலும், சூபித்துவம் போன்ற நிலைகளில் நெருங்கி வந்த / வரும் நிலைகள் உள்ளன.

[2] தமிழ்.இந்து, ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது’ – மோகன் பாகவத் முஸ்லிம் தலைவரை சந்தித்த பின்னணியும் பேசியவையும், செய்திப்பிரிவு, Published : 23 Sep 2022 03:26 AM; Last Updated : 23 Sep 2022 03:26 AM.

[3] https://www.hindutamil.in/news/india/871799-background-of-mohan-bhagwat-meeting-with-the-muslim-leader.html

[4] விகடன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் `தேசப்பிதா‘ ” – தலைமை இமாம், VM மன்சூர் கைரி, Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM

[5] https://www.vikatan.com/government-and-politics/politics/mohan-bhagwat-is-rashtra-pita-says-top-muslim-cleric-after-rss-chief-visits-mosque

[6] தினகரன், மசூதியில் இமாம்களுடன் மோகன் பகவத் சந்திப்பு: மாணவர்கள் வந்தே மாதரம் கோஷம், 2022-09-23@ 00:19:20

[7] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=801407

[8] தமிழ்.ஒன்.இந்தியா, நம்ம ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தான் தேசத்தின் தந்தை.. இஸ்லாமிய தலைவர் உமர் அகமது இலியாசி, By Vigneshkumar, Updated: Thu, Sep 22, 2022, 21:20 [IST].

[9] https://tamil.oneindia.com/amphtml/news/delhi/top-muslim-cleric-says-rss-chief-mohan-bhagwat-is-rashtra-pita-477061.html

[10] g7tamil, மசூதியில் இமாம்களுடன் மோகன் பகவத் சந்திப்பு: மாணவர்கள் வந்தே மாதரம் கோஷம், By G7tamil, September 23, 2022.

[11]https://g7tamil.in/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B/