Archive for the ‘மோடி’ category

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.

மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம். காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.

நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6]..  மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8].  மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள்  லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].

தீவிரவாத தொடர்புகள் நீங்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1] காமதேனு, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!, Updated on : 22 Sep, 2022, 3:29 pm; 2 min read

[2] https://kamadenu.hindutamil.in/politics/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims

[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன் பகவத்முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு: பசுவதை உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி பேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.

[4] https://tamil.indianexpress.com/india/rss-muslim-intellectuals-to-hold-periodic-talks-address-issues-of-concern-to-the-two-sides-514530/

[5] இடிவி.பாரத், மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்விஷயம் என்ன தெரியுமா?, Published on : 22, Sep 2022, 9.09 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/rss-chief-mohan-bhagwat-visits-mosque/tamil-nadu20220922210942766766339

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்புகாரணம் இதுதான்!!, Narendran S, First Published Sep 22, 2022, 9:20 PM IST; Last Updated Sep 22, 2022, 9:20 PM IST.

[8] https://tamil.asianetnews.com/india/rss-chief-mohan-bhagwat-met-muslim-leader-imam-umar-ahmed-ilyasi-rimc0w

[9] தினத்தந்தி, இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு, Sep 22, 2:32 pm

[10] https://www.dailythanthi.com/News/India/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims-798250

திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)

திசெம்பர் 9, 2017

திருமா வளவனின் இந்துவிரோத பேச்சுதுலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)

Tiruma wanted Hindu temples demolished-DK, and anti-hindu groups

திருமாவிற்கு எதிராக எழுந்த கண்டனங்கள்: இதற்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தப் பேச்சு வருத்தமளிக்கும் விதத்தில் இருப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாலர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்[1]. அந்த அறிக்கையில், கோவில்களை இடிக்க வேண்டும் திருமாவளவனின் பேச்சு மிகுந்த வருத்தமளிக்கிறது. புத்த மதத்தை சார்ந்தவர்களே இப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சாதியையும், மதத்தையும், வழிபாட்டையும் அரசியல் லாபத்திற்காக எந்தவொரு தலைவரும் கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். சிவனையும், பெருமாளையும் வழிபடுபவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இல்லாமல் இல்லை. வழிபாடு என்பது எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம். ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதை யாரும் விரும்பமாட்டார்கள். எந்தவொரு உணர்ச்சி வேகத்திலும் சாதி, மதம் பற்றியோ, கடவுள் வழிபாடுகளை பற்றியோ அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை இவ்வளவு விழிப்புணர்வு அடைந்தப் பின்னால் தமிழ்நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள்”.

Tiruma wanted all Hindu temples demolished-Polimer video

மற்றவர்களுடைய வழிபாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல: ஈஸ்வரன் தொடர்ந்தது: “ஒருவர் தன்னுடைய வழிபாட்டு முறைகளை பற்றி உயர்த்தி பேசுவதே மற்றவர்களை பாதிக்கும் என்ற நிலை இருக்கும் போது மற்றவர்களுடைய வழிபாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. வாதத்திற்காக கூட இதுபோன்று மக்கள் அமைதியை குலைக்கின்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதைபோன்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பேசுவதும், அதை எதிர்த்து வேறுசில தலைவர்கள் எதிர்கருத்து தெரிவிப்பதும் மக்களிடையே அமைதியின்மை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவது தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பயன் தராது. இன்றைய சூழ்நிலையில் அனைத்து துறைகளிலும் இறங்குமுகமாக இருக்கின்ற தமிழகத்தை முன்னேற்றுகின்ற முயற்சிகளில் அனைத்து தலைவர்களும் இறங்க வேண்டும். முன்னேற்றம் தடைப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் மக்களின் கவனத்தை மதம், சாதி போன்ற விஷயங்களில் திசை திருப்புவது நாம் அமர்ந்திருக்கின்ற மரத்தின் கிளையை நாமே வெட்டி சாய்ப்பதற்கு சமமாகி விடும்”.

 Thiruma, frwnzied speech

ஆக்ரோஷமாக துல்லுகர் முன்ம்பு பேசி, பிறகு அமைதியாக பேட்டி கொடுத்த நிலை: இந்து சமூகத்தினரின் மனதை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் பேசவில்லை. குறிப்பாக இந்துகோவில்களை இடிப்போம் என்கிற வார்த்தையை, அந்த சொல்லாடலை நான் பயன்படுத்தவில்லை. சமணர்களுக்கு, பௌத்தர்களுக்கும் எதிராக நடந்த யுத்தத்தில் சமணர்களின் கோவில்களும், பௌத்த விஹாரங்கள் இடிக்கப்பட்டன வரலாற்று உண்மை. அந்த வரலாற்று உண்மையை இதனுடன் பொருத்தி பேசினேன். ஆகவே பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்று நியாயப்படுத்துவது உங்கள் தர்க்கம் எனில் அதற்கு ஈடாக, பௌத்த விஹாரங்கள் இருந்த இடங்களில் மீண்டும் பௌத்த விஹாரங்கள் கட்டவேண்டும் என்று சொல்லுவதும் சரியாக இருக்கும், நியாயமாக இருக்கும் என்று பொருள்படும் படி நான் பேசினேன்,” என்று விளக்கம் கொடுத்து பேசியபோது, முகம் சாதாரணமாக இருந்தது. மைக்கின் முன்பாக, நிறுத்தி நிதானமாக, பேசியது நன்றாகவே தெரிகிறது. இதனால், நிச்சயமாக இந்துக்கள் ஏமாற மட்டார்கள். முதலில், 1980களில் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இவர், 2000களிலிருந்து முஸ்லிம்கள் சார்பாக மாறியிருப்பதும் கவனிக்கத் தக்கது. பாமகவுடன் இருந்த கூட்டு முறிந்த பிறகு, அரசியலில் இவர் மற்றும் இவரது கட்சி முக்கியத்துவத்தை இழந்தது. ஆகவே, எவ்வாறு வைகோ உளறிக் கொண்டிருக்கிறாரோ,, அதே பாணியில், இவரும் இறங்கி விட்டார் போலும்!

 Tiruma wanted all Hindu temples demolished-DK, and anti-hindu groups

திருமா ஏன் இவ்வாறு ஒன்றும் தெரியாத அப்பாவியாகி விட்டார்?: இவரது இந்து-விரோதம் பல கேள்விகளை எழுப்புகின்றன:

  1. இந்திய சரித்திரத்தின் அடிப்படை விவரங்கள் கூட தெரியாத நிலை – எல்லியட் அன்ட் டாவ்சன் புத்தகங்கள் படித்தாலே, துலுக்கர், தமது துலுக்கரைப் பற்றி என்ன எழுதி வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளாத நிலை.
  2. துலுக்கரின் படையெடுப்பால் வடமேற்கு மற்றும் வடவிந்தியா பகுதிகளில் பௌத்தம் பாதிக்கப்பட்டது பற்றி தெரியாத நிலை. பௌத்தம் அங்குதான் கோலோச்சிக் கொண்டிருந்தது, ஆனால், துலுக்கட படையெடுப்பால், மொத்தமாக துடைத்தழிக்கப் பட்டது. சமீபத்தில் பாமியன் புத்தர் சிலை உடைக்கப்பட்டது உட்பட, தொடர்ந்து தலிபான் தாக்குதல், ஐசிஸ் தாக்குதல் முதலியவை.
  3. துலுக்கரால், தமிழகக் கோவில்கள் இடிக்கப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்டது, மசூதிகளாக மாற்றப்பட்டது தெரியாதது போல நடிக்கும் நிலை. இப்பொழுது கூட திருப்பரங்குன்றத்தில், தீபம் ஏற்றமுடியாத நிலை.
  4. இன்றைக்கும் “பத்மாவதி” ஏன் எதிர்க்கப் படுகிறது என்ற நிலை.அதாவது இந்திய பெண்மை, துலுக்கரின் குரூரங்களால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கும் சதி.
  5. ஏற்கெனவே உச்சநீதி மன்றத்தில் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்ட நிலையை அறியாதது போல நடிப்பது.
  6. ஆனானப் பட்ட பெரிய-பெரிய சரித்திராசிரியர்கள் எல்லாம் எப்படி பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று அவர்க்களை உச்சநீதி மன்ற கண்டித்த உண்மை.
  7. இவற்றையெல்லாம் மீறி, அயோத்திதாசர், மயிலை சீனி.வெங்கடசாமி…..போன்றோர் சொன்னார்கள் என்று பழைய கதை பாடும் போக்கு. அவர்கள் ஜனரஞ்சன ரீதியில் கதை போல, உணர்ச்சிப் பூர்வமாக எழுதியவை-அவற்றை சரித்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
  8. இன்றைக்கு இந்தியாவிலேயே, ஜிஹாதி தீவிரவாதம் எந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என்பதனை மூடி மறைக்கும் போக்கு. ஐசிஸ் ஆட்கள், ஜிஹாதிகள், முதலியோர் தமிழகத்தில் கைதாகி இருப்பது பற்றி மூச்சு விடாமல், அமைதியாக இருப்பது.
  9. அளவுக்கு மீறி துலுக்கரை பாராட்டும், போற்றும் மற்றும் ஆதரிக்கும் போக்கு. பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
  10. சங்கப்பரிவாரை எதிர்க்கிறோம் என்ற போக்கில், இந்துக்களை, இந்து மதத்தை எதிர்க்கும், தாக்கும் மற்றும் தூஷணம் செய்யும் போக்கு வேண்டுமென்றே, விஷமத்தனமாக செய்வது போலிருக்கிறது.

 

© வேதபிரகாஷ்

09-12–2017

Tiruma accusing MODI

[1] தமிழ்.ஒன்.இந்தியா, கோவில்களை இடிக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசுவதா?- கொந்தளிக்கும் கொ..தே. ஈஸ்வரன், Posted By: Mohan Prabhaharan, Published: Friday, December 8, 2017, 18:47 [IST].

https://tamil.oneindia.com/news/tamilnadu/kmdk-leader-eswaran-says-vck-thirumavalan-speech-on-hindu-temples-304398.html

 

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (3)

திசெம்பர் 22, 2013

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (3)

முஸ்லிம்கள் கருணநிதியை மிரட்டுவது சகஜமான விசயமே

முஸ்லிம்கள் கருணநிதியை மிரட்டுவது சகஜமான விசயமே

முஸ்லிம்களின் மனப்பாங்கு இந்துவிரோதமே என்பது போலத்தான் முஸ்லிம் லீக் தலைவர்கள் இன்றும் பேசி வருவது வியப்பாகத்தான் இருக்கிறது. மக்களவைத்

தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு இடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம் என  ஏதோ கெஞ்சுகின்ற அல்லது சமரசம் செய்து கொள்ளும் முறையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் ஒரு பக்கம் தெரிவித்தார்[1]. மதவாதத்தை மனங்களில் ஏற்றிவைத்துள்ள முஸ்லிம்கள் இப்படி கருணாநிதியை மிரட்டியே எப்படியாவது எம்.பி, எம்,எல்.ஏ, போன்ற பதவிகளைப் பெற்றுக் கொண்டு, தமிழகத்தில் பிரிவினையை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அதே நேரத்தில், கருணாநிதிக்கு சவால் விடும் தோரணையில், “அதேப்போல் பா.ஜனதாவுடனும் கூட்டணி வைக்கமாட்டார். அப்படி வைத்தால் தி.மு.க.கூட்டணியில் இருந்து விலகுவோம்”. என்று இன்னொரு பக்கத்தில் மிரட்டியுள்ளார். [2]

Jinnah, Periyar, Ambedkar 1940

இந்த கூட்டம் அன்று காங்கிரஸுக்கு எதிராக திட்டம் தீட்டியது, இன்றோ – அதாவது சித்தாந்த ரீதியில் – பிஜேபிக்கு எதிராக செயல்படுகிறது

ஜனநாயகம்,   சமயச்சார்பின்மை,   சமூகநீதி  ஆகியவையே  இந்திய  யூனியன்  முஸ்லீம்  லீக்   கட்சியின்  கொள்கை; இப்படி ஒரு ஜோக்குடன் தூத்துக்குடியில் சனிக்கிழமை கே.எம். காதர் மொய்தீன் அளித்த பேட்டி என்று ஊடகங்கள் வெளியிட்டுள்ளன: ஜனநாயகம், சமயச் சார்பின்மை, சமூக நீதி ஆகியவையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொள்கை. இதையே அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது.

கேரளத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் திமுகவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இப்படி லீக்கின் இரட்டை வேடங்கள் ஜனநாயகத்தைக் காட்டுகிறதா அல்லது பதவி ஆசை, சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறதா என்பதனை மக்கள் அறிவார்கள்
பாஜகவை பொருத்தவரையில் அக்கட்சி எங்களுக்கு விரோதி கிடையாது. ஆனால், மோடி கிராம ராஜ்யம் பற்றி பேசுவதற்குப் பதிலாக, ராம ராஜ்யம் பற்றி பேசி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கையில் அவர் எங்களிடம் இருந்து முரண்படுகிறார். காந்தி கூடத்தான் ராம ராஜ்யம் வேண்டும் என்றால், “ஹே ராம்” என்று சொல்லிக் கொண்டுதான் இறந்தார். பிறகு காந்தியை ஒன்றும் ஜின்னா விட்டு வைக்கவில்லையே? எனது இணத்தின் மீது தான் நடந்து செல்ல வேண்டும் என்ற போதிலும், பாகிஸ்தானை உருவாக்கத்தானே செய்தார்!

திமுக தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரையில், அவர் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக அறிவித்துவிட்டார். நட்பு என்றாலும் சரி, பகை என்றாலும் சரி அதில் தெளிவாக இருப்பவர் கருணாநிதி. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் 3-ஆவது அணி அமைய விரும்புகிறோம். நரேந்திர மோடியை கருணாநிதி பாராட்டினார் என்பதற்காக, அவர் பாஜகவுக்கு ஆதரவு தருவார் என்பதாக அர்த்தமில்லை.

முஸ்லிம் கட்சிகள் தமிழகத்தில் கூட்டு

இப்படி சண்டைப் போட்டுக் கொள்வது போல நடித்தாலும், தங்களது விசயங்களை சாதித்துக் கொள்வார்கள்

பா.ஜனதாவுடன்கூட்டணிவைத்தால்தி.மு..வில்இருந்துவிலகுவோம்[3]: தமிழகத்தில் 55 லட்சம் முஸ்லிம்கள் உள்ளதால் முஸ்லிம்களுக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். திமுக கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம். தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு காரணம் கலைஞர் ஒரு சிறந்த தலைவர். அவர் நட்பாக இருந்தாலும், பகையாக இருந்தாலும் தெளிவான சிந்தனையோடு இருப்பார். கலைஞர் தலைமையில் 3–வது அணி அமைந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் அவர் பிரதமராக ஆசைப்படாதவர். மற்றவர்களை பிரதமராக ஆக்குபவர்.  காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று தெளிவாக சொல்லிவிட்டார். அதேப்போல் பா.ஜனதாவுடனும் கூட்டணி வைக்கமாட்டார். அப்படி வைத்தால் தி.மு.க.கூட்டணியில் இருந்து விலகுவோம்[4].

திருச்சியில் டிசம்பர் 28-ஆம் தேதி மஹல்லா ஜமா அத் மாநில மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் ஜமா அத் நிர்வாகிகள் மற்றும் அறிஞர்கள், முஸ்லிம் கல்வி நிறுவன நிர்வாகிகள் அதில் கலந்துகொள்ள உள்ளனர் என்றார் காதர் மொய்தீன்[5]. அதாவது என்னத்தான், ஜனநாயகம், கூட்டணி முதலியவை பேசினாலும், மதரீதியில் கூடுவோம் அங்கு முடிவெடுப்போம் என்ற ரீதியில் தான் முஸ்லிம் போகு உள்ளது. ஜமா அத் முடிவுதான் இறுதியானது போலும்!

முஸ்லிம் கட்சி - பிஜேபி கூட்டு

பாவம், பிஜேபி – முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டு என்றார்கள், ஆனால், அக்கட்சியையே காணோம்!

தி.மு.., கூட்டணியா? பா.., அலறல்[6]: ”தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சிக்காத நிலையில், கூட்டணி பற்றி, அக்கட்சி கூறும் கருத்துகளுக்கு, பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை,” என, பா.ஜ., மாநிலத் தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி: “தி.மு..,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தமிழக பா..,வோ, கட்சியின் அகில இந்திய தலைமையோ, இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ‘பா..,வுடன் கூட்டணி இல்லைஎன, தி.மு.., கூறுவதற்கு, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.மோடியை பிரதமராக ஏற்கும், கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்என, ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனவே, அதன் அடிப்படையில், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து, உரிய நேரத்தில் முடிவெடுக்கப் படும்”, இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்[7].

Photographing faceless

முஸ்லிம்களின் முடிவு ரகசியமானது அதனை பார்க்க முடியாது

முஸ்லிம்களுக்குப் பின்னர் கிருத்துவர்களுடன் பிஜேபி கூட்டு: தமிழக பா.ஜனதா கட்சியில், பிற கட்சிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இணையும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 21-12-2013 அன்று நடைபெற்றது[8].

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், ”பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?” என்று கேட்டதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணிக்கு வாருங்கள் என்று தி.மு.க.வை பா.ஜனதா அழைக்கவில்லை’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். முஸ்லிம்களை அடுத்து கிருத்துவர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் முயற்சியில் பிஜேபி ஈடுபட்டுள்ளது தெரிகிறது. மோடியுடன் பால் தினகரன் சந்தித்துள்ளதும் நினைவு கூரத்தக்கது. ஆனால், சோனியாவை விடுத்து பிஜேபிக்கு விசுவாசமாக ஓட்டளிப்பார்களா என்றுதான் பார்க்க வேண்டியதுள்ளது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நாராயணன், ஐக்கிய ஜனதா தளம் பொது செயலர், தர்மன் யாதவ், 28 பாதிரியார், 50 வழக்கறிஞர் மற்றும், 75 கல்லுாரி மாணவர்கள் ஆகியோர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.

சோனியாவின் மந்திர, தந்திய, யந்திய வசியங்கள் இந்த நான்கு-ஐந்து மாதங்களில் தெரிந்து விடும்

சோனியாவின் மந்திர, தந்திய, யந்திய வசியங்கள் இந்த நான்கு-ஐந்து மாதங்களில் தெரிந்து விடும்

செக்யூலரிஸம், சிறுபான்மையினர் மற்றும் இந்திய அரசியல்: செக்யூலரிஸம் என்றால் பிஜேபியை வசைப்பாடினால் சான்றிதழ் கிடைத்து விடும் என்ற ரீதியில் மற்ற அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. முஸ்லிம் லீக், எம்.ஐ.எம், கேரளா காங்கிரஸ் போன்ற மிகவும் அடிப்படைவாதம், மதவாதம் கொண்ட கட்சிகள் இதனால் தான், தாங்கள் செக்யூலார் என்று மார்தட்டிக் கொண்டு போலி வேடம் போட்டுக் கொண்டு நாடகம் ஆடி ஜனநாயகத்தைக் கேவலப்படுத்தி வருகின்றன. சோனியா காங்கிர்ஸைப் பொறுத்த வரையிலும், அரசியல் விபச்சாரம் செய்து கொண்டு, பிஜேபியை ஆட்சிக்கு வராமல் தடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது மக்கள் பிஜேபிக்கு அதிக அளவில் ஓட்டளிப்பார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகு, இந்துக்களின் ஓட்டுகளை எப்படி பிரிப்பது என்று சதி செய்து கொண்டிருக்கிறார். இதன் விளைவுதான்  ஆம் ஆத்மி பார்ட்டி, லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் வெளிவருதல், ராம் விலாஸ் பாஸ்வான் ஆதரவு, ஜெயலலிதா பிரதமர் ஆசை, கம்யூனிஸ்டுகளிம் மௌனம் முதலியன. மூன்றாவது அணி என்பது, பிஜேபியின் ஓட்டுகளைப் பிரிப்பதற்காகவே அன்றி, இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கு அல்ல. இப்பொழுதைய நிலையில் மக்கள் பிஜேபிகு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதால், 2004 மற்றும் 2009களில் செய்தது போன்ற அதிரடி நடவடிக்கைகளை சோனியா இந்த நான்கு-ஐந்து மாதங்களில் செய்து காட்டுவார். பிஜேபி அவற்றை எதிர்கொள்ளுமா, தாங்கி நிற்குமா அல்லது படுத்து விடுமா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

வேதபிரகாஷ்

© 22-12-2013


[1] தினமணி, திமுககூட்டணியில்ஒருஇடம்கொடுத்தாலும்ஏற்போம், By dn, தூத்துக்குடி, First Published : 22 December 2013 01:23 AM IST.

[2] மாலைமலர், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வில் இருந்து விலகுவோம்: காதர்மொய்தீன் பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 21, 12:22 PM IST

[4] மாலைமலர், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வில் இருந்து விலகுவோம்: காதர்மொய்தீன் பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 21, 12:22 PM IST

[7] தினமலர், தி.மு.., கூட்டணியா? பா.., அலறல், பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013,02:10 IST

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (1)

திசெம்பர் 15, 2013

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (1)

முஸ்லிம் கட்சி - பிஜேபி கூட்டு

தமிழகத்தில்  பிஜேபியின்  கூட்டணி  அல்லது  பிஜேபியின்  கூட்டு: 2014 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் பா.ஜனதா தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆகவே, இதில் திமுக, அதிமுத தங்களுக்கே உள்ள தோரணையில் இருப்பதினால், அவற்றுடன் கூட்டு இல்லை என்று தீர்மானமாகத் தெரிகிறது[1]. தமிழகத்தில், இதர திராவிடக் கட்சிகளை இழுக்கும் முயற்சியில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உறுதியாகி இருக்கிறது. பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளும் இதில் சேரும் என்று கூறப்படுகிறது. இது தவிர வேறு கட்சிகளையும் இந்த கூட்டணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் கட்சிகள் தமிழகத்தில் கூட்டு

 

http://paraiyoasai.wordpress.com/8-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

இத்தளத்தில் இருக்கும் படம் எடுத்தாளப்பட்டுள்ளது.

முஸ்லிம்களும், பிஜேபியும்: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்துள்ளது[2] தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவிலும், முஸ்லிம்களின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், முஸ்லிம்கள் மற்ற விசயத்தில் ஜாக்கிரதையுடன் தான் பிஜேபியை அணுகுவார்கள் என்பதை அறியலாம். அப்பாஸ் நக்வி போன்ற முஸ்லிம் தலைவர்கள் பிஜேபியில் நெடுங்காலமாக இருந்து வருகின்றனர். ஆனால், திராவிடப் பின்னணியில், ஒரு முஸ்லிம் கட்சி, பிஜேபியுடன் எப்படி செயல்படும் என்று பார்க்கவேண்டும். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது, முன்னர் என்.டி.ஏவில் திமுக இருந்தபோது, அதனுடன் இருந்த முஸ்லிம்கட்சிகள் எதிர்க்காமல் தொடர்ந்து திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.

அனைத்து  இந்திய  முஸ்லிம்  முன்னேற்ற  கழகம்  பிஜேபிக்கு  ஆதரவு  கொடுப்பது[3]: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை (13-12-2013) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்[4]. இந்த நிகழ்ச்சியின் போது, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், பா.ஜனதா மாநில செயலாளர் வானதி சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் கே.டி. ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: “பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சதக்கத்துல்லா தலைமையிலான அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக முஸ்லிம் மக்களிடம் அவர்கள் ஆதரவு திரட்டுவார்கள்.  டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கியவீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரைஎன்ற பாத யாத்திரைக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 700-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துக்களில் இந்த யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. வீடுகள்தோறும் சென்று மக்களை நேரடியாகச் சந்திக்கும்போது மக்களின் பிரச்னைகள், கிராமங்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த பாத யாத்திரை வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறும்”, இவ்வாறு அவர் கூறினார்[5]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்திருப்பது, அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது[6]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது[7].

பிரதமர்  ராஜிநாமா  செய்ய  வேண்டும்பிஜேபி  ராதாகிருஷ்ணன்  கோருவது: உள்ளூர் விசயங்களை, இங்கு பிஜேபி பேசி வருவதைக் காணலாம். “தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றாலும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது போன்ற கொடுமைகள் தொடர்கின்றன. இப்போது மீண்டும் 180-க்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கு இலங்கை அரசு சவால் விடுத்துள்ளது. இந்திய மீனவர்களை ஏன் காப்பாற்ற முடியவில்லை என்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் வேண்டும். இல்லையெனில் அவர் ராஜிநாமா செய்ய வேண்டும்”, என்றார் பொன். ராதாகிருஷ்ணன். இருப்பினும், இலங்கை அனுதாபிகள், அபிமானிகள் இதைப் பற்றி ஒன்றும் கண்டுகொள்ளாமல் இருப்பது நோக்கத்தக்கது.

மெரீனாவில்   நாளை  ஒற்றுமை   ஓட்டம்[8]: முன்னாள் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிக உயரமான இரும்பு சிலை அமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 7 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து விவசாயிகள் பயன்படுத்திய இரும்புப் பொருள்கள் பெறப்பட்டு அதன் மூலம் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இது குறித்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக பட்டேலின் நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) காலை 8 மணிக்கு நாடு முழுவதும் சுமார் 1,500 இடங்களில் ஒற்றுமை ஓட்டம் நடைபெறவுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை நடைபெறும் இந்த ஒற்றுமை ஓட்டத்தில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆர். நடராஜ், பாலச்சந்தர், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, திரைப்படத் தயாரிப்பாளர் எஸ், தாணு, நடிகை ரேணுகா உள்ளிட்டோர் இதில் பங்கேற்க இருப்பதாக பட்டேல் சிலை அமைப்புக் குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அரசியலில்  தீண்டத்தகாதக்   கட்சி  எதுவும்  இல்லை: அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது போல, அரசியலில் தீண்டத்தகாதக் கட்சி எதுவும் இல்லை என்ற தத்துவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேவையான போது, இந்திய அரசியல் கட்சிகள், பின்பற்றி வருகின்றன. செக்யூலரிஸம் எப்படி அவரவர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக் கொண்டு, அனுபவித்து வருகின்றனரோ, அதேபோலத்தான் இந்த அரசியல் தீண்டாமை, ஒதுக்குதல் முதலியனவும். காங்கிரஸ், நாட்டைத் துண்டாடிய முஸ்லிம் லீக், கிருத்துவ மதவெறிக்கட்சி கேரளா காங்கிரஸ் முதலியோர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும்போது, எந்த அறிவாளியும், அரசியல் பண்டிதனும் அதனைத் தட்டிக் கேட்டதில்லை. ஆனால், பிஜேபி அகாலிதளத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதனை மதவாதம் என்று கூக்குரல் இட ஆரம்பித்து விடுகிறார்கள். சிவாஜி சிங் சௌஹான் பதவி ஏற்கும் விழாவில், சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியும் “மோடி தீண்டத்தகாதவர் அல்ல”, என்கிறார்[9], தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்[10]. டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்றும், தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்[11].

வேதபிரகாஷ்

© 15-12-2013


[5] தினமணி, பாஜககூட்டணியில்முஸ்லிம்முன்னேற்றக்கழகம், By dn, சென்னை, First Published : 14 December 2013 03:29 AM IST

[6] மாலைமலர், தமிழ்நாட்டில்முதல்முறையாகபா.ஜனதாகூட்டணியில்முஸ்லிம்கட்சி: பொன்.ராதாகிருஷ்ணன்முன்னிலையில்சேர்ந்தது, பதிவு செய்த நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 14, 10:21 AM IST.

[11] தினமலர், மோடிதீண்டத்தகாதவர்அல்ல: ஜெகன், பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2013,18:31 IST

இந்திரா ஆயிஷா பானுவாகி, ஹவாலா ஈடுபட்டது, இது வெறும் ஹவலா மோசடிதான், பாட்னா குண்டுவெடிப்புக்கு சம்பந்தம் இல்லை – இப்படி வக்காலத்து வாங்குவது ஏன்?

நவம்பர் 15, 2013

இந்திரா ஆயிஷா பானுவாகி, ஹவாலா ஈடுபட்டது, இது வெறும் ஹவலா மோசடிதான், பாட்னா குண்டுவெடிப்புக்கு சம்பந்தம் இல்லை – இப்படி வக்காலத்து வாங்குவது ஏன்?

Aysha Banu arrested for handling terror money - Patna blast7

தேசியபுலனாய்வுஏஜென்சிமங்களுரில் ஒரு பெண்னை கைது செய்தது: பாட்னா நரேந்திர மோடி கூட்டத்தில்தொடர்குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு உதவிய தம்பதியை மங்களூருவில் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் 13-11-2013 புதன்கிழமை அன்று ஆஜர்படுத்தினர். ஆங்கில நாளிதழ்கள் தேசிய புலனாய்வு ஏஜென்சி [The National Investigation Agency (NIA)], குறிப்பாக பாட்னா குண்டுவெடிப்பு விசாரணை செய்யும் குழு, கைது செய்தது என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[1]. கடந்த மாதம் 27ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திர மோடி கலந்து கொண்ட மேடைக்கு அருகே கூட்டம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் குண்டுகள் வெடித்து 7 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியதில் இந்திய முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளான இப்ராகிம், பப்பு, சேட்டு, மவுலித் சாயப், அன்சாரிகான் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானில் இருந்து 5 கோடி ஹவாலா பணம் மங்களூரில் உள்ள பெண் ஒருவரின் மூலமாக பெறப்பட்டிருப்பது தெரிந்தது.

Aysha Banu arrested for handling terror money - Patna blast5

இந்திரா ஆயிஷா பானுவாகி, ஹவாலா மோசடியில் இறங்கினாராம்: புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தியதில், அந்த பெண் ஆஷா என்கிற ஆயிஷா பானு என தெரியவந்தது[2]. கர்நாடக மாநிலம், மங்களூரு அருகேயுள்ள பஞ்சிமுகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா பானு (36). இவரது கணவர் ஜுபேர். குடகு மாவட்டத்தைச் சேர்ந்த பீரய்யாவின் மகளான இந்திரா, 18 ஆண்டுகளுக்கு முன்பு பஜ்பே பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் வீட்டில் பணிபுரிந்த போது, ஜூபேரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர், மதம் மாறி ஆயிஷா பானுவாக பெயரை மாற்றினார்[3]. பீடி முகவராக இருந்த ஜுபேர், பின்னர் துபைக்குச் சென்று பணிபுரிந்தாராம். இங்கும் பீடிதொழில் சமந்தம் வருவது நோக்கத்தக்கது. இவன் மூன்று பீடிகடைகளை வைத்துள்ளான்[4]. முதலில் வாடகை வீட்டில் இருந்த இவன்,. திருமணம் ஆனவுடன் சொந்த வீடு வாங்கிக் கொண்டானாம்[5]. அப்போது, இந்தியாவிலிருந்த ஆயிஷா பானுவை ஹவாலா பணம் மாற்றுவதற்கு பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது[6]. அப்படி என்ன பெண்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகளகவா இருக்கின்றனர்? இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மற்றியவுடன் விவரமாக சொல்லிக் கொடுத்திருப்பார்களே?

Aysha Banu arrested for handling terror money - Patna blast6

ஒருபெண்ணிடம்இவ்வளவுஇருக்குமா?: பாட்னா குண்டுவெடிப்பு குறித்து வழக்குப் பதிந்த போலீஸார், சிலரைக் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், மங்களூருவில் ஆயிஷாபானுவை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸார், புதன்கிழமை மங்களூர் 3-ஆவது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தினர்[7]. விசாரணைக்குப் பிறகு ஆயிஷாபானுவை, பாட்னா போலீஸாரிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆயிஷா பானு, குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நிதி பெற்று, ரூ. 5 கோடி வரை உதவி செய்துள்ளார்[8]. 35 வங்கிக் கணக்குகளில் பணப் பரிமாற்றம் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது[9]. அவளிடமிருந்து கீழ்கண்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன[10]:

  1. ஏழு வங்கி கணக்குப் புத்தகங்கள் [seven bank passbooks],
  2. ஆறு ஏடிஎம் கார்டுகள் [six ATM cards, 10 mobile phones],
  3. பத்துஇ சிம் கார்டுகள் [10 SIM cards]
  4. 35ற்கும் மேலான சட்ட விரோதமான கார்டுகள் [more than 35 illegal ones]
  5. அதில் சுமார் 50 பாகிஸ்தானைச் சேர்ந்தவை [with around 50 numbers of Pakistan].

விவரமே தெரியாமலா, இவ்வளவையும் அவள் வைத்திருந்தாள்? ஒரு இந்துவாக இருந்தவள், முஸ்லிமாக மாறியப் பிறகு எதற்காக பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? இந்நிலையில், இவர்களை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்கும்படி, நீதிமன்றத்தில் பீகார் போலீசார் அனுமதியை கேட்டனர். இதை ஏற்று கொண்ட நீதிபதி, இருவரையும் பீகார் போலீசிடம் ஒப்படைக்கும்படி மங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பீகார் போலீ சார் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் பாட்னா அழைத்துச்சென்றனர்.

Aysha Banu arrested for handling terror money - Patna blast

இதுவெறும்ஹவலாமோசடிதான், பாட்னாகுண்டுவெடிப்புக்குசம்பந்தம்இல்லை: வழக்கம் போல, முஸ்லிம் இணைதளங்கள் இதனை மறுக்கின்றன[11]. உள்ளூர் கன்னட நாளிதழும் இதற்கும் பாட்னா குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்கிறது[12]. பீஹாரின், லகிசராய் சூப்பிரென்டென்ட், “அவள் சட்டவிரோதமான பணமாற்ரத்திற்காகத்தான் கைது செய்யப் பட்டிருக்கிறாள். தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்துதவியதற்கு கைது செய்யப்படவில்லை”, என்றதாக எடுத்துக் காட்டுகின்றன[13]. மங்களூர் இஐஜிபி, பிரதாப் ரெட்டியும், இது தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்ட செயலாக இருக்காது என்று நம்புவதாக சேர்த்து எழுதியுள்ளன[14]. ஒரு பெரிய போலீஸ் அதிகாரி என்ன இப்படிப்பட்ட சட்டமீறல்களைப் பற்றி உடனடியாக கருத்து சொல்லி விடுவாரா? “ஏசியன் ஏஜ்” என்றதன் படி, போலீசார் இதைப்பற்றி எதுவும் சொல்ல மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது[15]. Aysha Banu arrested for handling terror money - Patna blast2அதாவது, இப்பொழுதெல்லாம், இத்தகைய விவரங்கள் அதிகமாக வருகின்றன. ஆனால், குண்டுகள் தயாரிப்பது, அவற்றை வைப்பது, வெடிக்க வைப்பது போன்றவற்றைப் பற்றிய செய்திகளை மட்டும் ஊடகங்கள் வெளியிடுவதில்லை. Aysha Banu arrested for handling terror money - Patna blast3வெடித்தபிறகு செய்திகளை அள்ளிவீசுகிறார்கள். குண்டுவெடிப்பில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், அவர்களது குடும்பங்கள், அவர்களது எதிர்காலம் முதலியவற்றைப் பற்றியும் கண்டுகொள்வதில்லை.

© வேதபிரகாஷ்

15-11-2013


[3] If reporting this easily discernible concocted story was not enough, the media outlets also went to the extent of digging Ayesha Banu’s past and wrote that ‘Ayesha’ was born ‘Asha’, a Hindu who later converted to Islam, after marrying a Muslim man. And it only looked like they were serving right-wing organisations’ agenda, when they included a press statement by Vishwa Hindu Parishad (VHP) and Bajrang Dal, in their reports, which said that the case of Ayesha’s arrest showed that Muslim men were luring Hindu woman “with love affairs and money and converted to Islam only to carry out dangerous and illegal activities like this. Hindu young women must be guard against Love Jihad which attract them towards colorful life in the beginning, but end up in jails, prostitution hubs, etc.” http://twocircles.net/2013nov13/malicious_reports_mangalore_womans_connection_patna_blast_rubbished_police.html

[9] தினமணி, பாட்னா குண்டு வெடிப்பு: எதிரிகளுக்கு உதவியதாக மங்களூருவில் பெண் கைது, First Published : 14 November 2013 04:06 AM IST

[12] In a twist to the story, another leading Kannada daily from Mangalore has revealed that there is no connection between Aysha’s arrest and Patna bomb blasts.

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=201119&n_tit=Mangalore%3A%20Aysha%20has%20no%20connection%20to%20Patna%20blasts%3F

[13] Rejecting the malicious reports, Bihar’s Lakhisarai Superintendent of Police, Mr. Rajiv Sharma said that, her arrest was in connection to illegal financial activities and not in connection to terrorism financing.

[14] Mangalore city’s Inspector General of Police (Western Range) Mr. Prathap Reddy said that, he is confident that there is no terror activity taking place in the western range of the region, and proclaimed that “no investigation agency has contacted us in relation to any such activities.”

[15] Local police sources refused to officially confirm the arrest but admitted that the woman who had been detained lived in a house at Panjimogeru, about 9 kms from Mangalore with her three children and that she was arrested by a police team comprising of Bihar police and local police officials. Local corporator elect and CPI(M) leader Dayanand Shetty confirmed the arrest and said that she was brought back to her house along with her husband for further enquiries on Tuesday evening.

http://www.asianage.com/india/was-patna-blast-financed-mangalore-woman-205

குல்லா போட்டால்தான் செக்யூலரிஸவாதி – முஸ்லிம்கள் கொடுக்கும் புதிய விளக்கம்!

ஓகஸ்ட் 10, 2013

குல்லா போட்டால்தான் செக்யூலரிஸவாதி – முஸ்லிம்கள் கொடுக்கும் புதிய விளக்கம்!

Chauhan with Muslim cap 09-08-2013

2013-2014  ஆண்டுகளில் இம்மாதிரியான தமாஷாக்கள் அதிகமாகவே இருக்கும்[1]: தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்தார் பார்ட்டிகள் நடத்துகின்றன[2]. அடுத்த வருடம் தேர்தல் என்றால், இப்பார்டிகள் அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது, என்று குறிப்பிட்டு இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை.  காபிர்-மோமின் கூட்டணிகள் ஜோராகத்தான் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. Dravidian Iftar or Iftar with Atheits.2இதில் திராவிடப் போராளிகளான கருணாநிதி, அன்பழகன் போன்றோர் குல்லாபோட்டும், கழற்றி வைத்தும் கஞ்சி குடிப்பர். “உள்ளம் கவர் திருடர்கள்” தாமே, குல்லாப் போட்டவர்கள், போடுகிறவர்கள் பொறுத்துத்தான் போவார்கள். “திராவிடர்களே” இப்படியென்றால், “ஆரியர்களுக்கு” சொல்லித்தரவா வேண்டும். இதோ போட்டி ஆரம்பித்துவிட்டது. சொல்லிவைத்தால் மாதிரி, குல்லா விவகாரம் தலையெடுத்து விட்டது.

Ramzan TV shows.1

பாகிஸ்தானில் ரம்ஜானை வைத்துக் கொண்டு தமாஷா – வியாபாரம்: குல்லா போடுவதில், “தி ஹிந்து” போன்ற செக்யூலரிஸ ஊடகங்கள் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றன. ரம்ஜான் மாலையில் “ஈத்-கா-சாந்த்”ன் ஒளி பரவ ஆரம்பித்து விட்டதாம், வர்ணித்திருக்கிறது[3]. இந்த “தி ஹிந்து”, என்டி-டிவியுடன் கூட்டு வைத்து செக்யூலரிஸத்தைப் பிழிந்து, ஊறவைத்து, ஊற்றிக் கொடுத்து போதையை ஏற்றி வருகிறது. இதற்கு பாகிஸ்தானில் வேறு கூட்டு – ஆமாம் என்டி-டிவி-பாகிஸ்தான். TV shows for Ramzan weekendஅமீர் லிகாயத் ஹுஸைன் தமாஷா பாகிஸ்தான் டிவி சரித்திரத்திலேயே மிகப்பெரிய வெற்றி நிகழ்சியாகும் என்ற செய்திகளை அள்ளி வீசியுள்ளது[4]. போதா குறைக்கு குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைகளைக் கூட தானமாகக் கொடுத்திருக்கிறார்கள்[5]. இதெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறாதஆ இல்ல்லஈயா என்று நமது தமிழ்நாட்டு முஸ்லிம் பண்டிதர்கள் தாம் விவாதித்து அவர்களுக்குச் சொல்ல வேண்டும். சரி, இந்தியாவில் குல்லா போடாமல் இருப்பார்களா? இந்திய டிவிகளும் இந்த வியாபாரத்தைச் செய்துள்ளது, செய்து வருக்கிறது[6].

Ramzan TV shows.2

இந்ந்தியாவிலும் ரம்ஜானை வைத்துக் கொண்டு தமாஷா — அரசியல் – வியாபாரம்: 09-08-2013 அன்று ராஸா மூரத் என்ற நடிகர், மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சௌகானுடன் குல்லா போட்டுக் கொண்டு காட்சியளித்தார். போபாலில் ஈத்கா நிகழ்சியில் சௌகானும் குல்லா போட்டுக் கொண்டிருந்தார்[7]. அப்பொழுது ராஸா மூரத் இவரைப் பார்த்து மற்ற முதல்வர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்”, என்று பேசினார்[8]. குறிப்பாக நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசினார்[9]. அதாவது குல்லா போட்டால்தான் செக்யூலரிஸவாதி என்பது போல முஸ்லிம்கள் கொடுக்கும் புதிய விளக்கம் விசித்திரமாக இருக்கிறது. Raza Muradமுஸ்லிம்கள் குல்லா போட்டு ஏன் பிஜேபிக்காரகளை குறிவைத்துத் தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.Rahul Gandhi with Muslim cap. beard காங்கிரஸ்காரர்கள் தாம் குல்லா போட்டுக் கொள்ளவும், போடவும் தயாராக்க இருக்கிறார்களே? குல்லா போட்ட பிறகு கஞ்சி குடிக்க வேண்டாமா? என்ன, கஞ்சியா, இங்கு ஜெயலலிதா பைவ்—ஸ்டார் ஹோடல் தமாஷாவையும் மிஞ்சும் வகையில்  உணவு வகைகள் இருக்கின்றன.

Rahul Sam with Muslim kullas

ரம்ஜான் – ஈத் செக்யூலரிஸ உணவு வகைகள்: வழக்கம் போல ஈத் தமாஷாக்கள் இல்லைகளை மீறிவிட்டன எனலாம். டிவி-செனல்கள் எல்லாம் இப்படி விதவிதமான சமையல்கள் செய்யப்படுகின்றன, உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன என்றெல்லாம் விவரித்தனர். ஹலீம், ஷீர்-குர்மா, சேவை என்று வர்ணனைகள்[10]. ஆனால், அவ்வுணவு எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்று விவரமாகக் காண்பிக்கப் படவில்லை. Eid celebrationகுறிப்பாக ஆடு-மாடு-கோழி வகையற்றாக்கள் எப்படி கொல்லப்பட்டு, அறுத்து, உரித்து, பிரித்து, வெட்டி சமைக்கிறார்கள் என்பதனை காண்பிக்கவில்லை. Indonesian Muslims Celebrate Eid Al Adhaஇப்படி அறுக்காமல், எப்படி கிடைக்கும். Indonesian-muslims-slaughter-animals-to-celebrate-eid-aladhaஐந்து உடல்கள் அனுப்பப்பட்டன, என்று புலம்பிக் கொண்டிருந்த ஊடகங்கள், ஒரே நாளில் மாறிவிட்டதும் செக்யூலரிஸம் போலும். இதுவும் செக்யூலரிஸம் வகையில் நாளைக்கு விவாதிக்கப்படலாம். குல்லா போட்டால்தான் செக்யூலார்வாதி, என்றாகி விட்டப் பிறகு, நாளைக்கு கஞ்சி குடித்தால் தான் அந்த சான்றிதழை நாங்கள் கொடுப்போம், லுங்கி கட்டினால் தான் ஒப்புக் கொள்வோம், மாட்டிறைச்சி தின்றல் தான் உண்மையான செக்யூலார்வாதி, சுன்னத் செய்து கொண்டால் 100% செக்யூலர்வாதி,……………என்றெல்லாம் விளக்கம் கொடுப்பார்களோ?

Skull cap secular politics

செப்டம்பர்  2011ல் மோடி குல்லா அணிய மறுத்த விவகாரம்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை வலியுறுத்தி, செப்டம்பர் 2011ல், மூன்று நாள் உண்ணாவிரதம் (சத்பாவனா) மேற்கொண்டார். குஜராத் மாநில இஸ்லாமிய இமாம்களும் மோடியை சந்தித்து உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்தினார்கள். பிரானா என்ற கிராமத்தை சேர்ந்த சையது இமாம் சகி சயீது என்ற மதக்குருவும் மோடியை வாழ்த்த சென்றார். அப்போது அவர் மோடியிடம் ஒரு குல்லாவை கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் மோடி குல்லாவை அணிய மறுத்து விட்டார். சால்வை மட்டும் போடுங்கள் என்றார். இதனால் அந்த மதகுரு சால்வையை மட்டும் போட்டு விட்டு திரும்பினார்[11]. Nitish-Modi Muslim politicsஇதைப் பாராட்டி, சிவசேனா கட்சிப் பத்திரிகை, “சாம்னா’வில் வெளியிடப்பட்ட கட்டுரையில்[12], “முஸ்லிம் மத குரு அளித்த குல்லாவை அணிய மறுத்த, மோடிக்கு பாராட்டுக்கள். சிறுபான்மையின மக்களை, “தாஜாசெய்வதால் மட்டுமே, மதசார்பின்மையை நிரூபிக்க முடியும் என்றில்லை. இதை, காங்., கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். மோடி தற்போதைய பாதையில் தொடர்ந்தால், டில்லியில் அவர் பிரதமராகி, ராஜ்பாத்தில் வலம் வரும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை”, என, தெரிவிக்கப்பட்டுள்ளது[13]. இந்த குல்லா விவகாரம் பற்றி தமிழ் ஊடகங்களும் அள்ளிக் கொட்டின.

 

வேதபிரகாஷ்

© 09-08-2013


 


[3] The wait is finally over. After the fast, it is time for the feast. For one month the faithful followed a strict regime of fasting and prayers, but with the sighting of ‘Id-ka-Chand’, the festival, to which they look forward, has finally arrived. While ‘haleem’ was the flavour of the Ramzan month, it is time for ‘sheer-kurma’ and ‘sewiyan’.

http://www.thehindu.com/news/cities/Hyderabad/idkachand-lights-up-festive-mood-on-ramzan-eve/article5004243.ece

[4] Aamir Liaquat Hussain’s show is the biggest success in the history of Pakistani TV –

http://www.ndtv.com/article/world/pakistan-tv-preachers-battle-for-ramzan-ratings-401242

[6] Television is all set to celebrate Eid with spectacular programs ranging from three-hour-long-episodes to celebrities roped in to celebrate and special movies through out the weekend.
http://entertainment.oneindia.in/television/news/2013/tv-channels-maha-programs-for-eid-weekend-116759.html

[8] Murad standing alongside Chouhan, who had sported a skull cap while greeting the Muslims on the occasion of Eid al-Fitr, said the other chief ministers need to learn from the Madhya Pradesh chief minister that wearing a cap does not affect one’s religion. “I do not think much importance should be given to sporting a skull cap as wearing it does not mean anything much. It was time that Gujarat Chief Minister Narendra Modi learns some things from Chouhan and does not show his aversion to skull caps,” said Murad.

http://www.dnaindia.com/india/1872350/report-raza-murad-hits-back-at-uma-bharti-calls-her-c-grade-politician

[10] The wait is finally over. After the fast, it is time for the feast. For one month the faithful followed a strict regime of fasting and prayers, but with the sighting of ‘Id-ka-Chand’, the festival, to which they look forward, has finally arrived. While ‘haleem’ was the flavour of the Ramzan month, it is time for ‘sheer-kurma’ and ‘sewiyan’.

http://www.thehindu.com/news/cities/Hyderabad/idkachand-lights-up-festive-mood-on-ramzan-eve/article5004243.ece

[11] மாலைமலர், நரேந்திரமோடிகுல்லாஅணியமறுத்ததால்சர்ச்சை, http://www.maalaimalar.com/2011/09/20112547/controversy-for-narendira-modi.html

[12]நக்கீரன், குல்லா விவகாரம் : மோடிக்கு சிவசேனை பாராட்டுhttp://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=61872