மொஹரம் கடைப்பிடிப்பதில் சுன்னி–ஷியாக்களில் வித்தியாசம் ஏன், துக்கம்–சந்தோஷம் ஏன்?

பாரம்பரிய முறைப்படி மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள்: மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஷியா இஸ்லாமியர்கள் பேரணியாகச் சென்று தொழுகையில் ஈடுபட்டனர்[1]. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜானி ஜான் கான் சாலையிலிருந்து ஷியா முஸ்லிம்கள் ஏராளமானோர், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டனர்[2]. பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேரணியாகச் சென்றனர். ராயபேட்டையில் நடக்கும் இந்த சடங்குகள் மற்ற ஊர்வலங்கள் எல்லாம் ஊடகங்களில் காட்டுவதில்லை. தஞ்சையை அடுத்த காசாநாடு புதூர் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக மொஹரம் பண்டிகை கிராம விழாவாக கொண்டாடப்பட்டது. ஊரின் மையப் பகுதியில் உள்ள அல்லாசாமி கோவிலில் வைத்து பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, ஏராளமானோர் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சில இடங்களில், இந்துக்களும் கலந்து கொண்டார்கள் போன்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

மொஹரம் ஏன், எப்பொழுது?: மொஹரம், முஃகர்ரம் (முகரம், அரபி: محرم) என்பது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப் படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரிகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது / மாறுவது போன்று காட்சியளிக்கும். இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் / ஜிஹாத் புரிவதாயினும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட இடங்களில் வன்முறைகள் இருக்கின்றன. சில இஸ்லாமியர் இம்மாதத்தின் ஒன்பதாம் நாளிலும் பத்தாம் நாளிலும் உண்ணா நோன்பு இருத்தல் வழக்கமாகும். முஃகர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் (அரபு மொழியில்ஆஷுரா / ஆசூரா) அன்று தியாகத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு அன்று ஷியா இஸ்லாமியர் உண்ணாதிருப்பர். மொஹரம் மதத்தின் 10 வது நாளைத்தான் `ஆஷூரா’ என்று இஸ்லாமிய வரலாறு அழைக்கிறது. ஆஷூரா எனும் அரபுச்சொல்லுக்கு `பத்தாவது நாள்’ என்றுதான் பொருள். சுன்னி-ஷியாக்களில் நாளைக் கணக்கிடுவதில் வேறுபாடு உள்ளது.

ஷியாக்களுக்கு துக்கநாள், சுன்னிகளுக்கு கொண்டாடும் நாள்: ஹுசைன் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பாலைவனத்தில் விடப்பட்டு எதிரி வீரர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்ட நாளை இது குறிக்கிறது. இந்த நாளில் தான் மொஹரம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டாலும், அது ஒரு துக்க நாள். அதன்படி இம்மாதத்தின் பிறை 9, 10 ஆகிய தினங்களில் முஸ்லிம்கள் நோன்பு வைப்பார்கள். முஃகர்ரம் பண்டிகை (Remembrance of Muharram) கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை ஷியாக்களால் நினைவுகூறப்படுகிறது. ஷியா முஸ்லிம்கள் அல்லாத சுன்னி இஸ்லாமியர் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் வைக்கப்படும் நோன்பானது, தான் கடவுள் என்று கூறிய அரசன் ஃபிர்அவ்ன் / எகிப்து அரசன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக வழிபடும் நிகழ்வு. ஆக ஷியாக்களுக்கு துக்கம், சுன்னிகளுக்கு மகிழ்ச்சி.

ஷியா முஸ்லிம்கள் என்று குறிப்பிட ஏன் தயங்க வேண்டும்?: நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், யாத்ரீகர்கள் குழப்பமடைந்தனர்[3]. இப்படி ஊடகங்கள் குறிப்பிட்டாலும், யார் அந்த “இரு தரப்பினர்” என்று குறிப்பிடவில்லை. பொதுவாக, இந்துக்கள் மற்றும் இந்துக்கள்-அல்லாதவர் என்று குறிக்க, ஊடகங்கள் அத்தகைய சொற்பிரயோகங்கள் செய்வதுண்டு. “சிறுபான்மையினர்” என்று குறிப்பிட்டால், முஸ்லிம், கிருத்துவர் என்றாகும். இங்கு சுன்னி மற்றும் ஷியா பிரிவினர் என்று சொல்ல ஏன் தயங்குகின்றனர் என்று தெரியவில்லை. இதே கோணத்தில், பாகிஸ்தானில், ஷியா முஸ்லிம்கள் கொல்லப் படும் போது, அவர்கள் மசூதிகளில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடக்கும் பொழுதும், இங்கிருக்கும் முஸ்லிம்கள் கண்டு கொல்ல மாட்டார்கள். பிறகு, சென்னை-ராயபேட்டையில் அத்தனை முகமதியர் மொஹரம் கொண்டாடும் பொழுது, அவர்கள் ஷியாவாகத்தான் இருக்க வேண்டும். பிறகு, அவர்களும் பாகிஸ்தானில், ஷியா முஸ்லிம்கள் கொல்லப் படும் போது, அவர்கள் மசூதிகளில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடக்கும் பொழுதும் ஏன் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்று விசித்திரமாக இருக்கிறது.

ஃபதிஹா / அஷுரா ஆகூர் தர்காவில் தடுக்கப் பட்டது ஏன்?: முகம்மது நபியின் பேரனான இமாம் ஹுஸைன் இபின் அலியின் தியாகத்தை நினைவு கூற, மொஹரத்தின் ஒன்பதாவது நாளன்று, ஃபதிஹா என்றதை ஓதி, தொழுகை நடத்தி போற்றுவது ஷியாக்களின் கடமை. கர்பலாவில் நடந்த அந்த உயிர்தியாகத்தை, அஷுரா என்றும் தம்மை துன்புருத்திக் கொண்டு நினைவு கூர்வார்கள். இது நாகை அடுத்த நாகூர் ஹஸரத் ஷாஹுல் ஹமீது தர்காவில், ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கூடி ஃபதிஹா ஓதி, தொழுகை செய்வது வழக்கம். இம்முறை தர்கா புதிய நிர்வாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடால், மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்துவதில் பிரச்னை எழுந்தது[4]. பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் தொழுகை நடத்துவது குறித்து, தர்கா நிர்வாகிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப், நாகை, ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு அளித்தார்[5]. இரு தரப்பினருக்கு இடையே, ஆர்.டி.ஓ., என். முருகேசன் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில், தர்காவின் பராம்பரியத்தை பாதுகாக்கவும், தர்காவின் உட்புறத்தில் வழிபாடு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது[6].

மொஹரம் தொழுகை ரத்து செய்யப்பட்டது: நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கோட்டாட்சியரின் தடையை மீறி பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் சார்பில், மொஹரம் தொழுகை ரத்து செய்யப்படுவதாக, தர்கா வளாகத்தில் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் தர்காவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உண்மையில் ஊடகத்தினர், இந்த மொஹரத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமல், “பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது,” என்றெல்லாம் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இது உண்மையில் ஒரு துக்ககரமான நிகழ்ச்சி, ஏனெனில், கர்பலா போரில், ஹுஸைன் மற்றும் அஸன் கொல்லப் படுகின்றனர், அந்த உயிர்பலி, தியாகத்தை நினைவு கூருகின்றனர்.

பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது: இந்நிலையில் டிரஸ்டிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் தலைமையில், தர்காவின் உட்புறம் உள்ள யாஹூசைன் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது[7]. இதில், ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். “தலைமுறைகளாக என்னுடைய முன்னோர்கள், இந்த ஃபதிஹா சொல்லி தொழுகை செய்து வருகின்றனர். அதனால், நான், இதை நிறுத்த முடியாது,” என்றார்[8]. தர்கா புதிய நிர்வாகிகள் கருத்து வேறுபாடால் வெளியூரில் இருந்து மொஹரம் சிறப்பு தொழுகையில் பங்கேற்க வந்த யாத்ரீகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதையே, ஜீ.நியூஸ் இவ்வாறு குறிப்பிடுகிறது[9], “இந்த நிலையில், நாகூர் தர்கா நிர்வாகத்தின் டிரஸ்டிகளுள் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் காவல்துறையின் தடையை மீறி முஹர்ரம் பண்டிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். நாகூர் தர்கா உள்ளே அமைந்துள்ள யாஹுசைன் பள்ளி வாசலில் நடைபெற்ற முஹர்ரம் சிறப்பு துவாவில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்”. கோலாகலமாக நடைபெற்ற முஹர்ரம் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் நாகூர் தர்காவில் குவிந்து வரும் நிலையில், நிர்வாகிகள் மத்தியில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக தர்காவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது[10].
© வேதபிரகாஷ்
10-08-2022

[1] ஜெயா.நியூஸ், நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் தீ மிதித்து வழிபாடு, Aug 9 2022 5:13PM
[2] http://jayanewslive.com/spiritual/spiritual_189099.html
[3] தினமலர், மொஹரம் தொழுகை நாகூர் தர்காவில் சர்ச்சை, Added : ஆக 10, 2022 07:19
[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3096668
[5] நியூஸ்.7.தமிழ், நாகூர் தர்கா – முஹரம் பண்டிகை கொண்டாடுவதில் ஏற்பட்ட சர்ச்சை, by EZHILARASAN DAugust 9, 2022.
[6] https://news7tamil.live/nagor-dargah-controversy-over-the-celebration-of-muharram.html
[7] Indian Express, Nagapattinam: Trustee board fallout leads to cancellation of Muharram prayers at Nagore Dargah, Published: 10th August 2022 05:58 AM | Last Updated: 10th August 2022 05:58 AM.
[8] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/aug/10/nagapattinam-trustee-board-fallout-leads-to-cancellation-of-muharram-prayers-at-nagore-dargah-2485906.html
[9] ஜீ.நியூஸ் .இந்தியா, Muharram 2022: நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை, Written by – Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2022, 02:30 PM IST.
[10] https://zeenews.india.com/tamil/tamil-nadu/muharram-2022-controversy-in-nagore-dargah-muharram-celebrations-405760

அண்மைய பின்னூட்டங்கள்