Archive for the ‘மேலூர்’ category

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

மார்ச் 8, 2022

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

14-02-2022 அன்று காணாமல் போன சிறுமி சாவு: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார்[1]. 16 வயது என்கிறது தமிழ்.இந்து. அதன் பிறகு அவர் மாயமானார்[2]. 14-02-2022 அன்று காணாமல் போனாள் என்று மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் போலீசில் 15-02-2022 அன்று அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காணாமல் போன சிறுமியும், தும்பைப்பட்டியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் (வயது 29) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இ்ந்த நிலையில் நாகூர் ஹனிபாவும் மாயமாகி இருந்தார். இதனால் சிறுமி அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். 16/17 வயது சிறுமி 12 வயது வித்தியாசம் கொண்ட ஒரு வாலிபனுடன் சென்றாளா அல்லது அவன் ஏமாற்றி, வலுக்கட்டாயமாக அல்லது வெறேதாவது காரணத்திற்காகக் கடத்திச் சென்றானா என்று புரிந்து கொள்ள முடியாதா? அதாவது, ஒரு முஸ்லிம், இந்து சிறுமியை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளாமல், உடலுறவு கொண்டுள்ளான், கற்பழித்துள்ளான். ஆகையால், இது “லவ் ஜிஹாத்” வகையில் கூட வரும், என்றாகிறது.

14-02-202 அன்று காணாமல் போன சிறுமியை 03-03-2022 அன்று ஹனிபாவின் தாய் ஒப்படைத்தது, 06-03-2022 அன்று மரணமடைந்தது: இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த 3-ந்தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அவரது தாயாரிடம் 03-03-2022 அன்று ஒப்படைத்தார். தனது மகளின் நிலையை கண்டு பதறிப்போன, சிறுமியின் பெற்றோர் அவரை உடனே மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் ஆலோசனையின் பேரில் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் 06-03-2022 அன்று மதியம் அந்த சிறுமி பரிதாபமாக இறந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று நாட்களில் போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை. மருத்துவ மனையிலும், மருத்துவர்கள் சிறுமி விசம் குடித்ததைக் கண்டு பிடித்து, போலீஸாரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவில்லை.

05-03-2022 அன்று கைதான நாகூர் ஹனீபா சொன்னதுஎலி மருந்து சாப்பிட வைத்தேன்: இதற்கிடையே நேற்று முன்தினம் 05-03-2022 அன்று நாகூர் ஹனிபாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன[3]. இதுதொடர்பாக போலீசில் நாகூர் ஹனிபா தெரிவித்தது வருமாறு[4]: “நானும், அந்த சிறுமியும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று காதலியை பிப்., 14ல் திருப்பரங்குன்றத்தில் நண்பர் பெருமாள் கிருஷ்ணன், 25, வீட்டிற்கு நண்பர்களுடன் அழைத்துச் சென்றேன்[5]. பின்னர் அங்கிருந்து 15-02-2022 அன்று ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள எனது சித்தப்பா இப்ராகிம் வீட்டிற்கு கூட்டிச்சென்றேன்[6]. இதற்கு என்னுடைய நண்பர்கள் உதவினர். அங்கு சிறுமியை தங்க வைத்திருந்தேன். இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர். இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன்[7]. பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன். இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன்[8]. ஆனால் நான் அதை சாப்பிடவில்லை[9]. அதன் பின்னர் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மதுரைக்கு அழைத்து வந்து எனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டேன். பின்னர் எனது தாயார் அவரை அவரது வீட்டில் ஒப்படைத்தார்,” இவ்வாறு நாகூர் ஹனிபா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற காதலன் காதலியை ஏன் ஏமாற்ற வேண்டும்?: நாகூர் ஹனிபா சிறுமிக்கு மட்டும் எலிமருந்து கொடுத்து சாப்பிட வைத்து, இவன் துப்பி விட்டான் என்றால், நாடகம் ஆடியிருக்கிறான் என்று தெரிகிறது. மேலும் அந்த அப்பாவி சிறுமியை கொலைசெய்ய தீர்மானித்திருக்கிறான். அப்படியென்றால் அவளை கொலைசெய்ய வேண்டிய அவ்சியம் என்ன? அவளை ஒரே அடியாக ஒழித்துவிட வேண்டிய கட்டாயம் என்ன? அதாவது, அவள் ஏதோ ஒரு உண்மையினை சொல்லலாம், அவ்வாறு சொன்னால், இவன் மாட்டிக் கொள்வான் என்ற நிலை இருந்திருக்கிறது. அத்தகைய நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால், ஊடகங்களில், “கூட்டு பலாத்காரம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவனே திருமணம் செய்து கொள்ளாமல் 14-02-2022 முதல் 02-03-2022 வரை கற்பழித்திருக்கிறான். மற்ற விவகாரங்கள் தெரியவில்லை.

8 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி: இதற்கிடையில் மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகரை சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபா, தாயார் மதினாபேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் அமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். சிறுமி இறப்பு சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது: “மேலூர் சிறுமியை காதலன் நாகூர் ஹனிபா கடத்தி ஈரோடு சென்று அங்கு அவரது சித்தப்பா வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளார்[10]. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டம், சிறுமியை கடத்தியது உள்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[11]. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த சிறுமி இறந்து விட்டதால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது,” இவ்வாறு அவர் கூறினார்.

©வேதபிரகாஷ்

07-03-2022


[1] தினத்தந்தி, மதுரை: 17 வயது சிறுமி கடத்தி விஷம் கொடுத்து கொலைகாதலன் உள்பட 8 பேர் கைது, மார்ச் 07, 04:52 AM.

[2] https://www.dailythanthi.com/amp/News/TopNews/2022/03/07045239/8-arrested-for-kidnapping-and-poisoning-girl.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, எலி மருந்து கொடுத்து 17 வயது மேலூர் சிறுமி கொலை? 8 பேர் கைது.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம், By Vishnupriya R, Updated: Mon, Mar 7, 2022, 14:08 [IST]

[4] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/police-arrested-8-members-those-who-are-involved-in-17-years-old-melur-girl-death-450910.html

[5] தினமலர், கடத்தப்பட்ட சிறுமி மரணம்: சிறுமியின் காதலன் உட்பட 8 பேர் கைது,  Added : மார் 07, 2022  10:48.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2977283

[7] அதாவது நடித்தான் என்றாகிறது, பிறகு அவன் ஏன் அந்த சிறுமியை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றான், அங்கெல்லாம் இருந்தவர்கள் ஒப்புக் கொண்டு இருவரையும் வைத்துக் கொண்டார்கள், அறிவுரைக் கூறி அனுப்பி வைக்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டு போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளும் எழுகின்றன.

[8] தினகரன், போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது, 2022-03-07@ 01:13:12.

[9] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=747689

[10] தமிழ்.இந்து, கடத்தப்பட்ட சிறுமி பாலியல் துன்புறுத்தலால் உயிரிழப்பு? – காதலன் உட்பட 8 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 07 Mar 2022 08:17 AM; Last Updated : 07 Mar 2022 08:17 AM.

[11] https://www.hindutamil.in/news/crime/774781-sexual-harassment.html