Archive for the ‘முஹம்மது மௌதூத் கான்’ category

பயங்கர தீவிரவாதிகள் விஷயத்தில் சிதம்பரம் நடந்து கொள்ளூம் விதம்!

மே 20, 2011

பயங்கர தீவிரவாதிகள் விஷயத்தில் சிதம்பரம் நடந்து கொள்ளூம் விதம்!

தவறான பட்டியல் கொடுத்த சிதம்பரம்: சிதம்பரத்தின் கையாலாகத்தன்மை, திறமையின்மை, நிலையில்லாத்தன்மை முதலிய குணாதிசயங்கள் மறுபடியும் வெளிப்பட்டுள்ளன. வெட்கமில்லாமல், இதில் நடந்ததற்கு பொறுபேற்கிறேன் என்று வேறு பேசியுள்ளார். அமெரிக்கா ஒசாமா பின் லேடனை கொன்ற பிறகு, ஏதோ வீரம் வந்துவிடது போல, தேவை ஏற்பட்டால், 26/11 போன்ற தாக்குதல் நடப்பதேயானால், இந்தியா தகுந்த பதிலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இந்திய மக்கள் எதிர்பார்ப்பதாக, சிதம்பரம் சொல்லியிருக்கிறார்! அதற்குள் ஐ.எஸ்.ஐ. அதிகாரி தாங்கள் இந்தியாவிலுள்ள சில முக்கியமான இடங்களை தாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, அதற்கான ஒத்திகையும் நடந்டேறிவிட்டது என்றும் அறிவித்தார். வழக்கம் போல, மற்ற தீவிரவாதிகள் கூட்டம் போட்டு இந்தியாவிற்கு எதிராகக் கத்தித் தீர்துள்ளன,

தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் கான் பெயர் சேர்க்கப்பட்டது தவறுதான்: ப.சிதம்பரம்[1]புதுதில்லி, மே 18, 2011: பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் வாசூல் கமார் கானின் பெயரைச் சேர்த்த்து தவறு என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.   மும்பை போலீஸôர் செய்த தவறும் ஐ.பி. உளவுப் அமைப்பின் கவனக் குறைவுமே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் 50 பேரின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்திய அரசு ஒப்படைத்தது.

இந்தப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. 2003-ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய வாசூல் கானின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.  ஆனால், கானை மும்பை போலீஸôர் ஏற்கெனவே கைது செய்ததாகவும் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது. அவரது பேட்டியும் பத்திரிகையில் வெளியானது.

இந்தியாவுக்குள் வசிக்கும் ஒருவரது பெயர் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருக்கும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது அம்பலமானதால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது பாகிஸ்தாவுடனான இந்தியாவின் அரசு ரீதியான நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியது:

இந்தத் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். மும்பை போலீஸார் செய்த தவறும் ஐ.பி. அதிகாரிகளின் கவனக்குறைவுமே கான் பெயர் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றதற்குக் காரணம்.  கான் கைது செய்யப்பட்டது குறித்து இந்த ஆண்டு ஜனவரியில் ஐ.பி. அலுவலகத்துக்கு மும்பை போலீஸôர் தகவல் அனுப்பியிருக்கின்றனர். ஆனால் மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட தேடப்படுவோர் பட்டியலில் இந்த விவரம் சரிபார்க்கப்படவில்லை.

கடந்த ஆண்டு மே 21-ம் தேதி கான் கைது செய்யப்பட்ட விவரம் முறையாகத் தெரிவிக்கப்படாததால் சிபிஐ அமைப்பால் தேடப்படுவோர் பட்டியலிலும் கான் பெயர் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.  இப்போது சிபிஐ முதல் இன்டர்போல் வரை அனைத்து அமைப்புகளுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார் ப.சிதம்பரம்.

சிபிஐ பட்டியலில் கான் பெயர் நீக்கம்: இதனிடையே சிபிஐ அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் கான் பெயர் நீக்கப்பட்டுள்ளது. சிபிஐ இணையதளத்திலிருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது.  கடந்த மே மாதமே மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படைக்குழுவும், மும்பை போலீஸôரும் கானை கைது செய்த நிலையில், அந்தத் தகவல் சிபிஐக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், கானுக்கு எதிராக சிபிஐ கைது உத்தரவைப் பிறப்பித்தது. தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதாகத் தெரிய வந்திருப்பதையடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.  இந்தத் தவறு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இரண்டு தீவிரவாதிகள் இந்தியாவிலேயே உள்ளனர்: இதற்குள் வீராப்புடன், மிகவும் பயங்கரமான தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டுள்ளதாக, உள்துறை அமைச்சகம் 40 பேர்களைக் கொண்ட ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது. ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள பிரோஸ் அப்துல் ரஸீத் கான் (Feroz Rashid Rashid Khan ) வயது 51, என்பவன் ஏற்கெனவே ஆர்தர் ரோடு ஜெயிலில் உள்ளான் என்று தெரிய வந்துள்ளது[2]. இவன் 1993 மும்பை வெடிகுண்டு வழக்கிற்காக கைது செய்யப் பட்டான். சி.பி.ஐ இந்த தவறை ஒப்புக்கொண்டது. உள்துறை அப்பட்டியிலில் அவனது பெயரை நீக்க மறந்து விட்டதாக உள்துறை எழுதியுள்ளதாகவும் ஓம்கார் கேடியா என்ற சி.பி.ஐ தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

இதற்கு முன் வஜுல் கமர் கான் என்ற பெயர் பட்டியிலில் இருந்தபோது, அவன் ஏற்கெனெவே பிணையில் விடுதலையாகி தானேவில் சுதந்திரமாக திரிந்து வருவதாகத் தெரிந்தது. இவன் 2003ல் வில்லி-பார்லே மற்றும் காட்கோபர் மற்றும் 2002ல் மும்பை சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்தகுண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப்பட்டான். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்பதற்காக, பிணையில் வெளியே விடப்பட்டான்.

இது ஒரு தவறு, அவ்வளவேதான்! இத்தவறுகளை உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டாலும், கொடுத்த பட்டியலை திரும்பப் பெறமுடியாது என்று கூறியுள்ளது[3]. உள்துறை அமைச்சகம், சி.பி.ஐ, என்.ஐ.ஏ, எம்.எச்.ஏ முதலிய நிறுவனங்கள் ஒன்றையொன்று குற்றாஞ்சாட்டிக் கொள்வது, நாட்டின் மதிப்பையே குறைப்பதாக/குளைப்பதாக உள்ளது. பலநிலைகளில் இந்த பட்டியல் சரிபார்க்கப் பட்டு, பற்பல அதிகாரிகளால் சரி பார்க்கப் பட்டு, பின்னரே உள்துறை அமைச்சரிடம் வருகிறது, அவர் கையெழுத்திடுகிறார்[4]. ஆனால், இப்படி உடம்பின் ஒரு அங்கம் மற்றதின் மீது குற்றஞ்சொல்வது போல, இந்த அமைப்புகள் நடந்து கொள்வது படு கேவலமாக இருக்கிறது. சிதம்பரம் இம்முறை “தவறை” ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றாலும், மற்ற துறைகளை சாடியுள்ளார்[5]. இத்தவறுக்கானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்[6].

பாகிஸ்தான் மற்றும் இதர ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன: பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை சாடியுள்ளது. பொய் பட்டியல் கொடுத்து ஒசாமா கொலை விஷ்யத்தை பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது என்று தலைப்பிட்டு, திட்டித் தீர்த்துள்ளன[7] (Indian Fake List & Desire of Cashing OBL Killing Thursday May 19, 2011 (1440 PST). குற்ற்ப்பத்திரிக்கைக் கூட போடாமல், ஓடி மறைந்துள்ள தீவிரவாதிகள் என்று கூறும் இந்தியாவை நக்கல் அடித்துள்ளன[8]. பி.பி.சி போன்ற அயல்நாட்டு ஊடகங்களும் கேலி செய்துள்ளன[9]. “காணாமல் போன தீவிரவாதியை இந்தியா மும்பையில் கண்டு பிடித்துள்ளது”, என்று பி.பி.சி கிண்டலடித்துள்ளது. இன்கிலாந்து டெலிகிராப் நாளிதழ் கூறுவது, “தப்பியோடி பாகிஸ்தானில் ஒளிந்துள்ளதாக கூறப்பட்ட குற்றாவாளி தாயுடன் வாழ்ந்து வருதாக தெரிந்தவுடன் இந்திய அதிகாரிகளின் முகங்கள் சிவந்துவிட்டன” (Indian officials red-faced after ‘most-wanted’ fugitive found living at home with mother)[10].
வேதபிரகாஷ்

20-05-2011


அமீன் என்ற அம்முனுத்தீன் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியது!

ஜனவரி 10, 2011

அமீன் என்ற அம்முனுத்தீன் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியது

தொடர்ந்து முஸ்லீம் இளைஞர்கள் பல இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பாதிப்பை ஏற்படுத்தி வருவதில் மேலும் ஒரு அம்முனுத்தீன் என்றவன் சேர்ந்துள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது. முன்பு முகமது அனிபா என்ற டிரைவர் பல பெண்களை ஏமாற்றி சீரழித்துள்ளான்[1]. முரளி என்ற அப்துல் ரஹ்மான் ஐந்து பெண்களை மணந்துள்ளான்[2]. அப்துல் வாஹித் என்பவன் குழந்தை பிறக்கவில்லை என்ரு 15 பென்களை மணந்தான்[3]. மொஹம்மது மௌதூத் கான், தான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு ஆறு பெண்களை மணந்தான்[4]. இதே மாதிரி முஹமது ரஹ்மான், இலியாஸ் முதலியோரும் பல பெண்களை மணந்தனர், ஆனால், கைது செய்யப்பட்டனர்[5]. லியாகத் அலிகான் என்பவன் ஏற்கெனவே இணைதாலத்தில் வலைவீசி 50 மேல் பண்களை ஏமாற்றி சீரழித்துள்ளான்[6]. பிறகு மன்சூர் அலிகான்………………..இப்படி தொடர்கிறது!

ஆர்க்குட் போய் ஃபேஸ்புக் வந்தது: ஆர்க்குட் மூலம் மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் முதலியோர் ஏமாற்றப்பட்டு சீரழைக்கப் பட்டப் பிறகு, அது தடை செய்யப் பட்ட நிலைக்கு போய்விட்டப் பிறகு, ஃபேஸ்புக் பிரபலமடைய ஆரம்பித்து விட்டது. ஃபேஸ்புக்கில் அக்கோண்ட் ஒன்று ஏற்படுத்திக் கொண்டு, அதில் தன்னைப் பற்றி விவரங்களைத் தரவேண்டும் – பெயர், வயது, பிறந்த தேதி, ஈ-மெயில்-ஐ-டி, விருப்ப-வெறுப்புகள் / பொழுதுபோக்குகள் (ஹாபிஸ்), ……..முதலியன. புகைப்படமும் சேர்த்து கொள்ளலாம். இதே மாதிரி எத்தனை ஈ-மெயில் ஐ-டி உள்ளனவோ, அத்தனை ஃபேஸ்புக்கில் அக்கோண்ட்டுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதாவது, ஒரே நபரே இப்படி பல புனை / போலிப்பெயர்களுடன், அவதாரங்களுடன் பலருடன் உரையாடலாம், உறவாடலாம்! இன்றைய இளைஞர்-இளைஞிகள் இத்தகைய விளையாட்டில் ஈடுப்படுள்ளது சாதாரணமான விஷயம்தான்.

அமீன்[7] என்ற அம்முனுத்தீன்[8] ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியது: இதில் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள்-மாணவர்கள் புனை / போலிப்பெயர்கள் மூலம் தொடர்பு கொண்டு நேரத்தை விரயம் செய்து கொண்டு சேட்டிங் / உரையாடல் செய்வது வழக்கமாகியது. இதில் முக்கியமாக நட்பு என்ற போர்வையில் இளம் பெண்கள் / மாணவிகள், இளம் ஆண்கள் / மாணவர்கள் கூட சேட்டிங் / உரையாடல் என்று ஆரம்பித்து பிறகு “காதல்” என்ற பெயரில் செக்ஸ் / பாலியல் விஷயங்களை மறைமுகமாக நேரிடையாக பரிமாறிக் கொண்டு, திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆரம்பிப்பது, அந்நிலைக்கு முன்னரே, இருபாலர்களும் செல்போன், முகவரி, குடும்பப் பின்னணி முதலியவற்றை அறிந்துகொள்வதும் உண்டு. இதில்தான், இளம் ஆண்கள் / மாணவர்கள் அல்லது அவர்களைப் போன்று நடிக்கும் வலைவீசும் காமக்கயவர்கள் / செக்ஸ் வக்கிரக்காரர்கள் உள்ளே நுழைந்து இளம் பெண்கள் / மாணவிகளை ஏமாற்ற ஆரம்பிக்கின்றனர், வெற்றியும் பெறுகின்றனர். ஆனால், சீரழைக்கப் படுவது பெண்கள்தாம். இந்த அம்மூனுத்தீனும் அதே முறையைத்தான் கையாண்டுள்ளான்.

திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன: மற்ற காம-வக்கிர மோசடி பேர்வழிகளைப் போல அம்முனுத்தீன் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளின் தந்தையாக உள்ளான். இருப்பினும் மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. எப்படி இது மனைவிக்குத் தெரியாமல் இருந்தது என்பது வியப்பிற்குரிய விஷயம்தான். இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு, அவன் பல முறை வெளியே சென்றிருக்க வேண்டும். ஆகவே, இவன் விஷயத்தில் பல விஷயங்களை மூடி மறைக்கின்றனர் என்பது தெரிகின்றது.

பெரம்பூர்-இரட்டை ஏரி பெண்ணுக்கு வலை வீசியது: 19-21 வயதான இளம் கல்லூரி மாணவிகளை ஏமாற்றி அனுபவம் உள்ள அம்மீனுத்தீன், பெரம்பூர்-இரட்டை ஏரி பெண்ணுக்கு காதல் வலையை வீசியுள்ளான். அப்பெண்ணும் மாட்டியுள்ளாள். முன்பே திட்டமிட்டபடி, தந்தை இல்லாத பெண்களாக சேர்ந்தெடுத்துள்ளான். நேரிடையாக தாயாருடன் பேசி திருமணம் செய்து கொள்வதாக வாய்ப்பளித்துள்ளான். ஆனால், அப்பெண்ணின் தாயார் விவரமாக அவனுடைய குடும்பத்தைப் பற்றி விசாரித்துள்ளார். கல்யாணத்திற்கு முன்னர் பெற்றோர்களைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் நம்பிக்கை ஏற்படுத்த அம்முனித்தீனின் தாயார் போல ஒரு பெண் மலேசியாவிலிருந்து அவருடன் பேசியுள்ளார். “உமது பெண்ணை என் பையனே கல்யாணம் செய்து கொள்வான். மற்றெந்த பையனையும் பார்க்கவேண்டாம். இதையே முடித்துவிடலாம்”, என்பது போல பேசினாள். ஆனால், நேரில் யாரும் வராதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. புதன் கிழமை திருமணம் எனும்போது அதற்குள் மற்ற பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். ஆகவே போலீஸாரிடம் புகார் கொடுத்தவுடன், அம்மீனுத்தீன் கைது செய்யப்பட்டான்.

ஆசையினால் / சபலத்தினால் ஏமாற்றப்பட்ட / சீரழைந்த மாணவிகள் / இளம்பெண்கள்: சில பெரிய நடிகர்களைத் தெரியும், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றெல்லாம் ஆசைக் காட்டி பணம், நகை முதலியவற்றையும் பறித்துள்ளான். அவர்களுடன் செக்ஸும் வைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பாதிக்கப் பட்ட மாணவிகள் தற்கொலை வரை சென்றதுதான் முடிவான கட்டம்.

இவ்வாறு நடப்பதற்கு என்ன காரணம்? இங்கு சம்பந்தப் பட்டுள்ளவர்கள் முஸ்லீம்கள் என்பதனால், அவர்களுக்கேயுரிய மனோதத்துவ ரீதியில் பல பிரச்சினைகள் உள்ளன.

இவ்வாறு நடப்பதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வேதபிரகாஷ்

10-01-2011


[7] சன்டிவியினர் 09-01-2011 அன்று தொடர்ந்து பலமுறை இச்செய்தியை போட்டு வந்தாலும், அமீன் என்ற பெயரை அனில் என்பது போல உச்சரிக்கப்பட்டது. அவன் காண்பிக்கப் பட்டாலும், அவன் முஸ்லீம் என்று சொல்லப்படவில்லை.

[8] பர்தா போட்டு வந்த ஒரு பெண்மணி தான் பெண் கெட்டுவந்தவன் அம்மீனுத்தீன் என்று குறிப்பிட்டார், அப்பொழுதுதான், அவன் முஸ்லீம் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. இல்லையென்றால் பொதுவாக, யாரோ ஒரு இளைஞன் இம்மாதிரி பெண்களை ஏமாற்றிவந்தான் என்பது போலத்தான் செய்தி பார்ப்பவர்கள் / கேட்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

 

மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!

மே 2, 2010

மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!

மொஹம்மது மௌதூத் கான் (Mohammed Maodood Ahmed Khan) தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டான், “நான் கிருத்துவர்களுக்கு ஏசு கிருஸ்து; இந்துக்களுக்கு சிவா; முஸ்லீம்களுக்கு மஸிஹா. நான் உலகத்தைக் காப்பாற்றி இருப்பேன்“, என்றெல்லாம் சொன்னனாம், அவன் மார்ச் 8ம் தேதி 2010 கைது செய்யப் பட்டபோது!

முஹம்மது கான் / அஹமது கான் தனது மனைகள் – தேவதைகள் – காயத்ரி, சதி, பார்வதி, கங்கா, துர்கா மற்றும் மஹாகாளி என்றானாம். அனால், உண்மையில்

1. இவனது முதல் மனைவி நஜ்மா ஃபாதிமா ஆவாள், அவளுடன் ரியாதில் வாழ்ந்து வந்தானாம்.

2, இரண்டாவது மனைவி காயத்ரி தேவி, பத்தே நாட்களில் ஓடிவிட்டாளாம்.

3. சஜிதா என்ற மூன்றாவது மனைவி பதினான்கு நாட்கள் இருந்தாளாம். அந்த  குருகிய காலத்திலேயே முகல் ரெஸிடன்ஸி என்ற இடத்தில் இருந்த அடுக்கு மாடி வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கிக் கொண்டானாம்.

4. நான்காவது மனைவி சும்ரனா. அவள் இவன் கொடுமை தாங்காமலேயே இறந்து விட்டாளாம்.

5. ஐந்தாவது மனைவு தஸீன் மட்டும் இவனுடனே இருக்கிறாளாம்.

6. ஆறாவது மனைவி ஸபானா, இவன் அவளை கொலை செய்ய முயற்சித்தபோது தப்பித்து ஓடிவிட்டாளாம்.

இவ்வாறு, இவன் பணக்காரப் பெண்களாகத் தேர்ந்தெடுத்து, பல லட்சங்களை சுருட்டிக் கொண்டு மறைந்து விடுவானாம்.

போலீஸ் சொல்வது என்னவென்றால், “ஏமாற்றுவேலைகளுக்காக இந்த கான் பல தடவை கைது செய்யப் ப்ட்டிருக்கிறான். பஞ்சாபில் கடியனா போலீஸாரால், மத ஒற்றுமை குளைக்கும் விதத்தில் பேசியதற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான். அவன் ஆறு பெண்களை மணந்து கொண்டு ஒன்பது கொழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறான். ஆனால், எல்லா மனைவிகளும் இவனை விட்டு ஓடிபோய் விட்டனராம்“. அவனுடைய டார்ச்சர் / கொடுமை தாங்க முடியவில்லை என்று ஓடினராம்.

வெஸ்லி என்பவரின் கூற்றுப்படி, “ஜெயிலிலிருந்துவெளியே வந்த பிறகும் அதே மாதிரியான வேலைகளை மறுபடியும் செய்து வந்தானாம்“.

சில மாதங்களுக்கு முன்பாக, எம். ஜே. மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த  யாஸ்மீன் என்ற டாக்டரிடமிருந்து, ஒரு கிலோ எடையுள்ள தங்கநகைகளைத் திருட்டுத்தனமாக கவர்ந்துள்ளானாம். அது தவிர தனக்காக ஒரு மனையை ரரூ.25 லட்சங்களுக்குப் பதிவு செய்துத் தரச் சொல்லியுள்ளான்.

இதே மாதிரி பஸீர்பாக்கைச் சேர்ந்த லதா என்ற பெண்மணியிடமிருந்து ரூ. ஆறு லட்சம் அபகரித்துள்ளான். பிறகு புகார் பேரில் அவன்  மார்ச் 8ம் தேதி சிறப்புப் போலீஸ் பிரிவால் பிடிபட்டான்.

ஆகமொத்தம், இவன் நிச்சயமாக செக்ஸ் மற்றும் பணத்திற்காகத் தான் இவ்வாறு சாமியார் வேடம் போட்டு திரிந்துள்ளான் எனத் தெரிகின்றது. ஆனால், ஊடகங்கள் ஏன் மௌனமாக இருந்தன, இப்பொழுது லேசாக வெளிவிடுகின்றன என்று புரியவில்லை.