பயங்கர தீவிரவாதிகள் விஷயத்தில் சிதம்பரம் நடந்து கொள்ளூம் விதம்!
தவறான பட்டியல் கொடுத்த சிதம்பரம்: சிதம்பரத்தின் கையாலாகத்தன்மை, திறமையின்மை, நிலையில்லாத்தன்மை முதலிய குணாதிசயங்கள் மறுபடியும் வெளிப்பட்டுள்ளன. வெட்கமில்லாமல், இதில் நடந்ததற்கு பொறுபேற்கிறேன் என்று வேறு பேசியுள்ளார். அமெரிக்கா ஒசாமா பின் லேடனை கொன்ற பிறகு, ஏதோ வீரம் வந்துவிடது போல, தேவை ஏற்பட்டால், 26/11 போன்ற தாக்குதல் நடப்பதேயானால், இந்தியா தகுந்த பதிலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இந்திய மக்கள் எதிர்பார்ப்பதாக, சிதம்பரம் சொல்லியிருக்கிறார்! அதற்குள் ஐ.எஸ்.ஐ. அதிகாரி தாங்கள் இந்தியாவிலுள்ள சில முக்கியமான இடங்களை தாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, அதற்கான ஒத்திகையும் நடந்டேறிவிட்டது என்றும் அறிவித்தார். வழக்கம் போல, மற்ற தீவிரவாதிகள் கூட்டம் போட்டு இந்தியாவிற்கு எதிராகக் கத்தித் தீர்துள்ளன,
தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் கான் பெயர் சேர்க்கப்பட்டது தவறுதான்: ப.சிதம்பரம்[1]புதுதில்லி, மே 18, 2011: பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் வாசூல் கமார் கானின் பெயரைச் சேர்த்த்து தவறு என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டிருக்கிறார். மும்பை போலீஸôர் செய்த தவறும் ஐ.பி. உளவுப் அமைப்பின் கவனக் குறைவுமே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் 50 பேரின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்திய அரசு ஒப்படைத்தது. இந்தப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. 2003-ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய வாசூல் கானின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், கானை மும்பை போலீஸôர் ஏற்கெனவே கைது செய்ததாகவும் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது. அவரது பேட்டியும் பத்திரிகையில் வெளியானது. இந்தியாவுக்குள் வசிக்கும் ஒருவரது பெயர் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருக்கும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது அம்பலமானதால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது பாகிஸ்தாவுடனான இந்தியாவின் அரசு ரீதியான நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியது: இந்தத் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். மும்பை போலீஸார் செய்த தவறும் ஐ.பி. அதிகாரிகளின் கவனக்குறைவுமே கான் பெயர் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றதற்குக் காரணம். கான் கைது செய்யப்பட்டது குறித்து இந்த ஆண்டு ஜனவரியில் ஐ.பி. அலுவலகத்துக்கு மும்பை போலீஸôர் தகவல் அனுப்பியிருக்கின்றனர். ஆனால் மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட தேடப்படுவோர் பட்டியலில் இந்த விவரம் சரிபார்க்கப்படவில்லை. கடந்த ஆண்டு மே 21-ம் தேதி கான் கைது செய்யப்பட்ட விவரம் முறையாகத் தெரிவிக்கப்படாததால் சிபிஐ அமைப்பால் தேடப்படுவோர் பட்டியலிலும் கான் பெயர் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. இப்போது சிபிஐ முதல் இன்டர்போல் வரை அனைத்து அமைப்புகளுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார் ப.சிதம்பரம். சிபிஐ பட்டியலில் கான் பெயர் நீக்கம்: இதனிடையே சிபிஐ அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் கான் பெயர் நீக்கப்பட்டுள்ளது. சிபிஐ இணையதளத்திலிருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது. கடந்த மே மாதமே மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படைக்குழுவும், மும்பை போலீஸôரும் கானை கைது செய்த நிலையில், அந்தத் தகவல் சிபிஐக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், கானுக்கு எதிராக சிபிஐ கைது உத்தரவைப் பிறப்பித்தது. தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதாகத் தெரிய வந்திருப்பதையடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. இந்தத் தவறு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது. |
இரண்டு தீவிரவாதிகள் இந்தியாவிலேயே உள்ளனர்: இதற்குள் வீராப்புடன், மிகவும் பயங்கரமான தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டுள்ளதாக, உள்துறை அமைச்சகம் 40 பேர்களைக் கொண்ட ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது. ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள பிரோஸ் அப்துல் ரஸீத் கான் (Feroz Rashid Rashid Khan ) வயது 51, என்பவன் ஏற்கெனவே ஆர்தர் ரோடு ஜெயிலில் உள்ளான் என்று தெரிய வந்துள்ளது[2]. இவன் 1993 மும்பை வெடிகுண்டு வழக்கிற்காக கைது செய்யப் பட்டான். சி.பி.ஐ இந்த தவறை ஒப்புக்கொண்டது. உள்துறை அப்பட்டியிலில் அவனது பெயரை நீக்க மறந்து விட்டதாக உள்துறை எழுதியுள்ளதாகவும் ஓம்கார் கேடியா என்ற சி.பி.ஐ தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதற்கு முன் வஜுல் கமர் கான் என்ற பெயர் பட்டியிலில் இருந்தபோது, அவன் ஏற்கெனெவே பிணையில் விடுதலையாகி தானேவில் சுதந்திரமாக திரிந்து வருவதாகத் தெரிந்தது. இவன் 2003ல் வில்லி-பார்லே மற்றும் காட்கோபர் மற்றும் 2002ல் மும்பை சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்தகுண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப்பட்டான். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்பதற்காக, பிணையில் வெளியே விடப்பட்டான்.
இது ஒரு தவறு, அவ்வளவேதான்! இத்தவறுகளை உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டாலும், கொடுத்த பட்டியலை திரும்பப் பெறமுடியாது என்று கூறியுள்ளது[3]. உள்துறை அமைச்சகம், சி.பி.ஐ, என்.ஐ.ஏ, எம்.எச்.ஏ முதலிய நிறுவனங்கள் ஒன்றையொன்று குற்றாஞ்சாட்டிக் கொள்வது, நாட்டின் மதிப்பையே குறைப்பதாக/குளைப்பதாக உள்ளது. பலநிலைகளில் இந்த பட்டியல் சரிபார்க்கப் பட்டு, பற்பல அதிகாரிகளால் சரி பார்க்கப் பட்டு, பின்னரே உள்துறை அமைச்சரிடம் வருகிறது, அவர் கையெழுத்திடுகிறார்[4]. ஆனால், இப்படி உடம்பின் ஒரு அங்கம் மற்றதின் மீது குற்றஞ்சொல்வது போல, இந்த அமைப்புகள் நடந்து கொள்வது படு கேவலமாக இருக்கிறது. சிதம்பரம் இம்முறை “தவறை” ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றாலும், மற்ற துறைகளை சாடியுள்ளார்[5]. இத்தவறுக்கானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்[6].
பாகிஸ்தான் மற்றும் இதர ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன: பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை சாடியுள்ளது. பொய் பட்டியல் கொடுத்து ஒசாமா கொலை விஷ்யத்தை பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது என்று தலைப்பிட்டு, திட்டித் தீர்த்துள்ளன[7] (Indian Fake List & Desire of Cashing OBL Killing Thursday May 19, 2011 (1440 PST). குற்ற்ப்பத்திரிக்கைக் கூட போடாமல், ஓடி மறைந்துள்ள தீவிரவாதிகள் என்று கூறும் இந்தியாவை நக்கல் அடித்துள்ளன[8]. பி.பி.சி போன்ற அயல்நாட்டு ஊடகங்களும் கேலி செய்துள்ளன[9]. “காணாமல் போன தீவிரவாதியை இந்தியா மும்பையில் கண்டு பிடித்துள்ளது”, என்று பி.பி.சி கிண்டலடித்துள்ளது. இன்கிலாந்து டெலிகிராப் நாளிதழ் கூறுவது, “தப்பியோடி பாகிஸ்தானில் ஒளிந்துள்ளதாக கூறப்பட்ட குற்றாவாளி தாயுடன் வாழ்ந்து வருதாக தெரிந்தவுடன் இந்திய அதிகாரிகளின் முகங்கள் சிவந்துவிட்டன” (Indian officials red-faced after ‘most-wanted’ fugitive found living at home with mother)[10].
வேதபிரகாஷ்
20-05-2011
[1] http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=419950&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=…..%8D
[5] http://timesofindia.indiatimes.com/india/PC-blames-IB-Mumbai-cops-for-terror-error/articleshow/8428633.cms
அண்மைய பின்னூட்டங்கள்