Archive for the ‘முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது’ category

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மே 30, 2023

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்ற போது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மருத்துவர் மீது ஏதாவது நடவடிக்கை உண்டா?: அப்போதுபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரோ அவரை இதுவரை கைது செய்யவில்லை என்றும் மருத்துவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு மருத்துவகுழுமூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். ஆனால், இன்னொரு பக்கம் தலைமறைவாக இருந்தவரை, தேடி பிடித்து கைது செய்தனர் என்றுள்ளது. அதே நேரத்தில் அந்த மருத்துவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை.  இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார் என்றும் உள்ளது.

முஸ்லிம் தலைவர், முஸ்லிம் போன்றே அறிக்கை விட்டுள்ளது: “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்[1]. இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்[2], ”நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்த முஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம் தெரியவருகிறது. இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த முஸ்லிம் பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஜவாஹிருல்லா கூறியது:ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியில் நிலவிவரும் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்[3]. சீமானும் இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார்[4].

சீமானின் இஸ்லாம் அதரவு அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஜன்னத்தை ஹிஜாப் விவகாரத்தில் மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு போக்குடன் செயல்படுவதாகவும் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பான சீமான் அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச்சகோதரி ஜன்னத் அவர்களை கடந்த 24 ஆம் நாள் இரவுநேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரபிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதவெறியர்களின் மனிதவெறுப்புச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், அதற்கு துணைபோகும் திமுக அரசின் ஆர்எஸ்எஸ் ஆதரவுப்போக்கு வன்மையான கண்டத்திற்குரியது. உணவு, உடை, வழிபாடு உள்ளிட்டவை அடிப்படை தனிமனித உரிமையாகும். அதில் தலையிடுவதென்வது அருவறுக்கத்தக்க மனித வெறுப்பின் உச்சமாகும். வட இந்தியாவிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மட்டுமே நிகழ்ந்த அத்தகைய மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது.

லிஸ்ட் போட்டு ஆதரவு கொடுக்கும் சீமான்[5]:

  • என்ஐஏ கொடுஞ்சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது,
  • நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது,
  • ஆர்எஸ்எஸ் சாகா வகுப்புகளை அனுமதித்தது,
  • பாஜகவின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த துடிப்பது,
  • இசுலாமியர் மீதான வெறுப்பை விதைக்கும் திரைப்படங்களுக்கு பாதுகாப்பளிப்பது,
  • மாட்டுக்கறி உணவிற்கு தடைவிதிப்பது

என்று இசுலாமியர்களுக்கு எதிராக திமுக அரசு மேற்கொண்டுவரும் பச்சைத் துரோகச்செயல்களின் தொடர்ச்சியே, ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டும் அளவிற்கு மிக மோசமான நிலையை தமிழ்நாடு எட்டுவதற்கு முக்கிய காரணமாகும். இந்துத்துவத்திற்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் பினாமி அரசாகவே திமுக அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு அலுவலரை கொலை செய்தது, அரசு மருத்துமனைக்குள் புகுந்து அரசு மருத்துவரை மிரட்டுவதென தொடரும் சமூக விரோதிகளின் வன்முறை வெறியாட்டங்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. ஆகவே, அடிப்படை மனித உரிமைக்கு எதிராக மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராமிற்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்[6].

29-05-2023 ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: 29-05-2023 அன்று, ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்’ அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பாரத் இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது[7]. அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், தலைமைச் செயலர் இறையன்புவிடம் அளித்துள்ள மனுவில் இதனை வலியுறுத்தியுள்ளார்[8]. மருத்துவ மனை, நொயாளி, நள்ளிரவில் சிகிச்சைக்கு வந்தது, நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தது, முதலியவற்றைப் பற்றி எந்த விவரங்களையும் எந்த ஊடகமும் கொடுக்கவில்லை. சிகிச்சை பலனின்றி இறந்தார் என்றுள்ளது. குறிப்பிட்ட மருத்துவர் சண்டை போடுவதிலும், வீடியோ எடுப்பதிலும், அதனை உடனடியாக யாருக்கோ அனுப்புவதிலும் தான் மும்முறமாக இருந்தது தெரிகிறது. பிறகு, ஆவண தோரணையுடன், கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு செல்போனில் பார்த்துக் கொண்டிருக்கிறார். மருத்துவர் போன்றே கணப்படவில்லை.

© வேதபிரகாஷ்

30-05-2023


[1] தமிழ்.இந்து, ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபர் மீது சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா வலியுறுத்தல், செய்திப்பிரிவு, Published : 26 May 2023 02:44 PM, Last Updated : 26 May 2023 02:44 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/996833-threatening-doctor-wearing-hijab-should-be-punished-according-to-law-jawahirullah.html

[3] தமிழ்.இந்துஸ்தான் டைம்ஸ், Hijab: ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல், Pandeeswari Gurusamy, 27 May 2023, 16:55 IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/seeman-insists-that-the-bjp-executive-who-threatened-the-doctor-not-to-wear-hijab-should-be-severely-punished-131685186096080.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஹிஜாப் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். ஆதரவுப் போக்கில் திமுக அரசு.. 6 பாயிண்டுகளை முன்வைக்கும் சீமான்!, By Mathivanan Maran Updated: Saturday, May 27, 2023, 11:21 [IST]

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/hijab-row-seeman-blames-dmk-govt-support-to-rss-513636.html?story=1

[7] தினமலர், பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க மனு, பதிவு செய்த நாள்: மே 30,2023 03:59

[8] https://m.dinamalar.com/detail.php?id=3334072

தி கேரளா ஸ்டோரி – நீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிநீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

05-05-2023 – தமிழக நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளுபடி, திரைப்படம் வெளியீடு, ஆர்பாட்டம்:  தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2].  இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3].  ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.

06-05-2023 – பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.  ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

07-05-2023 சென்னையில் சீமான் ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.  கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.

சீமான் எதிர்ப்புபோலீஸார் கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12].  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.

தமிழக அரசு தடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.

© வேதபிரகாஷ்

07-05-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர் எதிர்ப்புகள்தமிழ்நாடு முழுவதும்தி கேரளா ஸ்டோரிபடத்தின் காட்சிகள் ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-movie-shows-cancelled-in-tamilnadu-due-to-several-oppositions-115793

[3] சமயம்.காம், தமிழ்நாட்டில்தி கேரளா ஸ்டோரிபடம் திரையிடப்படாதுபோராட்டம் வலுத்ததால் நடவடிக்கை!, Samayam Tamil | Updated: 7 May 2023, 5:48 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/live-updates-and-latest-headlines-news-in-tamil-today-7-may-2023/liveblog/100045367.cms

[5] லங்காஶ்ரீ.காம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இன்று முதல் தடை, By Sibi, Tamil nadu, May 07, 2023, 5.20 PM.

[6] https://news.lankasri.com/article/the-kerala-story-ban-tamil-nadu-theatre-from-today-1683458088

ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

[7] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை, தினத்தந்தி மே 7, 2:57 pm (Updated: மே 7, 3:42 pm).

[8] https://www.dailythanthi.com/News/State/the-kerala-story-movie-ban-in-tamil-nadu-theaters-from-today-959137

[9] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்திற்கு தடைகாட்சிகளை ரத்து செய்த மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள்!, By Deepika -May 7, 2023

[10] https://tamil.examsdaily.in/the-kerala-story-movie-banned-in-tamil-nadu-update-on-may-7-2023/

[11] ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

[12] https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!

மே 15, 2022

பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!

கடவுளின் தேசமான கேரளாவில் மாணவி மேடைக்கு வந்தது சர்ச்சையானது: “கடவுளின் தேசம்” என்று பறைச்சாற்றிக் கொள்ளும் கேரளாவில், சிறுமியை இஸ்லாமிய உலேமா உதாசீனப் படுத்தியுள்ளது திகைப்பாக உள்ளது. அதிக படிப்பறிவு உள்ள மாநிலமும் கேரளா தான். பிறகு, ஏன், எதற்கு இந்த முரண்பாடு? கேரளாவில் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து விருது வழங்கியதற்காக விழா அமைப்பாளர்களை முஸ்லிம் மத குரு ஒருவர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மத குருவின் செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது[1]. சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு) என்பது கேரள சன்னி மத குரு சங்கமாகும். இந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து சான்றிதழை பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளது[2]. கேரள மாநிலம் மல்லாபுரத்தில் மதரஸா கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது[3]. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு செய்யது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு விருது வழங்கினார்[4].

முசலியார் மேடையில் இருக்கும் போது பெண்கள் வரக்கூடாதாம்கோபித்துக் கொண்டு திட்டிய உலேமா: வழக்கம் போல முதலமைசர் மற்றும் ஆளும் கட்சியினர் அமைதியோடு இருந்தனர். “குர் ஆன் கட்டளைகளை மீறி முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இச்சம்பவம் இன்னொரு உதாரணம்,” என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையோடு தெரிவித்துள்ளார்[5]. கேரள சமூகவலைதளங்களில் வைரலான ஒரு காணொளியே ஆளுநரையும் சங்கடப்படுத்தியுள்ளது[6]. கேரளத்தின் மளப்புரத்தில் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் மதரஸா பள்ளியில் (அரபு பாடம்) பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் விருது வழங்கப்பட்டது. மதரஸா நிர்வாகி அந்த மாணவியின் பெயரைச் சொல்லி விருது வாங்க வர மேடைக்கு அழைத்தார். மாணவியும் மேடைக்கு வந்தார். இதைப் பார்த்ததும் சமஸ்தா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.டி.அப்துல்லா முசலியார், பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண்ணை எப்படி பொதுமேடைக்கு அழைக்கலாம். என்னைப் போன்ற மதக்குருக்களை மேடையில் வைத்துக்கொண்டே நீங்கள் இப்படிச் செய்யலாமா? என சிறுமியை மேடைக்கு அழைத்தவரை கடுமையாகத் திட்டினார்.

உங்களுக்கு மத விதிகள் தெரியாதா எனவும் எச்சரித்தார்: இந்த சிறுமியை அழைத்ததற்குப் பதில் அவரது பெற்றோரை அல்லவா அழைத்திருக்க வேண்டும் எனவும் அப்துல்லா முசலியார் திட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து சிறுமி கீழே அனுப்பப்பட்டு, அவரது பெற்றோர் மேடைக்கு வந்தனர். இது சிறுமியை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கேரள மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி, “படித்தவர்கள் அதிகம் நிறைந்த, பெண்கள் அதிகம் வாழும் கேரளத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சமூகத்தை பல தலைமுறைகளுக்கு கீழ் நோக்கி இழுப்பவர்களிடம் இருந்து மக்கள் விழிப்படைய வேண்டும்,” என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிராகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் இவ்விவகாரத்தை அமுக்கி வாசித்தனர்.

பெண்கள் தனிமைப் படுத்தப் படவேண்டும் என்பது விதியல்ல: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் தன் ட்விட்டர் பக்கத்தில்[7], “திருக்குரானின் கட்டளைகளையும் மீறி, முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததால் தகுதியான விருதைப் பெறும்போது மேடையில் அவமானப்படுத்தப்பட்டதைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. மதகுருமார்கள் குரானின் கட்டளையை மீறியும், அரசியலமைப்பு சட்டத்தை மீறியும் முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவது, அவர்களின் ஆளுமையை நசுக்குவது ஆகியவற்றுக்கு இதுவும் ஒரு உதாரணம்,” என வேதனையோடு கூறியுள்ளார்[8]. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்[9]. இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் தரப்பையும் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்[10]. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்[11], “இந்த விவகாரத்தில் கேரளா ஆளும் தரப்பினர் மௌனம் குறித்து வருத்தம் அளிக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி அனைவருமே இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றனர். நமது வீட்டுப் பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியம் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் இது குறித்துப் பேச வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்களை விட (கேரள அரசு) நான் அதிகம் பேசி உள்ளேன்,” என்றார்[12].

அடிப்படைவாத இஸ்லாமில் பெண்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர்: முஸ்லிம் பெண்கள் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு சமமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடக் கூடாது, காஜி, மௌலானா, உலேமா முன்பாக முகத்தைக் காட்டிக் கொண்டு வரக் கூடாது, பர்தா / ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டும், முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம், தலிபன் போன்ற அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் ஆணையிடுவதை செய்திகளாகப் படிக்கலாம். விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தடை. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என பெண்களை வீட்டில் முடக்கும் வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதாவது ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற நான்கு நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் தான் தற்போது ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது[13]. ஆப்கனில் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கணவன்-மனைவி உள்பட எத்தகைய உறவாக இருந்தாலும் கூட ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும்[14]. இதுபற்றி ஆப்கனின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛உணவகங்களில் ஆண்கள், பெண்களை பிரித்து உணவு சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] டாப்.தமிழ்.நியூஸ், கேரளாவில் பள்ளி மாணவியை மேடைக்கு அழைத்த விழா அமைப்பாளர்களை கண்டித்த முஸ்லிம் மத குரு.., By KRISHNA G Wed, 11 May 20225:48:27 AM

[2] https://www.toptamilnews.com/india/Samastha-Kerala-Jem-iyyathul-Ulama-leader-MT-Abdulla/cid7371111.htm

[3] விகடன், `பெண்களை பரிசு பெற மேடைக்கு அழைக்கக்கூடாது!’ – கேரள இஸ்லாமிய தலைவரின் செயலால் கொதித்த கவர்னர், சிந்து ஆர், Published:12 May 2022 6 PMUpdated:12 May 2022 6 PM.

[4] https://www.vikatan.com/news/india/kerala-muslim-body-leader-scolds-members-for-inviting-girl-student-on-stage-draws-flak

[5] காமதேனு, முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவதா?’- மதக்குருக்களை எச்சரிக்கும் கேரள ஆளுநர்,என்.சுவாமிநாதன், Updated on : 12 May, 2022, 3:37 pm.

[6] https://kamadenu.hindutamil.in/national/religious-people-who-isolate-muslim-women-kerala-governor-warns

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பெண்கள் மேடைக்கு வரக்கூடாது..!! இந்த காலத்தில் இப்படி ஒரு இசுலாமிய அமைப்பா.? கொந்தளிக்கும் ஆளுநர், Ezhilarasan Babu, Chennai, First Published May 13, 2022, 1:44 PM IST; Last Updated May 13, 2022, 1:44 PM IST

[8] https://tamil.asianetnews.com/politics/women-should-not-come-on-stage-is-there-such-an-islamic-organization-in-this-period-governor-condemned–rbtavy

[9] தினமணி, மலப்புரத்தில் சிறுமி அவமதிப்பு விவகாரம்: அரசியல் தலைவா்களின் மெளனம் ஏமாற்றமளிக்கிறது, By DIN  |   Published On : 13th May 2022 03:01 AM  |   Last Updated : 13th May 2022

[10]https://www.dinamani.com/india/2022/may/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3843656.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, அவர்களின் மவுனம் ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது!” கேரள அரசை சாடும் ஆளுநர் ஆரிப் கான்எதற்கு தெரியுமா, By Vigneshkumar Updated: Friday, May 13, 2022, 0:18 [IST].

[12] https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-governor-questions-silence-of-leadership-on-girl-humiliated-on-stage-issue-458104.html

[13] தமிழ்.ஒன்.இந்தியா, ஓட்டலில் ஆண்பெண் சேர்ந்து சாப்பிட தடை! ஆப்கனில் அமலான புதிய கட்டுப்பாடுகள்! தாலிபான் ஆட்டம், By Nantha Kumar R Updated: Saturday, May 14, 2022, 12:36 [IST]

[14] https://tamil.oneindia.com/news/international/in-afghan-taliban-bans-men-and-women-dining-together-458287.html

அமீன் என்ற அம்முனுத்தீன் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியது!

ஜனவரி 10, 2011

அமீன் என்ற அம்முனுத்தீன் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியது

தொடர்ந்து முஸ்லீம் இளைஞர்கள் பல இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பாதிப்பை ஏற்படுத்தி வருவதில் மேலும் ஒரு அம்முனுத்தீன் என்றவன் சேர்ந்துள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது. முன்பு முகமது அனிபா என்ற டிரைவர் பல பெண்களை ஏமாற்றி சீரழித்துள்ளான்[1]. முரளி என்ற அப்துல் ரஹ்மான் ஐந்து பெண்களை மணந்துள்ளான்[2]. அப்துல் வாஹித் என்பவன் குழந்தை பிறக்கவில்லை என்ரு 15 பென்களை மணந்தான்[3]. மொஹம்மது மௌதூத் கான், தான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு ஆறு பெண்களை மணந்தான்[4]. இதே மாதிரி முஹமது ரஹ்மான், இலியாஸ் முதலியோரும் பல பெண்களை மணந்தனர், ஆனால், கைது செய்யப்பட்டனர்[5]. லியாகத் அலிகான் என்பவன் ஏற்கெனவே இணைதாலத்தில் வலைவீசி 50 மேல் பண்களை ஏமாற்றி சீரழித்துள்ளான்[6]. பிறகு மன்சூர் அலிகான்………………..இப்படி தொடர்கிறது!

ஆர்க்குட் போய் ஃபேஸ்புக் வந்தது: ஆர்க்குட் மூலம் மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் முதலியோர் ஏமாற்றப்பட்டு சீரழைக்கப் பட்டப் பிறகு, அது தடை செய்யப் பட்ட நிலைக்கு போய்விட்டப் பிறகு, ஃபேஸ்புக் பிரபலமடைய ஆரம்பித்து விட்டது. ஃபேஸ்புக்கில் அக்கோண்ட் ஒன்று ஏற்படுத்திக் கொண்டு, அதில் தன்னைப் பற்றி விவரங்களைத் தரவேண்டும் – பெயர், வயது, பிறந்த தேதி, ஈ-மெயில்-ஐ-டி, விருப்ப-வெறுப்புகள் / பொழுதுபோக்குகள் (ஹாபிஸ்), ……..முதலியன. புகைப்படமும் சேர்த்து கொள்ளலாம். இதே மாதிரி எத்தனை ஈ-மெயில் ஐ-டி உள்ளனவோ, அத்தனை ஃபேஸ்புக்கில் அக்கோண்ட்டுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதாவது, ஒரே நபரே இப்படி பல புனை / போலிப்பெயர்களுடன், அவதாரங்களுடன் பலருடன் உரையாடலாம், உறவாடலாம்! இன்றைய இளைஞர்-இளைஞிகள் இத்தகைய விளையாட்டில் ஈடுப்படுள்ளது சாதாரணமான விஷயம்தான்.

அமீன்[7] என்ற அம்முனுத்தீன்[8] ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியது: இதில் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள்-மாணவர்கள் புனை / போலிப்பெயர்கள் மூலம் தொடர்பு கொண்டு நேரத்தை விரயம் செய்து கொண்டு சேட்டிங் / உரையாடல் செய்வது வழக்கமாகியது. இதில் முக்கியமாக நட்பு என்ற போர்வையில் இளம் பெண்கள் / மாணவிகள், இளம் ஆண்கள் / மாணவர்கள் கூட சேட்டிங் / உரையாடல் என்று ஆரம்பித்து பிறகு “காதல்” என்ற பெயரில் செக்ஸ் / பாலியல் விஷயங்களை மறைமுகமாக நேரிடையாக பரிமாறிக் கொண்டு, திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆரம்பிப்பது, அந்நிலைக்கு முன்னரே, இருபாலர்களும் செல்போன், முகவரி, குடும்பப் பின்னணி முதலியவற்றை அறிந்துகொள்வதும் உண்டு. இதில்தான், இளம் ஆண்கள் / மாணவர்கள் அல்லது அவர்களைப் போன்று நடிக்கும் வலைவீசும் காமக்கயவர்கள் / செக்ஸ் வக்கிரக்காரர்கள் உள்ளே நுழைந்து இளம் பெண்கள் / மாணவிகளை ஏமாற்ற ஆரம்பிக்கின்றனர், வெற்றியும் பெறுகின்றனர். ஆனால், சீரழைக்கப் படுவது பெண்கள்தாம். இந்த அம்மூனுத்தீனும் அதே முறையைத்தான் கையாண்டுள்ளான்.

திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன: மற்ற காம-வக்கிர மோசடி பேர்வழிகளைப் போல அம்முனுத்தீன் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளின் தந்தையாக உள்ளான். இருப்பினும் மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. எப்படி இது மனைவிக்குத் தெரியாமல் இருந்தது என்பது வியப்பிற்குரிய விஷயம்தான். இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு, அவன் பல முறை வெளியே சென்றிருக்க வேண்டும். ஆகவே, இவன் விஷயத்தில் பல விஷயங்களை மூடி மறைக்கின்றனர் என்பது தெரிகின்றது.

பெரம்பூர்-இரட்டை ஏரி பெண்ணுக்கு வலை வீசியது: 19-21 வயதான இளம் கல்லூரி மாணவிகளை ஏமாற்றி அனுபவம் உள்ள அம்மீனுத்தீன், பெரம்பூர்-இரட்டை ஏரி பெண்ணுக்கு காதல் வலையை வீசியுள்ளான். அப்பெண்ணும் மாட்டியுள்ளாள். முன்பே திட்டமிட்டபடி, தந்தை இல்லாத பெண்களாக சேர்ந்தெடுத்துள்ளான். நேரிடையாக தாயாருடன் பேசி திருமணம் செய்து கொள்வதாக வாய்ப்பளித்துள்ளான். ஆனால், அப்பெண்ணின் தாயார் விவரமாக அவனுடைய குடும்பத்தைப் பற்றி விசாரித்துள்ளார். கல்யாணத்திற்கு முன்னர் பெற்றோர்களைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் நம்பிக்கை ஏற்படுத்த அம்முனித்தீனின் தாயார் போல ஒரு பெண் மலேசியாவிலிருந்து அவருடன் பேசியுள்ளார். “உமது பெண்ணை என் பையனே கல்யாணம் செய்து கொள்வான். மற்றெந்த பையனையும் பார்க்கவேண்டாம். இதையே முடித்துவிடலாம்”, என்பது போல பேசினாள். ஆனால், நேரில் யாரும் வராதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. புதன் கிழமை திருமணம் எனும்போது அதற்குள் மற்ற பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். ஆகவே போலீஸாரிடம் புகார் கொடுத்தவுடன், அம்மீனுத்தீன் கைது செய்யப்பட்டான்.

ஆசையினால் / சபலத்தினால் ஏமாற்றப்பட்ட / சீரழைந்த மாணவிகள் / இளம்பெண்கள்: சில பெரிய நடிகர்களைத் தெரியும், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றெல்லாம் ஆசைக் காட்டி பணம், நகை முதலியவற்றையும் பறித்துள்ளான். அவர்களுடன் செக்ஸும் வைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பாதிக்கப் பட்ட மாணவிகள் தற்கொலை வரை சென்றதுதான் முடிவான கட்டம்.

இவ்வாறு நடப்பதற்கு என்ன காரணம்? இங்கு சம்பந்தப் பட்டுள்ளவர்கள் முஸ்லீம்கள் என்பதனால், அவர்களுக்கேயுரிய மனோதத்துவ ரீதியில் பல பிரச்சினைகள் உள்ளன.

இவ்வாறு நடப்பதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வேதபிரகாஷ்

10-01-2011


[7] சன்டிவியினர் 09-01-2011 அன்று தொடர்ந்து பலமுறை இச்செய்தியை போட்டு வந்தாலும், அமீன் என்ற பெயரை அனில் என்பது போல உச்சரிக்கப்பட்டது. அவன் காண்பிக்கப் பட்டாலும், அவன் முஸ்லீம் என்று சொல்லப்படவில்லை.

[8] பர்தா போட்டு வந்த ஒரு பெண்மணி தான் பெண் கெட்டுவந்தவன் அம்மீனுத்தீன் என்று குறிப்பிட்டார், அப்பொழுதுதான், அவன் முஸ்லீம் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. இல்லையென்றால் பொதுவாக, யாரோ ஒரு இளைஞன் இம்மாதிரி பெண்களை ஏமாற்றிவந்தான் என்பது போலத்தான் செய்தி பார்ப்பவர்கள் / கேட்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

 

மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!

மே 2, 2010

மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!

மொஹம்மது மௌதூத் கான் (Mohammed Maodood Ahmed Khan) தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டான், “நான் கிருத்துவர்களுக்கு ஏசு கிருஸ்து; இந்துக்களுக்கு சிவா; முஸ்லீம்களுக்கு மஸிஹா. நான் உலகத்தைக் காப்பாற்றி இருப்பேன்“, என்றெல்லாம் சொன்னனாம், அவன் மார்ச் 8ம் தேதி 2010 கைது செய்யப் பட்டபோது!

முஹம்மது கான் / அஹமது கான் தனது மனைகள் – தேவதைகள் – காயத்ரி, சதி, பார்வதி, கங்கா, துர்கா மற்றும் மஹாகாளி என்றானாம். அனால், உண்மையில்

1. இவனது முதல் மனைவி நஜ்மா ஃபாதிமா ஆவாள், அவளுடன் ரியாதில் வாழ்ந்து வந்தானாம்.

2, இரண்டாவது மனைவி காயத்ரி தேவி, பத்தே நாட்களில் ஓடிவிட்டாளாம்.

3. சஜிதா என்ற மூன்றாவது மனைவி பதினான்கு நாட்கள் இருந்தாளாம். அந்த  குருகிய காலத்திலேயே முகல் ரெஸிடன்ஸி என்ற இடத்தில் இருந்த அடுக்கு மாடி வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கிக் கொண்டானாம்.

4. நான்காவது மனைவி சும்ரனா. அவள் இவன் கொடுமை தாங்காமலேயே இறந்து விட்டாளாம்.

5. ஐந்தாவது மனைவு தஸீன் மட்டும் இவனுடனே இருக்கிறாளாம்.

6. ஆறாவது மனைவி ஸபானா, இவன் அவளை கொலை செய்ய முயற்சித்தபோது தப்பித்து ஓடிவிட்டாளாம்.

இவ்வாறு, இவன் பணக்காரப் பெண்களாகத் தேர்ந்தெடுத்து, பல லட்சங்களை சுருட்டிக் கொண்டு மறைந்து விடுவானாம்.

போலீஸ் சொல்வது என்னவென்றால், “ஏமாற்றுவேலைகளுக்காக இந்த கான் பல தடவை கைது செய்யப் ப்ட்டிருக்கிறான். பஞ்சாபில் கடியனா போலீஸாரால், மத ஒற்றுமை குளைக்கும் விதத்தில் பேசியதற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான். அவன் ஆறு பெண்களை மணந்து கொண்டு ஒன்பது கொழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறான். ஆனால், எல்லா மனைவிகளும் இவனை விட்டு ஓடிபோய் விட்டனராம்“. அவனுடைய டார்ச்சர் / கொடுமை தாங்க முடியவில்லை என்று ஓடினராம்.

வெஸ்லி என்பவரின் கூற்றுப்படி, “ஜெயிலிலிருந்துவெளியே வந்த பிறகும் அதே மாதிரியான வேலைகளை மறுபடியும் செய்து வந்தானாம்“.

சில மாதங்களுக்கு முன்பாக, எம். ஜே. மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த  யாஸ்மீன் என்ற டாக்டரிடமிருந்து, ஒரு கிலோ எடையுள்ள தங்கநகைகளைத் திருட்டுத்தனமாக கவர்ந்துள்ளானாம். அது தவிர தனக்காக ஒரு மனையை ரரூ.25 லட்சங்களுக்குப் பதிவு செய்துத் தரச் சொல்லியுள்ளான்.

இதே மாதிரி பஸீர்பாக்கைச் சேர்ந்த லதா என்ற பெண்மணியிடமிருந்து ரூ. ஆறு லட்சம் அபகரித்துள்ளான். பிறகு புகார் பேரில் அவன்  மார்ச் 8ம் தேதி சிறப்புப் போலீஸ் பிரிவால் பிடிபட்டான்.

ஆகமொத்தம், இவன் நிச்சயமாக செக்ஸ் மற்றும் பணத்திற்காகத் தான் இவ்வாறு சாமியார் வேடம் போட்டு திரிந்துள்ளான் எனத் தெரிகின்றது. ஆனால், ஊடகங்கள் ஏன் மௌனமாக இருந்தன, இப்பொழுது லேசாக வெளிவிடுகின்றன என்று புரியவில்லை.

ஃபத்வா கொடுத்தே விட்டார்களாம் – திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்ந்ததற்கு!

ஏப்ரல் 12, 2010

ஃபத்வா கொடுத்தே விட்டார்களாம் – திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்ந்ததற்கு!ட்ட்

தியோபந்தின் ஃபத்வா பிரிவைச் சேர்ந்த, முஃதி அஸ்ரஃப் ஃபரூக்கி (Mufti Ashraf Farooqui) வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், “அவர்களின் அந்த நடத்தை  ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.

திருமணத்திற்கு முன்பாக அப்படி ஒரே கூறையின் கீழ் சேர்ந்திருப்பது ஹராம் ஆகும். நிக்காஹ் கே பஹ்லே தன்ஹை மே மில்னா, பாதே கர்னா, கூம்னா-ஃபிர்னா, இஸ்லாம் மே ஹர்ரம் ஹை”.

சுன்னி உலேமா வாரியம் கல்யாணத்திற்கு முன்பாகவே ஒரே கூறையின் கீழ் வாழ்ந்ததால் இஸ்லாத்திற்கு இழிவைத் தேடித் தந்துள்ளதாகவும், அதனால் முஸ்ளிம்களுக்கே பெரிய களங்கத்தை வரவழைத்துள்ளதாகவும் குற்றாஞ்சாட்டப் பட்டு, அந்த ஃபத்வா கொடுக்கப் பட்டுள்ளது.

அந்த வாரியம் அவர்களது நடவடிக்கை ஹராம் / விலக்கப்பட்டது / மறுக்கப் பட்டது / செய்யக் கூடாதது என்று அறிவித்து, முஸ்லீம்கள் யாரும் அவர்களது திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டாம் என்றும் கூறியுள்ளது.

“இந்த இருவரும் இப்படி சேர்ந்து இருப்பது, நடந்து கொள்வது, ஊடகங்களின் முன்பு நின்று கொண்டு பேட்டி கொடுப்பது…………இவையெல்லாமே ஹராம் தான்”, என்று மௌலானா ஹஸிபூல் ஹஸன் சித்திகி என்ற இஸ்லாமிய அறிஞர் கூறியுள்ளார்.

சோயப் சானியாவின் வீட்டில் ஒரு வாரம் மேலாக இருந்து தங்கிக் கொண்டு, அவர் சானியாவுடன் சேர்ந்து ஆடுவது மாதிரியும், உடற்பயிற்சி செய்வது மாதிரியெல்லாம் டிவிக்கள் காட்டுகின்றன. “இஸ்லாம் இம்மாதிரி கல்யாணத்திற்கு முன்பாக ஒரு ஆண்- ஒரு பெண் சேர்ந்திருப்பது அனுமதிபதில்லை. ஆகையால் இவ்வாறு சேர்ந்து வாழ்வது முதலியவையெல்லாம் திருமணத்திற்கு முன்பாக அனுமதிக்கப்படமாட்டாது”, என்றும் அவர் சொன்னார்.

இதே இஸ்லாமிய அறிஞர் மூன்று வருடங்களுக்கு முன்பு சானியா திருமணத்திற்கு முந்தைய செக்ஸை ஆதரித்து பேசியபோது, ஒரு ஃபத்வா கொடுத்துள்ளாராம். “இவர் தொடர்ந்து இப்படி செய்வது ஒரு பெரிய பாவத்தை செய்வது மாதிரியாகும். அது ஜீனா[ ‘zina’ (fornication)]வை ஊக்குவிப்பதாகும் இருப்பினும் சானியா இவையெல்லாவற்றையும் மறுத்துள்ளார்.

சோயப் இதற்கு முன்பே இஸ்லாமிய அறிஞர்களால் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளார். ஏனெனில் அவர் ஆயிஷா சித்திக்கை Sமணந்து கொந்து, இல்லை சென்று சொன்னது…………..முதலிவற்றிற்காக சாடப்பட்டார்.

திருமணத்துக்கு முன்பாகவே சேர்ந்து பழகி வருவதற்கு இஸ்லாமில் இடமுண்டா?

ஏப்ரல் 11, 2010
திருமணத்திற்கு முன்பே பழகி வருவதா? சோயப் – சானியாவுக்கு கண்டனம்
ஏப்ரல் 12,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7190

Front page news and headlines today

சமீபத்தில், ஒரு ஆராய்ச்சியாளார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

……………….the  Holy  Prophet  said: “A  man  shall  never  be  alone  with  a woman  except  that  the  third  party  between  them  is  Satan”. (Tirmidhi).

This  Hadith  warns  against  the  risky  behavior  and  satanic  inclinations  if and when  one  visits  the  opposite  sex  in  seclusion,  whether  it  is  on phone,  in chat  rooms,  or  in  person  for  any  purpose, in other words, young boys and girls should not be allowed to mix together.

Addressing  the  pious wives  of the Holy  Prophet  (peace  and  blessings  of  Allah  be  on him), Allah says:    “You are  not  like  any  other  women  if  you  are  righteous.   So,  be  not  soft in speech,  lest  he  in  whose  heart  is  a  disease should  feel  tempted;  and speak  a  decent  speech(Al-­‐ Qur’an, 33:33).

This applicable to all women and therefore, they  should  not  behave  like other  women  in  the  use  of  cell phones, chat  rooms,  web-­cams,  Facebook, Twitter, Orkut, etc

ஐதராபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் திருமணத்துக்கு முன்பாகவே சேர்ந்து பழகி வருவதற்கு, முஸ்லிம் மத அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

டென்னிஸ் வீராங்கனை சானியாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும் வரும் 15ம் தேதி, ஐதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆயிஷா சித்திக் என்ற பெண், சோயப் மாலிக் தன்னை ஏற்கனவே 2002ல் திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், அவர் மூலம் தான் கர்ப்பமடைந்து கருச்சிதைவு செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.சோயப் மாலிக்குடன் திருமணம் நடந்ததற்கான சான்றிதழையும் ஆயிஷா வெளியிட்டார்.இதையடுத்து, சோயப் மீது வரதட்சணை கொடுமை, மோசடி, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சோயப்பிடம் விசாரணை நடத்தி, அவரது பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.பிரச்னை பூதாகரமாவதை உணர்ந்த ஆந்திர அரசியல் பிரமுகர்களும், முஸ்லிம் தலைவர்களும் இந்த விஷயத்தை சுமுகமாக முடிக்க ஆலோசனை நடத்தி, இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் செய்தனர்; ஆயிஷாவை விவாகரத்தும் செய்தனர்.இதையடுத்து, வரும் 15ம் தேதி சோயப் – சானியா திருமணம் நடைபெற உள்ளது.

ஆனால், திருமணத்துக்கு முன், ஆண், பெண் சேர்ந்து பழகுவது முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது என, சன்னி உலேமா வாரியம் இவர்களுக்கு ‘பத்வா’ என்ற மதத் தடை உத்தரவை அளித்துள்ளது.’திருமணத்துக்கு முன் மணமகனும், மணமகளும் ஒரு முறை பார்த்துக் கொள்ளலாம்; மற்ற விஷயங்கள் திருமணத்துக்கு பிறகு தான் நடக்க வேண்டும். ஆனால், சோயப் மாலிக், சானியா வீட்டிலேயே 10 நாட்களாக தங்கியிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுகின்றனர். இவர்களது செயல், முஸ்லிம் மதத்துக்கு அவமானத்தை தேடித் தரக்கூடியது. எனவே, இவர்கள் திருமணத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களது இந்த செயல், திருமணத்துக்கு முந்தைய உடலுறவை ஊக்குவிப்பதாக அமையும்’ என, உலேமா வாரியத்தின் நிர்வாகி மவுலானா ஹாசிப் உல் ஹசன் தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சா தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக விளையாடுவதற்கு, இந்த அமைப்பு ஏற்கனவே 2005ம் ஆண்டு, ‘பத்வா’ விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தவிரவும், சோயப்பின் பாஸ்போர்ட் திரும்ப கிடைக்க இன்னமும் ஒரு வாரம் ஆகும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.