Archive for the ‘முஸ்லீம்தனம்’ category
மே 13, 2018
“தலித்–முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவனின் தாமதமான விஜயம் (3)

07-05-2018 அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அறிவிக்கப் பட்டது[1]: தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர், எல்.முருகன், 07-05-2018, திங்கள்கிழமை விசாரணை நடத்தினார், அன்றே அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அறிவித்தார்[2]. ஆனால், ஊடகங்களை இச்செய்தியை அமுக்கி வாசித்தன. ஆங்கில ஊடகங்கள் அடுத்த நாள் செய்தியாக வெளியிட்டன. அதாவது, அரசு தரப்பில், உடனடியாக நடவடிக்கை எடுத்தாகி விட்டது. மேலும், இவர் பிஜேபியின் சார்பில் நியமிக்கப் பட்டவர் என்று தெரிகிறது. இருப்பினும், இதெல்லாம் சகஜமான விசயம் தான், ஏனெனில், அந்தந்த அரசு பதவிக்கு வரும்போது, இத்தகைய “நியமனங்கள்” எல்லாம் எல்லாதுறைகளிலும், பரிந்துரை பேரில் நடந்து வருகிறது. 70 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் மற்றும் மாநிலங்களில் திராவிடக் கட்சிகள் அந்த பலனை அனுபவித்துள்ளன. ஆனால், திருமாவளவன், அந்த நேரத்தில் தில்லிக்கு, அரசியல் செய்ய, கூட்டணி பேரம் பேச சென்று விட்டதால், இங்கு வரத் தயங்கினார். அதே நேரத்தில், கிருஷ்ணசாமி வேறு, தங்களது ஜாதியினருக்கு “பட்டியிலின” அந்தஸ்து தேவையில்லை என்று அறிவித்தார்[3]. புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு, விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் 06-05-2018 அன்று, கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், எஸ்.சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் வெளியேற வேண்டும் எனப் பிரகடனம் வெளியிடப்பட்டது[4]. இதெல்லாம் திருமா-துலுக்கக் கூட்டை அதிர வைத்தது. ஆக, அவர்கள், போலீஸாரிடம் புகார் கொடுப்போம் என்று கிளம்பினர்.

09-05-2018 அன்று போலீஸாரிடம் புகார் கொடுக்க வந்த அரசியல் கட்சியினர்: தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில், கடந்த 24-04-2018 மற்றும் 05-05-2018 தேதிகளில் “தலித்-துலுக்கர்” இடையே மோதல் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவம் நடந்தது. திருமாவளவனே, “துலுக்கப்பட்டி” என்ற உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டதால், இனி, “துலுக்கர்” என்று கூட உபயோகிக்கலாம். பட்டியல் இனத்தவர், எஸ்சி, தலித் வசிக்கும் இடம் காலனி என்றால், துலுக்கர் வசிக்கும் இடம் துலுக்கப்பட்டி ஆகிறது. ஆனால், ஊடகங்கள், “இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்”, என்று தான் எழுதுகின்றன. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன், தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட செயலாளர் நாகரத்தினம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அகமது முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 09-05-2018 அன்று வந்தனர்[5]. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் அவர்கள், பொம்மிநாயக்கன்பட்டி பிரச்சினை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய கோரிக்கை: அந்த மனுவில், ‘பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் போலீஸ் துறைக்கு பயந்து இருதரப்பிலும் ஆண்கள் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இரு பகுதியிலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டும் இருக்கிறார்கள். இக்கிராமத்தில் இயல்பு நிலைக்கு திரும்ப இருதரப்பு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றனர். கலெக்டரிடம் மொத்தமாக சென்று மனு அளிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மூன்று பேர் மட்டும் மனு அளிக்க அலுவலகத்துக்குள் செல்லுமாறும் அங்கிருந்த அலுவலர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால், மனு அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்து மக்கள் கட்சி, இந்து எழுச்சி முன்னணி சார்பில் மனுக்கள்: இதேபோல், இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு மனு அளித்தனர். அப்போது இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அந்த மனுவில், ‘பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் இறந்த பெண்ணின் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தி, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அமைதியாக வாழ வழிவகை செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக, கலவரத்தில் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற கலைச்செல்வனை, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்[6]. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “இருபிரிவினருக்கிடையே நடந்த மோதலில் காயமடைந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த கடைகள், வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை நேரில் சந்தித்து திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் உரிய நேரத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார். அவரது கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை இந்து மக்கள் கட்சி ஆதரிக் கும்”, என்றார்[7].

12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம்: 01-05-2018 அன்று ராகுல், யச்சூரி முதலியவர்களை சந்தித்தப் பிறகு, கூட்டணி பற்றி பேசுவதற்கே நேரமில்லாத திருமாவுக்கு, பொம்மிநாயக்கன்பட்டியில், எஸ்சிக்கள் கொதித்து போயிருக்கிறார்கள் என்பதனை அறிந்தார். எப்படியாவது, அவர்களை சென்று பார்க்க வேண்டி முக்கியமான செயலர்கள் மற்றும் தொண்டர்கள் அறிவித்தனர். ஆனால், முஸ்லிம் தரப்பில் அவரைத் தடுக்க பார்த்தனர். இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 12-05-2018 அன்று காலை 10.15 மணி அளவில், பொம்மிநாயக்கன்பட்டி சென்றார். அவருடன் ஏராளமான நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் இந்திராகாலனிக்கு சென்றனர். பாதிக்கப்பட்ட தலித் மற்றும் இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்தார். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் நடந்த கலவரத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், ஆறுதலும் கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் சிலர், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருமாவளவனுடன் வந்த தொண்டர்கள், அந்த பெண்களை சமதானப்படுத்தினர். இங்கு திருமா சேரில் உட்கார்ந்திருக்கிறார், இருக்கமான முகத்துடன் கையைக் காட்டி பேசுகிறார். அவர்கள் எல்லோரும், தனது தொண்டர்கள் என்ற மனப்பாங்கில் நடந்து கொண்டது தெர்கிறது.

மசூதிக்கு சென்று குல்லா போட்டு சந்தித்த திருமாவளவன்: பின்னர் அங்கிருந்து பகல் 12.45 மணி அளவில் புறப்பட்ட திருமாவளவன் பள்ளிவாசலுக்கு சென்றார். அங்கு அவரை ஜமாத்தார்கள் வரவேற்றனர். “துலுக்க குல்லா” போட்டு அவர் பேசியது விசித்திரமாக இருந்தது. “இந்துக்களிடம்” பேசும்போது, அத்தகைய சின்னங்களை தரித்துக் கொள்ளாத நபர், துலுக்கரிடம் செல்லும் போது குல்லா போடுவது, செக்யூலரிஸத்தை ஏமாற்றுகிறது. மேலும் சுமார் 4ஒ நிமிடங்கள் முஸ்லிம்கள் சூழ மசூதியில் தரையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு முஸ்லிம் தலைவர் சொல்லியதை சாகவாசமாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்ததை ஒரு வீடியோ எடுத்துக் காட்டுகிறது[8]. இடது பக்கம் சாய்ந்து உட்காருவது, தண்ணீர் குடிப்பது போன்றவற்றைக் கவனிக்கலாம். முஸ்லிம் “இந்துக்கள்”, மீது அளந்த குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு, இறுதியில், திருமா “அந்த பக்கம் நாலுன்னா, இந்த பக்கம் ரெண்டுன்னு பேசித்தான் இருப்பாக்க…….நாம் தான் சுமுகமாக இருக்கணும்,” என்ற ரீதியில் பேசும் போது, அவ்வீடியோ முடிந்து விடுகிறது. பின்னர், அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார். அதேபோல பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். சுமூக முடிவு எடுக்க அறிவுறுத்தல் இரு தரப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்த பின்னர் சம்பவம் தொடர்பாக அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக நம்பிக்கை அளித்தார். மேலும் இரு தரப்பினரும் தங்களின் உள்ளார்ந்த பிரச்சினைகளை நயமாக பேசி தங்களுக்குள் சுமூக முடிவுகளை எடுத்து கொள்ளுமாறும் திருமாவளவன் அறிவுறுத்தினார்[9].
© வேதபிரகாஷ்
13-05-2018

[1] Business Standard, Theni clashes: Compensation for Dalit victims announced, ANI | Theni (Tamil Nadu) [India], Last Updated at May 10, 2018 00:45 IST.
[2] In the aftermath of the recent clashes between Dalits and Muslims in Tamil Nadu’s Theni district, the National Scheduled Cast Commission (NSCC) has announced a compensation for the damages caused to Dalit houses by police while conducting searches and security drills in the area.
http://www.business-standard.com/article/news-ani/theni-clashes-compensation-for-dalit-victims-announced-118051000027_1.html
[3] விகடன், ”எனக்கும் பி.ஜே.பி–க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” மாநில மாநாட்டில் கிருஷ்ணசாமி பேச்சு!, அருண் சின்னதுரை அருண் சின்னதுரை ஆர்.எம்.முத்துராஜ், Posted Date : 05:30 (07/05/2018) Last updated : 07:30 (07/05/2018).
[4] https://www.vikatan.com/news/tamilnadu/124297-krishna-samy-says-he-has-no-link-with-bjp.html
[5] தினத்தந்தி, கலவரம் நடந்த பொம்மிநாயக்கன்பட்டியில் கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மே 10, 2018, 04:00 AM.
[6] https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/10002941/In-pomminayakkanpatti-Riots-The-peace-talks-should.vpf
[7] இந்த உதிரிகட்சியும் அரசியல் நோக்கில் வந்துள்ளது என்ரு தெரிகிறது. ஏனெனில், ரஜினி அரசியலை இங்கு சேர்த்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை.
[8] https://www.youtube.com/watch?v=Ujt3-PordME
[9] இவ்வீடியோவில் விவரங்களை பார்க்கலாம் – https://www.youtube.com/watch?v=CNt8Rq9My2Y
பிரிவுகள்: அடிமைத்தனம், அடையாளம், அரசு நிதி, அவதூறு, இந்து எழுச்சி முன்னணி, சமரசம், துலுக்கப்பட்டி, தேனி, பள்ளிவாசல், பிண ஊர்வலம், பேச்சு வார்த்தை, பேச்சுவார்த்தை, பொம்மிநாயக்கன்பட்டி, மசூதி தெரு, மதமாற்றம், மதவாதம், முஸ்லிம் காலனி, முஸ்லிம் தெரு, முஸ்லிம் பெண்கள், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்தனம், மோதல், வன்முறை, விசாரணை, விடுதலை சிறுத்தை
Tags: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்து, இந்து மக்கள் கட்சி, இஸ்லாம், கிருஷ்ணசாமி, தலித், தலித் அரசியல், தலித் இந்து, தலித் முஸ்லீம், திருமா வளவன், திருமாவளவன், துலுக்கப்பட்டி, தேனி, தேவதானப்பட்டி, தேவேந்திரகுலம், பொம்மிநாயக்கன்பட்டி, விடுதலை சிறுத்தை
Comments: Be the first to comment
மார்ச் 17, 2013
குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

காபிர்களுடன் உறவு-கூட்டு ஏன், எதற்கு, எப்படி: காபிர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, இருப்பினும் காபிரை வைத்து காபிரை அழிக்கலாம் என்றால் அவ்வாறான நிலையில் ஓரளவிற்கு நட்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, முஸ்லீம்கள் இருக்கும் போது, விஷயம் அறிந்தும் அறியாதது போல, இந்திய துரோகிகள், அரசியல் ஆதாயத்திற்காக, ஓட்டுவங்கி அரசியலுக்காக பேரம் பேசி தேர்தலை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இப்தர் பார்ட்டி நடத்துவதிலிருந்து, அரசியல்வாதிகள் தனியாக மற்றும் இஸ்லாம் அமைப்புகளே நடத்தும் நோன்பு விழாக்கள் பல நடந்து வருகின்றன. அத்தகைய காபிர்-மோமின் கூடுதல்களில் நாத்திக, இந்துவிரோத, ஏன் கம்யூனிஸ்ட் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகி விட்டது.

முஸ்லீம்களை நம்பும் உபி அரசியல்வாதிகள்: உபியைப் பொறுத்த வரைக்கும் “முல்லா”யம் சிங் யாதவ், முஸ்லீம்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார். காங்கிரஸ்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சுன்னத் செய்து கொள்லக் கூட தயாராக உள்ளார்கள். ராஹுல் உபிக்கு போக வேண்டும் என்றால், ஒரு மாதம் முன்னரே ஷேவ் செய்யாமல் இருப்பார். தாடி இல்லாமல் அவரை உபியில் பார்க்க முடியாது. இப்பொழுது கூட, கொலை செய்யப்பட்ட ஜியா உல் ஹக்கின் மனைவி பர்வீன் ஆஜாதைச் சென்று பார்த்துள்ளார்[1]. ஆனால், காஷ்மீரில் கொல்லப்படும் எந்த வீரரின் குடும்பதையோ, மனைவியையோ பார்த்ததாக தெரியவில்லை. அதாவது முஸ்லீம் என்றால், அதிலும் தேர்தல் வருகிறது என்றால் இத்தகைய நாடகங்கள், ஆனால், இந்தியர்களை ஏமாற்றும், துரோகம் இழைக்கும் வேலைகள் என்பதனை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

புகாரி-முல்லா நிக்கா தலாக்கில் முடிந்துள்ளது: இப்பொழுது தில்லி இமாம் மௌலானா சையது அஹ்மது புகாரி, “முல்லா”யம் சிங் யாதவுடனான தம்முடைய உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரது மறுமகன் உமர் அலி கான் (Umar Ali Khan) மற்றும் வாசிம் அஹமது (Waseem Ahmad) தம்முடைய ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை அனுப்பியுள்ளனராம். முஸ்லீம்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுளார். இருப்பினும், உறுதியான வாக்கு அளித்தால், தமது நிலையை மறுபரிசீலினை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] எட்டாவா என்ற இடத்தில் ஏப்ரல் 21ம் தேதி, ஒரு முஸ்லீம் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்[3].

Rajiv Gandhi-with-Muslim-cap-1990
முஸ்லீம் ஊழல் செய்ய மாட்டாரா?: உபி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வாசிம் அஹமது, ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால், பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[4]. ஆனால், புகாரி அதனை எதிர்க்கிறார். முஸ்லீம் என்பதினால் தான், ஊழல் குற்றச்சாட்டு ஏற்படுகிறது என்று வாதிடுகிறார். அரசியலில் ஊழல் இல்லாவர் என்பது கிடையாது என்ற நிலையில் இத்தகைய வாதமே போலித்தனமாகும்.

லல்லு-பாஷ்வான்-குல்லா
ஆஸம் கானும் ஜெயபிரதாவும்: முலாயம் கட்சியில் ஏற்கெனவே ஆஸம் கான் என்ற முஸ்லீம் அமைச்சர் அடாவடித் தனமாக செயல் பட்டு வருகின்றார் என்பது தெரிந்த விஷயமே. கடந்த தேர்தலின் போது, ஜெயபிரதாவின் மீது அவதூறு ஏற்பட, அசிங்கமான சிடியை வெளியிட்டார் என்று அந்த நடிகையே குற்றஞ்சாட்டியுள்ளார்[5]. அப்பொழுதைய சமஜ்வாதி கட்சியின் பொதுசெயளாலராக இருந்த அமர்சிங் தேர்தல் கமிஷனரிடம் “ஜெயபிரதாவின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய சிடியை ஆஸம் கான் ஆட்கள் விநியோகித்து வருகிறார்கள்”, என்று புகார் கொடுத்தார்[6]. வெளிப்படையாக, அந்நடிகை இந்து என்பதனால் சீட் கொடுக்கக் கூடாது, அதிலும் முஸ்லீம் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தக் கூடாது என்றெல்லாம் வெளிப்படையாக முலாமிற்கு கண்டிஷன் போட்டார்.

புகாரி- ஆஸம் கான் லடாய்: புகாரியின் மறுமகன் நியமிக்கப்பட்டதற்கு, ஆஜம் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லது “புகாரியை முஸ்லீம்கள் தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்[7]. ஏனெனில் முஸ்லீம் அமைச்சர் பதவியை தனது மறுமகனுக்குக் கொடுக்குமாறு, புகாரி கேட்டுக் கொண்டார்[8]. இதனால்தான், ஆஸம் கான் – புகாரி இவர்களிடம் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதில் முல்லாயம் சிக்கியுள்ளார்[9].

Omar Abdullah – Rahul-Mullah-Topi
எந்த முஸ்லீம் கூட்டு அதிக ஓட்டு கிடைக்கும்?: போதாகுறைக்கு, இப்பொழுது பிரைலியைச் சேர்ந்த மௌலானா தௌக்கீர் ராஸா என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் (Maulana Tauqeer Raza of Bareilly, for support in the Lok Sabha elections) என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்[10]. எந்த முஸ்லீம் கூட்டத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதிக ஓட்டு கிடைக்கும் என்று பார்க்கிறார் போலும்[11]. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால், இம்முறை இந்த முஸ்லீம் கூட்டினால் வென்று விடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்[12].
வேதபிரகாஷ்
17-03-2013
பிரிவுகள்: அகிலேஷ், அடிப்படைவாதம், அடையாளம், அமர் சிங், அலஹாபாத் தீர்ப்பு, அல்லா, அஹமது ஷா புகாரி, ஆஸம் கான், இந்திய முஜாஹத்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இமாம், இமாம் கவுன்சில், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, உருது மொழி, உலமா வாரியம், ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், குரான், குஷித் ஆலம் கான், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், சட்டசபை, சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சுன்னத், சுன்னி, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜெயபிரதா, பழமைவாதம், புகாரி, புத்தகம், புனிதப் போர், மனநிலை, மனித நேயம், மிதிக்கும் இஸ்லாம், முலாயம், முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களை தாஜா செய்வது, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது, முஸ்லீம்தனம், முஹம்மது, யாதவ், ரஹ்மான், ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி, ஷேக், ஹஜ், ஹஜ் கமிட்டி, ஹஜ் பயணம், ஹதீஸ்
Tags: ஃபத்வா, அகிலேஷ், அமர் சிங், அலஹாபாத், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியரா, இந்துக்கள், இமாம், கஞ்சி, கஞ்சி குல்லா, குரான், குல்லா, குல்லா கஞ்சி, கொலை, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சோனியா, ஜியா உல் ஹக், ஜெயபிரதா, தாடி, தில்லி, தில்லி இமாம், தேர்தல், நக்வி, பர்வீன் ஆஜாத், பிஜேபி, புகாரி, போலீஸ், முலாயம், முஸ்லீம், முஸ்லீம்கள், யாதவ், ராம்பூர், ராஹுல், ரேபெரிலி, ரைபெரிலி, ஷாஹி இமாம்
Comments: 9 பின்னூட்டங்கள்
மார்ச் 2, 2013
முஸ்லீம்களின் வெறியாட்டம் – பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன!

ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டன, இந்துக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டுள்ளவர்களில் இந்துக்களும் அடங்குவர், ஆனால் செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை!

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றதுகிஸ்லாம் என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டன, இந்துக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டுள்ளவர்களில் இந்துக்களும் அடங்குவர் பங்களா போலீஸார் இப்பொழுதுதான் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர். நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1]. ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார்.

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்: டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[5] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[6]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[7]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் முதலியோர் இப்பொழுது வாயைத் திறக்கமாட்டார்கள்.
© வேதபிரகாஷ்
01-03-2013
பிரிவுகள்: ஃபத்வா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமிய நாடு, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊடக வித்தைகள், ஊரடங்கு உத்தரவு, கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தடை, முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், முஸ்லீம்தனம், வங்காள தேசம், வங்காள மொழி
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்து, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கோவில், ஜமாத், ஜமாத்-இ-இஸ்லாம், பங்களாதேசம், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், வங்காள தேசம், வங்காளம், வீடு
Comments: 13 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 22, 2012
ரூ.2 கோடி பரிசு – அசாமில் பங்களாதேசியைக் கண்டு பித்தால் – சவால் விட்டுள்ளார் – அபு அசிம் ஆஸ்மி!
Azmi challenges Raj to find Bangladeshis; offersRs. 2 crore
Press Trust of India | Updated: August 22, 2012 17:08 IST
Mumbai: Samajwadi Party leader Abu Asim Azmi on Wednesday offered Rs. two crore to MNS chief Raj Thackeray if he substantiates his allegation about Bangladeshi voters in the Assembly constituency from where he won the poll.
“Raj Thackeray says there are lakhs of Bangladeshis in my constituency. I will give Rs. 2 crore if he shows even one lakh Bangladeshis and Pakistanis in Bhiwandi,” Mr Azmi said at a press conference in Mumbai.
Mr Azmi even displayed the Rs. two crore cheque on the occasion.
“I will quit politics if his charge is proved. If he fails, he will have to quit,” Mr Azmi said, accusing the MNS
chief of playing politics by fooling Marathi people.
“Raj has abused me. Even I can hurl abuse, but my tehzeeb doesn’t allow it,” Mr Azmi said. The MNS morcha was taken out in Mumbai on Tuesday without permission and police should act against the organisers, he said.
Mr Azmi congratulated Mumbai police commissioner Arup Patnaik for displaying “restraint” while tackling the August 11 violence at Azad Maidan.
“The drug mafia was behind that violence. The culprits joined the protest morcha later,” he said.
On Raj Thackeray displaying a purported Bangladeshi passport at the rally on Tuesday, Mr Azmi said: “The throwing of passport should be inquired into. It is a serious offence.”
“Raj Thackeray is against Dalits and Muslims. His Hindutva face has come to the fore,” Mr Azmi said.
பிரிவுகள்: அசாதுதீன், அசாம், அச்சம், அடையாளம், அமைதி என்றால் இஸ்லாமா, அரசாங்கத்தை மிரட்டல், அஸ்ஸாம், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்கள், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளே நுழைவது, எஸ்.எம்.எஸ், ஓட்டு, ஓட்டுவங்கி, கல்லூரி தகர்ப்பு, கல்லெரிந்து கலவரம், கல்வீச்சு, கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காங்கிரசுக்கு எச்சரிக்கை, சிட்டகாங், சைபர்வெளி ராணுவம், ஜமாத்-உத்-தாவா, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தடை, தேச கொடி, தேச விரோதம், தேசியக் கொடி, தேர்தல், பழமைவாதம், பிஜேபி, முஸ்லீம்தனம், வதந்தி, வந்தே மாதரம், வன்முறை
Tags: அசாம், ஆஜாத் மைதானம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கலாட்டா, காஷ்மீரம், கோக்ரஜார், சிறுபான்மையினர், சிவசேனா, செக்யூலரிஸம், பரவும் தீவிரவாதம், போடோ, போலீஸ், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், மும்பை, முஸ்லிம்கள், முஸ்லீம், முஸ்லீம்கள், ராஜ் தாக்கரே
Comments: 1 பின்னூட்டம்
ஓகஸ்ட் 16, 2012
கருப்புதினமாகக் கொண்டாடிய காஷ்மீர மக்களும், குண்டுகளைப் பொழிந்த பாகிஸ்தானியரும், குண்டுகள் வெடிக்கப்பட்ட மணிப்பூரும்: சுதந்திரநாள் கொண்டாடப்பட்டவிதம்!
சுதந்திர நாள் கொண்டாட்டம் என்றால் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை விட்டு, ஏதோ தீவிரவாத தாக்குதல் தடுப்பு தினமாகக் கொண்டாடப்படுவதைப் போன்ற சூழ்நிலை இந்தியாவில் உருவாகி வருகிறது. இப்படி பயந்து கொண்டே கொண்டாடுவது கொண்டாட்டமா என்று தெரியவில்லை.
வழக்கம்போல பிரிவினைவாத, அடிப்படைவாத, இந்திய-எதிர்ப்பு காஷ்மீர முஸ்லீம் மக்கள் சுதந்திரதினத்தை கருப்பு நாளாகக் கொண்டாடி பெருமை சேர்த்துள்ளனர்[1].
பாகிஸ்தானியர்கள் கடந்த 11 நாட்களில், ஏழு முறை சட்டங்களை / ஒழுங்கை மீறி எல்லைப்புறங்களில் துப்பாக்கி சூட்டை நடத்தி, இந்திய வீரர்களுக்கு குண்டுகளை கொடுத்துள்ளது[2].
மணிப்பூரிலேயோ, குண்டுகள் வெடித்தே சுதந்திர நாள் கொண்டாடப்பட்டுள்ளது[3].
ஆனால், பிரதமந்திரியோ பத்திரமாக, குண்டு துளைக்காத கண்ணாடி கவசத்தின் பின்னாக நின்று கொண்டு, உணர்ச்சியே இல்லாமல் தயார் செய்து கொடுத்த பேச்சை தட்டுத் தடுமாறி இந்தியில் பேசி முடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, பல இடங்களில் உளறிக் கொட்டியுள்ளார் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[4].
பிரிவுகள்: அசாம், அவமதிக்கும் இஸ்லாம், அஸ்ஸாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இஸ்லாம், உள்துறை அமைச்சகம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊரடங்கு உத்தரவு, ஓட்டு, ஓட்டுவங்கி, கற்களை வீசி தாக்குவது, கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், கல்வீச்சு, கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கூட்டணி தர்மம், கொடி, கொடி எரிப்பு, கொடியேற்றம், சிதைப்பு, சுதந்திரதினம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, தேச கொடி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசியக் கொடி, தேர்தல், மணிப்பூர், மனநிலை, முஸ்லீம், முஸ்லீம்கள், முஸ்லீம்தனம், ரகசிய சர்வே
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், கொண்டாட்டம், சுதந்திர நாள், சுதந்திரம், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், தயக்கம், தீவிரவாத தடுப்பு தினம், தீவிரவாத தாக்குதல் தடுப்பு தினம், தீவிரவாத தாக்குதல் தினம், தீவிரவாத தினம், பயம், பாகிஸ்தான், பீதி, புனிதப்போர், மணிப்பூர், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஸ்லீம்கள்
Comments: 5 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 15, 2012
இந்திய சுதந்திரப் போரில் தியாகம் புரிந்தவர்களின் நினைவிடத்தை சூரையாடிய
வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!

முஸ்லீம் இளைஞர்கள் வெறியுடன் அமர்ஜோதி ஜவான் நினைவகத்தை சேதப்படுத்தியது: மும்பையில் நடந்த கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்கள் சிறிதும் உண்மையினை உணராமல், இந்நாட்டின் தியாகிகளின் மகத்துவத்தை நினையாமல், வெறியுடன், வெறுப்புடன், காழ்ப்புடன் அமர் ஜோதி ஜவான் நினைவகத்தை கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்து சேதப்படுத்தினர்[1]. உடையாத “பைபர் கிளாஸ்” கண்ணடி பெட்டியையும் உடைத்து சூரையாடியுள்ளனர்[2]. அது மட்டுமல்லாது, அங்கு வைக்கப்பட்டிருந்த தலைகவசம் மற்றும் துப்பாக்கி முதலியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்[3]. மும்பை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இன்றைக்குள் அதனை சீர் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள், ஆனால் முடியவில்லை[4].

அத்தகைய வெறிக்குக் காரணம் என்ன – யார் அப்படி அவர்களை வெறி கொள்ள செய்தனர்?: அடுல் காம்ப்ளே என்ற “மிட்-டே” என்ற நாளிதழைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் எடுத்த புகைப்படங்களில், அந்த வெறிகொண்ட முஸ்லீம் இளைஞர்கள் பதிவாகியுள்ளார்கள். அவர்கள் செயல்படும் விதத்திலிருந்தே, அவர்கள் எந்த அளவிற்கு வெறிகொண்டுள்ளார்கள் என்பதனையறியலாம். அஜ்மல் கசாப் போன்று ஆக்ரோஷமாக உள்ளான் என்று பார்த்தவர்களே கூறுகிறார்கள்[5]. அந்த அளவிற்கு முஸ்லீம் இளைஞர்களை வெறிகொள்ளச் செய்வது யார்? நாட்டின் மேன்மையை, வீரர்கள் சுதந்திரத்திற்காகத் தியாகம் புரிந்தத்தையும் அறியாமல் அப்படி கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்துள்ளார்கள் என்றால் அந்நிலை மாறவேண்டும். அவர்கள் திருந்த வேண்டும், தம்முடைய நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ளவேண்டும்.

அமர்ஜோதி ஜவான் நினைவகம் உருவாகிய வரலாறு: அமர் ஜோதி ஜவான் மெமோரியல் – அமர் ஜோதி ஜவான் நினைவகம் ட்ரில் ஹவல்தார் சய்யது ஹுஸைன் (Drill Havaldar Sayyed Hussein) மற்றும் சிப்பாய் மங்கள் சாதியா (Sepoy Mangal Cadiya) என்ற இரு இந்திய வீரர்களின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்டதாகும். இவ்விரு வீரர்களும் ஆங்லிலேயரை எதிர்த்து போராடி, 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் ஈடுபட்டவர்கள். 150 ஆண்டு நினைவு விழாவின் போது, 2009ல் ஆஜாத் மைதானத்தில் நிறுவப்பட்டது. அக்டோபர் 15, 1857 – தீபாவளி நாளன்று சார்லஸ் போர்ஜெட் (Charles Forjett, the then Superintendent of Police, Bombay Region) எனேஅ அப்பொழுதய கிழக்கிந்திய கம்பெனியின் போலீஸ் சூப்பிரென்டென்டின் உத்தரவு படி, கிரெக்கெட் கிளப் அருகில் உள்ள மைதானத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனால்தான், அந்த இடம் “ஆஜாத் மைதான்” சுதந்திர மைதானம் என்று அழைக்கப்பட்டது. ரவீந்தர வைகர் (Ravindra Waikar) என்பவர்தாம், அந்த நினைவிடம் அமைக்கக் காரணமாக இருந்தவர். அப்பொழுதைய கமிட்டியின் தலைவராக இருந்து, நினைவகத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அந்நினைவிடம் சேதப்படுத்தப் பட்டதைக் குறித்து, அவர் மிகவும் வருத்தமடைந்தார். “அச்செயல் மிகவும் அசிங்கமானது, வெட்கப்படவேண்டியது, கண்டிக்க வேண்டியது”, என்று தனது கருத்தை வெளியிட்டார்.

சேதப் படுத்தியவர்களை கைது செய்ய போலீஸார் தீவிரம்:
Mumbai Crime Branch and local police are racing against each other to nab these hoodlums, knowing whoever makes these crucial arrests will reap rich professional rewards.“Of all the miscreants, these men are the most wanted. They have hurt the sentiments of the entire nation. They must be arrested on priority,” said a senior Crime Branch official, on condition of anonymity.
An officer from Azad Maidan police station said, “In such a scenario, it is better if these men surrender before the police reach them. By giving themselves up, they would be able to avoid the wrath of the police as well as the public.”
“These photographs have been circulated among our informers. We are in constant touch with them for leads. Every policeman is on the lookout for them at present. If we manage to arrest them before Independence Day, it will be our tribute to the freedom fighters,” he added.
The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.
Confirming the report, joint commissioner of police (crime) Himanshu Roy said, “This man (top-right) has insulted the national monument of India, and arresting him is our priority. Several Muslim leaders have also condemned the act.”
மும்பை கலவரக்காரர்களிலேயே, இவ்விருவரும் தான் இந்த நாட்டின் மதிப்பையே அவமதித்துள்ளார்கள்.அவர்களை கைது செய்ய வேண்டியதுதான் எங்களது தலையாயக் கடமையாக உள்ளது, என்று மும்பை போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
ஒவ்வொரு போலீஸாரிடமும் இப்படங்கள் உள்ளதால், அவர்கள் பிடிபட்டு விடுவார்கள் என்று நம்புகிறோம்.
மேலும் அவர்களாகவே வந்து சரண்டர் ஆகிவிட்டாலும் நல்லதுதான்.
சுதந்திரத்தினத்கிற்கு முன்பாகவாது, அவனைப் பிடித்துவிட வேண்டும். அப்படி செய்தால், அது அந்த தியாக-வீரர்களுக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாக இருக்கும்.
இப்படங்களைப் பார்த்தவர்களும் கொதித்துப் போயுள்ளார்கள். அக்மல் கசாப்புடன் ஒப்பிட்டி, அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.


இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே போரிட்டது: இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே சத்தியாகிரகம், அஹிம்சை முறைகளில் போரிட்டார்கள். ஜின்னா போன்றவர்கள், பாகிஸ்தான் கேட்கும் வரை அவர்கள் ஒற்றுமையாகத்தான் செயல்பட்டார்கள். அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக நினைவு சின்னங்களை, இப்படி வன்முறை, வெறி, காழ்ப்பு போன்ற உணர்வுகளுடன் சூரையாடுவதே அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக – முறைகளை நிந்திப்பதாகும், அவமதிப்பதாகும், தேசவிரோதமாகும். ஆகவே, இக்கால இந்திய முஸ்லீம்கள் தங்களது பிள்ளைகளுக்கு உண்மையான சுதந்திர உணர்வுகளை ஊட்டி வளர்க்க வேண்டும். அதைவிடுத்து, “நாங்கள் முஸ்லீம்கள், நாங்கள் இந்தியர்களிடமிருந்து மாறுபட்டவர்கள், நாங்கள் பாகிஸ்தானிற்காகத்தான் ………………………………….., பாகிஸ்தான் கொடிகளை ஏந்திக் கொண்டு இந்தியாவிலேயே போராடுவோம்……………………………………………..”, என்று வளர்த்து வந்தால், இத்தகைய வெறிதான் வரும், வளரும், பாதிக்கும்.
வேதபிரகாஷ்
15-08-2012
பிரிவுகள்: அழுக்கு, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இஸ்லாம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, எரிப்பு, ஓட்டு, ஓட்டுவங்கி, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், கார்டூன், காஷ்மீர், கிலாபத், குஜராத், சிறுபான்மையினர், சுன்னி-ஷியா, ஜமாத், ஜிஹாத், துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, தேச கொடி, தேச விரோதம், தேசியக் கொடி, தேர்தல், நெருப்பு, மதகலவரம், மதவாதம், மதவெறி, மறைப்பு, மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம்கள், முஸ்லீம்தனம், வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை, ஷியா-சுன்னி
Tags: ஃபத்வா, அமர் ஜோதி, அமர் ஜோதி ஜவான், அவமதிக்கும் இஸ்லாம், ஆஜாத் மைதான், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், சிப்பாய் கலகம், சிறுபான்மையினர், சுதந்திரம், ஜவான், தியாகி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், மும்பை, முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம்கள், வெறி
Comments: 3 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 12, 2012
மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

நேரு நகரிலிருந்து வந்த கும்பல்[1]: ஒரு குறிப்பிட்ட கூட்டம் நேர் நகரிலிருந்து[2] வந்தது. ஆனால் அது மைதானத்திற்குள் செல்ல முடியவில்லை. ஏனெனில், 15,000 பேர் தான் கலந்து கொள்வார்கள் என்று ராஸா அகடெமி சொல்லி அனுமதி வாங்கியிருந்தது. ஆனால், 40,000ற்கும் மேலாக கூட்டம் வந்துள்ளது. அதெப்படி என்று கேட்டால் எங்களுக்கே தெரியாது என்கிறார்கள். ஆகவே, அந்த நேரு நகர் கும்பல் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முடிந்தது. அப்போழுது தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது என்று குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்ட பிறகு விவரங்களை வெளியிட்டனர். அந்த நேரு நகர் கும்பல் எப்படி, யாரால் ஏன் அழைத்துவரப் பட்டது?

அமைப்பாளர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்தது ஏன்?: ராஸா அகடெமி முஸ்லீம் கலாச்சாரம் முதலிவற்றை ஊக்குவிக்கிறது என்றுள்ளது. அந்நிலையில் ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால் மும்பையில் ஆஜாத் மைதானத்தில் ஆர்பாட்டத்தை ஏன் நடத்த முடிவு செய்தது என்று தெரியவில்லை. இப்படி ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்படுவர்[3] என்றிருந்தால், அமைதியாக நடத்தமுடியாது என்று தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் அல்லது அதிகக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டாம். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன. அவர்களைச் சேர்ந்தவர்களும் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

கலவரத்தைத் தூண்டிய காரணங்கள் என்ன?: மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்[4]. முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தவர்கள், பிறகு உணர்ச்சிப் போங்க, தூண்டும் விதத்தில் பேச ஆரம்பித்தனர். இந்தியாவில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அரசு அதார்குத் துணை போகிறது என்று ஆரம்பித்தனர்.
- காங்கிரஸுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் முஸ்லீம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.
- குறிப்பாக அசாம் மற்றும் பர்மா முஸ்லீம்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்தி முதலியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
- பர்மாவிலிருந்து வந்த ஒரு தம்பதியர், தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
- அவர்கள் தமது கைகளில் பிடித்திருந்த பதாகைகளில் எங்களைக் கொல்லவேண்டாம் என்ற வாசகங்கள் இருந்தன.
- அதனை காட்டியபோது, கூச்சல் கோஷம் கிளம்பியது.

பிரார்த்தனையை முடித்துக் கொள்ளச் சொன்ன மர்மம் என்ன?: அதுமட்டுமல்லாது, மேடையில் பேச அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. சிலரை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இந்த பிரச்சினை என்ன, முஸ்லீம்களுக்குள் வெஏர்பாடு என்ன, ஏனிப்படி வெளிப்படையாக மோதிக் கொண்டஸ்ரீகள் என்ற விவரங்கள் தெரியவில்லை. மேடையிலேயே இத்தகைய ரகளை ஏற்பட்டு, கூச்சல்-குழப்பங்களில் நிலவரம் இருந்ததால், மௌலானா பொயின் அஸ்ரப் காதரி ஆரம்பித்த பிரார்த்தனையை முடித்துக் கொள்ள அமைப்பாளர்கள் சொல்லவேண்டியதாயிற்று[5]. உண்மையான முஸ்லீம்கள் இப்படி நடந்து கொள்வார்களா, பிரார்த்தனைக்குக் கூட இடைஞ்சல் செய்வார்களா அல்லது பாதியிலேயே முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அவர்களுக்கு கலவரம் நடக்கும் என்று தெரியும் போலிருக்கிறது!

சோனியா மெய்னோ எதிர்ப்பு ஏன்?: இந்தியாவில் சோனியா மெய்னோ அரசு முஸ்லீம்களுக்கு தாராளமாகவே சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது[6]. அசாமிலேயே கோடிகளைக் கொட்டியுள்ளது. அந்நிலையில் காங்கிரஸ்காரர்களுக்கு எதிராக ஏன் கோஷம் என்று தெரியவில்லை. ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர். அடிபட்ட-காயமடைந்த 54 பேர்களில் 45 பேர் போலீஸ்காரர்கள் எனும்போது, அவர்கள் குறிப்பாக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதேபோல ஊடகக்காரர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையாளர் மற்றும் கேமராமேன் தாக்கப்பட்டு, அவர்களின் கேமரா-வீடியோக்கள் உடைக்கப் பட்டுள்ளன[7]. “தி ஹிந்து” பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படாத ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?: ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[8]. மூன்று மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[9]. மும்பை நகரத்தில் பிரதானமான ஒரு இடத்தில் இப்படி, திடீரென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளது, போலீஸாருக்கே பிரமிப்பாக இருக்கிறது.

போலீஸார் மீது தாக்குதல் ஏன்?: கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது முதலில் அதிகமாக வந்த கூட்டத்தை சமாதனப்படுத்திக் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். பிறகு உள்ளே நுழைய முடியாமல் மற்றும் உள்ளேயிருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்களை முறைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று கற்கள் அவர்கள் மீது வீசப்பட்டன. அதுமட்டுமல்லாது, சிலர் நேரிடையாகவே வந்து போலீஸார் மீது கற்களை சரமாரியாக வீசித் தாக்கினர். அதற்குள் தேவையில்லாமல், ஒரு வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்குப் பிறகே ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர்[10]. முதலில் (நேற்று சனிக்கிழமை 11-08-2012) அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்பட்டது. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[11]. அவர்கள் முஹம்மது உமர் (பந்த்ரா) மற்றும் அட்லப் சேக் (குர்லா) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். (Two persons, 22-year-old Mohammad Umar and 18-year-old Altaf Sheikh (one from Bandra and the other from Kurla), died ). 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[12]. இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[13]. அதாவது தங்கள் சமூகத்தினரையே கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது தெரிந்தோ தெரியாமலோ அத்தகைய கலவரம் ஏற்பட துணைபோயிருக்கிறார்கள்.

ஊடகக்காரர்கள் தாக்கப் பட்டதேன்?: பத்திரிக்கை-செய்தியாளர்கள் மற்றும் டிவி-செனல் ஊடகக்காரகள் நின்று கொண்டு செய்திகளை சேகரித்து மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சிலர் அவர்களைப் பார்த்து கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். லண்டனுக்குச் சென்று ஒலிம்பிக்ஸ் செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், அமெரிக்காவிற்கு சென்று சீக்கியர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், என்று நக்கலாக பேசி, அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரி என்று கோஷமிட்டுள்ளனர். பெயர் சொல்ல மறுத்த எதிர்ப்பாளர் “நாங்கள் ஏதாவது (தமாஷா) செய்ய வந்து விட்டால் அதை (தமாஷாக) போடுவீர்கள் போல”, என்று நக்கலடித்தார்[14]. அதுமட்டுமல்லாமல், “அவர்களை வெளியே அனுப்பு” என்றும் கோஷமிட்டுள்ளனர். இதனால், ஊடகக்காரர்கள் வெளியேற ஆரம்பித்தனர்.

“தி ஹிந்து” கரிசனம் மிக்க செய்திகள்: “தி ஹிந்து” இதைப் பற்றி விசேஷமாக செய்திகளைக் கொடுத்துள்ளது[15]. அது ஏற்கெனெவே முஸ்லீம்களை (பங்களாதேச ஊடுவல்) ஆதரித்து பல செய்த்களை வெளியிட்டுள்ளது[16]. “தி ஹிந்து” கட்டுரைகளை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், இந்திய சட்டங்களை திரித்து, வளைத்து, எப்படி “கருத்துவாக்கம்” என்ற பிரச்சார ரீதியில், பொய்களை உண்மையாக்கப் பார்க்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, பங்ளாதேச முஸ்லீம்களால் இந்தியர்கள் எப்படி எல்லாவிதங்களிலும் பாதிக்கப்படுகிறர்கள் என்பதை மறைத்து, அந்நியர்களுக்காக வக்காலத்து வாங்கும் முறையில் அவை இருக்கின்றன. மதவாதத்தை வளர்த்துவிட்டு, இப்பொழுது மனிதத்தன்மையுடன் இப்பிரச்சினையை அணுகவேண்டும் என்று ஒரு கட்டுரை[17]. மனிதத்தன்மையிருந்திருந்தால் முஸ்லீம்கள் அவ்வாறு ஊடுருவி வந்திருப்பார்களா? இந்தியர்களை பாதித்திருப்பார்களா? இந்துக்களைக் கொன்றிருப்பார்களா? அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்களா? போடோ இந்தியர்கள் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டால் போல ஒரு கட்டுரை[18]. போடோ கவுன்சிலை கலைத்துவிட வேண்டும் என்று சூசகமாகத் தெரிவிக்கும் ஒரு கட்டுரை[19]. மதரீதியில் முஸ்லீம்களை ஊடுருவ வைத்து விட்டு, மதரீதியில் பிரிக்க முடியாது என்று அரசே உச்சநீதி மன்றத்தில் தாக்குதல் செய்கிறது[20]. பாகிஸ்தான் ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன[21]. பிரஷாந்த் சவந்த் என்ற ஊடகக்காரரை மிரட்டியதுடன் அவருடைய கேமராவை உடைத்துள்ளனர். பிரஸ் கிளப் கட்டிடத்திற்குள் சென்று வெளிவந்தபோது, “அவனையும் சேர்ந்து எரிடா” என்று கும்பல் கூச்சலிட்டது[22].

முஸ்லீம்கள் கலவரங்களை ஒரு பேரத்திற்காக உபயோகப்படுத்துகிறார்களா?: முஸ்லீம் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் என்று பலர், முஸ்லீம்கள் ஏன் கலவரங்களில் ஈடுபடுகின்றனர் என்று ஆராய்ச்சி செய்து நிறையவே எழுதியுள்ளனர். ரபிக் ஜக்காரியா, அஸ்கர் அலி இஞ்சினியர், இம்தியாஸ் அஹமத், அப்த் அல்லா அஹம்த் நயீம்[23], இக்பால் அஹ்மத் என்று பலர் முஸ்லீம் மனங்களை ஆழ்ந்து நோக்கி, எப்படி “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது”, “முஸ்லீம்கள் ஆபத்தில் உள்ளனர்”, “அல்லாவின் பெயரால்……..” என்றெல்லாம் கூக்குரலிடும் போது, பொது கூட்டங்கள், ஊர்வலங்கள்-போராட்டங்கள் நடத்தும்போது, அமைதியான முஸ்லீம்கள் உந்துதல்களுக்குட்பட்டு, தூண்டப்பட்டு “அல்லாஹு அக்பர்” கோஷமிட்டு, கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றனர். இங்கும் அதேமாதிரியான முறை கையாளப்பட்டுள்ளது. ஒவைஸி அசாமிற்குச் சென்று, முஸ்லீம்களை மட்டும் கவனித்து, நிவாரணப்பணி என்ற போர்வையில் பொருட்களைக் கொடுத்து வருகிறார். பாராளுமன்றத்தில் 08-08-2012 அன்று ஆவேசமாகப் பேசுகிறார்[24].
ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[25], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”, என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்! |
உடனே கூட்டம் கூட்டப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு, 11-08-2012 கலவரம் நடக்கிறது. காங்கிரஸ் / காங்கிரஸ்காரர்கள் / சோனியா இந்த அளவிற்கு ஒத்துப் போகும்போதே, அவர்களை எதிர்த்து கோஷம் போடுகிறார்கள், கலவரம் நடத்துகிறார்கள் என்றால், இதற்கும் மேலாக, அவர்களுக்கு என்ன வேண்டும்?
[நேற்றையக் கட்டுரையின்[26] தொடர்ச்சி, விரிவாக்கம்]
© வேதபிரகாஷ்
12-08-2012
[2] Nehru Nagar, originally an area cordoned off for leprosy sufferers, is the only slum area in Vile Parle, Mumbai – a suburb near to the airport and train station. Now, eying on property appreciation, the builders have been constructing multi-storeyed flats offering to the slum dwellers. Thus, slum-dwellers becoming flat-owners, but creating new slums – a cycle that is perpetrated by the vested interested people. The builders, promoters and corporators have always been colluding with each other encouraging communal politics.
[4] At the protest meet, there was enough to raise passions. Many speakers spoke of teaching the Congress a lesson for not doing enough to save Muslims in Assam as others slammed prime minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi. A couple of men from Burmacarried small kids on their shoulders who held placards that said ‘Don’t kill us’.
[6] இதை பி.ஜே.பி போன்ற கட்சிகள் மட்டுமல்லாது, உள்ளூர் அசாம் கட்சிகளே எடுத்துக் காட்டியுள்ளன. உண்மையில், நிவாரண கூடாரங்களில் உள்ளவர்களை பாகுபடுத்திப் பார்த்து, உதவி செய்து வருவதே மதரீதியிலான சண்டை வர காரணமாகிறது. முஸ்லீம்கள் தெரிந்தும், போட்டிப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களுக்கு மட்டும் உதவி வருகிறார்கள். போடோ இனத்த்வர் என்று பேசும்போது, அதில் கூட முஸ்லீம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரிந்து தனிக் கட்சி / இயக்கம் ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவ் வந்துள்ள முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு, அதேபோல தனி மாகாணத்தைக் கேட்டு வருகிறார்கள். இங்குதான், பிரிவினைப் பிரச்சினை முஸ்லீம் என்ற ரீதியில் வருகிறது. மேலும் இவர்களுக்குத்தான் பாகிஸ்தான் உதவி வருகிறது.
[14] “Only when we do some tamasha [spectacle] do the media land up to cover,” said a protester who refused to give his name.
[22] Prashant Sawant, photographer with the daily Sakaal Times was on the fateful assignment.
“I, along with fellow photographers, started to shoot when the rally started. But we sensed something was wrong when a couple of persons remarked that the press was not supporting them,” Mr. Sawant told The Hindu. “We left the rally and went to the terrace of the Mumbai Marathi Patrakar Sangh adjoining the Maidan. However, some saw us and started throwing stones. We then went to the Press Club and came out again when the arson started. It was then that the mob started to assault me. They showered me with blows. My camera was broken. They were shouting ‘Isko bhi jala dalo’ [Set him on fire too]. I sustained injuries on the head, neck and face. The doctors have told me to do an MRI scan,” he said. “Provocative speeches against the media started from the stage itself,” said Ameya Kherade, another photographer. “The crowd was shouting ‘Media ko bhaga do’ [Chase away the media],” he added.
http://www.thehindu.com/news/national/article3754980.ece
பிரிவுகள்: ஃபத்வா, அசாம், அச்சம், அடி உதை, அடிப்படைவாதம், அடையாளம், அத்வானி, அரசாங்கத்தை மிரட்டல், அரசியல் விபச்சாரம், அரசு நிதி, அலி, அல்லா, அழுக்கு, இட ஒதுக்கீடு, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்துக்கள், இமாம், இஸ்லாம், உருது மொழி, உள்ளே நுழைவது, ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், கிழக்கு பாகிஸ்தான், குரூரம், குல்லா, கூட்டணி, சரீயத், சரீயத் சட்டம், சிட்டகாங், சுன்னி, சுன்னி சட்ட போர்ட், சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, செக்யூலார் அரசாங்கம், ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தடியடி, தடை, துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, தூண்டு, தேச கொடி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், பிஜேபி, மதவாதம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் லீக், முஸ்லீம்தனம், முஹம்மது, வங்காள தேசம், வங்காள மொழி, ஷியா, SMS
Tags: ஃபத்வா, அசாம், அடிதடி, அவமதிக்கும் இஸ்லாம், ஆஜாத் மைதானம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கலவரம், காஷ்மீரம், கௌஹாத்தி, சிறுபான்மையினர், சுன்னி, செக்யூலரிஸம், ஜிஹாத், தள்ளுமுள்ளு, பர்மா, பாகிஸ்தான், பிரார்த்தனை, போடோ, மியன்மார், மும்பை, முல்லா, முஸ்லீம்கள், மேடை, மௌலானால், Burma, fanaticism, foreign, fundamentalism, riot, SMs
Comments: 13 பின்னூட்டங்கள்
ஒக்ரோபர் 20, 2010
இது இந்தியத்தனமா, முஸ்லீம்தனமா, ஜிஹாதித்தனமா?
“காஷ்மீரம் இந்தியாவுடன் ஒப்புக்கொண்டு சேர்ந்துள்ளதே தவிர முழுவதுமாக இணைந்துவிடவில்லை”, என்று சொல்லியும் ஆளும் காங்கிரஸ் கூட்டணியர் அமைதியாக இருக்கும் வேளையில் காஷ்மீர இந்துக்கள் கேட்டதால், விழிந்து கொண்டனர் போலும்!
ஆமாம், தூங்கிக் கொண்டிருந்த சோனியாவை வைத்து சொல்ல வைக்கின்றனர், “காஷ்மீர் நிச்சயமாக விசேஷ அந்தஸ்துள்ள இந்தியாவின் ஒருமித்தப் பகுதிதான்”, என்று!
அதாவது இந்தியர்களுக்கு நாட்டுப் பற்று அந்த அளவிற்கு உள்ளது!
ஜிஹாத் பயங்கர-தீவிரவாதமும் முஸ்லீம் பெண்களும்: ஒருபக்கம் முஸ்லீம் பெண்கள் ஜிஹாதித்தனத்தைப் பற்றி கவலையுடன் இருக்கிறார்கள். மனைவியாக இருந்தாலும், தனது கணவனின் (சையத் தாவூத் ஜிலானி) ஜிஹாதித்தனத்தை பற்றி எச்சரித்துரைத்துள்ளதாக புகார் கூறுக்கின்றனர் முஸ்லீம் பெண்கள். கசாப்பின் தாயார், அவன் தன்னுடைய மகனே இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டுள்ளாள்.

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா
காஷ்மீர கல்லடி ஜிஹாதி பெண்களும், ஃபிதாயின் பெண்களும்: மறுபக்கமோ, காஷ்மீர மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் தெருக்களில் வந்து கல்லடிப்பதை பெருமையாக விளம்பரப்படுத்துகின்றனர். முன்னர் தற்கொலைக் குண்டுகளாக செயல்பட்ட பெண்கள்ம் இப்பொழுது கல்லடிக்க ஆரம்பித்துள்ளனர். “இந்தியாவே திரும்பப்போ” என்று வாசகங்களை எழுதுகின்றனறாம்! இதுதான் இந்திய நாட்டுப்பற்றா? பிறகு, இவர்கள் தங்கள்து குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தருவார்கள்?
உச்சநீதி மன்றத்திற்கு செல்வோம் என்று சமந்தப்பட்டவர்கள் தீர்மானித்த பிறகு, உயர்நீதி மன்றத்தை முற்றுகையிடப் போகிறோம் என்றால்…: இங்கு தமிழ்நாட்டில், பாபர் வழக்குத் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிடப் போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் முஸ்லீம் பெண்கள் கலந்து கொண்டுள்ளர்கள் என்று புகைப்படம் வெளியிடுகிறார்கள்! அங்கோ சமந்தப்பட்டவர்கள், உச்சநீதி மன்றத்திற்குச் செல்வோம் என்று தீர்மானித்து விட்டனர். பிறகு சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிடப் போகிறேன் என்றால் என்ன அர்த்தம்?

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா
முஸ்லீம் பெண்களை வைத்துக் கொண்டு, போராட்டங்களில் இடுபடுத்தி, ஏதோ அவர்கள் எல்லாம் கூட தாங்கமுடியாமல் தெருக்களில் வந்து விட்டன என்றுக் கட்டிக் கொள்வதைப் போல உள்ளது. ஆனால், அதன் பின்னே ஜிஹாதித்தனம் மத அடிப்படைவாதம் போர்வையில் வளர்ந்து, வளர்த்து வருவதைப் பார்க்கலாம்.
இது இந்தியத்தனமா, முஸ்லீம்தனமா, ஜிஹாதித்தனமா?
ஜெய் ஹிந்தா, இல்லையா?
பிரிவுகள்: இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், ஜிஹாதித்தனம், ஜிஹாத் தன்மை, நாட்டுப் பற்று, முஸ்லீம் தன்மை, முஸ்லீம்தனம்
Tags: இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், ஜிஹாதித்தனம், ஜிஹாத் தன்மை, நாட்டுப் பற்று, முஸ்லீம் தன்மை, முஸ்லீம்தனம்
Comments: 17 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்