Archive for the ‘முஸ்லிம் அடிப்படைவாதம்’ category

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மே 30, 2023

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்ற போது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மருத்துவர் மீது ஏதாவது நடவடிக்கை உண்டா?: அப்போதுபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரோ அவரை இதுவரை கைது செய்யவில்லை என்றும் மருத்துவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு மருத்துவகுழுமூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். ஆனால், இன்னொரு பக்கம் தலைமறைவாக இருந்தவரை, தேடி பிடித்து கைது செய்தனர் என்றுள்ளது. அதே நேரத்தில் அந்த மருத்துவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை.  இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார் என்றும் உள்ளது.

முஸ்லிம் தலைவர், முஸ்லிம் போன்றே அறிக்கை விட்டுள்ளது: “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்[1]. இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்[2], ”நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்த முஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம் தெரியவருகிறது. இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த முஸ்லிம் பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஜவாஹிருல்லா கூறியது:ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியில் நிலவிவரும் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்[3]. சீமானும் இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார்[4].

சீமானின் இஸ்லாம் அதரவு அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஜன்னத்தை ஹிஜாப் விவகாரத்தில் மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு போக்குடன் செயல்படுவதாகவும் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பான சீமான் அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச்சகோதரி ஜன்னத் அவர்களை கடந்த 24 ஆம் நாள் இரவுநேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரபிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதவெறியர்களின் மனிதவெறுப்புச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், அதற்கு துணைபோகும் திமுக அரசின் ஆர்எஸ்எஸ் ஆதரவுப்போக்கு வன்மையான கண்டத்திற்குரியது. உணவு, உடை, வழிபாடு உள்ளிட்டவை அடிப்படை தனிமனித உரிமையாகும். அதில் தலையிடுவதென்வது அருவறுக்கத்தக்க மனித வெறுப்பின் உச்சமாகும். வட இந்தியாவிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மட்டுமே நிகழ்ந்த அத்தகைய மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது.

லிஸ்ட் போட்டு ஆதரவு கொடுக்கும் சீமான்[5]:

  • என்ஐஏ கொடுஞ்சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது,
  • நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது,
  • ஆர்எஸ்எஸ் சாகா வகுப்புகளை அனுமதித்தது,
  • பாஜகவின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த துடிப்பது,
  • இசுலாமியர் மீதான வெறுப்பை விதைக்கும் திரைப்படங்களுக்கு பாதுகாப்பளிப்பது,
  • மாட்டுக்கறி உணவிற்கு தடைவிதிப்பது

என்று இசுலாமியர்களுக்கு எதிராக திமுக அரசு மேற்கொண்டுவரும் பச்சைத் துரோகச்செயல்களின் தொடர்ச்சியே, ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டும் அளவிற்கு மிக மோசமான நிலையை தமிழ்நாடு எட்டுவதற்கு முக்கிய காரணமாகும். இந்துத்துவத்திற்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் பினாமி அரசாகவே திமுக அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு அலுவலரை கொலை செய்தது, அரசு மருத்துமனைக்குள் புகுந்து அரசு மருத்துவரை மிரட்டுவதென தொடரும் சமூக விரோதிகளின் வன்முறை வெறியாட்டங்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. ஆகவே, அடிப்படை மனித உரிமைக்கு எதிராக மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராமிற்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்[6].

29-05-2023 ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: 29-05-2023 அன்று, ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்’ அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பாரத் இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது[7]. அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், தலைமைச் செயலர் இறையன்புவிடம் அளித்துள்ள மனுவில் இதனை வலியுறுத்தியுள்ளார்[8]. மருத்துவ மனை, நொயாளி, நள்ளிரவில் சிகிச்சைக்கு வந்தது, நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தது, முதலியவற்றைப் பற்றி எந்த விவரங்களையும் எந்த ஊடகமும் கொடுக்கவில்லை. சிகிச்சை பலனின்றி இறந்தார் என்றுள்ளது. குறிப்பிட்ட மருத்துவர் சண்டை போடுவதிலும், வீடியோ எடுப்பதிலும், அதனை உடனடியாக யாருக்கோ அனுப்புவதிலும் தான் மும்முறமாக இருந்தது தெரிகிறது. பிறகு, ஆவண தோரணையுடன், கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு செல்போனில் பார்த்துக் கொண்டிருக்கிறார். மருத்துவர் போன்றே கணப்படவில்லை.

© வேதபிரகாஷ்

30-05-2023


[1] தமிழ்.இந்து, ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபர் மீது சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா வலியுறுத்தல், செய்திப்பிரிவு, Published : 26 May 2023 02:44 PM, Last Updated : 26 May 2023 02:44 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/996833-threatening-doctor-wearing-hijab-should-be-punished-according-to-law-jawahirullah.html

[3] தமிழ்.இந்துஸ்தான் டைம்ஸ், Hijab: ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல், Pandeeswari Gurusamy, 27 May 2023, 16:55 IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/seeman-insists-that-the-bjp-executive-who-threatened-the-doctor-not-to-wear-hijab-should-be-severely-punished-131685186096080.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஹிஜாப் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். ஆதரவுப் போக்கில் திமுக அரசு.. 6 பாயிண்டுகளை முன்வைக்கும் சீமான்!, By Mathivanan Maran Updated: Saturday, May 27, 2023, 11:21 [IST]

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/hijab-row-seeman-blames-dmk-govt-support-to-rss-513636.html?story=1

[7] தினமலர், பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க மனு, பதிவு செய்த நாள்: மே 30,2023 03:59

[8] https://m.dinamalar.com/detail.php?id=3334072

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர்நீதி மன்றம் உத்தரவு (2)

திசெம்பர் 4, 2022

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (2)

மதம் மாறியவர் வெறும் முஸ்லிமா, லெப்பை முஸ்லிமா?:  நீதிமன்றமும் மற்றொரு கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகியது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர் அல்லது முஸ்லிம் சமூகமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்படவில்லை[1]. முஸ்லீம் சமூகத்தில் உள்ள 7 குழுக்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளன, அவர்களில் லெப்பைகளும் அடங்கும். மனுதாரரின் மதமாற்றம் குறித்து காஜி வழங்கிய சான்றிதழில், அவர் முஸ்லிம்களின் லெப்பை குழுவாக மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை[2]. மனுதாரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்று தான் கூறுகிறது. அதனால், மதம் மாறிய தன்னை பிசி முஸ்லிமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்[3]. இனி தீர்ப்பில் உள்ள கடைசி முக்கியமான பத்திகளை கவனிப்போம்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கை: 12. பிரச்சினையை இன்னொரு கோணத்தில் அணுகலாம். தமிழகத்தில் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கையின் படி, பின்வருவனவற்றின் பின்தங்கிய வகுப்பினரின் (முஸ்லிம்கள்) பட்டியலை மட்டும் பட்டியல்படுத்துகிறது:

“1. Ansar – அன்சார்,

2. Dekkani Muslims  – தெக்கானி முஸ்லிம்கள் [தக்காண முஸ்லிம்கள்],

3. Dudekula – துதேகுல,

4. Labbais including Rowthar and Marakayar (whether their spoken language is Tamil or Urdu)- ரவுத்தர் உட்பட லப்பைகள் மற்றும் மரக்காயர் (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது),

5. Mappilla – மாப்பிள்ள [குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள்],

6. Sheikh – ஷேக்,

7. Syed – சையத்.”

இவர்களை முஸ்லிம்கள் பிரிவுகள், சமூக அடுக்குகள், கட்டமைப்புகள் அல்லது ஜாதிகள் என்று எப்படி கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஜாதியில்லை என்றால், இந்த ஏழு குழுக்களும் மாறி, அல்லது மாற்றம் பெற முடியுமா என்றும் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜி.மைக்கேல் தீர்ப்பு [Kailash Sonkar v. Maya Devi (1984) 2 SCC 91 and G.Michael v. S.Venkateswaran [1952 (1) MLJ 239]: எப்பொழுது ஒரு இந்து இஸ்லாத்திற்கு மாறும்போது, அவன் ஒரு முசல்மான் ஆகிறான், அவனுடைய இடம்முஸ்லீம் சமூகம் அவருக்கு முன் எந்த சாதியை சார்ந்தது என்பதை வைத்து தீர்மானிக்கப்படவில்லை, படுவதில்லை. காஜியே அதமாற்றம் அடைந்தவர். மாற்றியவர் ப்படி இருக்க வேண்டும் என்று அறிவிக்காதபோது, மதச்சார்பற்ற அரசாங்கத்தின் வருவாய் அதிகாரி எப்படி, அவரை “லெப்பை” என்று அடையாளம் கண்டு, தீர்மானித்து, இஸ்ல்லாம் என்ற கூண்டுக்குள் அடைக்கிறார் என்று தெரியவில்லை. இது எனக்கும் புரியவில்லை.

எஸ்.ருஹய்யா பேகம் வழக்கு [S.Ruhaiyah Begum vs The Government Of Tamil Nadu (WPNo.2972 of 2013 dated 19.02.2013)]: .எஸ்.ருஹய்யா பேகத்தைப் போல ஒரு இந்து “மற்ற வகையை” சேர்ந்தவர்கள் என்ற பக்குப்பிலிருந்து, இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு தம்முடைய நிலையை சாமர்த்தியமாக நிர்வகிக்கிறார்கள் அவர் அல்லது அவள் மேற்கூறிய அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரைச் சேர்ந்தவர் என்பது போன்ற சான்றிதழைப் பெறவும் இத்தகைய புத்திசாலித்தனத்தால் செய்கிறார் என்றால், சமூக நீதியின் நோக்கமே அதனால் தோற்கடிக்கப்படும் உத்திகள். நன்கு கற்றறிந்த மூத்த வழக்குரைஞர், மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டுமே மதமாற்றத்திற்கு முன்பே இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகிறார். பின்னர் தனியாக அவர் பிசி (முஸ்லிம்) என்று கருதலாம். எஸ்.ருஹய்யாவில் நடைபெற்றது என்று வாதித்தால், அந்த முயற்சியை அரசு மட்டுமே மேற்கொள்ள வேண்டும், தீர்மானிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலையில் உள்ள வழக்கு: “13. எஸ்.யாஸ்மின் வழக்கில் கவனிக்கப்பட்டபடி, மதமாற்றத்திற்குப் பிறகும் பிறந்த சமூகம் [ஜாதி போன்றவற்றை] ஒரு நபர் தனது சுமந்து செல்ல முடியாது. மதமாற்றத்திற்குப் பிறகும் அப்படிப்பட்ட நிலை இருக்க வேண்டுமா, இடஒதுக்கீட்டின் பலன் கொடுக்கப்பட வேண்டுமா என எழுப்பிய  கேள்வி, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் உன்பு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. மாண்புமிகு சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை கைப்பற்றியுள்ளபோது, இந்த நீதிமன்றத்தை எந்த கருத்தையும் சொல்ல முடியாது. இந்த காரணத்திற்காக, மனுதாரரின் கோரிக்கை. நான் வற்புறுத்தினாலும் ஏற்ல முடியாது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய முன்மாதிரிகளும் அவ்வாறே, வரும் திர்ப்புக்குக் கட்டுப்பட்டது. ஆகவே, இரண்டாவது பிரதிவாதி ஆணைக்குழுவின் நிலைப்பாடு சரியானது, அதில்எந்த குறுக்கீடும் எய்ய முடியாது, அது  தேவையற்றதும் ஆகும்”.

இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்இடவொதிக்கீடுமுதலிய அரசியல்வாதிகளின் சலுகைகள்: மதம் மாறிவர்களுக்கு இடவொதிக்கீடு கொடுக்க அரசியல்வாதிகள் பலமுறைகளை கையாண்டு வருகிறார்கள். அவை தான், சட்டங்கள், தீர்ப்புகள், நீதிகள், வரையறைகள் என்று எல்லாவற்றையும் மீறி செயல்பட முயற்சித்து பிரச்சினைகளை உண்டாக்குகின்றனர். “இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்-இடவொதிக்கீடு” என்ற போர்வைகளில் மாநில அரசுகள் முஸ்லிம்களைக் குறிப்பாக தாஜா செய்து, “ஓட்டு வங்கி,” மற்றும் எல்லைகள் கடந்த பொருளாதார ஆதாயங்களைப் பெற “ரிசர்வேஷன்” சலுகைகளைக் கொடுத்து வருகிறார்கள். உண்மையில் அம்மதங்கள், அவர்கள் மதங்கள் அத்தகைய பாகுபாடுகள் கொண்டிருக்கவில்லை, 100% சமத்துவம், சகோதரத்துவம், சமவுரிமைகள் என்றெல்லாம் கொண்டிருக்கின்றன என்றால், மண்டல் கமிஷன் தீர்ப்பு, சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகள்  எல்லாம் பொய், தவறு, தங்களது பைபிள் / குரான் –க்ளுக்கு எதிரானவை, ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்திருக்க வேண்டும். ஆர்பாட்டம்-போராட்டம் செய்து, மாற்றியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ஜாதிகள் உண்டு என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள், புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறர்கள்.

முரண்பாட்டுடன் இறையியல் சித்தாந்தம் இருக்க முடியாது: கிருத்துவர்கள் லாப-நஷ்ட கணக்குப் போட்டு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் தீர்ப்பு-ஆதரவு, ஆசை-பேராசை போன்றவற்றால் தவிக்கிறார்கள். கிருத்துவர்களைப் போலவே, நீதிமன்றங்களில் சோதனை செய்து பார்க்கிறார்கள். ஆனால், இறையியல் விவகாரங்கள் வெளிவரும் போது, மறைக்கப் பார்க்கிறார்கள். வழக்கம் போல, இந்து மதம், சனாதனம் என்றெல்லாம் பேசி, திசைத் திருப்பப் பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை, பிற மதங்களைச் சேர்ந்த முஸ்லீம்கள் ‘மற்றவர்கள்’ என்ற பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவதால், அவர்கள் இடஒதுக்கீட்டை இழக்கின்றனர்[4]. கிறிஸ்தவ மதத்திற்கு மாறுபவர்கள் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக’ (மதமாற்றத்திற்கு முன் அவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) கருதப்பட்டாலும், மதம் மாறிய முஸ்லீம்களின் விஷயத்தில், ஒரு நபர் முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவை ‘மற்றவை’ என மட்டுமே வகைப்படுத்தப்படுகின்றன, போன்ற கருத்துகள் ஏற்கெனவே வைக்கப் பட்டுள்ளன[5].

சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர்: இந்திய அரசியலமைப்பில், OBC கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினராக (SEBC) விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய அரசாங்கம் அவர்களின் சமூக மற்றும் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது – எடுத்துக்காட்டாக, OBC கள் மேல் கல்வி மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு அதற்கு கொடுக்கப் படுகிறது.  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது கல்வி அல்லது சமூகத்தில் பின்தங்கிய சாதிகளை வகைப்படுத்த இந்திய அரசால் பயன்படுத்தப்படும் ஒரு கூட்டுச் சொல்லாகும். பொது சாதிகள், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி மற்றும் எஸ்டி) ஆகியவற்றுடன் இந்தியாவின் மக்கள்தொகையின் பல அதிகாரப்பூர்வ வகைப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டின் மண்டல் கமிஷன் அறிக்கையின்படி OBC கள் நாட்டின் மக்கள்தொகையில் 52% என்று கண்டறியப்பட்டது, மேலும் 2006 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு நடைபெற்ற போது 41% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் OBC களின் சரியான எண்ணிக்கையில் கணிசமான விவாதம் உள்ளது; இது பொதுவாக கணிசமானதாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் மண்டல் கமிஷன் அல்லது தேசிய மாதிரி கணக்கெடுப்பு மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்களை விட இது அதிகம் என்று பலர் நம்புகிறார்கள்.

பொருளாதார ரீயில் பின்தங்கிய வகுப்பினர்: ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடிமக்கள் மற்றும் பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBCs). இப்பொழுது, இந்தியாவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) என்பது குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கும் (US$10,000) குறைவாக உள்ளவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள SC/ST/OBC போன்ற எந்த வகையிலும் சேராதவர்கள் அல்லது தமிழில் MBC அல்லாதவர்களின் துணைப்பிரிவாகும்.  இப்பொழுது, இப்படியெல்லாம் பிரிக்கப் படும் நிலையில், மதம் போன்ற காரணிகளும் நுழையுமா, நுழைக்கப் படுமா, அல்லது செக்யூலரிஸ கொள்கை பின்பற்ரப் படுமா என்று கவனித்துப் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

02-12-2022 


[1] Live Law, One Can’t Carry His Caste After Conversion’: Madras High Court Rejects Backward Quota Claim Of Man Who Converted To Islam From Hinduism, Upasana Sajeev, ‘3 Dec 2022 9:31 AM.

[2] https://www.livelaw.in/news-updates/madras-high-court-a-person-cannot-carry-his-community-of-birth-even-after-conversion-rejects-backward-class-reservation-of-man-215673

[3] Case Title: U Akbar Ali v The State of Tamil Nadu and another Citation: 2022 LiveLaw (Mad) 492 Case No: WP (MD)No.1019 of 2022.

[4] The Hindu,‘Converted Muslims losing out on reservation in TNPSC jobs’- The same rule does not apply to converted Christians, says a former judge, T.K. ROHIT, – CHENNAI, March 27, 2022 10:50 pm | Updated March 28, 2022 07:48 am IST

[5] Muslims who have converted from other religions are losing out on the reservation for the Backward Class Muslims in Tamil Nadu Public Service Commission (TNPSC) jobs as they are treated as belonging to the category of ‘Others’. While those converting to Christianity are treated as belonging to the ‘Backward Classes’ (even if they belonged to the Scheduled Caste before conversion), in the case of converted Muslims, even if a person originally belonged to the Backward Class or Most Backward Class, they are only classified as ‘Others’.

https://www.thehindu.com/incoming/converted-muslims-losing-out-on-reservation-in-tnpsc-jobs/article65265386.ece

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? உளவியல் ஆலோசனை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அடங்குமா? (3)

நவம்பர் 7, 2022

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? உளவியல் ஆலோசனை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அடங்குமா? (3)

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதம் எவ்வாறு வளர்க்கப் படுகின்றன?: அத்தகைய போதனைகள், சின்னங்கள் மற்றும் வேறுபாடுகள் மூலம், சாதாரண தினசரி வாழ்க்கையினையே நடத்த முடியாமல் செய்து, மக்களை அஞ்சி நடுங்க வைத்து கட்டுப் படுத்தி வைக்கும் நிலையாகும். இறுதியாக யதேச்சதிகார, சர்வாதிகார. பாசிஸ, நாசிஸ அடக்குமுறைகள் மூலம் அரசாளும் நிலைக்குக் கொண்டு செல்ல போடும் திட்டமாகும். இதற்கு, பெரும்பாலும், மதம், மதநூல்கள், அவற்றில் குறிப்பிட்டுள்ள வாசகங்களை ஆணைகளாக ஏற்றுக் கொண்டு நடந்து கொள்வதும் தீவிரவாதம் ஆகிறது. அவற்றின் மூலம், எதிர்ப்பவர்களை மிகக் கொடுமையான மத தண்டனைகள் மூலம் சித்திரவதை, குரூரமாக கொல்லுதல், அவற்றை படங்கள், வீடியோக்களாக எடுத்துப் பரப்புதல், பார்ப்பவர்களுக்கு, “எங்களை எதிர்த்தால், உங்களுக்கும் இதே நிலை ஏற்படும்,” என்று பயமுருத்தல் முதலியனவும் அடங்கும்.  அவர்கள் குறிப்பிட்ட சொற்கள், சின்னங்கள், குறியீடுகளை அடையாளங்களாக பயன்படுத்துவதால், அந்தந்த சித்தாந்தம், மதநம்பிக்கை மற்றும் தீவிரவாத சார்பு, ஆதரவு, பரிவு, உணர்வு, கொண்ட மக்களும் உதவுவது உண்டு. இதனால், அவர்களுக்கு பலவழிகளில் உதவிகளும் கிடைத்து வருகின்றன.

பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத அழிப்பு முறைகள் யாவை?: பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதங்கள் செயல்படும் போது, அதற்கு எதிராக மக்களை பாதுகாக்க வழிமுறைகளையும் கையாள வேண்டியுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு (தீவிரவாத எதிர்ப்பு என்றும் முதலியன), இது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அல்லது ஒழிக்க அரசாங்கங்கள், சட்ட அமலாக்கம், வணிகம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்தும் நடைமுறைகள், இராணுவ தந்திரங்கள், நுட்பங்கள் மற்றும் உத்திகளை உள்ளடக்கியது. பயங்கரவாத எதிர்ப்பு என்பது பயங்கரவாதிகளை ஒழுங்குபடுத்தி, மனங்களில் பதிந்துள்ள தீவிரவாதங்களை நீக்கி, நடுநிலையாக்குவதற்கும் முடிவாக கைப்பற்றுவதற்கும் எடுக்கப் படும் முயற்சிக்கள் ஆகும். தேசிய சக்தியின் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உந்துதல், அவர்கள் வைத்திருக்கும் இந்த அமைப்புக்கள் மற்றும் இந்த நெட்வொர்க்குகள் அவர்களை அட்டுப்படுப்படுத்டும் பயத்தை ஏற்படுத்துவதற்கும், அரசாங்கத்தை அல்லது குடிமக்களை அவ்வாறே தீவிரவாதிகளுக்குத் துணை போகாமல் இருக்க வற்புறுத்துவதற்கும் ஏற்கொள்ளும் வழிமுறைகள் ஆகும்.

முன்னரே அறிந்து நிகழாமல் தடுக்க செயல்பட வேண்டும்: இந்த பயங்கரவாதிகளின் இலக்குகளுக்கு ஏற்ப, அவற்றை முன்னரே அறிந்து நிகழாமல் தடுக்க செயல்பட வேண்டும். அத்தகைய அடிப்படைவாத எண்ணங்களிடன் பேசி, எழுதி வரும், கூட்டங்கள் சேர்க்கும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப் படவேண்டும். தடை செய்யப் பட்ட இயக்கங்கள், அவற்றின் உறுப்பினர்கள் கூட தொடர்பு வைத்திருப்பது என்பது சாதாரண விசயம். தகவல் கொடுப்போர், இத்தகைய ஆட்களைப் பற்றி ரகசியமாக விவரங்கள் தரும் நபர்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். விவரஙளையும் சரிபார்த்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தின் வரையறைகள் பரந்த கிளர்ச்சி, கலவரம், அழிவை உண்டாக்கும் போக்கின் ஒரு பகுதியாக இருந்தால், பயங்கரவாத எதிர்ப்பு கிளர்ச்சிக்கு எதிரான துரிதமாக தகுந்த நடவடிக்கைகளைப் பயன்படுத்தலாம். ஆயுதப் படைகள் வெளிநாட்டு உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற வார்த்தையை கிளர்ச்சி, சட்டமின்மை அல்லது நாசத்தை அடக்குவதற்கு அல்லது தேசிய பாதுகாப்புக்கு இந்த அச்சுறுத்தல்கள் உருவாகக்கூடிய நிலைமைகளைக் குறைக்கும் முயற்சிகளில் மற்ற நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றன..

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, செயல்முறை ஆரம்பம்: அயர்லாந்து தனிநாடாக இருக்க வேண்டு என்று, ஐரிஸ் ரிபளிக் பார்ட்டி என்ற அமைப்பு போராடி வருகிறது. அது, இதுவரை உருவாக்கப்பட்ட முதல் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு பெருநகர காவல்துறையின் சிறப்பு ஐரிஷ் கிளை ஆகும், பின்னர் அது ஃபெனியன் பயங்கரவாதத்தின்[1] மீதான அதன் நோக்கத்தைத் தாண்டி அதன் நோக்கத்தை விரிவுபடுத்திய பின்னர் சிறப்புப் பிரிவு என்று மறுபெயரிடப்பட்டது. சட்ட அமலாக்க முகவர் இங்கிலாந்திலும் பிற இடங்களிலும் இதே போன்ற பிரிவுகளை நிறுவினர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் விரிவடைந்தன. குறிப்பாக, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, மேற்கத்திய அரசாங்கங்கள் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்தன, இதில் அதிக வெளிநாட்டு ஒத்துழைப்பு, சிவப்பு அணிகளை உள்ளடக்கிய மாற்றும் தந்திரங்கள், மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். வளர்ந்த நாடுகளில் பரபரப்பான தாக்குதல்கள் ஊடக கவனத்தைப் பெற்றாலும், பெரும்பாலான பயங்கரவாதம் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் நிகழ்கிறது. பயங்கரவாதத்திற்கு அரசாங்கத்தின் பதில்கள், சில சந்தர்ப்பங்களில், கணிசமான எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்

வேதபிரகாஷ்

07-11-2022


[1] The word Fenian served as an umbrella term for the Irish Republican Brotherhood (IRB) and their affiliate in the United States, the Fenian Brotherhood, secret political organisations in the late 19th and early 20th centuries dedicated to the establishment of an independent Irish Republic.

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

எஸ்.., உட்பட 27 பேருக்கு வெகுமதி: கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், சதிச்செயலுக்கு திட்டமிட்ட ஜமேஷா முபீன் பலியானார். வழக்கு விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய, 27 பேருக்கு, நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்[1], என்று ஊடகங்கள் கூருகின்றன.. சம்பவம் நடந்த நாளன்று, உக்கடம் எஸ்.ஐ., செல்வராஜன், ஏட்டு தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர், மூத்த புகைப்படக் கலைஞர் ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு விருது வழங்கப்பட்டது[2]. இந்த பட்டியலில் உள்ளவர்கள் உளவுப்பிரிவு சைபர் கிரைம் சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது[3]. அதன் காரணமாகவே, ஜமேஷா முபீன், காரில் தொடர்ந்து செல்ல வாய்ப்பின்றி போயிருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பெரியளவில் ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்க உதவியதாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ் .ஐ., ஏட்டு, காவலருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கப்பட்டது.

பந்தை குறிவைப்பது அரசியலாகிறது: வரும், 31ம் தேதி கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த்தை முன்னிட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், வாகன போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்துக்கும் எந்தவித குறைபாடும் நேராமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக பொறுப்புடன் வேலை செய்த போலீஸாரை எல்லோருமே பாராட்ட வேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். இங்கு கூட, அந்த குண்டுவெடிப்பு செயல் அரைகுறையாக முடிந்ததால், யார் நடத்த வேண்டும் என்று நினைத்தானோ, அவன் மட்டும் பலியாகியுள்ளான் என்பது நோக்கத் தக்கது.

மத்திய உளவுத்துறையும், தமிழக போலீஸாரும்: தென்னிந்தியாவில், தீவிரவாதம் பரவி, சிறந்த முறையில், தொழிற்நுட்பத்துடன், பாண்டித்தியத்துடன் நடந்து கொன்டிருப்பதால், வழக்குகள் தொடர்ந்து நடந்து கொன்டிருக்கின்றன. மேலும், அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் இதர பணப் போக்குவரத்து, சட்டமீறல் போக்குவரத்துகளுடன் திறமையாக செயல் பட்டு வருவதால், வழக்குகளும் இழுத்தப் படுகின்றன. இதனால் தான், காவல்துறை இந்த தகவலை தெரிந்தவுடன், பாதுகாப்பை உஷார் செய்தவுடன், இவர் திடீரென மாயமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[4]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[5]. தேசிய புலனாய்வு முகமை 2019ம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது. தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும், அதில் இவர் இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது[6]. இதனை தமிழக அரசு எப்படி கோட்டைவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது[7]. சம்பவம் நடந்த பிறகு தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் சரியாக பொதுமக்களிடையே சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பட்டியலில் 89 ஆவது நபராக ஜமேஷா முஃபின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமயமாக்கப் படும் தீவிரவாதம்: திமுக ஆட்சியில்லாமே “பாஸ்ட் ஃபுட்” ரேஞ்சில், வேகத்தில், அதிரடியாகத்தான் நடக்கும் போலிருக்கிறது. கார் காஸ் சிலிண்டர் விபத்து, தீவிரவாத கார் காஸ் சிலிண்டர் வெடிப்பாகி, கார் குண்டு வெடிப்பாகியுள்ள நிலையில், அமைதிகாத்த திராவிடிய ஸ்டாக் முதலமைச்சர், திடீஎன்று கூட்டம் கூடி, இந்த விபத்து வழக்கை என்.ஐ.ஏ.க்கு ஒப்படைக்க அறிவித்து விட்டார். போலீஸ் துறைக்கும் அவர் பொறுப்பேற்றுள்ளதால், இவ்வழக்கின் பாரத்தை, தீவிரவாதத்தை அறிந்து, மாற்றி விட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாது, சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்கப் பட்டு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது. கோவையில் புதியதாக மூன்று காவல் நிலையங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. டிவி செனல்களிலேயே வாதவிவாதங்கள் படுஜோர். பேச்சாளர்கள், நேரிடையாக அரசியலாக்கி, அரசியல் மயமாக்கி, திராவிட மாடலா- குஜராத் மாடலா ரேஞ்சில் இறங்கி விட்டனர். திமுக-பிஜேபி நேரிடையாக இந்த மோதலில் ஈடுபட்டுள்ளன எனலாம்.


தமிழகத்தில் முதன்முதலாக என்... செய்துள்ள வழக்கு: முதன்முதலாக என்.ஐ.ஏ. ஏஜென்சி சென்னையில் அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போலீஸ் நிலையத்திற்கு சமமாகும். இது போன்ற மற்ற நிறுவனங்கள் இதனுடன் சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை சமூக, பொருளாதார, மற்றவற்றை பெரிதும் பாதிப்பதால், இது மனித வாழ்க்கைக்கு எதிராக செயல்படுகிறது. மேலும், எல்லைகளைக் கடந்து, இவை செயல் படுவதால், மற்ற நாடுகளும் இவற்றை கடுமையாக எதிர்க்கிறார்கள். பதிவு செய்துள்ள இந்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும், எனும் நிலையில், இத்தகைய கும்பல்கள் வேறருக்கப் பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] தினமலர், எஸ்.., உட்பட 27 பேருக்கு வெகுமதி, Added : அக் 28, 2022 04:31..

https://www.dinamalar.com/news_detail.asp?id=3156201 – :~:text=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%2C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1% E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு விவகாரம்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!!, Narendran S, First Published Oct 27, 2022, 6:00 PM IST, Last Updated Oct 27, 2022, 8:42 PM IST.

[3] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/dgp-praises-the-policemens-for-their-excellent-work-in-covai-car-blast-case-rkew2t

[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[5] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

[6] நியூஸ்.4.தமிழ், கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!, Sakthi by SAKTHI October 28, 2022

[7] https://www.news4tamil.com/coimbatore-car-bombing-incident-tamil-nadu-police-ignored-the-central-intelligence-agencys-warning/

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

26-10-2022 (புதன் கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.

 இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

27-10-2022 (வியாழன் கிழமை):  தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-10-2022 (வெள்ளிக் கிழமை):  கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].

109 பொருட்கள் பறிமுதல்அவற்றின் எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு”  ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].

கார்கள் பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].  இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.

கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு முதல் கார் குண்டு வெடிப்பு வரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….”  என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”,  மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று  வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] மாலைமலர், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்என்... விசாரணை அதிகாரி நியமனம்,  Byமாலை மலர்28 அக்டோபர் 2022 4:53 PM

[2] https://www.maalaimalar.com/news/state/coimbatore-car-blast-incident-nia-appointment-of-investigating-officer-529573?infinitescroll=1

[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka.  Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.

[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? – போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/887653-60-kg-of-ammunition-seized.html

[6] தினத்தந்தி, கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல், அக்டோபர் 29, 4:47 am

[7] https://www.dailythanthi.com/News/State/109-items-seized-from-car-blast-victim-jamesha-mubins-house-824772

[8] மாலை மலர், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல், By மாலை மலர்,27 அக்டோபர் 2022 9:40 AM

[9] https://www.maalaimalar.com/news/state/tamil-news-100-kg-explosives-seized-from-jamesha-mubins-house-528818?infinitescroll=1

[10] இ.டிவி.ப்சாரத்,கார் வெடிப்புச்சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்,

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/after-car-blast-incident-in-coimbatore-police-seized-unattended-two-wheeler-and-cars-parked-on-the-roads/tamil-nadu20221028160747877877082

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற10 கார்கள் பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-incident-reverberates-10-orphaned-cars-seized-in-trichy-532243/

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)

24-10-2022 (திங்கட் கிழமை): ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். தீவிரவாத தொடர்புகளால் ஐந்து பேர் கைது செய்யப் பட்டனர். கார் வெடிப்பில் ஜமேசா உயிரிழந்த நிலையில், அவருக்கு உடைந்தையாக இருந்த –

  1. முகமது தல்கா (25),
  2. முகமது அசாருதீன் (23),
  3. முகமது ரியாஸ் (27),
  4. ஃபிரோஸ் இஸ்மாயில் (27),
  5. முகமது நவாஸ் இஸ்மாயில் (26)

ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டமும் பாய்ந்தது.

ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை: பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது. சதிச் செயலுக்கான பின்புலத்தில் இருந்ததால், ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய கோவையைச் சேர்ந்த எந்த ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை[1].  இதுகுறித்து பேசிய ஜமாத் நிர்வாகி ஒருவர்[2], “நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம். இதனால் பலரும் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், ஒருவரது உடலை அடக்கம் செய்ய வேண்டுமானால், ஏதாவது ஒரு ஜமாத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும், அவர் உறுப்பினராக இல்லை என்பதால், அவரை அடக்கம் செய்ய அனுமதி கடிதம் கொடுக்கப்படவில்லை,” என கூறினார்[3]. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது குடும்பத்தினரும், போலீஸாரும் தவித்தனர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், மனிதாபிமான அடிப்படையில் மேட்டுப்பாளையம் சாலை, பூ மார்க்கெட் அருகே உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசலில், லங்கர்கானா அடக்கஸ்தலத்தில்  ஜமாத் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது[4].

அமைதியை விரும்பினால், இளஞர்கள் திசை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: இதிலிருக்கும் மதநம்பிக்கையை விடுத்து, “குண்டு வெடிப்பு” கோணத்தில் அலசினால், மனைவி ஏன் கடிதம் கொடுக்கவில்லை, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. “பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது,” எனும் பொழுது, அவர்கள் நிச்சயமாக, பொறுப்பேற்று கடிதம் கொடுத்திருக்கலாம்.  கொரோனா காலத்திலேயே, முஸ்லிம் உடல்கள் எப்படியெல்லாம் புதைக்கப் படவேண்டும் போன்ற வாத-விவாதங்கள் வெளியாகியுள்ளன. அதே போல, கடந்த காலங்களிலும், தீவிரவாதிகள் உடல்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. ஆதவே இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை. “நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம், “ என்றால், அவ்வாறே முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸ் போன்ற அமைப்புகளுடம் இணையாமல் இருக்க, பெற்றோர்-மற்றோர் கவனிக்கலாம், தடுக்கலாம், அறிவுரை கூறலாம். ஆனால், தொடர்ந்து நடக்கின்றன என்பதால், இதில் என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை.

முகமது தல்கா (25): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்டவர்களில் முகமது தல்கா என்பவர் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர் நவாப்கான் என்பவரின் மகன் ஆவார்.  நவாப்கான் 1988 கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் கைதியாக மத்திய சிறையில் இருப்பவர். தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர்[5]. நவாப் கான், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது யாரை எல்லாம் சந்திதார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது[6]. தல்கா மூலம் தான் முபினுக்கு கார் கை மாறியுள்ளது.

முகமது அசாருதீன் (23): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்ட மற்றொருவரான முகமது அசாருதீன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை வெடிகுண்டு வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர். அப்போது கேரளா சிறையில் இருந்த அசாருதீனை முபின் சந்தித்தத் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

முகமது ரியாஸ் (27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

ஃபிரோஸ் இஸ்மாயில் (27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்;  ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

முகமது நவாஸ் இஸ்மாயில் (26): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்;  ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

25-10-2022 (செவ்வாய் கிழமை): இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் உயிரிழப்பு, வெடிப்பொருள் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சோதனையில் 75 கிலோ வெடிப்பொருட்கள் – ரசாயனங்கள் கண்டெடுக்கப் பட்டன. கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில், ” முபினின் வீட்டில் கைப்பற்றப்ட்ட மூலப்பொருட்கள் குறைந்த திறனுடைய வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுபவையாகும். அவர் மேலும் நிறைய வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது. அவரது வீட்டில் இருந்த மூலப்பொருட்களின் மாதிரிகளை தடயவியல் துறையினர் சோதனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன் அறிக்கை வந்தால் மட்டுமே எந்த மாதிரியான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும்[7]. வெடிப்பொருள்களை முபின் எப்படி வாங்கினார் என்பதை கண்டறிய முயன்ற போது அவை ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது[8]. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்றும்[9], முபின் தடை செய்யப்பட்ட பல இஸ்லாமிய இயக்கங்களின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கங்களை அவர் பார்வையிட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்[10]

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] தமிழ்.இந்து, ஜமேஷா முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாத், செய்திப்பிரிவு Published : 26 Oct 2022 06:11 AM; Last Updated : 26 Oct 2022 06:11 AM.

[2]  https://www.hindutamil.in/news/tamilnadu/887654-jamesha-mubins-body.html

[3] News.18.Tamil, ஜமோஷா முபினின் உடலை அடக்கம் செய்ய முன்வராத ஜமாத் நிர்வாகங்கள்.. கோவையில் பரபரப்பு..!, Published by:Anupriyam K, First published: October 26, 2022, 08:52 IST; LAST UPDATED : OCTOBER 26, 2022, 08:52 IST.

[4] https://tamil.news18.com/news/coimbatore/jamaat-authorities-did-not-come-forward-to-bury-jamoza-mubeens-body-in-coimbatore-824997.html

[5] தினத்தந்தி, 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவரின் மகன் கார் வெடித்த சம்பவத்தில் கைது, By தந்தி டிவி 27 அக்டோபர் 2022 12:27 PM.

[6] https://www.thanthitv.com/latest-news/1998-coimbatore-blast-case-inmates-son-arrested-in-car-blast-incident-144934

[7] காமதேனு, வெடிபொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து வாங்கிய ஜமேஷா முபின்: காவல் துறை அதிர்ச்சி தகவல்!, Updated on : 27 Oct, 2022, 11:24 am.

[8] https://kamadenu.hindutamil.in/national/jamesha-mubin-bought-the-explosives-by-ordering-them-from-amazon-and-flipkart-police-department-shocked

[9] மக்கள் குரல், வெடிப்பொருள் தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான், ப்ளிப்கார்ட் மூலம் வாங்கிய ஜமேஷா முபின், Posted on October 27, 2022

[10]https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1/

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.

மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம். காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.

நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6]..  மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8].  மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள்  லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].

தீவிரவாத தொடர்புகள் நீங்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1] காமதேனு, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!, Updated on : 22 Sep, 2022, 3:29 pm; 2 min read

[2] https://kamadenu.hindutamil.in/politics/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims

[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன் பகவத்முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு: பசுவதை உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி பேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.

[4] https://tamil.indianexpress.com/india/rss-muslim-intellectuals-to-hold-periodic-talks-address-issues-of-concern-to-the-two-sides-514530/

[5] இடிவி.பாரத், மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்விஷயம் என்ன தெரியுமா?, Published on : 22, Sep 2022, 9.09 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/rss-chief-mohan-bhagwat-visits-mosque/tamil-nadu20220922210942766766339

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்புகாரணம் இதுதான்!!, Narendran S, First Published Sep 22, 2022, 9:20 PM IST; Last Updated Sep 22, 2022, 9:20 PM IST.

[8] https://tamil.asianetnews.com/india/rss-chief-mohan-bhagwat-met-muslim-leader-imam-umar-ahmed-ilyasi-rimc0w

[9] தினத்தந்தி, இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு, Sep 22, 2:32 pm

[10] https://www.dailythanthi.com/News/India/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims-798250

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது? (1)

மே 11, 2022

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது?  (1)

19-04-2022 கவர்னருக்கு கருப்புக் கொடி, கொம்புகள் எறிந்தது: 19-04-2022 அன்று தமிழக கவர்னர் மயிலாடுதுறை வந்தபோது, போலீஸார் முன்பே, திக-வகையறாக்கள் கூடி, ஆர்பாட்டம் செய்து, கொம்புகளை வீசி எறிந்தனர். அத்தகைய வன்மம் ஏன், எப்படி, எதற்காக வெளிப்படுகிறது என்பதனை ஆராய வேண்டும். தினம்-தினம் சட்டசபையிலேயே கவர்னர் தேவையில்லை என்று முதலமைச்சரே பேசுவது, மசோதாக்கள் போடுவது என்றெல்லாம் செய்து வரும் போது, மற்றவர்களுக்கும் மரியாதை இல்லாமல் போகும். ஆனால், இவையெல்லாம் பெரிய சட்டமீறல், தேசவிரோதம் ஆகும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கவர்னர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக போலீஸுக்கு நடவடிக்கை எடுக்கும் படி கடிதம் அனுப்பியுள்ளார். அந்நிகழ்ச்சி அமைதியாக மறக்கப் படுகிறது. அதே மயிலாடுதுறையில் போலீஸாரை எதிர்த்து மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கைது செய்யப் பட்டுள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகள் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கின்றன. என்.ஐ.ஏ.வும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவரங்கள் வெளியே வந்தாலும், தமிழக ஊடகங்கள் இவற்றை அமுக்கப் பார்க்கிறது. முஸ்லிம்கள் என்பதால், திமுக ஆட்சி செய்திகளில் கூட குறைவாகவே வருவது போல கவனித்துக் கொள்கிறது போலும். இத்தகைய, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தமிழகத்தில் வளர்ப்பது என்ன நன்மை பயக்கும்?

மார்ச் 2022 – தமிழக முஸ்லிம் கர்நாடக நீதிபதிகளை மிரட்டுவது: ஹிஜாப் வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றம், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்பதால், ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது. மேலும்இது தொடர்பான பல்வேறு மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜே எம் காசி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.  மூன்று நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து,  சமூக வலைதளங்களில் பரவிய காணொளி தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது விதான் சவுதா காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஹமத்துல்லா என்பரை மதுரையில் இருந்து விசாரணைக்கு கர்நாடகா போலீசார் அழைத்து வந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்[1]. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்  அவரை எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்[2]. இதனிடையே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

21-02-2022 அன்று போலீஸார் ஐந்து முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது: முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாக செயல்படுவது திகைப்பாக இருக்கிறது.

  1. மயிலாடுதுறை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 38.
  2. அதே மாவட்டத்தில் உள்ள, இலந்தனகுடியைச் சேர்ந்தவர் ஜஹபர் அலி, 58.
  3. இவர்களது கூட்டாளிகள், கோவை முகமது ஆஷிக், 29;
  4. காரைக்கால் முகமது இர்பான், 22;
  5. சென்னை அயனாவரம் ரஹ்மத், 29.

இவர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்., 21 காலை 11:00 மணியளவில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே, சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சென்ற, ‘ஸ்கார்பியோ’ கறுப்பு நிற காரை, போலீசார் மடக்கினர்[3].  அப்போது, போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி, அவர்கள் மிரட்டினர்[4]. துப்பாக்கி நீட்டி மிரட்டும் அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் கிடைக்கிறது, தயாரானார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முதலமைச்சருக்கு இவையெல்லாம் தெரியாதா, எப்படி அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. பின், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பது பற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்படியென்றால், அதன் தீவிரத்தை நன்றாக அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு வன்மத்தை வளர்த்து விட்டது மாநில அரசும், சித்தாந்தமும், தினம்-தினம் மத்திய அரசுக்கு எதிராக பேசி வரும் பேச்சுகளும் காரணம் என்று புரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கிக் காட்டி போலீஸாரை மிரட்ட தைரியம் எப்படி வந்தது?: தமிழகம் காஷ்மீர் ஆகும் என்றெல்லாம் பேசுவது, அயல்நாட்டில் முஸ்லிம்கள் பாதிப்பு என்றால் இங்கு ஆர்பாட்டம் செய்வது, அந்நிய தேசவிரோத இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது-எழுதுவது-பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை தீவிரவாதம், அடிப்படைவாதம், தேசவிரோதம்  என்றெல்லாம் பார்க்காமல், அதெல்லாம் முஸ்லிம்கள் பிரச்சினை, யாரும் தலையிடக் கூடாது, தலையிட்டால், விமர்சித்தால் மிரட்டப் படுவார்கள், தாக்கப் படுவார்கள் போன்ற மனோபாவத்தை உண்டாக்குவது தான், போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டியது.

முகமது ஆசிக் கைது 27-02-2021: மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்த கோவை இளைஞரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்[5].. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைமை ஏற்றுக்கொண்டு குழுவாக செயல்பட்டு வந்தனர்[6]. இவர்கள் கோவையை சேர்ந்த இந்து மத தலைவர்களை கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டி வந்தனர்[7]. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 2010ஆம் ஆண்டு 7 பேரையும், என்ஐஏ அதிகாரிகள் கைதுசெய்த நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்[8]. இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்பவர் பிணையில் வெளியானது[9] முதல் தலைமறைவாக இருந்து வந்தார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் ஆசிக்கிற்கு சம்மன் அனுப்பி இருந்தது[10]. எனினும் அவர் விசாரணை ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் நீடுரில் கோழிக்கடையில் பதுங்கியிருந்த ஆசிக்கை 27-02-2021 அன்று நள்ளிரவு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.

© வேதபிரகாஷ்

11-05-2022


[1] மாலைமலர், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்தமிழகத்தை சேர்ந்தவர் கைது, பதிவு: மார்ச் 23, 2022 06:07 IST; மாற்றம்: மார்ச் 24, 2022 01:27 IST.

[2] https://www.maalaimalar.com/news/national/2022/03/23060702/3604832/A-man-from-Tamil-Nadu-who-had-allegedly-issued-death.vpf

[3] தினமலர், .எஸ்., ஆதரவாளர்களுக்கு நிதியுதவி: பின்னணியை விசாரிக்கிறது என்..., Updated : மே 11, 2022  09:01 |  Added : மே 11, 2022  09:00

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3027224

[5] டாப்.தமிழ்.நியூஸ், மயிலாடுதுறை அருகே .எஸ்..எஸ் வழக்கில் தொடர்புடைய இளைஞர் கைதுஎன்.. அதிகாரிகள் நடவடிக்கை!,  By NEWSDESK Fri, 28 May 2021 2:22:36 PM.

[6]https://www.toptamilnews.com/districts/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/youth-arrested-in-connection-with-isis-case-near/cid4926959.htm

தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[7] தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[8] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/2021/may/28/the-youth-who-came-out-on-bail-in-connection-with-the-organization-was-arrested-near-mayiladuthurai-3631508.html

[9] இ.டிவி.பாரத், தலைமறைவு குற்றவாளி கைதுதேசிய புலனாய்வு முகமை அதிரடி, Published on: May 28, 2021, 3:31 PM IST

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/the-culprit-involved-in-the-isis-case-has-been-arrested/tamil-nadu20210528153155208

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா?

ஒக்ரோபர் 28, 2021

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா, ஹலாலாஹரமா, ஷிர்க்காஇல்லையா?

ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா, ஹலாலாஹரமா, ஷிர்க்காஇல்லையா?: ஸ்டாலின் என்னத்தான் சப்பைக் கட்டினாலும், தன்னுடைய நாத்திகம் இந்துவிரோதம் தான் என்று வெளிப்படுகிறது. திமுக இந்துவிரோத கட்சி இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், ஸ்டாலின் பேசுவது, நடந்து கொள்வது இந்துவிரோதமாகத்தான் இருந்து வருகிறது. பிறகு தொண்டர்களிடம் எப்படி சகிப்புத் தன்மை, நேயம், வெங்காயம், வெள்ளைப்பூண்டு எல்லாம் எதிர்பார்க்க முடியும். அது தான் லடந்த 70 வருட திரவிடத்துவ ஆட்சியில் நிரூபிக்கப் பட்டு வருகிறது. இதில் பெரியார் என்பதெல்லாம், ஒரு சாக்கு-போக்குதான். செக்யூலரிஸமே, கம்யூனலிஸமாகத்தான் உள்ளதுந்தமிழகத்து முதலமைச்சர் என்ற அடிப்படையே தெரியாத ஆளகத்தான் ஸ்டாலின் இருந்து வருகிறார். துலுக்கர்-கிருத்துவர்களுடன் உறவாடி, கஞ்சி குடித்து, கேக் தின்று பரஸ்பர நெருக்கங்களுடன் இருந்து, இந்துக்களை சதாய்த்து வருகின்றனர். இடையிடையே திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம் (கொளத்தூர் மணி), திராவிடர் கழகம், (கோவை ராமகிருஷ்ணன்) என்று பல பேனர்களில் பூணூல்களை அறுப்பது, தாலிகளை அறுப்பது, பன்றிக்கு பூணூல் போடுவது, அப்பாவி பிராமணர்களை வெட்டுவது, கோவில்களில் புகுந்து அடிப்பது, சிலைகளை உடைப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீலாது நபியும், இந்திய அரசியலும்: மொஹம்மதுவின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்று ஆசார இஸ்லாம் கூறுகிறது. ஏனெனில், அது உருவ வழிபாட்டிற்கு வழி வகுக்கும் என்று அவர்கள் வாதிடுவர். மொஹம்மதுவின் கல்லறையினை நீக்கி விட்டதாகவும் தெரிகிறது. ஏனெனில், முஸ்லிம்கள் அங்கு சென்று வழிபடுவதை ஆசார இஸ்லாம் எதிர்க்கிறது. தர்கா வழிபாட்டை, தமிழக முகமதியரே எதிர்த்து ஷிர்க் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். மீலாது நபிக்கு துலுக்க நாடுகளில் கூட விடுமுறை கிடையாது. கொண்டாடுவதும் கிடையாது. முன்பு விடுமுறையும் விட்டது கிடையாது. வி.பி.சிங்கின் செக்யூலரிஸ / கம்யூனல் ஆட்சியில், அரசியலில் அது ஆரம்பித்து வைக்கப் பட்டது. அதனால், தமிநாட்டிலும் ஆரம்பம் ஆகியது.

ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்து[1]: யாரோ எழுதிக் கொடுத்ததை, வாழ்த்தாக, அறிவிக்கப் பட்டுள்ளது. அது, ஊடகங்களில் அப்படியே வெளி வந்துள்ளன[2].

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான ‘மீலாதுன் நபி’ திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்[3].   நபிகள் நாயகம் இளம்பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்[4].   ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.   அவரது போதனைகளும் அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள். அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைபிடித்து வாழும் இஸ்லாமியச் சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மக்களால் அமைய பெற்ற கழக அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்,” என்று இ.டிவி.பாரத், தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது[5]. மற்றவை, அப்படியே, பி.டி.ஐ பாணியில் செய்தி வெளியிட்டன[6].

18ம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப் படும் நிகழ்ச்சி: மௌலித் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தரித்தல், வம்சாவளி என்ற பொருள்தருகின்ற அராபிய வேர்ச்சொல் (அரபு மொழி: ولد) இடமிருந்து பெறப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு பிறப்பு, குழந்தையின் பிறப்பு, வம்சாவளி போன்ற கருத்துக்கள் வழங்கப்படுகின்றது. தற்காலப் பயன்பாட்டில் இச்சொல் முகமது நபி பிறந்தநாளைக் குறிப்பதாகவே உள்ளது. இந்நிகழ்வு ஏனைய சொற்களாலும் அழைக்கப் படுகின்றது. 1. பரா வபாத், 2. ஈத் அல்-மவ்லித் அந்-நபவி, 3. ஈத் இ மீலாத்-உந் நபவி மற்றும் 4. ஈத் இ மீலாதுன் நபி. இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சியா முஸ்லிம்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் முகமது நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சன்னி முஸ்லிம்கள் இதனை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் கொண்டாடுகின்றனர். இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாதலால், கிரெகொரியின் நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.

ஆசார இஸ்லாம் எதிர்க்கிறதுஸலபிகள் அல்லது வஹாபிகள் கொண்டாட்டத்தை எதிர்க்கின்றனர்: விகிபிடீயா மழுப்பலாக, இவ்வாறு கூறுகிறது, “பாரம்பரிய சன்னி மற்றும் சீயா இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன்நபி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கடந்த இரண்டரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் தோற்றம் பெற்ற ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம் உலகின் பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன் நபி கொண்டாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர். எனினும் ஸலபிகள் அல்லது வஹாபிகள் எனும் பிரிவினர் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை அது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர்”. இது இஸ்லாத்தில் நுழைக்கப் பட்ட கெட்ட நூதன அனுஸ்டானம் என்றும் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. திராவிடத்துவவாதிகளுக்கு, சுன்னி-ஷியா பிரிவுகள், இறையியல் வேறுபாடுகள், வழிபாட்டு மாறுபாடுகள் முதலியவற்றை அறிவார்களா இல்லையா என்று அவர்கள் மற்றும் துலுக்கர் வெளிப்படுத்திக் காட்டியதில்லை. இருப்பினும் ஸ்டாலின் வாழ்த்து சொன்னதை எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை.

தமிழக ஓட்டுவங்கி அரசியல், செக்யூலரிஸம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மறைக்கும் போக்கு: ஓட்டுவங்கி உள்ளது, சில தொகுதிகளில் உறுதியாக வெற்றிக் கிடைக்கிறது என்பதால், திமுக-அதிமுக முஸ்லிம்கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு வருகின்றன. ஆனால், முஸ்லிம்கட்சிகள் தோற்றாலும், வெற்றிப் பெற்றாலும், ஒன்றாக இருந்து சாதித்துக் கொள்கின்றன. தமிழக அரசியல்வாதிகளுக்கு கடல்கடந்த நலன்கள், ஆதாயங்கள், வியாபார பலன்கள், கிடைப்பதால், துலுக்கருடன் கூட்டு வைத்துக் கொள்கின்றன. ஆப்கானிஸ்தானில் இவ்வளவு நடந்தும், ஒன்றுமே நடக்காதது போல, தெரியாதது போல நட்த்து வருவது, பெரிய நடிகத்தனம், சாமர்த்தியம் எனலாம். அதாவது, இங்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பது போல இருப்பர். பங்களாதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும், நடந்து கொண்டிருக்கும் குற்றங்கள், கொடுமைகள், வன்முறைகள் பற்றி பேச மாட்டார்கள், ஆனால், காஷ்மீரில் துலுக்க பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டாலும், போராட்டம் நடத்துவர். செக்யூலரிஸம் இவ்விதமாகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

28-10-2021


[1] மாலைமலர், மு..ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து, பதிவு: அக்டோபர் 18, 2021 13:42 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2021/10/18134208/3112279/Tamil-News-Chief-Minister-Greets-Miladi-Nabi.vpf

[3] தினத்தந்தி, மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கவர்னர், மு..ஸ்டாலின் வாழ்த்து, பதிவு: அக்டோபர் 19,  2021 03:29 AM

[4] https://www.dailythanthi.com/News/State/2021/10/19032910/Milad-Nabi-Festival-Celebrated-Today-Greetings-from.vpf

[5] இ.டிவி.பாரத், இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்: மீலாதுன் நபி வாழ்த்து, Published on: Oct 19, 2021, 7:02 AM IST; Updated on: Oct 19, 2021, 9:14 AM IST

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/cm-stalin-greeted-milad-un-nabi-wishes-for-islamic-people/tamil-nadu20211019070231454

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்து விட்டதா – கொரோனா கடவுளை வென்றதா, ஜம்-ஜம் நீர் அதை வெல்லாதா?

ஜூன் 26, 2020

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்து விட்டதா – கொரோனா கடவுளை வென்றதா, ஜம்-ஜம் நீர் அதை வெல்லாதா?

Empty space arond Kaba in Mecca

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்திருப்பது: கொரோனா உடல், மனம், ஆரோக்கியம், படிப்பு, வேலை, தொழில், வாழ்வாதாரம், பொருளாதாரம், மதம், சமூகம் என்று அனைத்தையும் பாதித்துள்ளது. உலகளவில் கோடிக்கணக்கான மக்களை எந்தவித பாரபட்சமும் இன்றி கொன்றுள்ளது. இன்றும் பீடித்து வருகிறது, அதன் தீவிரம் தெரிகிறது. மதநம்பிக்கையாளர்கள் தத்தம் கடவுளர்களை பிராத்தனை செய்து, வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குறையவில்லை. அந்நிலையில், ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைப் பெற்று வரும் வருடாந்திர பண்டிகைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், விரதங்கள், சடங்குகள் என்று எல்லாமே தடுக்கப் பட்டுள்ளன. ஏனெனில், மக்கள் கூடினால், நெருங்கினால், கொரோனா தொற்று அதிகமாகும். உயிரின் மீது ஆசை இருப்பதால், மக்கள் அடங்கி இருக்கிறர்கள். கடவுள் மீதான பயத்தை விட கொரோனாவின் மீதான பயம் அதிகமாக இருப்பது தெரிகிறது.

Empty space arond Kaba in Mecca-2
ஹஜ் பயணத்தையும் கட்டுப்படுத்திய கொரோனா: இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் இறுதியில் தொடங்க உள்ளது[1]. வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள்[2]. ஆனால், தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை சவுதி அரேபியா கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளி நாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதே நேரம் சவுதி அரேபியாவுக்குள் உள்ள வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறி உள்ளது. சவுதி அரேபியாவில் 160,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,307 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது[3]. சவுதி அரேபியா மார்ச் மாதத்தில் முஸ்லிம்களை தங்கள் ஹஜ் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது, மேலும் அறிவிப்பு வரும் வரை உம்ராவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது[4].

cleaning Kaba in Mecca-4

கொரோனா மெக்கா-மதினாவைத் தாக்கியது: ஒரோனா பாதிப்பு, தொற்று என்று சவுதி அரேபியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் அதிக அளவில் இறந்துள்ளனர். இதனால் மார்ச் மாதம் முதலே, மெக்கா / மக்கா, மதினா போன்ற, இஸ்லாமிய மத-ஸ்தலங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அரசு அங்கு, உட்புறம்-வெளிப்புறம் என்று அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறது. மேலும், ஜம்-ஜம் என்ற இடத்தில் உள்ள நீரை பக்தர்கள் குடிப்பது, எடுத்துச் செல்வது உண்டு. மார்ச் மாதத்திலேயே, சவுதி அரேபியா, ஹஜ் திட்டங்களை நிறுத்து வைத்தது. இத்தாண்டும் அடையாளமாக சிலரே, தகுந்த மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப் படுவர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது[5]. விமானங்கள் சவுதி அரேபியாவுக்கு வருவதை மார்ச் மாதத்திலிருந்து தடை செய்துள்ளது[6]. திராவிட நாத்திகர், இந்துவிரோத அவநம்பிக்கையாளர், கடவுள்-மறுப்பாளிகள் போல இந்துக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், துலுக்கர், இன்றும், இப்பொழுதும் இந்துமதத்தைத் தூஷித்து வருவது, சரியில்லை என்றோ, அவர்களை கண்டிப்பதோ இல்லை. அந்நிலையில் தான், இந்துக்கள் துலுக்கர், வெறிபிடித்த முஸல்மான்கள், முஸ்லிம்களின் நம்பிக்கைகளை கேள்வி கேட்க வேண்டியதாகிறது.

Cleaning Kaba in Mecca-5

வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாதுசவுதி அரேபியா: கரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாத சூழலால் அதற்கு செல்வதற்காக இந்தியாவில் விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் 23-06-2020 அன்று தொடங்கியுள்ளது[7]. கரோனா தொற்று சவால்கள் காரணமாக, சவுதி அரேபிய அரசு எடுத்த முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தி்ல் கொண்டும், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை (1441 H/2020 AD) மேற்கொள்ள, இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் சவுதி அரேபியா செல்ல மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்[8].

Cleaning Kaba in Mecca-6

சவுதி அரேபியா முடிவால், இந்தியா பணத்தைத் திரும்ப கொடுத்தது: 23-06-2020 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசினார். சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சர் டாக்டர். முகமது சலே பின் தாகர் பென்டனிடம் இருந்து நேற்று தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு (1441 H/2020 AD[9]), இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரிகர்களை அனுப்பவேண்டாம் என சவுதி அரேபியா அமைச்சர் ஆலோசனை கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து விரிவாக ஆலோசித்தாகவும், கரோனா தொற்று சாவல்களை இந்த உலகமே சந்தித்து வருவதாகவும், இதனால் சவுதி அரேபியாவும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் ஒப்புக் கொண்டதாக மத்திய அமைச்சர் கூறினார்[10]. இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு 2,13,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்[11]. விண்ணப்பதாரர்கள் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பணம் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில், ஆன்லைன் மூலம் நேரடியாக திருப்பிச் செலுத்தப்படும்[12]. இந்தியாவிலிருந்து சவுதிக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள 2.13 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்[13].

Ozone ech to sterlize Kaba in Mecca-7

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது: இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு ஆண் துணையில்லாமல் செல்ல 2,300-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இவர்கள் இந்தாண்டு விண்ணப்பம் அடிப்படையில் அடுத்தாண்டு (2021) ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்தார். இது தவிர புதிதாக விண்ணப்பிக்கும் பெண்கள் அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர். கடந்த 2019ஆம் ஆண்டில், மொத்தம் 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர் என நக்வி தெரிவித்தார். இவர்களில் 50 சதவீதபெண்களும் அடங்குவர். ஆண் துணை இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை மத்திய அரசு கடந்த 2018-இல் உறுதி செய்த பின், மொத்தம் 3,040 பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்[14]. இந்திய விடுதலைக்குப் பின், நம் நாட்டை சோ்ந்த முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது இதுவே முதல்முறை என்று முக்தாஸ் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்[15].

Sheikh Al-Sudais participates in the washing and disinfecting of the Holy Kaaba.

நாத்திகர், முகமதியர், மற்ற மதத்தினர் உணர்ந்து ஒழுங்காக இருக்க வேண்டும்: மெக்காவில் இருக்கும் பெரிய மசூதி மற்றும் நபிகள் மசூதி இவற்றை ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதைஸ், “ஹூஷோன் டெக்” உபயோகப் படுத்தி, காபா பகுதியை கிருமிகள் நீங்க, மருந்து அடித்து, ஏப்ரல் மாதத்தில் சுத்தப் படுத்தினார்[16]. அதேபோல, மற்ற பகுதிகள், உள்ளே இருக்கும், முக்கியமான இடங்கள் முதலியனவும் சுத்தம் செய்யப் பட்டன.[17] காபா, காபத்துல்லாஹ் என்றால், அல்லாஹ் கடவுள் வாழும் இடம், அப்படியென்றால், கடவுள் தன்னுடைய இடத்தைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டாரா, சுத்தமாக வைத்திருக்க மாட்டாரா, தெரியாதா என்று நாத்திகவாதிகள், திராவிட கடவுள் மறுப்பு கோஷ்டிகள், பெரியாரிஸ வெங்காயங்கள் கேட்கவில்லை. ஆக, உண்மையில், இந்த கொரோனா, இத்தகைய போலிகளை, பொய்யர்களை, சித்தாந்த இரடைவேட கபோதிகளை வெளிப்படுத்தியுள்ளன. துலுக்கரும்ம் தம் நிலை உணர வேண்டும். இத்தகைய உண்மைகளை அறிந்து, மற்ற மதத்தினரைத் தாக்குவது, இழிவு படுத்துவது போன்ற வேலைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும். இவையெல்லாம் கிருத்துவர்களுக்கும் பொறுந்தும்.

© வேதபிரகாஷ்

26-06-2020

To enter-Cleaning Kaba in Mecca-7

[1] மாலைமலர், ஹஜ் யாத்திரைக்கு அனுமதி இல்லைகட்டணம் திரும்ப கொடுக்கப்படும்முக்தார் அப்பாஸ் நக்வி, பதிவு: ஜூன் 23, 2020 14:13 IST

[2] https://www.maalaimalar.com/news/national/2020/06/23141342/1639365/Indian-pilgrims-will-not-travel-to-Saudi-Arabia-for.vpf

[3] தினத்தந்தி, குறைந்த எண்ணிக்கையுடன் ஹஜ் நடைபெறும்சவுதி அரேபியா, பதிவு: ஜூன் 23, 2020 07:38 AM

[4] https://www.dailythanthi.com/News/World/2020/06/23073805/Saudi-Arabia-confirms-Haj-to-be-held-this-year.vpf

[5] Gulfnews, Saudi Arabia considers limiting Haj numbers amid COVID-19 fears, Reuters, Published: June 08, 2020 22:25.

[6]  https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-considers-limiting-haj-numbers-amid-covid-19-fears-1.1591641097152

[7] தமிழ்.இந்து, இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை இல்லை; விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் பணத்தை பிடித்தம் இல்லாமல் திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை, Published : 23 Jun 2020 04:04 PM; Last Updated : 23 Jun 2020 04:29 PM.

[8] https://www.hindutamil.in/news/india/560783-muslims-from-india-will-not-go-to-saudi-arabia-to-perform-haj-2020.html

[9]  இந்து நிருபர்கள் இன்னும் AD போடுவதை கவனியுங்கள், மெத்டப் படித்த, பயிற்சி எடுத்த அவர்களுக்கு CE தெரியாதா என்ன?

[10] ZH Web (தமிழ்), இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள்: முக்தர் அப்பாஸ் நக்வி , Updated: Jun 23, 2020, 06:24 PM IST.

[11] https://zeenews.india.com/tamil/india/indian-muslims-will-not-go-to-haj-this-year-mukhtar-abbas-naqvi-337185

[12] நக்கீரன், இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்து மத்திய அரசின் புதிய அறிவிப்பு, Published on 23/06/2020 (17:21) | Edited on 23/06/2020 (17:43), நக்கீரன் செய்திப்பிரிவு.

[13] https://www.nakkheeran.in/24-by-7-news/india/hajj-trip-cancelld-india-2020

[14] தினமணி, நிகழாண்டு ஹஜ் பயணம் ரத்து: மத்திய அமைச்சா் நக்வி, By DIN | Published on : 23rd June 2020 11:06 PM

[15] https://www.dinamani.com/india/2020/jun/23/hajj-trip-canceled-central-senchach-naqvi-3429099.html

[16] Tuqa Khalid, Al Arabiya English, Coronavirus: Saudi Arabia’s Al-Sudais uses ‘Ozone tech’ to sterilize Kaaba in Mecca, Tuesday 28 April 2020

[17] The General President of the Affairs of the Grand Mosque and the Prophet’s Mosque, Sheikh Abdul Rahman Al-Sudais used on Monday “Ozone tech” to sterilize Islam’s holiest site, the Kaaba, in the Grand Mosque in Mecca, amid the coronavirus outbreak.

https://english.alarabiya.net/en/coronavirus/2020/04/28/Coronavirus-Saudi-Arabia-s-Al-Sudais-uses-Ozone-tech-to-sterilize-Kaaba-in-Mecca