Archive for the ‘முஸ்திரி’ category

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (1)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (1)

ஆம்பூர் கலவரம் - குமுதம் ரிப்போர்டர் 10-11

ஆம்பூர் கலவரம் – குமுதம் ரிப்போர்டர் 10-11

குமுதம் ரிப்போர்டர் கொடுக்கும் விவரங்கள்[1]: ஷமீல் அகமது (26) ஈரோட்டைச் சேர்ந்த ஷாஜஹான் மற்றும் பரிதா பேகம் தம்பதியரின் மகன். ஷமீல் அகமதுக்கும், “இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின்”[2] ஆம்பூர் நகரத் தலைவர் கவுஸ் பாஷா மகள் முஸ்தரிக்கும் நவம்பர் 2014ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பே பவித்ராவுடன் (23) தொடர்பு இருந்திருக்கிறது, இதனால், ஷமீல் அதனை விடவில்லை. இவ்விசயம் தெரியவந்தவுடன் பிரச்சினையாகி இருக்கிறது. ஈரோட்டுக்கு இடம் பெயர்ந்தால், ஷமீல் மனம் மாறக்கூடும் என்று, அங்கு சென்றனர். அப்பொழுதுதான், பவித்ரா ஷமீலைத் தேடி 24-05-2015 அன்று ஈரோட்டுக்கு சென்றார். ஷமீல் தனியாக ஒரு வீடு பார்த்து, பவித்ராவை அங்கு தங்க வைத்திருக்கிறார். பழனிக்கு (29) ஷமீல் தான் பவித்ராவின் கள்ளக்காதலி என்பது தெரியாது. ஆனால், ஷமீல், பழனிக்கு போன் செய்து “பவித்ரா வீட்டுக்கு வந்துவிட்டாரா” என்று கேட்டபோது, “நீங்கள் யார்” என்று பழனி கேட்டார். அதற்கு ஷமீல், சென்னையில் பவித்ரா முகவரி தெரியாமல் நின்று கொண்டிருந்தபோது, தான் விசாரித்து ரெயிலில் ஏற்றிவிட்டதாகவும், பவித்ராதான், அவரது செல்போன் நெம்பரைக் கொடுத்ததாவும் கூறியுள்ளார். இந்த நெம்பர் மூலம் தான் போலீஸாற் ஷமீலைக் கண்டு பிடித்தனர். மேலும் போலீஸ் விசாரணையின் போது, ஷமீல் அருவருப்பான முறையில் பதில் கொடுத்ததாகத் தெரிகிறது. இவ்விவரங்களை “குமுதம் ரிப்போர்டர்” கொடுக்கிறது. “ஷமீல் அஹமதுவின் காதலி” என்றே இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைப்பிட்டு “காணவில்லை” என்று செய்தி வெளியிட்டது[3].  இம்முன்னுரையுடன் மற்ற செய்தி தொகுப்புகளைப் படிக்கும் போது, விசயங்கள் தெளிவாகின்றன.

ஆம்பூர் கலவரம் - குமுதம் ரிப்போர்டர் 12-13

ஆம்பூர் கலவரம் – குமுதம் ரிப்போர்டர் 12-13

தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸார்[4]: பவித்ரா செல்போனுக்கு செல்லும் எண்களை கண்காணித்த போலீஸார் சுரேஷின் நம்பரைக் கண்டு பிடித்தனர். அதிலிருந்து சரவணன் மற்றும் புகழேந்தியின் எண்களை கண்டு பிடித்தனர். சுரேஷை விசாரித்தபோது, அம்பத்தூரில் ஒரு பெண்கள் விடுதியில் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு, பவித்ராவை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், அவரின் மொபைல் போன் எண் தொடர்புகள் அடிப்படையில், விசாரணையில் இறங்கினர். அதில், சென்னையில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. 04-07-2015 இரவு, சென்னைக்கு வந்த போலீசார், அம்பத்துார் பகுதியில், தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த, பவித்ராவை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அம்பத்துாரில் உள்ள ஜவுளி கடை ஒன்றில், வேலை செய்து வருவதாகவும், இரு வாலிபர்கள் உதவி செய்ததாகவும் தெரிவித்தார். உடன், சென்னை கிண்டியில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த, இரு வாலிபர்களையும் பிடித்தனர். அவர்களில் ஒருவர், அரக்கோணம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன்; மற்றொருவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சுரேந்திரன்.

ஆம்பூர் கலவரம் - பவித்ரா சென்னையில்.1

ஆம்பூர் கலவரம் – பவித்ரா சென்னையில்.1

மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர் படுத்தப்பட்ட பவித்ரா: இதையடுத்து, 05-07-2015 மதியம், 12:30 மணிக்கு, அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு, பவித்ராவை கொண்டு வந்த போலீசார், அங்கு பிற்பகல், 3:00 மணி வரை, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வேலுார் மாவட்ட எஸ்.பி., செந்தில்குமாரியும் உடனிருந்தார். பின், மாலை, 5:00 மணிக்கு வேலுார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி முன் ஆஜர்படுத்தினர். பவித்ராவை விசாரித்த மாஜிஸ்திரேட், அவரை மகளிர் காப்பத்தில் தங்கவைக்கும்படியும், இன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார். இதையடுத்து, வேலுார் அடுத்த அரியூர் கிராமத்திலுள்ள, தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில், பவித்ரா தங்க வைக்கப்பட்டார்.  இதற்கிடையில், பவித்ராவுக்கு உதவிய சரவணன் மற்றும் சுரேந்திரனை, அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் கலவரம் - பவித்ரா சென்னையில்.2

ஆம்பூர் கலவரம் – பவித்ரா சென்னையில்.2

பவித்ரா கடத்தப்பாட்டாள் என்றும் செய்தி[5]: பவித்ரா ஏற்கனவே வேலை பார்த்த நகை கடையில் விசாரணை நடத்தினர். அவர் பெங்களூரில் பதுங்கியுள்ளாரா என்று விசாரித்தனர். அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் பவித்ராவின் செல்போன் எண் மூலம் விசாரணையில் இறங்கினர். அப்போது சென்னை கோயம்பேடு பகுதியில் பவித்ரா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. நேற்று இரவு தனிப்படை போலீசார் சென்னை வந்தனர். கோயம்பேடு பஸ் நிலையம் அருகே பவித்ராவை தனிப்படை போலீசார் மீட்டனர். அவர் நேற்று இரவு வேலூர் கொண்டு வரப்பட்டார். ராணிப்பேட்டை அருகே உள்ள மேல்பாடி போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ராவை மீட்டபோது அவருடன் 2 வாலிபர்கள் இருந்தனர். 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று சென்னையில் மடக்கி பிடித்தனர். அவர்கள் அரக்கோணத்தை சேர்ந்த சரவணன், திண்டுக்கல்லை சேர்ந்த புகழேந்தி என்று தெரிந்தது. இவர்கள் இருவரும் கிண்டியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களை அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பவித்ரா கடத்தல் பின்னணியில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது[6]. அவர்களிடம் இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இன்று பவித்ராவை வேலூர் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அப்போது பவித்ரா கடத்தல் சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளிவரும். பவித்ராவுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். அவள் அம்மா எங்கே எனக் கேட்டு அழுகிறாள். விரைவில் பவித்ராவை ஒப்படையுங்கள் என போலீசாரிடம் பழனி கேட்டுக் கொண்டுள்ளார்.

டெக்கான் குரோனிகள் - அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

டெக்கான் குரோனிகள் – அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

போலீஸ் தப்பாக சித்தரிக்கிறது என்று குற்றஞ்சாட்டிய பவித்ரா: அரியூர் பெண்கள் விடுதியில் உள்ள பவித்ரா, நிருபர்களிடம் கூறுகையில், “எனக்கு ஜமில் அகமதுவை தெரியாது; பார்த்தது கூட இல்லை. அவரிடம், எந்த கள்ளத் தொடர்பும் இருந்ததில்லை. வேலை தேடி சென்னைக்கு சென்றபோது, மகளிர் விடுதியில் தங்கியிருந்தேன். போலீசார், என்னை தப்பான பெண்ணாக சித்தரிக்கின்றனர்,” என்றார். ஆனால், பிறகு, ஒப்புக்கொண்டாள்.தன்னைவிட வயதில் சிறிய ஷமீலுடன் கள்ள உறவை வைத்துக் கொண்டுள்ள இப்பெண்ணின் நிலை விசித்திரமாக உள்ளது. ஷமீலும், திருமணர்த்திற்குப் பிறாகும், அத்தகைய உறவைத் தொடர்ந்தது பல கேள்விகளை எழுப்புகிறது. ஷமிலைப் பொறுத்த வரையில், ஒருவேளை அவரது மதநம்பிக்கைகள் அத்தகைய பலதார உறவுகளை தடுக்காமல் இருக்கலாம், ஆனால், ஒரு பெண்-குழந்தைக்குத் தாயாக உள்ள பவித்ரா எப்படி, அத்தகைய உறவில் சிக்கினார் என்பது மர்மமாக இருக்கிறது. ஷமீல்-முஸ்தரிக்கும் குழந்தை இருக்கிறது என்று நீதிமன்ற விவாதம் மூலம் தெரிய வருகின்றது. ஆக இது தகாத உறவு தான், தெரிந்தே, இருவரும் வைத்துள்ளனர்.

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஜமீலுடன் கள்ளத்தொடர்பு உண்டு [7]: ஆம்பூர் டி.எஸ்.பி., கணேசன் கூறியதாவது: “இறந்து போன ஜமில் அகமது மற்றும் பவித்ரா இடையே ஏற்பட்ட கள்ளத் தொடர்பால், இருவரும் ஆம்பூரில் இருந்து ஈரோடு சென்று, அங்குள்ள நகை மற்றும் ஜவுளி கடையில் பணியாற்றியதோடு, தனிக்குடித்தனமும் நடத்தி உள்ளனர். அப்போது, பவித்ராவின் கணவர் பழனி, தன் மனைவியை ஜமில் அகமது கடத்திச் சென்று விட்டதாக, பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். இதை அறிந்த ஜமில் அகமது, ஈரோட்டில் உள்ள வாடகை வீட்டை காலி செய்து விட்டு, பவித்ராவிடம், 300 ரூபாய் கொடுத்து, அவரை ரயில் ஏற்றி அனுப்பி உள்ளார். பவித்ரா சொந்த ஊருக்கு வராமல், வேலை தேடி சென்னைக்கு சென்று விட்டார். இது தொடர்பான முழு விவரத்தையும், போலீசாரிடம், பவித்ரா வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இருந்தும், ‘ஜமில் அகமதுவை தெரியாது; பார்த்தது கூட இல்லை. எந்த உறவும் இல்லைஎன, நிருபர்களிடம், அவர் பொய் சொல்கிறார். பவித்ரா கொடுத்த வாக்குமூலத்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று சமர்ப்பிப்போம்”, இவ்வாறு அவர் கூறினார்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா மதம் மாற்றப்பட்டதாகதிடுக்தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை[8]: வேலூர் ஆம்பூர் கலவர விவகாரத்தில் மாயமான பவித்ராவை போலீசார் மீட்டுள்ளநிலையில் அவர் குறிப்பிட்ட மதத்திற்கு மாற்றப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது………………பவித்ராவின் பழைய காதலர்கள் என கூறப்படும் அரக்கோணம் சரவணன் 26, சென்னை குன்றத்தூர் மனோகரன் 34, காட்பாடி சரவணபெருமாள் 40, ஈரோடு சசிதரன் 34, ஆரணி செங்கமலம் 35 உள்பட 11பேரிடம் விசாரணை செய்தனர். இதுகுறித்து, தனிப்படை போலீஸார் கூறியதாவது[9]: “ஆம்பூர் கலவரத்தின் முக்கிய காரணமான பவித்ரா குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மாற்றப்பட்டார்[10]. அந்த மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் பல கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் எதுவும் தெரியாது என பலரிடம் தெரிவித்து வருகின்றார். பவித்ராவின் பழைய காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றோம். அவரது அழகுக்கு மயங்கி அவர் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளனர். பழைய காதலர்களிடம் விசாரித்தால் ஷமில் அகமதுவின் தொடர்பு எவ்வளவு நாள் என்பது தெரிந்துவிடும்”. மேலும், பவித்ரா கணவர் பழனி கூறியதாவது: “என் அக்காள் மகள் பவித்ராவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். அவரது சித்தி மகள் வேலைக்கு செல்வதை பார்த்து, பவித்ராவும் தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு, ஜமில் அகமதுவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும், என் வீட்டில் தனிமையில் இருந்தனர். இதையறிந்த நான், பவித்ராவை கண்டித்தேன். இதனால், ஜமில்அகமதுவுடன் சென்று விட்டார். பவித்ராவை பிரிந்து வாடும் எனக்கும், குழந்தைக்கும் நிம்மதி இல்லை”. இவ்வாறு, அவர் கூறினார்[11].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] குமுதம் ரிப்போர்டர், 109-07-2015, பக்கங்கள்.10-13.

[2] இதனால் தான், இவ்வமைப்பு முன்னின்று ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது, பிறகு அது கலவரமாகி விட்டது.

[3] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Shameel-Ahmeds-Lover-Untraceable/2015/06/29/article2892446.ece

[4] தினமலர், தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸார், பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015,23:42 IST

[5] மாலைமலர், ஆம்பூர் கலவர பின்னணி: கடத்தப்பட்ட பவித்ரா சென்னையில் மீட்பு, மாற்றம் செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 05, 2:42 PM IST; பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 05, 11:52 AM IST.

[6] http://www.maalaimalar.com/2015/07/05115212/Ambur-riot-Background-In-Chenn.html

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1289719

[8] தினமலர், பவித்ரா மதம் மாற்றப்பட்டதாகதிடுக்தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை, ஜூலை.7, 2015: 05:37.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1290846

[10] இப்பிரச்சினைப் பற்றி யாரும் அலசக் காணோம். விவாக ரத்து கேட்கிறார், ஒருவேலை கொடுத்து விட்டார் என்ன செய்வார் என்பது பற்றியும் ஒன்றும் தகவல் இல்லை. பொலீஸார் கூறினர் என்று தினமலர் பொய்யான செய்தியை வெளியிட்டிருந்தால், அது இப்பொழுதைய நிலையில் இன்னொரு பெரிய பிரச்சினையாக இருக்கும்.

[11] முஸ்லிம் இணைதளங்கள் இதை சாடியுள்ளன. ஆனால், அதை மறுக்கவோ, அல்லது கூடா தொடர்புகளைப் பற்றி கண்டிக்கவோ, வருத்தப்படவோ இல்லை.