பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!

கடவுளின் தேசமான கேரளாவில் மாணவி மேடைக்கு வந்தது சர்ச்சையானது: “கடவுளின் தேசம்” என்று பறைச்சாற்றிக் கொள்ளும் கேரளாவில், சிறுமியை இஸ்லாமிய உலேமா உதாசீனப் படுத்தியுள்ளது திகைப்பாக உள்ளது. அதிக படிப்பறிவு உள்ள மாநிலமும் கேரளா தான். பிறகு, ஏன், எதற்கு இந்த முரண்பாடு? கேரளாவில் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து விருது வழங்கியதற்காக விழா அமைப்பாளர்களை முஸ்லிம் மத குரு ஒருவர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மத குருவின் செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது[1]. சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு) என்பது கேரள சன்னி மத குரு சங்கமாகும். இந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து சான்றிதழை பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளது[2]. கேரள மாநிலம் மல்லாபுரத்தில் மதரஸா கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது[3]. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு செய்யது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு விருது வழங்கினார்[4].

முசலியார் மேடையில் இருக்கும் போது பெண்கள் வரக்கூடாதாம் – கோபித்துக் கொண்டு திட்டிய உலேமா: வழக்கம் போல முதலமைசர் மற்றும் ஆளும் கட்சியினர் அமைதியோடு இருந்தனர். “குர் ஆன் கட்டளைகளை மீறி முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இச்சம்பவம் இன்னொரு உதாரணம்,” என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையோடு தெரிவித்துள்ளார்[5]. கேரள சமூகவலைதளங்களில் வைரலான ஒரு காணொளியே ஆளுநரையும் சங்கடப்படுத்தியுள்ளது[6]. கேரளத்தின் மளப்புரத்தில் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் மதரஸா பள்ளியில் (அரபு பாடம்) பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் விருது வழங்கப்பட்டது. மதரஸா நிர்வாகி அந்த மாணவியின் பெயரைச் சொல்லி விருது வாங்க வர மேடைக்கு அழைத்தார். மாணவியும் மேடைக்கு வந்தார். இதைப் பார்த்ததும் சமஸ்தா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.டி.அப்துல்லா முசலியார், பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண்ணை எப்படி பொதுமேடைக்கு அழைக்கலாம். என்னைப் போன்ற மதக்குருக்களை மேடையில் வைத்துக்கொண்டே நீங்கள் இப்படிச் செய்யலாமா? என சிறுமியை மேடைக்கு அழைத்தவரை கடுமையாகத் திட்டினார்.

உங்களுக்கு மத விதிகள் தெரியாதா எனவும் எச்சரித்தார்: இந்த சிறுமியை அழைத்ததற்குப் பதில் அவரது பெற்றோரை அல்லவா அழைத்திருக்க வேண்டும் எனவும் அப்துல்லா முசலியார் திட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து சிறுமி கீழே அனுப்பப்பட்டு, அவரது பெற்றோர் மேடைக்கு வந்தனர். இது சிறுமியை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கேரள மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி, “படித்தவர்கள் அதிகம் நிறைந்த, பெண்கள் அதிகம் வாழும் கேரளத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சமூகத்தை பல தலைமுறைகளுக்கு கீழ் நோக்கி இழுப்பவர்களிடம் இருந்து மக்கள் விழிப்படைய வேண்டும்,” என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிராகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் இவ்விவகாரத்தை அமுக்கி வாசித்தனர்.

பெண்கள் தனிமைப் படுத்தப் படவேண்டும் என்பது விதியல்ல: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் தன் ட்விட்டர் பக்கத்தில்[7], “திருக்குரானின் கட்டளைகளையும் மீறி, முஸ்லிம் பெண்கள் தனிமையில் தள்ளப்படுவதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததால் தகுதியான விருதைப் பெறும்போது மேடையில் அவமானப்படுத்தப்பட்டதைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. மதகுருமார்கள் குரானின் கட்டளையை மீறியும், அரசியலமைப்பு சட்டத்தை மீறியும் முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவது, அவர்களின் ஆளுமையை நசுக்குவது ஆகியவற்றுக்கு இதுவும் ஒரு உதாரணம்,” என வேதனையோடு கூறியுள்ளார்[8]. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்[9]. இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் தரப்பையும் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்[10]. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்[11], “இந்த விவகாரத்தில் கேரளா ஆளும் தரப்பினர் மௌனம் குறித்து வருத்தம் அளிக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி அனைவருமே இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றனர். நமது வீட்டுப் பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியம் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் இது குறித்துப் பேச வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்களை விட (கேரள அரசு) நான் அதிகம் பேசி உள்ளேன்,” என்றார்[12].

அடிப்படைவாத இஸ்லாமில் பெண்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர்: முஸ்லிம் பெண்கள் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு சமமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடக் கூடாது, காஜி, மௌலானா, உலேமா முன்பாக முகத்தைக் காட்டிக் கொண்டு வரக் கூடாது, பர்தா / ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டும், முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம், தலிபன் போன்ற அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் ஆணையிடுவதை செய்திகளாகப் படிக்கலாம். விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தடை. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என பெண்களை வீட்டில் முடக்கும் வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதாவது ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற நான்கு நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் தான் தற்போது ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது[13]. ஆப்கனில் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கணவன்-மனைவி உள்பட எத்தகைய உறவாக இருந்தாலும் கூட ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும்[14]. இதுபற்றி ஆப்கனின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛உணவகங்களில் ஆண்கள், பெண்களை பிரித்து உணவு சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்
© வேதபிரகாஷ்
15-05-2022

[1] டாப்.தமிழ்.நியூஸ், கேரளாவில் பள்ளி மாணவியை மேடைக்கு அழைத்த விழா அமைப்பாளர்களை கண்டித்த முஸ்லிம் மத குரு.., By KRISHNA G Wed, 11 May 20225:48:27 AM
[2] https://www.toptamilnews.com/india/Samastha-Kerala-Jem-iyyathul-Ulama-leader-MT-Abdulla/cid7371111.htm
[3] விகடன், `பெண்களை பரிசு பெற மேடைக்கு அழைக்கக்கூடாது!’ – கேரள இஸ்லாமிய தலைவரின் செயலால் கொதித்த கவர்னர், சிந்து ஆர், Published:12 May 2022 6 PMUpdated:12 May 2022 6 PM.
[4] https://www.vikatan.com/news/india/kerala-muslim-body-leader-scolds-members-for-inviting-girl-student-on-stage-draws-flak
[5] காமதேனு, முஸ்லிம் பெண்களை தனிமைப்படுத்துவதா?’- மதக்குருக்களை எச்சரிக்கும் கேரள ஆளுநர்,என்.சுவாமிநாதன், Updated on : 12 May, 2022, 3:37 pm.
[6] https://kamadenu.hindutamil.in/national/religious-people-who-isolate-muslim-women-kerala-governor-warns
[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பெண்கள் மேடைக்கு வரக்கூடாது..!! இந்த காலத்தில் இப்படி ஒரு இசுலாமிய அமைப்பா.? கொந்தளிக்கும் ஆளுநர், Ezhilarasan Babu, Chennai, First Published May 13, 2022, 1:44 PM IST; Last Updated May 13, 2022, 1:44 PM IST
[8] https://tamil.asianetnews.com/politics/women-should-not-come-on-stage-is-there-such-an-islamic-organization-in-this-period-governor-condemned–rbtavy
[9] தினமணி, மலப்புரத்தில் சிறுமி அவமதிப்பு விவகாரம்: அரசியல் தலைவா்களின் மெளனம் ஏமாற்றமளிக்கிறது, By DIN | Published On : 13th May 2022 03:01 AM | Last Updated : 13th May 2022
[10]https://www.dinamani.com/india/2022/may/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3843656.html
[11] தமிழ்.ஒன்.இந்தியா, “அவர்களின் மவுனம் ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது!” கேரள அரசை சாடும் ஆளுநர் ஆரிப் கான்… எதற்கு தெரியுமா, By Vigneshkumar Updated: Friday, May 13, 2022, 0:18 [IST].
[12] https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-governor-questions-silence-of-leadership-on-girl-humiliated-on-stage-issue-458104.html
[13] தமிழ்.ஒன்.இந்தியா, ஓட்டலில் ஆண்–பெண் சேர்ந்து சாப்பிட தடை! ஆப்கனில் அமலான புதிய கட்டுப்பாடுகள்! தாலிபான் ஆட்டம், By Nantha Kumar R Updated: Saturday, May 14, 2022, 12:36 [IST]
[14] https://tamil.oneindia.com/news/international/in-afghan-taliban-bans-men-and-women-dining-together-458287.html
அண்மைய பின்னூட்டங்கள்