நவம்பர் 12, 2011
மும்பை வெடிக்குண்டு ஜிஹாதி கொலைக்காரன் தாவூத் இப்ராஹிம் தன்னுடைய சமாதிக்கு மும்பையில் இடம் தேடச் சொல்லியுள்ளானாம்!
நேருவின் இறுதி ஆசையும், தாவூதின் இறுதி ஆசையும்!: பள்ளியில் படிக்கும் போது, நேருவின் இறுதி ஆசை என்று ஏதோ படித்ததாக ஞாபகம். அதில் நேரு தான் இறந்தால், தனது உடல் இந்தியாவிற்கு எடுத்து வரவேண்டும், உடல் எரிக்கப் படவேண்டும், அஸ்தி கங்கையில் கரைக்கப்பட வேண்டும், இந்தியா முழுவதும் தூவப்படவேண்டும் என்றேல்லாம் குறிப்பிட்டதாக ஞாபகம். விபரீதமான ஆசைதான். அப்பொழுது இப்படி இறந்த மனிதனின் சாம்பல் தூவப்பட்டால் சுற்றுநிலை மாசு ஏற்படுமா என்றேல்லாம் யாரும் யோசிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. நேருவைப் பின்பற்றும் அல்லது செக்யூலரிஸ போர்வைப் போர்த்திக் கொண்டு உலாவரும் அறிவுஜீவிகளும் பிறகு அறிந்து வெட்கப்படவில்லை. அதுபோல இந்த தாவூத் இப்ராஹிம் என்ன பெரிய சுதந்திரத் தியாகியா, இந்திய அரசியல்வாதியா, பிரதம மந்திரியா, முக்கியமான ஆளா? பிறகு, இவனுக்கு ஏன் இந்த ஆசை? உண்மையில் தேடப்படும் குற்றவாளியான அவன், இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் கேட்டுள்ள 22 தீவிரவாதிகளில் அவனும் ஒருவன். கசாப்பைப் போல அவனுக்கும் தூக்குத்தண்டனைதான் கொடுக்கப்படும். ஆனால், இறப்பின் மூலம் தப்பித்துக் கொள்ள முயல்கிறான் போலும். இறந்த பிறகு பட்டங்களைக் கொடுத்து கௌரவிப்பது போல, இவன் இறந்தாலும், அவனுக்குக் கொடிய தண்டனைக் கொடுக்கப் பட வேண்டும். அப்பொழுதுதான், தீவிரவாத-பயங்கரவாத அரக்கர்களுக்கு பயம் வரும். செத்தப் பிறகு நரகத்திற்குச் செல்லக் கூடிய இந்த கொடியவர்களுக்கு, இந்தியா இடந்தரலாகாது.
கொலைக்காரன், தீவிரவாதி, பயங்கரவாதி: செத்தபிறகும் பிரச்சினை கிளப்ப தீர்மானமாகவே உள்ளான் போலும் வெடிகுண்டு கொலைக்காரன், ஜிஹாதி தாவூத் இப்ராஹிம். உண்மையிலேயே நம்பிக்கையுள்ள மனிதனாக இருந்திருந்தால் பாவத்தைக் கழுவ வருந்தியிருக்க வேண்டும். ஆனால், சாவிற்குப் பிறகு தீவிரவாத-பயங்கரவாத சின்னமாக இருக்க முடிவு செய்திருப்பது, இந்திய மக்களுக்கு, குறிப்பாக மும்பை மக்களுக்கு பெரிய அபாயமான விஷயமாகும். தனது மரணத்திற்கு பின்னர் தனது உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும் என்று பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன[1]. .அந்த அளவிற்கு பிறந்த மண்ணுடன் ஐக்கியம் ஆகவேண்டும் என்று நினைப்பவன், எப்படி அந்த மண்ணிற்கு தொரோகம் விளைவித்திருப்பான்? அப்பாவி மக்களைக் கொன்றிருப்பான்? கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்புகளை நடத்தி 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்து[2], அச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத், அத்தாக்குதலுக்கு பின்னர் மும்பையிலிருந்து தப்பி சென்று பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்துவருகிறான்[3]. அவனை பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் பாதுகாத்து வருகிறது[4].
இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைத்தவன், சீர்குலைத்து வருபவன்: ஏதோ இந்த தாவூத் இப்ராஹிம் பெரிய மனிதனைப் போல ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. எதிர்மறை விளம்பரத்தின் மூலம், மக்கள் மனத்தில் பதிய வைக்கிறது. சமயத்தில் முஸ்லீம்கள் அவனை தியாகி என்றும் நினைப்பர், நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவன் நினைவாக திரைப்படம் எடுக்கவும் ஆரம்பித்துவிட்டனர்[5]. கொலை[6], கள்ளக்கடத்தல், கிரிக்கெட் சூதாட்டம், போதை மருந்து வியாபாரம்[7], மும்பை திரைப்படத் தொழிலை, ஏன் இந்தியத் திரைப்படத்தொழிலையே[8] ஆட்டிப் படைப்பவன், பல நடிகைகளின் வாழ்க்கையை நாசமாக்கிவன், விபச்சாரம் பெருகக் காரணமானவன், மொத்த ஹவாலா போக்குவரத்திற்கும் கணிசமான அளவிற்குக் காரணமானவன், இதையெல்லாம் தவிர பத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத-பயங்கரவாதக் கூட்டங்களுக்கு பலவகைகளில் உதவி வருபவன்[9]. பிறகு அவனுக்கு என்ன இந்தியாவின் மீது, தான் பிறந்த மண்ணின் மீது ஆசை?
நம்பிக்கையாளனான ஜிஹாதி ஏன் சாவைக்கண்டு பயப்பட வேண்டும்? இந்நிலையில், கடந்த மே மாதம் 2010 பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை, அமெரிக்க படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றதையடுத்து, தாமும் அவ்வாறு வேட்டையாடப்படலாமோ என்ற அச்சத்தில், தாவூத் கராச்சியிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. நம்பிக்கையாளனான ஜிஹாதி சாகத்தான் விரும்புவானேத் தவிர, சாவைக்க் அண்டு பயப்பட மாட்டானே? ஆக சாவிலும் இந்தியாவை பாதிக்க விரும்புகிறான். ஆனால் அவன் தொடர்ந்து கராச்சியிலேயே ஐஎஸ்ஐ-யின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்துவருவதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், கராச்சியிலேயே அவனை புதைத்து விடலாமே? இந்நிலையில் தற்போது 56 வயதாகும் தாவூத்திற்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்ததை தொடர்ந்து அவன், தனக்கு விரைவில் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது இரண்டாவது மகள் திருமணத்தை, திட்டமிட்டதற்கு ஓராண்டுக்கு முன்னரே கடந்த ஆண்டு 2010 நடத்தி வைத்தான். தாவூத், தனது மூத்த மகளை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாந்தத் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளான். மகனுக்கு, பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளான். இந்நிலையில் சமீப நாட்களாக தாவூத்தின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ளதாகவும், அவன் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு தாவூத் வேண்டுமா? பொதுவாக தேடப்படும் தீவிரவாதி, பயங்கரவாதி, மறைந்து வாழும் குற்றவாளியை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் பரிசு என்றேல்லாம் அறிவிப்பர்கள். இந்நிலையில், தனது இறுதி நாட்கள் நெருங்குவதை உணர்ந்துள்ள தாவூத், தனது மரணத்திற்கு பின்னர் தனது உடலை தாம் தாதாவாக கோலோச்சிய மும்பையிலோ அல்லது தமது பிறந்த ஊரான மும்பையை அடுத்துள்ள ராய்காட் மாவட்டத்தின் கேத் நகரிலோ புதைக்க வேண்டும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது[10]. இது குறித்து மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு தலைவர் ஹிமான்ஷு ராஜிடம் இது குறித்து கேட்டபோது, தங்களுக்கும் இது குறித்த நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்[11]. தாவூத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா, நீண்ட காலமாக பாகிஸ்தான் அரசிடம் கோரி வருகிறபோதிலும், அவன் தங்கள் நாட்டில் இல்லை என்று அந்நாடு மறுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பிறகு பிணத்தை இந்தியாவிற்குக் கொடுப்போம் என்றால் என்ன அர்த்தம்?
வேதபிரகாஷ்
11-11-2011
[6] ஆகஸ்ட் 17, 1997ல் டி-சீரிஸ் குல்ஸன் குமார் சுட்டுக் கொள்ளப்பட்டது, திரைப்படத்துறையினரை கப்பங்கட்டச் சொல்லி பயமுறுத்திய செயல்தான்!
In a breakthrough in the Gulshan Kumar murder case, the city police claimed that Abdul Rauf Dawood Merchant, an aide of the underworld don, Dawood Ibrahim, today “confessed” to having killed the music mughal three years ago.
http://hindu.com/2001/01/10/stories/0210000a.htm
[8] அவனுடையக் கூட்டாளிகள் இன்றும் தமிழ் திரைப்படத்துறையில் தமிழ் நடிகர்களாக, தமிழச்சி நடிகைகளாக மறைந்து வாழ்கின்றனர். பங்கை சேகரித்து அவனுக்குத் தப்பாமல் அனுப்பி வைக்கின்றனர். இதைப் பற்றி எந்த பச்சைத் தமிழனுக்கும் அக்கரையில்லை, கேட்கத் துப்பில்லை.
[9] Dawood is among the 50 terrorists India wants Pakistan to hand over. Apart from his hawala network in India, his involvement is also suspected in providing logistics to the 10 terrorists who attacked Mumbai in 2008.
[10] Zee News reported According to Zee News, the 56-year-old “Karachi-based don”, who has had two massive heart attacks in the past two years, is being monitored round-the-clock by a team of doctors and his family members. However, according to the report, Dawood is already busy planning his end. He has instructed his men to find a suitable place for his burial in Mumbai or in his native town Khed in Ratnagiri district.
http://www.pakistantoday.com.pk/2011/11/dawood-ibrahim%E2%80%99s-%E2%80%98days-numbered%E2%80%99/
பிரிவுகள்: அபு சலீம், அபு ஜிண்டால், அரேபிய ஷேக்கு, அரேபியா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்லா, ஆப்கானிஸ்தான், இணைதள ஜிஹாத், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இமாம், இமாம் கவுன்சில், இரட்டை வேடம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உறவினர், கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், காஃபிர்கள், காந்தஹார், காஷ்மீர், குடும்ப திவிரவாதம், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரூரம், குல்லா, குல்ஷன்குமார், கொலை, கொலை வழக்கு, சவூதி அரேபியா, சுன்னி, சுன்னி சட்ட போர்ட், சுன்னி-ஷியா, சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தாவூதின் காதலி, தாவூத் இப்ராஹிம், தியாகப் பலி, தியாகம், துபாய், துப்பாக்கி, நக்மா, பலுச்சிஸ்தான், பாகிஸ்தான், போதை, போதை மருந்து, மதகலவரம், மும்தாஜ், முஸ்லீம், ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி
Tags: அபாயம், இப்ராஹிம், கல்லறை, சமாதி, சாவு, தாவூத், தாவூத் இப்ராஹிம், பாதுகாப்பு, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மும்பை
Comments: 3 பின்னூட்டங்கள்
ஜனவரி 13, 2011
மனைவியின் கள்ளத் தொடர்பு சந்தேகித்து குழ்ந்தைகளைக் கொன்ற முகம்மது அலி
ஊடகங்கள் இவ்விவகாரத்தில், மிகவும் அமுக்கி வாசித்தது தெரிகிறது. சன்டிவி தொலைக்காட்சி தான் 12-01-2010 அன்று விடியற்காலையிலிருந்து செய்திகளில் தெரிவித்து வருகிறது. பிறகு கலைஞர் டிவியும் அதே செய்தியை வெளியிட ஆரம்பித்தது. இதில் முன்னுக்குமுரணான விஷயங்கள் உள்ளன என்று நேற்றே எடுத்துக் காட்டப்பட்டது[1].
- 11-01-2011 அன்று காலை மகள்கள் 2 பேரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது[2] திடீர் என்று மாயமானார்கள் என்று சொல்லப்படுகிறது.
- வீட்டின் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
- குழந்தைகளின் வீட்டிற்கும், இறந்து கிடந்த கிணற்றிற்கும் சுமார் 2 கி.மீட்டர் தூரம் ஆகும்[3]. எனவே அப்பகுதியில் வசிக்கும் யாராவது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- போலீஸாரின் நாய் பிணங்கள் கிடந்த இடத்திலிருந்து கிளம்பி பிறகு அவர்களது வீட்டிற்கே வந்து சேர்ந்ததாகவும், அங்கேயே சுற்றி-சுற்றி வந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
- காரில் குழந்தைகளின் தந்தையாரின் கைரேகை இருப்பதனால், அவரே இந்த கொலையை செய்தாரா என்று சந்தேகம் இருப்பதாக போலீஸார் கூறுவதாக சன்டிவி தொலைக்காட்சி 12-01-2010 அன்று விடியற்காலையிலிருந்து செய்திகளில் தெரிவித்து வருகிறது.
- குழந்தைகளின் வயதும் 2 / 3 என்றும், 2½ / 3½ மாறி-மாறி கூறுகின்றனர்.
வேலூர் அருகே இரண்டு மகள்களை கொன்ற தந்தை கைது[4] – என்று இப்பொழுது செய்தி வருகின்றது.
மனைவியின் கள்ளத் தொடர்பு சந்தேகித்து குழ்ந்தைகளைக் கொன்ற முகம்மது அலி: இரண்டு மகள்களை கிணற்றில் போட்டு கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே உள்ள மேல்விகாரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அலி. இவர் சென்னையில் பணியாற்றினார். இதற்கிடையில் இவரது மனைவி மும்தாஜூக்கும் கொழுந்தன் பாபுஅகம்மதுவுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மும்தாஜூக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் கள்ளத்தொடர்பு மூலம் பிறந்தததாக முகம்மது அலிக்கு சந்தேகம் வந்தது. அதைத் தவிர, கள்ளத்தொடர்பும் ஊர் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இதனால் 2 குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்டான். இதனையடுத்து குழந்தைகள் 2 பேரையும் கிணற்றில் போட்டு கொன்றான். முதலில் குழந்தையை யாரோ கடத்தி கொன்று விட்டதாக போலீசார் விசாரித்தனர். ஆனால் முகம்மது அலியிடம் விசாரித்தபோது அவனே கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் முகம்மது அலியை கைது செய்தனர்.
ஆண் குழந்தை பிறந்ததும் இரண்டு பெண் குழந்தைகளைக் கொன்ற தந்தை: இதே செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ், இவ்வாறு வெளியிட்டுள்ளது[5]. போலீஸார் குழந்தைகள் காணாத போது, விசாரிக்கத் தொடங்கினர். இப்பொழுது, முகம்மது அலியே தன் வீட்டிற்கு எதிரே கட்டுமான வேலை செய்யும் குமரி என்ற பெண்ணை போலீஸாரிடம் அழைத்துச் சென்றான். அவள் “யாரோ ஒரு மர்மமான பெண் மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை அழைந்துச் சென்றதை” தான் கண்டதாகக் கூறினாள். பிறகு, போலீஸார், அவள் கூறியதை விசாரித்த போது, “நான்கு பேர் அந்த கதையை ஒப்புக் கொண்டார்களாம்”. உறவினர்களிடம் விசாரித்தபோது, வேறுவிதமாக கூறியுள்ளதை போலீஸார் கண்டு பிடித்தனர். சமீபத்தில், தான் வேலை இழந்ததினால், எப்படி குழந்தைகளை வளர்ப்பது என்று பயந்து கொன்றதாகவும் கூறியிருக்கிறான். உண்மையில், அவனை போலீஸ் நிலையத்திற்கு விசாரிக்க அழைத்துச் சென்றபோது, அந்த இடத்தில் உள்ள முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கைது செய்தபோது, விஷாரம் பகுதியில் பெரும் பரபாப்பு ஏற்பட்டது.
குழந்தைகள் உரிமைகள் காக்கப் படவேண்டும்: சமீபத்தில் குழந்தைகள் காணாமல் போவது என்பது பல நிலைகளில், கோணங்களில் யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இது சமூதாயத்தை பெருமாவில் பாதிக்கக் கூடிய விஷயமாகிறது. மேலும் அப்படி காணாமல் போகும் குழந்தைகள் கொலை செய்யப்படும்போது, காமத்திற்கு உட்படுத்தும்போது, கொடுமைப் படுத்தும் போது அது எல்லோரையுஇம் பாதிக்கக் கூடிய விஷயமாகிறது. கோயம்புத்தூரில் இரு இளம் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொன்றுள்ளனர். இன்னொரு விஷயத்தில், குழந்தையை பலியிட்டுள்ளானர்[6]. இன்னும் ஒரு நிகழ்ச்சியில், குழந்தையை அறுத்து, வறுத்து …………தாக[7] வேறு கொடூரம் நடந்துள்ளது[8]. இப்படி குழந்தைகள் காணாமல் போவதில் செக்ஸ்-டூரிஸம் போன்ற கொடுமைகளிலும் ஈடுபடுத்துவது தெரியவதுள்ளது[9]. நாகரிகம் அடைந்துள்ள சமூகம் என்று ஒருபக்கத்தில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் வேலையில், இப்படி கொடூர நிகழ்சிகள் நடகும் போது, சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள் அமைதியாக இருக்க முடியாது. உச்சநீதிமன்றம் சமீபத்தில்[10], “நாடு உலகமயமாக்கம் மற்றும் தாராளமயமாக்கம் சகாப்தத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் செக்ஸ் நோக்கங்களுக்கு சிறிய குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது சரியல்ல. இந்த அபாயகரமான பிரச்னையை தீர்ப்பதில், அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்”. அதுமாதிரியே, பேற்றோர் அல்லது மற்றோர் குழந்தைகளை தமது விருப்பு-விருப்புகளுக்குட்படுத்தி துன்புறுத்தக் கூடாது.
வேதபிரகாஷ்
13-01-2011
பிரிவுகள்: கற்பு, காஃபிர், குழந்தை நரபலி, குழந்தை பாலியல், கைது, கொலை, கொலை வழக்கு, சந்தேகம், சரீயத், சரீயத் சட்டம், தோல், நன்னடத்தை நிபந்தனை, மனைவி, முகமது அலி, மும்தாஜ், முஸ்லீம்கள், ரத்தம், வேலூர்
Tags: ஆராய்ச்சியாளர்கள், கலைஞர் டிவி, கள்ளத்தொடர்பு, சன்டிவி, சமூக ஆர்வலர்கள், பாபுஅகம்மது, மனோதத்துவ நிபுணர்கள், முகம்மது அலி, மும்தாஜ், விஷாரம்
Comments: 1 பின்னூட்டம்
மார்ச் 21, 2010
சிதம்பரத்திற்கு தாவூத் ஜிலானியின் மனைவிகள் வேண்டுமாம் விசாரிக்க!
By vedaprakash
சிதம்பரத்திற்கு தாவூத் ஜிலானியின் மனைவிகள் வேண்டுமாம் விசாரிக்க!
போதை மருந்து கடத்தல்: ஹெட்லி மீது எப்.பி.ஐ., அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: சிகாகோவில் கைதான 49 வயதான ஹெட்லி, போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இரு முறை கைதானவன்.ஆனால், போதைக் கடத்தல் கும்பல்கள் சிலவற்றை பிடிக்க, நம்பகமான சில தகவல்களை அப்போது தெரிவித்ததால், அவனின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலையானான். அதேபோன்று இப்போதும் அவன் போலீஸ் இன்பார்மர் ஆகியுள்ளான். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை நடிகைகள் தொடர்பு: தாவூத் இப்ராஹிம் போல, தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புககள் அலாதியானது தான்! அதனால்தான், சிதம்பரம் தாவூத் ஜிலானியைப் பிடிக்க முடியவில்லை என்பதும், அவனுடைய மனைவிகளைப் பிடித்து விசாரிக்கலாம் என்று கிளம்பி விட்டார் போலும்!
Neha Sharma, Hindustan Times; New Delhi, November 18, 2009
First Published: 20:50 IST(18/11/2009); Last Updated: 00:00 IST(19/11/2009)
|
|
|
|
|
|
|
கோல்மென் ஹீட்லி மற்றும் தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புகளை புலன் விசாரிப்பவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ராஹுல் பட்டைத் தொடர்ந்து பட்டியில் நீளுகிறது: கங்கனா, ஆர்த்தி சாப்ரா, எம்ரான் ஹாஸ்மி………………ஹாஸ்மி ஒரு பப்பில் 2008ல் சந்தித்ததாகவும், கங்கனா “வோஹ் லம்ஹே” ஷுட்டிங் போது அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது! இருப்பினும், இவர்கள் எல்லோரும் அத்தகைய ஊடகசெய்திகளை மறுக்கின்றனர். ஆனால் மும்பை திரை உலகில் இதெல்லாம் சகஜம் தான். தாவூத் இப்ராஹிம் சொல்படித்தான் எல்லோருமே ஆடுகின்றனர், ஆட்டுவிக்கப் படுகின்றனர். நடிகைகள் ஆணையிடப் பட்டால், அவர்கள் செல்ல வேண்டும், வரும் விருந்தாளிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
 Dawood-jilaani
|
 |
|
|
|
|
தாவூத் ஜிலானியின் மனைவிகள்: தாவூத் ஜிலானிற்கு எத்தனை மனைவிகள் என்று தெரியவில்லை. உள்ள தகவல்களின்படி, ஸஜியா என்பவள் தனது குழந்தைகளுடன் சிகாகோ நகரித்தில் வாழ்வதாக அமெரிக்கப் புலனாய்வுத்துறையினர் கூறியுள்ளனர். அதற்கு மேல் அமெரிக்கர்கள் விஷயங்களை சொல்ல மறுத்தாலும், அவள் ஜிலானியுடன் இந்தியாவிற்கு வரவில்லை என்கிறார்கள்.
தாவூத் ஜிலானியின் முதல் மனைவி: தாவூத் 1985ல் முதன் முதலாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டானாம். இரண்டு வருடங்கள் ஆகியதும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் 1987ல் விவாக ரத்து ஏற்பட்டதாம். பென்சில்வேனியா பல்கலைகழகத்திலிருந்து பட்டப்படிப்பு படித்த, அந்த பெண்மணி மறுபடியும் திருமணம் செய்து கொள்ளாமலேயே செஸ்டர் கவுன்டியில், ரியல் எஸ்டேட் கன்ஸல்டன்ட்டாக (நிலங்களை வாங்கி-விற்பதில் ஆலோசகர்) இருக்கிறாராம். ஆனால் இவள் என்றுமே அமெரிக்கவை விட்டு தாவூத்துடன் வெளியே சென்றதில்லை. ஆகவே, இந்தியாவிற்கு வந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை!
ஃபைஜா அவுதல்ஹா என்ற மொரொக்கோ நாட்டு அழகி: இவள் தாவூத்தின் மனைவியா, துணைவியா என்று தெரியவில்லை. ஃபைஜா அவுத்லாஹ் என்ற மொரொக்கா நாட்டு அழகியுடன் (A woman of Moroccan origin – Faiza Outalha), தாவூத் ஜிலானி இரண்டு முறை 2007-08 வாக்கில் இந்தியாவிற்கு வந்துள்ளான். ஆனால் அமெரிக்க உளவாளிகள் அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறுகிறார்களாம்!
பிரிவுகள்: அழகிய இளம் பெண்கள், ஆர்த்தி சாப்ரா, கங்கணா, காஷ்மீர், சிதம்பர ரகசியங்கள், ஜம்மு-காஷ்மீர், தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா, தாவூதின் காதலி, தாவூத் ஜிலானியின் மனைவிகள், நக்மா, மணலி, மும்தாஜ், ஸஜியா
Tags: ஃபைஜா அவுதல்ஹா, ஆர்த்தி சாப்ரா, கங்கணா, தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா, தாவூத் இப்ராஹிம், தாவூத் ஜிலானி, தாவூத் ஜிலானியின் மனைவிகள், நக்மா, ஸஜியா, Faiza Outalha, Moroccan girl
Comments: 2 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்