Archive for the ‘முன்னாள் தலைவர்’ category

ஒரு உயிர் இழப்பு: காஷ்மீரில் கலாட்டா – தீவிரவாதிகளால் பல லட்ச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் கவலைப்படவில்லை!

ஒக்ரோபர் 7, 2011

ஒரு உயிர் இழப்பு: காஷ்மீரில் கலாட்டா – தீவிரவாதிகளால் பல லட்ச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் கவலைப்படவில்லை!

காஷ்மீரில் மக்கள் கொல்லப்படுவது: காஷ்மீரில் மக்களுக்கு உயிர் போவது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குண்டுகள் வெடிப்பது முதலியவை ஒன்றும் புதியதான நிகழ்ச்சிகளோ, செய்திகளோ இல்லை. இருப்பினும், இப்பொழுது ஒருவர் மர்மமான முறையில் இறந்திருப்பதைப் பற்றி அதிகமாகவே அரசியல் கட்சிகள் கலாட்டா செய்து வருகின்றன. ஊடகங்களுக்கோ தேவையில்ல, வெறும் வாயிற்கு அவல் கிடைத்தக் கதை தான். தேசிய மாநாட்டுக்கட்சி தொண்டர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, தன் தந்தை மரணம் குறித்து முதல்வர் ஓமர் பொய் சொல்வதாக, இறந்தவரின் மகன் தெரிவித்துள்ளார்[1]. இவரைத் தவிர, மற்றொரு கண்ணால் பார்த்ததாக அப்துல் சலாம் ரேஷி[2] என்பவர் சைது முஹம்மது யூசுப், ஒமரின் வீட்டிற்குள் செல்லும் போது நன்றாகத்தான் இருந்தார். வெளியே வரும்போது, பேசமுடியாமல் வாந்தி எடுக்கும் நிலையில் இருந்தார்[3]. அந்நிலயில் தான் போலீஸார் அவரைப் பிடித்துச் சென்றதாகக் கூறுகிறார்.

காஷ்மீர் சட்டமேலவை பதவிக்கு லஞ்சம்: தேசிய மாநாட்டு கட்சித்தொண்டர் சையது யூசுப் (61). அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சட்டமேலவை உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாக கூறி, இரண்டு பேரிடம் ரூ. 1 கோடியே 18 லட்சம் பெற்றுள்ளார். இவர் லஞ்ச வழக்கில் போலீஸார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி போலீஸ் காவலில் யூசுப் மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓமர் அப்துல்லா, கட்சித்தொண்டர் மரணத்திற்கு தான் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், யூசுப் மகன் தலிப் உசேன் கூறுகையில், தனது தந்தையை போலீஸ் காவலில் வைத்து அடித்து உதைத்ததாகவும், ஓமருக்கு தெரிந்தே இது நடந்துள்ளதாகவும், இதுகுறித்து அவர் பொய் சொல்வதாகவும் தெரிவித்தார்.

மகனுடைய ஆட்சியைக் கவிழ்க்க சதி – கூறுவது அப்பா!: காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக அக்கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ஃபருக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்[4]. இந்த விஷயத்தில் பெரிய சதி இருப்பதாக எதிர்க்கட்சிகளான மக்கள் ஜனநாயகக் கட்சி, பாஜக ஆகியவை குற்றம்சாட்டின. ஓமர் அப்துல்லா பதவி விலக வேண்டுமெனவும் அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  இந்நிலையில் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியது: எங்கள் கட்சி எதையுமே மறைக்கவில்லை. யூசுப் இறந்தது தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும்.

தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நீடிப்பது எதிர்க்கட்சிகள் விரும்பவில்லையாம்: காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நீடிப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அரசியல் ஆதாயத்துக்காகவும், எப்படியாவது மாநிலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். எந்த விஷயத்தை வைத்தாவது எங்களை குற்றம்சாட்ட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கம். மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோதும், காங்கிரûஸ தவிர்த்து விட்டு எங்கள் கட்சியை மட்டும் குறிவைத்து மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. எங்கள் கட்சியில் நேர்மையான முறையில்தான் பதவிகளுக்கும், தேர்தலில் போட்டியிடவும் நபர்களைத் தேர்வு செய்கிறோம். இங்கு வந்திருக்கும் எம்.எல்.ஏ., அமைச்சர்களைக் கேட்டு இதனை நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

ராஜினாமா செய்ய முடியாது: காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தனது பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்[5].காஷ்மீர் மாநிலத்தில், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த சயித் முகமது யூசுப், 61, போலீஸ் காவலில் உயிரிழந்தார். இது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் ஒமர் அப்துல்லா கூறுகையில், இந்த விவகாரத்தில் நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனவே, பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை, நீதி விசாரணையில் உண்மைகள் விரைவில் வெளிவரும், என தெரிவித்தார்.

ஒமர் பதவி கொடுக்க பணம் வாங்கினாரா? அப்துல் சலாம் ரேஷி[6], “யூசுப் என்னை ஒமருக்கு அறிமுகப்படுத்தினார்[7]. பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுப்பதாகக் கூறினர். ஆனால், கொடுக்காததால் பணத்தைத் திரும்பக் கேட்டேன். முழுப்பணத்தைக் கொடுக்காததால் விடாமல் கேட்டேன்”. ஒருவேளை, ஒமருக்குண்டான தொடர்பு தெரிந்து விட்டது என்று, யூசுப் கொல்லப்பட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. இதேப்போலத்தான், அமர்சிங் காங்கிரஸ்காரர்களுடன் சேர்ந்து கொண்டு, பீஜேபி எம்.பிக்களுக்கு பணம் கொடுத்து, கட்சி மாற முயன்றுள்ளனர், ஆக காங்கிரஸ் இப்படி ஒரு வழியைக் கடைபிடித்து, எல்லா மாநிலங்களிலும் கோடிகளை அள்ளுகிறது போலும்!


[2] Abdul Salam Reshi, a key witness in the alleged killing of National Conference activist Syed Mohammad Yousuf, has broken his silence claiming that the latter was hale and hearty when he was taken to another room in the chief minister’s residence but was vomiting and unable to speak when he was being taken to the crime branch headquarters in a police vehicle.

[6] “I was introduced to Farooq Abdullah and Omar Abdullah by Yusuf. He came to my residence with the chief minister in a chopper. He also took me to meet Farooq Abdullah at his Jammu residence,” Reshi said in Srinagar. Reshi said his relations with Yusuf turned sour, after he demanded return of his money.  “When I went to meet Omar sahib in July, he made sure I will get back some money. I was given Rs 10 lakh after a month and another Rs 10 lakh later. It was only after Mohammed Bhat of Ganderbal complained that he paid .`85 lakh to Yusuf for a ministerial berth did the Chief Minister decide to confront Yusuf,” he added.


ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (2)?

நவம்பர் 22, 2010

ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (2)?

ஷாகுல் சினிமா நடிகர்[1]: பிடிபட்ட கார் ஸ்கார்பியோ (டிஎன்65 கே 2223) ஷாகுல் என்பவனுக்கு சொந்தமானது. அவன் இந்தி படத்தில் வில்லனாக நடித்துள்ளானாம். சினிமாவில் நடித்தபோது எடுத்துக் கொண்ட படம் காரில் வைத்திருந்தானாம். காரைக் கைப்பற்றியபோது, இவ்விவரங்கள் தெரியவந்தன, மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளான  ராமநாதபுரம் அருகே சாத்தான்குளத்தைச் சேர்ந்த சாகுல், வாணி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷத், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன். மணிகண்டன் ஆகிய 3 பேரும் மலேசியாவுக்குத் தப்பி விட்டதாகவும், மற்றொரு குற்றவாளியான வாலாந்தரவை முனியசாமி தலைமறைவாக இருப்பதாகவும் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தெரிவித்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்: ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த ஆதிலாபானு, அவரது மகன் முகமது அஸ்லாம் (7), மகள் ஹாஜிராபானு (5) ஆகியோர் கடந்த 8ம் தேதியன்று கடத்திக் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை தொடர்பாக முதலில் ஆதிலாபானுவின் குடும்ப நண்பர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பிறகு வாடிப்பட்டி போலீசார் –

1.   வாலாந்தரவையை சேர்ந்த துரைராஜ் மகன் முனியசாமி (28),

2.   ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது உல்லா மகன் சேக்கஜத் என்ற சூடானி (19), (கீழக்கரை கல்லூரி பிகாம் 2ம் ஆண்டு மாணவர்),

3.   நயினா முகமது மகன் தமிமுல் அன்சாரி (21),

4.   பட்டினம்காத்தானை சேர்ந்த கலீம் மகன் சாநவாஸ் (20) (மதுரை தனியார் கல்லூரி பிகாம் 3ம் ஆண்டு மாணவர்),

5.   சாத்தான்குளம் அக்பர் அலி மகன் நாகூர் உசேன் (19)

உள்ளிட்ட 5 பேர் கைது செய்ய்பட்டனர். இப்படி கல்லூரியில் படிக்கும் / படித்த இளைஞர்கள் கொலையில் பங்கு கொண்டுள்ளது வியப்பக உள்ளது. ஏனெனில், இவர்கள் எல்லோரும் கூலிப்படையினர் போலவோ அல்லது மணத்திற்காகவோ கொலை செய்பவர்களைப் போலத் தெரியவில்லை. குழந்தைகளையும் கொல்ல மனம் வந்துள்ளது என்றால், அந்த அளவிற்கு தூண்டுதலாக இருந்தது எதுவென்று தெரியவில்லை.

சாத்தான்குளம் கொலையும் அகமது-அமீத் பகையும்: அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன[2]. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சாகுல் அமீத் / ஷாகுல் ஹமீத், மண்டபம் யூனியன் முன்னாள் தலைவர் சீனிக்கட்டியின் உறவினர். ஆதிலாபானுவின் கணவர் முத்துசாமி இவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு சீனிக்கட்டியின் தங்கை மறுமகன் கொலை செய்யப்பட்டார். இவர் மலேசியாவில் வசிக்கும் ஷாகுல் அமீதுக்கு உறவினர் ஆவார். இக்கொலை வழக்கில் முத்துசாமி / அகமது முக்கிய சாட்சியாக இருந்தார். அரசு தரப்பு சாட்சியாக முத்துசாமி சேர்க்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முத்துசாமி பிறழ்சாட்சியம் அளித்தார். கொலையாளிகள் விடுதலையானார்கள். இதனால், முத்துசாமி மீது சாகுலுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதனால், அதாவது சாதகமாக சாட்சி சொல்ல மறுத்தவிட்டதால், ஷாகுல் அமீதுக்கும் முத்துசாமி-அகமதுக்கும் விரோதம் ஏற்பட்டது.

மலேசியாவிலும் தகராறு: மலேசியாவில் சீனிக்கட்டி உறவினர் சாகுலும், முத்துச்சாமியும் தனித்தனியாக ஆனால் எதிரிதிரே ஓட்டல் நடத்தி வந்துள்ளனர். சாகுல் மாமிசக்கறிக்கடையும், உணவகவும் வைத்துள்ளான்[3]. கோலாலம்பூரில் முத்துசாமியும், சாகுலும் இப்படி எதிரெதிரே ஓட்டல் நடத்தியதால், முன்விரோதம் இவர்களுக்குள் தொழில் போட்டியாகவும் மாறியது. இதனால், கடந்த சில மாதங்கள் முன்பு தகராறு ஏற்பட்டதில், சாகுல் தாக்கியதில் முத்துச்சாமி காயமடைந்தார். இது தெரிந்த ஆதிலாபானு கோபமடைந்து, ஆகஸ்ட் 31ம் தேதியன்று குழந்தைகளுடன் ராமநாதபுரம் திரும்பினார். இந்நிலையில் ஆதிலாபானு, ராமநாதபுரம் வந்த ஆதிலா, கணவரின் நண்பர் ஜெயக்குமாரிடம் மலேசியாவில் நடந்த தகராறு குறித்து கூறியுள்ளார். மேலும், கணவரை தாக்கிய சாகுலின் கையை, ஆள் வைத்து வெட்டாமல் விடமாட்டேன் என கூறியுள்ளார்[4]. [வேறொரு இடத்தில், ‘எனது கணவரை சாகுல் அடித்துள்ளார். அவரை கொலை செய்யாமல் விடமாட்டேன்‘ என்றுள்ளது]. ஆகையால், “கொலை செய்ய வேண்டும்” என குடும்ப நண்பர் ஜெயக்குமாரிடம் தெரிவித்தார். இத்தகவலை ஜெயக்குமார் அத்தை மகன் முனியசாமியிடம் தெரிவித்துள்ளார். முனியசாமி இதை மலேசியாவில் உள்ள சாகுலுக்கு தெரிவித்தார்.

சாகுல் அமீது நேராக தமிழகத்திற்கு வந்து திட்டமிட்டு ஆதிலா-குழந்ர்கைகளைக் கொன்றது[5]: அதனால் சாகுல் அமீது, ஆதிலாபானுவை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக மலேசியாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்து, ஜெயக்குமாரை அணுகி ஆதிலாபானுவை கடத்தி பணம் பறிக்கலாம் என மூளைச்சலவை செய்தார். அதனால் ஜெயக்குமார் கடந்த 8ம் தேதியன்று மாருதி காரில் ஆதிலாபானுவை 2 குழந்தைகளுடன் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளைக்கு அழைத்து வந்தார். ஜெயக்குமார் வந்ததும் அவரை, சாகுல் தாக்கினார். ஜெயக்குமார் கீழே விழுந்தார்[6]. அங்கு ஸ்கார்பியோ காரில் தயாராக காத்திருந்த சாகுல், 3 பேரையும் காரில் வலுக்கட்டாயமாக ஸ்கார்பியோ (டிஎன்65 கே 2223) காரில் ஏற்றினர்[7].

பாட்டி பக்கீரம்மாள் தோட்டத்திற்கு சென்றது, கொன்றது, புதைத்தது: அந்த கார் சாகுலின் பாட்டி பக்கீரம்மாள் தோட்டத்துக்கு சென்றது. அங்கு காரில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை சத்தமாக வைத்தனர். சாகுல், நண்பர்கள் மணிவண்ணன், ஹர்சத், முனியசாமி ஆகியோருடன் சேர்ந்து ஆதிலாபானு மற்றும் 2 குழந்தைகளை தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்தனர்[8]. அந்த தோட்டத்தில் 2 இடங்களில் குழி தோண்டினர். ஒரு குழியில் ஆதிலாபானுவையும், மற்றொரு குழியில் 2 குழந்தைகளையும் போட்டு புதைத்தனர். மறுநாள் காலையில் சாகுல் உள்பட 4 பேரும் சென்னை சென்றனர். அங்கிருந்து மலேசியா செல்ல முயன்றனர். அப்போது முனியசாமிக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை.

விஷயம் தெரிந்த பக்கிரியம்மாள் செய்த தகராறு: பாட்டி என்ற நிலையில், பேரனுக்கு இப்படியா உதவுவார் என்பதும் புதிராக உள்ளது. முதலில் கொலைசெய்ததே மாபெரும் குற்றம், அதிலும், இளம்பெண் மற்றும் இரு குழந்தைகளைக் கொன்றதுகூட மறந்து விட்டு, பிணங்களைப் பற்றிக் கவலைப்படும் பாட்டி வினோதம்தான். இந்நிலையில் தோட்டத்தில் உள்ள உடல்களை அகற்றுமாறு பக்கிரியம்மாள் போனில் சாகுலிடம் சண்டையிட்டுள்ளார். கடந்த 10-11-1010 தேதியன்று காலை சாகுல் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஒரு காரில் பரமக்குடி வந்தார். அங்கு தயாராக இருந்த –

1.   முனியசாமி (28),

2.   சேக்கஜத் என்ற சூடானி (19),

3.   தமிமுல் அன்சாரி (21),

4.   சாநவாஸ் (20)

5.   நாகூர் உசேன் (19)

ஆதிலா, குழந்தைகளை கொலை செய்ய வேதாரண்யம் சென்றனர். செல்லும் வழியில் மாருதி ஆம்னியை வாடகைக்கு பிடித்தனர். அதில், ஆதிலா, குழந்தைகளை ஏற்றினர். அவர்களுக்கு துணையாக முனியசாமியை ஏற்றினர். ஆம்னியை பின் தொடர்ந்து சென்றனர். வேதாரண்யத்தில் கொலை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

தாய், மகன், மகள் கொலை செய்தது: ஆம்னியில் இருந்த ஆதிலா, குழந்தைகளை ஸ்கார்பியோவிற்கு மாற்றினர். முனியசாமியை, ஆம்னியில் ஏறி ஊருக்கு செல்லும்படி கூறினர். பின், ஸ்கார்பியோவில் இரவு எட்டு மணிக்கு சாத்தான்குளம் புறப்பட்டனர். வரும் வழியிலேயே ஆதிலா, குழந்தைகளின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி சாகுல், மூவரையும் கொலை செய்தார்[9]. சாகுலின் பாட்டி பக்கீரம்மாளுக்கு சொந்தமான சவுக்கு தோப்புக்கு வந்தனர். அங்கு மூவரையும் குழி தோண்டி புதைத்தனர். கொலை சம்பவம் பக்கீரம்மாளுக்கு தெரிந்தது. அவர், பிணத்தை அப்புறப்படுத்தும்படி எச்சரிக்கை விடுத்தார். இதனால் உடல்கள் தோண்டியெடுப்பு: கடந்த நவ., 10 அன்று இரவு மீண்டும் சவுக்கு தோப்புக்கு வந்து மூவர் உடலையும் தோண்டி எடுத்தனர்[10]. உடல்களை சுமோ காரில் (டிஎன்65 எப் 3999) ஏற்றி, கொடைக்கானல் டம்டம் பாறைக்கு புறப்பட்டனர். இதையெல்லாம் தெரிந்திருந்த அந்த பாட்டி எப்படி சும்மா இருந்தார்? மதுரை நகருக்குள் வராமல் அலங்காநல்லூர் வழியாக வாடிப்பட்டிக்கு வந்தபோது விடியத் தொடங்கி விட்டது. காரில் இருந்த பிணங்களில் துர்நாற்றம் வீசத்கொடங்கியது. எனவே போலீஸ் சோதனைச் சாவடிகளில் மாட்டிக் கொள்வோம் என பயந்து பிணங்களை துணியில் சுற்றி ஆண்டிபட்டி மற்றும் விராலிப்பட்டியில் வீசிச்சென்றுள்ளனர். அதன்பிறகு சாகுல், மணிகண்டன், ஹர்சத் 3 பேரும் மலேசியா தப்பியுள்ளனர் (12-11-2010)[11].

வேதபிரகாஷ்

© 22-11-2010

See first posting, here:

https://islamindia.wordpress.com/2010/11/21/1238-adhila-murder-gang-war-or-religious-persecution/


[3] He owned a mutton shop and operated a food stall in Kula Lumpur, http://www.bernama.com/bernama/v5/newsgeneral.php?id=544350

[5] Their interrogation revealed that Shakul, the prime accused, also running a hotel in Malaysia, had flown to India and plotted to eliminate Adhila due to a running feud with Ahamed. Adhila was angry with Shakul because he had attacked her husband Ahamed a few months ago, an investigating officer said.

[6] ஜெயக்குமார் கூறியுள்ளதில் வேறுபாடு காணப்படுகிறது. கொலை நடந்ததே தஎரியாது என்றும் கூறியிருப்பது நோக்கத்தக்கது.

[8] கீழேயுள்ள மற்றொரு வர்ணனை மாறுபட்டிருப்பதை காணலாம். அதாவது கொலைசெய்யப்பட்ட இடத்தை மாற்றிக் காட்டப்படுகிறது.

[9] மேலேயுள்ள மற்றொரு வர்ணனை மாறுபட்டிருப்பதை காணலாம். அதாவது கொலைசெய்யப்பட்ட இடத்தை மாற்றிக் காட்டப்படுகிறது.

[10] மேலே குறிப்பிட்டபடியுள்ள, “கடந்த 10-11-1010 தேதியன்று காலை சாகுல் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஒரு காரில் பரமக்குடி வந்தார்”, என்பது முரணாக இருக்கிறது. இல்லை அதிகாலை வந்து மாலையில் கொலைசெய்து, இரவுக்கு வந்திருக்க வேண்டும்.

[11]தினகரன்,  கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது, 21-11-2010, http://www.dinakaran.com/highdetail.aspx?id=20857&id1=13