Archive for the ‘முதல் பெண்டாட்டி’ category

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

Wovs of talaq sufferings

முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது: தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் மார்ச் 30, 2017 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி 2017 முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி இஸ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலா‌க் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது[2]. இதுவிசயமாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், அவை அனைத்தும், மொத்தமாக விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Wovs of talaq sufferings- women demand justice

ஷரீயத் பிரிவு பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது: இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது[3]. முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது[4]. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ‌ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Talaq-talaq-talaq

பலமுறைகளில் தலாக், தலாக், தலாக் சொல்லி விவாகரத்து செய்வது: முஸ்லிம் கணவர்கள் எப்படி இந்த முத்தலாக்கை செய்து வருகின்றனர் என்று ஏராளமான செய்திகள் வந்துள்ளன. முன்பு, தபால் அட்டைல் தபால், கூரியர் என்றெல்லாம் இருந்து, பிறகு போன், டெலக்ஸ் என்று மாறி, இப்பொழுது, இணைதள அளவில், மெஸேஜ், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால், அதிகம் பெண்கள் பதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது[6]. ஆனால், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ansari wife- VP

முத்தாலிக், குரானில் இல்லை, மௌலானாக்களால் உருவாக்கப் பட்டதுசல்மா அன்சாரி: நாடு முழுவதும் ‘தலாக்’ விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை ‘தலாக்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் ‘தலாக்’ என்று விவகரத்து பெறுவதும் தபாலில் ‘தலாக்’ என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன. இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது[7]. இந்த நிலையில் ‘தலாக்’ குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[8].

muslim-act-misused-for-marrying-many-women

ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[9].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார். பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்[10]. ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது.  பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார். அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர்.  தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-04-2017

muslim-women-protection-divorce-act-1986

[1] மாலைமலர், முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பதிவு: மார்ச் 30, 2017 15:12.

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/30151231/1077027/SC-bench-refers-TripleTalaq-matter-to-constitution.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, முத்தலாக்அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில், By: Karthikeyan; Published: Tuesday, April 11, 2017, 3:31 [IST]

[4] http://tamil.oneindia.com/news/india/triple-talaq-makes-muslim-women-socially-financially-vulner-279416.html

[5] விகடன், முத்தலாக் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லைஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!, Posted Date : 02:59 (11/04/2017); Last updated : 02:59 (11/04/2017)

[6] http://www.vikatan.com/news/india/86044-triple-talaq-violate-right-to-equality—centre-tells-sc.html

[7] விகடன், முத்தலாக்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி, Posted Date : 21:37 (08/04/2017); Last updated : 21:37 (08/04/2017).

[8] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[9] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[10] http://www.dailythanthi.com/News/India/2017/04/09221142/350-cr-women-support-Shariyat-Triple-Talaq–AIMPLB.vpf

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?

பிப்ரவரி 13, 2014

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?

 

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

முஸ்லிம்களுக்கான  தனித்த  அடையாளம்  எதுவும்  இன்றி  வந்திருந்தார்: இந்நிலையில் யுசரா பங்கு கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி பற்றி செய்தி ஒன்று இப்படி வந்துள்ளது. ஒரு தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான நடிகர் கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த கைவல்யாவுக்கும் கோவையில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என திரையுலமே திரண்டு வந்து வாழ்த்தியது. இதில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவர் யுவன் சங்கர் ராஜா. அவர் முஸ்லிமாக மாறிவிட்டார் என்ற தகவல் பரவியிருந்த நேரத்தில் அவரது வருகை முக்கியமாக பார்க்கப்பட்டது. செய்திகளில் வந்தது போன்று அவர் தாடி எதுவும் வைத்திருக்கவில்லை. முஸ்லிம்களுக்கான தனித்த அடையாளம் எதுவும் இன்றி நீல நிற ஜீன்ஸ், வெள்ளை சட்டை அணிந்து வழக்கம்போல “எளிமையாக” வந்திருந்தார். ஆனால் முகத்தில் உற்சாகம் இல்லை.

 

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அருகில்  சிகப்பு  நிறத்தில்  துப்பட்டா  அணிந்த  ஒரு  முஸ்லிம்  பெண்  அடிக்கடி  யுவனிடம்  நெருக்கமாக  பேசிக்  கொண்டிருந்தார்: வந்தவர் மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்திவிட்டு சிறிது நேரம் மேடையில் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் சிகப்பு நிறத்தில் துப்பட்டா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் நின்று கொண்டிருந்தார். அடிக்கடி யுவனிடம் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். யுவன் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணா? அல்லது அந்த பெண்ணின் உறவுக்கார பெண்ணா அவர் என்று எல்லோரும் முணுமுணுத்தார்கள். இதுபற்றி சில பத்திரிகையாளர்கள் விஷணுவர்த்தனிடம் கேட்டபோது அவர் எனது நண்பர்களில் ஒருவர் அவ்வளவுதான் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு திருமண வேலைகளில் பிசியாகிவிட்டார். திருமணத்துக்கு வந்தவர்கள் எதுவும் பிடிபடாமல் சந்தேகத்தோடு சென்றனர். இதனால் வரவேற்பு நடந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் ஏன் நேரிடையாக அந்த பெண்ணிடமோ, யுவராவிடமோ கேட்கவில்லை என்பதும் விசித்திரம் தான்!

 

Yuvanshankar-Raja-Islam

Yuvanshankar-Raja-Islam

முஸ்லிமாக  மாறி  ஒன்றிற்கு  மேலாக  மனைவியை  வைத்துக்கொள்ள  சினிமாக்காரர்கள்  பயன்படுத்தி  வருகிறார்கள்[1]: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[2]. இதைப்பற்றியும் பகுத்தறிவு ஜீவிகள், முற்போக்குவாதிகள், பரந்த-விரிந்த பொதுவுடமைக்காரர்கள், ஜனநாயக தோழர்கள், அதிநவீனசித்தாந்திகள் முதலியோர் ஒன்றும் சொல்லாமல் இருப்பதும் தெரியவில்லை.

தொழுகை செய்கின்றவன் எல்லோரும் முஸ்லிம் தான் (பெருநியூஸ்): “பெருநியூஸ்” என்ற ஒரு முஸ்லிம் இணைதளம் இதைப் பற்றி ஒரு விளக்கமே கொடுத்துள்ளது, “ஒருவர் எந்த நாட்டை சேர்ந்தவராயிருந்தாலும் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் , எந்த நிறத்தை உடையவராக இருந்தாலும் , எந்த மொழியை பேசினாலும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவர் தான் முஸ்லிம்!! எந்த ஒரு மனிதனும் பிறப்பால் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான், முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் முஸ்லிம் இல்லை. முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி). தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி). அருமை சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுக்கு அல்லாஹ் தவ்பீக் செய்துள்ளான் எனவே இவர் இஸ்லாத்தை படிப்படியாக சரியாக உணர்ந்து கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் நல்லதொரு முஸ்லிமாக , இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஆக்கிக்கொண்டு தொடர்ந்து நேர்வழியில் நிலைத்திருக்க எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் .. இந்த பதிவைப் படிப்பவர்களும் துஆ செய்யுங்கள் .. இன்ஷா அல்லாஹ்”. என்று யுவராவை வரவேற்றுள்ளது . குறிப்பு: இந்த பதிவில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒரு சில படிப்பினைகளோ, செய்திகளோ, நினைவூட்டல்களோ உள்ளது[3], என்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

யுவன்  ஷங்கர்  ராஜா  இஸ்லாத்திற்கு  மாறியது  ஏன்…? இயக்குநர்  அமீர் விளக்கம்! பணம், புகழ், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை,பொதுவாக வாழ்க்கையின் முதல்பாதியில் அமைதியாக இருப்பவர், இரண்டாம் பாதியில் ஆட்டம் போடுவார். அதுபோன்று தான் இப்போது நீயும் செய்கிறாய். என் அனுபவத்தில் சொல்கிறேன், இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம். புகழ், பணம், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை. சினிமாவில் பாதிபேரோடு வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது. சினிமாவில் மிச்சமாவது இந்த வெறுமை மட்டும்தான். ஒருத்தர் சினிமாவில் எவ்வளவு ஜெயிச்சாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று என்னால் முடிந்தளவுக்கு அட்வைஸ் செய்தேன்.என் தேடுதலுக்கான விடை இஸ்லாம் மதத்தில் இருக்கிறது. ஒருநாள் என்னிடம் தான் முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று யுவன் கூறினார். ஏன்? என்று கேட்டபோது என் மனதில் நிம்மதி இல்லை, அமைதி இல்லை, என்னுள் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது. இவை எல்லாவற்றுக்குமான விடையும், என்னுள் இருக்கும் தேடுதலுக்கான விடையும் இஸ்லாம் மதத்தில் உள்ளது. அதனால் தான் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறினார். யுவன் இப்படி கூறுவதற்கு முன்பாக அவரை நான் ஒருமுறை சந்தித்தபோது, வாழ்க்கையில் அவர் எதையோ தொலைத்து தேடுவது போன்று எனக்கு தோன்றியது என்றார்[4].

யுவனை  தொடர்ந்து  இஸ்லாத்தைத்  தழுவப்போகும்   2   இளம்   ஹீரோக்கள்! தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமாக எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே? அப்படியே மற்றொரு காரணம் அவர் புதிதாக தாடி வளர்த்து வருகிறாம். இதனால் இனி அவர் முழு இஸ்லாமியராக தோற்றமளிக்கப்போகிறாராம். தற்போது இவரைத் தொடர்ந்து தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாத்தைத் தழுவப் போகிறார்களாம்[5]. இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்றும் சினிமா வட்டாத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இதில் இரண்டு முன்னணி ஹூரோக்களின் பெயர்கள் பரவலாக பேசப்படுகின்றன. இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். கோடம்பாக்கத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறதோ? அதில் இரு ஹீரோக்களைப் கிசுகிசுவாக தகவல்கள் வெளியாகியுள்ளன[6].

1.   அப்பாவின் செல்லப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயமானதால் இன்றைய கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராராம்[7].

2.   இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறாராம். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியாக்கள் சித்தரித்து வந்தன[8].

இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். தினமணியும் “குசுகுசு”க்களில் இறங்கிவிட்டதா என்று தெரியவில்லை. பொதுவாக அறிவிஜீவிகள் மற்ற சித்தாந்திகள் எல்லாம் தினமலர், தினமணி என்றால் “பார்ப்பன நாளேடுகள்”, “பார்ப்பனத் தூக்கிகள்” “இரண்டையும் ஒழிப்போம்” என்றெல்லாம் கூறுவார்கள், எழுதுவார்கள், பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், அவர்களே இவற்றைக் குறிப்பிட்டு எழுதுகிறார்கள்.

வேதபிரகாஷ்

© 13-02-2014

 


[7] தினமணி, யுவனை  தொடர்ந்து  இஸ்லாத்தைத்  தழுவப்போகும்   2   இளம் ஹீரோக்கள்??, By Web Dinamani, சென்னை, First Published : 11 February 2014 07:33 PM IST

அப்துல் ரஹீம் மூன்று, முஹமது இலியாஸ் நான்கு பெண்களை திருமணம் செய்ததால் கைது!

ஜூலை 13, 2010

நான்கு பெண்களுடன் திருமணம் : “ஜாலி’ கல்யாண மன்னன் கைது!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51030

தினமலர், ஜூலை 30,2010, கோவை : நான்கு பெண்களை திருமணம் செய்து, வரதட்சணை பணத்தில் ஜாலியாக உல்லாச வாழ்க்கை அனுபவித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ்(36); டிரைவர்.

  1. சாம்லா: இவர் சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த சாம்லா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
  2. ரம்லத் நிஷா: இந்த தகவலை மறைத்து இரண்டாவதாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ரம்லத் நிஷா(27) என்பவரை 2005ல் திருமணம் செய்து கொண்டார்.
  3. சோபியா: தெரிந்து ஒருவருடனும், தெரியாமல் மற்றொருவருடனும் குடும்பம் நடத்தி வந்த இலியாஸ்,  மூன்றாவதாக சோபியா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.
  4. மற்றொரு ரம்லத் நிஷா: நான்காவதாக கேரளாவைச் சேர்ந்த மற்றொரு ரம்லத் நிஷாவையும் திருமணம் செய்துள்ளார்.

சமீபத்தில் இவரது நிஜ முகம் பற்றி அறிந்த இரண்டாவது மனைவி ரம்லத் நிஷா, முகமது இலியாசிடம் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, வரதட்சணை கேட்டு முகமது இலியாஸ் துன்புறுத்தினார். செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ரம்லத் நிஷா புகார் அளித்ததையடுத்து, முகமது இலியாஸ் கைது செய்யப்பட்டார்.

அப்துல் ரஹீம் மூன்று பெண்களை திருமணம் செய்ததால் கைது!

முதல் மனைவி – ரஹமத் (13-07-2010): கோவை, ஜூலை 12: கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார்[1]. விருதுநகர், வீரசீலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (32). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், கோவை வந்த இவர், பப்ஸ் வியாபாரம் செய்து வந்தார்.  ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகமத் (22) என்பவரை முதலில் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சம்சுன் நபியாவை இரண்டாவதாக நிக்காஹ் செய்து கொண்டார்: இந் நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், சம்சுன் நபியா (27) என்பவரை திருமணம் செய்தார்.

மூன்றவதாக பசீலா: மகப்பேறுக்காக அவர் தாயார் வீட்டு சென்றபோது, ரத்தினபுரியை சேர்ந்த பசீலா (24) என்பவருடன் அப்துல் ரஹீம் குடும்பம் நடத்தினாராம்.

முதல் மனைவி புகார்: நீண்ட நாள்களாக அவர் வீட்டுக்கு திரும்பாததால், சம்சுன் நபியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இந் நிலையில், தனது கணவர் இரு திருமணங்களைச் செய்து ஏமாற்றியது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நபியா புகார் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்துல் ரஹீமை கைது செய்தனர்[2].

இது மாதிரி ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன: இஸ்லாத்தில், சட்டரீதியாக (அதாவது அவர்களது ஹதீஸ் / ஷரீயத்படி) ஒரு ஆண்மகன் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்றுள்ளபோது, இங்கு என்ன பிரச்சினை வருகிறது என்று தெரியவில்லை. இதுமாதிரி, ஏற்கெனவே பல வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், அவை என்னவாயின என்று ஊடகங்கள் வெளியிடுவதில்லை.


[1]தினமணி, மூன்று திருமணம் செய்த பப்ஸ் வியாபாரி கைது,  First Published : 13 Jul 2010 08:35:35 AM IST; http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=271233&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=3………….81

[2] http://www.dailythanthi.com/article.asp?NewsID=579784&disdate=7/13/2010&advt=2