Archive for the ‘முசிரி’ category

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1)

திசெம்பர் 6, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1)

Malikafur attack

பாண்டியர் துலுக்கர் தென்னிந்தியாவின் மீது படையெடுக்க இடம் கொடுத்தமுறையில் செயல்பட்டது: மாற வர்மன் குலசேகர பாண்டியன் – I [1268] கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் கூறுவதும், துலுக்கரின் அவைப்புலவர்கள் மற்றும் சுற்றிப்பார்க்க வந்தவர்ககளின் தென்னிந்திய படையெடுப்புக் கொள்ளை விவரங்களும் எதிரும்-புதிருமாக இருக்கின்றன. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசப் ஹொய்சள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான். ஆனால், கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான். இதனால், சோழர்காலத்து பாதுகாப்பு கொண்ட கட்டுபாடு, கடற்படை, மற்ற அரசர்களின் நட்புறவு முதலியை பாதிக்கப் பட்டது என்று தெரிகிறது. பௌத்தர்களும் விரோதியானார்கள் எனும் போது, பாண்டியர் பெருமளவில் தென்னிந்தியாவின் கூட்டமைப்பை, கட்டுக்கோப்பை பாதித்தனர் என்றாகிறது. மேலும், துலுக்கரை தென்னிந்தியாவில் வர முடியாமல், ஹோய்சளர் யுக்திகளுடன் செயல்பட்டு வந்த நிலையில், அவர்களையும் வென்றது, அவர்களைச் செயலிழக்கச்செய்தது. அதாவது, துலுக்கர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வர எளிதாகியது.

Tamilnadu ports

கடற்கரை பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது இந்து விரோதமானது: மாற வர்மன் குலசேகர பாண்டியன் – I ற்கு இரண்டு மகன்கள் சுந்தர பாண்டியன் [வேறொரு பெண்ணிற்கு / காமக்கிழத்திற்குப் பிறந்தவன்] மற்றும் வீர பாண்டியன் [அரசியின் மூலம் பிறந்தவன்] கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை ஆட்சி புரிந்தான். குலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவன் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரேபியன் குறிப்பிட்டுள்ளதாக, ஜே.பி. ப்ரஷாந்த் மோரே குறிப்பிடுகிறார்[1].  வியாபாரம் நிமித்தமாக ஏஜென்ட் போல தந்ததை, அவ்விடங்களே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன போல எழுதி வைத்திருப்பது தெரிகிறது. எப்படியாகிலும், சோழர்கள் காலத்தில் முக்கியமாக இருந்த கடற்கரை பகுதிகளில் துலுக்கர் ஆதிக்கம் செல்லுதினார்கள், அதனால், அங்குள்ள கோவில்கள் இடிக்கப்பட்டன என்று தெரிகிறது. இப்பொழுதுள்ள மசூதி-தர்காக்களின் உட்புற சிற்பத் தூண்கள், கருவற்றை, மண்டபங்கள், குளங்கள் முதலியவை அவற்றை எடுத்துக் காட்டுகின்றன. வியாபாரத்திற்கு, முக்கியமாக குதிரை இறக்குமதி போன்றவற்றிற்கு ஏஜென்டுகள், தரகர்கள், துபாஷியாக இருந்தவர்கள், அவ்வாறு நெருக்கமாகினர் என்று தெரிகிறது. மேலும் படைகளிலும், துலுக்கர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

Vira-Sundara Pandyan - imaginary

சுந்தர பாண்டியன் அலாவுத்தீன் கில்ஜியிடம் உதவி கேட்டானா?: சகோதர போட்டி துவேசத்தில், துலுக்கரைப் போன்றே சதியில், துரோகத்தில், கொலைகளில் ஈடுபட்டது, அம்மண்ணில் இருந்த பாரம்பரியம், கலாச்சாரம், நாகரிகம் முதலியவற்றிற்கே ஒவ்வாததாகும். இருப்பினும் சுந்தர பாண்டியன் தனது தந்தையை – மாற வர்மன் குலசேகர பாண்டியன் – 1310 / 1311ல் கொலை செய்தது திகைப்படையச் செய்தது. இக்கொலைக்குப் பின்னரும், தகியுத்தீன் தனது பதவியைத் தொடர்ந்தான் என்பதும் ஆச்சரியமாக உள்ளது. 1311ல் மாலிகாபூர் மதுரையை நோக்கி படையெடுத்து வந்து, துலுக்கப்படைகள் தாக்கியபோது, இந்த இரு பாண்டியர்களும் புறமுதுக்கிட்டு ஓடி ஒளிந்தனர். சுந்தர பாண்டியன், அலாவுத்தின் கில்ஜியிடம் தில்லிக்கே சென்று சரணடைந்தான், என்று சரித்திராசிரியர்கள் எழுதுகின்றனர். அப்படியென்றால், சகோதரனைக் காட்டிக் கொடுத்தவனே அவன் தான் என்றாகிறது. ஆனால், வீர பாண்டியன் உள்ளூர் ஆதரவினால் தப்பித்தான். மாலிக்காபூர் கோவிலை கொள்ளையெடித்து, இடித்து, எரித்தான். அதாவது அந்த காலகட்டத்தில் தான், துலுக்கர்களின் அழிப்பிற்குண்டான கோவில்களை அசுத்தமாக, மிலேச்சர்களினால் தாக்கப்பட்டது என்ற முறையில் பூஜை-புனஸ்காரம் விடுத்து, ஒதுக்கி வைத்தனர் என்று தெரிகிறது. பிறகு, பரிகாரம் போன்ற முறைகளினால், அவை மீட்டெடுக்கப் பட்டன. விஜய நகர காலத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள் புதிப்பிக்கப் பட்டன.

Malikafur attack -tent

பாண்டியனின் துரோகத்தால், துலுக்கர் ஆதிக்கம் பெற்றது: சுந்தர பாண்டியனுக்கு ஆதரவாக துலுக்கப்படை ஒன்று ஆதரவாக நிறுத்தப் பட்டது. ஏனெனில், 1313ல் கேரளத்து ராஜா ரவி வர்மன், தென் பெண்ணாரைத் தாண்டி, பூந்தமல்லி மற்றும் நெல்லூரை பிடித்துக் கொண்டான் என்றுள்ளது. அதாவது பாண்டியரை வென்றான் என்றாகிறது. அதனால், குர்ஷூ கானை [இவனும் இந்துவாக இருந்து துலுக்கனாக மதமாற்றப்பட்டவன்] 1318ல் மலபாருக்கு அனுப்பியது, மறுபடியும், அதனை, துலுக்கர்களின் கட்டுக்குள் கொண்டு வர அனுப்பியிருக்க வேண்டும். அமீர் குர்ஷூ எழுதியவற்றை வைத்து தான், சரித்திராசிரியர்கள் இத்தகைய விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். வெறும் கலிமா சொல்ல வைத்தே, துலுக்கராக்கினர், அவர்கள் “பாதி துலுக்கர்” அதாவது “பாதி இந்துக்கள்” என்று அமீர் குர்ஷூ எழுதி வைத்தான். 1335ல் முகமது துக்ளக்கின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு துலுக்க ஆட்சி மதுரையில் ஏற்படுத்தப் பட்டது. துலுக்க ஆவணங்கள் பிரகடனப்படுத்திக் கொள்வது போல, அவர்களின் ஆதிக்கம் முழுமையாக இருந்ததா என்பது சந்தேகமே.

Malikafur attack and kill people

கொடியகுரூரதுலுக்க அரக்கர்களின் முடிவு அவ்வாறே அமைந்தது: 312 யானைகள், 20 ஆயிரம் குதிரைகள், தங்கம், வைரம், முத்து, மரகதம், மாணிக்கம் என்று கொள்ளையடித்த பொருட்களுடன் தில்லிக்குச் சென்ற மாலிக் கபூருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அலாவுதீன் கில்ஜி பரிசாகக் கொண்டுவந்த பொருட்களை அனைவரும் காணும்படியாக பொது தர்பார் நடத்தி, ‘மாலிக் நைப்’ என்ற பட்டத்தை அனனுக்குக் கொடுத்தான். 1316-ல் அலாவுதீன் கில்ஜியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு படுக்கையில் வீழ்ந்தான், அந்நிலையில், விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டான். மாலிக் கபூர், ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டான். கில்ஜி வாரிசுகளின் கண்களைக் குருடாக்கிவிட்டு மீதம் இருந்த சிறுவனை கைப்பொம்மை போல அரியணையில் அமர்த்தி, தானே டெல்லியை ஆளத் தொடங்கினான். ஆனால், கில்ஜியின் குடும்பத்தினர், மாலிக் கபூர் பாதுகாவலர்களைக் வைத்தே, அவனை நள்ளிரவில் சுற்றி வளைத்து, கை வேறு கால் வேறாக வெட்டிக் கொன்றனர். இவ்வாறு கில்ஜி மற்றும் மாலிகாபூர் கொடிய-குரூர-துலுக்க அரக்கர்களின் முடிவு அமைந்தது. இங்கு கருவரையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிகபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்கு எதிரே மாலிகபூரால் உடைக்கப்பட்ட லிங்கம் காட்சிக்கு உள்ளது.

Kampanna saw the broken linga by Malikafur

மாலிக்காபூருக்குப் பிறகு தங்கி விட்ட துலுக்கரின் நிலை, திட்டம் முதலியன: மாலிகாபூர் 1311லேயே தில்லிக்குத் திரும்பி சென்று விட்டான். இருப்பினும், அவனுடன் வந்தவர்களில் சிலர் தங்கி விட்டனர்.  அவர்கள் தான் பகீர், சாமியார் போல திரிந்து தகவல்களை அறிந்து தில்லிக்கு அனுப்பி வைத்தவர்கள் எனலாம். ஜெசுவைட் என்கின்ற கத்தோலிக்க கிருத்துவ சாமியார்களும் இதே முறையைக் கையாண்டனர்[2]. முகமது துக்ளக் கி.பி.1324ல், அதே ஆசையுடன் மதுரைக்கு படைகளை அனுப்பி வைத்தான். பாண்டியர்களை தெற்காகத் துரத்திவிட்டதால், 1334 முதல் 1378 வரை மதுரையை சுல்தான்கள் பெயரால் பட்டாணியர்கள் எட்டுப்பேர்கள் மதுரையை ஆண்டு வந்து இருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் உடெளசி சலாதீன், குப்தீன், கியாஸ் உத்தீன், நாசீர் உத்தின், அடிலபெருதீன், முபராக்சா, அல்லாவுதீன், சிக்கந்தர். இவர்களடைய கொடுங்கோல் ஆட்சி என்றும் வரலாற்று ஆசிரியர் – 60,000 பட்டாணியர்கள் மதுரை நகர்க்குள் ஆயுதம் கையில் வைத்துக் கொண்டு தங்கி இருந்து தமிழ்நாட்டில் கொள்கையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் மதுரை மற்றும் சுற்றியுள்ள நகரங்கள், பகுதிகளில், அதிகமான அளவில், சேதங்கள் விளைந்தன.

© வேதபிரகாஷ்

06-12-2017

Malikafur attack -atrocities- imaginary

[1] J. B. Prashant More, Muslim Identity, Print Culture, and the Dravidian Factor in Tamil Nadu, Orient Longman, New Delhi, 2004, pp.9-12.

[2] ஜெசுவைட் பாதிரிகள் தங்களது கடிதங்கள், குறிப்புகள் முதலியவற்றில் இதைப் பற்றி எழுதியுள்ளனர். மதம் தவிர, பொருளாதாரம், பொருட்கள் உற்பத்தி செய்யும் முறை முதலியவற்றைப் பற்றி விவரமாக எழுதி அனுப்ப்பியுள்ளனர்.