Archive for the ‘முகம்மது தாசிம்’ category

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

26-10-2022 (புதன் கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.

 இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

27-10-2022 (வியாழன் கிழமை):  தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-10-2022 (வெள்ளிக் கிழமை):  கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].

109 பொருட்கள் பறிமுதல்அவற்றின் எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு”  ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].

கார்கள் பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].  இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.

கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு முதல் கார் குண்டு வெடிப்பு வரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….”  என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”,  மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று  வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] மாலைமலர், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்என்... விசாரணை அதிகாரி நியமனம்,  Byமாலை மலர்28 அக்டோபர் 2022 4:53 PM

[2] https://www.maalaimalar.com/news/state/coimbatore-car-blast-incident-nia-appointment-of-investigating-officer-529573?infinitescroll=1

[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka.  Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.

[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? – போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/887653-60-kg-of-ammunition-seized.html

[6] தினத்தந்தி, கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல், அக்டோபர் 29, 4:47 am

[7] https://www.dailythanthi.com/News/State/109-items-seized-from-car-blast-victim-jamesha-mubins-house-824772

[8] மாலை மலர், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல், By மாலை மலர்,27 அக்டோபர் 2022 9:40 AM

[9] https://www.maalaimalar.com/news/state/tamil-news-100-kg-explosives-seized-from-jamesha-mubins-house-528818?infinitescroll=1

[10] இ.டிவி.ப்சாரத்,கார் வெடிப்புச்சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்,

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/after-car-blast-incident-in-coimbatore-police-seized-unattended-two-wheeler-and-cars-parked-on-the-roads/tamil-nadu20221028160747877877082

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற10 கார்கள் பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-incident-reverberates-10-orphaned-cars-seized-in-trichy-532243/

மேலப்பாளையத்தில் மறுபடியும் முஸ்லிம்களின் வீடுகள்-அலுவகங்கங்களில் சோதனை, வெடிப்பொருட்கள் பறிமுதல், கைது, இத்யாதி (1)

ஓகஸ்ட் 1, 2013

மேலப்பாளையத்தில் மறுபடியும் முஸ்லிம்களின் வீடுகள்-அலுவகங்கங்களில் சோதனை, வெடிப்பொருட்கள் பறிமுதல், கைது, இத்யாதி (1)

CBCID raid at Kichan Buhari office

மேலப்பாளையத்தில் சிலர், வெடிகுண்டு பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது: இந்து அமைப்பு தலைவர்கள் மற்றும் பா.ஜ., பிரமுகர் கொலைகளில், பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, “பறவை’ பாதுஷா, கிச்சான் புகாரி ஆகியோர், மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இருவரிடமும் விசாரிக்க, பெங்களூருவில், தமிழக எஸ்.ஐ.டி., போலீசார் முகாமிட்டுள்ளனர். சேலம் பா.ஜ., பிரமுகர், ஆடிட்டர் ரமேஷ் கொலை சம்பவத்துக்கு பின், தமிழக உளவு அமைப்புக்கள் தீவிர விசாரணையில் இறங்கியதால், திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் சிலர், வெடிகுண்டு பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட 5 பேரின் வீடுகள் உள்பட 8 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை (30-07-2013) சோதனை நடத்தினர்.

Five arrested in Melappalayam for hoarding explosives

மேலப்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த வெடிபொருள்கள் மற்றும்  142 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல்: மேலப்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 17.5 கிலோ வெடிபொருள்கள் மற்றும் 142 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் கடந்த சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்[1]. அங்கு சோதனை நடத்திய போது, பெங்களூரு வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய, “பறவை’ பாதுஷா மற்றும் கிச்சான் புகாரியின் கூட்டாளிகள்,

  1. முகம்மது தாசிம், 33,
  2. கட்ட சாகுல், 38,
  3. நூரூல் ஹமீது, 22,
  4. அன்வர் பிஸ்மி, 20,
  5. சம்சுதீன், 20,

ஆகியோர், கைது செய்யப்பட்டனர்[2]. அவர்களிடம் இருந்து, வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவர்களில் முகமது தாசிம் மற்றும் கட்ட சாகுல் ஆகிய இருவருக்கும் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றங்கள் செய்பவர்கள் தொடர்ந்து அதே குற்றங்களை செய்து வருகிறார்கள் என்பதை முன்னமே பலமுறை எடுத்துக் காட்டப்பட்டது. சேலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ், வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலைகளில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Meappaayam arrest Juy 2013

கொலை திட்டத்தை,  அரங்கேற்றுவதில் கிச்சான் புகாரி, “பறவை‘  பாதுஷா ஆகியோர்,  மூளையாக செயல்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளோம்  –  போலீஸ்: இவர்களிடம், பாளையங்கோட்டை, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில், எஸ்.ஐ.டி., அதிகாரிகள், விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிச்சான் புகாரி, “பறவை’ பாதுஷா ஆகியோரை, விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன் படி இன்று, “பறவை’ பாதுஷாவை, கஸ்டடியில் எடுக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக, அதிகாரிகள், பெங்களூருவில் முகாமிட்டு உள்ளனர். இது குறித்து, எஸ்.ஐ.டி., போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: “பெங்களூரு, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள கிச்சான் புகாரி, 2012ல், சேலம் மத்திய சிறையில், ஆறு மாதம் அடைக்கப்பட்டு இருந்தான். அப்போது, சேலம் உள்ளூர் ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. பின், பெங்களூரு சிறைக்கு மாற்றப்பட்டான். சேலம் தொடர்பை, சாதகமாக பயன்படுத்திய கிச்சான் புகாரி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, கூட்டாளி, “பறவைபாதுஷாவுடன் சேர்ந்து, தமிழகத்தில், இந்து ஆதரவு அமைப்பு தலைவர்களை, கொல்ல திட்டத்தை வகுத்து, ஆதரவாளர்கள் மூலம், கொலை செய்து வந்துள்ளான். கொலை திட்டத்தை, அரங்கேற்றுவதில் கிச்சான் புகாரி, “பறவைபாதுஷா ஆகியோர், மூளையாக செயல்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளோம்[3]. இதில், இன்று, “பறவைபாதுஷாவையும், அதைத் தொடர்ந்து, கிச்சான் புகாரியையும் விசாரிக்க உள்ளோம். அதன் பின், மேலப்பாளையத்தில், வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, ஐந்து பேரை, தனித்தனியாக விசாரணை நடத்த உள்ளோம். இந்த விசாரணைக்கு பின்னரே, கொலையாளிகள் குறித்த முழு விவரங்களும் தெரிய வரும். இவர்களுக்கு உதவிய உள்ளூர் பிரமுகர்களைக் கண்டுபிடித்து, அவர்களிடம் விசாரணையும் முடிக்கப்பட்டு விட்டது[4]. இதில் சிலரை, குற்றவாளிகளாக உறுதி செய்துள்ளோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர்”, இவ்வாறு, அதிகாரி கூறினார்.

Five arrested in Melappalayam - Musims protest, argue

வீடுகளில் சோதனை  –  முஸ்லிம்களின் ஏதிர்ப்பு[5]: இந்நிலையில், மேலப்பாளையத்தில் 8 இடங்களில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் பிறைச்சந்திரன், சிறப்புப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நாகராஜன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையை நடத்தினர்[6]. இந்த 8 இடங்களிலும் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், அங்கிருந்தவர்கள் வைத்திருந்த அனைத்து செல்போன்களையும் பரிசோதித்து, விவரங்களைப் பதிவு செய்து கொண்டனர். அப்போது பங்களாப்பா தெருவில் உள்ள வீட்டிலிருந்து 17.5 கிலோ வெடிபொருள்கள் (ஜெலட்டின் குச்சிகள்), 142 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெடிபொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது வீட்டின் உரிமையாளரான பெண்ணுக்குத் தெரியாது எனக் கூறப்படுகிறது[7]. அவரது உறவினரான அதே தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பிஸ்மி (20) என்பவர் அந்த பார்சலை கொண்டுவந்து, வெளிநாட்டில் உள்ள நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றும், சில நாள்கள் இங்கேயே இருக்கட்டும் என்றும் கூறி பார்சலை அந்த வீட்டில் வைத்தாராம்[8]. முகமது தாசிம், சாகுல் ஹமீது ஆகிய இருவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கிச்சான் புகாரியின் அலுவகமான CTS (சிறுபான்மை உதவி அறக்கட்டளை) மற்றும் SDPI கட்சியின் சாகுல் ஹமீது உஸ்மானி மற்றும் மனித நேயக்கட்சியின் மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் முதலியோரின் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டபோது, போலீசாருடன் வாதத்தில் ஈடுபட்டனர்[9]. TCM - Melappalayam search by CBCIDஅதனை அதிரடி சோதனை, மேலப்பாளையத்தில் பரபரப்பு, கைது வேட்டை என்றெல்லாம் செய்திகள் வெளியிட்டன. இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம்கள் முதலில் தீவிரவாத நிகழ்சிகள் நடப்பதை ஏன் தடுக்காமல் இருக்கிறார்கள்?

Bomb plnters to kill Advani

ஜனவரி  2009ல் கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரியின் கையாட்கள்ஷேக்பாதுஷா, அபுதாகிர்: நெல்லை மாவட்டம் புளியரை சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் கடந்த 26ம் தேதி பண்பொழி தைக்கா முக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மேலப்பாளையத்தை சேர்ந்த சேட் பாதுஷா, பெரிய குப்தா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அபுதாகீர் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அவர்கள் வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் ரசாயான பொருட்கள் வைத்திருந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்து அமைப்பை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்தவற்காக மேலப்பாளையத்தை சேர்ந்த கி்ச்சான்புகாரி கேட்டு கொண்டதற்கு இணங்க மேக்கரையை சேர்ந்த கோபால் என்பவரிடம் இருந்து வெடிகுண்டு தாயரிக்க உதவும் ரசாயான பொருட்களை வாங்கி வந்ததாக அவர்கள் கூறினர்[10]. இதையடுத்து மேலப்பாளையத்தை சேர்ந்த அபுதாகீர், சேட் பாதுஷா, கீச்சான் புகாரி, முல்லன், செய்யதலி, மேக்கரையை சேர்ந்த சாதிக் அலி, ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க் பரிந்துரையின் பேரில் இவர்கள் 5 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்தார்[11]. 2009யே, “இந்து அமைப்பை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்தவற்காக மேலப்பாளையத்தை சேர்ந்த கி்ச்சான்புகாரி கேட்டு கொண்டதற்கு இணங்க மேக்கரையை சேர்ந்த கோபால் என்பவரிடம் இருந்து வெடிகுண்டு தாயரிக்க உதவும் ரசாயான பொருட்களை வாங்கி வந்ததாக” முஸிம்கள் சொன்னபோதே, ஏன் விசாரணை, சோதனை முதலியவை முடுக்கி விடப்படவில்லை? திமுக ஆட்சியில் இருந்ததால், ஓட்டுகள் போய்விட்டும் என்று கடமை செய்யாமல் போலீஸார் தடுக்கப்பட்டனரா? இப்பொழுது, ஜெயலலிதா வந்தவுடன் போலீஸார் வேலை செய்கின்றனரா? 2009-2013 ஆண்டுகளில் எவ்வளவோ செய்திருக்கலாமே? ஒருவேளை இக்கொலகளே தடுக்கப் பட்டிருக்கலாமே? ஆகவே, இந்திய அரசியவாதிகள் தீவிரவாதம் என்று வரும்போது, “ஓட்டுவங்கி” பேரங்களை விடுத்து கடமைகளை செய்யவேண்டும். இப்தர் பார்ட்டிகள், நடத்தி கஞ்சி குடித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.

TMMK notice - not to attack non-muslim places of worship

2002  ஹாமித் கைது  –  தமுமுகவின் அறிக்கை: “ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும்” என்ற தலைப்பில், கீழ்கண்ட நோட்டீஸ் கணப்படுகிறது[12]. முன்னாள் மாநிலத் தலைவருமான மவ்லவி ஹாமித் பக்ரி 2002 ஆம் ஆண்டு புனித ரமலான் மாதம் பிறை 27 ல் (2/12/2002) கைது செய்யப்பட்டார்[13]. முக்கியமாக அதில், “அப்பாவிகளைக் கொல்வதையும், பிற மத வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவதையும் யாரேனும் நியாயப்படுத்தினால் அவர்கள் இறைவன் முன்லையிலும் குற்றவாளிகள் என்பதால் எள் முனையளவும் இத்தகையோருக்காக தமுமுக எந்த விதமான உதவியும் செய்யாது என்பதை திட்டவட்டமாக அறிவிக்கின்றோம்”, என்பது கவனிக்கத் தக்கது. “அப்பாவிகளைக் கொல்வதையும், பிற மத வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவதையும்…….”, என்றால் அவை எப்படி இஸ்லாத்தில் வந்துள்ளன என்று முதலில் ஆராய வேண்டும். ஆனால், சரித்திரம் ஏற்கெனவே முஸ்லிம்கள் ஏன் அப்படி செய்துள்ளனர் என்று எடுத்துக் காட்டியுள்ளது. “முஸ்லிம்களின் அரசவை நிகழ்சிகள்” என்பவற்றில் அவர்களே விளக்கமாக விவரித்துள்ளனர். ஆகவே, முஸ்லிம்கள் முதலில் அத்தகைய கொலைவெறியை தணிக்க வேண்டும், அது உள்ளவர்களைக் கண்டிக்க வேண்டும், ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். “இத்தகையோருக்காக தமுமுக எந்த விதமான உதவியும் செய்யாது” என்றுதான் சொல்கிறார்களே தவிர, அவ்வாறு செய்யாதே என்று உறுதியாக சொவதில்லை. வருடாவருடம், இத்தகைய கொலைகள், குண்டு வெடிப்புகள், வெடிப்பொருட்கள் பறிமுதல், கைது,…………..என்று நடந்து கொண்டிருப்பதால், முஸ்லீம் பெரியவர்கள் குறிப்பாக, இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் கூட்டாத்தாருடன் சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அத்தகைய, “தீவிரவாதிகளாக்கும் கூட்டாத்தார்” பற்றி தெரிய வரும்போது, முஸிம்கள் என்று அமைதி காப்பதை விடுத்து, போலீஸாருக்கு அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் தீவிரவாதம் அடங்கும், குறையும்.

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot

முஸ்லிம்கள்  இவ்வாறு  நடப்பதை  ஏன்  தடுக்காமல்  இருக்கிறார்கள்?: சிறையிருந்தே அரசியவாதிகள், குறிப்பாக –

  • இந்து தலைவர்கள் கொல்லப்படவேண்டும் என்பது,
  • வெடிப்பொருட்கள் சேகரிப்பது,
  • குண்டுகள் தயாரிப்பது,
  • பலிக்கடாக்களின் வீடுகள், இடங்கள் முதலியவற்றை நோட்டம் இடுவது,
  • விவரங்களை சேகரிப்பது,
  • பிறகு சமயம் பார்த்து குண்டுகள் வைப்பது
  • அல்லது தாக்கிக் கொலை செய்வது, ……………………..
  • அதற்காக பொருள் உதவி செய்வது.
  • முஸ்லிம்கள் என்பதால் அமைதியாக இருப்பது.

இதற்கு பெயர் தான் “ஸ்லீப்பர் செல்” என்பது. சிறையிலிருந்தே தீவிரவாத குரூரங்கள் நடத்தப் படுகின்றன என்றால், எப்படி முடியும்? அப்பாவி மக்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? முதலில் தாக்கப்படுபவர்கள் தாங்கள் தாக்கப்படப் போகிறோம் என்பதை எப்படி அறிவது? எப்பொழுதுமே தீவிரவாதிகளின் உரிமைகள் தாம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது, பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது,…………..ஆனால், தீவிரவாத குரூரங்களினால் பாதிக்கப் பட்டவர்களைப் பற்றி யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பது கிடையாது.

வேதபிரகாஷ்

© 01-08-2013


[4] சிறப்பு நிருபர், தினமலர், கிச்சான்புகாரி, “பறவைபாதுஷாவிடம்விசாரணை: தமிழக  எஸ்..டி., போலீசார்பெங்களூருவில்முகாம், பதிவு செய்த நாள் : ஜூலை 30, 2013, 23:14 IST

[7] இது சஞ்சய் தத் வழக்கு போல உள்ளது. அதிலும், ஒரு இஸ்லாமிய பெண் இவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார். உச்சநீதி மன்றம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது.

[10] இந்து பிரமுகர்களை கொல்ல சதி-நெல்லையில் ஐவர் கைது Published: Monday, January 5, 2009, 11:21 [IST], Read more at: http://tamil.oneindia.in/news/2009/01/05/tn-five-arrested-for-conspiracy-to-kill-hindu-lead.html