Archive for the ‘முகமது ஷேக் தாவூத்’ category

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (4)

மார்ச் 22, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (4)

மூன்றும் மூன்றும் ஆறு! முஸ்லீம் அரசியலின் தந்திரம்! முஸ்லீம் லீக் / கட்சிகள் எவ்வாறு சண்டை போடுவது போல நாடகம் ஆடி, தனித்தனியாக ஆறு தொகுதிகளைப் பெற்றுவிட்டன என்பதை எட்த்துக் கட்டப்பட்டது. அன்பழகனே பலிக்காடாவாக்கப் பட்டார்[1]. திமுஇக-அதிமுக இரண்டிலும் சேர்த்து ஆறு தொகுதிகலைப் பெற்றனர்[2]. அவ்வாறு இரட்டை வேடம் போட்டனர் என்று அப்பொழுதே எடுத்துக் கட்டப் பட்டது[3]. ஆக, ஏதோ சண்டைப் போட்டுக் கொண்டது போலவும், அதிரடியாக திட்டிக் கொண்டு, வசை பாடி, இணைத்தளங்களில் ஏதோ இவர்கள் எல்லோருமே அடிமையாகி சரண்டர் ஆகி விட்டது போல தோற்றத்தை உண்டாக்கி விட்டு, இப்பொழுது தனித்தனியாக ஆறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதாவது, எங்கும் அவர்கள் நாடகமாடியது போல எதிர்து போட்டியிடவில்லை. இதோ பட்டியல்:

வேட்பாளர் தொகுதி கட்சி கூட்டணி
ராமநாதபுரம் ஜவாஹிருல்லா மனித நேய மக்கள் கட்சி அ.தி.மு.க
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தமீமுன் அன்சாரி
ஆம்பூர் அஸ்லாம் பாஷா
வானியம்பாடி அப்துல் பாசித் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் .தி.மு.க
சென்னை துறைமுகம் அல்டேப் உசேன்
நாகை முகமது ஷேக் தாவூத்

திமுக-அதிமுக; கருணாநிதி-ஜெயலிதா: ஆனால் முஸ்லீம்கள் ஒன்றுதான்: திமுகவினர் அதிமுகவினரைத் திட்டுவார்கள்; அதிமுகவினர் திமுகவினரைத் திட்டுவார்கள்; கருணாநிதி ஜெயலலிதாவை வசை பாடுவார்; ஜெயலலிதா கருணாநிதியை வசை பாடுவார்; ஆனால், முஸ்லீம்கள் எல்லோரையும் திட்டுவர்-வசை பாடுவர்! ஆஹா, இதுதான் ராஜ தந்திரம? இல்லை பெரியாரை வென்ற ஜின்னாத்தனமா? ஜின்னா எப்படி பெரியாரை ஏமாற்றினர் என்று முன்னமே எட்த்துக் காட்டப்பட்டது. இனி பார்ப்போம், மேடைகளில் இவர்கள் எவ்வாறு பேசப் போகிறார்கள் என்று!

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு:ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா போட்டி: தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அந்தக் கட்சி நேற்று அறிவித்தது.”ராமநாதபுரம் தொகுதியில் ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் ம.ம.க., துணை பொதுச்செயலர் தமீமுன் அன்சாரி, ஆம்பூரில் வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்லாம் பாஷா போட்டியிடுவர்’ என, த.மு.மு.க., பொதுச்செயலர் ஹைதர் அலி அறிவித்தார். பின், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர்[4].

1. ஜவாஹிருல்லா ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு வயது 50, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்தவர்; சென்னையில் வசிக்கிறார். பி.காம்., எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி., பட்டங்கள் பெற்றவர். வட்டியில்லா வங்கி தொடர்பாக ஆய்வு செய்து சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 25 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். இந்திய சிறுபான்மை மக்கள் சார்பில் 2002ல் ஜெனிவாவில் உள்ள, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் ஆய்வறிக்கை சமர்பித்தவர். த.மு.மு.க., மற்றும் ம.ம.க., தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் ம.ம.க., சார்பில் போட்டியிட்டார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

2. தமீமுன் அன்சாரிசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்கு வயது 34. நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர். சென்னை திருவல்லிக்கேணியில் பல ஆண்டுகளாக வசிக்கிறார். சென்னை புதுக்கல்லூரியில் பி.ஏ., கார்ப்பரேட் பட்டம் பெற்றார். புதுக் கல்லூரி மாணவர் சங்க தலைவராக இருந்துள்ளார். ம.ம.க., மாநில துணை பொதுச் செயலராக உள்ளார். தமிழ், ஆங்கில மொழி தெரிந்தவர்.

3. அஸ்லாம் பாஷா ஆம்பூர்: ஆம்பூர் வேட்பாளர் அஸ்லாம் பாஷாவுக்கு வயது 42. ஆம்பூர் அருகே புதூர் கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர். பி.ஏ., பட்டதாரி. தமிழ், ஆங்கிலம், உருது மொழி தெரிந்தவர். ம.ம.க.,வில் வேலூர் மேற்கு மாவட்ட செயலராக உள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்‌கள் அறிவிப்பு: தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இருந்து போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இன்று காலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். சந்திப்புக்குப் பின்னர் முஸ்லீம் போட்டியிடும் வானியம்பாடி தொகுதிக்கு அப்துல் பாசித், சென்னை துறைமுகம் தொகுதிக்கு திருப்பூர் அல்டேப் உசேன், நாகை தொகுதிக்கு முகமது ஷேக் தாவூத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்[5].

4. அல்தாப் உசேன் துறைமுகம் தொகுதி: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மாடர்ன் சிட்டி தெருவில் வசிக்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், துறைமுகம் தொகுதி முன்னாள் எம்.எல். ஏ.,வுமான திருப்பூர் மைதீனின் மகன்.60 வயது நிறைந்த அல்தாப் உசேன் எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகள் தெரிந்தவர். டன்லப் நிறுவன முன்னாள் ஊழியர். தடா சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் தர்ணா செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டவர்.
தமிழ் மாநில தேசிய லீக் கட்சியை நடத்திய இவர், கடந்த மார்ச் 10ல் தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்தார்.

5. அப்துல் பாசித் வாணியம்பாடி: வாணியம்பாடி வேட்பாளர் அப்துல் பாசித், வேலூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவை சேர்ந்தவர். வயது 48. டிப்ளமோ பட்டதாரியான இவர், தமிழ், ஆங்கிலம், உருது மொழி தெரிந்தவர். தோல் காலணி இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்கிறார். வாணியம்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ.,.
6. முகம்மது ஷேக் தாவூது நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் வேட்பாளர், முகம்மது ஷேக் தாவூதுக்கு வயது 60. ஆலியா ஷேக் தாவூது மரைக்காயர் என அழைக்கப்படும் இவர், நாகூர் தெற்கு தெருவில் வசிக்கிறார். டிப்ளமா பட்டதாரி. நாகூர் கல்வி அறக்கட்டளை மற்றும் கவுதியா சங்க தலைவராக உள்ளார். நாகூர் மாடர்ன் மெட்ரிக் பள்ளி தாளாளரான இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேச தெரிந்தவர்

வேதபிரகாஷ்

22-03-2011


[1] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3),

https://islamindia.wordpress.com/2011/03/16/anbazhagan-scapegoat-sacrificed-iuml-dmk/

[2] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2),

https://islamindia.wordpress.com/2011/03/15/flip-floppin-iuml-muslims-dravidian-parties/

[3] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1),

https://islamindia.wordpress.com/2011/03/11/double-games-of-muslim-league-parties/

[4] தினமலர், மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு:ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா போட்டி, மார்ச் 22, 2011

http://election.dinamalar.com/election_news_detail.php?id=891

[5] தினமலர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர்‌கள் அறிவிப்பு, மார்ச் 18, 2011

http://election.dinamalar.com/election_news_detail.php?id=534