Archive for the ‘முகமது ரியாஷ்’ category

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

எஸ்.., உட்பட 27 பேருக்கு வெகுமதி: கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், சதிச்செயலுக்கு திட்டமிட்ட ஜமேஷா முபீன் பலியானார். வழக்கு விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய, 27 பேருக்கு, நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்[1], என்று ஊடகங்கள் கூருகின்றன.. சம்பவம் நடந்த நாளன்று, உக்கடம் எஸ்.ஐ., செல்வராஜன், ஏட்டு தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர், மூத்த புகைப்படக் கலைஞர் ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு விருது வழங்கப்பட்டது[2]. இந்த பட்டியலில் உள்ளவர்கள் உளவுப்பிரிவு சைபர் கிரைம் சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது[3]. அதன் காரணமாகவே, ஜமேஷா முபீன், காரில் தொடர்ந்து செல்ல வாய்ப்பின்றி போயிருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பெரியளவில் ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்க உதவியதாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ் .ஐ., ஏட்டு, காவலருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கப்பட்டது.

பந்தை குறிவைப்பது அரசியலாகிறது: வரும், 31ம் தேதி கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த்தை முன்னிட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், வாகன போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்துக்கும் எந்தவித குறைபாடும் நேராமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக பொறுப்புடன் வேலை செய்த போலீஸாரை எல்லோருமே பாராட்ட வேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். இங்கு கூட, அந்த குண்டுவெடிப்பு செயல் அரைகுறையாக முடிந்ததால், யார் நடத்த வேண்டும் என்று நினைத்தானோ, அவன் மட்டும் பலியாகியுள்ளான் என்பது நோக்கத் தக்கது.

மத்திய உளவுத்துறையும், தமிழக போலீஸாரும்: தென்னிந்தியாவில், தீவிரவாதம் பரவி, சிறந்த முறையில், தொழிற்நுட்பத்துடன், பாண்டித்தியத்துடன் நடந்து கொன்டிருப்பதால், வழக்குகள் தொடர்ந்து நடந்து கொன்டிருக்கின்றன. மேலும், அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் இதர பணப் போக்குவரத்து, சட்டமீறல் போக்குவரத்துகளுடன் திறமையாக செயல் பட்டு வருவதால், வழக்குகளும் இழுத்தப் படுகின்றன. இதனால் தான், காவல்துறை இந்த தகவலை தெரிந்தவுடன், பாதுகாப்பை உஷார் செய்தவுடன், இவர் திடீரென மாயமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[4]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[5]. தேசிய புலனாய்வு முகமை 2019ம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது. தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும், அதில் இவர் இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது[6]. இதனை தமிழக அரசு எப்படி கோட்டைவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது[7]. சம்பவம் நடந்த பிறகு தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் சரியாக பொதுமக்களிடையே சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பட்டியலில் 89 ஆவது நபராக ஜமேஷா முஃபின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமயமாக்கப் படும் தீவிரவாதம்: திமுக ஆட்சியில்லாமே “பாஸ்ட் ஃபுட்” ரேஞ்சில், வேகத்தில், அதிரடியாகத்தான் நடக்கும் போலிருக்கிறது. கார் காஸ் சிலிண்டர் விபத்து, தீவிரவாத கார் காஸ் சிலிண்டர் வெடிப்பாகி, கார் குண்டு வெடிப்பாகியுள்ள நிலையில், அமைதிகாத்த திராவிடிய ஸ்டாக் முதலமைச்சர், திடீஎன்று கூட்டம் கூடி, இந்த விபத்து வழக்கை என்.ஐ.ஏ.க்கு ஒப்படைக்க அறிவித்து விட்டார். போலீஸ் துறைக்கும் அவர் பொறுப்பேற்றுள்ளதால், இவ்வழக்கின் பாரத்தை, தீவிரவாதத்தை அறிந்து, மாற்றி விட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாது, சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்கப் பட்டு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது. கோவையில் புதியதாக மூன்று காவல் நிலையங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. டிவி செனல்களிலேயே வாதவிவாதங்கள் படுஜோர். பேச்சாளர்கள், நேரிடையாக அரசியலாக்கி, அரசியல் மயமாக்கி, திராவிட மாடலா- குஜராத் மாடலா ரேஞ்சில் இறங்கி விட்டனர். திமுக-பிஜேபி நேரிடையாக இந்த மோதலில் ஈடுபட்டுள்ளன எனலாம்.


தமிழகத்தில் முதன்முதலாக என்... செய்துள்ள வழக்கு: முதன்முதலாக என்.ஐ.ஏ. ஏஜென்சி சென்னையில் அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போலீஸ் நிலையத்திற்கு சமமாகும். இது போன்ற மற்ற நிறுவனங்கள் இதனுடன் சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை சமூக, பொருளாதார, மற்றவற்றை பெரிதும் பாதிப்பதால், இது மனித வாழ்க்கைக்கு எதிராக செயல்படுகிறது. மேலும், எல்லைகளைக் கடந்து, இவை செயல் படுவதால், மற்ற நாடுகளும் இவற்றை கடுமையாக எதிர்க்கிறார்கள். பதிவு செய்துள்ள இந்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும், எனும் நிலையில், இத்தகைய கும்பல்கள் வேறருக்கப் பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] தினமலர், எஸ்.., உட்பட 27 பேருக்கு வெகுமதி, Added : அக் 28, 2022 04:31..

https://www.dinamalar.com/news_detail.asp?id=3156201 – :~:text=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%2C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1% E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு விவகாரம்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!!, Narendran S, First Published Oct 27, 2022, 6:00 PM IST, Last Updated Oct 27, 2022, 8:42 PM IST.

[3] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/dgp-praises-the-policemens-for-their-excellent-work-in-covai-car-blast-case-rkew2t

[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[5] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

[6] நியூஸ்.4.தமிழ், கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!, Sakthi by SAKTHI October 28, 2022

[7] https://www.news4tamil.com/coimbatore-car-bombing-incident-tamil-nadu-police-ignored-the-central-intelligence-agencys-warning/

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

26-10-2022 (புதன் கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.

 இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

27-10-2022 (வியாழன் கிழமை):  தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-10-2022 (வெள்ளிக் கிழமை):  கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].

109 பொருட்கள் பறிமுதல்அவற்றின் எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு”  ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].

கார்கள் பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].  இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.

கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு முதல் கார் குண்டு வெடிப்பு வரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….”  என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”,  மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று  வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] மாலைமலர், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்என்... விசாரணை அதிகாரி நியமனம்,  Byமாலை மலர்28 அக்டோபர் 2022 4:53 PM

[2] https://www.maalaimalar.com/news/state/coimbatore-car-blast-incident-nia-appointment-of-investigating-officer-529573?infinitescroll=1

[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka.  Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.

[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? – போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/887653-60-kg-of-ammunition-seized.html

[6] தினத்தந்தி, கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல், அக்டோபர் 29, 4:47 am

[7] https://www.dailythanthi.com/News/State/109-items-seized-from-car-blast-victim-jamesha-mubins-house-824772

[8] மாலை மலர், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல், By மாலை மலர்,27 அக்டோபர் 2022 9:40 AM

[9] https://www.maalaimalar.com/news/state/tamil-news-100-kg-explosives-seized-from-jamesha-mubins-house-528818?infinitescroll=1

[10] இ.டிவி.ப்சாரத்,கார் வெடிப்புச்சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்,

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/after-car-blast-incident-in-coimbatore-police-seized-unattended-two-wheeler-and-cars-parked-on-the-roads/tamil-nadu20221028160747877877082

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற10 கார்கள் பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-incident-reverberates-10-orphaned-cars-seized-in-trichy-532243/

ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் கலவரம் ஏற்படுத்தும், நகரங்களைத் தாக்கும் தீவிரவாத வெளிப்பாடுகள்!

ஜூலை 1, 2016

ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் கலவரம் ஏற்படுத்தும், நகரங்களைத் தாக்கும் தீவிரவாத வெளிப்பாடுகள்!

Hyderabad module - busted India Today picture

பிடிபட்டவர்களின் விவரங்கள்: இதையடுத்து, ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சிலர் கடந்த நான்கு மாதங்களாக ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர்[1]. சந்தேகம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அதிரடி சோதனையும், கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்கள், சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஹைதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த இவர்கள் தயாராகி வந்துள்ளனர் என்றும். இதற்காக ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து அந்த இளைஞர்கள் பணம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த இந்த தீவிரவாதிகள், நாட்டிலுள்ள பிற தீவிரவாத அனுதாபிகளை மூளை சலவை செய்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது[2].

  1. முகமது இப்ராஹிம் யாஷ்தானி [Mohammed Ibrahim Yazdani, 30],
  2. மொஹம்மது இலியாஸ் யஷ்தானி [Mohammad Illyas Yazdani, 24] (1)ன் சகோதரன்
  3. ஹபீப் முகமது [Habib Mohammed, 32],
  4. முகமது இர்ஃபான்,
  5. அப்துல் பின் அகமது,
  6. முஷாபர் ஹூசைன் [Muzaffar Hussain Rizwan , 29],
  7. ரிஸ்வான்,
  8. முகமதுல்லா ரஹ்மான்,
  9. அல் ஜிலானி அப்துல் காதர்,
  10. முகமது அர்பாஸ் அகமது
  11. அப்துல்லா-பின்-அமூதி [Abdullah- Bin-Amoodi, 31].

உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆறுபேர் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது[3].

those arrested by NIA of Hyderabad moduleமுதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு: சிறுபான்மையினர் வாக்குவங்கியைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றிவிட்டதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக முதல்வர் சந்திரசேகர ராவ் மாற்றிவிட்டார். பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது. இதனால் தேசிய அளவில் ஹைதராபாத் நகருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

Hyderabad module - busted - The Hindu -picture.பிடிபடும் தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்றாலும், இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிப்பது இல்லை: முன்னர் தீவிரவாதம் விசயமாக, ஹைதராபாத் இளைஞர்கள் மாட்டிக் கொண்டதால், சில வழக்கமான அறிக்கைகள் விடப்பட்டன. ஹைதராபாத் முஸ்லிம் இளைஞர்கள் ஐஎஸ் போன்ற அமைப்புகளில் சேருவது, இங்கிருந்தே ஆன்-லைன் மூலம் வேலை செய்வது, வேலைக்கு ஆள் சேர்ப்பது போன்ற காரியங்கள் அதிகமாகி வந்ததால், முன்பே முஸ்லிம் இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அதனால், பதிலுக்கு 2014ல் ஜாமியா நிஜாமியா [Jamia Nizamia one of the oldest Islamic seminaries in south India] போன்ற இஸ்லாமிய நிறுவனங்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு “தீவிரவாதத்திற்கு ஐஎஸ் துணைபோகிறது, அதனால் அதற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை,” ஐஎஸ்போன்ற இயக்கங்களுடன் சேரக்கூடாது என்று எச்சரித்தது[4]. ஆனால், இளைஞர்களும் அத்தகைய வேலைகளில் சேர்வது நிற்கவில்லை, தீவிரவாத செயல்களும் நின்றபாடில்லை.

Hyderabad module - ISIS connection-TV9 pictureகலவரங்கள் ஏற்படுத்துவது மற்றும் தீவிரவாத திட்டங்கள் செயல்படுத்துவது: இவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது: இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணம் அதிக அளவில் கிடைத்து வருகிறது. அந்த பணத்தை வைத்து, இவர்கள் ஆயுதங்களை வாங்கியுள்ளனர். மேலும், வெடி குண்டு தயார் செய்யும் தொழில்நுட்பமும் இவர்களுக்கு தெரியும். பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களை வெடி குண்டு வைத்து தகர்க்க, இந்த அமைப்பினர் திட்ட மிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது[5]. இதற்காக, மூன்று குழுக்களாக பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்த தகவலும் வெளியாகியுள்ளது. அதனால், கைது செய்யப்பட்ட அனைவரையும், காவலில் எடுத்து விசாரிக்க, கோர்ட்டின் அனுமதி கோரப் பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், அவர்களை டில்லி அழைத் துச் சென்று விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. கோவிலில் மாட்டிறைச்சி…:என்.ஐ.ஏ., அதிகாரி கள் கூறியதாவது: ஐதராபாத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பாக்கியலட்சுமி கோவிலில், மாட்டிறைச்சியை வைத்து, மிகப்பெரிய மதக் கலவரத்தை ஏற்படுத்த, இந்த அமைப்பினர் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.  விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், இதற்கு முன்பும் கலவரங்கள் நடந்துள் ளன. அதுபோலவே, இந்தாண்டும் கலவரத்தை ஏற்படுத்த, இவர்கள் திட்டமிட்டு இருந்தனர்[6].  ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் 25-06-2016 சனிக்கிழமை அன்று மாலை தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல், அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது[7].அதற்கு முன்னோட்டமாக ஹைதராபாத் நகரின் பல்வேறு முக்கிய பொதுஇடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன[8].

triacetone triperoxide bomb makingபிரஸ்ஸெல்ஸ் குண்டுவெடிப்பில் உபயோகப்படுத்தப் பட்ட ரசாயனப் பொருள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது: டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு [ triacetone triperoxide (TATP)] ஹபீப் முஹமது இல்லத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது[9]. பாரிசில் நடந்த குண்டுவெடிப்பில் இந்த ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தப்பட்டது. முகமது இப்ராஹிம் யஜ்தானி என்பவன் தான் ஹபீப் முகமதுவை தன்னில்லத்தில் இந்த குண்டை [ improvised explosive device (IED)] தயாரிக்கச் சொல்லியிருக்கிறான். அவனது வீட்டிலிருந்து ஆணிகள் முதலியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஷபி ஆர்மர் அல்லது யூசூப் அல்-ஹிந்தி [Shafi Armar alias Yousuf Al Hindi] என்பவன் தான் சிரியாவிலிருந்து இவர்களை கட்டுப்படுத்தியுள்ளான்[10]. வழக்கமாக, இவர்களின் பெற்றோர், தங்களது மகன்கள் அப்பாவி, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளனர். ஆனால், டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு போன்ற ரசாயனப் பொருட்களை ஏன் வீட்டில் வைத்திருந்தனர் என்பதற்கு பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இன்டெர்நெட் சென்டரில் வேலை பார்க்கிறான் என்றால், ஐஎஸ்சுடன் ஏன் தொடர்பு வைத்துள்ளான் என்றும் விளக்கவில்லை. அவர்கள் அத்தகைய வேலைகளை செய்வதை தடுக்க வேண்டுமே, ஆனால், அதைப் பற்றியும் விளக்கவில்லை.

© வேதபிரகாஷ்

01-07-2016

Hyderabad module - ISIS connection - NIA

[1]http://www.dinamani.com/india/2016/06/30/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/article3506835.ece

[2] http://tamil.oneindia.com/news/india/nia-busts-isis-module-hyderabad-11-arrested-explosives-rs-257035.html

[3] http://www.ndtv.com/hyderabad-news/isis-module-busted-in-hyderabad-says-nia-1425829

[4] http://www.thehindu.com/news/national/andhra-pradesh/hyderabad-seminary-warns-youth-against-islamic-state/article6388793.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews

[5] தினமலர், ஐதராபாத், பெங்களூரை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம், பதிவு செய்த நாள் : ஜூன் 30,2016,23:26 IST

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554333&

[7]http://www.dinamani.com/india/2016/07/01/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86/article3508410.ece

[8] தினமணி, ஹைதராபாதில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்த ஐஎஸ் சதி: விசாரணையில் அதிர்ச்சித் தகவல், By ஹைதராபாத், First Published : 01 July 2016 03:19 AM IST

[9] The Hindu, Chemicals similar to Brussels bomb found in Hyderabad house, Vijaita singh, Updated: July 1, 2016 09:23 IST

[10] http://www.thehindu.com/news/national/chemicals-similar-to-brussels-bomb-found-in-hyderabad-house/article8793246.ece

 

மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (1)

மார்ச் 1, 2015

மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (1)

Riyaz on the lap of girls - Suratkal college

Riyaz on the lap of girls – Suratkal college

ஐந்து மாணவிகளின் மடியில் படுத்த மாணவன்[1]: மங்களூரு அருகே உள்ள சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவன் முகமது ரியாஷ் (Mohammed Riaz, வயது 20) என்ற மாணவன். இவன், மங்களூருவில் உள்ள கோவிந்த தாஸ என்ற தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறான். இந்த நிலையில், முகமது ரியாஷ் தனது கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளின் மடியில் படுத்து கிடப்பது போல மர்ம நபர்கள் சித்தரித்து ‘வாட்ஸ்அப்’ சமூக வலைதளத்தில் படம் வெளியிட்டனர்[2]. கேலியாக பேஸ் புக்கில் வெளியிட்டனர். பிப்ரவரி 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவனின் புகைப்படம் பேஸ் புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்து உள்ளனர். இந்த படம் ‘வாட்ஸ்அப்’ மூலமாக மங்களூரு நகர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது[3]. மாணவிகளின் மடியில் படுத்திருப்பது போன்ற அப்படம் பேஸ் புக்கில் வெளியிடப்பட்டது[4] என்று சில நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன[5]. இரண்டிலும் வெளியிடப்பட்டு, பரப்பப்பட்டது என்று தெரிகிறது[6]. ஆகவே, ஊடகங்கள் இவ்வாறு இரண்டுவிதமாக செய்திகளை வெளியிட வேண்டிய தேவையில்லை.

மாணவிகளுடன் ரியாஸ்

மாணவிகளுடன் ரியாஸ் – நோக்கம் என்ன என்று அவன் தான் விளக்க  வேண்டும்

மொஹம்மது ரியாஸ் அல்லது மொஹம்மது ஸ்வாலியார் மடியில் படுத்திருந்தது: இந்த பிரச்சினைப் பற்றி, கடந்த 21–ந்தேதி சுமார் 11 மணி அளவில் முகமது ரியாஷ், கானா என்ற இடத்தில் உள்ள, தனது வீட்டில் நண்பர்களான வினித், ரித்தீஷ் ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தான். அதாவது, சம்பந்தப் பட்ட மாணவர்களுக்கு, இவ்விவகாரம் தெரிந்திருக்கிறது என்றாகிறது. படிக்கும் மாணவர்கள் இவ்வாறு  மற்ற காரியங்களில் ஈடுபடுவது ஏற்ற்க்கொள்ளத்தக்கதன்று. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது வீட்டுக்கு காரில் வந்த 5 பேர் கும்பல் முகமது ரியாசை காரில் கடத்தி, பஜ்பே என்ற இடத்திற்கு அருகில் உள்ள கைகம்பா அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து அடித்து உதைத்துவிட்டு சென்றுவிட்டனர். அவனது மதம் என்ன என்று கேட்கப்பட்டு உதைக்கப்பட்டான் மற்றும் நண்களும் அடிக்கப்பட்டனர் என்று “தி இந்து” தனக்கே உரிய பாணியில் கூறுகிறது[7].  ஊடகங்கள் அந்த பையனின் அடையாளத்தைக் குறிப்பிடாமல் குழப்பியுள்ளது தெரிகிறது. “தி இந்து” மாணவிகளின் மடியில் படுத்திருந்தவன் “ரியாஸ்” என்று குறிப்பிடுகிறது. “இந்தியன் எக்ஸ்பிரஸ்” கும்பல் அடையாளம் தெரியாமல் அந்த பையனை அடித்துவிட்டதாகக் கூறுகிறது. “தைஜி வார்ல்ட்” என்ற நாளிதழ் அவன் பெயர் மொஹம்மது ஸ்வாலி [Mohammed Swali] என்கின்றது[8]. படத்தில் இரு பையன்கள் இருந்தார்கள். அக்கல்லூரி மாணவர்களே, ஒரு குழுவாக அமைந்து, தவறு செய்யும் மாணவர்களைக் கண்டிக்க மேற்பட்டது. அப்பொழுதுதான், இவர்கள் மாட்டிக் கொண்டார்கள். ஊடகங்கள் உண்மையினை வெளியிடாமல், இவ்வாறு குழப்ப வேண்டிய அவசியம் இல்லை.

Coastal Karnataka love jihad

Coastal Karnataka love jihad – ஏற்கெனவே முஸ்லிம் பையன்கள், இந்து பெண்களை ஏமாற்றி பிரச்சினை செய்த விசயங்கள் இருக்கின்றன.

மொஹம்மது ரியாஸ் பெண்களுடன் இருப்பவனா?: “இதெல்லாம் ஒரு நாடகம் போன்று தோன்றுகிறது. நான் தண்ணீர் கேட்டபோது, என் வாயில் பீரை ஊற்றிக் குடிக்க வைத்தனர். பிறகு கண்கள் கட்டப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் [(Mangaluru–Udupi) 66] முக்கா என்ற இடத்தில் விட்டுச் சென்றனர்”, என்று மொஹம்மது ரியாஸ் கூறினான். கடந்த பிப்ரவரி 2014ல் தான் ஒரு இளம்பெண்ணுடன் சூரத்கல் கடற்கரையில் இருந்தபோது, ஒரு 20-வயது பையன் ஒரு கும்பலால் தாக்கப்பட்டான் என்றும் கூறினான்[9]. ஆனால், அப்பெண்ணைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடவில்லை. அதற்கும், இதற்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை. மொஹம்மது ரியாஸ் பெண்களுடன் சுற்றும் மற்றும் இருக்கும் பழக்கம் கொண்டவனாஎன்பதை அவன் தான் விளக்க  வேண்டும். படிக்கும் பையன்களுக்கு, இத்தகைய வேலை ஏன் என்பதை அவர்கள் தாம் விளக்க வேண்டும். ஏற்கெனவே, “லவ்-ஜிஹாத்” என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்நிலையில், முகமதிய பையன்கள், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதில், கொண்டுள்ள உள்நோக்கம் என்னவென்பதை, அவர்கள் தாம் விளக்கி சரிசெய்ய வேண்டும். ஆனால், தொடர்ந்து, இத்தகைய வேலைகளில் ஈடுபடுவதை, தமாஷாக என்று யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

Mangalore pub attack - m oral policing

Mangalore pub attack – m oral policing – இப்பொழுது இந்த அம்மணிகள், பெண்கள் உரிமைகள் பற்றி பேசக் காணோம்!

நான் அவன் இல்லை எனும் மொஹம்மது ரியாஸ்: இதில் காயம் அடைந்த முகமது ரியாஷ் மங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இதற்கிடையே, அவன் சூரத்கல் போலீசில் புகார் செய்தான். அதில், ‘வாட்ஸ்அப்’பில் என்னுடன் பயிலும் 5 மாணவிகளின் மடியில் நான் படுத்து இருப்பது போல படம் சித்தரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இருப்பது நான் அல்ல. எனது படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இதற்குள் பையனின் தந்தை அப்துர் ரஹ்மான் [Abdur Rehman] சூரத்கல் போலீஸாரிடம், தன் மகனை யாரோ கடத்திச் சென்று, கொலை செய்ய முயன்றதாக புகார் கொடுத்துள்ளார்[10]. ஆனால் தன்னை மர்ம நபர்கள் தாக்கியது பற்றி முகமது ரியாஷ் புகாரில் குறிப்பிடவில்லை. அப்படியென்றால், தாக்கப்பட்டது யார் என்ற குழப்பமும் சேர்கிறது. மேலும், அவன் மொஹம்மது ஸ்வாலி என்றால், ரியாஸ் தாராளமாக சொல்லியிருக்கலாம், அவ்வாறு சொல்லவில்லை என்றால், அவன் ஏன் உண்மையினை மறைக்கிறான் என்ற கேள்வி எழுகிறது.

Muslim women-out-on-streets-against-moral-policing

Muslim women-out-on-streets-against-moral-policing –  உன்பு கொடி பிடித்த இந்த முஸ்லிம் பெண்கள், இப்பொழுது ஏன் மௌனமாக இருக்கிறார்கள்?

மொஹம்மது ஸ்வாலி மற்றும் ஐந்து மாணவிகள் கல்லூரியிலிருந்து இடைக்கால நீக்கம்: ஐந்து மாணவிகளுள் ஒருத்தி யாரோ தனது பேஸ்புக் கணக்கைத் திருடி, அப்போட்டோவை எடுத்து, மாற்றி வெளியிட்டு விட்டனர் என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளாள்[11]. அம்மாணவி இவ்வாறு தாமதமாக புகார் கொடுத்துள்ளதும் வியப்பாக இருக்கிறது. முதலில் படிக்க செல்லும் மாணவிகள் படிப்பில் சிரத்தைச் செல்லுத்தி, முன்னேற வழிபார்த்து செல்ல வேண்டும், தமது பெற்றோர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும், இத்தகைய, குழுக்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், ஆனால், போலீஸார், அப்பையன் மொஹம்மது ஸ்வாலி [Mohammed Swali] என்று உறுதி செய்துள்ளனர்[12]. அதாவது, “தி ஹிந்துவின்” செக்யூலரிஸ வக்காலத்து பொய்யாகிறது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் முகமது ரியாசை மர்ம நபர்கள் காரில் கடத்தி தாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், தனியார் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, முகமது ரியாசை, மாணவிகளுடன் சேர்த்து சித்தரித்து படம் வெளியிட்டதாக கூறி அந்த கல்லூரியில் படித்து வரும் 6 மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது[13].

© வேதபிரகாஷ்

28-02-2015

[1] நியூஇந்தியாநியூஸ், கல்லூரி மாணவிகள் மடியில் அமர்ந்த மாணவன்: புகைப்படத்தால் வெடிக்கும் சர்ச்சை [ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 06:16.39 AM GMT +05:30 ]

[2] மாலைமலர், மாணவிகளின் மடியில் உட்கார்ந்த மாணவனின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 6 மாணவர்கள் சஸ்பெண்ட், மாற்றம் செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 24, 7:38 PM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 24, 7:12 PM IST.

[3] http://www.maalaimalar.com/2015/02/24191202/morphing-photo-spread-in-socia.html4

[4] வெப்.இந்தியா, மாணவியின் மடியில் அமர்ந்து எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர்கள், செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (19:26 IST)

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=133552

[6]http://www.newindianews.com/view.php?22cOl72bcy40Wb4e3KMM402dKmD3dd0pDmI203CgA42e4g04Oecb3lOec3

[7] When contacted by The Hindu , Riaz said his friend Ritesh, who was in the photo, had come to his (Riyaz’s) house in Kana with another friend, Vinith, around 11 a.m. on Sunday to discuss the photo going viral. He said that suddenly, four persons came in a car, pushed the three of them inside and drove to Kaikamba, near Bajpe. Riaz said that at a ground there, five more persons joined the assailants and mercilessly beat him after asking about his religion. They also beat up his two classmates.

[8] The photo of a boy, identified as Mohammed Swali, lying on the laps of five girls created a furore after it was uploaded on Facebook.

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=299167

[9] “It was like a drama,” Riaz said. “When I asked for water, they forcibly made me drink beer,” he alleged and added that later, they blindfolded him and left him near a petrol station at Mukka on National Highway (Mangaluru–Udupi) 66. He was later admitted to hospital. At that time, he was not even aware about what happened to Ritesh and Vinith. In February 2014 at Surathkal beach, a 20-year-old youth was attacked by a group when he was found with a girl.

http://www.firstpost.com/india/mangalore-goons-thrash-college-student-after-group-photo-with-girls-goes-viral-on-whatsapp-2118939.html

[10] The victim, Mohammed Riaz, was admitted to a private hospital. Based on a complaint by Riaz’s father, Abdur Rehman, the Surathkal police have registered a case of kidnapping and attempt to murder against the assailants.

The Hindu, Youth thrashed after group photo is widely circulated on WhatsApp, Magaluru, February 23, 2015; Updated: February 23, 2015 16:13 IST

[11] In a complaint filed in Suratkal police station, a girl student of Govinda Dasa College in Suratkal has claimed that the controversial photo of five girl students with a boy lying on their laps, which was uploaded in Facebook, had been doctored and uploaded after hacking her Facebook account. She claimed that the picture in question had been originally clicked by her classmate named Vineeth on February 18 and it was uploaded in Facebook. She has alleged that some mischief-mongers accessed this photo by hacking her account, misused the photo, and then posted it back in social media after affecting certain modifications.

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=299167

[12] The photo of a boy, identified as Mohammed Swali, lying on the laps of five girls created a furore after it was uploaded on Facebook.

[13] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/students-suspend-for-take-photo-of-sitting-the-women-student-and-published-on-facebook-115022400040_1.html