2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

எஸ்.ஐ., உட்பட 27 பேருக்கு வெகுமதி: கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், சதிச்செயலுக்கு திட்டமிட்ட ஜமேஷா முபீன் பலியானார். வழக்கு விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய, 27 பேருக்கு, நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்[1], என்று ஊடகங்கள் கூருகின்றன.. சம்பவம் நடந்த நாளன்று, உக்கடம் எஸ்.ஐ., செல்வராஜன், ஏட்டு தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர், மூத்த புகைப்படக் கலைஞர் ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு விருது வழங்கப்பட்டது[2]. இந்த பட்டியலில் உள்ளவர்கள் உளவுப்பிரிவு சைபர் கிரைம் சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது[3]. அதன் காரணமாகவே, ஜமேஷா முபீன், காரில் தொடர்ந்து செல்ல வாய்ப்பின்றி போயிருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பெரியளவில் ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்க உதவியதாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ் .ஐ., ஏட்டு, காவலருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கப்பட்டது.

பந்தை குறிவைப்பது அரசியலாகிறது: வரும், 31ம் தேதி கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த்தை முன்னிட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், வாகன போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்துக்கும் எந்தவித குறைபாடும் நேராமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக பொறுப்புடன் வேலை செய்த போலீஸாரை எல்லோருமே பாராட்ட வேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். இங்கு கூட, அந்த குண்டுவெடிப்பு செயல் அரைகுறையாக முடிந்ததால், யார் நடத்த வேண்டும் என்று நினைத்தானோ, அவன் மட்டும் பலியாகியுள்ளான் என்பது நோக்கத் தக்கது.

மத்திய உளவுத்துறையும், தமிழக போலீஸாரும்: தென்னிந்தியாவில், தீவிரவாதம் பரவி, சிறந்த முறையில், தொழிற்நுட்பத்துடன், பாண்டித்தியத்துடன் நடந்து கொன்டிருப்பதால், வழக்குகள் தொடர்ந்து நடந்து கொன்டிருக்கின்றன. மேலும், அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் இதர பணப் போக்குவரத்து, சட்டமீறல் போக்குவரத்துகளுடன் திறமையாக செயல் பட்டு வருவதால், வழக்குகளும் இழுத்தப் படுகின்றன. இதனால் தான், காவல்துறை இந்த தகவலை தெரிந்தவுடன், பாதுகாப்பை உஷார் செய்தவுடன், இவர் திடீரென மாயமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[4]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[5]. தேசிய புலனாய்வு முகமை 2019ம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது. தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும், அதில் இவர் இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது[6]. இதனை தமிழக அரசு எப்படி கோட்டைவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது[7]. சம்பவம் நடந்த பிறகு தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் சரியாக பொதுமக்களிடையே சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பட்டியலில் 89 ஆவது நபராக ஜமேஷா முஃபின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமயமாக்கப் படும் தீவிரவாதம்: திமுக ஆட்சியில்லாமே “பாஸ்ட் ஃபுட்” ரேஞ்சில், வேகத்தில், அதிரடியாகத்தான் நடக்கும் போலிருக்கிறது. கார் காஸ் சிலிண்டர் விபத்து, தீவிரவாத கார் காஸ் சிலிண்டர் வெடிப்பாகி, கார் குண்டு வெடிப்பாகியுள்ள நிலையில், அமைதிகாத்த திராவிடிய ஸ்டாக் முதலமைச்சர், திடீஎன்று கூட்டம் கூடி, இந்த விபத்து வழக்கை என்.ஐ.ஏ.க்கு ஒப்படைக்க அறிவித்து விட்டார். போலீஸ் துறைக்கும் அவர் பொறுப்பேற்றுள்ளதால், இவ்வழக்கின் பாரத்தை, தீவிரவாதத்தை அறிந்து, மாற்றி விட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாது, சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்கப் பட்டு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது. கோவையில் புதியதாக மூன்று காவல் நிலையங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. டிவி செனல்களிலேயே வாதவிவாதங்கள் படுஜோர். பேச்சாளர்கள், நேரிடையாக அரசியலாக்கி, அரசியல் மயமாக்கி, திராவிட மாடலா- குஜராத் மாடலா ரேஞ்சில் இறங்கி விட்டனர். திமுக-பிஜேபி நேரிடையாக இந்த மோதலில் ஈடுபட்டுள்ளன எனலாம்.

தமிழகத்தில் முதன்முதலாக என்.ஐ.ஏ. செய்துள்ள வழக்கு: முதன்முதலாக என்.ஐ.ஏ. ஏஜென்சி சென்னையில் அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போலீஸ் நிலையத்திற்கு சமமாகும். இது போன்ற மற்ற நிறுவனங்கள் இதனுடன் சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை சமூக, பொருளாதார, மற்றவற்றை பெரிதும் பாதிப்பதால், இது மனித வாழ்க்கைக்கு எதிராக செயல்படுகிறது. மேலும், எல்லைகளைக் கடந்து, இவை செயல் படுவதால், மற்ற நாடுகளும் இவற்றை கடுமையாக எதிர்க்கிறார்கள். பதிவு செய்துள்ள இந்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும், எனும் நிலையில், இத்தகைய கும்பல்கள் வேறருக்கப் பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..
© வேதபிரகாஷ்
29-10-2022

[1] தினமலர், எஸ்.ஐ., உட்பட 27 பேருக்கு வெகுமதி, Added : அக் 28, 2022 04:31..
[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு விவகாரம்… சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!!, Narendran S, First Published Oct 27, 2022, 6:00 PM IST, Last Updated Oct 27, 2022, 8:42 PM IST.
[3] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/dgp-praises-the-policemens-for-their-excellent-work-in-covai-car-blast-case-rkew2t
[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.
[5] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i
[6] நியூஸ்.4.தமிழ், கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!, Sakthi by SAKTHI October 28, 2022
[7] https://www.news4tamil.com/coimbatore-car-bombing-incident-tamil-nadu-police-ignored-the-central-intelligence-agencys-warning/

அண்மைய பின்னூட்டங்கள்