http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7059
ஒரு பக்கம் ஹைதராபாத் மக்கள் பரிதாபமாக சாகும் போது, கலவரம் நடந்து ஓயும் போது, ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்திய போது, நிறையா மாணவர்கள் தங்களது பரிட்சையே எழுத முடியாமல் போன போது, இத்தகைய கல்யாணம்-கலாட்டா தேவையா?

ஐதராபாத் : இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சானியா மிர்சா. கடந்த 2009, ஜூலை 10ம் தேதி சானியா மற்றும் அவரது குழந்தை பருவ நண்பரான முகமது சோஹ்ராப் மிர்சா இடையே திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது.இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஜனவரி மாதம் திடீரெனநிச்சயதார்த்தம் ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தானில் உள்ள தனியார் டிவி சேனலில், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக, செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து அந்த சேனலில் வெளியான செய்தியில், ”சோயப் மாலிக்கின் தாயார், ஐதராபாத்தில் உள்ள சானியாவின் பெற்றோரை சந்தித்து, மாலிக்-சானியா திருமணம் குறித்து உறுதி செய்துள்ளார் என்றும். வரும் ஏப்ரல் 16 அல்லது 17ம் தேதி லாகூரில் இவர்களது திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது திருமணம்?பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக், கடந்த 2002ம் ஆண்டு தொலைபேசி மூலம் ஐதராபாத்தில் உள்ள ஆயிஷா சித்திக் என்பவருடன் நிச்சயம் மேற் கொண்டு, பின்னர் அதே ஆண்டு ஜூன் 3ம் தேதி திருமணம் செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், சோயப் மாலிக் இதனை மறுத்திருந்தார்.
குறிப்பு:
- சானியாவின் புகைப்படங்கள் இணைத்தளங்களில் உள்ளவையே.
- சாதாரணமாக பிரபலங்களின் புகைப் படங்கள் பல நிலையில் எடுக்கப் படுவது, பிரசுரிக்கப் படுவது சகஜமே.
- ஆனால், சில நேரங்களில் உள்ள அத்தகைய புகைப்படங்களையும் போடக்கூடாது என்ற நிலை வரலாம்.
- அல்லது, யாராது ஆட்சேபிக்கலாம்.
- அப்பொழுது, ஏன் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
- கலை, ரசனை, கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை…………….என்றெல்லாம் இருப்பது எல்லொருக்கும் சொந்தமே.
- யாரும் என்னுடைதுதான் உண்மை, மற்றவரது எல்லாம் பொய் என்று வாதிட முடியாது.
- இன்றைய நிலையில், உண்மைகள் அனைவர்க்கும் சொந்தமானதே, அதை மறைக்க முடியாது.
- ஆகவே, யாரும் ஒருவருடைய நம்பிக்கையே அல்லது நம்பிக்கைத்தான் உண்மை, மற்றது பொய்மை என்றால் என்செய்வது?
- …………………………………………………………………………………..!
அண்மைய பின்னூட்டங்கள்