மே 11, 2013
பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?
பலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?
பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].
பாகிஸ்தானில்தேர்தல் – திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

© வேதபிரகாஷ்
11-05-2013
[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.
[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
பிரிவுகள்: அஃறிணை, அடிப்படைவாதம், அடையாளம், அது, அலி, அலி சகோதரர்கள், அழுக்கு, அவதூறு, அவன், அவள், ஆஜ்மீர், ஆணல்ல, ஆண்பால், ஆண்மை, ஆளுமை, இஸ்லாமாபாத், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஓட்டு, ஓட்டுவங்கி, காஃபிர், கார்டூன், காஷ்மீர், சரீயத், சரீயத் சட்டம், சிந்து, சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், சின்னம், சியாசத், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சூபி, ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜமிலாபாத், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, தாவுத் இப்ராஹிம், தாவூத் இப்ராஹிம், தாஹிர் ஷைஜாத், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், பெண் உரிமை, பெண் கடமை, பெண்ணல்ல, பெண்ணியம், பெண்ணுரிமை, பெண்பால், பெண்மை, மிலாடி நபி, மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், ரத்தம், ராவல்பிண்டி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி, லஸ்கர்-இ-தொய்பா, லாகூர், லாஹூர், லீனா, வாசிம் அக்ரம், வாசிம் அக்ரம் மாலிக், வெள்ளிக் கிழமை, வெள்ளிக்கிழமை, ஷியா, ஷியா-சுன்னி, ஹதீஸ்
Tags: அது, அலி, அவன், அவள், ஆணல்ல, ஆண், ஆண்மை, ஆளுமை, இம்ரான் கான், இஸ்லாம், ஓட்டு, ஓட்டு வங்கி, ஓட்டுரிமை, கராச்சி, கான், செரீப், திருநங்கை, தேர்தல், நடனம், நாட்டியம், பந்து, பாட்டு, பிஎன்பி, பிபிபி, பெண், பெண் உரிமை, பெண் கடமை, பெண்ணல்ல, பெண்ணியம், பெண்ணுரிமை, பெண்மை, முகமது அலி ஜின்னா, முஸ்லீம் ஓட்டு, ராவல் பின்டி, விக்கெட், விளையாட்டு
Comments: 3 பின்னூட்டங்கள்
மே 20, 2011
பயங்கர தீவிரவாதிகள் விஷயத்தில் சிதம்பரம் நடந்து கொள்ளூம் விதம்!
தவறான பட்டியல் கொடுத்த சிதம்பரம்: சிதம்பரத்தின் கையாலாகத்தன்மை, திறமையின்மை, நிலையில்லாத்தன்மை முதலிய குணாதிசயங்கள் மறுபடியும் வெளிப்பட்டுள்ளன. வெட்கமில்லாமல், இதில் நடந்ததற்கு பொறுபேற்கிறேன் என்று வேறு பேசியுள்ளார். அமெரிக்கா ஒசாமா பின் லேடனை கொன்ற பிறகு, ஏதோ வீரம் வந்துவிடது போல, தேவை ஏற்பட்டால், 26/11 போன்ற தாக்குதல் நடப்பதேயானால், இந்தியா தகுந்த பதிலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இந்திய மக்கள் எதிர்பார்ப்பதாக, சிதம்பரம் சொல்லியிருக்கிறார்! அதற்குள் ஐ.எஸ்.ஐ. அதிகாரி தாங்கள் இந்தியாவிலுள்ள சில முக்கியமான இடங்களை தாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, அதற்கான ஒத்திகையும் நடந்டேறிவிட்டது என்றும் அறிவித்தார். வழக்கம் போல, மற்ற தீவிரவாதிகள் கூட்டம் போட்டு இந்தியாவிற்கு எதிராகக் கத்தித் தீர்துள்ளன,
தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் கான் பெயர் சேர்க்கப்பட்டது தவறுதான்: ப.சிதம்பரம்[1]புதுதில்லி, மே 18, 2011: பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் வாசூல் கமார் கானின் பெயரைச் சேர்த்த்து தவறு என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டிருக்கிறார். மும்பை போலீஸôர் செய்த தவறும் ஐ.பி. உளவுப் அமைப்பின் கவனக் குறைவுமே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் 50 பேரின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்திய அரசு ஒப்படைத்தது.
இந்தப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. 2003-ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய வாசூல் கானின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், கானை மும்பை போலீஸôர் ஏற்கெனவே கைது செய்ததாகவும் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது. அவரது பேட்டியும் பத்திரிகையில் வெளியானது.
இந்தியாவுக்குள் வசிக்கும் ஒருவரது பெயர் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருக்கும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது அம்பலமானதால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது பாகிஸ்தாவுடனான இந்தியாவின் அரசு ரீதியான நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியது:
இந்தத் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். மும்பை போலீஸார் செய்த தவறும் ஐ.பி. அதிகாரிகளின் கவனக்குறைவுமே கான் பெயர் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றதற்குக் காரணம். கான் கைது செய்யப்பட்டது குறித்து இந்த ஆண்டு ஜனவரியில் ஐ.பி. அலுவலகத்துக்கு மும்பை போலீஸôர் தகவல் அனுப்பியிருக்கின்றனர். ஆனால் மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட தேடப்படுவோர் பட்டியலில் இந்த விவரம் சரிபார்க்கப்படவில்லை.
கடந்த ஆண்டு மே 21-ம் தேதி கான் கைது செய்யப்பட்ட விவரம் முறையாகத் தெரிவிக்கப்படாததால் சிபிஐ அமைப்பால் தேடப்படுவோர் பட்டியலிலும் கான் பெயர் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. இப்போது சிபிஐ முதல் இன்டர்போல் வரை அனைத்து அமைப்புகளுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார் ப.சிதம்பரம்.
சிபிஐ பட்டியலில் கான் பெயர் நீக்கம்: இதனிடையே சிபிஐ அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் கான் பெயர் நீக்கப்பட்டுள்ளது. சிபிஐ இணையதளத்திலிருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது. கடந்த மே மாதமே மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படைக்குழுவும், மும்பை போலீஸôரும் கானை கைது செய்த நிலையில், அந்தத் தகவல் சிபிஐக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், கானுக்கு எதிராக சிபிஐ கைது உத்தரவைப் பிறப்பித்தது. தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதாகத் தெரிய வந்திருப்பதையடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. இந்தத் தவறு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது. |

இரண்டு தீவிரவாதிகள் இந்தியாவிலேயே உள்ளனர்: இதற்குள் வீராப்புடன், மிகவும் பயங்கரமான தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டுள்ளதாக, உள்துறை அமைச்சகம் 40 பேர்களைக் கொண்ட ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது. ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள பிரோஸ் அப்துல் ரஸீத் கான் (Feroz Rashid Rashid Khan ) வயது 51, என்பவன் ஏற்கெனவே ஆர்தர் ரோடு ஜெயிலில் உள்ளான் என்று தெரிய வந்துள்ளது[2]. இவன் 1993 மும்பை வெடிகுண்டு வழக்கிற்காக கைது செய்யப் பட்டான். சி.பி.ஐ இந்த தவறை ஒப்புக்கொண்டது. உள்துறை அப்பட்டியிலில் அவனது பெயரை நீக்க மறந்து விட்டதாக உள்துறை எழுதியுள்ளதாகவும் ஓம்கார் கேடியா என்ற சி.பி.ஐ தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதற்கு முன் வஜுல் கமர் கான் என்ற பெயர் பட்டியிலில் இருந்தபோது, அவன் ஏற்கெனெவே பிணையில் விடுதலையாகி தானேவில் சுதந்திரமாக திரிந்து வருவதாகத் தெரிந்தது. இவன் 2003ல் வில்லி-பார்லே மற்றும் காட்கோபர் மற்றும் 2002ல் மும்பை சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்தகுண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப்பட்டான். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்பதற்காக, பிணையில் வெளியே விடப்பட்டான்.
இது ஒரு தவறு, அவ்வளவேதான்! இத்தவறுகளை உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டாலும், கொடுத்த பட்டியலை திரும்பப் பெறமுடியாது என்று கூறியுள்ளது[3]. உள்துறை அமைச்சகம், சி.பி.ஐ, என்.ஐ.ஏ, எம்.எச்.ஏ முதலிய நிறுவனங்கள் ஒன்றையொன்று குற்றாஞ்சாட்டிக் கொள்வது, நாட்டின் மதிப்பையே குறைப்பதாக/குளைப்பதாக உள்ளது. பலநிலைகளில் இந்த பட்டியல் சரிபார்க்கப் பட்டு, பற்பல அதிகாரிகளால் சரி பார்க்கப் பட்டு, பின்னரே உள்துறை அமைச்சரிடம் வருகிறது, அவர் கையெழுத்திடுகிறார்[4]. ஆனால், இப்படி உடம்பின் ஒரு அங்கம் மற்றதின் மீது குற்றஞ்சொல்வது போல, இந்த அமைப்புகள் நடந்து கொள்வது படு கேவலமாக இருக்கிறது. சிதம்பரம் இம்முறை “தவறை” ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றாலும், மற்ற துறைகளை சாடியுள்ளார்[5]. இத்தவறுக்கானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்[6].
பாகிஸ்தான் மற்றும் இதர ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன: பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை சாடியுள்ளது. பொய் பட்டியல் கொடுத்து ஒசாமா கொலை விஷ்யத்தை பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது என்று தலைப்பிட்டு, திட்டித் தீர்த்துள்ளன[7] (Indian Fake List & Desire of Cashing OBL Killing Thursday May 19, 2011 (1440 PST). குற்ற்ப்பத்திரிக்கைக் கூட போடாமல், ஓடி மறைந்துள்ள தீவிரவாதிகள் என்று கூறும் இந்தியாவை நக்கல் அடித்துள்ளன[8]. பி.பி.சி போன்ற அயல்நாட்டு ஊடகங்களும் கேலி செய்துள்ளன[9]. “காணாமல் போன தீவிரவாதியை இந்தியா மும்பையில் கண்டு பிடித்துள்ளது”, என்று பி.பி.சி கிண்டலடித்துள்ளது. இன்கிலாந்து டெலிகிராப் நாளிதழ் கூறுவது, “தப்பியோடி பாகிஸ்தானில் ஒளிந்துள்ளதாக கூறப்பட்ட குற்றாவாளி தாயுடன் வாழ்ந்து வருதாக தெரிந்தவுடன் இந்திய அதிகாரிகளின் முகங்கள் சிவந்துவிட்டன” (Indian officials red-faced after ‘most-wanted’ fugitive found living at home with mother)[10].
வேதபிரகாஷ்
20-05-2011
பிரிவுகள்: மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான், மீர்வாயிஸ் மௌல்வி, முஜாஹித்தீன், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஹம்மது அப்துல் ஆஜீஸ், முஹம்மது மௌதூத் கான், முஹம்மது ஹனிஃப் கான், மௌலானா மதனி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஹூஜி
Tags: உள்துறை அமைச்சகம், என்.ஐ.ஏ, எம்.எச்.ஏ, கையாலாகத்தன்மை, சி.பி.ஐ, திறமையின்மை, நிலையில்லாத்தன்மை, பிரோஸ் அப்துல் ரஸீத் கான், பிரோஸ் ரஸீத் கான், மும்பை வெடிகுண்டு, வஜுல் கமர் கான்
Comments: Be the first to comment
ஜூலை 6, 2010
பாகிஸ்தானே தடை செய்த இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள்!
The 17 outfits, which were banned by the Home Department, Punjab, include:
- Lashkar-e-Jhangvi,
- Sipah Sahaba Pakistan,
- Sipah-e-Muhammad Pakistan,
- Lashkar-e-Taiba,
- Jaish-e-Muhammad,
- Tehrik-e-Jafriya Pakistan,
- Tehrik Nifaz Shariat-e-Muhammadi,
- Millat-e-Islamiya Pakistan,
- Khudamul Islam,
10. Islami Tehrik Pakistan,
11. Hizb-ut-Tehrir, J
12. amiat-ul-Ansar,
13. Jamiat-ul-Furqan,
14. Khair-un-Naas International Trust,
15. Islamic Students Movement (ISM),
16. Balochistan Liberation Army (BLA) and
17. Jamaat-ud-Daawa. |
1. லஸ்கர்-எ-ஜாங்வி
2. சிபா சஹபா பாகிஸ்தான்
3. சிபா – இ -மொஹம்மது பாகிஸ்தான்
4. லஸ்கர்-இ-தொய்பா
5. ஜெய்ஸ்-இ-முஹம்மது
6. தெரிக்-இ-ஜஃப்ரியா பாகிஸ்தான்
7. தெரிக் நிபாஃப் சரியத்-இ-முஹம்மதி
8. மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான்
9. குதாமுல் இஸ்லாம்
10. இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி
11. ஹிஜ்ப்-உத்-தெர்ஹிர், ஜே
12. அமைத்-உல்-அன்ஸார்
13.ஜமைத்-உக்-ஃபர்கன்
14. கை-உன்–நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட்
15. இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட்
16. பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி
17. ஜமாத்-உத்-தாவா |
பிரிவுகள்: அமைத்-உல்-அன்ஸார், இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி, இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட், குதாமுல் இஸ்லாம், கை-உன்–நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட், ஜமாத்-உத்-தாவா, ஜமைத்-உக்-ஃபர்கன், பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி, மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான்
Tags: அமைத்-உல்-அன்ஸார், இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி, இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட், குதாமுல் இஸ்லாம், கை-உன்–நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட், சிபா – இ -மொஹம்மது பாகிஸ்தான், சிபா சஹபா பாகிஸ்தான், ஜமாத்-உத்-தாவா, ஜமைத்-உக்-ஃபர்கன், ஜெய்ஸ்-இ-முஹம்மது, தெரிக் நிபாஃப் சரியத்-இ-முஹம்மதி, தெரிக்-இ-ஜஃப்ரியா பாகிஸ்தான், பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி, மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான், லஸ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-எ-ஜாங்வி
Comments: 4 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்