Archive for the ‘மின்னணு ஜிஹாதி’ category

தெலிங்கானாவில் தயாரிக்கப் பட்ட வெடிகுண்டுகள் கேரளாவில் பிடிபட்டது எப்படி? கர்நாடகாவில் குவாரி என்றால் கேரள வீட்டில் பதுக்கி வைப்பானேன்?

ஜூன் 1, 2023

தெலிங்கானாவில் தயாரிக்கப் பட்ட வெடிகுண்டுகள் கேரளாவில் பிடிபட்டது எப்படி? கர்நாடகாவில் குவாரி என்றால் கேரள வீட்டில் பதுக்கி வைப்பானேன்?

30-06-2023 செவ்வாய்கிழமை சாராய போதை தடுப்பு போலீசார் சோதனை: சமீப காலங்களில் குற்றங்கள் எல்லைகளைக் கடந்து தான் நடந்து கொண்டிருக்கின்றன. மாநிலத்திற்கு மாநிலம் அந்த மாடல், இந்த மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், குற்றவாளிகள் தொடர்ந்து தங்களது மாடலில் தான் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது[1]. என்ன நடந்தாலும், ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல, இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது இங்கு, காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அதுார் கிராமத்தில், மூலியூர் கிராம பஞ்சாயத்து, கள்ள சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கலால் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது[2]. காசர்கோடு என்றாலே சமீபகாலத்தில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடம் என்பது போல, செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. போதைப் பொருட்கள், மருந்து, சாராயம் போன்றவற்றிற்கும் பிரபலமாக இருக்கிறது. ஆகையால், இங்கு போலீசார் சோதன் தொடர்ந்து இருந்து வருகிறது. இதை தொடர்ந்து, அங்கு கலால் துறையினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். செவ்வாய்கிழமை, 30-06-2023 நேற்று அதிகாலை, முகமது முஸ்தபா, 42, என்பவரது வீட்டுக்கு அதிகாரிகள் சென்ற போது, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொகுசு காரின் பின்புறம், ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தனர்[3].

30-06-2023 செவ்வாய்கிழமை வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: வழக்கம் போல, அதில், கள்ள சாராய பாக்கெட்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது[4]. ஆனால், சாராயப் பாக்கெட்டுகளுக்கு பதிலாக வெடிப்பொருட்கள் இருந்ததால், போலீஸார் திடுக்கிட்டனர். மே 31, 2023 கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது, 2,800 ‘ஜெலட்டின்’ குச்சிகள், 7,000 ‘டெட்டனேட்டர்’கள், ஒரு ‘டைனமைட்’ உட்பட குவியல் குவியலாக பயங்கர வெடி பொருட்களுடன், ‘ஒயர் பண்டல்’களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்[5]. இதை தொடர்ந்து, வீட்டுக்குள் நுழைந்து கலால் துறையினர் சோதனையிட்ட போது, குவியல் குவியலாக பயங்கர வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்[6]. இதனால், சாராய போதை தடுப்பு போலீசார் உடனடியாக அதுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது[7].

போலீசார் சோதனையிட்டு, காரில் வீட்டில் வெடிகுண்டுகள், பொருட்கள் கண்டுபிடித்தனர்: இன்ஸ்பெக்டர் அனில் குமார் தலைமையில் போலீசார் வந்து சோதனையிட்டதில், முகமது முஸ்தபாவின் வீடு மற்றும் காரில், 13 பெட்டிகளில் 2,800 ஜெலட்டின் குச்சிகள், 7,000 டெட்டனேட்டர்கள், ஒரு டைனமைட் மற்றும் ஐந்து பண்டல் ஒயர்கள் கைப்பற்றப்பட்டன[8]. அவரிடம் இது பற்றி கேட்டபோது, கர்நாடகாவில், ‘கிரானைட்’ குவாரிகள் நடத்தி வருவதாகவும், அங்கு வெடி வைத்து தகர்க்க, வெடி பொருட்கள் சப்ளை செய்து வருவதாகவும் முகமது முஸ்தபா தெரிவித்தார்[9]. இவன் அடிக்கடி கர்நாடக பகுதிக்குச் சென்று வருவது தெரிந்தது. ஆனால், இதற்கான ‘லைசென்ஸ்’ எதுவும் தன்னிடம் இல்லை என, அவர் தெரிவித்தார்[10]. குவாரிகளுக்கு என்று சொல்லி இவ்வாறு வெடிப்பொருட்கள் வாங்குவதும், அவை, பிறகு வெடிகுண்டுகள் தயாரிக்க, வெடிகுண்டுகளாகவே உபயோகிக்கப் படுவது, தீவிரவாதிகளின் செயல்களிலிருந்து தெரிய வருகிறது.

குவாரி பயோகத்திற்கு என்று இத்தகைய வெடிகுண்டுகளை வாங்குவது: இது சுமார் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. பெரும்பாலான வெடிகுண்டு வழக்குகளில் அவ்வாறு தான் ஆதாரங்களும் வெளிப்பட்டுள்ளன. அட்டைப் பெட்டிகளின் மீது காணப்படும் விவரங்களிலிருந்து அவை மின்சாரம் மூலம் உடனடியாக வெடிக்கப் படும் வெடிகுண்டு [SAED (Electric Instantaneous Detonator)] என்று தெரிகிறது. ரெக்ஸ் REX என்பது, செல்லுலோஸ் நைட்ரேட் வகையறா போல் தோன்றுகிறது. இவை தெலிங்கானாவில் உள்ள தொழிற்சாலை [Salvo Explosives and Chemicals Pvt Ltd, Ankireddypalli (Vill), Keesara Mandal, Medchal-Malkajgiri Dist.,- 501301, Telangana] மூலம் தயாரிக்கப் பட்டது என்பதும் தெரிகிறது. ஆக, தெலிங்கானாவில் தயாரிக்கப் பட்ட வெடிப்பொருட்கள், கேரளாவுக்கு வந்துள்ளன, ஆனால், குவாரி கர்நாடகத்தில் உள்ளதாம்.

தற்கொலைக்கு முயற்சி: அவரது வீட்டை போலீசார் சல்லடை போட்டு சோதனையிட்ட போது, பதற்றத்துடன் இருந்த முஸ்தபா, திடீரென தன் கை மணிக்கட்டை, ‘பிளேடால்’ அறுத்து தற்கொலைக்கு முயன்றார்[11]. இதுவும் அத்தகைய தீவிரவாதிகள் கடைபிடிக்கும் உக்திதான். அவரை போலீசார் உடனடியாக காசர்கோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்[12]. உடனே, அவனுக்கு மறைமுகமாக உதவி கிடைக்கும். அவன் ஒத்துழைக்க மாட்டான். இல்லை, இச்செய்தி அப்படியே அமுக்கப் படும். இப்பொழுதே, இது பிடி.ஐ செய்தியாக இருப்பதால், எல்லா ஊடகங்களும் அப்படியே போட்டுள்ளன. இல்லையென்றால், இது ஏதோ சாதாரண உள்ளூர் செய்தியாகி அமுக்கப் பட்டிருக்கும். இந்நிலையில், அவருக்கு வெடி பொருட்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்[13]. இது போன்ற வெடி பொருட்களை சேகரித்து வைக்க பல விதிகள் உள்ளன. அவற்றை வீடுகளிலும், கார்களிலும் சேகரித்து வைப்பது சட்டப்படி குற்றம்[14]. இவையெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான் இருப்பினும், சொகுசு காரில் ஏற்று எடுத்துச் செல்லப் படுகிறது. வீடுகளில் சேகரிக்கப் படுகிறது. எனவே, சட்டவிரோதமாக வெடி பொருள் தயாரித்தல், பதுக்கி வைத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் முஸ்தபா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா, கேரளாவில் ஏதேனும் நாச வேலையில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது. இவ்வாறாக செய்திகள் முடிகின்றன. இவற்றை யார் வாங்கினர் போன்ற விவரங்கள் எல்லாம் இனிமேல் தான் கண்டுபிடிப்பார்கள் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

01-06-2023


[1] தினமலர், வெடிபொருட்களுடன் கேரள நபர் கைது!, மாற்றம் செய்த நாள்: மே 30,2023 23:50; https://m.dinamalar.com/detail.php?id=3334630

[2] https://m.dinamalar.com/detail.php?id=3334630

[3] Onmanorama, 2,800 gelatin sticks, 7,000 detonators seized in Kasaragod; accused says he supplies explosives to quarries, Onmanorama Staff, Published: May 30, 2023 09:29 AM IST Updated: May 30, 2023 01:55 PM IST.

[4] Excise officers found around 2,800 gelatin sticks in 13 boxes, one dynamite, nearly 7,000 detonators, and five rounds of wires, said the officer. Some of them were recovered from his house, too.

https://www.onmanorama.com/news/kerala/2023/05/30/explosives-seized-in-kasaragod-one-arrested.html

[5] குமுதம், கேரளா: கள்ளச் சாராய வேட்டைக்கு சென்ற போலீஸ்: சோதனையில் சிக்கிய அதிர்ச்சிப் பொருட்கள், ஜூன் 1 2023.

[6] https://www.kumudam.com/news/tamilnadu/the-police-went-on-a-hunt-for-bootleg-liquor

[7] The Hindu, Huge quantity of explosives seized from a house in Kasaragod, May 30, 2023 06:12 pm | Updated 06:12 pm IST – KASARAGOD, THE HINDU BUREAU

[8] https://www.thehindu.com/news/national/kerala/huge-quantity-of-explosives-seized-from-a-house-in-kasaragod/article66911137.ece

[9] Economics Times, Kerala: Huge consignment of 2800 gelatin sticks, 6000 detonators seized in Kasargod, Mirror Now | 30 May 2023, 12:30 PM IST.

[10] https://economictimes.indiatimes.com/news/india/kerala-huge-consignment-of-2800-gelatin-sticks-6000-detonators-seized-in-kasargod/videoshow/100614704.cms?from=mdr

[11] Janam TV, Explosives seized in Kasaragod: 2,800 gelatin sticks and 7000 detonators recovered, accused tries to commit suicide, Janam Web Desk, May 30, 2023, 03:16 pm IST

[12] https://english.janamtv.com/news/kerala/58758/explosives-seized-in-kasaragod-2800-gelatin-sticks-and-7000-detonators-recovered-accused-tries-to-commit-suicide/

[13] AsiaNetNews, Explosive haul: 2800 gelatin sticks, 6000 detonators in Kerala’s Kasaragod, Aishwarya Nair, First Published May 30, 2023, 12:35 PM IST; Last Updated May 30, 2023, 2:08 PM IST.

[14] https://newsable.asianetnews.com/india/explosive-haul-2800-gelatin-sticks-6000-detonators-in-kerala-s-kasaragod-anr-rvgmd1

ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடு” ஆகியதா, “விஸ்டெம் அகடெமி” தீவிரவாதத்தை போதிக்கிறதா – இளம் பெண்கள் மீது குறி வைப்பது ஏன்? – காசர்கோடில் நடப்பதென்ன? (2)

ஜூன் 25, 2017

ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடுஆகியதா, விஸ்டெம் அகடெமிதீவிரவாதத்தை போதிக்கிறதாஇளம் பெண்கள் மீது குறி வைப்பது ஏன்? – காசர்கோடில் நடப்பதென்ன? (2)

Times Now coverage on Gaza Street, Wisdom Academy - 1

இளம்பெண்களின் மீது ஏன் குறி வைக்கப் படுகிறது?: இந்தியாவில் கேரளாவிலிருந்தும், குஜராத்திலிருந்தும் இந்து இளம்பெண்களை மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்து தீவிரவாதப் பணிகளுக்குப் பயன்படுத்தவென்றே ஒரு கும்பல் இந்தியா வந்திறங்கியிருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அஜண்டாவே; குடும்பத்தின் போதிய அரவணைப்பின்றி அனாதையாக தன்னை உணரக் கூடிய இந்து இளம்பெண்களை அடையாளம் கண்டு அவர்களை கொஞ்சம், கொஞ்சமாக மூளைச் சலவை செய்து தங்களது நாசவேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதே ஆகும். இதற்கென அவர்களது தலைமை அவர்களுக்கு ரேட் கார்டு ஒன்றையும் தயாரித்துத் தந்திருக்கிறது. அதிகமான இளம்பெண்களை மதமாற்றம் செய்து அரேபிய நாடுகளுக்கும், சிரியாவுக்கும் அனுப்பும் ஏஜண்டுகளுக்கு போனஸ், இன்செண்டிவ் எல்லாம் உண்டாம். அதாவது, பெண்கள் சுலபமாக மூளைச்சலவை செய்ய முடிகிறது. அவர்கள், தீவிரவாதத்திற்கு,குறிப்பாக தற்கொலை குண்டாக மாற எளிதில் தயாராகிறர்கள். மேலும், தீவிரவாதிகள் தங்களது காமப்பசிக்கும் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். இவற்றைப் பற்றி, முந்தைய பதிவுகளில் விளக்கப் பட்டுள்ளன.

IS rate card for conversion-1

மதம் மாற்ற விலைப்பட்டியல் வைத்துள்ளார்கள்: இந்துப் பெண்களை அவர்கள் சார்ந்துள்ள மதம், ஜாதி, உள் ஜாதி எனப் பகுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு விலை நிர்ணயித்திருக்கிறார்கள்[1]. அதிர்ச்சி தரும் அந்த ரேட் கார்டுகள் தெரிவிக்கும் விவரங்களைக் கண்டால் அதில் இருக்கும் பயங்கரத் தன்மை விளங்கும்…

  • இந்து பிராமணப் பெண்ணுக்கு – 5 லட்சம் ரூபாய்கள்
  • இந்து சத்ரியப் பெண்ணுக்கு –   4. 5 லட்சம் ரூபாய்கள்
  • இந்து (OBC, SC, ST, NT)  –  2 லட்சம் ரூபாய்கள்
  • ஜெயின் இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு- 3 லட்சம் ரூபாய்கள்
  • குஜராத்தி பிராமணப் பெண்ணுக்கு- 6 லட்சம் ரூபாய்கள்
  • குஜராத்தி ( கட்ச் பெண்ணுக்கு) – 3 லட்சம் ரூபாய்கள்
  • பஞ்சாபி சீக்கியப் பெண்ணுக்கு- 7 லட்சம் ரூபாய்கள்
  • பஞ்சாபி இந்துப் பெண்ணுக்கு – 6 லட்சம் ரூபாய்கள்
  • ரோமன் கத்தோலில் கிறிஸ்தவப் பெண்ணுக்கு – 4 லட்சம் ரூபாய்கள்

IS rate card for conversion-2

என்று அவர்களது விலைப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி இந்தியப் பெண்களை மதமாற்றம் செய்ய ISIS அமைப்பு முஸ்லீம் கலிபாக்கள் மூலம் தொடர்ந்து முயன்றுவருகிறது. இதற்கு முன்னேற்பாடாக இந்தியாவெங்கும் அவர்களது ஏஜண்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்கிறது Times Now செய்தி[2]. ஆனால் இதை மறுக்கும் ஊடகங்களும் நம்மிடையே உள்ளன.  இதில் வேடிக்கை அல்லது ஒற்றுமை என்னவென்றால், 2015ல், “டெக்கான் குரோனிகலில்” லவ்-ஜிஹாத் பற்றிய செய்தியில், இதே கணக்கு காணப்பட்டது[3]. அதற்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்று விசாரிக்க வேண்டும். “சனாதன் சன்ஸ்தா” வெளியிட்ட புத்தகத்தில் அவ்விவரங்கள் காணப்பட்டன[4]. இருப்பினும், கேரள உயர்நீதி மன்றத்தில், “லவ்-ஜிஹாத்” வழக்குகள் விசாரிக்கப் படுகின்றன; போலீஸாரும் விசாரித்து வருகின்றனர். உண்மையில் பெண்ணுருமை பேசும் யாரும், இப்பிரச்சினைப் பற்றி விவாதிக்காமல் இருப்பதும் பற்பல கேள்விகளை, சந்தேகங்களை எழுப்புகின்றன.

IS rate card for conversion-3

ஐசிஸ் பயங்கரவாதம், தீவிரவாதங்களை சுலபமாக கருத முடியாது: இந்தியாவில் முஸ்லிம் வெறுப்புணர்வை வளர்க்க இது போன்ற செய்திகளை சில ஊடகங்கள் வலிந்து உருவாக்கி மக்களிடையே திணிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி விடமுடியாது. இந்த ரம்ஜான் காலத்தில் 2017ல் அளவுக்கு அதிகமான ஜிஹாதி தீவிரவாதம், உலகம் எங்கும் அரங்கேறியுள்ளது. அப்பாவி மக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது கண்டிக்கத் தக்கது எனும்படியான கண்டனங்களும் எழாமல் இல்லை. நெருப்பில்லாமல் புகையாது என்பார்களே அதற்கேற்ப பாதிக்கப் பட்ட பெண்ணின் அம்மாவே புகார் அளிக்கும் வீடியோ ஆதாரம் ஒன்று நேற்று வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் கலிபாக்கள் நிர்ணயித்த அந்த ரேட் கார்டு ஆதாரமும் வெளியாகியிருக்கிறது. இவற்றை எல்லாம் அத்தனை சீக்கிரம் கற்பனைக் கட்டுக் கதை என்று புறம் தள்ளி விட முடியாது. உண்மையில் இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன? மதத்தின் பெயரால் பிரிவினையைத் தூண்டும் முயற்சியா? அல்லது இந்துப் பெண்களை சந்தை அடிமைகளாக ஆக்குவதின் மூலம் இந்துக் கலாச்சாரத்தை இழிவு படுத்தும் முயற்சியா? இந்த விசயத்தில் உலகின் எந்த மூளையில் இருந்தாலும் இந்தியப் பெண்களின் முதல் தேவை விழிப்புணர்வும், எச்சரிக்கையும் மட்டுமே[5].

Times Now coverage on Gaza Street, Wisdom Academy - 2

இச்செய்தி வரும் நேரத்தில் காசர்கோடு முஸ்லிம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாகவாட்ஸ்அப்பில்செய்தி: “வாட்ஸ்-அப்பில்” வருவதையெல்லாம் செய்தியாக்கி விடுகிறார்கள் என்று கிண்டலடிப்பவர்களை, இதையும் பொய் என்று சொல்வார்களா? ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்ததாக கூறப்படும் கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது[6]. ஷாஜீர் எம்.அப்துல்லா என்ற இந்த இளைஞர் கொல்லப்பட்டு கிடக்கும் புகைப்படம் வாட்ஸ்-அப் மூலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பி.சி.அப்துல் ரகுமானுக்கு வந்துள்ளது. தகவலுடன் கூடிய இந்தப் படத்தை, ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக நம்பப்படும், காசர்கோடு மாவட்டத்தின் மற்றொரு இளைஞர் அனுப்பியுள்ளார். ஷாஜீர் எப்போது, எப்படி இறந்தார் என்பதற்கான எவ்வித விவரமும் அத்தகவலில் இல்லை என அப்துல் ரகுமான் கூறினார். இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “எங்களுக்கு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை” என்றனர்[7]. ஆனால், பெற்றவர்களுக்குத் தெரிந்து விடுகிறதே? தமது மகன், மகள் என்று பரிகொடுப்பவர்கள், இதையெல்லாம் கட்டுக்கதை என்று அமைதியாக இருந்துவிடுவதில்லயே? பிணம் வரத்தான் செய்கிறது, அடக்கம் செய்கின்றனர், வருந்துகின்றனர். ஆனால், தீவிரவாதத்தில் சேராதே என்று சொல்லாமல் இருப்பது திகைப்படையச் செய்கின்றது.

© வேதபிரகாஷ்

25-06-2017

Zee News- coverage on Gaza Street, Wisdom Academy - 4

[1] தினமணி, இந்தியப் பெண்களை மத மாற்றம் செய்து நாடு கடத்த ISIS  நிர்ணயித்திருக்கும் அதிர்ச்சி தரும் ரேட் கார்டு விவகாரம்!, By கார்த்திகா வாசுதேவன், Published on : 24th June 2017 05:56 PM.

[2] http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/24/isis-fixed-7-lakhs-to-1-lakhs-assigned-to-women-from-different-religionssub-castessections-of-india-2726547–1.html

[3] The rate card that they have attributed to the forum reads, “The boy will get Rs 7 lakh for marrying a Sikh girl, Rs 6 lakh for Punjabi and Gujarati Brahmin girls, Rs 5 lakh for a Brahmin girl, Rs 4.5 lakh for a Kshatriya girl, Rs 3 lakh for Gujarati Kacchi, Jain and Marwadi girls, Rs 2 lakh for a backward class girl and Rs 1.5 lakh for a Buddhist girl.”

http://www.deccanchronicle.com/150926/nation-current-affairs/article/youth-paid-love-jihad-book

[4] While claims of love jihad by right-wing organisations have attracted a lot of flak from various sections of society, Sanatan Sanstha, in 2011, had published a book on the controversial issue. It has also produced a ‘rate card’, on the basis of which Muslim boys are supposedly paid money to marry Hindu girls. The book claims the cash reward differs on the basis of caste and region. For example, the organisation claims that a Muslim youth marrying a Sikh girl is paid the highest amount while the one marrying a Buddhist girl gets the lowest. However, the source of Sanatan’s claims is dubious. In the book, Sanatan has claimed that the rate card was announced by the ‘Muslim Youth Form’. When contacted, a Sanatan spokesperson claimed it was taken from the website of the forum. However, this newspaper did not find any such website.

DECCAN CHRONICLE, Youth paid for love jihad: Book,  SHRUTI GANAPATYE, Published Sep 26, 2015, 11:04 am IST; Updated Jan 10, 2016, 8:38 am IST

[4] http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/24/isis-fixed-7-lakhs-to-1-lakhs-assigned-to-women-from-different-religionssub-castessections-of-india-2726547–2.html

[5] தி.இந்து.தமிழ், .எஸ்.ஸில் இணைந்த கேரள இளைஞர் பலி?, Published: June 21, 2017 09:39 ISTUpdated: June 21, 2017 09:40 IST

[5]http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article9731735.ece

தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது – மதுரை ஜிஹாதித்துவத்தின் சமகால பரிமாணம்!

திசெம்பர் 2, 2016

தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது – மதுரை ஜிஹாதித்துவத்தின் சமகால பரிமாணம்!

plot-to-kill-modi-al-qaeda-men-arrested-in-madurai

28-11-2016 மற்றும் 29-11-2016 தேதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: முதல் நாள் இரவு துவங்கி மறுநாள் மாலை வரை விசாரணை: மதுரையில் கைதான வெடிகுண்டு தீவிரவாதிகள் 28-11-2016 அன்று முன்தினம் மதுரை – சிவகங்கை மாவட்ட எல்லையில் இடையபட்டியில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இங்கு நடந்த விசாரணை குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தீவிரவாதிகளுக்கு வேறு நபர்களால் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த முகாமை தேசிய புலனாய்வு படையினர் தேர்வு செய்தனர். தனித்தனியாக தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் 26-11-2016 அன்று இரவு துவங்கி, நேற்று மாலை 3 மணி வரை துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல முக்கியத்தகவல்கள் கிடைத்தன. சேகரித்தவற்றை ஆவணங்களாக தயாரித்து, உடனுக்குடன் பெங்களூருக்கும், டெல்லி தலைமையகத்திற்கும் புலனாய்வுப்படையினர் அனுப்பினர்,’’ என்றார். 150 சிம்கார்டுகள் மதுரை, சென்னையில்  கைதானவர்கள் போலி பெயர்களில் 150 சிம் கார்டுகள் வரை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. ‘சமூகப்போராளிகள்’ பெயரில் இவர்கள் பேஸ்புக்கில் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களது முகநூல் பக்கங்கள், சிம் கார்டுகளை ‘ட்ரேஸ்’ செய்து, அதன் அடிப்படையில் இவர்களது பல்வேறு தொடர்புகளை தேசிய புலனாய்வுப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

nia-arrested-two-more-connected-with-five-blasts-base-movement

தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது: கண்காணிப்பில் 548 பேர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது. மதுரையை மையமாக வைத்தே தீவிரவாத கும்பல் செயல்பட்டிருக்கிறது. எனவே, மதுரையில் இன்னும் சில நாட்கள் தேசிய புலனாய்வுப்படையினர் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர்கைதான தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது, நடந்த பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும். குண்டு வெடிப்புகளுக்கான செலவுக்கு பணத்தை சப்ளை செய்தவர்கள் யார்? அல்கொய்தா தீவிரவாத அமைப்பிற்கும்கைதானவர்களுக்கும் உள்ள தொடர்பு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட 22 தலைவர்களை  கொல்ல திட்டமிட்டது குறித்த பல்வேறு தகவல்களும் வெளிவரும்தமிழகம் முழுவதும் 548 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தொடர்புடைய பலரும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்தடுத்து பலர் கைதாவர்,’’ என்றார்.  நூறுக்கும், இருநூறுக்கும் கோடிக்கணக்கான மக்கள் அலைந்து கொண்டிருக்கும் நிலையில், கோடிகளில் தீவிரவாதிகள் விளையாடி வருவது திகைப்பாக இருக்கிறது.

nia-took-the-arrested-to-melur-madurai-court-dm-30_11_2016_005_005

500 / 1000 இதில்  கூட விளையாடியுள்ளது[1]: “தீவிரவாத செயல்களுக்கான செலவினங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் மதுரைக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கிறது. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளான இவற்றை மதுரையை மையமாக வைத்து கும்பல் ரூ.25 கோடி வரை இளைஞர்களின் வங்கிக்கணக்குகள் மூலம் புதிய நோட்டுகளாக மாற்றிச் சென்றுள்ளனர். இந்த பணத்தை மாற்றித்தர தீவிரவாதக் கும்பல், 30 சதவீத கமிஷன் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.  வங்கிக்கணக்குகள் மூலம் பணம் மாற்றியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  இதன்பேரிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தீவிரவாத தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவர்”, என்று போலீஸார் தெர்வித்துள்ளனர்[2].

three-trio-arrested-by-nia-in-mdurai-out-of-sixஐவரின் தொடர்புகள்[3]: இந்த ஐந்து-ஆறு பேர் என்பது அகப்பட்டவர்கள் தான். இன்னும் பிடிபடாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. இவர்கள் அனைவரும், பேஸ்புக் முதல் இஸ்லாமிய பிரச்சாரம் வரையில் உள்ள செயல்களில் ஈடுபட்டிருந்ததால், தொடர்புகள் ஏற்பட்டு நண்பர்களாகினர். இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம், அவர்களை பிணித்து விட்டது. நூலகம் மூலம் தீவிரவாத பிரசாரம். கைதானவர்களில் ஒருவரான அப்பாஸ் அலி, 8ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, பெயின்டராக இருந்தார். ‘தாருல் இல்ம்’ என்ற பெயரில் இவர் நூலகம் வைத்து நடத்தி வந்ததும், இதன் மூலம் தீவிரவாத பிரசாரப்பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. கைதான சம்சும் கரீம் ராஜா, பிகாம் பட்டதாரி. கோழிக்கடை வைத்துள்ளார். கைதான முகம்மது அய்யூப்பிற்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகிறது. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், காது கேட்கும் கருவி விற்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுலைமான் (23), சென்னையில் கைது செய்யப் பட்டார்.  கைதானவர்கள் பணியாற்றும் இடங்களிலும், வீடுகள் உள்ள பகுதிகளிலும் கடந்த 2 நாட்கள் கண்காணித்த பிறகே, தேசிய புலனாய்வுப்படையினர் அதிரடியாக இவர்களை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர்.

habeus-corpus-petition-dismissed-madurai-terror-dm-01_12_2016_003_008

அமைதியாக, ஜாத்திரைக்கையாக நடந்தேறிய கைதுகள்: பாதுகாப்பு வளையத்தில் இந்தோ – திபெத் முகாம் தீவிரவாதிகளிடம் விசாரணை நடந்த இடையபட்டி இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் முகாமிற்குள், உள்ளூர் போலீசார், பத்திரிகையாளர்கள் என யாரும் அரை கிலோ மீட்டருக்கு முன்பே அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்கு வந்திருந்த ஒத்தக்கடை போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். முகாமைச் சுற்றிய ரோட்டில் போலீஸ் வாகனங்கள் ரோந்து சுற்றி வந்தன. அவ்வழியாக வந்த சந்தேகத்திற்குரிய வாகனங்களை ஒத்தக்கடை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். 30-11-2016 அன்று பிற்பகல் 3.10 மணிக்கு தீவிரவாதிகளை ஏற்றிக்கொண்டு காரில், தேசிய புலனாய்வு படையினர் மேலூர் கோர்ட்டிற்கு புறப்பட்டனர். காரின் முன்னும், பின்னும் திண்டுக்கல், மதுரை துப்பாக்கி ஏந்திய, ஆயுதப்படையினர் வேன்களில் சென்றனர். பெங்களுர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்[4]. நாகூரைச் சேர்ந்த அபு பக்கர் மலேஸ்வரம் குண்டுவெடிப்பில் சிக்கிக்கொண்டு, கைதாகி, சிறையில் கிடக்கிறான்[5]. இவர்களது கேரளா-தமிழ்நாடு தொடர்புகள் ஏற்கெனவே எடுத்துக் காட்டப்பட்டன. ஆனால், இவர்கள் எல்லோருமே தாங்கள் எதையோ சாதித்து விட்டதைப் போலத்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டியவர்களின் தயவோடு தங்களுக்கு வேண்டியதைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். மதுரையைப் போன்று பெங்களுரும் அவர்களது “ஹப்பாகி” விட்டது

© வேதபிரகாஷ்

02-12-2016.

nia-takes-arrested-to-bangalore-dm-01_12_2016_003_009

[1] தினகரன், மதுரையில் ரூ.25 கோடிக்கு பழைய நோட்டுகள் மாற்றிய தீவிரவாதிகள், Date: 2016-11-29@ 02:14:48.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=262231

[3] தமிழ்.இந்து, நீதிமன்றங்களில் குண்டு வைத்த 5 பேர் கைது: தேசிய புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து விசாரணை, Published: November 30, 2016 08:53 ISTUpdated: November 30, 2016 09:12 IST.

[4] The Hindu, The arrested brought to Bangalore, Bengaluru: November 30, 2016, 00.00 IST; Upadated. November 30, 2016, 04.03 IST

Samsum Karim Raja has been the aide of Abu Backer Siddique from Nagore, an accused in the Malleswaram blasts, who is in jail.

[5] http://www.thehindu.com/todays-paper/Arrested-terror-suspect-brought-to-Bengaluru/article16727865.ece

மதுரை ஜிஹாதித்தனம் திட்டமிட்டே வளர்க்கப்படுகிறது என்பது கைதாகியவர்களின் தொடர்புகள் வெளிப்படுத்துகின்றன!

திசெம்பர் 2, 2016

மதுரை ஜிஹாதித்தனம் திட்டமிட்டே வளர்க்கப்படுகிறது என்பது கைதாகியவர்களின் தொடர்புகள் வெளிப்படுத்துகின்றன!

al-quida-terrorist-arrested-at-madurai-abbas-dawood-samsudeen-ayub-28-11-2016

முதலில் இருவர், நால்வர் என்று இறுதியாக அறுவர் கைதானது: இதில், குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக முகம்மது அய்யூப் தெரிவித்த தகவலின்பேரில், மதுரை நெல்பேட்டை கீழமாரட் வீதியைச் சேர்ந்த சம்சுதீன் (25) என்பவரை நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் மதுரையில் கைதான 4 பேரும் மேலூர் கோர்ட்டில் 29-11-2016 அன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். மேல் விசாரணைக்காக பெங்களூர் தேசிய புலனாய்வு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்த, இவர்கள் பலத்த  பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் கோர்ட்டிற்கு, கைதான 4 தீவிரவாதிகளும் 29-11-2016 அன்று மாலை 3.30 மணிக்கு கொண்டு வரப்பட்டனர். முன்னதாக வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய் விஜய் வரவழைக்கப்பட்டு கோர்ட் வளாகம் முழுவதும் சோதனையிடப்பட்டது.

  1. தாவூத் சுலைமான்(வயது 23), [கரீஸ்மா பள்ளிவாசல், மதுரை[1]]
  2. அப்பாஸ் அலி(27) [மதுரை இஸ்மாயில்புரம் நயினார் முகமது மகன்[2]],
  3. கரிம் ராஜா(23), [புதூர் விஸ்வநாதநகர் ராமுகொத்தனார் காம்பவுண்டைச் சேர்ந்த முகமது ஜைனுல்லாபுதின் மகன். பி.காம் படித்தவன், சிக்கம் கடை வைத்துள்ளவன்[3]]
  4. முகமது அயூப் அலி(25), [மதுரை திருப்பாலை ஐஸ்லாண்ட் நகர் முகமது தஸ்லிம் மகன்[4]]
  5. சம்சுதீன் என்ற கருவா சம்சுதீன்(25)[சிக்ந்த்ரின்மகன், நெல்பேட்டையைச் சேர்ந்தவன்[5] ]
  6. மொஹம்மதுஅயூப் [25, மொஹம்மதுதஸ்லிமின்மகன்[6]]

sulaiman-house-searched-in-chennai-where-incriminating-documents-seizedமுக்கிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது: மத்திய குற்றப்புலனாய்வு எஸ்பி பிரதீபா அம்பேத்கர் தலைமையில் டெல்லி தேசிய புலனாய்வுப்படையினர், கைதான நால்வரையும் மாஜிஸ்திரேட் செல்வகுமார் முன்பு ஆஜர்படுத்தினர்[7]. பின்னர் நால்வரையும் டிச. 1ம் தேதிக்குள் பெங்களூரு தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்[8]. கைதானவர்களின் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க கோர்ட் வாசலில் காத்திருந்தனர். பொதுமக்களும் பெருமளவில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கைதானவர்கள் நால்வரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றை அட்டைப்பெட்டியில் வைத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் தேசிய பாதுகாப்பு படையினர் சீல் வைத்தனர். கிளம்புவதற்கு முன்னதாக, கைதானவர்களின் தாய்மார்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது மகனைப் பார்த்து பேசிவிட்டு வந்த ஒரு தாய், கோர்ட் வளாகத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

dm-nia-arrested-al-queda-men-including-it-techie-at-madurai-29-11-2016

தீவிரவாத பயிற்சி அளித்தவர்கள் கைதாகியுள்ளனர்: 29-11-2016 அன்று மாலை 3.30 மணிக்கு கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்ட 4 தீவிரவாதிகளும், மாலை 6.30 மணிக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிற்குப்பிறகு, காரில் ஏற்றி பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாதுகாப்பு கருதியே மதுரையை தவிர்த்து மேலூர் கோர்ட்டில் 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்’ என்றார். முன்னதாக பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுரை மற்றும் சென்னையில் கைதான தீவிரவாத கும்பல்,   கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நவ. 1ம் தேதி வரை ஆந்திர மாநிலம், சித்தூர் மற்றும் நெல்லூர், கேரள மாநிலம், கொல்லம் மற்றும் மலப்புரம், கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகப் பகுதிகளில் 5 இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளனர்[9].  இச்சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட குக்கர், பேட்டரி, வெடிபொருட்களை மதுரையில் தயாரித்து, 4 மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது[10]. இதற்காக மதுரை மேலூர்,  சிவகாசி பகுதிகளில் வெடி மருந்துகள், பொருட்கள் வாங்கி தயாரித்துள்ளனர்[11]. மேலும், மதுரையில் 30 இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி முகாம்களையும் நடத்தியுள்ளனர்.  சுலைமான் கைது, விவகாரங்களை சுலபமக்கியுள்ள்து[12].

nia-searches-at-sulaiman-house-dm-30_11_2016_005_003

கணினி வல்லுனனான சுலைமான் தலைவன்: இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் செல்போன்களை கொடுத்தால், பின்னர் போலீஸ் விசாரணையில் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அதனால், அவர்கள் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தினால், அவர்கள் குண்டு வைக்கும் இடம் வரை செல்கிறார்களா என்பதை எளிதாக சென்னையில் உள்ள சுலைமான் கண்காணிப்பான். பின்னர் குண்டு வைத்து விட்டு திரும்பி வரும்வரையும் ஜிபிஎஸ் மூலமே அவர் கண்காணிப்பார். ஒருவேளை போலீஸ் பிடித்து விட்டால், மற்ற தீவிரவாதிகள் தப்புவதற்கும் எளிதாக இருக்கும் என்பதற்காகவே இந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தி வந்தனர் என்றும் தெரியவந்தது. மேலும் டிசம்பருக்குள் தென் மாநிலங்களில் பல இடங்களில் குண்டு வெடிப்பை நிகழ்த்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்[13]. இதற்கான வரைபடங்கள் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளன. இது குறித்தும் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[14]. இவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால், தமிழகத்தில் தேசிய புலனாய்வு படையினர் தங்கி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[15].

© வேதபிரகாஷ்

02-12-2016

nia-arrested-connected-with-five-blasts-base-movement

[1] Dawood Suleiman, 23 yrs, s/o Saeed Mohd. Abdulla of Karimsa Pallivasal, Madurai, now

residing at Chennai. He works in a software firm and was the main leader of the terrorist gang.

He has been arrested in Chennai today 28-11-2016, for the involvement in the crime.

[2] Abbas Ali, 27 yrs, s/o Nainar Mohammed, resident of 11/23, 2nd floor, 4th street, Ismailpuram, Munichalai Road, Madurai. He studied up to 8th standard, and a painter. He is also running a library in the name ‘DARUL ILM’ at Madurai. He has been arrested in Madurai today [28-11-2016], for his involvement in the crime.

[3] Samsum Karim Raja, s/o V.S. Mohammed Jainullah- buddin, resident of No.17, Ramu kothanar compound, Viswanatha Nagar, K. Pudur, Madurai. He is a B.Com graduate and runs a chicken broiler shop at Kannimara Koil street in Madurai. He has been arrested in Madurai today 28-11-2016, for his role in the crime.

[4] Md. Ayub Ali, age 25 yrs, s/o Mohd Tasleem, resident of Island nagar, Madurai. He is a Public liaison officer for a hearing aid company. He is being further examined in Madurai for his role in the crime.

[5] Today 29-11-2016, NIA has arrested accused namely Shamsudeen, aged 25 yrs, S/o

Sikander, R/o No.13-C, Kilamarat Veedhi, Opposite Thayir Market, Nelpettai, Madurai

[6] Today 29-11-2016, NIA has arrested accused namely Mohd Ayub aged 25 yrs, S/o Mohd Dhaslim, Island Nagar, 2nd Cross Street, Kaipathur, Madurai in Madurai in RC-03/2016/NIA/HYD.

[7] http://timesofindia.indiatimes.com/city/chennai/TCS-techie-who-plotted-to-target-PM-Modi-held-in-TN/articleshow/55677420.cms

[8] http://www.nia.gov.in/writereaddata/Portal/News/114_1_PressRelease_29_11_2016_1.pdf

http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/360_1_PressRelease_29_11_2016_2.pdfUPDATED: NOVEMBER 29, 2016 01:07 IST

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் மேலும் இரு தீவிரவாதிகளை இன்று கைது செய்துள்ளனர் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், By: Veera Kumar, Published: Tuesday, November 29, 2016, 15:33 [IST]

[10] The Hindu, NIA detains four youths for blasts in courts, Vijaita Singh, MADURAI/NEW DELHI: NOVEMBER 29, 2016 01:07 IST UPDATED: NOVEMBER 29, 2016 01:07 IST.

[11] http://www.thehindu.com/news/national/NIA-detains-four-youths-for-blasts-in-courts/article16717767.ece

[12]

[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/mysuru-blast-2-more-from-base-movement-secured-nia-268498.html

[14] The Hindu, NIA arrests one more terror suspect in Madurai, by S. Sundar, MADURAI NOVEMBER 29, 2016 20:47 IST UPDATED: NOVEMBER 30, 2016 02:08 IST.UPDATED: NOVEMBER 30, 2016 02:08 IS

[15] http://www.thehindu.com/news/national/NIA-arrests-one-more-terror-suspect-in-Madurai/article16721360.ece