Archive for the ‘மாந்திரீகம்’ category

விமான விபத்திற்கு கருப்பு ஆடு பலிகொடுத்த பாகிஸ்தானிய விமானத்துறையும், ஒரு பைத்தியம் செய்த 20 நிர்வாணக் கொலையும் (2)

ஏப்ரல் 3, 2017

விமான விபத்திற்கு கருப்பு ஆடு பலிகொடுத்த பாகிஸ்தானிய விமானத்துறையும், ஒரு பைத்தியம் செய்த 20 நிர்வாணக் கொலையும் (2)

Sargohda - dargah - buildin black magic-sufism

ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் லாஹூர் நலரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் முஹம்மது அலி குஜ்ஜார் தர்கா உள்ளது. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் அந்நாட்டு அரசு பணியாளர், தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் வேலைசெய்தார், என்பது தெரியவந்து உள்ளது.  மனநிலை பாதிப்புடன் இங்கு வரும் பக்தர்களுக்கு பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் மிக கொடூரமான முறையில் சிகிச்சை அளிப்பது வழக்கம். ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது. இதற்காக வருபவர்கள் தங்குவதற்கு தர்கா வளாகத்தில் காப்பகம் ஒன்றும் உள்ளது. இங்கு சிலநாட்கள் தங்கி ‘சிகிச்சை’ பெற்றால் தங்களது பிரச்சனை நீங்கிவிடும் என்பது இங்கு வருபவர்களின் (மூட) நம்பிக்கையாக உள்ளது.

Sargohda - bodies taken out

தர்காவின் நிர்வாகத்திற்காக போட்டி, சண்டை: இந்நிலையில், இந்த தர்காவின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? என்பது தொடர்பாக பரம்பரை வாரிசுகளுக்கு இடையில் சமீபகாலமாக போட்டியும் மோதலும் இருந்து வந்துள்ளது[1]. தலைமை பேயோட்டுகிறவன் தான் திறமையான பேயோட்டுகிறவன் என்றால், அவனை வைத்து தான் அந்த தொழில் நடத்தியாக வேண்டும். ஆகவே அவனைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவனையே தீர்த்துக் கட்ட வேண்டும் என்றால், அவனை விட பெரிய எத்தனாக, அவனது மகன் அல்லது வேறொருவன் இருந்திருக்க வேண்டும். இந்த போட்டியின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை அன்று பின்னிரவு [02-04-2017] நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட 20 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்[2]. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்[3].  என்று தமிழ் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

Sargohda - dargah - victim bodies taken out

தொலைபேசியில் வரச்சொல்லி, மயக்க மருந்து கொடுத்து கொலை செய்த மனநோயாளி: தர்காவிற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்காக இரவு தொலை பேசியில் அழைப்பு விடுத்து உள்ளார். முக்கியமான பணி இருப்பதாக கூறி தன்னுடைய அறைக்கு அளைத்து அவர்களுக்கு மயக்க மருந்தை கொடுத்து உள்ளார்[4].  அதாவது,, ஒரு மனநோயாளி / பைத்தியம் இந்த அளவுக்கு வேலை செய்யுமா என்று தெரியவில்லை. இல்லை, அந்த பைத்தியம் அந்த அலவுக்கு விசயம் தெரிந்து வைத்துள்ளது. அவரது ஆலோசனையின் பேரில் உதவியாளர்கள் சிலர் அங்கு வசித்துவந்த எதிர் தரப்பினருக்கு மயக்க மருந்து கலந்த உணவு வகைகளை கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டவர்கள் மயங்கி சாய்ந்தபோது அவர்களின் ஆடைகளை களைந்து கத்தி மற்றும் வீச்சரிவாள்களால் வெட்டியும், கனத்த தடிகம்புகளால் தாக்கியும் அப்துல் வஹீதின் ஆதரவாளர்கள் துடிதுடிக்க கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிகிச்சைக்காக அந்த தர்காவுக்கு வந்திருந்த மூன்று / நான்கு பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்[5]. இந்த கோரச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்யுள்ள போலீசார் மேலும் பலரை தேடி வருகின்றனர்[6]. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலையை தொடர்ந்து, சம்பவம் நடந்த தர்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Sargohda - dargah - building

ஷியாக்களுக்கு எதிரான பிரச்சாரமா?: பாகிஸ்தானில், சுன்னிகளைத் தவிர மற்ற முஸ்லிம்கள், முஸ்லிம்களாகக் கருதப் படுவதில்லை. கடந்த 50 ஆண்டுகளில் காதியான் – அஹமதியா முஸ்லிம்கள் வேடையாடப் பட்டு, விரட்டியடிக்கப் பட்டனர். பஹாய் முஸ்லிம்களின் கதியும் அவ்வாறே முடிந்தது. ஷியாக்கள் அதிகமாக இருப்பதால். தலிபான் இயக்கம் வளர்ந்த பிறகு, அவர்களைத் தாக்கி வேட்டையாடி வருகின்றனர். ஐசிஸ் வந்த பிறகு கேட்கவே வேண்டாம், ஜிஹாதி தீவிரவாதம் எல்லைகளக் கடந்தது. தொடர்ந்து ஷியாக்கள் பலவிதங்களில் தாக்கப் பட்டு வருகின்றனர். தர்காக்களை ஒழிக்கிறோம் என்ற போர்வையில், குண்டுவெடிப்புகளுடன் வேலைசெய்து வருகிறார்கள். சுன்னிகள் தவிரவீதர முஸ்லிம்களின் மசூதிகள், மடாலயங்கள், சூபிகானா போன்ற இடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. குண்டுவெடிப்புகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.  பாகிஸ்தானை விட்டு, ஓடி வந்த பஹாய் முஸ்லிம்கள், தில்லியில், தாமரை கோவிலைக் கட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. கர்நாடகத்தில், அஹமதியா முஸ்லிம்கள் கனிசமாக உள்ளனர். ஆனால், இவர்கள் எல்லோருமே அடங்கிக் கிடக்கின்றனர். எதைப் பற்றியும் எந்த கருத்தையும் சொல்வதில்லை.

Attacks on shrines since 2005

பிப்ரவரியில் நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் சாவு, காயம் முதலியன: பாகிஸ்தானில் உள்ள தர்கா ஒன்றின் மீது நடைபெற்ற தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றில் டஜன்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது[7]. சுமார் 18 தீவிரவாதிகள் தெற்கு சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அங்குத்தான் அந்த தர்கா அமைந்திருந்தது. மேலும் 13 பேர் வட-மேற்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவான் நகரில் இருந்த சூஃபி தர்காவில் தற்கொலை குண்டுத்தாரி ஒருவர் வழிப்பட வந்திருந்தோர் மத்தியில் தன்னைத்தானே வெடிக்க வைத்துள்ளார். இஸ்லாமிய அரசு என அழைத்துக்கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஜிஹாதி குழுக்கள் நடத்திவரும் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இது சமீபத்தியதாகும். தாக்குதலில் பலியானவர்களுக்கு 17-02-2017 அன்று (வெள்ளிக்கிழமை) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது, என்று பிபிசி வெளியிட்டது[8]. ஆனால், அத்தகைய “குண்டுதாரிகள்” ஏன் ஷியா மசூதிகளில் மட்டும், தங்களை வெடித்துக் கொள்கிறார்கள் என்று சொல்லவில்லை.

Sargohda - dargah - buildin black magic

ஷியாக்களின் பலியைசகிப்புத் தன்மையோடுஅனுசரித்து வரும் செக்யூலரிஸ சித்தாந்திகள்: ராணுவம் மற்றும் போலீஸ் சுன்னிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், ஷியாக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஆகவே, சுன்னிகளும் பேயோட்டுதல், மந்திரம் வைத்தல், பில்லி-சூன்யம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும், இதனை சாக்காக வைத்துக் கொண்டு, அவர்களை ஒழிப்பதை நியாயப் படுத்துவது போன்ற, இந்நிகழ்சிகள் தெரிகின்றன. மனித உரிமைகள் எல்லாம் இதில் யாரும் கவலைப்படவில்லை. இங்குள்ள செக்யூலரிஸ்டுகளும் கண்டுகொள்வதில்லை. இங்குள்ள ஷியா முஸ்லிம்கள், ஆச்சரியப் படும் அளவுக்கு ஊமைகளாக இருக்கின்றனர். இங்கு ஒரு பாரூக் நாத்திகன் என்பதனால் கொலை செய்யப்பட்டான் என்றால், அங்கு சுன்னிகள் தவிர மற்ற எல்லோருமே “காபிர்கள்” என்று முத்திரைக்குத்தப்பட்டு தீர்த்துக் கட்டப் படுகிறார்கள். ஆனால், “சகிப்புத் தன்மையோடு” அமைதி காக்கிறார்கள். இப்பொழுதும், பைத்தியம் கொலை செய்தது என்று கதையை முடித்து விடுவார்கள்.

© வேதபிரகாஷ்

03-04-2017

Sargohda - dargah - surviving victim

[1] மாலைமலர், மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி: பாகிஸ்தான் தர்காவில் கொடூரம், பதிவு: ஏப்ரல் 02, 2017 10:57

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/02105709/1077548/20-people-killed-by-mentally-ill-custodian-of-dargah.vpf

[3] தினத்தந்தி, பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை, ஏப்ரல் 02, 12:00 PM

[4] http://www.dailythanthi.com/News/World/2017/04/02120016/20-killed-by-shrine-custodian-in-Sargodha-police.vpf

[5] தினமலர், தர்காவுக்கு சென்ற 20 பேர் நிர்வாணமாக்கி படுகொலை, பதிவு செய்த  நாள். ஏப்ரல்.3, 2017, 00.05.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1743594

[7] பிபிசி, தர்கா மீது நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி: 31 தீவிரவாதிகள் கொலை, பிப்ரவரி 17, 2017.

[8] http://www.bbc.com/tamil/global-39005133

முஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர்!

ஒக்ரோபர் 12, 2013

முஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர்!

muslim-sacrifices-child-2010 (1)

முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் திராவிட நாட்டில் தொடரும் மர்மம்!: முந்தைய இடுகைகளில் இதைப் பற்றி அதிகமாகவே இப்பிரச்சினை அலசப்பட்டுள்ளது. அப்பொழுது (ஜூலை 2010) விசயங்களை கூர்ந்து கவனித்தால் தமிழகத்தில் நரபலி அதிகமாகி வருவது விவரங்களோடு எடுத்துக் காட்டப்பட்டது. இதில் காணப்படும் முறை,

  • குழந்தைகள் காணாமல் போவது,
  • பெற்றோர் புகார் கொடுப்பது,
  • ஆளில்லாத இடத்தில் குழந்தைகள் உடல்,
  • உடற்பாகங்கள் காணப்படுவது,
  • சில ஆட்கள் / மந்திரவாதிகள் கைது செய்யப்படுவது,
  • அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பது…………..

பிறகு என்னவாயிற்று என்று தெரியாமல் வழக்குகள் முடிக்கப்படுவது…………..என்ற போக்குத்தான் தெரிய வருகிறது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[1].

uslim-sacrifice-2010

நரபலி முஸ்லீம்களுக்கோ,  தமிழகத்திற்கோ புதியதல்ல[2]: இங்கு குறிப்பாக முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அதிகமாக உள்ள பகுதிகள், தர்காக்கள், முஸ்லிம் மாந்திரீகர்கள் முதலியோர் சம்பந்தப் படுவதால், இக்கொணத்தில் பார்க்க வேண்டியிருந்தது. இதை முஸ்லீம் பிரச்சினை என்று பார்க்கவில்லை, ஏனெனில் மற்ற இடங்களில் இந்துக்களும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். இங்கு, முஸ்லீம்களிடம் ஏன் இத்தகைய நம்பிக்கைகள் உள்ளன என்று ஆராயும் நோக்கில் அலப்பட்டது. முன்பு 2007ல் இக்பால் மற்றும் ஜாபர் என்ற இரண்டு மந்திரவாதிகள் இதே மாதிரி எண்ணத்துடன் செயல்பட்டுள்ளனர். அதை பற்றியும் அவ்விடுகையில் விளக்கப்பட்டது[3].

muslim-sacrifice-torso-found-nie

இரண்டாண்டுகள் கழித்து அப்துல்கபூர் – ரமீலா தம்பதியர் மேல்முறையீடு செய்தல்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் முத்தையாபுரத்தை சேர்ந்தனர் அப்துல்கபூர்,30. இவர் ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்காவில், சமையல்காரராக இருந்தார். அங்கிருந்த ரமீலா பீவிக்கும், 32, அப்துல்கபூருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்தனர். “தலைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்து, பூஜை செய்தால், முன்னேற்றம் அடையலாம்’ என, சிலர் கூறியதை நம்பி, தலைப்பிரசவ குழந்தையைத் தேடி, மதுரை வந்தனர். மதுரை எஸ்.ஆலங்குளம் கவுகர்பாட்ஷா. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி சிரின் பாத்திமா, தன் ஒரு வயது குழந்தை காதர்யூசுப் மற்றும் தாய் சுல்தான் பீவி ஆகியோருடன், நேர்த்திக்கடன் செலுத்த, 2010 ஜூலை 1ல், கோரிப்பாளையம் தர்காவில் தங்கினர். மறுநாள் இரவு, மூன்று பேரும் அங்கு தூங்கிக் கொண்டிருந்தனர். காதர்யூசுப்பை கடத்திய அப்துல்கபூரும், ரமீலாபீவியும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கொண்டு சென்றனர். அங்கு ஒரு விடுதி குளியலறையில், காதர்யூசுப்பின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை வாளியில் பிடித்தனர். தலை, உடல்களை தனித்தனியாக வெட்டி, பூஜை செய்து, குழந்தையின் உடலை புதைத்தனர். தலையை திருச்செந்தூர் அருகே கடற்கரையில் புதைத்தனர். ரத்தத்தை கடலில் வீசியதாக, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை 6 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, 2012 ஆக.,3 ல் அப்துல்கபூர், ரமீலாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.

Abdul Gaffor-Ramila Bivi-child-sacrifice

குழந்தையை கடத்தி நரபலி கொடுத்த தம்பதி : ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு[4]: மதுரையில், ஒரு வயது குழந்தையை கடத்தி, நரபலி கொடுத்த வழக்கில், கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில், கணவன், மனைவி மேல்முறையீடு செய்தனர்[5]. இதை ரத்து செய்யக்கோரி, இருவரும் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: “சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை. தர்காவில் பலர் தங்கியிருந்த நிலையில், குழந்தையை கடத்த வாய்ப்பில்லை. எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டனர். நேற்று, இவ்வழக்கு பட்டியலில் இடம் பெற்றது. விசாரிக்கப்படவில்லை. முன்பு கூட “காளி உத்தரவின் படி பலி கொடுத்தேன்”, என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தான்[6]. கொலைக்கு தண்டனை கொடுப்பதானால் காளிக்குக் கொடுங்கள்[7] என்று சொன்னதாக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன.

Abdul Gaffor-Ramila Bivi-child-sacrifice2

கத்தி போய் வால் வந்தது டும்,  டும்,  டும்:  அப்பொழுது செக்யூலரிஸ ரீதியில் ஊடகங்கள் செயல்பட்டன. முஸ்லிம்கள் சம்பந்தப் பட்ட பிரச்சினை என்பதால், வெறும் கொலை போல, டிவிக்களிலும் காட்டப்பட்டது. “கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்” என்பதுபோல, அப்துல் கஃபூரின் அவதாரங்களும் பலவாறு மாற்றி வர்ணிக்கப்பட்டன. கீழுள்ளவை முந்தைய பதிவில் உள்ளபடி கொடுக்கப்படுகின்றன:

  • மந்திரவாதி, தாந்திரிக்[8], ஃபகிர்[9] / பக்கிரி, நரபலி கொடூரன், நரபலி மந்திரவாதி, சைக்கோ, சைக்கோ மந்திரவாதி, ………………என அவனது அந்தஸ்த்துகள் பெருகிவருகின்றன[10].
  • அசரீரி காளியாகியது போல, குழாய் மண்சட்டியாகிறது;
  • மனைவி, காதலியாகி, கள்ளக்காதலியாகிவிட்டாள்;
  • திடீரென்று ஒரு முத்துப்பேட்டை அலியார் வேறு வந்துவிட்டார்!
  • பலவித பொருட்கள் வருகின்றன: லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு………………
  • காளி சொல்லிதான் குரான் வைத்திருந்தானா, இல்லை முஸ்லீம் எப்படி இந்த வகையறாக்களை வைத்துக் கொண்டு பூஜை செய்தான் என்று தெரியவில்லை.
  • 15 பூஜை, நடுராத்திரி பூஜை, பரிகாரம் என சங்குகள், முறைகல் வேறு விவரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
  • தர்கா லாட்ஜாகிறது, வீடாகிறது;
  • குரானில் சொல்லியபடி, காளியை வழிப்பட்டானா, நரபலி கொடுத்தானா, என்பதையெல்லாம், நேர்மையான விசுவாசிகளும், நேயமுள்ள நம்பிக்கையாளர்களும்தான் பதில் சொல்லியாக வேண்டும்!

killed-the-child-and-roaste

 முஸ்லீம் மாந்திரீகம் முதலியவற்றை நம்புவது,  பரப்புவது முதலியன[11]: “ஒரு முஸ்லீம் நண்பர் தர்காக்கள் மற்றும் முஸ்லீம்களின் நம்பிக்கைகளைப் பற்றி விவரங்களை, “அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள்” என்ற தலைப்பில் கொடுத்துள்ளதையும் படிக்கலாம்[12]. ஒரு கோவிலைப் பற்றிய விவரங்களில், இப்படியும் சேர்த்திருக்கிறார்கள்[13], “இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது”. விஜய்குமார் என்பவர்[14], “முஸ்லீம் மாந்திரீகம்”, என்ற புத்தகத்தை ரூ.1000/- என்று இணைதளத்தில் போட்டுள்ளார். இப்படி ஏராளமான ஆதாரங்களைக் கொடுக்கலாம். முஸ்லீம்கள் ஜமாத், ஷரீயத் கோர்ட், தார் உல் கடா, என்ற பல நிலைகளில், அவர்களது குற்றவாளிகளை மறைத்துவிடுகின்றனர் எப்பொழுதாவது, இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்ட கேசுகள்தாம், ஊடகங்களில் வருகின்றன. ஆனால், சில நாட்களில் இவையும் மறக்கப்படும், மறைக்கப்படும்”, என்று அப்பொழுது முடித்திருந்தேன். இப்பொழுது, “சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை. தர்காவில் பலர் தங்கியிருந்த நிலையில், குழந்தையை கடத்த வாய்ப்பில்லை. எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், இவ்வாறு தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனராம்.

Abdul Gaffor-Ramila Bivi-child-sacrifice3செக்யூலரிஸ அமைதி,  ஊமைத் தனம் மற்றும் பாரபட்சம்: திராவிட சித்தாந்திகள், கம்யூனிஸ வல்லுனர்கள், பெண்ணிய வீராங்கனைகள், “கற்பில்” வேதாந்தியான குஷ்பு போன்ற பெண்மணிகள், யாருமே, இவ்வழக்கைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாகவே உள்ளது. “தேவதாசி” பற்றி பேசினால், வீராங்கனைகள் கிளம்பி விடுகிறார்கள், ஆனால், உண்மையாகவே, ஒரு பெண் நரபலியில் சம்பந்தப் பட்டிக்கும் போது, அந்த வீராங்கனைகள் “ஆள்-அட்ரஸ்” தெரியாமல் இருக்கிறார்கள்! நாத்திக-சித்தாந்திகள், மூட-நம்பிக்கைகளை சாடுகின்ற தமிழனத் தலைவர்கள், இனமானப் போராளிகள் எல்லோருமே கப்-சிப் தான்! சட்ட வல்லுனர்கள், நீதிமான்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள் முதலியோரும் ஊமைகளிகி விடுகின்றனர்.

© வேதபிரகாஷ்

12-10-2013


[3] வேதபிரகாஷ், முஸ்லீம்மாந்திரீகநரபலிகள்திராவிடநாட்டில்தொடரும்மர்மம்!, https://islamindia.wordpress.com/2010/07/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/

[4] தினமலர், நரபலிகொடுத்ததம்பதி : ஆயுள்தண்டனையைஎதிர்த்துமேல்முறையீடு, சென்னை பதிப்பு, பக்கம்.4, பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2013,00:30 IST

[8] ஆங்கில டிவிக்களின் – டைம்ஸ்-நௌ, ஹெட்லைன்ஸ்-டுடே- உபயம். தாந்த்ரிக் முஸ்லிம் குழந்தையை பலிகொடுத்து ரத்தம் குடித்தான் என்ற ரீதியில், ஒலிபரப்பி, ஆங்கிலம் தெரிந்தவர்களை குழப்பியுள்ளது. இதனால், ஒரு அந்நிய தளம் இந்த செய்தியை ஒரு பிரபலமான கோவிலுடன் இணைத்து வெளியிட்டுள்ளது!

[9] இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது

[10]  ஊடகங்களில் முஸ்லீம்கள் அதிக அளவில் முஸ்லீம்களாகவே செயல்படுவதால், அவர்கள் இந்த சமாசாரத்தை அமுக்கி வாசித்து, மறைத்துவிட முயல்கின்றனர். ஆகையால், வித-விதமான செய்திகளை மாற்றி-மாற்றி வெளியிட்டு திசைத் திருப்பப் பார்க்கிறார்கள்.