Archive for the ‘மத நல்லிணக்க விருது ’ category

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.

மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம். காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.

நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6]..  மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8].  மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள்  லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].

தீவிரவாத தொடர்புகள் நீங்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1] காமதேனு, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!, Updated on : 22 Sep, 2022, 3:29 pm; 2 min read

[2] https://kamadenu.hindutamil.in/politics/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims

[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன் பகவத்முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு: பசுவதை உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி பேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.

[4] https://tamil.indianexpress.com/india/rss-muslim-intellectuals-to-hold-periodic-talks-address-issues-of-concern-to-the-two-sides-514530/

[5] இடிவி.பாரத், மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்விஷயம் என்ன தெரியுமா?, Published on : 22, Sep 2022, 9.09 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/rss-chief-mohan-bhagwat-visits-mosque/tamil-nadu20220922210942766766339

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்புகாரணம் இதுதான்!!, Narendran S, First Published Sep 22, 2022, 9:20 PM IST; Last Updated Sep 22, 2022, 9:20 PM IST.

[8] https://tamil.asianetnews.com/india/rss-chief-mohan-bhagwat-met-muslim-leader-imam-umar-ahmed-ilyasi-rimc0w

[9] தினத்தந்தி, இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு, Sep 22, 2:32 pm

[10] https://www.dailythanthi.com/News/India/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims-798250

மத நல்லிணக்க விருது விழா வழங்கும் விழா போர்வையில் கோவில்களை இடித்த துலுக்க தீவிரவாதத்தை மறைக்க முயன்ற நிகழ்ச்சி!

ஜூலை 22, 2019

மத நல்லிணக்க விருது விழா வழங்கும் விழா போர்வையில் கோவில்களை இடித்த துலுக்க தீவிரவாதத்தை மறைக்க முயன்ற நிகழ்ச்சி!

Puliyur mosque harmony fuction 14-07-2019 -3

Puliyur mosque harmony fuction 14-07-2019 -16

மத நல்லிணக்க விருது வழங்கும் விழா: என்று கோடம்பாக்கம் புலியூர் ஜும்மா பள்ளிவாசல் 14-07-2019 அன்று நடத்திய விழா பற்றி ஊடகங்களில் ஒன்றும் விவரங்கள் வெளிவரவில்லை. ஜே. எம். அமானுல்லாஹ் தலையில், எஸ்.எஸ். முஹம்மது  இப்ராஹிம் முன்னிலையில், பி. அப்துர் காதர் வரவேற்றுரையுடன், எம். அப்துர் ரஹ்மான் அறிவுரையுடன் நடந்தது. விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் நீதிபதி கே. எல் .பாஷா மத நல்லிணக்க விருதுகளை மீனாட்சி மகளிர் கல்லூரி செயலாளர் லட்சுமி, மீனாட்சி. சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி செயலாளர் முனைவர் முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் ஆகியோருக்கு வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் ஸ்ரீமத் சுவாமி அபவர்கானந்தர். தமிழ் மையம் ஜெகத் கஸ்பர் ராஜ், லயோலா முன்னாள் கல்லூரி முதல்வர் ரெவரண்ட் அமல்தாஸ், தலைமை இமாம் உமர் ரிஜ்வான் ஜமாலி ஆகியோர் கலந்து கொண்டனர்[1]. கோடம்பாக்கம் புலியூர் ஜும்மா பள்ளிவாசல் ஹாஜி அஷ்ரப் அலி கான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்[2]. தனியாரின் வீடியோக்களில் ஒன்று நிகழ்ச்ச்சியைக் காட்டுகிறது[3].

Puliyur mosque harmony fuction 14-07-2019 -1

Puliyur mosque harmony fuction 14-07-2019 -2

சாத்வீக மிருகத்தை உண்போம் என்று விளக்கிய துலுக்க மடாதிபதி: கே. எஸ். லக்ஷ்மி, செயலாளர், மீனாக்ஷி மகளிர் கல்லூரி,  கே.எஸ். பாபாய், செயலாளர், மீனாக்ஷி சுந்தர்ராஜன் பொறியியல் கல்லூரி, பி. மன்னர் ஜவஹர், முன்னாள்துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், ஶ்ரீமத் சுவாமி அபவர்கானந்தர், ஆசிரியர், ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம், மாத இதழ்,இவர்கள் முன்னர், “மிருகங்களிடம் பல குணங்கள் உள்ளன. எனவே தான், உட்கொள்ள வேண்டிய உணவுகளில் கூட, எந்த மிருகம் சாதுவாக இருக்கிறதோ, அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. எது ஆக்ரோசமாக தன்னுடைய அகங்காரத்தை அமைத்துக் கொள்கிறதோ, எது தீனி கிடைத்து சாப்பிடுகிறதோ, எது பிற உயிரினங்களை மிகக் கொடுமையாக சாகடித்து சாப்பிடுகிறதோ, அந்த மாமிசத்தைக் கூட நீ உண்ணக்கூடாது என்று சொல்லுகின்ற யதார்த்தம் உன்னிடம் பிரதிபலித்து விடக்கூடாது,” என்று சுற்றி வளைத்துப் பேசுகின்றான் ஒரு ஹிம்சாவாதி துலுக்கன். அதாவது, சிங்கம், புலி, முதலை போன்றவற்றை சாபிடமாட்டேன் ஆனால், பசு போன்ற மென்மையாக இருப்பவற்றை உண்பேன் என்று  பேசுவது, எதை குறிக்கிறது! மொஹம்மது மென்மையான விலங்குகளை புசியுங்கள் என்பதால் தான், புலி, சிங்கம், முதலை போன்றவற்றை உண்பதில்லை என்று அஸ்ரப் அலிகான் நக்கலடித்ததை ஏன் கண்டிக்கவில்லை?

Sithaksthi myth

Puliyur mosque harmony fuction 14-07-2019 -4

கட்டுக்கதை வைத்து, கட்டுக் கதை சொன்ன அமானுல்லாஹ்: அமானுல்லாஹ் ராமேஸ்வரம் கோவில் கட்ட சீதக்காதி தான் கருங்கற்களால் ஆன, சிற்பங்கள் செதுக்கப் பட்ட தூண்களை கொடுத்தான் என்று, புதிய கதையைச் சொன்னது தமாஷாக இருந்தது. மேலும், மிச்சமான தூண்களை வைத்து தான், கிழக்கரையில் உள்ள மசூதியை கட்டிக் கொண்ட, இன்னொரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டது, அதைவிட வேடிக்கையான விசயம் தான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல, இரண்டு புருடா / ரீல் விட்டது, துலுக்கருக்கே உரிய சாமர்த்தியம் போல.  ராமேஸ்வரம் கோவிலைத் தாக்கியது, கீழக்கரை கோவில்களை ஆக்கிரமித்து மசூதிகள் ஆக்கியது என்பவற்றை மறைக்க முயற்சித்தது பரிதாபமாக உள்ளது. அப்துல் காதர் மரைக்காயர் என்பவரை சீதக்காதி என்றாக்கி, வள்ளல் என்று சொல்ல ஆரம்பித்தனர் துலுக்கர். இதற்கு சரித்திர ஆதாரம் எதுவும் இல்லை. குறிப்பிட்ட நபரின் உண்மையான பெயர், பிறந்த இடம்[4], தேதி என்று எதுவும் குறிப்பாகத் தெரியவில்லை. துலுக்க ஆராய்ச்சிய்சாளர்களே மாறுபட்ட தகவல்களைக் கொடுத்துள்ளனர்[5]. “செத்தும் கொடுத்தான் சீதக்காதி” கட்டுக்கதையை, துலுக்கரே கண்டித்துள்ளனர்[6].

Puliyur mosque harmony fuction 14-07-2019 -13

14-07-2019 puiyur mosque function-3

புலியூர் மசூதியில் மனித நேயம் பெயரில் அடந்த கூட்டத்தில் ஶ்ரீராமகிருஷ்ண மட சாமி, பேசியது: ஶ்ரீராமகிருஷ்ண மட சாமிஜி அபவர்கானந்தர் பேசும் போது, துலுக்கர் சொன்ன பொய்களை மறுக்காமல், ஶ்ரீராமகிருஷ்ணரின்மடத்தின் செக்யூலரிஸத்தைப் பற்றி பேசியது தமாஷாக இருந்தது.  ஶ்ரீராமகிருஷ்ண மட சாமிஜியை வைத்து, துலுக்கன்கள் பொய் சரித்திரம் சொன்னால், அதைக் கேட்டுக் கொண்டிருக்க என்ன விதி உள்ளது என்று தெரியவில்லை. ஆற்காடு நவாப் மைலாப்பூர் குளத்திற்கு இடம் கொடுத்தார் – குளம் இல்லாமலேயே கோவில் கட்ட முட்டாள்களா என்ன இந்துக்கள்?  கருணாநிதி கூடத்தான் சுல்தான், நவாப் ரேஞ்சில் இருந்து, கும்பாபிஷேகம் செய்து வைத்ததாக அழைப்பிதழ்கள் உண்டு, எவனும் நம்ப மாட்டானே? அபவர்கானந்தர் இப்பொய்களுக்கு பதில் சொல்லாமல், கண்டிக்காமல், மறுப்புத் தெரிவிக்காமல், விருது வாங்கி வந்தது கேவலமானது! மத நல்லிணக்க விருது விழா வழங்கு விழா என்ற போர்வையில் 14-07-2019 அன்று கோடம்பாக்கம் புலியூர் ஜும்மா மசூதியில் இத்தனையும் அரங்கேறியுள்ளது.

Puliyur mosque harmony fuction 14-07-2019 -10

Puliyur mosque harmony fuction 14-07-2019 -11

காசி விஸ்வநாதர் கோவிலை ஔரங்கசீப் உடைத்ததற்கு வக்காலத்து வாங்கி, நியாயம் கற்பித்த துலுக்கர்: மனிதநேயம் பெயரில் கூட்டத்தைப் போட்டு, காசி விஸ்வநாதர் கோவில் இடித்தது சரிதான் என்று துலுக்கன் பேசினால், எப்படி பொறுத்துக் கேட்டனர் என்று தெரியவில்லை.முன்னர் பி.என்.பாண்டே[7] என்ற காங்கிரஸ்காரர், செக்யூலரிஸ போதையில், ஒரு கதையை உருவாக்கினார்[8]. அதன்படி, ஔரங்கசீப் வங்காளத்திற்கு செல்லும் போது, காசிக்கு அருகில், இந்து ராஜாக்கள் எதிர்கொண்டனராம். ஔரங்கசீப், ஒருநாள் அங்கேயே இருந்தால், அவர்களது ராணிகள் வாரணாசிக்குச் சென்று, கங்கையில் புனித நீராடி, காசி விஸ்வநாதரை வழிபட்டு வந்து விடுவர் என்று கேட்டுக் கொண்டனர். ஔரங்கசீப்பும், படைகளுடன் அங்கேயே நின்று விட்டானாம். த்சரிசனத்திற்குப் பிறகு, எல்லோரும் திரும்பி வந்தனர். ஆனால், கட்சின் ராணி மட்டும் வரவில்லை. இதனால், ஔரங்கசீப், தனது வீரர்களை விட்டுத் தேட சொன்னானாம். தேடிப் பார்த்த போது, விஸ்வநாதரின் கர்ப்பகிரகத்தின் கீழ் ஒரு நிலவறையில் ராணி கிடந்தாளாம். அவளது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதனால், கோபமுற்ற ஔரங்ஜசீப் அக்கோவில் அங்கிருக்கக் கூடாது என்று இடித்துத் தள்ளினானாம். ஆனால், பிறகு, இக்கதைக்கு ஆதாரம் என்று ஆராய்ந்து பார்த்தால், ஏதோ பெயர் தெரியாத முல்லாவிடமிருந்து வந்த கதை என்று தெரிந்தது[9], அதாவது, சரித்திர ஆதாரமற்றக் கட்டுக்கதை. அந்த முல்லா கதையை பாண்டே எழுதியதே நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால், இப்பொழுது, இந்த அப்துர் ரஹ்மான், பொறுபற்ற முறையில் அள்ளிவீசியதும், இந்துக்கள் ஒருவேளை பயந்து உட்கார்ந்திருந்ததும், திகைக்க வைக்கிறது. ஶ்ரீரங்கம் கோவிலை துலுக்கர் தாக்கி, இடித்த சரித்திரத்தை மறைத்து, அக்கோவிலுக்கு நிலம் கொடுத்தான் என்று கதை விடுவது குரூரக் குற்றத்தை மறைக்கவே!

© வேதபிரகாஷ்

21-07-2019

Puliyur mosque harmony fuction 14-07-2019 -15

Puliyur mosque harmony fuction 14-07-2019 -7

Puliyur mosque harmony fuction 14-07-2019 -8

[1] https://amtv.asia/15064/

[2] https://www.youtube.com/watch?v=YwkoHRD6eMQ

[3] https://www.youtube.com/watch?v=lWjMd4h_uqg

[4] இவர் பிறந்து வளர்ந்த ஊர் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தது கீழக்கரை என்றும், காயல்பட்டினம் என்றும் இருவேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன.

[5] சீதக்காதி பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளல் ஆவார். இவர் இயற்பெயர் ‘ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்’ என்பதாகும். இவர் பெயர் ‘ஷெய்க் அப்துல் காதர்’ என்றும் அழைக்கப்பெறும். இவர் வாழ்ந்த காலம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி; தோராயமாகக் கி.பி.1650-1720 என்பர்.

[6] நமது தமிழகத்து நூலாசிரியர்கள் மேலே சொல்லப்பட்ட புலவர் கிழக்கரையில் அமைந்த வள்ளலது சமாதிக்குச் சென்று தமது கையறு நிலையை கூறி வருத்தப்பட்டதாகவும் அப்பொழுது சமாதியிலிருந்து வள்ளல் அவர்களது வைர மோதிரம் அணிந்த கை விரல் ஆறுதல் அளிக்கும் வண்ணம் வெளியே வந்து புலவருக்கு காட்சி தந்ததாகவும், அந்த மோதிரத்தை தமக்கு வள்ளல் அவர்கள் வழங்கியதாக புலவர் எடுத்துச் சென்றதாக கற்பனையுடன் புனைந்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இந்தக் கற்பனைக் கதைதான் தமிழக மக்களிடம் இன்று வரை செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்பதற்கு தகுந்த சாட்சியுமாக வழங்கி வருகிறது. மேலே குறிப்பிட்டவைகளிலிருந்து வள்ளல் சீதக்காதி அவர்களைப்பற்றி நமது தமிழக ஆசிரியர்கள் பொறுப் பற்ற முறையில் ஆழந்த சிந்தனை இல்லாமல் வரைந்துள்ள பொய்மைக் கதைகள் இனியும் தொடராது என்பதை நம்புவோமாக!

எஸ்.எம். கமால், சர்மிளா பதிப்பகம் 21, ஈசா பள்ளிவாசல் தெரு, இராமநாதபுரம் 623501.. p.118.

[7]  B. N. Pande [1906–1998] was a member of the Indian National Congress and a close associate of Jawaharlal Nehru,Indira Gandhi, Rajiv Gandhi and Sonia Gandhi. He pursued a Gandhian philosophy and was for 18 years vice-chairman of the Gandhi Smriti and Darshan Samiti (GSDS), In 1976, Pande was awarded the Padma Shri for his achievements in the field of social work. Pande was awarded the Indira Gandhi Award for National Integration by P. V. Narasimha Rao (the Prime Minister of India) in 1996 for his lifetime achievements in the field of Hindu-Muslim unity in India.He was also awarded the Khuda Baksh Award for his work on the composite culture of India.

[8] B.N. Pande, Islam and Indian Culture, Khuda Bakhsh Oriental Public Library, Patna 1987, p.44-45.

[9] So now, we finally know where the story comes from: an unnamed mullah friend of an unnamed acquaintance of Sitaram ayya’s knew of a manuscript, the details of which he took with him in his grave. This is the “document” on which secularist journalists and historians base their “evidence” of Aurangzeb’s fair and secularist disposition, overruling the evidence of archaeology and the cold print of the Maasiri Alamgiri, to “explode the myth” of Islamic iconoclasm spread by the “chauvinist” Hindutva propagandists.

https://www.researchgate.net/publication/290448245_Why_did_Aurangzeb_demolish_the_Kashi_Vishvanath