முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக–பகுத்தறிவு–கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (1)!
50 ஆண்டு திராவிட ஆட்சியும், தமிழக சமுகமும்: தமிழக நாத்திக-பெரியாரிஸ-பகுத்தறிவு சித்தாந்த நிலையில் சமீபத்தில் நடந்து வரும் மதரீதியிலான ஆர்பாட்டங்கள், கருத்து போராட்டங்கள், அசாதாரணமான மந்திர-தந்திர வேலைகள் மற்றும் கொலைகள் முதலியன அதிர்ச்சியாகவும், கவனிக்கப்பட வேண்டியவைகளாகவும் இருக்கின்றன[1]. ஒரு பக்கம் 50 ஆண்டுகள் திராவிட ஆட்சி என்று விவாதம் நடந்தாலும், அது மறுபடியும், அரைகுறை சித்தாந்த சிதறல்களாகவே இருக்கின்றன. ஏனெனில், ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் இருவர்களிடமும், நேர்மையான உண்மைகளை வைத்து விவாதிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை அல்லது உண்மைகள் தெரியவில்லை அல்லது மறைக்கிறார்கள் என்று தான் தெரிகிறது[2]. தமிழக மக்களின் மீது நாத்திக-பெரியாரிஸ-பகுத்தறிவு சித்தாந்த கருத்துகள் தாக்கம் இருந்திருந்தால், அவற்றின் வெளிப்பாடுகள், சமூக செயல்பாடுகள், நடப்புகள் மற்றும் நிகழ்வுகள் என்று அனைவற்றையும் எடுத்துக் கொண்டு அலச வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் கொலை-கொள்ளை குற்றங்கள் அதிகமாகியுள்ளன; பெண்களின் மீதான குற்றங்களும் அதிகமாகியுள்ளன; திராவிட அரசியல் ஆட்சி ஊழலோடு சேர்ந்து பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இந்த பின்னணியில் கோயம்புத்தூர் பாரூக்கின் கொலை அலச வேண்டியுள்ளது.
கோவையில் இரும்பு ஸ்கிராப் வியாபாரி கொலை: முதலில் கோவையில் இரும்பு ஸ்கிராப் வியாபாரி கொலை, தொழில் போட்டி, முன்விரோதம் என்ற ரிதியில் தான் சிறியதாக செய்திகள் வந்தன. பிறகு, கோவையில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் தனது சொந்த மதத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பரப்பி வந்ததற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்[3] என்று மாறியது. முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் எனவும், நான்கு பேர் கொண்ட கும்பல் கொலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் சொல்லப்பட்டது[4]. இதனையடுத்து பரூக்கின் கைபேசி மற்றும் பேஸ்புக்கில் பதிவான தகவலின் அடிப்படையில், நான்கு காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்[5]. விசாரணைக்குப் பிறகு தான் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியும் என்று போலீஸார் கூறினர்[6].
கம்யூனிஸ்டுகளின் செக்யூலார் அல்லது கம்யூனல் ரீதியிலான செய்தி வெளியீடு: தீக்கதிர் செய்தி வித்தியாசமாக இருந்தது[7], “மத காரணங்களுக்காக கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பாரூக் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மரணத்தின் போது நடந்த வன்முறையை தடுக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி விடுதலை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது,” என்று முடித்தது! அதாவது, அதற்கும்-இதற்கும் சம்பந்தம் உள்ளது போல தொக்கியுள்ளது[8]. கம்யூனிஸ்டுகள் வழக்கம் போல கலவரம் மூட்டும் வகையில் செய்தியை வெளியிட்டிருப்பது நோக்கத்தக்கது. சகிப்புத் தன்மை என்றெல்லாம் பேசி ஆர்பாட்டம் செய்து வரும் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சீதா ராம் யச்சூரி, என். ராஜா போன்றோர் பேசியதை எல்லாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் எல்லோரும், இனி மேலாவது இதைப் பற்றி விவாதிப்பார்களா என்று பார்க்க வேண்டும். அவ்வளவு ஏன், விஜய், தினத்தந்தி மற்ற தொலைக் காட்சிகளாவது விவாதத்திற்கு எடுத்துக் கொள்வார்களா என்று பார்க்க வேண்டும்.
திக வீரமணியின் கண்டிப்பு (விடுதலையில் வெளியானது)[9]: “கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தில் பணியாற்றிய கொள்கை வீரர் தோழர் பாரூக் அவர்களைத் திட்டமிட்டே கொலை செய்திருக்கிறார்கள். இது ஒரு கொடுமையான படுகொலை! இதற்குக் காரணமான உண்மையான கொலையாளிகள், திட்ட மிடப்பட்ட இக்கொலையில் பங்கேற்றவர்கள், தூண்டிய சக்திகள் அனைவரையும் கோவை போலீஸ் அதிகாரிகள் உடனடியாகக் கண்டுபிடித்துத் தக்க தண்டனை வழங்கிடும் வகையில் புலன் விசாரணையும் மற்ற நடவடிக்கைகளும் அமைந்திடல் வேண்டும். மதவெறி எந்த ரூபத்தில் வந்தாலும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும் – தடுத்திடல் வேண்டும். மறைந்த அந்தத் தோழருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நமது வீர வணக்கம்! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், அவர் சார்ந்த அமைப்புக்கும் நமது இரங்கலையும், ஆறுதலையும், தெரிவித்துக் கொள்கிறோம்”, என்று சம்பிரதாய ரீதியில் முடித்துக் கொண்டார் கி. வீரமணி[10]. செய்தியும் நான்காம் பக்கம், வலது புறம், கீழே மூலையில் சிறியதாக வெளியிடப் பட்டிருந்தது. இதுதான், அவர்களது முஸ்லிம் அடிப்படைவாதத்தை எதிர்க்கும், எதிர்கொள்ளும், கண்டிக்கும் லட்சணம் என்று தெரிகிறது. இனி மற்றவர்களும் சம்பிராதயப் படி, அவரவர் இயக்கத்தின் / கட்சியின் சார்பில் இத்தகைய கணடனங்களை வெளியிடுவதை காணலாம்.
“கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி” என்றெல்லாம் முஸ்லிம் சொல்லமுடியாது: பெரியாரிஸப் பிஞ்சுகள், பழங்கள், தொண்டர்கள், விசுவாசிகள், பக்தர்கள் முதலியோரும் அடங்கிக் கிடக்கின்றனர். இக்கொலையைக் கண்டிக்கக் கூட பயந்து பேஸ்புக்கில் இருந்து பலர் விலகி விட்டனர். “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி” என்று பெரியார் சொன்னார் என்று, இனி எந்த முஸ்லிமும் பேச முடியாது. இல்லை, அங்கு கடவுள் என்றால், “அல்லா இல்லை” என்று சொல்லிவிட்டு பேச வேண்டும், இல்லை என்றால், பத்வா வரும், இம்மாதிரியான கொலை விழும். உண்மையான முஸ்லிம், திராவிட கட்சியில் கூட இருக்க முடியாது. “ஷிர்க்” பேசும் கொஷ்டிகள் இனி இவற்றையெல்லாம், நன்றாகவே கவனிப்பார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், நாத்திகக் கட்சிகளில் முஸ்லிம்கள் இருப்பதுதான், மிகப்பெரிய “ஷிர்க்” ஆகும். அதற்காகத் தான், மொஹம்மது அலி ஜின்னாவே, “நான் முஸ்லிம் என்பதனால், முஸ்லிம்களின் நலனிற்காகத் தான் பாடுபட முடியும்”, என்று கூறி, அம்பேத்கர், பெரியார் முதலியோரை கழட்டி விட்டார் என்பதும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இனி கம்யூனிஸ்டு மற்றும் திராவிட கட்சிகளிலிருந்து, எத்தனை நியாயவான்களான முஸ்லிம்கள் விலகுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
19-03-2017
[1] சசிகலாவைக் காப்பாற்ற அகோரி பூஜை செய்தேன் என்று ஒருவன் சொன்னதை கவனிக்கலாம். அவனுக்கு முஸ்லிம் மனைவியாக இருப்பதும் கவனிக்கத் தக்கது. விவரங்களுக்கு என்னுடைய பிளாக்குகளைப் பார்க்கவும்.
[2] சமீபத்தைய திராவிட மற்றும் இந்துத்துவ வாதங்களை விகடன் முதலியவற்றில் காணலாம்.
[3] தினத்தந்தி, திராவிடர் விடுதலை கழக பிரமுகர் கொலை வாலிபர் கோர்ட்டில் சரண், மார்ச் 18, 04:30 AM.
[4] http://www.dailythanthi.com/News/Districts/2017/03/18025737/Dravida-Kazhagam-leaders-murder-freedThe-young-men.vpf
[5] நியூஸ்7.டிவி, மதத்திற்கு எதிராக கருத்துக்களை பரப்பியதற்காக இளைஞர் கொலை!, March 18, 2017.
[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/18/3/2017/youth-murdered-spreading-views-against-religion
[7] தீக்கதிர், கோவை: திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் படுகொலை, மார்ச்.17, 2017
[8] https://theekkathir.in/2017/03/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95/
[9] விடுதலை, கோவை தோழர் பாரூக் படுகொலை வன்மையாக கண்டிக்கிறோம்!, சனி, 18 மார்ச் 2017 16:42
அண்மைய பின்னூட்டங்கள்