Archive for the ‘மசூதி எரிப்பு’ category

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? – ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

ஏப்ரல் 3, 2017

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

Abdul Waheed before becominh Peer

இவனேமனநோயாளிஎன்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்?: பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர், பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் ஊடகங்கள் 03-04-2017 அன்று செய்திகளை வெளியிட ஆரம்பித்தாலும், 02-04-2017 மாலையில் முரண்பட்ட விவரங்கள் தான் பாகிஸ்தான் நாளிதழ்கள் மூலம் அறியப்பட்டன[1]. பக்தர்களை காப்பகத்தின் பொறுப்பாளர் தன்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பயந்து, கொன்றதாக செய்திகள் வெளிவந்தன[2]. தனக்கே விஷம் கொடுத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதால் தான், அவர்களை கொலை செய்ததாக கூறினான்[3]. சொத்து-அதிகாரம் போட்டி என்றால், தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத், அவன் மகன் மற்றவர்கள், இவர்களுக்கிடையில் தான் பகை-கொலை செய்யும் வெறி இருந்திருக்க வேண்டும்[4]. தர்காவை பிடிக்க திட்டம் போட்டவர்களுக்கும், சொகிச்சைப் பெற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்பது எப்படி “மனநோயாளிக்கு”த் தெரியும்? இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்? ஆகவே, எதையோ மறைக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

Sargohda - dargh inside - photos of peers

பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் குரூர சிகிச்சை அளித்த தர்கா: இந்திய விவகாரங்களில் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, விவரங்களை வெளியிடும் செக்யூலரிஸ ஊடகங்கள், பாகிஸ்தான் நாளிதழ்கள் சொன்னதை கூட போடாமல், திரித்து வெளியிட ஆரம்பித்துள்ளன. தினமணியில் தலைப்பே தமாஷாக இருந்தது! “பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி,” என்ற தலைப்பிட்டது[5]. மனநோயாளி எப்படி, அடுத்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தான், கொடுத்த பிறகு, வெட்டிக் கொன்றான் என்று விளக்கவில்லை[6]. கொலைசெய்கிறவன், வந்தவர்களின், ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக்கி, தடிகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தான் என்பது புதிராக உள்ளது. அதில் நான்கு பெண்களும் அடக்கம் எனும்போது, அவர்களை நிர்வாணமாக்கியவன், மருந்து கொடுத்து, மயக்கமடையச் செய்தவன், அப்படியே அடித்துக் கொன்றான, குத்திக் கொன்றானா, அல்லது பாலியல் பலாத்காரம் செய்தானா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

Abdul Waheed killed 20 at sargodha

பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது: மதநிர்வாக விவகார மந்திரி, ஜெயீம் காதரி, “ரகசிய புலனாய்வுத் துறைமூலம், இத்தகைய மதகாப்பங்கங்கள் பஞ்சாப் மாநிலத்தில் 552 இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இது பதிவு செய்யப்படாதது ஒன்றாகும். பேயோட்டுகிறேன் என்று இப்பகுதியில், இத்தகைய கொலைகள் நடப்பது மற்றும் அவர்களை உயிரோடு எரிப்பது, இந்நாட்டில் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கூட்டுக் கொலை நடப்பது, இதுதான் முதல் தடவை,” என்றார்[7]. அதாவது, “பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. யூத-கிருஸ்துவ-முகமதிய மதங்களின் படி, பேய்-பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனானப் பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே இப்பழக்கம் 20 நூற்றாண்டு வரை இருந்தது. பிறகு சட்டங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கைக்கள் மூலம் கட்டுப் படுத்தினர். ஆனால், இஸ்லாமிய நாடுகளில், மதநம்பிக்கை மூலம் நடப்பதால், அரசுகள் கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றன.

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.

விமான பாதுகாப்பிற்கு கருப்பு ஆடு பலிக் கொடுத்த பாகிஸ்தான் விமானத் துறை[8]: நான்கு மாதங்களுக்கு முன்னர் டிசம்பர் 2016ல், பாகிஸ்தானிய விமானத்துறை பாதுகாப்பு கோரி, ஒரு கருப்பு ஆட்டை அறுத்து பலியிட்டனர்[9]. பாகிஸ்தான் விமானங்கள் அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்கின்றன[10]. டிசம்பர் 7, 2016 அன்று நடந்த விபத்தில், விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பிரயாணம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அடிக்கடி பலிகள் நடப்பதால், ஏதோ தியசக்திதான் வேலை செய்கிறது, அதனை விரட்ட கருப்பு ஆடு பலியிட வேண்டும் என்று, மாந்தீரிகர்கள் அறிவுருத்தியதால், விமான ஆட்கள் அவ்வாறே செய்தனர்[11]. சமூக ஊடகங்கள், மற்றவர்கள் கிண்டலடித்தாலும், அவர்கள் கவலைப்படவில்லை. அதேபோல, பாலங்கள் கட்டுவது, பெரிய சாலைகள் போடுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கும் போதும் பலி கொடுக்கப் படுகின்ற்து. நம்ம வீரமணி போன்றோர் அல்லது ஷிர்க் கூட்டத்தால் கலாட்டா செய்யவில்லை.  பொதுவாக ஈத் அன்று 1,00,00,000க்கும் [ஒரு கோடி] மேலான விலங்குகள் பலியிடப் படுகின்றன. இதில் மதநம்பிக்கையை விட வியாபாரம் தான் பெரிதாக இருக்கிறது[12]. தோல் அதிகம் கிடைக்கும், அதனை ஏற்றுமதி செய்யலாம், ரூ 8 கோடிகள் கிடைக்கும் என்றுதான் கணக்குப் போடுகின்றனர்[13]. தோல் வியாபரக் கழகம் அதில் அதிகமாகவே சிரத்தைக் காட்டுகிறது[14]. மிருகங்களை அறுக்கும் போதே, தோலை யார் பெறுவது என்று சண்டை போட்டுக் கொள்வர் / அதையே விளையாட்டாக கொள்வர். அதிலும் அடிதடி-சண்டை நடைபெறுவதுண்டு.

© வேதபிரகாஷ்

03-04-2017

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.2

[1] Pakistan Observer, Sargodha Shrine custodian kills 20 devotees, April.3, 2017.

[2] http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[3] Geo.TV.news, Killed people because they had planned to poison me: Sargodha murder accused, Malik Asghar and Naveen Anwar, April.2, 2017.

[4] https://www.geo.tv/latest/136447-Killed-people-because-they-had-planned-to-poison-me-Sargodha-murder-accused

[5] தினமணி, பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி, ஏப்ப்ரல்.3, 2017.

[6] http://www.dinamani.com/latest-news/2017/apr/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-2677320.html

[7] Punjab Minister for Religious Affairs Zaeem Qadri said intelligence agencies along with police and the local government were investigating all aspects of the case. Qadri said that his department managed some 552 shrines in the province, but this one was not a registered with it.
“Investigators will also look into how this shrine was allowed to be set up on private land,” he said. Punjab Chief Minister Shahbaz Sharif has asked for a police report on the investigation within 24 hours, a senior government official said. There have been cases of people dying during exorcism ceremonies at some shrines across the country, but mass killings are rare.

http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[8] Daily Mail, Pakistan airline responds to safety fears after plane crash kills everyone on board one of its jets by sacrificing a goat , PUBLISHED: 12:01 BST, 19 December 2016 | UPDATED: 23:17 BST, 19 December 2016.

[9] http://www.dailymail.co.uk/news/article-4047924/Pakistan-airline-mocked-goat-sacrifice.html

[10] Daly Mail, PIA plane crash: Pakistan’s national airline sacrifices goat on Tarmac before test flight, Monday 19 December 2016 11:15 GMT

[11] http://www.independent.co.uk/travel/news-and-advice/pia-lane-crash-goat-sacrifice-pakistan-national-airline-tarmac-atr-grounded-benazir-bhutto-a7484081.html

[12] According to Gulzar Feroz, the central chairman at the Tanners’ Association, more than 2.7 million cows/bulls, four million goats, 800,000 lambs, and up to 30,000 camels will be sacrificed this year. He said that the hides of cows/bulls were expected to fetch a price of Rs1,600 in the market, while goat hides would fetch a market price of Rs 250 each. He said that hides of sacrificial animals fetched a total of Rs8 billion last Eid, but due to fall in prices this year, hides of sacrificial animals are expected to fetch around Rs7 billion this year.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[13] Geo News, Pakistanis to sacrifice over 10 million animals this Eid, September 12, 2016.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[14] https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!

திசெம்பர் 6, 2011

இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!


ஷியா முஸ்லீம்கள் சன்னி முஸ்லீம்களா; தாக்கப் படுவது: ஷியா முஸ்லீம்கள், சன்னி முஸ்லீம்களால் தாக்கப்படுவது, செக்யூலரிஸ இந்தியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் “முஸ்லீம்கள்” என்று கருத/மதிக்கப்படுவதில்லை. அவர்களும், அவர்கள் மசூதிகளும் பலமுறைத் தாக்கப்பட்டுள்ளன[1]. சென்ற 04-09-2010 அன்று அவர்கள் தாக்கப்பட்டனர்[2]. செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28 பேர் கொல்லப்பட்டனர்[3]. பல ஆண்டுகளாக அவர்கள் தாக்கப்படுவது / கொல்லப்படுவது விவரங்களை இங்கு கொடுத்துள்ள[4] அட்டவணையில் பார்க்கலாம்.இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள்[5] என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்[6].

மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : சுமார் 54 பேர்பலி: உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நாளில் ஆப்கனில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் சிக்கி 54 பேர் பலியாயினர்[7]. நூற்றுக்கணக்கான ஷியா முஸ்லீம்கள் அபு பசல் மசூதி [Abu Fazal shrine] யில் கூடி பாடிக்கொண்டிருக்கும் வேளையில் குண்டு வெடித்தது. இது தற்கொலை குண்டுவெடிப்பு என்று கருதப்படுகிறது[8]. 160 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். காபூல் அருகே உள்ள இந்த மசூதியில் சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருத நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இது ஒரு தற்கொலை மனித வெடிகுண்டாகும்[9]. இதனையடுத்து தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் பதட்டத்துடன் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில் சிக்கி 35 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. இன்னும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
காபூலின் வடக்கு பகுதியான மசார் இ ஷெரீப் பகுதியில் சித்தி முஸ்லிம் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்திலும் குண்டு வெடித்தது. இக்குண்டு ஒரு சைக்கிளில் கட்டப்பட்டிருந்தது. காபூலில் குண்டு வெடித்ததும், இக்குண்டு வெடித்ததாம். குண்டு வெடித்ததும், ஒரு இளம் வயது பெண் சிறுவர்களின் பிணங்களுக்கு நடுவில் நின்று கொண்டு கூக்குரல் இட்டதாக பார்த்தவர்கள் சொல்கின்றனர்[10]. சால்வார்-கமீஜ் அணிந்திருந்த அவள் உடல் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்ததாம்[11].

முஹம்மது நபியின் பேரரான இமாம் ஹுஸைனின் உயிர்த்தியாகத்தை போற்றும் அஷூரா என்ற நிகழ்ச்சியும் ஆப்கனில் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 30 மில்லியன் ஆப்கன் மக்கள் தொகையில் ஹஜ்ராக்கள் என்ற ஷியா முஸ்லீம்கள் 20% உள்ளனர். 1990களில் சன்னி-தாலிபான்கள் ஷியக்களைத் தாக்கி வந்தனர், கொன்றும் உள்ளன.

முகரம் / முஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இந்த மாதத்தில் சண்டைகள் தடை செய்யப் பட்டுள்ளன. முஸ்லீம்கள் இம்மாதத்தின் போது உண்ணாநோன்பு இருப்பர் .முகரம் மாதத்தின் பத்தாம் நாள் – அஷுரா  ஷியாக்களால் தியாகத் திருநாளாகக் கொண்டாடப் படும். அன்று ஷியாக்கள் மற்றும் சன்னிகள் ஒன்பதாம் அல்லது பதினொராம் நாளில் உண்ணாதிருப்பர்.

ஆனால், பிறகு அவர்கள் தமது கவனத்தை முஸ்லீம் அல்லாதவர்கள் – காபிர்கள் என்ற ரீதியில் அமெரிக்க-நாடோ வீரர்களை, அந்நிய சுற்றுலா பயணிகள், வேலையாட்கள் முதலியோர் மீது திருப்பி, அவர்களைக் கொன்று வந்தது. அதனால், இப்பொழுது, சியாக்கள் மறுபடியும் தாக்கப்படுவதற்கு, உலக கவனத்தை ஈர்க்கவே என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஷியா முஸ்லீம்கள் முஹரம் பண்டிகையை வெளிப்படையாகவே கொண்டாடி வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இன்று அதற்காக விடுமுறையும் உள்ளது. பொதுவாக ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானைப் போல இல்லாமல், ஷியா-சன்னி மோதல்கள் குறைவாகவே இருந்து வந்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு தலிபான் ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தலிபான்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களே இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இல்லை பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-கைதா தாக்கியிருக்கக் கூடும், ஏனெனில் பாகிஸ்தானிய சன்னிகள் ஷியாக்களை முஸ்லீம்கள் என்று கருதுவதில்லை.மற்றும் அவகள் தாக்கப்படுவது, அவர்களின் மசூதிகளில் குண்டு வெடிப்பது முதலியவை சாதாரணமா விஷயங்களாக இருந்து வருகின்றன[12]. இருப்பினும் தாலிபனைச் சேர்ந்த ஜபியுல்லா முஜாஹித் மூலம் தாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்று இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].

காந்தகாரிலும் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வைத்து வெடிக்கப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் மூவர் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டுகளில் தாலிபனால் நடட்தப் பட்ட குண்டுவெடிப்புகள், தாலிபனின் தாக்குதலால் இறந்தவர்கள் முதலிய விவரங்கள் அட்டவணையிடப்பட்டுள்ளன:

January 14, 2008 A Taliban suicide attacker leaves eight dead at the Serena, Kabul’s most luxurious hotel.
July 7, 2008 A car-bomb attack on the Indian embassy building kills more than 60 people.
February 11, 2009 At least 26 people die and 55 are wounded in three almost simultaneous Taliban attacks on official buildings.
 October 28, 2009 An attack claimed by the Taliban kills at least eight people, including five UN staff, at a Kabul hostel. Three attackers also die.
December 15, 2009 At least eight die and 40 are wounded in a suicide attack near a hotel hosting foreigners.
January 18, 2010 Five people die and at least 71 are injured as Taliban guerrillas carry out a wave of coordinated bomb and gun attacks around the capital.
February 26, 2010 Suicide attacks on two Kabul guesthouses kill at least 16 people, including seven Indians, a French national and an Italian.
May 18, 2010 A suicide bomber kills at least 18 people, including five US soldiers and one Canadian soldier, in an attack on a Nato convoy in a busy city centre street.
December 19, 2010 Two suicide bombers attack an Afghan army bus, killing five soldiers.
January 28, 2011 Eight people are killed in a suicide bombing at a central Kabul supermarket popular with Westerners.
May 21, 2011 Six medical students are killed in a Taliban suicide attack at Afghanistan’s main military hospital.
June 18, 2011  Nine people are killed when suicide attackers storm a police station in the capital.
June 28, 2011 21 are killed, including 10 civilians, when suicide bombers storm Kabul’s luxury Intercontinental Hotel.
August 19, 2011  Nine people, including a New Zealand special forces soldier, die when suicide bombers attack the British Council cultural centre in Kabul.
September 13/14, 2011 Taliban attacks targeting locations including the US embassy and headquarters of foreign troops kill at least 14 during a 19-hour siege.
September 20 Burhanuddin Rabbani, Afghanistan’s former president leading efforts to find a peace deal with the Taliban, is assassinated in a suicide attack at his home in Kabul’s supposedly secure diplomatic zone.
October 29, 2011 13 US troops operating under Nato are among 17 people killed in a car-bomb attack on a foreign military convoy in Kabul.
December 6 , 2011  At least 54 people are killed in a shrine bombing in Kabul, with four more dead in another blast at a shrine in the northern city of Mazar-i-Sharif, a day after a major conference in Germany on Afghanistan’s future pledged sustained support for another decade.

வேதபிரகஷ்

06-12-2011


 


[7] தினமலர், மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : 40 பேர்பலி, http://www.dinamalar.com/News_detail.asp?Id=362666

[13] An email message to news organizations from the spokesman for the Taliban, Zabiullah Mujahid, denied responsibility. “We strongly condemn this wild and inhuman act by our enemies, who are tyring to blame us and trying to divide Afghans by doing such attacks on Muslims.”

http://www.nytimes.com/2011/12/07/world/asia/suicide-bombers-attack-shiite-worshipers-in-afghanistan.html

முஸ்லீகளே செய்த காரியம் – மசூதி எரியூட்டப்பட்டது, தொழுகைக்கூடம், குரான் எரிந்த நிலையில் காணப்பது!

ஒக்ரோபர் 22, 2010

முஸ்லீகளே செய்த காரியம் – மசூதி எரியூட்டப்பட்டது, தொழுகைக்கூடம், குரான் எரிந்த நிலையில் காணப்பது!

 

முஸ்லீம்களே மசூதியை தாக்குவது ஏன்? ஹைதராபாதில், அல் ஹதீஸ் (the Alhadees sect of Islam) என்ற முஸ்லிம் பிரிவினர் யகுத்பூரா, மெதினாநகர் என்ற இடத்தில் மஸ்ஜித்-ஏ-இப்ராஹிம்-கலீலுல்லாஹ் (Masjid-e-Ibrahim-Khaleelullah), ஒரு மசூதியைக் கட்டிக் கொண்டு வழப்பட்டு வந்தனர். நான்கு மாதங்களுக்கு முன்புதான், தக்பட்டாவைச் சேர்ந்த முஹம்மது கிஜர் என்பவர் மதினாநகரில் சிமென்ட் ஓடு வேய்ந்த ஒரு வீட்டை வாங்கி அதனை மசூதியாக மாற்றி வழிபட ஆரம்பித்தார். ஆனால், அவர் சம்பவம் நடந்த அன்று பதினைந்து நபர்களுடன் தொழுகைக்கு வந்தபோது, மசூதியின் பூட்டு உடைந்திருந்ததைப் பார்த்துத் திகைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, புனித குரான், பரஸ், ஜனிமாஜ், மறைப்புத்துணிகள் முதலியவை எரிந்த நிலையில் காணப்பட்டன. அதனால் போலீஸாரிடம் புகார் செய்தார். போலீஸார் இடத்திற்கு வந்து பார்த்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

முஸ்லீம்கள் குரானை எரிக்கலாமா? சென்ற மாதம் ஒரு அமெரிக்க பாதிரி குரானை எரிப்பேன் என்று கிளம்பியபோது, எரிக்கவேண்டாம் என்று விட்டுவிட்டனர். அப்பொழுது தமிழில் கூட இணைத்தால வீரர்கள், சூராதி-சூரர்கள் பற்பல கருத்துகளை பதிவு செய்தனர். ஆனால், அது நடந்த / கடந்த சில நாட்களிலேயே, ஹைதரபாதில் இப்படி குரானையும் சேர்த்து மற்ற பூஜை பொருட்களை எரித்துள்ளது வியப்பாக உள்ளது. புனித நூலாகக் கருதப் படும் குரானை எப்படி முஸ்லீம்கள் எரித்தார்கள்? இதைப்பற்றி அந்த மறவர்கள், அடலேறுகள், அமைதியாக இருந்தனரா அல்லது முழ் பூசனிக்காயை மறைத்தனரா என்பதை அல்லாதான் சொல்லவேண்டும்!

 

Sect feud: Prayer hall torched

HYDERABAD (04-10-2010): Miscreants set fire to a prayer hall belonging to a sect of a community in Talabkatta on Sunday. Police suspect that the members of another sect of the same community could be behind the incident[1].  According to the Rein Bazar police, miscreants set ablaze the side walls made of cloth of a makeshift mosque, Masjid-e-Ibrahim-Khaleelullah, located at Madina Nagar in Yakutpura in the early hours of Sunday. Four months ago, one Mohammed Khizer of Talabkatta had purchased the asbestos sheet-roofed house at Madina Nagar and converted it into a prayer hall recently. According to police, people belonging to the Alhadees sect of Islam offer prayers at the place regularly. When the incident happened, no one was inside the place of worship. “At about 5 am, I came here along with 15 others to offer Fajar prayers at the mosque and to our shock, we noticed that the mosque lock was broken and the holy Quran, Paras, Janimaaz and curtain walls on fire,” Khizer said in his complaint to the police commissioner. Additional police commissioner Ch Dwaraka Tirumala Rao visited the spot. Acting on the complaint lodged by Khizer, the Rein Bazar police registered cases under sections 153-A (spreading animosity between classes) of the Indian Penal Code (IPC)[2].

 

இஸ்லாத்தில் இறையியல் ரிதியாக பிரிவுகள் ஏன்? சுன்னி, ஷியா, அஹம்மதியா, ஃகாதியான், போரா, இப்படியுள்ள முஸ்லீம்கள் எல்லோருமே வேறு-வேறா, இந்துக்கள் மற்ற முஸ்லீம் அல்லாதவர்கள் இந்த நுணுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்துக்களை இவர்கள் எப்பொழுதுமே குறைகூறி, விமர்சனித்து, கேலியாக ஏன் இழிவாகக் கூட எழுதி வருகிறார்கள். தாங்கள் செய்யும் காரியங்களுக்கு இந்துக்கள் மீது பழியைப் போடுகிறார்கள். உதாரணத்திற்கு முஸ்லீம்கள் விழாக்கள், பண்டிகைகள் கொண்டாடுவதற்கு இந்துக்களை விமர்சிக்கிறார்கள். உண்மையில் தவறு, பிஷை, குற்றம் அவர்களில் இருக்கும் போபது முதலில் அவற்றை அவர்கள் தங்களது மதத்திலிருந்து தீர்ப்பதற்கு ஆவண செய்ய வேண்டும். இஸ்லாம் பல நாடுகளில் பலவித கலாச்சாரங்களுடன், பாரம்பரியங்களுடன், நாகரிகங்களுடன், சம்பிரதாயங்களுடன் மாறுபட்டு இருப்பது ஒன்றும் புதியது அல்ல. இருப்பினும் இங்கு இந்தியாவில் இப்படி திரிபுவாதங்களில் பொய்களை பரப்பி வரும் போக்கை மாற்றிக் கொண்டு உண்மையினை அறிய வேண்டும்.


[2] Times of India, October.4. 2010, Read more: Sect feud: Prayer hall torched – The Times of India http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Sect-feud-Prayer-hall-torched/articleshow/6680086.cms#ixzz11Ua077uq