Archive for the ‘மகளிர் கோர்ட்’ category

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

madras-high-court-bans-sharia-court-woman-position

2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய தலாக் சான்றிதழ்கள் முறையற்றவை: அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இஸ்லாமிய தனி நபர் சட்டத்தின்படி திருமணமான ஆண் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது என்றும், ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்கிவிட்டால் அதுவே இறுதி முடிவாக எடுத்து கொள்ளப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார். இந்த முஸ்லிம் நடைமுறையானது பெண்களுக்கு எதிரானது என்றும், ஹாஜிக்கள் வழங்கும் சான்றிதழ் வெறும் பரிந்துரையே தவிர அது இறுதி முடிவல்ல என்றும் பதர் சயீத் தெரிவித்திருந்தார்[1]. மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய பரிந்துரை சான்றிதழ்களில் சிலவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்த பதர் சயீத் தரப்பு, ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரைத்து சான்றிதழ் வழங்கியது, சம்பந்தப்பட்ட பல பெண்களுக்கு தெரியாது என்றும், இந்த நடைமுறையின் போது பெண்கள் ஆஜராகவில்லை என்றாலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது[2].

muslim-women-divorce-act-1986பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது: வழக்கம்போல, பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு எல்லாம் போராட்டம் என்றெல்லாம் புறப்படும் வீராங்கனைகள் எங்கோ பதுங்கி விட்டது போலத் தெரிகிறது. ரத்தம் சொரிவோம், ஐயப்பன் கோவிலில் நுழைவோம் என்றெல்லாம் புறப்பட்ட பெண்ணுருமை போராளிகளையும் காணோம். முஸ்லிம்கள் விவகாரம் என்றாலே, அவ்வாறு ஒளிந்து கொள்வார்கள் போலும். ஷாபானு விசயத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கால்களை உடைப்போம் என்ற தில்லி இமாம், சட்டத்தை மாற்றி, புதிய சட்டத்தை எடுத்து வந்த விதம், வயதான ஷாபானு இறந்த பிறகும், கண்டுகொள்ளாமல் இருந்தது முதலியன மறந்து விட்டார்கள் போலும், இல்லை நமக்கேன் வம்பு பயந்து செக்யூலரிஸத் தனமாக ஒதுங்கி விட்டார்களோ என்று தெரியவில்லை. அது அவர்களது உள்-விவகாரம் என்றும் நாஜுக்காக சொல்லி அமைதியாக இருந்து விடலாம்.

muslim-women-protection-divorce-act-1986சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்: தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய காஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவிகளை மூன்று முறை, ‛தலாக்’ கூறி, விவகாரத்து செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி இருந்தார்[3]. இந்த மனு இன்று, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்கள் பிப்., 21 2017 வரை, தலாக் சான்றிதழ் வழங்க தடை விதித்தனர்[4]. மேலும், இந்த சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்[5]. இந்த வழக்கு விசாரணை பிப்.,21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது[6].

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ்ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும்: 1980ம் ஆண்டு ஹாஜிகளுக்கான சட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாக நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுந்தரேஷ் தெரிவித்தனர்[7]. அந்த விதிகளின்படி தலாக் கூறி விவாகரத்து வழங்க ஹாஜிகளுக்கு உரிமை இல்லை என அவர்கள் கூறினர்[8]. முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ், ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும் என்றும், உத்தரவிடமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்[9]. இதையடுத்து இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜிகளுக்காக உரிமைகள் குறித்து புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்[10].

badar-syedநீதிபதியின் உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது[11]: “ஹாஜிகளுக்கு எந்த அளவு சட்டஉரிமை இருக்கிறது என்பது முஸ்லீம் ஹாஜி சட்டம் 1880 பிரிவு 4 இல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவருக்கு மதச் சடங்கு செய்யும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹாஜிகளுக்கு எந்த விதசட்டரீதியான உத்தரவும் பிறப் பிக்க உரிமையில்லை. முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தலாக்சான்றிதழில் மாற்றம் கொண்டுவரப்போவதாகத் தெரிவித்துள் ளது. எனவே இது தொடர்பான அடுத்த உத்தரவு வரும் வரை ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதிக்கிறோம். மேலும், ஹாஜிக்கள் வழங்கும் தலாக் சான்றிதழ்களுக்கு எந்த விதமான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான உரிமையில்லை என்றும், அது ஹாஜிக்களின் தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படும் என்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறும்”, இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. இதைப்பற்றி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், “மணிச்சுடர்” கூறுவது, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

badar-syed-with-jayaகாஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்![13]: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு அறிவித்திருக்கிறது.

  1. முதலாவதாக, தமிழ்நாடு தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜிகள்) யாருக்கும் தலாக் பற்றி சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமில்லை.
  2. இரண்டாவதாக, 1997 முதல் 2015 வரை தமிழ்நாடு தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களில் தலாக் என்னும் விவாகரத்து ஏற்பட்டதற்குரிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டிருக்கிறது.
  3. மூன்றாவதாக, வரும் பிப்ரவரி 21-ந்தேதி வரை தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களை தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களோ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோ சான்றிதழ்களாக அங்கீகரிக்கத் தேவையில்லை என்று உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தீர்ப்பின் வாசகங்களை பார்க்கும் போது தலைமை காஜி மற்றும் துணை காஜிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளன. உண்மை நிலை அதுவல்ல. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதே சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றும் காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். தலைமை காஜி, தங்களிடம் கொண்டு வரப்படும் ‘தலாக்’ போன்ற மார்க்க விவகாரங்களுக்கு பத்வா என்றும், தனது கருத்தை எழுத்து மூலம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 

© வேதபிரகாஷ்

18-01-2017

badar-syed-talaq-case

 

[1] பிபிசி, தமிழகம் : ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை, ஜனவரி.11, 2017.

[2] http://www.bbc.com/tamil/india-38593266

[3] தினமலர், தலாக்சான்றிதழ் வழங்க தடை, பதிவு செய்த நாள். ஜனவரி.11, 2017.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1688593

[5] தினகரன், தமிழகம் முழுவதும் தலாக் சான்று வழங்க ஹாஜிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை, 2017-01-11@ 17:30:14

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=271858

[7] புதியதலைமுறை, தலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம், பதிவு செய்த நாள் : January 11, 2017 – 07:57 PM; மாற்றம் செய்த நாள் : January 11, 2017 – 09:46 PM.

[8] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/75692/madras-high-court-says-haji-has-no-right-to-provide-grounds-for-divorce

[9] நியூஸ்.7.செனல், இஸ்லாமிய ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை!, January 11, 2017

[10] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/11/1/2017/high-court-ordered-not-issue-talaq-certificate-muslim-haji

[11] தீக்கதிர், தலாக் முறைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, January 11, 2017.

[12]https://theekkathir.in/2017/01/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

[13] மணிச்சுடர், காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, Friday, January 12, 2007.

சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (2)

ஒக்ரோபர் 11, 2015

சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (2)

நஷீர் பாலியல்- தினகரன்

நஷீர் பாலியல்- தினகரன்

குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், நஷீருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: பெண் குழந்தை பாலியல் வன்மத்திற்குட்பட்டதனால், அந்த சிறுமியின் உடலில் காயம் ஏற்பட்டது[1]. இதையடுத்து அந்த சிறுமியிடம், அவரது பெற்றோர் அதைப்பற்றி விசாரித்தனர்[2]. அப்போது, நடந்த சம்பவத்தை அந்த சிறுமி அழுது கொண்டே கூறியுள்ளார். அவள் கூறியதிலிருந்து, நஷீர் அவளை பாலியல் ரீதியில் சதாய்த்துள்ளான் என்று தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்[3]. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நஷீரை கைது செய்தனர்[4]. பிறகு முறைப்படி, வழக்கை மகளிர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனா சதீஷ் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ‘குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், நஷீருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். இதுதவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்[5]. இத்துடன் செய்தி முடிந்து விட்டது. ஆனால், நஷீர் அவ்வாறு ஏன் ஈடுபட்டான், அதன் பின்னணி என்ன என்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. தனது பெண் போன்றிருக்கும், ஒரு சிறுமியை எப்படி நஷீரால் அவ்வாறு வன்புணர்ச்சியில் ஈடுபட முடிந்தது என்பது ஆராயப்படவில்லை. அவன் முஸ்லிம் என்பதனால், பிடோபைல் கோணத்தில் செல்லாமல், சாதாரண குற்றம் போல செய்தியாக, அதிலும் சுருக்கமாக வெளியிட்டு அமைதியாகி விட்டனர் போலும். அவனது புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போன்ற அளவில், அதே செய்தியை திரும்ப-திரும்ப சுருக்கமாகத்தான் வெளியிட்டுள்ளன[6].  வில் ஹியூமைப் போன்று அதிரடி செய்திகளும் இல்லை, தேவநாதன் போன்று விடோயோக்களும் இல்லை, நித்யானந்தா போன்று பரபஎரப்பும் இல்லை. இதுதான் ஊடக செக்யூலரிஸம் போன்றிருக்கிறது. ஆனால், நஷீர் மேல்முறையீடு செய்வான், என்று நாளைக்கு செய்திகள் வரலாம்.

நஷீர் 5 ஆண்டு சிறை - தினமலர்

நஷீர் 5 ஆண்டு சிறை – தினமலர்

கேரள முஸ்லிம் ஆஸ்ரமங்கள் செயல்பட்ட விதம்: கேரளாவில் முஸ்லிம்கள் கிருத்துவர்களைப் போலவே அனாதை இல்லங்கள் வைத்து, பெண்குழந்தைகள், பருவத்திற்கு வந்த சிறுமிகள், இளம்-பெண்களை பாலியல் வேலைகளுக்கு உபயோகப்படுத்தியது சமீபத்தில் வெளிவந்தது[7]. தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigation Agency) ஜூலை 26, 2014 அன்று தனது விசாரணையை மேற்கொண்டது. 58 முஸ்லிம் குழந்தைகள் மால்டா என்ற இடத்திலிருந்து வேட்டத்தூர், மல்லப்புரத்தில் உள்ள அன்வர் ஹூடா அனதை இல்லத்திற்கு [Anwarul Huda Orphanage at Vettathur in Malappuram] கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. முக்கம் முஸ்லிம் அனாதை இல்லம் [ Mukkam Muslim Orphanage] என்ற இன்னொன்றும் இதில் உள்ளது. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்லி மௌல்விகள் ஏமாற்றி அனுப்பி வைத்ததாக தெரிகிறது. மால்டாவிலிருந்து இதை ஆயும் குழு வேட்டத்தூருக்கு பார்வையிட வந்தபோது, சிறுவர்கள் மட்டுமல்லாது, சிறுமியர்களும் இருந்தது கண்டு திகைத்தது. முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆயிரக்கணக்கில் நடத்தப் பட்டு வருகின்றன. இவற்றை நடத்துவதற்கு வளைகுடா நாடுகளிலிருந்து தானம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப் படுகிறது.  சுமார் 1,400 அனாதை இல்லங்களுக்கு கோடி கணக்கில் பணம் வசூலிக்கப் படுகிறது. இப்பணத்தை வசூலிக்கு ஏஜென்டுகள் 40% எடுத்துக் கொண்டு மீதம் 60%-த்தை கொடுத்து விடுகின்றனர்[8]. கேரளாவில் கடந்த 25 வருடங்களாக செக்ஸ் குற்றங்கள், விபச்சாரங்கள், சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்பது, பிடோபைல் (pedophile)/ குழந்தை செக்ஸ் விவகாரங்கள், கற்பழிப்புகள் என்று பாலியல் வன்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன[9].

சவுதி அரேபிய மதபோதகர்

இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினரின் தாக்கம் என்ன[10]: இங்கு இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினர் அதிகமாக மற்றும் எல்லாவிதங்களில் ஆதிக்கத்தில் இருப்பதால், அவர்களின் தாக்கம் என்ன என்பதும் அறிய வேண்டியுள்ளது. பொதுவாக இந்துமதம் தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தங்களது முடிவுகளைப் பெறும் போக்கு, இங்குத் திணறத்தான் செய்கிறது. ஏனெனில், இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்கள் இவற்றிலுள்ள பங்கு என்ன என்பதை அவர்கள் எடுத்துக் காட்டுவதில்லை. செக்யூலரிஸ, கம்யூனிஸ மற்றும் அதிகாரத்துவ சித்தாந்தங்களில் உள்ள எழுத்தாளர்கள், அராய்ச்சியாளர்கள் மற்றும் சமூகவியல் அறிவுஜீவுகளும், அவற்றின் இறையியல் தாக்கத்தை அறிந்தும், அறியாதவர்கள் போன்று நடித்துக் கொண்டிருக்கின்றனர். “இறைவனுடைய தேசத்திலேயே” பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று செய்திகள் வெளியிடும் போது, அவர்கள் உண்மைகளை வெளியிட்டு, அக்குற்றங்களை எப்படி குறைப்பது என்று தீர்வுகளைக் காண்பதற்கும் தயங்குகின்றனர். மாறாக குற்றங்களில் சம்பந்தப் பட்டுள்ளவர்கள், தங்களது அரசியல், பணம் மற்றும் அதிகாரக் காரணிகளைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

Muslim pedophiles all over thye world BBC

Muslim pedophiles all over thye world BBC

தமிழகத்து கோணத்தில் ஆராய்தல்: தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் பிடோபைல் குற்றங்கள் தொடர்ந்து பல்லாண்டுகளாக நடைப்பெற்று வருவதாலும், அவற்றில் அந்நியநாட்டவர்களின் பங்கு, குழந்தைகள்-சிறுமிகள் கடத்தல், அனாதை ஆஸ்ரமங்களுக்கு அனுப்புதல், அங்கிருந்து அவை பிடோபைல்களுக்கு அனுப்பப்படுதல், செக்ஸ்-டூரிஸத்தில் ஈடுபடுத்துவது, அரேபிய ஷேக்குகளுக்கு விற்பது மற்றும் உல்லாசங்களுக்கு விநியோகித்தல் முதலியவை நடந்து வருவதால், அவை சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறிப்பிட்ட மதப்பிரச்சினை மட்டுமல்லாது, சமூகப்பிரச்சினையாகவும் கையாளப்பட வேண்டியுள்ளது. அந்நியநாட்டவர்கள், இந்தியாவுடன் உள்ள நாடுகடத்தல், நாட்டிற்கு ஒப்படைத்தல், சொந்த நாட்டில் நீதிமுறைகளுக்கு உபடுத்தப்படுதல், அவ்வாறான ரீதியில், குற்றங்கள் இந்தியாவில் நடந்தாலும், குற்றாவாளிகள் அந்நியர்கள் என்பதனால், அவர்கள் அவரவர் நாடுகளுக்கு கைது செய்யப் பட்டு எடுத்துச் செல்லப்படுதல், அங்கு வழக்கை விசாரித்தல், தண்டனை கொடுத்தல் முதலியனவும் நடந்து வருகின்றன. ஆனால், முடிவுகள் செய்திகளில் வருவதில்லை.

Old Muslims marrying young girls.2

Old Muslims marrying young girls.2

பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு, ஒருவேளை இழப்பீடு கொடுத்து, வழக்குகளை முடித்து விட்டிருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், தங்களது மனப்பாராட்டங்கள், மனப்பிராந்தி, மனக்குமுறல், மனச்சிக்கல்கள் முதலியவற்றிலிருந்து விடுபட முடியுமா, அவர்கள் உண்மையிலேயே அவ்வாறே விடுபட்டார்களா என்பவற்றையும் வெளிப்படுத்துவதில்லை. இடைக்காலத்திலிருந்து, 19-20வது நூற்றாண்டுகள் வரையில் ஹேரம், அடிமைகள் போன்ற முறைகளில், இத்தகைய பாலியல் குற்றங்கள் அங்கீகரிகப்பட்டு நடத்தப்பட்டன. பிறகு, அவையெல்லாம் மனிதத்தன்மைக்கு எதிரானது, மனித உரிமைகளை மீறுவது என்று அறியப்பட்டு தடை செய்யப் பட்டன. ஆனால், இத்தகைய ஆள்-கடத்தல், விற்றல், பாலியல் தொல்லைகளுக்கு, தொந்தரவுகளுக்கு சட்டவிரோதமாக உபயோகப்படுத்துதல், விபச்சாரத்திற்கு உட்படுத்துவது போன்றவை, பலவழிகளில் நாகரிகமாக, அமுக்கமாக செயல் பட்டு வருகின்றன. இவற்றிற்கு, மதசாயம் பூசுவது, இறையியல் விமர்சனம், விளக்கம் கொடுப்பது, நியாயப்படுத்துதல் முதலியனவும் நடந்து வருவதால், பெற்றோர், உறவினர், மற்றோர் இழப்பீடு, உதவித்தொகை, வேலை போன்றவற்றால் சமசரத்திற்கு வற்புறுத்தப்பட்டு, சமாதானம் செய்யப்படுகின்றனர்.

 

Old Muslims marrying young girls

Old Muslims marrying young girls

© வேதபிரகாஷ்

10-10-2015

[1] http://www.dinamalar.com/district_detail.asp?id=1358646

[2] தினத்தந்தி, சிறுமியிடம் சில்மிஷம் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு, மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 07,2015, 3:00 AM IST; பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 07,2015, 3:00 AM IST.

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/little-girl-sexual-harassment-youth-5-years-prison-115100700015_1.html

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=171428

[5] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/10/07030035/Young-men5-years-in-prisonSentencedWomen-CourtJudgment.vpf

[6] http://bharathnewsonline.com/24/

பாரத் நியூஸ் ஆன்லைன், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை, 07 October, 2015.

[7] https://womanissues.wordpress.com/2014/08/03/child-trafficking-in-kerala-organized-carried-on-as-trade-with-motive/

[8] https://womanissues.wordpress.com/2014/08/03/kerala-orphanage-trafficking-sexual-abuse-and-other-issues/

[9] https://womanissues.wordpress.com/2014/08/03/human-or-child-trafficking-a-sexual-crime-carried-on-in-kerala/

[10] https://womanissues.wordpress.com/2014/08/03/sexual-crime-rate-religious-nexus-going-together-in-kerala/