Archive for the ‘போஸ்’ category

பாகிஸ்தானிய நடிகை நிர்வாணமாக போஸ் கொடுத்தது எப்படி?

திசெம்பர் 5, 2011

பாகிஸ்தானிய நடிகை நிர்வாணமாக போஸ் கொடுத்தது எப்படி?


வீணா மாலிக் பாகிஸ்தானிய கவர்ச்சி நடிகை மற்றும் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்: பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு பெண்கள் பர்தாவில் இருக்க வேண்டும். இருப்பினும், மேனாட்டு நாகரிகம் பரவியுள்ளதால், படித்த பெண்கள் நாகரிகமாகவே இருக்கிறார்கள், உடையணிகிறார்கள். இருப்பினும், இஸ்லாமிய மதகுருமார்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறர்கள். வீணா மாலிக் ஒரு நாகரிகமான பாகிஸ்தானிய நடிகை. ராவல்பிண்டியில் 1978ல் ஒரு பாலிஸ்தானிய ராணுவ வீரருக்குப் பிறந்தவர்.  பள்ளியில் கூடைபந்து விளையாடி, பிறகு பி.ஏ வரைப் படித்துள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் சினிமாக்களில் நடித்துள்ள இவர், பிக்-பாஸ்-4 நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்[1]. அடிக்கடி நிர்வாண போஸ் கொடுப்பது, கிரிக்கெட் வீரர்களுடன் உல்லாசமாக இருப்பது முதலியவ அவருக்கு பொழுது போக்கு எனலாம்.

நிர்வாணத்திலும் போட்டா-போட்டி போடும் நடிகை: இந்தியாவில் ராக்கி சாவந்த் எனும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகைக்கு தானும் சளைத்தவர் இல்லை என்பது போல், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வீணா மாலிக்குக்கு வழக்கம்தான்[2].  இந்தியாவில் கலர்ஸ் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் பிரபலமானவர் வீணா மாலிக். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல ஆண் போட்டியாளர்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி சலசலப்பையும் ஏற்படுத்தியவர் வீணா மாலிக்[3]. ஏற்கெனவே அதே எப்.எச்.எம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் அதே மாதிரி நிர்வாணப்படம், தோளில் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் வெளி வந்துள்ளது. இப்பொழுது இரண்டாவது முறை. வித்தியாசம், இது முழு நிர்வாணம், அவ்வளவு தான்! முன்பு முகமது ஆசிப்புடன் சுற்றி வந்தார்[4]. அட்டைபடத்தில் கிடைப்பது, இணைத்தளத்தில் கிடைப்பது அனைவருக்கும் சொந்தம் தான். ஆகவே,

நிர்வாணமாக போஸ் கொடுக்கிறார்கள் என்றால், பெண்கள் ஆகட்டும், நடிகைகள் ஆகட்டும், துணிந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. மனத்துணிவு மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் பணம், புகழ் கிடைக்கும் என்றால் அவ்வாறு வெய்கிறார்கள், வற்புறுத்தினாலும் செய்வதுண்டு.

இந்த போட்டோ டூவிட்டர் மற்றும் பேஷ்புக் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.  இதெல்லாம் பிரச்சார யுக்தியேயன்றி வேறெந்த சகசியமோ, வேடிக்கையோ விளையாட்டோ இல்லை. அவர் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை முத்திரையுடன் நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[5]. இதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.  ஆனால், வழக்கம் போல நமது “தி ஹிந்து” இதற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டு விளக்கம் அளித்துள்ளது.

 

உண்மைகளை மறைக்க, மக்களின் மனங்களைத் திசைத் திருப்ப பிரச்சார யுக்தி: “அவரது தோள்பட்டையில் கருப்பு நிறத்தில் ஐ.எஸ்.ஐ. என்று எழுத வைத்தது என்னுடைய ஐடியா தான். இது வெறும் ஜோக்குக்காக செய்யப்பட்டது. இந்தியாவில் நாங்கள் இவ்வாறு ஜோக் அடிப்பதுண்டு. ஏதாவது தவறாக ஆகிவிட்டால், அதற்கு காரணம் ஐ.எஸ்.ஐ. தான் பின்னணி என்போம்”, என்று FHM பத்திரிக்கை ஆசிரியர்

யுத்தத்தில் அல்லது இக்கால நிலவரப்படி சொல்வதானால், தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் தங்களது அக்கிரமமான கொடூரங்களை மறைக்க பலவிதமான பிரச்சார யுக்திகளை கையாளுவதுண்டு. அதாவது, பரப்பரப்பான செய்தியை வெளியிட்டு பரப்பி, மக்களின் மனங்களை திசைத் திருப்பி விடுவர். வாயில் வெடிகுண்டு, தோள்பட்டையில் ஐ.எஸ்.ஐ என்பதெல்லாம் அதைத்தான் காட்டுகிறது.

கபீர் சர்மா விளக்கம் அளித்தார்[6]. இதற்கிடையே, அந்த பத்திரிகைக்கு நான் நிர்வாண போஸ் கொடுக்க வில்லை என நடிகை வீணாமாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் ஆடையுடன்தான் கவர்ச்சி போஸ் கொடுத்தேன். ஆனால் அது நிர்வாணமாக மார்பிங் செய்து மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார்[7].   மேலும், தனது கையில் ஐ.எஸ்.ஐ. என்ற, பாகிஸ்தான் உளவுத்துறையின் முத்திரையை ஒரு நகைச்சுவை கலந்த வேடிக்கைக்காகதான் பச்சை குத்தியிருந்தேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் வீணாமாலிக் கூறியிருப்பதை பத்திரிகை நிர்வாகம் மறுத்துள்ளது.

 

26/11 துயரத்தை, பயங்கரத்தை, குரூரத்தை பிளேஷ் டான்ஸினால் மறைக்க முடியுமா? 26/11 அன்று கொல்லப்பட்டவர்களின் ஆத்மா எப்படி சாந்தி அடையும்? அவர்களது உற்றார்-உறவினர்களது துயரத்தை எப்படி தீர்க்க முடியும்? அந்த பயங்கரத்தை, குரூரத்தை எப்படி தவிக்க அல்லது நீக்க முடியும்? இதெற்கெல்லாம் பதில் சொல்லாமல், தீர்வு காணாமல், வெட்கங்கெட்ட பெண்கள் / ஆண்கள் அதே சி.எஸ்.டி. ஸ்டேஷனில் நடனம் ஆடுகின்றனர். கேட்டால், “பிளேஷ் டான்ஸ்” என்ரு டிவி-ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. பிளேஸ் டான்ஸினால் தீவிரவாதத்தை மறைக்க முடியுமா? பிறகு காஷ்மீரத்தில் சென்ரு ஆடவேண்டியது தானே? ஆகவே, இது இந்தியர்களை ஏமாற்ற செய்யப்படும் ஒரு பிரச்சாரமே ஆகும்.

 

எப்படி நிர்வாண போட்டோ எடுக்கப்பட்டது: “நவம்பர் 23ம் தேதி வெர்சொவா அரம்நகரிலுள்ள ஸ்டூடியோவில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. விஸால் சாக்ஸேனா என்ற புகைப்படக்காரர், மேக்கப்காரார், ஸ்டைல்-ஆலோசகர்  மற்றும்

இப்படி பல ஆண்களுக்கு முன்னால் தைரியமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து, எல்லாவற்றையும் துறந்து விட்டனர் என்றே தெரிகிறது. பிறகு வெட்கப்படுவதிலேயோ, மறுப்பதிலேயே என்ன இருக்கிறது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்றெல்லாம் விவாதிக்கப் போகிறார்களா என்ன?

துணையாளிகள் என்று எட்டு பேர் அப்பொழுது இருந்தனர். அதைத்தவிர வெளியில் இருந்த பத்து பேர்களுக்கும், நாங்கள் அத்தகைய படத்தை எடுக்கப் போகிறோம் என்று நன்றாகத்தெரியும். மதியம் அந்த சூட்டிங் ஆரம்பித்தது, 6.30க்கு முடிந்தது, வீணா சென்று விட்டார். உண்மையில் நாங்கள் இரண்டு விதமான புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்று பத்திரிக்கையின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டது, மற்றொன்று ஒரு கையெரி குண்டை தனது பற்களில் கடித்துக் கொண்டு நிற்பது போன்ற போஸ். அது மிகவும் பிரச்சினைக்குள்ளாகும் என்று அதனை தவிர்த்து விட்டோம். இதற்காக வீணாவை நாங்கள் நேரிடையாகவே தொடர்பு கொண்டோம். அவரது ஆட்கள் மூலம் செல்லவில்லை. ஈ-மெயில் தொடர்பிலேயே ஒப்பந்தத்தை செய்து கொண்டோம்.

படத்தை பார்க்க ஆவலாக உள்ள நடிகை: நவம்பர் 29ம் தேதி அவர் அனுப்பியுள்ள ஈ-மெயிலில், “நவம்பர் 23ம் தேதி எடுத்த படங்களுக்காக நான் சந்தோஷமடைந்தேன். பத்திரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்”, என்று சொல்லியுள்ளார். கபீர் சர்மா அன்று நடந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வை வீடியோவும் எடுத்துள்ளதாகவும், அது அத்தாட்சியாகவும் விளங்குகிறது என்கிறார்[8]. இதனால் விளம்பரம் அதிகம் கிடைக்கும் என்று இவ்வாறு வீணா மறுப்பதாக கூறப்படுகிறது. வீணா மாலிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தான் அவரது நிர்வாணபடம் எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. முத்திரை தெரியாத வகையில் மிகவும் மெல்லியதாக தான் வரைந்தோம். ஆனால் வீணாமாலிக்தான் அதை மிகவும் பெரிதாக வரையும்படி கேட்டுக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தானில் எதிர்ப்பு, நடவடிக்கை: நடிகை வீணாமாலிக் நிர்வாண படம் குறித்து பாகிஸ்தானின் பழமைவாத மதகுரு மவுலானா அப்துல் குவாய் கூறும்போது,

இஸ்லாமில் இவையெல்லாம் அனுமதிப்பதில்லை என்றால், எதற்காக முஸ்லீம்கள் அதிகமாக “புரொனோகிராபி’ இணைதளங்களை அதிகமாகப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்பொழுது சர்வே எடுத்தாலும், அதிகமாக கிளிக் செய்பவர்கள் அவர்கள் தாம் என்று தெரிகிறது.

வீணாமாலிக்கின் செயல் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.  ஆனால் அதற்கு அந்நாட்டு டிவி-ஸோவிலேயே, “இதைவிட/தன்னைவிட நிறைய பிரச்சினைகள் நாட்டில் உள்ளன”, என்று கிண்டலாக பதிலளித்தாராம்! உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கருத்து தெரிவிக்கையில், “முதலில் அந்த படம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிய வேண்டும். நான் அந்த புகைப்படத்தைப் பார்க்கவில்லை. உண்மையானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று தெரிவித்துள்ளார்[9].

வேதபிரகாஷ்

05-12-2011


[4] வேதபிரகாஷ், முகமதுஆசிப்பும், காதலிவீணாமாலிக்கும்ஊடல்!ஆசிப்மீதுநடிகைவீணாமோசடிபுகார், https://islamindia.wordpress.com/2010/04/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5/