Archive for the ‘போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ category

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனை – கோயம்புத்தூர் கார் வெடிப்பு-விபத்து, தற்கொலை விவகாரம்!

நவம்பர் 21, 2022

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனைகோயம்புத்தூர் கார் வெடிப்புவிபத்து, தற்கொலை விவகாரம்!

10 நாட்களில் 3-வது சோதனை 10 நாட்களில் 3-வது சோதனைவிட்டுவிட்டு நடக்கும் சோதனைகள்: சோதனை 20-11-2022 சனிக்கிழமை அன்று கார் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸார் சோதனை செய்து, பென்டிரைவ், மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்[1]. 10-11-2022 மற்றும் 15-11-2022 என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன[2]. கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தார். இது தொடா்பாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கோவை போலீஸார் கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ தமிழகம்,கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 43 இடங்களில் கடந்த 10ஆம் தேதி [10-11-2022] ஒரே நேரத்தில் சோதனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற ஜமேஷா முபீன், தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அதேபோல், இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ நாட்டு வெடிகுண்டுகள்தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதாக கைதானவர்கள் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்[3]. இருப்பினும் அதில் சில பொருட்களை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கியிருக்கலாம் எனஎன்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது[4]. இந்த வெடிப்பொருட்கள்-ரசாயனங்கள் பற்றி ஏற்கெனவே வாத-விவாதங்கள் காரசாரங்களில் முடிந்துள்ளன.

15-11-2022 அன்று சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்: என்ஐஏ வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 15ஆம் தேதி 5 இடங்களில் சோதனை செய்து, வெளிநாட்டு பணம்,ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

20-11-2022 சனிக்கிழமை அன்று சென்னையில் சோதனை: இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை 4 இடங்களில் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்[5].

இச் சோதனை –

  1. சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது (31) வீடு[6],
  2. வேப்பேரி ஈவெரா பெரியார் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் எஸ்.எம்.புஹாரி (57) வீடு,
  3. ஏழு கிணறு பகுதியில் பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமா் முக்தார் (33) வீடு,
  4. வி.வி.எம்.தெருவில் உள்ள முகமது ஈசாக் கெளத் (33) வீடு

ஆகிய இடங்களில் நடைபெற்றது. பல மணி நடைபெற்ற சோதனையில் 4 வீடுகளிலும் இருந்து 12 பென் டிரைவ்கள், 14 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி, 2 கையடக்க கேமராக்கள், ஒரு சிறிய ரக சூட்கேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவை அனைத்தும் தடயவியல்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது[7]. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக சென்னையில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது[8].

20-11-2022 சனிக்கிழமை அன்று திருச்சியில் சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது[9]. இதில், –

  1. ஷாகுல் ஹமீத் (வயது 25)- இனாம்குளத்தூா் நடுத்தெருவில் வசிக்கும் ஆவின் நிறுவன ஒப்பந்த தொழிலாளி,
  2. ஷர்புதீன் (வயது 25) – கந்தசாமி தெருவைச் சோ்ந்த ஜெராக்ஸ் கடை நடத்துபவா் –

என இருவா் மீது சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனா். இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பின் முகநூல் பக்கத்தை லைக் செய்ததாகக் கூறப்படுகிறது[10]

இதையடுத்து, ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிதாசன் தலைமையில், இரண்டு காவல் ஆய்வாளா்கள், 13 உதவி ஆய்வாளா்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் உதவியுடன் இனாம்குளத்தூருக்கு சனிக்கிழமை வந்தனா். சந்தேகப்படும் நபா்கள் இருவா் தங்கியிருந்த வீடுகளிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், இருவரது சமூக வலைதள பகிர்வுகள் குறித்தும், தொலைபேசி தொடா்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். “இச்சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது,” என்று நக்கீரன் குறிப்பிடுகிறது. 

17-11-2022 முதல் 19-11-2022 வரை கம்பத்தில் சோதனைவிசாரணை: கம்பத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த நிர்வாகிகள் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 18-11-2022, வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடத்தினா்[11]. தீவிரவாதிகள் அமைப்புடன் தொடா்பு இருப்பதாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என மாநிலத்தில் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் கடந்த செப். 22-இல் சோதனை நடத்தினா். இதில் அந்த அமைப்பின் மண்டலச் செயலாளா் பொறுப்பில் இருந்த தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (32) என்பவரைக் கைது செய்தனா். அதன் பின்னா் கம்பத்தில் செயல்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கம்பத்தில் அந்த அமைப்பைச் சோ்ந்த 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3-ஆவது நாளாக 19-11-20022 அன்று வெள்ளிக்கிழமையும் அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: “கம்பத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவருடன், சிலருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், கம்பத்தில் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெறும்,” என்றனா்[12].

© வேதபிரகாஷ்

21-11-2022.


[1] தினமணி, கார் வெடிப்பு வழக்கு: சென்னை, திருச்சியில் போலீஸார் சோதனை, By DIN  |   Published On : 19th November 2022 11:15 PM  |   Last Updated : 20th November 2022 04:51 AM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/19/police-raids-in-trichy-and-chennai-3952494.html

[3] தமிழ்.இந்து,  கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, செய்திப்பிரிவு, Published : 19 Nov 2022 06:21 AM; Last Updated : 19 Nov 2022 06:21 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/900225-coimbatore-car-cylinder-blast-1.html

[5] தினத்தந்தி, என்... வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனைசெல்போன்கள் பறிமுதல், நவம்பர் 20, 12:20 am

[6] https://www.dailythanthi.com/News/State/nia-in-connection-with-the-case-the-police-raided-the-houses-of-4-people-in-chennai-again-cell-phones-were-seized-840708

[7] தமிழ்.இந்து, 3-வது முறையாக சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை: ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பா என விசாரணை, செய்திப்பிரிவு, Published : 20 Nov 2022 04:20 AM; Last Updated : 20 Nov 2022 04:20 AM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/900669-nia-raids-4-locations-on-chennai-for-the-3rd-time-probe-for-links-with-isis.html

[9]   நக்கீரன், என்.. திடீர் சோதனை; மூன்று மணி நேர சோதனைக்குப் பிறகு ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/11/2022 (20:30) | Edited on 19/11/2022 (20:46).

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nia-raid-trichy-confiscation-hard-disks

[11] தினமணி, கம்பத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிா்வாகிகள் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, By DIN  |   Published On : 18th November 2022 11:36 PM  |   Last Updated : 18th November 2022 11:36 PM.

[12] https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2022/nov/18/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3951860.html

யார் இந்த சூபியா மதானி?

ஓகஸ்ட் 21, 2010

யார் இந்த சூபியா மதானி?

சூபியா மதானி / சூஃபியா மௌதனி, அப்துல் நாசர் மதானியின் மனைவி. சலாவுத்தீன் மற்றும் உமர் என்ற இரண்டு பையன்களின் தாய். அழகான முகத்தில் தீவிரவாதத்தின் நிறம் தெரிவதில்லை, ஆனால், காஷ்மீரத்தில் அத்தகைய அழகிய ரோஜாக்களே வெடிகுண்டுகளாக  செயல்பட்டது, ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் எப்படி இஸ்லாத்தில் தீவிரவாதிகளாக மாற்றப்படுகின்றனர் என்று தெரியவருகிறது. மூளைச்சலவை செய்ய-செய்ய யாராக இருந்தாலும், திவிரவாதியாக மாற்றலாம், என்று இஸ்லாத்தில் கண்டுபிடித்துள்ளனர். “குரான்” என்று சொல்லி, ஜிஹாத் போர் ஒரு முஸ்லீமின் கடமை, சொர்க்க வாசல் தயாராகத் திறந்திருக்கிறது…………….என்றெல்லாம் சொன்னால், ஜிஹாத்கிகள் கிளம்பி விடுகிறார்கள்.

Soofiya-maudhany

Soofiya-maudhany

soofiya_madani_14.12.09

soofiya_madani_14.12.09

கணவனது தாக்கம்: ஆரம்பகாலத்தில், சூபியா தனது வாழ்க்கையை சந்தோஷமாகத்தான் கழித்திருப்பாள். ஆனால், பிறகு, அவனது கொள்கையை அறிந்திருப்பாள். நிச்சயமாக, தனது கணவினின் தாக்கம் இவளிடத்தில் இருந்திருக்க / ஏற்பட்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் மறுத்தாலும், பிறகு, கணவனுடன் ஒத்துப்போனாள் என்பது நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. குழந்தைகள் பிறந்தபிறகு, மனம் மாறியிருக்கலாம், ஆனால், மறுபடியும் தாக்கம் ஏற்பட்டுள்ளது, அவளுடைய வார்த்தைகள், நடத்தைகள் காட்டுகின்றன எனலாம்.

madani-and-soofiya

madani-and-soofiya

பஸ் எரிப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பது: கலமசேர் பஸ் வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அந்த நிலையில் சூபியா மதானி போலீசில் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- “கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அப்துல் நசர் மதானியை போலீசார் கடுமமையாக சித்ரவதை செய்தனர். அங்கு அவர் பட்ட கஷ்டமே என்னை குற்றவாளி ஆக்கியது”. அதாவது, உண்மையில் கஷ்டப்படுத்தப்பட்டானா அல்லது சர்க்கரை முதலிய வியாதிகளினால், சிகிச்சைப் பெற்றுவந்ததால், ஒன்பது ஆண்டுகளில் உடல் இளைத்தான என்றுதான் பார்க்கவேண்டும். ஆனால், சிறைவாசம், போலீஸ் கைது, என தனக்கும் வரும்போது, தன்னைகத் தற்காத்துக் கொள்ளவே வேண்டியுள்ளது.

Soofiya Maudhany

Soofiya Maudhany

மதானியைப் பற்றிய சிடியில் சூபியா சொன்னது: மதானியின் மனைவி சூபியா அளித்துள்ள பேட்டியில், “ஒன்பது ஆண்டுகளுக்கு முன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கணவர், கோவை சிறையில் உள்ளார். அவரை சந்திக்கும் போதெல்லாம், எனக்கு தைரியமூட்டுவார்; அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. சிறைக்கு சென்றபோது அவரது எடை 116 கிலோ; தற்போது 46 கிலோவாக குறைந்துவிட்டது. முறையான சிகிச்சை இல்லாததே இதற்கு காரணம்,” என, குற்றம் சாட்டியுள்ளார்.  இறுதியில், “சட்டம், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், மதானியின் சிறைவாசத்தை நிச்சயம் கண்டிப்பார்கள்‘” என்ற வர்ணனையுடன் படம் முடிகிறது.

soofia-12-2009

soofia-12-2009
soofiya-madani-dec.2009

soofiya-madani-dec.2009

21-06-2002 அன்று கோவை சிறையில் நடந்த நிகழ்ச்சி: சூபீயா தனது உதவியாளன் நௌஸத் மற்றும் இன்னொருவனுடன் தனது கணவனைப் பார்க்க வருகிறாள். பெண்போலீஸார்கள் சோதனையிட்டபோது, சூபியா செல்போன் மற்றும் சிம்கார்டுகளை உள்ளே எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்படுகிறது. உடனே, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூபியா, பெண்காவலர்களையும் மற்ற காவலர்களையும் மிரட்டுகிறாள். தான் நினைத்தால், அவர்களையெல்லாம் தொலைத்து விடுவேன் என்று மிரட்டுகிறாள். நௌஸத் பெண்காவலர்களை அவர்களுடைய சட்டைகளைப் பிடித்து இழுக்கிறான். இதனால், ஆண்-போலீஸார் வந்து அவர்களை, வலுக்கட்டாயமாக, சிறை வளாகத்திலிருந்து வெளியேற்றுகின்றனர். ஆனால், வெளியே வந்தபிறகும், போலீஸாரைத் திட்டி, மிரட்டிவிட்டுச் செல்கின்றனர்

soofiya madhani with children in kairali tv

soofiya madhani with children in kairali tv

ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்தல்: போலீஸார், இவ்வாறு அவமதிக்கப்பட்டதால், அவர்கள், சூபியா மற்றும் நௌஸத் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்கின்றனர். அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, பெண்-போலீஸாரை பலாத்காரம் செய்தது, போலீஸாரை மிரட்டியது முதலியவற்றிற்காக இபிகோ ரசத்துகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அரசியல் செல்வாக்கினால், அவ்வழக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

மதானி மனைவி மீதான வழக்கு : துவங்கியது இருதரப்பு வாதம்

மே 06,2008; http://dhinamalar.info/court_detail.asp?news_id=504&ncat=TN&archive=1&showfrom=5/6/2008

கோவை பணி செய்ய விடாமல் தடுத்து, சிறைவார்டன்களை மிரட்டிய மதானி மனைவி மீதான வழக்கில் இருதரப்பு வாதம் துவங்கியது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2002ல் மதானியை பார்க்க வந்த அவரது மனைவி சூபியாவுக்கும், சிறைக்காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிறைக்காவலர்களை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக சூபியா மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு ஜே.எம்.எண்: 3 கோர்ட்டில் நடக்கிறது.சாட்சி விசாரணை முடிந்த நிலையில், நேற்று இருதரப்பு வாதம் துவங்கியது. சூபியா சார்பில் வக்கீல் மோகன் ஆஜராகி வாதிட்டார். தொடர்ந்து, அரசு தரப்பு வாதத்துக்காக வழக்கை மே 9ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் புளோரா ஒத்திவைத்தார்.

மதானி தம்பதியரின் அரசியல் செல்வாக்கு, பலம்: குற்றாஞ்சட்டப்பட்ட தீவிரவாதி-பயங்கரவாதி மதானி 1998-ஆம் அண்டு நடந்த கோவைத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அல்லது சிலர் சொல்லும்படியாக, விசாரணைக் கைதியாகக் கருதப்பட்டு சிறையில்  தண்டனையை சகல வசதிகளுடன்  அனுபவித்துக்  கொண்டிருந்தான்.  எனவே, சூபியா குற்றஞ்சாட்டியபடி எப்படி எடை 116 கிலோ; தற்போது 46 கிலோவாக குறைந்துவிட்டது. என ஆச்சரியமாக உள்ளது. உடம்பு சரியாகவில்லை என்பதனால், சிகிச்சையளித்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உணவைக் குறைத்துக் கொண்டான் என்பதுதான் உண்மை.

சூபியாவை பார்க்கும் முதலமைச்சர்: ஜூன் 2, 2005 அன்று அப்போதைய காங்கிரஸ் முதல் மந்திரி உம்மன் சாண்டி மதானியின் வீட்டிற்கே சென்று அவரது மனைவியையும் தந்தையையும் சந்தித்த போது, சூபியா சிறையில் நடந்த பிரச்சினைகளைப் பற்றி சொல்லி, ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டாள். அதன்படியே,  “மனிதாபிமான” அடிப்படையில் அவள் கணவனுக்கு விடுதலை கிடைக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார். அதுமட்டுமல்லாது, மார்ச்சு 14, 2006 அன்று, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ கட்சியினரைக் கொண்ட கேரள சட்டசபை, மனிதாபிமான அடிப்படையில் மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானத்தையும் நிறைவேற்றியது வினோதமாக இருந்தது.

சிறைக்கு ஆட்களை அனுப்பி விசாரித்தது, கருணாநிதியிடம் பரிந்துரைத்தது: அதன் பிறகு கேரள முதல்வர் அச்சுதானந்தன் தன்னுடைய அமைச்சர்கள் சிலரை கோவை சிறையில் மதானியை சந்தித்து வேண்டியது செய்யப்படும் என்று சொல்லி அனுப்பினார். பிறகு, ஜூன் 10, 2006 அன்று கேரள முதல்வர் அச்சுதானந்தனே நேரிடையாகச் சென்னைக்கு வந்து, தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து, மதானியை “உடல்நல” காரணங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழக முதல்வர் விடுதலை செய்ய மறுத்தாலும், சிறைச்சாலையிலேயே மதானியின் ஆயுர்வேத மருத்துவத்திற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்.

தச்சாங்கரி மனைவி –சூபியா மதானி -நஸீர் தொடர்பு – வென்னலா வீடு[1]: புலானாய்வு குழுவினர் டோமின் ஜெ. தச்சங்கரி மற்றும் அப்துல் நாசர் மதானி இவர்களுக்குள்ள தொடர்பை கண்டறிந்துள்ளனர். வென்னலா என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டைப் பற்றி விசாரித்ததில் அந்த தொடர்பு வெளிப்படுகிறது. தச்சாங்கரியின் மனைவி மற்றும் மதானியின் மனைவி 2006 மற்றும் 2007 முறையே அந்த வீட்டை “ரியான் ஸ்டூடியோ” என்ற பெயரில் வாடகைக்கு எடுத்துள்ளனர் கருகபிள்ளி என்ற கொச்சியிலுள்ள வீட்டிற்கு இடம்பெயரும் முன்னர், இருவருமே இந்த விட்டில் நான்கு மாதங்கள் தங்கியுள்ளதாகத் தெரிகிறது. இன்னொரு சோதனையில் இதே வீடுதான் திருட்டு விசிடி தொழிற்சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிந்தது. அது மட்டுமல்லாது இந்த வோட்டில்தான், மதானி நஸீரை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. அக்டோபர் 15, 2007ல் மதனி இந்த வீட்டிற்கு குடிபெயந்தார். இந்தவீடு ஒரு NRI. பெண்மணிக்குச் சொந்தமானது என்றும் அவருடைய சகோதரர் வீட்டை நிர்வாகித்து வருகிறார் என்றும் தெரிகிறது.

மனைவிகள் பங்குதாரர்களாக இருக்கும் போது, ஒரு கணவன் அடுததவர் மனைவி மீது நடவடிக்கை எடுப்பாரா? தச்சாங்கரியின் மனைவி மற்றும் மதானியின் மனைவி 2006 மற்றும் 2007 முறையே அந்த வீட்டை “ரியான் ஸ்டூடியோ” என்ற பெயரில் வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த நிறுவனத்திற்கு பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். இத்தகைய உறவு இருக்கும்போது, எப்படி ஒரு கணவன் அடுததவர் மனைவி மீது நடவடிக்கை எடுப்பார்? கலமசேரி பஸ் வழக்கை விசாரிப்பதில், இந்த டோமின் ஜெ. தச்சங்கரி உள்ளார்[2], பிறகு, எப்படி அவரால் பாரபட்சமின்றி, அவ்வழக்கை விசாரிக்கமுடியும்? பி. எம். வர்கீஸை தனது ஆதிக்கத்தால் / தாக்கத்தால் பணியவைக்கமாட்டார் என்று என்ன நம்பிக்கையுள்ளது?

கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்தாரா?: மதானி மனைவியிடம் தீவிர விசாரணை[3]

கேரளாவில் தமிழக பஸ் எரிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் மதானியின் மனைவி சூபியா மதானியிடம், கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்தது தொடர்பாக, தமிழக போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த 2005ம் ஆண்டில் தமிழக பஸ் ஒன்று, கேரளாவில் உள்ள கலமசேரியில் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் மதானியின் மனைவி, சூபியா மதானிக்கு தொடர்பு இருப்பது, சமீபத்தில் கைதான லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதி நசீரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து, பஸ் எரிப்பு வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சூபியா மதானி, கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் அலுவாலியா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக, இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான இரண்டு நபர் குழு, திரிக்கராவில் உள்ள போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில், சூபியா மதானியிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், “பஸ் எரிப்பு வழக்கை தவிர, கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்த வழக்கில், நசீர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். எனவே, இது தொடர்பாக ஏதேனும் முக்கிய தகவல்கள் கிடைக்குமா என்பதற்காகவே போலீசார், சூபியா மதானியிடம் விசாரணை நடத்தினர்’ என்றனர்.

மதானிக்கு ஆதரவாககைதியின் கதைஆவணப்படம்சிடியாக வெளியீடு: கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் மதானி, முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஆதரவாக, கைதியின் கதை’ என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு நெருங்கும் வேளையில், “சிடி’ வெளியிடப்பட்ட பின்னணி என்ன என்பது குறித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், கேரள மக்கள் ஜனநாயக கட்சியினர் நிறுவனர் அப்துல்நாசர் மதானி (41) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் 167 குற்றவாளிகள் மீதான விசாரணை தனி நீதிமன்றத்தில் முடிந்தது; தீர்ப்புக்காக வழக்கு காத்திருக்கிறது. இந்நிலையில், “கைதியின் கதை’ (மதானி மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த ஆவணப்படம்) என்ற தலைப்புடன், 45 நிமிட படம் “சிடி’யாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை, “மீடியா ஸ்டெப்ஸ்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது; “ஆலூர் ஷானவாஸ்’ என்பவர் இதை தயாரித்துள்ளார். இப்படத்தில், மதானியின் பள்ளி பருவம், ஆவேசமான அரசியல் மேடைப்பேச்சு, மத ரீதியான போதனைகள் இடம்பெற்றுள்ளன. “சங்க் பரிவார்’ அமைப்புக்கு எதிராக 1991ல், “இஸ்லாமிக் சேவா சங்’ அமைப்பை துவக்கியது; வெடிகுண்டு தாக்குதலில் மதானியின் கால் ஊனமடைந்தது தொடர்பான, விளக்கங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


[1] Ajay Kanth, Kerala: Nexus between Thachankary, Madani?, First Published : 07 Jul 2010 01:58:28 AM IST; Last Updated : 07 Jul 2010 09:17:01 AM IST

http://expressbuzz.com/states/kerala/kerala-nexus-between-thachankary-madani/187654.html

[2] It is said that the Karnataka Police had already handed over such information to the police team hat had visited Bangalore earlier, which included Inspector General Tomin J Thachankery and Assistant Commissioner of Police PM Varghese, who was heading the probe the Kalamssery bus-burning case. http://www.dailypioneer.com/222931/Nazeer-planned-communal-riots.html

[3] தினமலர், கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்தாரா?: மதானி மனைவியிடம் தீவிர விசாரணை, டிசம்பர் 20,2009; http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14828

ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா எதிராக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போராட்டம்!

ஓகஸ்ட் 2, 2010

ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா எதிராக  இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போராட்டம்!

ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா யூனியன் எதிராக  முஸ்லீம் லீக் போராட்டம்!: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர்த்து போராடுவோம் என்று அறிவித்திருக்கிறார்களாம் [அதுசரி, அவர்களை காஃபிர்கள் என்று அறிவிப்பார்களா?]. மக்களிடம் தாங்கள் இழைத்தக் கொடுமைகளை மறைக்க இந்த இயக்கங்கள் முயற்சி செய்கின்றன என்றும் எடுத்துக் காட்டினார்கள் [எந்த மக்களை என்று சொல்லவில்லையே/]. மக்களிடையே அவர்கள் தீவிரவாத சித்தாந்ததைப் பரப்பி வருகிறர்கள், மக்களை தவறான திசைக்கு வழிகாட்டுகிறார்கள் என்றும் குற்றாஞ்சாட்டினர். இனி இந்த தீவிரவாத இயக்கங்களின் கொடுமைகளைப் பற்றிப் பிரச்சாரம் செய்யப்போவதாகவும், அவைகளுடன் எந்த கூட்டும் வைத்துக் கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்கள்.

கோட்டக்கல்லில் நடந்த முஸ்லீம் அமைப்புகளின் கூட்டம்: சனிக்கிழமை (31-07-2010) கோட்டக்கல்லில் (மல்லப்புரம் மாவட்டம்) நடந்த கூட்டத்தில் இவ்வாறு முடிவு எடுத்து இருக்கிறார்களாம். முஸ்லீம் லீக்கைத்தவிர, சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள் உட்பட (EK and AP sections of Sunni), முஜாஹித் இயக்கங்கள், சமஸ்த கேரளா ஜமாயத்-உல்-உலமா, கேரள முஸ்லீம் சேவை சங்கம் (Muslim Service Society -MSS), முஸ்லீம் கல்வி சங்கம் (Muslim Educational Society -MES).

முஸ்லீம்களில் சிறுபான்மையினர் தாம் இவ்வாறு தீவிரவாத வேலைகளை செய்து வருகிறார்கள்: குன்ஹாலங்குட்டி, “தீவிரவாதத்தை எந்த வகையிலும் அனுமதிக்கமுடியாது. முஸ்லீம்களில் சிறுபான்மையினர் தாம் இவ்வாறு தீவிரவாத வேலைகளை செய்து வருகிறார்கள். நாங்கள் இந்த கொள்கையை கடைப்பிடிப்போம், தீவிரவாதத்திலிருந்து மீண்டு வெற்றிகரமாக வருமோம் என்று நம்புகிறோம்”, என்று பேசினார்[1]. அச்சுதானந்தன் கேரள மக்களை முஸ்லிம்களாக மதம் மற்றுகிறார்கள் என்று சொன்னதிற்காக எதிர்ப்பும் தெரிவித்தனர். கேரளா மற்றும் மேற்கு வங்காளம் முஸ்லீம்களுக்கு எந்த சமூக வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர்[2].

கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் முஸ்லீம்களும், கம்யூனிஸ்ட்டுகளும் சேர்ந்து இருப்பது: 60 வருடங்களுக்கு மேலாக, இந்த இரண்டு மாநிலங்களில் முஸ்லீம்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றாகத்தான் அரசியல்-சித்தாந்த ரீதியில் வேலைசெய்து வருகிறர்கள். கடவுள் இல்லை என்கின்ற கூட்டாத்தர்களுடன், குறிப்பாக காஃபிர்களுடன், இந்த மோமின்கள் எப்படி காலந்தள்ளியுள்ளனர் என்பது அவரவர் கடவுளர்களைத்தான் கேட்கவேண்டும். செக்யூலரிஸம் பேசி கத்திக் கொண்டிருக்கும் இந்த கூட்டங்களுக்கு வெட்கமில்லாமல், அவ்வாறு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதில், நடு-நடுவே காங்கிரஸும் சேர்ந்து கொள்ளும். இந்தக் கூட்டத்தார்களுக்கு, என்ன நாம் இவ்வாறு நடந்து கொள்கிறோமே, மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட்டதில்லை. ஆனால், இப்பொழுது அவர்களுக்கு வாழ்க்கை கசந்துவிட்டது போலும்!

ஏன் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் அதிகமாக தீவிரவாதம் வளர்ந்திருக்கக்கூடும்? கம்யூனிஸ்ட்டுகளே பயப்படும் அளவிற்கு எப்படி இஸ்லாமியத் தீவிரவாதம் இந்த மாநிலங்களில் வளர்ந்திருக்கமுடியும்? இதை அலசும்போது கூட இம்மாநிலங்களில் தான், ஒருவருடைய கை வெட்டப்பட்டுள்ளது, இன்னொரு முஸ்லீம் பெண்ணே பாடம் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. எந்த சமூக-பொருளாதார குற்றமாகியிலும், அதன் பின்னணியை ஆய்ந்து பார்த்தால், இம்மாநிலங்களில் ஜிஹாதிகளின் பங்குதான் வெளிப்பருகிறது. ஆகையால்தான், இன்று!: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போன்ற முஸ்லீம் அடிப்படைவாதக் கட்சிகளே, ஜமாஅத்-இ-இஸ்லாமி, போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர்த்து போராடுவோம் என்று அறிவித்திருக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. நாங்கள், “சிறுபான்மையினர், சிறுபான்மையினர்”, என்று சொல்லிக்கொண்டு, பெரும்பான்மையினரை சிறுபான்மையினரைவிட தாழ்த்தி, அவர்களுக்கு உரிமைகள் இல்லாமால் ஆக்கிவிட்டு, இன்று, “முஸ்லீம்களில் சிறுபான்மையினர் தாம் இவ்வாறு தீவிரவாத வேலைகளை செய்து வருகிறார்கள்”, என்று சொல்லவேண்டிய நிலையில் வந்துவிட்டது வேடிக்கையகத்தான் உள்ளது. இதுவும் கருணாநிதி-ஜெயலலிதா போன்ற அரசியலா, வாய்ஜால-விளையாட்டுகளா, அறிக்கை-வேடிக்கைகளா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


[1] http://www.hindu.com/2010/08/01/stories/2010080157670100.htm

[2] http://ibnlive.in.com/generalnewsfeed/news/iuml-slams-left-govts-in-kerala-wb-for-neglecting-muslims/192444.html