Archive for the ‘போதை’ category
ஒக்ரோபர் 27, 2015
சவுதி இளவரசர் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் கைது!

Saudi prince arrested for drug smuggling
பெய்ரூட்டில் போதை மருந்து பிடிபட்டது: லெபனான் தலைநகர் பெய்ரூட் எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கும். பலமுறை சண்டை, போர் என்றெல்லாம் இருந்து, மக்கள் அவதிகளுக்குள்ளாகி, இப்பொழுது சாதாரணமாக இருக்கின்ற நிலையில் மற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. விமான நிலையத்தில் 26-10-2015 அன்று சவுதி அரேபியா தலைநகர் ரியாத் செல்லும் தனியார் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அதில் 40 சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டன[1]. இவற்றில் போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகள் அடைத்து கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை சோதனை செய்தனர். அவற்றில் கோகைகன் போதை பொருளும், ‘கேப்டகான்’ என்ற தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கோகைனும் இருந்தன[2]. அவற்றை லெபனானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது[3]. அதை தொடர்ந்து அந்த விமானத்தை சுற்றி வளைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

another Saudi prince involved in crime
காப்டகான் ன்பது என்ன, அதன் உபயோகம் போதை மருந்தானது எப்படி?: ரசாயன முறையில் தயாரிக்கப்படும் அம்பிடெமைன் பெனிதல்லின் [amphetamine phenethylline] என்ற ஊக்குவிக்கும் போதை மருந்தின் வியாபாரப் பெயர் காப்டகான் [Captagon] ஆகும்[4]. இது சிரியாவில் சண்டையில் / போரில் ஈடுபட்டுள்ளவர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது. 1960களில் முதலில் மேற்கத்தைய நாடுகளில் மனநோயாளிகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் விபரீத விளைவுகளினாலும், மருந்தாக உபயோகிக்கக் கூடியதல்ல, சட்டத்தின் படியும் ஒவ்வாதது என்றெல்லாம் தெரிந்தபோது, 1980களில் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டது. ஆனால், வளைகுடா நாடுகளில் அதன் உப்யோகம் போதைப் பொருளாக தொடர்ந்தது[5]. தீவிரவாத குழுக்கள் ஜிஹாதில் / புனிதபோரில் ஈடுபட, தொடர்ந்து கடுமையாக சண்டையிட ஊக்குவிக்கும் மருந்தாக உபயோகப்படுத்துகிறார்கள். இதனால், இத்தகைய போதை மருந்துகளை தயாரிப்பது, விநியோகிப்பது, கடத்துவது, எங்கெல்லாம் போர் நடக்கின்றதோ, அவ்விடங்களுக்குக் கொண்டு சேர்ப்பது, என்று பலர் ஈடுப்பட்டுள்ளார்கள். மில்லியன் – கோடிக்கணக்கில் இவ்வியாபாரம் நடந்து வருகிறது.

போதைப் பொருள் தயாரிப்பு, விநியோகம்
அப்தெல்மொசின் பின் வாலித் பின் அப்துல்லாசிஸ் என்ற சவுதி அரேபியா இளவரசர் சம்பந்தப்பட்டுள்ளது: விசாரணையில் போதை மருந்து, மாத்திரைகளை 5 பேர் கடந்த முயன்றது தெரிய வந்தது. அவர்களில் மிக முக்கியமான நபர் சவுதி அரேபியா இளவரசர் அப்தெல்மொசின் பின் வாலித் பின் அப்துல்லாசிஸ் [Abdel Mohsen Bin Walid Bin Abdulaziz] ஆவார். எந்த இளவரசர் அல்லது அரசர் என்று அடையாளம் காணப்படவில்லை என்று இன்னொரு செய்தி கூறுகிறது[6]. எனவே அவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்[7]. விமானநிலையத்தில் உள்ள இன்னும் ஐந்து சவுதி குடிமகன்களை விசாரிக்க வேண்டியுள்ளது என்று போலீஸார் கூறுகின்றனர். சவுதி அரேபியா மன்னராட்சி கொண்ட நாடு, ஆனால், ஷரியத் சட்டதிட்டங்கள் நடைமுறையில் கொண்ட நாடாகும். 75–90% மக்கள் சுன்னி மற்றும் 10–25% ஷியா முஸ்லிம்கள் கொண்ட நாடாகும். குற்றங்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின்படி, கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும்.

Narcotics seized at Beirut airport
சவுதி இளவரசர் / அரசர்கள் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவது: கடந்த மாதம் சவுதி இளவரசர் ஒருவர் அமெரிக்காவில், பெவர்லி ஹில்ஸ் மான்சனில் ‘செக்ஸ்’வழக்கில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது[8]. ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று அதை தொடர்ந்து விசாரிக்காமல் விட்டுவிட்டனர்[9]. தனது $37 மில்லியன் மதிப்புள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் மாளிகையில், நீச்சல்குளத்தில் நிர்வாண பெண்கள் கொண்ட பார்ட்டி நடத்த வேண்டும் என்று கேட்டதாக செய்திகள் வந்தன[10]. தனது பெண் வேலைக்காரிகளுல் ஒருத்தியை நிர்வாணமாக நீச்சல்குளாத்தில் இருக்குமாறு பணித்ததாக புகாரில் / நீதிமன்ற வழக்கு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், கைதும் செய்யப்பட்டார்[11]. அதே போல 2013ல் ஒரு கென்யாவைச் சேர்ந்த பெண்ணை அடிமையாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது, ஆனால், அதுவும் விடப்பட்டது. கடந்த ஏப்ரல் 2014ல் கூட, 15 மில்லியன் காப்டகான் காப்சூல்கள், சோளங்கள் அடைக்கப்பட்ட கன்டெய்னர்கள் மூலம் கடத்தப்படும் போது, பெய்ரூட் துறைமுகத்தில் பிடிபட்டது[12]. இவ்வாறு சமீபகாலத்தில் இரு சவுதி இளவரசர்கள் போதை மருந்து கடத்தல், செக்ஸ் குற்றங்கள் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளது திகைப்படைய வைப்பதாக உள்ளது. ஆனால், அதே நேரத்தில் சாதாரண மனிதன் அத்தகைய குற்றங்களை செய்தால், தூக்கில் போடப்படுகிறார்கள் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[13].

A picture released by the Saudi Press Agency -SPA- shows Saudi King Salman bin Abdulaziz Al-Saud -AFP Photo
அரச குடும்பச் சண்டையும், உருவாகும்பிரச்சினையும்[14]: சவுதி அரேபியா மன்னர் சல்மான் பதவி விலக வேண்டும் என்று அவரது தம்பிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மன்னராக பதவி வகித்து வந்த அப்துல்லா, கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து புதிய மன்னராக அவரது சகோதரர் சல்மான் (79) பதவியேற்றார். இந்நிலையில், சல்மான் பதவி விலகும் படி அவரது 8 தம்பிகள் வலியுறுத்தியுள்ளனர். சல்மானுக்குப் பதிலாக இளவரசர் அகமது பின் அல்துல் அஜிஸ் (73) என்பவரை மன்னர் ஆக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் உள்துறை அமைச்சரான அஜிஸுக்கு இஸ்லாமிய மத தலைவர்கள் மற்றும் உலமாக்களின் ஆதரவு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது மகன் முகமது பின் சல்மானை துணை பட்டத்து இளவரசராக மன்னர் சல்மான் நியமித்தார். மேலும், மறதி நோயினால் அவதிப்படும் மன்னர் சல்மான் விரைவில் பதவியை துறந்து விட்டு தனது மகன் முகமது பின் சல்மானை மன்னர் ஆக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Saudi-prince- PHOTO- AFP-FILE-Tribune, Pakistan
ஆட்சிமாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் சவுதி அரேபியா: அரசின் முக்கிய முடிவுகள் மன்னர் சல்மானின் ரகசிய உத்தரவுகள் அனைத்தும் இவர் மூலமே பிறப்பிக்கப்படுகின்றன. எனவே, முகமது பின் சல்மானை சவுதி மன்னராக்க தற்போதைய மன்னர் சல்மானின் தம்பிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. மேலும், அதிகாரம் முழுவதும் மன்னர் சல்மானின் குடும்பத்துக்கும், அவரது வாரிசுகளுக்கும் செல்வதாக கருதி தற்போது அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பாக அதிருப்தி இளவரசர் ஒருவர் இது தொடர்பாக எழுதிய கடிதம் ஒன்று ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பிகளின் எதிர்ப்பால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற சூழல் நிலவுகிறது. துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான் ராணுவ அமைச்சராகவும் இருக்கிறார். அவரது முடிவின்படிதான் ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய படைகள் மறைமுக போரில் ஈடுபட்டுள்ளன. இதனால் சவுதி அரேபியாவில் தேவையற்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[15]. ஆனால், பிள்ளைகள் இப்படி குற்றங்களில் இடுபட்டுள்ளனரே என்று குடும்பத்தினர் கவலைப்படவில்லை போலும்.
வேதபிரகாஷ்
27-10-2015
[1] மாலைமலர், லெபனானில் போதை பொருள் கடத்திய சவுதி இளவரசர் கைது, மாற்றம் செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 2:15 PM IST; பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 11:59 AM IST.
[2] http://www.maalaimalar.com/2015/10/27115925/Saudi-Prince-Arrested-in-Leban.html
[3] தினகரன், போதைப் பொருள் கடத்திய சவுதி இளவரசர் லெபனானில் கைது, வியாழக்கிழமை, அக்டோபர் 27, 2015, 13.21.13.
[4] Captagon is the brand name for the amphetamine phenethylline, a synthetic stimulant. The banned drug is consumed mainly in the Middle East and has reportedly been widely used by fighters in Syria.
[5] The drug was first produced in the West in the 1960s to treat hyperactivity, narcolepsy and depression, but by the 1980s was banned in most countries because of its addictive properties and no longer has a legitimate medical use. Its active ingredient, fenethylline, is metabolized by the body into the stimulants amphetamine and theophylline.
http://www.cbsnews.com/news/war-turns-syria-into-major-amphetamine-producer-and-consumer/
[6] http://en.abna24.com/service/middle-east-west-asia/archive/2015/10/26/716992/story.html
[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=175258
[8] Late last month, a Saudi prince was arrested in Los Angeles for allegedly trying to force a woman to perform oral sex on him at a Beverly Hills mansion. But authorities decided not to pursue the charge, citing a lack of evidence.
[9] In 2013, a Saudi princess was accused in Los Angeles of enslaving a Kenyan woman as a housemaid, but the charges were also eventually dropped.
[11] Prince Majed bin Abdullah bin Abdulaziz Al Saud, a son of the late King Abdullah, allegedly asked one of his female employees to force anyone in his $37 million mansion to come out to the pool and strip, according to the Daily Mail, which cited court papers detailing the civil case against the prince, who was arrested last month in LA after neighbors spotted a woman trying to climb a wall at his compound.
http://nypost.com/2015/10/26/saudi-prince-demanded-naked-pool-parties-at-la-mansion-suit/
[12] http://www.rawstory.com/2015/10/saudi-prince-arrested-in-largest-drug-bust-in-the-history-of-beiruts-airport/
[13] http://www.rawstory.com/2015/10/drug-smuggling-rape-and-torture-these-five-saudi-royals-did-things-that-would-get-them-executed-back-home/
[14] தமிழ்.ஒன்.இந்தியா, சவுதி மன்னருக்கு எதிராக தம்பிகள் ‘போர்க்கொடி’… ஆட்சி மாற்றம் ஏற்படுமா?, Posted by: Jayachitra Published: Sunday, October 25, 2015, 15:20 [IST].
[15] Read more at: http://tamil.oneindia.com/news/international/saudi-arabia-eight-king-salman-s-11-surviving-brothers-want-to-oust-him-238396.html
பிரிவுகள்: அரேபியா, கடத்தல், சவுதி, சிரியா, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, பெய்ரூட், போதை, போதை மருந்து, போர், லெபனான், ஷரீயத்
Tags: அரேபியா, அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், கடத்தல், காப்டகான், சவுதி, சிரியா, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாத், பெய்ரூட், போதை மருந்து, லெபனான், ஷரீயத்
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 4, 2013
இந்தியா போதை மருந்து ஜிஹாதிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது – பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது!

பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது: ஹிஜ்புல் முஜாஹித்தீன் என்ற தீவிரவாத அமைப்பிற்கு சொந்தமான ரூ.10 கோடிகள் மதிப்பிலான கோக்கைன் பாகிஸ்தான் வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் JK02F-0127 என்று பதிவு செய்யப் பட்ட சரக்குலாரி வழியாக நுழைந்தபோது, பிடிபட்டது[1]. சரக்கு லாரிகளை சோதனை போட பாகிஸ்தான் சகோடி என்ற இடத்திலும், இந்தியா சலமாபாதில், அமன் சேது என்ற இடத்திலும் சோதனைச் சாவடிகளை வைத்துள்ளன. லாரி ஓட்டுனர் அப்துல் அஹத் கனி [Abdul Ahad Ganie] என்பவன் பிடிபட்டான். வழக்கம் போல அவன் ஒரு குருவி போன்ற ஏஜென்ட் தான். இருப்பினும் தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதால், விசாரித்தபோது, தானும் அவர்களைச் சேர்ந்தவன், சரக்கு ஹிஜ்புல் முஜாஹித்தீனுக்குச் சொந்தமானது என்பதை ஒப்புக் கொண்டான்[2].

ஜிஹாதிகளின் புதிய தீவிரவாத தாக்குதல் – போதை மருந்து: ஶ்ரீநகர் மண்டியிலிருந்து வாழைப்பழங்களை பைஸன் டிரேடர்ஸ் பாக் [Faizan Traders PaK] என்ற கடையில் இறக்கி வைத்து திரும்ப வந்ததாகச் சொல்லப் பட்டது[3]. ஆனால், வண்டியை சோதனை செய்தபோது, ஒன்பது பார்சல்களில் நன்றாக பேக் செய்யப்பட்ட வெண்மை நிறம் கொண்ட போதைப் பொருள் கண்டு பிடிக்கப் பட்டது. அப்பொருளை சோதனை செய்தபோது கோக்கைன் என்றும் தெரிய வந்தது[4]. பிறகு போலீஸார் ஒரு வழக்கைப் பதிவு [FIR No. 47/2013 ] செய்தனர். டிரைவர் மற்றும் கன்டக்டெர் கைது செய்யப்பட்டனர். இப்பொருள் காஷ்மீரில் ஒருவரிடம் டெலிவரி செய்யப் படவேண்டும் என்றும், அங்கிருந்து அவை பிரிக்கப் பட்டு விற்பனை செய்யப் பட்டு, அதிலிருந்து வரும் பணம் தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாத செயல்களுக்கு உபயோகப் படுத்தப் படும் என்று தெரிய வந்துள்ளது[5]. ஆப்கானிஸ்தானில் இத்தகைய போதை மருந்துப் பொருட்கள் தயாரிக்கப் பட்டு, தீவிரவாதிகளுக்கு விநியோகிக்கப் படுகிறது. அதனை விற்று அவர்கள் பணம் பெருகிறார்கள்.

இந்திய விரோத ஜிஹாதிகள் ஏன்?: தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் ஊடுருவல்காரர்களின் தீவிரவாதம், பயங்கரவாதம் முதலிய குரூரங்களைத் தடுப்பதற்காகத்தான் 1978ல் எல்லைகள் மூடப்பட்டன. எல்லைகள் வழியாக நடந்து வந்த சரக்குப் போக்கு வரத்தும் நிறுத்தப் பட்டது. வாஜ்பேயி ஆட்சியில் இருதரப்பு உறவுகள் ஓரளவிற்கு சரியாக ஆரம்பித்தன. பிறகு, முஸ்லிம்கள் விருப்பத்திற்கு இணங்க, 57 வருடங்களுக்குப் பிறகு சரக்குலாரிகள் மட்டும் குறிப்பிட்ட 10-15 பொருட்கள் எடுத்துக் கொண்டு வரலாம் என்று ஏப்ரல் 2005ல் அனுமதிக்கப்பட்டது. ஆனால், தளர்த்தப் நிலையை தீவிரவாதத்திற்குத்தான் முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள். இப்படடீந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை துரோகிகளாகத் தான் இருந்து வந்துள்ளார்கள் ஏன்று தெரியவில்லை. அவ்வப்போது, தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள், பாகிஸ்தானிய சிம் கார்ட்டுகள் என்று எடுத்து வந்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றையும், செக்போஸ்டில் இந்திய வீரர்கள் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இம்முறை இப்படி ரூ.10 கோடிகள் மதிப்பிலான கோக்கைன் போதைப் பொருள் பிடிப்பட்டுள்ளது[6].

ஜிஹாதி தீவிரவாதமும், போதை மருந்து வியாபாரமும் பின்னிப் பிணைந்துள்ளது: தலிபான் – பாகிஸ்தான் – காஷ்மீர் போதை மருந்து வியாபார இணைப்பு, ஜிஹாதி தொடர்பு, தீவிரவாத சம்பந்தம் முதலியவை வெளிப்படையாகிறது[7]. உலகம் முழுவதும் இப்போதை பொருட்கள் ஊடுருவிச் செல்கின்றன. தலிபான் ஆதிக்கத்தில் ஆப்கானிஸ்தானில் போதை மருந்து பொருட்களின் உற்பத்தி அதிகமாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்படும் போதை பொருட்கள் பாகிஸ்தான் வழியாக மற்ற நாடுகளுக்குக் கடத்தப் படுகிறது.
மயன்மார் / பர்மாவிற்கும் செல்கிறது. பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றது. மத்திய ஆசிய நாடுகளும் இதில் சம்பந்தப் பட்டுள்ளன.
கசாப் போன்றவர்கள் ஒரு முறையில் பயங்கரவாதத்தால் தாக்கினர் என்றால், முஜாஜித்தீன் பெயரில் பட்டகல் கும்பல் வெடிகுண்டுகள் வைத்து குரூரமாகக் கொல்கின்றனர் என்றால், இந்த போதை மருந்து ஜிஹாதி கும்பல் இவ்வாறு வேலை செய்கிறது[8]. ஆகவே, இந்திய பெற்றோர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனானப் பட்ட டேவிட் கோல்மேன் ஹெட்லி அல்லது சையது தாவூத் ஜிலானிவே போதை மருந்து கடத்தலில் தான் முதலில் பிடிபட்டான்[9]. பிறகு அவனது பின்னணி தெரிய வந்தது. ஆகவே ஜிஹாதி தீவிரவாதமும், போதை மருந்து வியாபாரமும் பின்னிப் பிணைந்துள்ளது என்பது உறுதியாகிறது.

முஸ்லிம்களின் இரட்டை வேடங்கள்: பொதுவாக முஸ்லிம்கள் தாங்கள் மது, போதை மருந்து முதலியவற்றை கையால் கூடத் தொடமாட்டோம். அல்லா அவற்றை ஒதுக்கியுள்ளார், என்றெல்லாம் பெருமையாக பேசுவார்கள், தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ஆனால், இப்பொழுது, முஸ்லிம்கள் எப்படி சட்டங்களை மீறி, தார்மீக விதிகளை மீறி, மனித நேயங்களைத் தாண்டி, சமூகத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டத்தில், இப்படி போதை மருந்தைக் கடத்திக் கொண்டு வந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. முஸ்லிம் இணைத்தளங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், ஒன்றுமே தெரியாதது போல நடிக்கின்றன. இஸ்லாத்தின் எதிரிகள் என்று அவர்களை சாடவில்லை. நரகத்திற்கு போவார்கள் என்று சாபமிடவில்லை.

பாகிஸ்தான் பெண்கள் போல இந்திய பெண்களும் சீரழிய வேண்டுமா?: பாகிஸ்தான் பெண்களே போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி உழல்வதாக பாகிஸ்தான் பத்திரிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன[10]. பள்ளி-கல்லூரி மாணவிகள் அப்பழக்கத்தில் உள்ளதாக கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்[11]. பாகிஸ்தான் அரசின் போதை மருந்து தடுப்புப் பிரிவு சோதனை மேற்கொண்டதில் 70% பள்ளி-கல்லூரி மாணவிகள் போதை மருந்தை யாதாவது ஒரு முறையில் – புகைத்தல், உக்கா, பீடா, இஞ்செக்சன் – உட்கொள்வதாகத் தெரிகிறது[12]. அதில் 47% கல்லூரி மற்றும் 21% பள்ளி மாணவிகள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் இதே நிலை வரவேண்டுமா? பிறகு இஸ்லாம் பெயரில் ஏன் தாலிபான், முஜாஹித்தீன்,. லஸ்கர் போன்ற தீவிரவாத இயக்கங்கள் இவ்வாறு செய்து வருகின்றன? ஏன் காஷ்மீர் முஸ்லிம்கள் அதை ஆதரிக்க வேண்டும்? மற்ற இந்திய முஸ்லிம்களும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்? பாகிஸ்தானிலிருந்து வரும் போதை பொருள் தமிழகத்திற்கு வராதா என்ன?
. 
வேதபிரகாஷ்
© 04-08-2013
[4] The vehicle had gone to Pakistan Administered Kashmir on Thursday with a load of Bananas from fruit Mandi Srinagar which were delivered to one Faizan Traders PaK, he said. “On through search of the vehicle on its return near Sheeri, nine Packets (approx.10Kgs) of contraband consisting of white colored substance (Cocaine) were seized from the vehicle which were concealed in a tyre in the overhead toolbox,” the spokesman said, adding, “The driver and conductor of the vehicle were questioned on spot who admitted that they had brought the illegal drugs from (PaK) which was to be delivered to some conduit in Srinagar.”
http://www.kashmirreader.com/08032013-ND-cocaine-worth-rs-10-crore-seized-from-cross-loc-truck-18976.aspx
[8] In the late 1980s,Pakistan and Afghanistan exported nearly half the world’s heroin, and, although their relative share declined somewhat thereafter, they remain among the world’s major producers. Pakistanis one of the primary transit countries for drugs from Afghanistan and hence knowledge of new routes and evolving methods of drug trafficking is essential for successful interdiction. Pakistan’s population is currently 16 million.
http://www.citijournal.com/pakistan-drug-addidct/
பிரிவுகள்: அபின், அல்லா, ஆப்கானிஸ்தான், இன்பம், உக்கா, உடல், கஞ்சா, கால், காஷ்மீர், கிரக்கம், கை, கொக்கோகம், கோக்கைன், சரஸ், சுற்றல், தலை, நேபாளம், பர்மா, பாகிஸ்தான், போதை, மனம், மயக்கம், மருந்து
Tags: அபின், ஆப்கானிஸ்தான், இழு, உடல், ஊக்கா, கால், கிரக்கம், கொக்கோகம், கோக்கைன், சரஸ், சுற்று, தலிபான், தலை, பற, பாகிஸ்தான், புகை, போதை, போதை மருந்து, மனம், மயக்கம், மாத்திரை
Comments: 3 பின்னூட்டங்கள்
மார்ச் 10, 2013
தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்!
தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக்: தில்லி இமாம் பாணியில், இந்திய விரோதிகள் குற்றங்களைச் செய்து வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, சோனியா அரசு அதற்கு ஆதரவு அளித்து வருகிறது[1]. முன்னர், தில்லி இமாம், பாகிஸ்தானிற்குச் சென்று, இதே மாதிரி, ஒரு இந்திய விரோத கூட்டத்தில் கலந்து கொண்டு, “பாரத மாதா ஒரு தெவிடியா” என்று பேசிவிட்டு வந்தார். ஆனால், அயல்நாட்டில் அந்த குற்றம் நடந்தது என்று ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டனர். இதில் வேடிக்கையென்னவென்றால், நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்று பேசி அவரை கைது செய்ய மூன்று உயர்நீதி மன்றங்களிலினின்று கைது வாரண்ட் பிறப்பித்திருந்தாலும், கைதுச் செய்யப்படாமல், காங்கிரஸ்காரர்கள் காத்து வந்தார்கள். இப்பொழுதும் அதே கதைதான். பாஸ்போர்ட்டை ஏன் பிடுங்காமல் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை[2]. அச்சட்டத்திலோ அல்லது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழோ எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் விந்தைதான்! ஜிஹாத்தின் யுத்த முறைகள் மாறினாலும், காங்கிரஸ் ஆதரவு அளிப்பது தேசவிரோதம் தான்[3].
புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? ஹாபிஸ் சையது, ஜிலானி, யாசின் மாலிக் முதலியோர் ஒரே மேடையில், கூட்டத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா? அப்சல்குரு வழக்கில் விடுதலைச் செய்யப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜிலானியும் கூட இருந்தான். “நான் ஹாபிஸ் சையதை அழைக்கவில்லை, அவரும் என்னை அழைக்கவில்லை. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன் அவ்வளவு தான். நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை”, என்று வாதிட்டான்[4]. குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்[5] காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொண்டான்!
ஒரு தலைவெட்டி பாகிஸ்தானிற்குச் செல்லும் போது, இன்னொன்று உள்ளே வருகிறது: நேற்று (சனிக்கிழமை) அந்த தலைவெட்டி பாகிஸ்தானிற்குத் திரும்பச் செல்லும் போது, இந்த தேசவிரோதி, பாகிஸ்தானிலிருந்து தில்லியில் வந்து இறங்குகிறான். கேட்டால், நான் ஒன்றும் செய்யவில்லை. அப்சல் குருவிற்கு எதிராக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தான் கலந்து கொண்டேன். இந்திய அரசு என்னை கைது செய்தால் தாராளமாக செய்து கொள்ளட்டும். சிறை எனக்கு இன்னொரு வீடாகும் அதனால் எனக்கு ஒன்றும் கவலையில்லை என்று அசால்டாக பதிலளித்து, திமிராக விமான நிலையத்திலிருந்து வெலியில் சென்றன். அப்பொழுது, போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது வேடிக்கையாகத்தான் இருந்தது. அவருக்கு சிவசேனா அமைப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தில்லியில் கைது செய்யாமல், ஶ்ரீநகரில் கை ஏன்?: இரவு தங்கி விட்டு, இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தானாம்! உடனே, அவனை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க அழைத்துச் சென்றார்களாம்! கைதான யாசின் மாலிக் மீது 38-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. தடா, பொடா சட்டத்தின் கீழ் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2005-06-ம் ஆண்டுகளில் லெஹஷ்கரே தொய்பா அமைப்பினர் நடத்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் சென்று கலந்து கொண்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது. முன்னர் ஒமர் அப்துல்லா முதலியோரும் அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்[6].
சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும்: ஜம்மு-காஷ்மீரில் , ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான் என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. அதனால்தான் நக்கலாக, சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும், என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறான். காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பைச்சேர்ந்த யாசின்மாலிக், இவர் பார்லிமென்ட் தாக்குதல் பயங்கரவாதி அப்சலகுரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்தார். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத அமைப்பான லெஷ்கரே தொய்பா அமைப்பின் ஹபீஸ் சையத்தினை சந்தித்துவிட்டு நேற்று டில்லி வந்தான்.
காந்தி–நேரு போன் று நாங்கள் அஹிம்சா வழி பின்பற்றுகிறோம்[7]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[8]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[9]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.
வேதபிரகாஷ்
10-03-2013
பிரிவுகள்: அகிம்சை, அடிமை, அடையாளம், அப்சல் குரு, அமைதி, அல்லா பெயர், அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், அஹிம்சை, ஆப்கானிஸ்தான், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்தியாவின் மேப், இந்துக்கள், இமாம், இல்லாத நிலை, உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, காஃபிர், காஃபிர்கள், காந்தி, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, சத்தியாகிரகம், சன்னி, சிறுபான்மையினர், சுன்னி, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, நேரு, புத்தகங்கள் எரிப்பு, புத்தகம், புத்தர், புனிதப் போர், போதை, மசூதி, முஸ்லீம்
Tags: அசிம்சை, அமைதி, அவமதிக்கும் இஸ்லாம், அஹிம்சை, இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், காந்தி, குண்டு வெடிப்பு, கொலை, கொலை வழக்கு, கொலை வெறியாட்டம், சத்தியாகிரகம், ஜிலானி, ஜிஹாதி, ஜிஹாதி குண்டுக்கொலை, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், டில்லி, டில்லி இமாம், தில்லி இமாம், நேரு, முஸ்லீம்கள், யாசின் மாலிக், ஹாபிஸ் சையது
Comments: 4 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 7, 2012
இஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி!
முஸ்லீம் என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம்: இப்படி சொன்னது ஆப்கானிஸ்தான் பிரதம மந்திரி முஹம்மது கர்ஸாய்[1]. இந்தியாவின் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மை கூட காயவில்லை. ஆனால், “…..போர் / ஜிஹாத் அது அமெரிக்கா அல்லது இந்தியா என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தான் பக்கம் தான்[2]. ஏனெனில் அவர்கள் எங்களது சகோதரர்கள்”. இருப்பினும், இந்திய மரமண்டைகளுக்கு இது புரியவில்லை[3]. இதுபோலத்தான், இப்பொழுது மாண்புமிகு பிரதம மந்திரி, “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” என்கிறார். அதாவது அமெரிக்கா எத்தனை கோடி கொடுடுத்தாலும் கவலையில்லை, “முஸ்லீம்-முஸ்லீம் தான் பாய்-பாய், மற்றவர்கள் காபிர்-காபிர்” தான்!
முந்தைய சயீது கைது-விடுதலை நாடகம்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீதுவின் தலைக்கு ரூ. 50 கோடி (ஒரு கோடி / 10 மில்லியன் டாலர்கள்) பரிசுத்தொகையை அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா நிறுவனரும், ஜமாத் உத் தவா தலைவருமான ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து, பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது. அப்பொழுது உலகரீதியில் ஏற்பட்ட கருத்து மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முதலியவற்றைக் கருத்திற்கொண்டு, நாடகம் போல கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீது பின்னர் விடுதலை செய்யப்பட்டான். அப்பொழுதுகூட, ஷா முஹமது குரேஷி என்ற பாகிஸ்தானிய வெளி உறவு அமைச்சர் மூல்தானில் நிருபர்களிடையே பேசும் போது, இந்தியா பிப்ரவரி 25, 2010 அன்று வெளியுறவு அதிகாரிகளிடம் நடந்த பேச்சுகளில் நிருபமா ராவ், சல்மான் பஷீரிடம் தீவிரவதி ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே இல்லை[4]. அவன் இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரிகிறான்.
பெயர் மாற்றம் செய்தால் ஜிஹாதி தீவிரவாதம் மறைந்து விடாது: இதையும் இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஓபராய் ஓட்டலில் தங்கியிருந்த ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியாயினர். அதிரடிப் படை வீரர்கள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதில் உயிர் பிழைத்த அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் தற்போது சிறையில் உள்ளான். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த அமைப்பு தற்போது ஜமாத் உத் தாவா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முழுவடும் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இஸ்லாம் பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.
இஸ்லாமிய சாச்சா-பதீஜா உறவுமுறையில் காபிர் இந்தியா என்ன செய்யும்? பாய்-பாய் என்றாலும், சாச்சா-பதீஜா என்றாலும், காபிர் இந்தியா ஒன்றும் செய்யமுடியாது. பாகிஸ்தானில் இந்த அமைப்பு தங்குத் தடையின்றி செயல்பட்டு வருகிறது. இவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பல முறை கோரப்பட்டும், அவன் மீதான உறுதியான குற்றச்சாட்டு இல்லை எனக் கூறி, அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதற்கிடையே, மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹபீஸ் சயீது (61) தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க அரசு தெரிவித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சயீதின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கி பற்றிய தகவலை தெரிவிப்பவர்களுக்கும் இரண்டு மில்லியன் டாலர் அளவுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வென்டி ஷெர்மான், டில்லியில் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை பலியிடும் சோனியா அரசு: ஆகமொத்தம், இந்தியர்களைக் கொல்லத்தான் அனைவரும் துடிக்கின்றனர். இதனை அறியாத இந்தியர்கள் சோனியா-காங்கிரஸை நம்பி வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தானில் இந்தியதாக்குதல்களுக்கு (இந்திய தூதரகத் தாக்குதல் உட்பட[5]) மக்கித்தான் பொறுப்பாளி, அவன் உமர் மற்றும் அல்-ஜவஹிரி கூடுதல்களில் பங்குக் கொண்டுள்ளான்[6]. தலிபானுக்கும், லஷ்கருக்கும் இடையில் தொடர்பாக இருந்து வேலைசெய்து வந்தான். 2005 மற்ரும் 2007ல் சதிக்கூட்டங்களில் பங்குகொண்டு லஷ்கர் பயிற்சி முகாம்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். 2007ல் மக்கி, திடீரென்று ஆப்கானிஸ்தானில் தலிபானின் குகையான அல்-ஜவஹரிக்கு சென்றுள்ளதில், ஒசாமா பின் லேடனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று அமெரிக்காவிற்கு இந்தியா தெரிவித்திருந்தது. அதற்கேற்றாற்போல, புரூஸ் ரெய்டல் என்ற அமெரிக்கப் பாதுகாப்பு வல்லுனரும் இந்த தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளார்[7]. மும்பை தாக்குதலில் சமீர் அலி என்பவனுடன் 2008ல் தொடர்பு கொண்டிருந்தான். இந்த அலி இந்தியாவின் “மிகவும் முக்கியமான தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளின்” பட்டியலில் உள்ளான். 2010லும், இந்தியாவிற்கு எதிரான காஷ்மீர் போராட்டங்கள், ஜெர்மன் பேக்கரி வழக்கு முதலியவற்றிலும் தொடர்புள்ளது.
ஹாவிஸ் சயீத் சொல்வதை கர்ஸாய் சொல்வது ஏன் காபிர்களுக்குப் புரியவில்லை? ஹாவிச் சயீதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அவன் பேசுவதே இப்படித்தான் இருக்கும்: “இன்ஸா அல்லா! இந்தியா காபிர்கள் நாடு, அமெரிக்கா, இஸ்ரேல் அடுத்து நமது இலக்கு இந்தியாதான்……………… ஜிஹாத் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஏற்கெனவே, அங்கு ஜிஹாத் தொடங்கிவிட்டது……………………….. நான்கு பக்கங்களிலிருந்தும் காபிர்கள் தாக்கப்படுகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் அவர்கள் ஒழிந்து விடுவார்கள்…………………………… அல்லாவின் படைகளின் முன்பு அவர்கள் துச்சம். இந்தியா இஸ்லாம் ஒளியில் வந்துவிடும், இருள் மறைந்து விடும். நமக்கு அல்லா வழிகாட்டுவாராக”. கர்ஸாயும் இதே பாஷையைத் தான் பேசியுள்ளார்.
அமெரிக்கா அறிவித்தால், இந்தியா தாக்கப்படுவது குறைந்து விடுமா? அமெரிக்கா பில்லியன்களில் பாகிஸ்தானுக்குக் கொடுத்து, இப்பொழுது மில்லியன்களைக் கொடுத்து தீவிரவாதத்தைத் தடுக்கப் போகின்றதாம்! அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு சென்றால் கூட, பத்தாண்டுகளுக்கு நான்கு பில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று கர்ஸாய் கூறுகிறார்[8]. பிறகு, இந்தியாவிற்கு ஏன் பில்லியன்களில் கொடுக்கக் கூடாது? அமெரிக்க அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வரவேற்புக்கு உரியது என்றார். விவரமான கோப்பில், சயீதின் தீவிரவாதத்தில் உள்ள பங்கு, ஆதாரங்கள் முதலியன கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேல் உண்மையை மறுத்தால், சயீதை யாரும் மன்னிக்க முடியாது. அப்பாவத்தில் இருந்து தப்பவும் முடியாது[9]. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு லஷ்கர் இ தொய்பாவுக்கு ஒரு பலமான அபாய எச்சரிக்கை என்றும் அவர் கூறினார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சயீது இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார். இதற்கு கிடுக்கிப்பிட போடும் வகையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
தேடப்பட்டு வரும் சயீது கொடுத்த பேட்டி: இதுகுறித்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள ஓட்டலில் சயீது நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில், “ஒசாமா பின்லேடனை போல என்னையும் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. நான் மலைகளிலும், குகைகளிலும் ஓடி ஒளிய மாட்டேன். நான் தங்கியுள்ள இடத்தை அமெரிக்காவுக்கு நானே தெரிவிப்பேன். என்னை கொன்றால் ஒரு கோடி டொலர் கிடைக்கும் என்றால், அந்த தொகையை பலுசிஸ்தானின் மேம்பாட்டுக்கு செலவிடட்டும். இந்தியாவின் கருத்தை ஏற்று, தொலைக்காட்சிகளில் செய்யப்படும் பிரசாரத்தை கொண்டு அமெரிக்கா என்னுடைய தலைக்கு வெகுமதி அறிவித்துள்ளது”, என்று தெரிவித்தார். இந்நிலையில் அல்ஜெஸீரா டி.வி.க்கு ஹபீஸ்சையத் அளித்த பேட்டி வருமாறு: “எதையும் முடிவு எடுப்பதில் அமெரிக்காவிற்கு அறிவும், ஆர்வமும் சற்று குறைவு, அல்லது எங்கள் இயக்கத்தைப்பற்றி அமெரிக்காவிற்கு இந்தியா தவறான தகவலினை அளித்திருக்கலாம். பாகிஸ்தானில் நேட்டோப்படை, வான் தாக்குதல் மீண்டும் துவக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது..இதற்கு எங்களின் எதிர்ப்பினை முறியடிக்க திரணியில்லை. இதன் காரணமாகத்தான் என் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.ஆனாலும் நாங்கள் குகைக்குள் ஓடிச்சென்று ஒளிந்து கொள்ளமாட்டோம். நேட்டோ படைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்”, என்றார்.
தீவிரவாதியை ஆதரிக்கும் யூசுப் ராஷா ஜிலானி, மற்றும் மறுக்கும் உள்துறை ரஹ்மான் மாலிக்: பிரதம மந்திரி யூசும் ராஷா ஜிலானி, அது முழுக்கவும் அவர்களது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தவறான சமிஞையை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்[10]. அவர் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசும் போது “ஹாவிஸ் சயீது சாஹப்” என்று மிகவும் மரியாதையாக அழைக்கிறார். உலகத்திலேயே, இப்படி ஒரு தீவிரவாதியை, ஆதரிக்கும் பிரதம மந்திரி இவராகத்தான் இருக்க வேண்டும். இதற்கிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக் கூறுகையில், “அமெரிக்க அறிவித்துள்ள பரிசுத்தொகை குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. எனினும் அவர் வீட்டுக்காவலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட் மூலம் ஜாமினில் உள்ளார். இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. சயீதைக் காக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அவரைக் கைது செய்ய மாட்டோம்[11]. அவர் மீது எந்த ஆதாரங்களும் இல்லை”, என்றார்[12]. சர்தாரியிடம் மன்மோகன் ஆலோசிக்க வாய்ப்பு: வரும் 8-ம் தேதி இந்தியா வர உள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரி,பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. அப்போது ஹபீஸ் சையத் குறித்து இருவரும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்களை ஒன்றும் ஆட்டமுடியாது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆர்பாட்டம்: முசபராபாதில், இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூடி அமெரிக்கக் கொடியை எரித்துள்ளனர்[13]. “அல்-ஜிஹாத், அல்-ஜிஹாத்” என்று கத்திக்கொண்டே ஆர்பாட்டம் நடத்தினர்[14]. முசபராபாத், பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள காஷ்மீரின் தலைநகர் ஆகும். இங்கு, அமெரிக்காவை எதிர்த்து ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது மூலம், இந்தியாவால் ஒன்றும் செய்யமுடியாது என்று தீவிரவாதிகள் மெய்ப்பித்துள்ளார்கள். அதனை பாகிஸ்தான் ஆதரிப்பது தெரிந்த விஷயமே. இதே நேரத்தில் ஜிலானியை பேச்சுவார்த்தைகளுக்கு கர்ஸாய் அழைத்துள்ளதை கவனிக்கவேண்டும்[15].
வேதபிரகாஷ்
07-04-2012
[2] “If Pakistan is attacked, and if the people of Pakistan need help, Afghanistan will be there with you,” Mr. Karzai said. “Afghanistan is a brother.”
[3] Afghan Presdident Karzai’s remarks in an interview that his country would stand by Pakistan in case of a conflict with the United States or India have created a lot of stir though he had predicated them with the proviso: ‘if attacked’. Karzai was apparently trying to calm Pakistan’s concerns over the strategic agreement he signed with India that included provision for military training to Afghan troops much to Pakistan’s discomfort. He had also obliquely accused Pakistan of using Taleban as instrument of policy to attack Kabul from sanctuaries in the tribal areas. The statement of support to Pakistan in case of US or Indian aggression was taken lightly in Islamabad and did not evoke any comment. But the explanation coming from Presidency in Kabul is odd. It said the president only meant to provide shelter to refugees who may flee from tribal areas in case of attack thus reciprocating similar gesture by Pakistan after Soviet invasion.
[7] Indian agencies had warned their US counterparts about a surprise and sudden visit by al-Zawahiri to Islamabad in mid-2007, even suggesting that it could be linked to Osama bin Laden’s whereabouts, and it is Makki who is said to have facilitated this visit at the behest of Hafiz Saeed. US security expert Bruce Riedel, who is known to be close to the Obama administration, has said that Saeed was in touch with Osama himself through a courier right until his death last year.
[10] “This is purely an internal issue of Pakistan and the US has been asked to provide evidence [against Saeed], if they have any, to the Pakistani government… This was also conveyed to the US deputy secretary of state that when new rules of engagements are being defined, they should send a positive signal to Pakistan,” Gilani told the joint sitting of parliament.
http://paktribune.com/news/US-bounty-on-Saeed-a-wrong-signal-PM-Gilani-248887.html
[14] n Muzaffarabad, the capital of Pakistan-administered Kashmir, around 500 activists shouted “Al-Jihad, Al-Jihad (holy war)” as they marched on the city and set fire to a US flag in a main square
[15] Rezaul H Laskar, Karzai invites Gilani for talks on reconciliation process, Thu, 05 Apr 2012 05:15:21 GMT
p>Islamabad, Apr 4 (PTI) Afghan President Hamid Karzai today invited Pakistan Prime Minister Yousuf Raza Gilani to visit Kabul for talks on the reconciliation process in Afghanistan. Karzai extended the invitation when he telephoned Gilani to express his concern over the emergency landing made by the premier”s aircraft shortly after taking off from a military airbase in Rawalpindi yesterday. The Afghan President “extended an invitation to the Prime Minister to visit Kabul as the weather has become considerably pleasant”, said a statement from Gilani”s office. Gilani accepted the invitation and said he would soon visit Kabul. “We would also review the progress made toward political reconciliation in the context of the last bilateral meeting held in Islamabad,” the premier said. Pakistan is keen on playing a larger role in the endgame in Afghanistan. Acting on a request from Karzai, Gilani recently appealed to all militant factions in Afghanistan to join the peace process in the neighbouring country.http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=5992738
பிரிவுகள்: ஃபத்வா, அடி உதை, அடிப்படைவாதம், அடையாளம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்லா, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊடக வித்தைகள், எரிப்பு, எல்லை, ஔரங்கசீப், கராச்சி திட்டம், கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காந்தஹார், காந்தாரம், காயிதே மில்லத், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, கைது, கையெறி குண்டுகள், கொடி, கொடி எரிப்பு, கொடியேற்றம், கொலை, சமரசப்பேச்சு, சரீயத், சரீயத் சட்டம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜஹல்லியா, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தடை, தமுமுக, தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தீவிரவாதிகளுக்கு பணம், துபாய், துப்பாக்கி, தேசியக் கொடி, நிகாப், நிக்கா, பர்கா, பர்கா போராட்டம், பர்தா, பர்தா அணிவது, பலுச்சிஸ்தானம், பலுச்சிஸ்தான், பின்லேடனின் குடும்பம், பின்லேடனின் மனைவி, புத்தகம், புனிதப் போர், பைப் வெடிகுண்டு, போதை, போதை மருந்து, முஜாஹித்தீன், முஸ்லீம் சட்டம், வந்தே மாதரம், வன்முறை
Tags: அமெரிக்கா, ஆப்கன், இந்தியா, கசாப், கர்சாய், கர்ஷாய், கர்ஸாய், கஸப், காபிர், குரேஷி, கொலை, கொலைவெறி, சயீது, சயீத், சாச்சா, சைத், சையது, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தலிபான், தாலிபான், தாவூத் ஜிலானி, பதீஜா, பாய், மச்சான், மாமன், மாமா, முகமது குரேஷி, முஜாஹித்தீன், மும்பை, முஹமது குரேஷி, மைத்துனன், ஷா முஹமது குரேஷி, ஹாவிஸ், ஹாவிJ
Comments: Be the first to comment
நவம்பர் 12, 2011
மும்பை வெடிக்குண்டு ஜிஹாதி கொலைக்காரன் தாவூத் இப்ராஹிம் தன்னுடைய சமாதிக்கு மும்பையில் இடம் தேடச் சொல்லியுள்ளானாம்!
நேருவின் இறுதி ஆசையும், தாவூதின் இறுதி ஆசையும்!: பள்ளியில் படிக்கும் போது, நேருவின் இறுதி ஆசை என்று ஏதோ படித்ததாக ஞாபகம். அதில் நேரு தான் இறந்தால், தனது உடல் இந்தியாவிற்கு எடுத்து வரவேண்டும், உடல் எரிக்கப் படவேண்டும், அஸ்தி கங்கையில் கரைக்கப்பட வேண்டும், இந்தியா முழுவதும் தூவப்படவேண்டும் என்றேல்லாம் குறிப்பிட்டதாக ஞாபகம். விபரீதமான ஆசைதான். அப்பொழுது இப்படி இறந்த மனிதனின் சாம்பல் தூவப்பட்டால் சுற்றுநிலை மாசு ஏற்படுமா என்றேல்லாம் யாரும் யோசிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. நேருவைப் பின்பற்றும் அல்லது செக்யூலரிஸ போர்வைப் போர்த்திக் கொண்டு உலாவரும் அறிவுஜீவிகளும் பிறகு அறிந்து வெட்கப்படவில்லை. அதுபோல இந்த தாவூத் இப்ராஹிம் என்ன பெரிய சுதந்திரத் தியாகியா, இந்திய அரசியல்வாதியா, பிரதம மந்திரியா, முக்கியமான ஆளா? பிறகு, இவனுக்கு ஏன் இந்த ஆசை? உண்மையில் தேடப்படும் குற்றவாளியான அவன், இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் கேட்டுள்ள 22 தீவிரவாதிகளில் அவனும் ஒருவன். கசாப்பைப் போல அவனுக்கும் தூக்குத்தண்டனைதான் கொடுக்கப்படும். ஆனால், இறப்பின் மூலம் தப்பித்துக் கொள்ள முயல்கிறான் போலும். இறந்த பிறகு பட்டங்களைக் கொடுத்து கௌரவிப்பது போல, இவன் இறந்தாலும், அவனுக்குக் கொடிய தண்டனைக் கொடுக்கப் பட வேண்டும். அப்பொழுதுதான், தீவிரவாத-பயங்கரவாத அரக்கர்களுக்கு பயம் வரும். செத்தப் பிறகு நரகத்திற்குச் செல்லக் கூடிய இந்த கொடியவர்களுக்கு, இந்தியா இடந்தரலாகாது.
கொலைக்காரன், தீவிரவாதி, பயங்கரவாதி: செத்தபிறகும் பிரச்சினை கிளப்ப தீர்மானமாகவே உள்ளான் போலும் வெடிகுண்டு கொலைக்காரன், ஜிஹாதி தாவூத் இப்ராஹிம். உண்மையிலேயே நம்பிக்கையுள்ள மனிதனாக இருந்திருந்தால் பாவத்தைக் கழுவ வருந்தியிருக்க வேண்டும். ஆனால், சாவிற்குப் பிறகு தீவிரவாத-பயங்கரவாத சின்னமாக இருக்க முடிவு செய்திருப்பது, இந்திய மக்களுக்கு, குறிப்பாக மும்பை மக்களுக்கு பெரிய அபாயமான விஷயமாகும். தனது மரணத்திற்கு பின்னர் தனது உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும் என்று பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன[1]. .அந்த அளவிற்கு பிறந்த மண்ணுடன் ஐக்கியம் ஆகவேண்டும் என்று நினைப்பவன், எப்படி அந்த மண்ணிற்கு தொரோகம் விளைவித்திருப்பான்? அப்பாவி மக்களைக் கொன்றிருப்பான்? கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்புகளை நடத்தி 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்து[2], அச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத், அத்தாக்குதலுக்கு பின்னர் மும்பையிலிருந்து தப்பி சென்று பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்துவருகிறான்[3]. அவனை பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் பாதுகாத்து வருகிறது[4].
இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைத்தவன், சீர்குலைத்து வருபவன்: ஏதோ இந்த தாவூத் இப்ராஹிம் பெரிய மனிதனைப் போல ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. எதிர்மறை விளம்பரத்தின் மூலம், மக்கள் மனத்தில் பதிய வைக்கிறது. சமயத்தில் முஸ்லீம்கள் அவனை தியாகி என்றும் நினைப்பர், நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவன் நினைவாக திரைப்படம் எடுக்கவும் ஆரம்பித்துவிட்டனர்[5]. கொலை[6], கள்ளக்கடத்தல், கிரிக்கெட் சூதாட்டம், போதை மருந்து வியாபாரம்[7], மும்பை திரைப்படத் தொழிலை, ஏன் இந்தியத் திரைப்படத்தொழிலையே[8] ஆட்டிப் படைப்பவன், பல நடிகைகளின் வாழ்க்கையை நாசமாக்கிவன், விபச்சாரம் பெருகக் காரணமானவன், மொத்த ஹவாலா போக்குவரத்திற்கும் கணிசமான அளவிற்குக் காரணமானவன், இதையெல்லாம் தவிர பத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத-பயங்கரவாதக் கூட்டங்களுக்கு பலவகைகளில் உதவி வருபவன்[9]. பிறகு அவனுக்கு என்ன இந்தியாவின் மீது, தான் பிறந்த மண்ணின் மீது ஆசை?
நம்பிக்கையாளனான ஜிஹாதி ஏன் சாவைக்கண்டு பயப்பட வேண்டும்? இந்நிலையில், கடந்த மே மாதம் 2010 பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை, அமெரிக்க படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றதையடுத்து, தாமும் அவ்வாறு வேட்டையாடப்படலாமோ என்ற அச்சத்தில், தாவூத் கராச்சியிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. நம்பிக்கையாளனான ஜிஹாதி சாகத்தான் விரும்புவானேத் தவிர, சாவைக்க் அண்டு பயப்பட மாட்டானே? ஆக சாவிலும் இந்தியாவை பாதிக்க விரும்புகிறான். ஆனால் அவன் தொடர்ந்து கராச்சியிலேயே ஐஎஸ்ஐ-யின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்துவருவதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், கராச்சியிலேயே அவனை புதைத்து விடலாமே? இந்நிலையில் தற்போது 56 வயதாகும் தாவூத்திற்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்ததை தொடர்ந்து அவன், தனக்கு விரைவில் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது இரண்டாவது மகள் திருமணத்தை, திட்டமிட்டதற்கு ஓராண்டுக்கு முன்னரே கடந்த ஆண்டு 2010 நடத்தி வைத்தான். தாவூத், தனது மூத்த மகளை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாந்தத் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளான். மகனுக்கு, பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளான். இந்நிலையில் சமீப நாட்களாக தாவூத்தின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ளதாகவும், அவன் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு தாவூத் வேண்டுமா? பொதுவாக தேடப்படும் தீவிரவாதி, பயங்கரவாதி, மறைந்து வாழும் குற்றவாளியை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் பரிசு என்றேல்லாம் அறிவிப்பர்கள். இந்நிலையில், தனது இறுதி நாட்கள் நெருங்குவதை உணர்ந்துள்ள தாவூத், தனது மரணத்திற்கு பின்னர் தனது உடலை தாம் தாதாவாக கோலோச்சிய மும்பையிலோ அல்லது தமது பிறந்த ஊரான மும்பையை அடுத்துள்ள ராய்காட் மாவட்டத்தின் கேத் நகரிலோ புதைக்க வேண்டும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது[10]. இது குறித்து மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு தலைவர் ஹிமான்ஷு ராஜிடம் இது குறித்து கேட்டபோது, தங்களுக்கும் இது குறித்த நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்[11]. தாவூத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா, நீண்ட காலமாக பாகிஸ்தான் அரசிடம் கோரி வருகிறபோதிலும், அவன் தங்கள் நாட்டில் இல்லை என்று அந்நாடு மறுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பிறகு பிணத்தை இந்தியாவிற்குக் கொடுப்போம் என்றால் என்ன அர்த்தம்?
வேதபிரகாஷ்
11-11-2011
[6] ஆகஸ்ட் 17, 1997ல் டி-சீரிஸ் குல்ஸன் குமார் சுட்டுக் கொள்ளப்பட்டது, திரைப்படத்துறையினரை கப்பங்கட்டச் சொல்லி பயமுறுத்திய செயல்தான்!
In a breakthrough in the Gulshan Kumar murder case, the city police claimed that Abdul Rauf Dawood Merchant, an aide of the underworld don, Dawood Ibrahim, today “confessed” to having killed the music mughal three years ago.
http://hindu.com/2001/01/10/stories/0210000a.htm
[8] அவனுடையக் கூட்டாளிகள் இன்றும் தமிழ் திரைப்படத்துறையில் தமிழ் நடிகர்களாக, தமிழச்சி நடிகைகளாக மறைந்து வாழ்கின்றனர். பங்கை சேகரித்து அவனுக்குத் தப்பாமல் அனுப்பி வைக்கின்றனர். இதைப் பற்றி எந்த பச்சைத் தமிழனுக்கும் அக்கரையில்லை, கேட்கத் துப்பில்லை.
[9] Dawood is among the 50 terrorists India wants Pakistan to hand over. Apart from his hawala network in India, his involvement is also suspected in providing logistics to the 10 terrorists who attacked Mumbai in 2008.
[10] Zee News reported According to Zee News, the 56-year-old “Karachi-based don”, who has had two massive heart attacks in the past two years, is being monitored round-the-clock by a team of doctors and his family members. However, according to the report, Dawood is already busy planning his end. He has instructed his men to find a suitable place for his burial in Mumbai or in his native town Khed in Ratnagiri district.
http://www.pakistantoday.com.pk/2011/11/dawood-ibrahim%E2%80%99s-%E2%80%98days-numbered%E2%80%99/
பிரிவுகள்: அபு சலீம், அபு ஜிண்டால், அரேபிய ஷேக்கு, அரேபியா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்லா, ஆப்கானிஸ்தான், இணைதள ஜிஹாத், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இமாம், இமாம் கவுன்சில், இரட்டை வேடம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உறவினர், கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், காஃபிர்கள், காந்தஹார், காஷ்மீர், குடும்ப திவிரவாதம், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரூரம், குல்லா, குல்ஷன்குமார், கொலை, கொலை வழக்கு, சவூதி அரேபியா, சுன்னி, சுன்னி சட்ட போர்ட், சுன்னி-ஷியா, சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தாவூதின் காதலி, தாவூத் இப்ராஹிம், தியாகப் பலி, தியாகம், துபாய், துப்பாக்கி, நக்மா, பலுச்சிஸ்தான், பாகிஸ்தான், போதை, போதை மருந்து, மதகலவரம், மும்தாஜ், முஸ்லீம், ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி
Tags: அபாயம், இப்ராஹிம், கல்லறை, சமாதி, சாவு, தாவூத், தாவூத் இப்ராஹிம், பாதுகாப்பு, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மும்பை
Comments: 3 பின்னூட்டங்கள்
ஒக்ரோபர் 8, 2011
பாகிஸ்தான் எல்லையில் கோடிக்கணக்கில் போதைப் பொருள் பிடிப்பட்டது: ஜிஹாதிகள் போதை மருந்துடன் விளையாடுவதேன்?
போதை மருந்து குழுக்கள் மாறி அமைந்துள்ள நிலை: ஒப்பியம் என்ற போதைப் பொருளைத் திருட்டுத் தனமாக உற்பத்தி செய்வதில் ஆப்கானிஸ்தான் முதலிடம் வகிக்கிறது. மயன்மார் / பர்மா இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்குள்ள தீவிரவாத குழுக்கள் இஸ்லாம், மாவோயிஸம் என்று பிரிந்து இருந்தாலும், போதை மருந்து விஷயத்தில் ஒன்றாகவே வேலை செய்து வருகின்றன[1]. தாலிபான், லஸ்கர்-இ-தோய்பா போன்ற ஜிஹாதி குழுமங்கள் “தங்க முக்கோணம் / தங்கப் பிறை” (Golden Triangle[2] / crescent[3]) என்ற போதை மருந்து உற்பத்தி, கடத்தல் மற்றும் வியாபாரங்களுக்கு பெயர் போன இடத்திலிருந்து செயல்பட்டு வருவது தெரிந்த விஷயமே. ஜிஹாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பிரதேசம், ஒசாமா இறப்பிற்குப் பிறகு, பிளவு பட்டு தனித்தனியாக செயல்பட்டு வர ஆரம்பித்துள்ளன. காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டு, புதிய அரசை உருவாக்க அதில் ஒரு கூட்டம் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. போதை மருந்தும், ஆயுத விற்பனை மற்றும் தீவிரவாதம் முதலியவை சேர்ந்தே செயல்படுகின்றன. எல்.டி.டி.இயின் ஆதிக்கம் குறைந்த பிறகு, ஜிஹாதி குழுமங்கள் முழுவீச்சில் இந்த தொழிலில் இறங்கியுள்ளனர்.
ஜிஹாதிகளின் இந்தியாவில் நடத்தும் சதி திட்டங்கள்: இந்தியாவில் போதை மருந்தை பரப்புவது, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது, தீவிரவாதத்தை ஊக்குவிப்பது என்பதெல்லாம் ஒன்றுக்கு ஒன்றாக பிணைந்து ஜிஹாதிகள் செய்து வருகின்றன. இது வரை இல்லாத அளவிற்கு ஹெராயின் என்ற போதைபொருளுடன் இந்திய எல்லைக்குள் புக முற்பட்ட கடத்தல்காரர்களை எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். இதில் கடத்தல்காரர்கள் விட்டு சென்ற 27 கிலோ நார்காட்டிக் என்ற போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது[4]. ஹெராயின் பொட்டலங்கள் பாகிஸ்தான் எல்லையிலிருந்து கடத்தல்காரர்களால் வீசப்பட்டன என்றும் செய்திகள் கூறுகின்றன[5]. வ்இதைத் தவிர 1.98 லட்சம் இந்திய கள்ளநோட்டுகள், சைனாவில் தயாரிக்கப் பட்ட துப்பாக்கி, 20 சுற்று வெடிபொருட்கள் முதலியவையும் கைப்பற்றப் பட்டன[6]. பாகிஸ்தான் – சீனா சம்பந்தம் இதில் நன்றாகவே வெளிப்படுகிறது[7].
ஜிஹாதிகள் போதை மருந்துடன் விளையாடுவதேன்? பொதுவாக இஸ்லாமிய ஜிஹாதிகள் போதை மருந்துகளில் ஈடுபடக்கூடாது, ஈடுபட மாட்டார்கள் என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள், ஆனால், இவர்கள், இத்தகைய தொழிலில் ஈடுபடுவது, வேறு உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்திய – பாக்., எல்லை பகுதியான அட்டாரி பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், இந்நேரத்தில் சிலர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டதும் உஷாராயினர். தொடர்ந்து துப்பாக்கியால் சுடத்துவங்கியதும் கடத்தல்காரர்கள் பாக்.எல்லைக்குள் திரும்பி விட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தப்பகுதியில் அவர்கள் கொண்டு வந்த நார்காடிக் என்ற போதைபொருள் 27 கிலோ போட்டு விட்டு சென்று விட்டனர். இதன் சர்வதேச மதிப்பு 135 கோடி ஆகும்[8] . இது குறித்து பி.எஸ்.எப்., இன்ஸ்பெக்டர் பவான்சவுத்திரி கூறுகையில்; “இது போல் இந்த அளவிற்கு போதை பொருள் இது வரை கைப்பற்றியதில்லை. தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்”, என்றார். கடந்த அக்., 4 ம் தேதி ரூ. 75 கோடி மதிப்பு கொண்ட 15 கிலோ ஹெராயின் கைப்பற்றபட்டது என்பது குறிப்பிடத்தக்கது[9]. 22 லட்சம் இந்திய கள்ளநோட்டுகளும் பிடிபட்டன[10].
வேதபிரகாஷ்
08-10-2011
[2] The Golden Triangle is one of Asia‘s two main illicit opium-producing areas. It is an area of around 367,000 square miles (950,000 km2) that overlaps the mountains of four countries of Southeast Asia: Burma, Vietnam, Laos, and Thailand. Along with Afghanistan in the Golden Crescent and Pakistan, it has been one of the most extensive opium-producing areas of Asia and of the world since the 1920s. Most of the world’s heroin came from the Golden Triangle until the early 21st century when Afghanistan became the world’s largest producer.
[6] In one of the biggest seizures in the last decade, the Border Security Force (BSF) personnel seized 27kg heroin valued at Rs 135 crore in international market, Rs 1.98 lakh fake Indian currency notes, one Chinese made pistol and 20 cartridges on the intervening night of October 5 and 6 from two places on the India-Pak international border in Punjab.
பிரிவுகள்: ஒப்பியம், போதை, போதை மருந்து, ஹெராயின்
Tags: ஒப்பியம், தங்க முக்கோணம், தங்கப் பிறை, தாலிபான், நார்காடிக், பர்மா, பாகிஸ்தான், மயன்மார், லஸ்கர்-இ-தோய்பா
Comments: 2 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்