Archive for the ‘பொது சிவில் சட்டம்’ category

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக், நிக்கா ஹலாலா: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஆதரவு-எதிர்ப்பு (3)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக், நிக்கா ஹலாலா: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஆதரவுஎதிர்ப்பு (3)

Modes of talaq

ஆதரவுஎதிர் பிரச்சாரங்கள், முஸ்லிம்கள் செய்து வருவது: முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்று அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. ஆனால், அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது. பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[1].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறியதாக ஒரு செய்தி. ஆனால், தெரிவித்த உதவி ஜனாதிபதி மனைவி சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[2], என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். இதிலிருந்து, முஸ்லிம்களில் சிலர், சில இயக்கங்கள், முத்தலாக்கை ஆதரித்து, அவ்வாறே பெண்கள் கஷ்டப்பட்டு, அவதிபட்டு, ஜீவனாம்சம் இல்லாமல் அல்லது குறைவாக வாங்கிக் கொண்டு, குழந்தை-குட்டிகளோடு இருக்க வேண்டும் என்று சொல்வது போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகளும் அமைதி காக்கின்றன.

Modes of talaq -ul - whatsup etc

இந்தியாவில் உள்ள சிவில்கிரிமினல் சட்டநிலைகள்: நாட்டில் பல விவகாரங்கள், விவரங்கள், பிரச்சினைகள், சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவை ஒரே மாதிரியாகத்தான் கையாளப்பட்டு வருகின்றன.  பொது இடங்கள், சாலைகள் போன்ற இடங்களில் எல்லோரும் பொதுவாக-சமமாக பாவிக்கப் படுகிறார்கள். அதாவது, சிவில்-கிரிமினல் சட்டங்கள் ஒன்றாக இருந்தால் தான், மக்கள் அனைவரையும் சமமாக பாவிக்க முடியும், சட்டமுறை அமூலாக்க முடியும். பொதுவாக குடும்பம் என்றாலே, தாய், தந்தை, குழந்தை என்று தான் உள்ளது. குழந்தை தனது தாய், தந்தை யார் என்று அறிந்து தான் வளர்கிறது. இப்பந்தம், சொந்தம், உறவுமுறை பிறப்பு சான்றிதழ் முதல், அனைத்து ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், திடீரென்று தாய், தந்தை மாறிவிட்டால், அதாவது விவாக ரத்தாகி விட்டால், குழந்தைக்கு குழப்பம் ஏற்படுகிறது. வளர்ந்த மகன் அல்லது மகளுக்கு பிரச்சினை உண்டாகிறது. தாய், தந்தை மறுவிவாகம் செய்து கொண்டு விட்டால், அக்குழப்பம் பெரிதாகிறது. தாய் ஒருவர், தந்தை வேறு அல்லது தந்தை ஒருவர், தாய் வேறு என்று குறிப்பிட்டு, முந்தைய-பிந்தைய ஆவணங்கள் இருக்கும் போது, பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்கே, வருத்தம் ஏற்படுகிறது. சிந்தனை போராட்டம் ஏற்படுகிறது. இது பொதுவாக உள்ள நிலை.

Modes of talaq -ul - biddat

முஸ்லிம்களின் பலதார முறை, விவாக ரத்து, குடும்பப் பிரச்சினைகள்: ஆனால், மதரீதியில், இஸ்லாமியர், ஒரே நேரத்தில் நான்கு மனைவிகள் இருக்கலாம் என்றால், அந்நேரத்தில், ஒரு நதை மூலம், நான்கு தாய்களுக்கு குழந்தைகள் பிறக்கலாம். ஆனால், தலாக்-தலாக்-தலாக் என்ற விவாக ரத்தால், ஒரு மனைவி விவாகரத்து செய்யப்பட்டு, அவள், இன்னொரு ஆணை திருமணம் செய்து கொண்டால், அவளுக்கு அந்த ஆணின் மூலமும் இன்னொரு குழந்தை பிறக்கலாம். ஆனால், அவ்விரு குழந்தைகளும் சந்தித்துக் கொண்டால், தமக்கு தாய் ஒருவர் தான், ஆனால், தந்தை வெவ்வேறானவர்கள் என்று தெரிய வரும். இது இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மனைவி என்று நீண்டால், குழந்தைகள் கதி அதோகதிதான். குழந்தைகள் வளர-வளர, சமூகத்தில் அவர்கள் பல விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும். இதனால்,  பாதிப்பும் ஏற்படலாம். மேலும், ஒரே நேரத்தில் நான்கு என்பதில்லை, இரண்டு என்றால் கூட, விவாகரத்தின் நிலைமை பாதிப்பதாக உள்ளது. இந்துக்களில் பலதார முறை, முஸ்லிம்களை விட அதிகமாக இருக்கிறது என்று வாதிக்கின்றனர். ஆனால், 85%ல் 15% என்பதும் 15%ல் 85% என்பதிலும் உள்ள நிதர்சனத்தை கவனிக்க வேண்டும், ஏனெனில், எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை வைத்து சமூக சீர்திருத்ததிற்கு செல்ல வேண்டுமே தவிர, அங்கும் உள்ளது, அதனால், இங்கும் இருக்கட்டும் போன்ற வாதம் சரியாகாது.

Muslim women oppose talaq etc

நிக்கா ஹலாலா போன்ற முறைகள்[3]: முகமதிய விவாகரத்து, மறுமணம் போன்றவற்றில், மதரீயில் உள்ளவை, நடைமுறையில் பிரச்சினையாக, ஏற்றுக்கொள்ளமுடியாத நிலைகளில் உள்ளன. உதாராணத்திற்கு, நிக்கா ஹலாலா என்பதை எடுத்துக் கொண்டால், ஒரு ஆண், தனது முந்தைய மனைவியை திருமணம் செய்ய விருப்பப் பட்டால், முதலில் அவளை இன்னொரு ஆணுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். பிறகு, அவள் அவன் கூட சேர்ந்து வாழ வேண்டும். உடலுறவு கொண்ட பிறகே, அவள் விவாக ரத்து பெற முடியும். அவ்வாறான பிரிந்திருக்கும் கலத்தை இத்தத் எனப்படுகிறது. இதெல்லாம் நடந்த பிறகே, அவன் / முதல் கணவன் அவளை திருமண செய்து கொள்ள முடியும். இந்த உறவுகளின் முடிவுகளைப் பற்றி சிந்தித்து, விவாதிக்க முடியாது. பிறக்கும் குழந்தைகளின் நிலை பற்றியும் பேச முடியாது.

முஸ்லிம்கள் அல்லாத பெண்களுக்கு பிரிந்து வாழ்வதால் / விவாக ரத்தாகி தனியாக வாழ்ந்தால் ஏற்படும் தொல்லைகள், சங்கடங்கள், நஷ்டங்கள்: இதே பிரச்சினை மற்ற மதத்தினருக்கும் ஏற்படலாம். ஆனல், சட்டப்படி கட்டுப்படுத்தப் படுவதால், அத்தகைய பிரச்சினை மிகக்குறைவாகவே உள்ளது அல்லது காணப்படுவதில்லை எனலாம். பொதுவாக, இந்து பெண்கள், கணவன் விவாக ரத்தானாலோ, பிரிந்து வாழ நேர்ந்தாலோ, குழந்தையை தன்னோடு, எடுத்து வந்து வளர்க்கிறாள். குழந்தை வளர்ந்து பெரியவனா/ளாகும் வரை அவன்/அவள் பல இடங்களில், பல நேரங்களில் உன்னுடைய தந்தை யார் என்றால், பெயரைத்தான் சொல்ல முடிகிறதே தவிர ஆளைக் காட்டமுடிவதில்லை. பெண்ணிற்கும் / மனைவிக்கும் அதைவிட கொடுமையான நிலைமை, குடும்பத்தார், சமூகத்தார் என்று எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை. அதற்கு, அவளது குடும்பத்தினர் உதவுகின்றனர். இவ்வாறு, அந்த சோகமானது மறைக்க/மறக்கப் படுகிறது.

Muslim women oppose , PROTEST talaq etc

முஸ்லிம் பெண்கள் அதிகம் பாதிக்கப் பட்டதால், இன்று போராட வந்து விட்ட நிலை: ஆனால், முகமதிய பெண்கள், அதிக அளவில் பாதிக்கப் பட்டதால், அவர்கள் இன்று துணிச்சலாக உரிமைகள் கேட்டு போராட ஆரம்பித்து விட்டனர். உச்ச நீதிமன்றத்தில், வழக்கும் பதிவு செய்து விட்டனர். அதன் தொடர்ச்சிதான், இப்பொழுதைய நிகழ்வுகள், மேலே குறிப்பிடப்பட்ட விவரங்கள். இதற்குள்,  அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட இயக்கம் [AIMPLB ] இவ்விசயத்தில், 90 நாட்களில் / மூன்று மாதங்களில் தாங்களே, முத்தலாக் இல்லாமல் செய்து விடுகிறோம் என்று அறிவித்துள்ளது[4]. முத்தலாக், நிக்காஹ் ஹலாலா மற்றும் பலதாரமுறை இஸ்லாமிய பெண்களின் சமத்துவம் மற்றும் சுயமரியாதைகளை மீறுவதாக உள்ளதாகவும், அவை, அரசியல் ந்ர்ணய சட்டப் பிரிவு 25(1)  [Article 25(1) of the Constitution] ற்கு புறம்பாக இருப்பதாகவும், 10-04-2017 அன்று உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது[5].  உச்சநீதி மன்றம் இதனை ஏற்றுக்கொண்டது[6]. அடுத்த விசாரணை மே மாதம்.11, 2017 அன்று எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தது[7]. மேலும், உபியில், முத்தலாக் செய்யப்பட்ட, ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது[8]. பஸ்தி மாவட்டம், திகாவுரா கிராமம், பைக்வாலியா போலீஸ் ஷ்டேசன் கீழ்வரும் இடத்தில், இது நடந்துள்ளது[9].

© வேதபிரகாஷ்

11-04-2017

mO UNIFORMITY ON ucc

[1] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[2] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[3] Nikah halala is a practice intended to curb incidence of divorce under which a man cannot remarry his former wife without her having to go through the process of marrying someone else, consummating it, getting divorced, observing the separation period called Iddat and then coming back to him again.

http://www.firstpost.com/india/triple-talaq-impacts-dignity-of-muslim-women-denies-fundamental-rights-centre-to-supreme-court-3378828.html

[4] ZeeNews, Triple talaq: AIMPLB says will do away with practice in 18 months, no need for govt intervention, By Zee Media Bureau | Last Updated: Tuesday, April 11, 2017 – 10:48.

[5] http://zeenews.india.com/india/triple-talaq-aimplb-says-will-do-away-with-practice-in-18-months-no-need-for-govt-intervention-1994931.html

[6] The Hindu, Polygamy is not a religious practice, government tells Supreme Court, NEW DELHI APRIL 11, 2017 00:58 IST UPDATED: APRIL 11, 2017 12:49 IST.

[7] http://www.thehindu.com/news/national/polygamy-is-not-a-religious-practice-government-tells-sc/article17915070.ece

[8] Financial Express, Triple Talaq victim hangs herself in Uttar Pradesh, another sits on dharna outside in-laws’ house, By: FE Online | Noida | Updated: April 11, 2017 2:01 PM.

[9] http://www.financialexpress.com/india-news/shocking-triple-talaq-victim-hangs-herself-in-yogi-adityanaths-uttar-pradesh/623732/

 

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

ஓகஸ்ட் 26, 2016

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

Khader Basha arrested for sham marriages and fraud
போலித்திருமணங்கள் ஏன், எப்படி, எவ்வாறு செய்யப்பட்டன?
: ஒரு முஸ்லிம் எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? ஒரு நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்று இஸ்லாமிய சட்டம் உள்ளது. பிறகு, காதர் பாட்சா எப்படி எட்டு திருமணங்களை செய்து கொண்டான். அப்படியென்றால், திருமணம் நடந்தெல்லாம் போலி ஆவணங்கள் மூலம் நடந்ததா? அதே இமாம் அல்லது வேறு இமாமால் கொடுக்கப்பட்டதா? இங்குதான், போலி நிக்காஹ் நாமாக்கள் எப்படி ம்கொடுக்கப்பட்டன, இத்திருமணங்களை போலியாக செய்ய வேண்டிய அவசியம் என்ன, இவையெல்லாம், நகை-பணம் சுருட்ட செய்யப்பட்டத் திருமணங்களா அல்லது வேறு உள்நோக்கம் உள்ளதா? அப்பெண்கள் வாழ்க்கை சீரழிந்தது மற்றும் அக்குழந்தைகளின் எதிர்காலமும் பிரச்சினையாகிறது என்பதை கவனிக்க வேண்டும். நாளைக்கு பள்ளிகளில் சேர்க்கும் போது, தந்தையைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அப்பொழுது, தாய்-குழந்தை இருவருக்குமே சொல்லொணா துயர் ஏற்படும். அத்தகைய கஷ்டங்களை மீள சுமார் 15 வருடங்கள் ஆகும். ஆகையால், இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும்.

Madrassa where Salamiya met Taslim-fake nikhanama

மதரஸாக்களில் திருமண தரகும், போலி நிக்காநாமா வழங்கிய இமாமும்: சலாமியா பானுவின் புகாரில் பல விசயங்கள் வெளிவருகின்றன:

  1. ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவிதஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. [தஸ்லிமா இத்தகைய பெண்களை குறிவைத்து வேலை செய்கிறாளா?]
  2. கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன் [மதரஸாவில் பேசுவதை விட, வீட்டில் கூப்பிட்டு பேசியிருக்கலாமே? மதரஸாக்களில் திருமண தரகு வேலை கூட நடக்கிறாதா என்பது தெரியவில்லை].
  3. அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[1] [வரன் பார்ப்பதற்கு ஒரு லட்சம் கொடுப்பார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. இல்லை திருமணம் செய்து கொண்டால், மதன் மூலம் பணம் கிடைக்கும் என்பது போல உள்ளதா?].
  4. கீழமாத்தூர் ஜமாத்தை சேர்ந்த இமாம் ஜாகிர் உசேன் என்பவர் எனது திருமணத்தை பதிவு செய்த நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது [இஸ்லாத்தில் இப்படி போலி நிக்காஹ் நாமா கொடுக்கிறார்கள் என்பதும் திகைப்பாக இருக்கிறது. முதலில் இமாம் ஒருவர் இப்படியெல்லாம் போலி திருமணப்பத்திரம் தயாரித்துக் கொடுக்கலாமா?].
  5. நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது, அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது என்றால், ஒன்றிற்கும் மேலான அத்தகைய பதிவு புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்றாகிறது [இதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. இப்படி மதரஸா, மசூதிக்களில் கொடுக்கப்படும் சான்றிதழ்களின் ஆதாரத்துவத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடிய்ம் என்ற கேளிவியும் எழுகின்றது].
  6. ஆக, நிக்காஹ் பதிவு புத்தகம் மற்றும் நிக்கஹ் நாமா எப்படி போலியாக இருக்க முடியும்? [இல்லை மறுபடியும் அரசு திருமணப்பதிவு செய்து கொண்டு, சான்றிதழ் பெறவேண்டும் என்று சட்டத்தை உண்டாக்க வேண்டும்]Khader Basha marrying Salamiya Banu - fake nikkah nama
  7. இத்திருமணங்கள் உண்மையான திருமணங்கள் இல்லை, போலியானவை என்றால், அத்தகைய திருமணங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? [அங்குதான் லவ்-ஜிஹாத் போன்ற மோசடிகள் உள்ளனவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது]
  8. இச்செய்தி வந்த பிறகும், கீழமாத்தூர் ஜமாத், கட்டுப்பாட்டில் உள்ள மசூதி மற்ற முஸ்லிம்கள் எப்படி மௌனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை [அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்தே நடந்து வருகின்றனவா?].
  9. எனது கணவர் காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கயூம் மற்றும் இமாம் ஜாகிர்உசேன் ஆகியோர் திட்டமிட்டு என்னை கூட்டாக சேர்ந்து ஏமாற்றி உள்ளனர் [போலி நிக்காக் நாமா என்றால், போலி திருமணம் என்றாகிறது].
  10. தஸ்லிமாவுக்கும் காதர்பாட்சாவுக்கும் தொடர்பு இருக்கிறது[2] [இருவரும் சேர்ந்து இத்தகைய கல்யாண மோசடிகளை செய்து வருகின்றனரா?].
  11. இந்து பெண்களும் சம்பந்தப் பட்டிருப்பதால், அவர்களும் மதம் மாற்றப்பட்டார்களா இல்லையா?
  12. மதம் மாற்றப்பட்டால் தான் நிக்காஹ் நடக்கும் என்றால், மதம் மாற்றப்பட்ட சான்றிதழ் யார் கொடுத்தது? அது உண்மையா அல்லது போலியா?
  13. இந்துபெண்களை அப்படி ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டது, “லவ்-ஜிஹாத்” போன்ற வகையில் வருமா?
  14. காதர் பாட்சாவுக்கு சிலை கடத்திலிலும் தொடர்பு இருக்கிறது என்று பானு ஊடகக்காரர்களுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[3].

என்று பற்பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு பதிலளித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தெரிகிறது.

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- உண்மை என்ன

பெண்கள்-குழந்தைகள் இத்தகைய மிருகங்களிடமிருந்த காப்பாற்றப் பட வேண்டும்: திருமணங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது, ஏனெனில், பெண்கள் நலன், குழந்தை நலன், குடும்ப நலன், அவர்களின் எதிர்காலம் முதலியவை அதில் அடங்கியுள்ளன. பெண்கள் கற்பு துச்சமாகும் போது, தாம்பத்திய மதிப்பு, மரியாதை மற்றும் போற்றும் தன்மை குறைகிறது. தாம்பத்திய குறைந்தால், அசிங்கமானால், கணவன்-மனைவி உறவுகள் பாதிக்கும், விவாக ரத்தில் முடியும். விவாகரத்து “கணவன்-மனைவி”யை மட்டும் பிரிக்கவில்லை, குடும்பத்தை, குடும்பங்களைப் பிரிக்கின்றன. அதிகமாக பாதிக்கப்படுவது மகன்-மகள் தான், அவர்களின் குழந்தைகள். குழந்தைப் பருவத்தில் கணவன்-மனைவி கத்தல்கள், சச்சரவுகள் சண்டைகள், அடித்து கொள்ளுதல் முதலியன மனத்தில் படிந்து, பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படும். இவ்விதத்திலும் கட்டுப்பாடு முக்கியமாகிறது.

Madrassa where Salamiya met Taslim

மதம் என்ற ரீதியில் கூட இத்தகைய சமூக சீரழிவுகளை நியாயப்படுத்தக் கூடாது: முன்னரே குறிப்பிட்டது போல, இதனை, இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும். இல்லையெனில், காதர் பாட்சா போன்றோர் வந்து கொண்டே இருப்பார்கள். சில ஆண்டுகள் சிறையில் இருந்து, வெளியே வந்து மறுபடியும் அதே குற்றங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனவே “லவ்-ஜிஹாத்” பிரச்சினை இப்பொழுது கேரளாவில் நிதர்சனமாகி பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இனி, “திருமண-ஜிஹாத்” என்பதும் உருவாகி விட்டது போலும்! அதாவது, திருமணம் மதம் மாற்றுவது, செய்து கொள்வது, குழந்தைகளைப் பெற்றெடுப்பது, நகை-பணம் எடுத்துக் கொண்டு / மிரட்டி வாங்கிக் கொண்டு ஓடிவிடுவது என்ற முறையில் செயல்படுவதைத் தடுக்க வேண்டும். பெண்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf

[2] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[3]  http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

ஹாஜி அலி தர்காவுக்குள் செல்ல வேண்டும் என்ற போராட்டம் ஏன் சனிபகவான் நோவில்-நுழைவு பிரச்சினையைப் பின்பற்றி எழவேண்டும்?

பிப்ரவரி 4, 2016

ஹாஜி அலி தர்காவுக்குள் செல்ல வேண்டும் என்ற போராட்டம் ஏன் சனிபகவான் நோவில்-நுழைவு பிரச்சினையைப் பின்பற்றி எழவேண்டும்?

Haji Ali Dargah women were there before 2011இந்து பெண்களை பின்பற்றித்தான் முஸ்லிம் பெண்கள் போராட வேண்டுமா?: சனி பகவான் கோவிலை அடுத்து மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்குள் சென்று வழிபட வேண்டி பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்று தமிழக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டதைப் படிக்கும் போது, அப்படியே, செக்யூலரிஸத்தில் திளைப்பது போன்றிருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் உள்ள சனி பகவான் கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் அந்த கோவிலுக்குள் நுழைய 500 பெண்கள் முயன்றனர். ஆனால் அவர்கள் கோவில் வளாகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் மும்பையில் கடலுக்குள் இருக்கும் ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய அனுமதி கோரி முஸ்லீம் பெண்கள் 29-01-2016 வியாழக்கிழமை அன்று போராட்டம் நடத்தினர்[1] என்று ஊடகங்கள் தொடர்ந்தன. குறிப்பாக முஸ்லீம் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக வரலாற்று சிறப்புமிக்க இந்த தர்காவிற்குள் நுழைய அனுமதிக்க கோரி சில மகளிர் அமைப்புகளும் போராட்டத்தில் இணைந்துள்ளன[2].

Women protest in Mumbai

Mumbai: Women stage a protest demanding entry to Haji Ali Dargah in Mumbai on Thursday. PTI Photo by Shashank Parade (PTI1_28_2016_000180B)

ஆர்பாட்ட கத்தல்கள் செக்யூலரிஸத்தனமாக இருந்தது: தர்கா வாசலில் கூடிய பெண்கள் ஆணாதிக்கத்திற்கு எதிராக கோஷமிட்டனர்[3]. அப்படி என்னத்தான் கோஷமிட்டார்கள் என்று சொல்லவில்லை. ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய முயற்சித்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்[4]. ஆனால், கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள் யார், தர்காவுக்குள் நுழைய போராடிய பெண்கள் யார் என்று குறிப்பிடாமல், ஊடகங்கள் மறுபடியும், செக்யூலரிசத்தைப் பூசி மெழுகிவிட்டன. இனி அப்பெண்கள் ஏந்திய பதாகைகளில் என்ன இருந்தன என்று பார்ப்போம்:

  1. “கோலுக்கு போவோம், தர்காவுக்கு போவோம், எந்த அப்பனுக்கு என்னாகப்போகிறது”.
  2. அவரவர் உரிமைகளுக்காக உலகத்தில் போராடுவோம், சேர்ந்தே போராடுவோம்”
  3. சகோதரிகள் கேட்கிறார்கள் விடுதலை; மகள்கள் கேட்கிறார்கள் விடுதலை; தாய்மார்கள் கேட்கிறார்கள் விடுதலை; மனைவியர் கேட்கிறார்கள் விடுதலை;
  4. நாட்டில் பெண்கள் அவமானப்படுத்தப் பட்டால் கேடு விளையும்; இதயத்தின் மீது கை வைத்து சொல்லுங்கள், இது நியாயமா?”

இதெல்லா செக்யூலரிஸத் தனமாக இருக்கிறது வியப்பாக இருக்கிறது. ஆனால், கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள் இந்து பெண்கள், தர்காவுக்குள் நுழைய போராடிய பெண்கள் முஸ்லிம் பெண்கள் என்றறியலாம்.

INDIA-RELIGION-RIGHTS-WOMEN

Indian activists take part in a protest against a ban on women entering its inner sanctum of the Haji Ali mosque, in Mumbai on January 28, 2016. A landmark mosque in Mumbai is facing pressure to overturn a ban on women entering its inner sanctum, a move that could set a precedent on gender restrictions to places of worship in the deeply religious country. A Muslim women’s rights group is locked in a bitter legal battle with trustees of Mumbai’s Haji Ali Dargah, built in the 15th century and popular not only with Muslims but Hindu devotees and sight-seeing tourists. AFP PHOTO / PUNIT PARANJPE / AFP / PUNIT PARANJPE (Photo credit should read PUNIT PARANJPE/AFP/Getty Images)

ஐந்திய பெண்மணிகளைசெக்ஸ்சர்வேஎன்றுஇந்தியாடுடேஅவமதிக்கும் போது, பென்கள் ஏன் போராடுவதில்லை?: பெண்களுக்கு இந்நாட்டில் பலவித உரிமைகள் இருக்கின்றன. இன்றைய தேதியில் செக்ஸ் விசயங்களில் கூட தாராளமாக இருக்க விரும்புகிறார்கள். இந்திய பெண்களின் வீரத்தை எடுத்துக் காட்டும் வகையில், பப்புக்கு போவோம், குடிப்போம், யாருடன் வேண்டுமானாலும், குடித்து-கும்மாளம் போடுவோம் என்றெல்லாம் பேசிய பெண்களிடம் பேட்டிக் கண்டு டிவி-செனல்களில் போட்டுக் காட்டினார்கள். “செக்ஸ்-சர்வே” போர்வையில் “இந்தியா டுடே” பெண்களை வேசித்தனமான சித்தரிப்பதை[5] இப்போராட்டப் பெண்கள் எதிர்ப்பதில்லை. மாறாக, குஷ்பு போன்ற நடிகைகள் ஆமோதிப்பதை நீதிமன்றங்களும் ஒப்புக்கொள்வதைப் போன்று தீர்ப்புகள் கொடுக்கப் படுகின்றனன்றன. ஆனால், கடந்த ஆண்டுகளில் மற்ற விசயங்களில், பெண்கள் இவ்வாறு தெருக்களில் வந்து போராடியதில்லை. ஆனால் வழிபாட்டு விசயத்தில் மட்டும் அப்படியென்ன அவசரம், அவசியம் வந்துவிட்டது என்று தெரியவில்லை.

ஷா பானு வழக்கு

ஷாபானு வழக்கு போது இப்பெண்களுக்கு உணர்வு வரவில்லை: குறிப்பாக ஷா பானு வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, இத்தகைய விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது. சில பெண்கள் கருத்துகளைக் கூறியதோடு நிறுத்திக் கொண்டார்கள். 1987களில் குறிப்பிட்ட மற்றும் ஷா பானு வழக்கில், சிவில் முறை (Code of Civil Procedure) சட்டப்பிரிவு 125ன் படி, விவாகரத்து செய்யப்படும் மனைவுக்கு, ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும் என்றுள்ளது. ஆனால், மொஹம்மது அஹம்மது கான் அவ்வாறு தரமுடியாது என்றபோது, ஷா பானு எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது, உச்சநீதிமன்றம் தகுந்த ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும் என்று உறுதி செய்தது[6]. இதனையடுத்து முஸ்லிம்கள் தங்கள் மதவிவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்று ஆர்பாட்டம் செய்தனர். முஸ்லிம்களை தாஜா செய்ய, அப்பொழுதைய ராஜிவ் காந்தி அரசு, ஒரு புதிய சட்டத்தை [முஸ்லிம் பெண்களின் விவாகரத்து சட்டம் 1987] எடுத்து வந்தது. அதேபோல, இப்பொழுதும், சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 (the Prohibition of Child Marriage Act, 2006) எங்களுக்கு செல்லுபடியாகாது, எங்கள் சட்டப்படிதான், நாங்கள் திருமணம் செய்து வைப்போம் என்றால் அரசு என்ன செய்யும் என்று நோக்கத்தக்கது. மேலும், இப்பொழுது மோடி அரசு இருப்பதால், பிரச்சினை அடக்கித்தான் வாசிக்கப்படும்.

Zeenat Shaukat Ali

பொது சிவில் சட்டம் பற்றி பேசினால் எதிர்க்கிறார்கள்!: தில்லி இமாம் நீதிபதிகளின் காலகளை உடைப்பேன் என்றெல்லாம் பேசியபோது, இந்தியாவின் மூன்று மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்கள் அவரை கைது செய்ய சம்மன் இட்ட போதும், எந்த போலீஸ் அதிகாரியும் கைது செய்யவில்லை. ஏனெனில், அப்பொழுதைய ராஜிவ் காந்தி அரசு முஸ்லிம்களின் அடிப்படைவாதத்திற்கு பயந்து, மெத்தனமாகவே செயல்பட்டது. “யுனிபார்ம் சிவில் கோட்” என்கின்ற எல்லோருக்கும் “பொது சிவில் சட்டம்” என்று சர்லா முத்கல் உச்சநீதி மன்ற தீர்ப்பின் போதும், படித்த பெண்கள் கருத்துகளை சொன்னதோடு அடங்கிக் கிடந்தனர். இவ்விதமான போராட்டங்களை நடத்தவில்லை. ஏன், இப்பொழுதும், போராடும் பெண்கள் அவ்விசயங்களை எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, இப்பொழுது, முஸ்லிம் பெண்கள், கோவில் விவகாரங்களில், இந்து பெண்கள் போராட்டம் நடத்திய பிறகு, தாமும் இறங்கியிள்ளது உண்மையான ஆர்வத்தின் மேலா, அல்லது செக்யூலார் சக்திகள் தூண்டிவிட்டு, அதற்கேற்றப்படி நடக்கும் நாடகமா என்ற சந்தேகம் எழுகின்றது. ஏனெனில், முஸ்லிம்களின் நம்பிக்கைகள், சட்டங்கள் முதலியவை தனியானவை, வித்தியாசமாவை, மாறுபட்டவை என்று முஸ்லிம்கள் உறுதியாக இருக்கும் நிலையில், மும்பை ஐகோர்ட், சபரிமலை வழக்கில், சுப்ரீம் கோர்ட் வழங்கும் தீர்ப்பை பொறுத்து செயல்பட முடிவு செய்து உள்ளது[7] என்பது வியப்பாக உள்ளது. அப்படியென்ன, இந்திய நீதிமன்றங்கள் செக்யூலரிஸ ரீதியில் தீர்ப்புகள் கொடுக்கின்றனவா என்ன? ஷா பானு தீர்ப்பு விசயத்திலேயே, இந்தியாவில் சட்டம் செக்யூலரிஸ ரீதியில் செயல்பட முடியாது என்பதனை மெய்ப்பித்து விட்டது. பொது சிவில் சட்டட்தைப் பற்றி பேசினாலே, அது ஏதோ இந்துத்துவ அல்லது பிஜேபியின் சதி போன்றுதான் சித்தரிக்கப்படுகிறது. பிறகு, இப்போது, மும்பை நீதிமன்றம் இப்படி சொல்லியிருப்பதும் வேடிக்கைதான்!

Women allowed inside dargah or not2011-ம் ஆண்டு முதல் ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை: கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியென்றால், முன்னர் எப்படி அனுமதித்தார்கள்? இஸ்லாமிய மத குரு, அடக்கம் செய்யப்பட்ட சமாதி அருகே   பெண்கள் வருவது பெரும் பாவம் செய்வதற்கு சமம் என கூறி,  ஹாஜி அலி தர்கா நிர்வாகம் பெண்களுக்குத் தடை விதித்தது. இது தொடர்பாக பாரதிய முஸ்லிம் பெண்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜீனத் சவுகத் அலி [Zeenat Shaukat Ali, professor of Islamic Studies at St Xavier’s College, Mumbai] கூறுகையில், “இஸ்லாத்தில் எந்த இடத்திலும் பெண்கள் இடுகாட்டிற்கு செல்ல கூடாது என்று சொல்லப்படவில்லை. பெண்களை ஒதுக்குவது இஸ்லாத்தின் வழிமுறைகளுக்கு எதிரானது. இந்து, முஸ்லிம் என எல்லா இடத்திலுமே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் பெண்களை புறக்கணிப்பது. இந்திய அரசியல் அமைப்பு, அனைவரும் சமம் என்கிறது. இஸ்லாமும் அதைத்தான் சொல்கிறது[8]. இவர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பேராசிரியராக இருக்கின்றார். நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா, மகள் பாத்திமா தங்களின் தந்தையுடன் அனைத்து இடங்களுக்கும் சென்றனர். அதே போன்று தான் எங்களுக்கும் அனைத்து இடங்களுக்கும் செல்ல இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது. இஸ்லாம் ஆண்களையும், பெண்களையும் சரிசமமாகவே பார்க்கிறது”, என்றார்[9].  இதேபோல மற்ற முஸ்லிம் பெண்களும் கூறினர்[10].

வேதபிரகாஷ்

03-02-12016

[1] Read more at: http://tamil.oneindia.com/news/india/muslim-women-now-seek-entry-into-haji-ali-dargah-245575.html

[2] தினத்தந்தி, மும்பை ஹாஜி அலி தர்காவிற்குள் செல்ல அனுமதிக்க கோரி முஸ்லீம் பெண்கள் போராட்டம், மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜனவரி 29,2016, 10:44 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜனவரி 29,2016, 10:44 AM IST

[3] அதிர்வு, தர்காவுக்குள் நுழைய தடை முஸ்லிம் பெண்கள் போராட்டம், Jan 30, 2016 12:00:00 AM.

[4] http://www.vikatan.com/news/india/58261-muslim-women-now-seek-entry-into-haji-ali-dargah.art

[5] http://www.dailyo.in/politics/sex-in-india-india-today-sex-survey-2016-relationships-bedroom-sunny-leone-pornography-tinder-whatsapp/story/1/8763.html

[6] http://indiankanoon.org/doc/823221/

[7] தினமலர், ஹாஜி அலி தர்காவில் பெண்களுக்கு அனுமதி?, ஜனவரி.18, 2016.22:11.

[8] விகடன், சனி பகவான் கோவிலை தொடர்ந்து ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய பெண்கள் முயற்சி !, Posted Date : 11:35 (29/01/2016)

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய அனுமதி கோரி முஸ்லீம் பெண்கள் போராட்டம், Posted by: Siva Published: Friday, January 29, 2016, 16:13 [IST].

[10] http://www.hindustantimes.com/mumbai/scholars-divided-over-allowing-women-in-haji-ali-dargah/story-i4xqsED5CNXYznod3kafcI.html