Archive for the ‘பேஸ்புக்’ category

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக-பகுத்தறிவு-கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (1)!

மார்ச் 19, 2017

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திகபகுத்தறிவுகம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாதுஇருந்து விமர்சித்தால் கொலை தான் (1)!

DK banner below Periar statue

50 ஆண்டு திராவிட ஆட்சியும், தமிழக சமுகமும்: தமிழக நாத்திக-பெரியாரிஸ-பகுத்தறிவு சித்தாந்த நிலையில் சமீபத்தில் நடந்து வரும் மதரீதியிலான ஆர்பாட்டங்கள், கருத்து போராட்டங்கள், அசாதாரணமான மந்திர-தந்திர வேலைகள் மற்றும் கொலைகள் முதலியன அதிர்ச்சியாகவும், கவனிக்கப்பட வேண்டியவைகளாகவும் இருக்கின்றன[1]. ஒரு பக்கம் 50 ஆண்டுகள் திராவிட ஆட்சி என்று விவாதம் நடந்தாலும், அது மறுபடியும், அரைகுறை சித்தாந்த சிதறல்களாகவே இருக்கின்றன. ஏனெனில், ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் இருவர்களிடமும், நேர்மையான உண்மைகளை வைத்து விவாதிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை அல்லது உண்மைகள் தெரியவில்லை அல்லது மறைக்கிறார்கள் என்று தான் தெரிகிறது[2]. தமிழக மக்களின் மீது நாத்திக-பெரியாரிஸ-பகுத்தறிவு சித்தாந்த கருத்துகள் தாக்கம் இருந்திருந்தால், அவற்றின் வெளிப்பாடுகள், சமூக செயல்பாடுகள், நடப்புகள் மற்றும் நிகழ்வுகள் என்று அனைவற்றையும் எடுத்துக் கொண்டு அலச வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் கொலை-கொள்ளை குற்றங்கள் அதிகமாகியுள்ளன; பெண்களின் மீதான குற்றங்களும் அதிகமாகியுள்ளன; திராவிட அரசியல் ஆட்சி ஊழலோடு சேர்ந்து பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இந்த பின்னணியில் கோயம்புத்தூர் பாரூக்கின் கொலை அலச வேண்டியுள்ளது.

DVK poster demanding to arrest the murederers of Farook

கோவையில் இரும்பு ஸ்கிராப் வியாபாரி கொலை: முதலில் கோவையில் இரும்பு ஸ்கிராப் வியாபாரி கொலை, தொழில் போட்டி, முன்விரோதம் என்ற ரிதியில் தான் சிறியதாக செய்திகள் வந்தன. பிறகு, கோவையில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் தனது சொந்த மதத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பரப்பி வந்ததற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்[3] என்று மாறியது. முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் எனவும், நான்கு பேர் கொண்ட கும்பல் கொலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் சொல்லப்பட்டது[4]. இதனையடுத்து பரூக்கின் கைபேசி மற்றும் பேஸ்புக்கில் பதிவான தகவலின் அடிப்படையில், நான்கு காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்[5].  விசாரணைக்குப் பிறகு தான் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியும் என்று போலீஸார் கூறினர்[6].

Tikkathir - balancing news - 18-03-2017

கம்யூனிஸ்டுகளின் செக்யூலார் அல்லது கம்யூனல் ரீதியிலான செய்தி வெளியீடு: தீக்கதிர் செய்தி வித்தியாசமாக இருந்தது[7], “மத காரணங்களுக்காக கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பாரூக் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மரணத்தின் போது நடந்த வன்முறையை தடுக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி விடுதலை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது,” என்று முடித்தது! அதாவது, அதற்கும்-இதற்கும் சம்பந்தம் உள்ளது போல தொக்கியுள்ளது[8]. கம்யூனிஸ்டுகள் வழக்கம் போல கலவரம் மூட்டும் வகையில் செய்தியை வெளியிட்டிருப்பது நோக்கத்தக்கது. சகிப்புத் தன்மை என்றெல்லாம் பேசி ஆர்பாட்டம் செய்து வரும் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சீதா ராம் யச்சூரி, என். ராஜா போன்றோர் பேசியதை எல்லாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் எல்லோரும், இனி மேலாவது இதைப் பற்றி விவாதிப்பார்களா என்று பார்க்க வேண்டும். அவ்வளவு ஏன், விஜய், தினத்தந்தி மற்ற தொலைக் காட்சிகளாவது விவாதத்திற்கு எடுத்துக் கொள்வார்களா என்று பார்க்க வேண்டும்.

Muslim to atheist - Farooq murdered- DK Veeramanis ode

திக வீரமணியின் கண்டிப்பு (விடுதலையில் வெளியானது)[9]: “கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தில் பணியாற்றிய கொள்கை வீரர் தோழர் பாரூக் அவர்களைத் திட்டமிட்டே கொலை செய்திருக்கிறார்கள். இது ஒரு கொடுமையான படுகொலை! இதற்குக் காரணமான உண்மையான கொலையாளிகள், திட்ட மிடப்பட்ட இக்கொலையில் பங்கேற்றவர்கள், தூண்டிய சக்திகள் அனைவரையும் கோவை போலீஸ் அதிகாரிகள் உடனடியாகக் கண்டுபிடித்துத் தக்க தண்டனை வழங்கிடும் வகையில் புலன் விசாரணையும் மற்ற நடவடிக்கைகளும் அமைந்திடல் வேண்டும். மதவெறி எந்த ரூபத்தில் வந்தாலும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும்தடுத்திடல் வேண்டும். மறைந்த அந்தத் தோழருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நமது வீர வணக்கம்! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், அவர் சார்ந்த அமைப்புக்கும் நமது இரங்கலையும், ஆறுதலையும், தெரிவித்துக் கொள்கிறோம்”, என்று சம்பிரதாய ரீதியில் முடித்துக் கொண்டார் கி. வீரமணி[10]. செய்தியும் நான்காம் பக்கம், வலது புறம், கீழே மூலையில் சிறியதாக வெளியிடப் பட்டிருந்தது. இதுதான், அவர்களது முஸ்லிம் அடிப்படைவாதத்தை எதிர்க்கும், எதிர்கொள்ளும், கண்டிக்கும் லட்சணம் என்று தெரிகிறது. இனி மற்றவர்களும் சம்பிராதயப் படி, அவரவர் இயக்கத்தின் / கட்சியின் சார்பில் இத்தகைய கணடனங்களை வெளியிடுவதை காணலாம்.

Tikkathir - balancing news - 19-03-2017

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டிஎன்றெல்லாம் முஸ்லிம் சொல்லமுடியாது: பெரியாரிஸப் பிஞ்சுகள், பழங்கள், தொண்டர்கள், விசுவாசிகள், பக்தர்கள் முதலியோரும் அடங்கிக் கிடக்கின்றனர். இக்கொலையைக் கண்டிக்கக் கூட பயந்து பேஸ்புக்கில் இருந்து பலர் விலகி விட்டனர். “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி” என்று பெரியார் சொன்னார் என்று, இனி எந்த முஸ்லிமும் பேச முடியாது. இல்லை, அங்கு கடவுள் என்றால், “அல்லா இல்லை” என்று சொல்லிவிட்டு பேச வேண்டும், இல்லை என்றால், பத்வா வரும், இம்மாதிரியான கொலை விழும். உண்மையான முஸ்லிம், திராவிட கட்சியில் கூட இருக்க முடியாது. “ஷிர்க்” பேசும் கொஷ்டிகள் இனி இவற்றையெல்லாம், நன்றாகவே கவனிப்பார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், நாத்திகக் கட்சிகளில் முஸ்லிம்கள் இருப்பதுதான், மிகப்பெரிய “ஷிர்க்” ஆகும். அதற்காகத் தான், மொஹம்மது அலி ஜின்னாவே, “நான் முஸ்லிம் என்பதனால், முஸ்லிம்களின் நலனிற்காகத் தான் பாடுபட முடியும்”, என்று கூறி, அம்பேத்கர், பெரியார் முதலியோரை கழட்டி விட்டார் என்பதும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இனி கம்யூனிஸ்டு மற்றும் திராவிட கட்சிகளிலிருந்து, எத்தனை நியாயவான்களான முஸ்லிம்கள் விலகுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-03-2017

Muslim to atheist - Farooq murdered- DKs ode to him

[1] சசிகலாவைக் காப்பாற்ற அகோரி பூஜை செய்தேன் என்று ஒருவன் சொன்னதை கவனிக்கலாம். அவனுக்கு முஸ்லிம் மனைவியாக இருப்பதும் கவனிக்கத் தக்கது. விவரங்களுக்கு என்னுடைய பிளாக்குகளைப் பார்க்கவும்.

[2] சமீபத்தைய திராவிட மற்றும் இந்துத்துவ வாதங்களை விகடன் முதலியவற்றில் காணலாம்.

[3] தினத்தந்தி, திராவிடர் விடுதலை கழக பிரமுகர் கொலை வாலிபர் கோர்ட்டில் சரண், மார்ச் 18, 04:30 AM.

[4] http://www.dailythanthi.com/News/Districts/2017/03/18025737/Dravida-Kazhagam-leaders-murder-freedThe-young-men.vpf

[5] நியூஸ்7.டிவி, மதத்திற்கு எதிராக கருத்துக்களை பரப்பியதற்காக இளைஞர் கொலை!, March 18, 2017.

[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/18/3/2017/youth-murdered-spreading-views-against-religion

[7] தீக்கதிர், கோவை: திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் படுகொலை, மார்ச்.17, 2017

[8] https://theekkathir.in/2017/03/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95/

[9] விடுதலை, கோவை தோழர் பாரூக் படுகொலை வன்மையாக கண்டிக்கிறோம்!, சனி, 18 மார்ச் 2017 16:42

[10] http://viduthalai.in/e-paper/139820.html

மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (1)

மார்ச் 1, 2015

மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (1)

Riyaz on the lap of girls - Suratkal college

Riyaz on the lap of girls – Suratkal college

ஐந்து மாணவிகளின் மடியில் படுத்த மாணவன்[1]: மங்களூரு அருகே உள்ள சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவன் முகமது ரியாஷ் (Mohammed Riaz, வயது 20) என்ற மாணவன். இவன், மங்களூருவில் உள்ள கோவிந்த தாஸ என்ற தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறான். இந்த நிலையில், முகமது ரியாஷ் தனது கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளின் மடியில் படுத்து கிடப்பது போல மர்ம நபர்கள் சித்தரித்து ‘வாட்ஸ்அப்’ சமூக வலைதளத்தில் படம் வெளியிட்டனர்[2]. கேலியாக பேஸ் புக்கில் வெளியிட்டனர். பிப்ரவரி 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவனின் புகைப்படம் பேஸ் புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்து உள்ளனர். இந்த படம் ‘வாட்ஸ்அப்’ மூலமாக மங்களூரு நகர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது[3]. மாணவிகளின் மடியில் படுத்திருப்பது போன்ற அப்படம் பேஸ் புக்கில் வெளியிடப்பட்டது[4] என்று சில நாளிதழ்கள் குறிப்பிடுகின்றன[5]. இரண்டிலும் வெளியிடப்பட்டு, பரப்பப்பட்டது என்று தெரிகிறது[6]. ஆகவே, ஊடகங்கள் இவ்வாறு இரண்டுவிதமாக செய்திகளை வெளியிட வேண்டிய தேவையில்லை.

மாணவிகளுடன் ரியாஸ்

மாணவிகளுடன் ரியாஸ் – நோக்கம் என்ன என்று அவன் தான் விளக்க  வேண்டும்

மொஹம்மது ரியாஸ் அல்லது மொஹம்மது ஸ்வாலியார் மடியில் படுத்திருந்தது: இந்த பிரச்சினைப் பற்றி, கடந்த 21–ந்தேதி சுமார் 11 மணி அளவில் முகமது ரியாஷ், கானா என்ற இடத்தில் உள்ள, தனது வீட்டில் நண்பர்களான வினித், ரித்தீஷ் ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தான். அதாவது, சம்பந்தப் பட்ட மாணவர்களுக்கு, இவ்விவகாரம் தெரிந்திருக்கிறது என்றாகிறது. படிக்கும் மாணவர்கள் இவ்வாறு  மற்ற காரியங்களில் ஈடுபடுவது ஏற்ற்க்கொள்ளத்தக்கதன்று. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது வீட்டுக்கு காரில் வந்த 5 பேர் கும்பல் முகமது ரியாசை காரில் கடத்தி, பஜ்பே என்ற இடத்திற்கு அருகில் உள்ள கைகம்பா அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து அடித்து உதைத்துவிட்டு சென்றுவிட்டனர். அவனது மதம் என்ன என்று கேட்கப்பட்டு உதைக்கப்பட்டான் மற்றும் நண்களும் அடிக்கப்பட்டனர் என்று “தி இந்து” தனக்கே உரிய பாணியில் கூறுகிறது[7].  ஊடகங்கள் அந்த பையனின் அடையாளத்தைக் குறிப்பிடாமல் குழப்பியுள்ளது தெரிகிறது. “தி இந்து” மாணவிகளின் மடியில் படுத்திருந்தவன் “ரியாஸ்” என்று குறிப்பிடுகிறது. “இந்தியன் எக்ஸ்பிரஸ்” கும்பல் அடையாளம் தெரியாமல் அந்த பையனை அடித்துவிட்டதாகக் கூறுகிறது. “தைஜி வார்ல்ட்” என்ற நாளிதழ் அவன் பெயர் மொஹம்மது ஸ்வாலி [Mohammed Swali] என்கின்றது[8]. படத்தில் இரு பையன்கள் இருந்தார்கள். அக்கல்லூரி மாணவர்களே, ஒரு குழுவாக அமைந்து, தவறு செய்யும் மாணவர்களைக் கண்டிக்க மேற்பட்டது. அப்பொழுதுதான், இவர்கள் மாட்டிக் கொண்டார்கள். ஊடகங்கள் உண்மையினை வெளியிடாமல், இவ்வாறு குழப்ப வேண்டிய அவசியம் இல்லை.

Coastal Karnataka love jihad

Coastal Karnataka love jihad – ஏற்கெனவே முஸ்லிம் பையன்கள், இந்து பெண்களை ஏமாற்றி பிரச்சினை செய்த விசயங்கள் இருக்கின்றன.

மொஹம்மது ரியாஸ் பெண்களுடன் இருப்பவனா?: “இதெல்லாம் ஒரு நாடகம் போன்று தோன்றுகிறது. நான் தண்ணீர் கேட்டபோது, என் வாயில் பீரை ஊற்றிக் குடிக்க வைத்தனர். பிறகு கண்கள் கட்டப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் [(Mangaluru–Udupi) 66] முக்கா என்ற இடத்தில் விட்டுச் சென்றனர்”, என்று மொஹம்மது ரியாஸ் கூறினான். கடந்த பிப்ரவரி 2014ல் தான் ஒரு இளம்பெண்ணுடன் சூரத்கல் கடற்கரையில் இருந்தபோது, ஒரு 20-வயது பையன் ஒரு கும்பலால் தாக்கப்பட்டான் என்றும் கூறினான்[9]. ஆனால், அப்பெண்ணைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடவில்லை. அதற்கும், இதற்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை. மொஹம்மது ரியாஸ் பெண்களுடன் சுற்றும் மற்றும் இருக்கும் பழக்கம் கொண்டவனாஎன்பதை அவன் தான் விளக்க  வேண்டும். படிக்கும் பையன்களுக்கு, இத்தகைய வேலை ஏன் என்பதை அவர்கள் தாம் விளக்க வேண்டும். ஏற்கெனவே, “லவ்-ஜிஹாத்” என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்நிலையில், முகமதிய பையன்கள், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதில், கொண்டுள்ள உள்நோக்கம் என்னவென்பதை, அவர்கள் தாம் விளக்கி சரிசெய்ய வேண்டும். ஆனால், தொடர்ந்து, இத்தகைய வேலைகளில் ஈடுபடுவதை, தமாஷாக என்று யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

Mangalore pub attack - m oral policing

Mangalore pub attack – m oral policing – இப்பொழுது இந்த அம்மணிகள், பெண்கள் உரிமைகள் பற்றி பேசக் காணோம்!

நான் அவன் இல்லை எனும் மொஹம்மது ரியாஸ்: இதில் காயம் அடைந்த முகமது ரியாஷ் மங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இதற்கிடையே, அவன் சூரத்கல் போலீசில் புகார் செய்தான். அதில், ‘வாட்ஸ்அப்’பில் என்னுடன் பயிலும் 5 மாணவிகளின் மடியில் நான் படுத்து இருப்பது போல படம் சித்தரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இருப்பது நான் அல்ல. எனது படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இதற்குள் பையனின் தந்தை அப்துர் ரஹ்மான் [Abdur Rehman] சூரத்கல் போலீஸாரிடம், தன் மகனை யாரோ கடத்திச் சென்று, கொலை செய்ய முயன்றதாக புகார் கொடுத்துள்ளார்[10]. ஆனால் தன்னை மர்ம நபர்கள் தாக்கியது பற்றி முகமது ரியாஷ் புகாரில் குறிப்பிடவில்லை. அப்படியென்றால், தாக்கப்பட்டது யார் என்ற குழப்பமும் சேர்கிறது. மேலும், அவன் மொஹம்மது ஸ்வாலி என்றால், ரியாஸ் தாராளமாக சொல்லியிருக்கலாம், அவ்வாறு சொல்லவில்லை என்றால், அவன் ஏன் உண்மையினை மறைக்கிறான் என்ற கேள்வி எழுகிறது.

Muslim women-out-on-streets-against-moral-policing

Muslim women-out-on-streets-against-moral-policing –  உன்பு கொடி பிடித்த இந்த முஸ்லிம் பெண்கள், இப்பொழுது ஏன் மௌனமாக இருக்கிறார்கள்?

மொஹம்மது ஸ்வாலி மற்றும் ஐந்து மாணவிகள் கல்லூரியிலிருந்து இடைக்கால நீக்கம்: ஐந்து மாணவிகளுள் ஒருத்தி யாரோ தனது பேஸ்புக் கணக்கைத் திருடி, அப்போட்டோவை எடுத்து, மாற்றி வெளியிட்டு விட்டனர் என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளாள்[11]. அம்மாணவி இவ்வாறு தாமதமாக புகார் கொடுத்துள்ளதும் வியப்பாக இருக்கிறது. முதலில் படிக்க செல்லும் மாணவிகள் படிப்பில் சிரத்தைச் செல்லுத்தி, முன்னேற வழிபார்த்து செல்ல வேண்டும், தமது பெற்றோர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும், இத்தகைய, குழுக்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், ஆனால், போலீஸார், அப்பையன் மொஹம்மது ஸ்வாலி [Mohammed Swali] என்று உறுதி செய்துள்ளனர்[12]. அதாவது, “தி ஹிந்துவின்” செக்யூலரிஸ வக்காலத்து பொய்யாகிறது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் முகமது ரியாசை மர்ம நபர்கள் காரில் கடத்தி தாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், தனியார் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, முகமது ரியாசை, மாணவிகளுடன் சேர்த்து சித்தரித்து படம் வெளியிட்டதாக கூறி அந்த கல்லூரியில் படித்து வரும் 6 மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது[13].

© வேதபிரகாஷ்

28-02-2015

[1] நியூஇந்தியாநியூஸ், கல்லூரி மாணவிகள் மடியில் அமர்ந்த மாணவன்: புகைப்படத்தால் வெடிக்கும் சர்ச்சை [ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 06:16.39 AM GMT +05:30 ]

[2] மாலைமலர், மாணவிகளின் மடியில் உட்கார்ந்த மாணவனின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 6 மாணவர்கள் சஸ்பெண்ட், மாற்றம் செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 24, 7:38 PM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 24, 7:12 PM IST.

[3] http://www.maalaimalar.com/2015/02/24191202/morphing-photo-spread-in-socia.html4

[4] வெப்.இந்தியா, மாணவியின் மடியில் அமர்ந்து எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர்கள், செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (19:26 IST)

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=133552

[6]http://www.newindianews.com/view.php?22cOl72bcy40Wb4e3KMM402dKmD3dd0pDmI203CgA42e4g04Oecb3lOec3

[7] When contacted by The Hindu , Riaz said his friend Ritesh, who was in the photo, had come to his (Riyaz’s) house in Kana with another friend, Vinith, around 11 a.m. on Sunday to discuss the photo going viral. He said that suddenly, four persons came in a car, pushed the three of them inside and drove to Kaikamba, near Bajpe. Riaz said that at a ground there, five more persons joined the assailants and mercilessly beat him after asking about his religion. They also beat up his two classmates.

[8] The photo of a boy, identified as Mohammed Swali, lying on the laps of five girls created a furore after it was uploaded on Facebook.

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=299167

[9] “It was like a drama,” Riaz said. “When I asked for water, they forcibly made me drink beer,” he alleged and added that later, they blindfolded him and left him near a petrol station at Mukka on National Highway (Mangaluru–Udupi) 66. He was later admitted to hospital. At that time, he was not even aware about what happened to Ritesh and Vinith. In February 2014 at Surathkal beach, a 20-year-old youth was attacked by a group when he was found with a girl.

http://www.firstpost.com/india/mangalore-goons-thrash-college-student-after-group-photo-with-girls-goes-viral-on-whatsapp-2118939.html

[10] The victim, Mohammed Riaz, was admitted to a private hospital. Based on a complaint by Riaz’s father, Abdur Rehman, the Surathkal police have registered a case of kidnapping and attempt to murder against the assailants.

The Hindu, Youth thrashed after group photo is widely circulated on WhatsApp, Magaluru, February 23, 2015; Updated: February 23, 2015 16:13 IST

[11] In a complaint filed in Suratkal police station, a girl student of Govinda Dasa College in Suratkal has claimed that the controversial photo of five girl students with a boy lying on their laps, which was uploaded in Facebook, had been doctored and uploaded after hacking her Facebook account. She claimed that the picture in question had been originally clicked by her classmate named Vineeth on February 18 and it was uploaded in Facebook. She has alleged that some mischief-mongers accessed this photo by hacking her account, misused the photo, and then posted it back in social media after affecting certain modifications.

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=299167

[12] The photo of a boy, identified as Mohammed Swali, lying on the laps of five girls created a furore after it was uploaded on Facebook.

[13] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/students-suspend-for-take-photo-of-sitting-the-women-student-and-published-on-facebook-115022400040_1.html

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது!

பிப்ரவரி 4, 2015

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது!

With-FacebookCheated-and-deprived-women-jewelryFake_தினத்தந்தி

With-FacebookCheated-and-deprived-women-jewelryFake_தினத்தந்தி

நகை திருட்டு புகார் என்று ஆரம்பித்த விவகாரம்: சேலம் உள்பட பல இடங்களில் ‘’பேஸ்புக்’ போலி கணக்கில், டாக்டர் போல் நடித்து, பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து, 40 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்[1], என்று செய்தி வந்துள்ளன. 03-02-2015 அன்று இச்செய்தி டிவிசெனல்களில் காட்டப்பட்டது. சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பிரபல வக்கீல் சகோதரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிக்கின்றனர். அவர்கள் தங்க நகைகளை தங்கள் தாயாரிடம் கொடுத்து வைத்திருந்தனர். இதில் தம்பி குடும்பத்தினரின் நகைகள் அப்படியே இருக்க, அண்ணன் குடும்பத்தினரின் நகைகள் 60 சவரனுக்கு மேல் காணாமல்போனது, அதிர்ச்சியைக் கொடுத்தது. இதுகுறித்து அந்த வக்கீல் குடும்பத்தினர் குரோம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.  இவ்வாறு இப்பிரச்சினை “நகைத்திருட்டு” என்று ஆரம்பித்தது.

Facebook love - Islamic way

Facebook love – Islamic way

போலி டாக்டரிடம் சிக்கிக்கொண்ட வக்கீல் குடும்பத்துப் பெண்[2]: போலீசார் வக்கீல் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, வக்கீலின் மகள்தான் நகையை எடுத்து வாலிபர் ஒருவரிடம் கொடுத்ததாக தெரிவித்தார். அதாவது, தன்னுடைய தோழி ஒருவருக்கு ‘பேஸ் புக்’ மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் டாக்டர் முகமது ஷானு என்பவர் பழக்கமானார். இவர், தனக்கு கேரளாவில்  மந்திரவாதி ஒருவரை தெரியும். அவரிடம் நகைகளை கொடுத்து பூஜை செய்தால், குடும்ப பிரச்னைகள் தீர்ந்துவிடும் என கூறியுள்ளார்.  குடும்பத்தில் அப்படி என்ன பிரச்சினைகள் என்றும் தெரியவில்லை. வக்கீல்களால் சாதிக்க முடியாதத்தை மந்திரவாதி எப்படி சாதிப்பார் என்றும் தெரியவில்லை. முஸ்லிம்களுக்கு மந்திர-தந்திரங்களில் நம்பிக்கை உண்டா-இல்லையா என்றும் புரியவில்லை[3]. அதை நம்பிய வழக்கறிஞரின் மகள், வீட்டில் உள்ள நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக முகமது சானுவிடம் கொடுத்துள்ளார். தோழி மூலம் வக்கீல் குடும்பத்தில் நடக்கும் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நகைகளை கேரளாவில் பூஜை செய்து கொண்டுவருவதாக கூறி வாங்கியுள்ளார். ஆனால், அவர்  நகைகளை திருப்பி தரவில்லை[4]. அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

போலி டாக்டர் மலையாள மாந்தீரிகம் செய்வேன் என்று நகைகளைப் பெற்றது: மாந்தீரகம் செய்ய ஏன் முஸ்லிம் பெண் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. மேலும், மந்திர-தந்திர வேலைகள் செய்து விட்டு எப்படி நகைகளைத் திருப்பிக் கொடுக்கப்படும் என்பதும் தெரியவில்லை. இதை பெற்றோரிடம் மறைக்கவே வீட்டில் இருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியது தெரிந்தது, என்று போலீசாருக்குத் தெரிந்தது. இதனால் “பேஸ்புக்” விவகாரங்களை ஆராய ஆரம்பித்தனர். இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், 2 தனிப்படை அமைக்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையில் விசாரித்தபோது அதுபோல அங்கு யாரும் பணியாற்றவில்லை என தெரியவந்தது. போலீசார் முகமது ஷானுவின் செல்போன் நம்பரை வைத்து அவர் யார்? என்ற விவரங்களை சேகரித்தபோது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

பேஸ்புக் மூலம் ஏமாற்றி பெண்களுடன் உல்லாசம்[5]: முகமது ஷானுவின் உண்மையான பெயர் ரகுமத்துல்லா (வயது 27). அவர் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த அசன்அலி என்பவரது மகன் என்றும், 10–ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் எனவும் தெரியவந்தது. “பேஸ்புக்” தொடர்புகளை “சைபர்-கிரைம்” மூலம் கண்காணிக்கப்பட்டது. அவருடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் யாராவது அவரை தொடர்பு கொள்கிறார்களா? என போலீசார் இரவு பகலாக கண்காணித்து வந்தனர். அப்போது டாக்டர் ஷானு என்ற பெயரில் ரகுமத்துல்லா சென்னை, சேலம், கன்னியாகுமரி, பெங்களூரு, திருநெல்வேலி என பல பகுதிகளிலும் பேஸ்புக் மூலம் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. டாக்டர் என கூறியதால் பல இளம்பெண்கள் அவருடன் தொடர்பு கொண்டுள்ளனர். இதில் எளிதில் ஏமாறுபவர்களை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி பழகி வந்துள்ளார். இதில் ஏமாறும் பெண்களுடன் உல்லாசமாக சுற்றிவிட்டு, கிடைக்கும் நகைகளை சுருட்டிக்கொண்டு அதை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். எப்படி, அப்படி இளம் பெண்கள் எளிதாக ஏமாறுகிறார்கள் என்றும் தெரியவில்லை.

பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிப்பு

பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிப்பு

பேஸ்புக் பெண் நண்பர் போலி டாக்டரை ஓட்டலுக்கு அழைத்தது: அவரது பேஸ்புக்கை தொடர்ந்து கண்காணித்தபோது, தற்போது ஒரு இளம்பெண், அவருடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது. அந்த பெண்ணை சந்தித்த தனிப்படை போலீசார், ரகுமத்துல்லா பற்றிய விபரங்களை கூறியதும் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். தன்னைக் காதலிப்பதாகத்தான் “பேஸ்புக்கில்” உரையாடி போன் நம்பர் முதலியவற்றை அவன்வாங்கியுள்ளதாகத் தெரிவித்தாள். இதனால், தொடர்ந்து ரகுமதுல்லாவிடம் சந்தேகம் வராதது போல பேசி அவரை வரவழைக்க அந்த பெண்ணிடம் போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி அந்த பெண், குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சில நாட்களுக்கு முன் ரகமதுல்லாவை வரவழைத்தார். அப்போது, அங்கு மாறு வேடத்தில் இருந்த தனிப்படை போலீசார், அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்[6].

போலி டாக்டரின் காம வலையில் சிக்கிய பேஸ்புக் நண்பிகள்: ரகமத்துல்லாவிடம் விசாரணை செய்தபோது, அவன் உண்மையினை ஒப்புக்கொண்டுள்ளான். இதுபற்றி போலீசார் கூறியதாவது, “இவர், டாக்டர் சானு என்ற  பெயரில் சென்னை, சேலம், கன்னியாகுமரி, பெங்களூர், திருநெல்வேலி என பல பகுதிகளிலும் பேஸ்புக் மூலம் பல பெண்களை நண்பர்களாக்கி  உள்ளார். தன்னை டாக்டர் என காட்டிக்கொண்டதால், பலர் அவருடன் நட்பு வட்டாரத்தில் இணைந்துள்ளனர்[7]. இதில் யார் எளிதில் ஏமாறுவார் என்பதை அறிந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, அவர்களிடம் டாக்டர் போலவே நடித்து  பழகி வந்துள்ளார். இதில் ஏமாறும் பெண்களிடம் நகைகளை வாங்கி கொண்டு அதை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவரிடம் ஏமாந்த  பெண்கள் போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் இதுவரை போலீசில் சிக்கவில்லை”, என தெரிவித்தனர்.

 

போலி டாக்டர் கைது: இவரிடம் ஏமாந்த பெண்கள் அவமானம் காரணமாக போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் தீராத விளையாட்டு பிள்ளையாய் தன்னுடைய லீலைகளை தொடர்ந்துள்ளார், என்று ஒரு நாளிதழ் கூறுகிறது. அப்படியென்றால், பாதிக்கப் பட்ட பெண்கள் எப்படி தங்களது குற்றவுணர்வை மறைத்துக் கொள்கின்றனர், பின்விளைவுகளை சரிசெய்து கொள்கின்றனர் என்பதும் வியப்புகுறிகளாக உள்ளன. ரகுமத்துல்லாவை கைது செய்த போலீசார், அவரை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சுமார் 40 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பேஸ்புக் மூலம் இளம்பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அறிமுகத்தை செய்து வைக்கக் கூட்டம் வேலை செய்யும் போது, அவர்களையும் “சைபர் கிரைம்” வலையில் கண்காணிப்பப் படவேண்டும்.

பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது, தெரியவந்தது[8]: இதில் தான் விவகாரங்கள் அடங்கியுள்ளன என்று தெரிகிறது. இப்பிரச்சினை பொதுவாகவும், இஸ்லாம் நோக்கிலும் ஆராய வேண்டியுள்ளது. பொதுவாக படித்த பெண்கள் ஏமாறுவார்களா என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. அப்படி இளம்பெண்கள் எப்படி, ஏன், எவ்விதமாகத் தூண்டப் படுகிறார்கள் என்றும் நோக்கத்தக்கது. குடும்பத்தில் இளம்பெண்கள் மிகவும் கட்டுப்பாட்டோடுத் தான் வளர்க்கப் படுகிறார்கள். இன்றைய சூழ்நிலைகளில், சிறுமிகள், இளம்பெண்கள் முதலியோர் அடுத்த பையன்கள், வாலிபர்களுடன் பேசுவது, பழகுவது முதலியவை படித்த-நாகரிகமான குடும்பங்களில் அனுமதிக்கப் படுகிறது. ஆனால், “நட்பு” என்ற வட்டத்தில் தான் அது அனுமதிகிகப்படுகிறது. இருப்பினும், இணைத்தள விவகாரங்கள் அவர்களை கட்டுக்கடங்காமல் செய்ய தூண்டுகிறது. அதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் வலைவீசும் போது, இத்தகைய பெண்கள் மாட்டிக் கொள்கிறார்கள் போலும். பழகிய பெண்களிடம் உடனே பாலியல் பலாத்காரம் செய்துவிட முடியாது. அதனால், பழகும் போதே வீடியோ எடுப்பது போன்ற விவகாரங்கள் இருந்தால், அவற்றை வைத்து மிரட்டி அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு மிரட்டி நகைகளைப் பறித்தல், முதலியன குற்றவாளிகளின் சாதாரண-வழக்கமான வேலைகள் தாம் என்பது தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

04-02-2015

[1] தினமலர், ‘பேஸ்புக்கில் டாக்டராக நடித்து பெண்களை சீரழித்தவன் கைது : பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை, சென்னை, புதன், 04-02-2015, பக்கம்.6.

[2] தினத்தந்தி, சேலம் உள்பட பல இடங்களில்பேஸ்புக்மூலம் பல பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்த போலி டாக்டர் கைது, பதிவு செய்த நாள்:புதன், பெப்ரவரி 04,2015, 1:50 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், பெப்ரவரி 04,2015, 1:50 AM IST;

[3] சமீபத்தில் சவால்கள், அதைப் பற்றிய சுவரொட்டிகள், செய்திகள், வாதங்கள்-விவாதங்கள் எல்லாம் வெளிவந்தன.

https://islamindia.wordpress.com/2014/12/30/muslim-wizards-arrested-for-naked-ritual-performed-and-sexual-harassment/

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130284

[5] http://www.dailythanthi.com/News/State/2015/02/04015044/With-FacebookCheated-and-deprived-women-jewelryFake.vpf

[6] தினகரன், பேஸ்புக் மூலம் பழகி பெண்களிடம் நகை மோசடி போலி டாக்டர் பிடிபட்டார், சென்னை, 04-02-2015.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130284

[8] http://www.dinamalar.com/district_detail.asp?id=1175536