Archive for the ‘பேகம்’ category

காதலிப்பது தவறா-சரியா – இஸ்லாத்தில் காதல் ஹராமா, ஹலாலா?

ஓகஸ்ட் 31, 2016

காதலிப்பது தவறா-சரியா – இஸ்லாத்தில் காதல் ஹராமா, ஹலாலா?

அசன் காதல் - தினகரன்

ரஜபுனிசாபேகம்அசன் காதல் விவகாரம்: திருச்சி ஏர்போர்ட் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜமால் மொய்தீன். இவரது மகள் ரஜபுனிசாபேகம் (20). டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார்[1]. ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்த அலாவுதீன் மகன் அசன் (23) என்பவரை காதலித்து வருகிறார். காதல் விவகாரம் ரஜபுனிசாபேகம் பெற்றோருக்கு தெரியவந்ததால், காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி 25-08-2016 அன்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்[2]. ஆக ஒரு முஸ்லிம் பெண், ஒரு முஸ்லிம் பையனை காதலிக்கிறாள். இருவரும் மேஜர், என்று தெரிகிறது. அதாவது, காதலன் – காதலி விரும்பினால், தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.

ரஜபுனிசா பேகம் - அசன் காதல் - தினகரன்

ஆகஸ்ட்.24, 2016 அன்று வீட்டை விட்டு வெளியேறிய ரஜபுனிசா பேகம்: ரஜபுனிசா பேகம் அளித்த மனுவில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்தனர்[3]. உறவினருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர்[4]. தந்தைக்கு உதவியாக வடிவேல் என்பவர் செயல்படுகிறார். அவர் என்னிடம் ஒழுங்காக அவனை மறந்துவிடு. இல்லை என்றால் உன் காதலனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இவர்களிடம் இருந்து தப்பிக்க, நீங்கள் கூறுபவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் கல்லூரி வந்தேன். அங்கிருந்து கடந்த ஆகஸ்ட். 24ம் தேதி காதலனுடன் வெளியேறினேன்[5].

ரஜபுனிசா பேகம் - அசன் காதல் - எதிர்ப்பு - தினகரன்

ஆகஸ்ட்.26, 2016 அன்று போலீஸில் புகார் கொடுத்த ரஜபுனிசா பேகம்:இதையடுத்து காதலரை செல்போனில் தொடர்பு கொண்ட பெற்றோர் மற்றும் வடிவேல் தலைமையிலான ரவுடி கும்பல் எங்கள் 2 பேரின் தலையை வெட்டி ரோட்டில் வீசுவதாக மிரட்டுகின்றனர்[6]. இதுகுறித்து விசாரித்து எனது பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் கபிலன் விசாரணை நடத்தி வருகின்றார். கமிஷனர் அலுவலகம் முன் ரஜபுனிஷாபேகத்தின் பெற்றோர், உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆகஸ்ட்.30, 2016 வரை இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும் விவகாரம்: “தினகரன்” நாளிதழில் வெளியான இச்செய்தி, மற்ற இரண்டு இணைதளங்களில் அப்படியே வெளியிட்டுள்ளன. மூன்று நாட்களாகத் தேடியும் மற்ற நாளிதழ்களில் இச்செய்தியை காணவில்லை. ஆங்கில ஊடகங்களிலும் தேடிப்பார்த்து அலுத்து விட்டது. அப்படியென்றால், இச்செய்தியை அமுக்கி வாசித்தது, மறைப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

Islam, love, haram or halal

ரஜபுனிசாபேகம் கூறும் விவரங்களில் பல விசயங்கள் வெளிப்படுகின்றன: இதனை பொதுப்பிரச்சினையாக எடுத்துக் கொண்டால், பெற்றோரை மீறி காதலித்து, ஒரு பையனுடன் வெளியேறும் போது, பெற்றோர் மிக்க வருத்தம் அடைவர், சமூகத்தில் அவமானம் ஏற்படுகிறது, உறவினரிடையே மரியாதை போகிறது என்றெல்லாம் உள்ளது. ஆனால், முஸ்லிம் பையன்-பெண் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதில் வேறென்ன பிரச்சினைகள் இருக்க முடியும்?

1.   காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்தனர்[7]. நிச்சயமாக, எல்லா பேற்றோர்களும் செய்வது தான்.
2.   உறவினருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர்[8]. இதெல்லாம் கூட சகஜமான விவகாரங்கள் தாம்.
3.   தந்தைக்கு உதவியாக வடிவேல் என்பவர் செயல்படுகிறார். இங்குதான் “வடிவேல்” விசித்திரமாக உள்ளது. அவர் ஒரு “இந்து” என்ற ரீதியில், ஏன் முஸ்லிம்களுக்கு உதவியாக செயல்பட வேண்டும் அல்லது முடியும்?
4.   அவர் என்னிடம் ஒழுங்காக அவனை மறந்துவிடு. இல்லை என்றால் உன் காதலனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். வடிவேல் எப்படி, இப்படி மிரட்ட முடியும்? முஸ்லிம்களுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்யும் அளவுக்கு “வடிவேல்” உள்ளாரா அல்லது அவர் காசுக்காக மிரட்டும் அடியாளா?
5.   இவர்களிடம் இருந்து தப்பிக்க, நீங்கள் கூறுபவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் கல்லூரி வந்தேன். பொய் சொல்லி கல்லூரிக்கு சென்றது, அங்கிருந்து காதலனுடன் போலீஸுக்கு ஓடி வந்ததும், தெரிந்த விசயம் தான்.
6.   அங்கிருந்து கடந்த 24ம் தேதி காதலனுடன் வெளியேறினேன்[9]. அதாவது, காதலி தீர்மானமாக காதலனுடன் ஓடி வந்து, போலீஸாரிடம் தஞ்சம் புகுந்துள்ளாள்.

ஆனால், காதலன் அசன் மௌனமாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவனுடைய பெற்றோரும் இவ்விசயத்தில் தலையிடாதது அல்லது இல்லாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

Islam, love, haram or halal-llll

© வேதபிரகாஷ்

31-08-2016

Islam, love, haram or halal-ooooo

[1] தினகரன், தலையை வெட்டி வீசுவோம்காதல் ஜோடிக்கு மிரட்டல், Date: 2016-08-26@ 18:21:35

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=241472

[3] தமிழ்.முரசு, தலையை வெட்டி வீசுவோம்காதல் ஜோடிக்கு மிரட்டல், 8/26/2016 2:34:38 PM

[4] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=97086

[5] தமிழ்மித்ரன், தலையை வெட்டி வீசுவோம்காதல் ஜோடிக்கு மிரட்டல், ஆகஸ்ட்.26, 2016.

[6] http://www.tamilmithran.com/article-source/ODI0MDA5/%E2%80%98%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE – .V8TCQ1t95dg

[7] தமிழ்.முரசு, தலையை வெட்டி வீசுவோம்காதல் ஜோடிக்கு மிரட்டல், 8/26/2016 2:34:38 PM

[8] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=97086

[9] தமிழ்மித்ரன், தலையை வெட்டி வீசுவோம்காதல் ஜோடிக்கு மிரட்டல், ஆகஸ்ட்.26, 2016.

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (2

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (2)

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

விவாகரத்து வேண்டும் என்று கேட்ட பவித்ரா[1]: தனது மனைவியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை பழனி தாக்கல் செய்தார். இதனால், தனிப் படை அமைத்து பவித்ராவை போலீஸார் தேடினர். அம்பத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பவித்ராவை மீட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு பவித்ரா நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் நடந்த விசாரணை வருமாறு[2]:

நீதிபதிகள்: நீ தான் பவித்ராவா?

பவித்ரா: ஆமாம், நான்தான் பவித்ரா.

நீதிபதிகள்: நீ யாருடன் செல்ல விரும்புகிறாய். பெற்றோருடனா அல்லது கணவருடனா?

பவித்ரா: பெற்றோருடன் செல்ல விரும்புகிறேன். ஆனால், எனக்கு விவாகரத்து வேண்டும். ‘என் கணவரிடம் இருந்து என் பெற்றோர் விவாகரத்து வாங்கித்தர வேண்டும்’ என்றும் நீதிபதியிடம் அவர் கூறினார்.

நீதிபதிகள், ‘உன்னுடைய பெற்றோருடன் செல்கிறாயா?’ என்று கேட்டார்கள். அப்போது கோர்ட்டு அறையில் இருந்த வக்கீல் சங்கத்தலைவர் பால்கனகராஜ், ‘இந்த பெண் காணவில்லை என்ற வழக்கு விசாரணையின் தொடர் நடவடிக்கையில் தான் ஆம்பூரில் கலவரம் ஏற்பட்டது’ என்று கூறினார். இதையடுத்து நடந்த விவாதம் பின்வருமாறு:-

நீதிபதிகள்:- பத்திரிகைகளில் வெளியான செய்திகளை படித்தோம். ஷமில் அகமதுவுக்கு திருமணமாகிவிட்டது. உனக்கும் திருமணமாகிவிட்டது. கணவர், குழந்தை உள்ளனர். அப்புறம் என்ன? இப்போது அந்த வாலிபரும் இறந்துவிட்டார். அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளினால் தான், மதக்கலவரம், சாதிக்கலவரம் நடக்கிறது. ஏற்கனவே திருமணம் நடக்காத ஆணும், பெண்ணும் வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருந்தாலும், சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் இருவருக்கும் திருமணம் செய்துவைக்கலாம்[3]. ஆனால், இங்கு இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி இவர்களது திருமணத்தை ஏற்க முடியும்?  [இருவருக்கும் குழந்தைகள் உள்ளன என்ற விசயம் இங்கு வெளிப்படுகிறது. மேலும் இரு மதத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதால், இச்சட்டம் பற்றி குறிப்பிடுவது, அத்தகைய நிலை இருப்பதை அவர்கள் அறிந்துள்ளனர் என்று தெரிகிறது]

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

பிடிவாதமாக விவாகரத்து கேட்ட பவித்ரா[4]: நீதிபதிகள் எவ்வளவு அறிவுரை கூறியும், விவரங்களை எடுத்துக் கூறியும், பவித்ரா பிடிவாதமாக விவாக ரத்து வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது அனைவரையும் திகைக்க வைத்தது.

பவித்ரா:- என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

நீதிபதிகள்:- விவாகரத்து என்ன பெட்டிக்கடையில் கிடைக்கும் பொருளா? காசு கொடுத்து வாங்குவதற்கு? விவாகரத்து வேண்டும் என்றால் அதுதொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய வேறு நீதிமன்றம் உள்ளது. நினைத்தவுடன் விவாகரத்து கிடைத்துவிடுமா?

அரசு வக்கீல் தம்பித்துரை:- ஆம்பூரில் நடந்துள்ள கலவரத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துகள், வாகனங்கள் நாசமாகியுள்ளன.

பால்கனகராஜ்:- இந்த வழக்கை சாதாரண ஆட்கொணர்வு மனுவாக ஐகோர்ட்டு கருதக்கூடாது. ஏன் என்றால், ஏற்கனவே திருமணமான ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது தொடர்பான பிரச்சினைக்கு தெளிவான சட்டம் இல்லை. எனவே, இந்த வழக்கை அரிதான வழக்காக கருதி, சிறப்பு கவனம் செலுத்தி இதுபோன்ற பிரச்சினைகளில் போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என்று விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ராவுக்கு நீதிபதிகள் ஆலோசனை[5]: நீதிபதிகள்:- (பவித்ராவை பார்த்து) உனக்கு கணவர், குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுடன் சந்தோஷமாக வாழவேண்டும். தேவையில்லாத பிரச்சினை எதற்கு? உனக்கு ஷமில் அகமது தெரியுமா?

பவித்ரா:- ஒரே கம்பெனியில் வேலை செய்யும்போது அவரை தெரியும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் (குறுக் கிட்டு): இது முக்கியமான வழக்கு என்பதால் இங்கே நாங்கள் எல்லாம் கூடியிருக்கிறோம். ஆம்பூர் சம்பவத்துக்கு இந்தப் பெண்தான் மூல காரணம். அங்கு நடந்த வன்முறையில் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏராள மானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். திருமணமான ஒரு பெண், திருமணமான ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்றுவிட்டால், அந்த வழக்கை எப்படி கையாள வேண்டும்? என்று போலீஸாருக்கு இந்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை உருவாக்கித் தரவேண்டும். அது ஒரு முன்உதாரணமாக இருக்கும்[6].

நீதிபதிகள்: ஆம்பூரில் நடந்த சம்பவத்துக்கு நாங்களும் வருந்துகிறோம். பவித்ரா மேஜரான பெண். அவரை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. அவர் பெற்றோருடன் செல்ல விரும்புகிறார்.

ஆர்.சி.பால்கனகராஜ்: ஆம்பூரில் இப்போது சுமுகமான சூழல் இல்லை. இந்நிலையில், பவித்ராவை அங்கு அனுப்பினால் அவருக்கு பாதுகாப்பாக இருக்காது. இதை கருத்தில் கொண்டு தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்[7].

அரசு வக்கீல்:- அவரது கருத்தை இந்த வழக்கில் பதிவு செய்யக்கூடாது. ஏற்கனவே அவர் காணாமல்போனதாக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. அந்த விசாரணைக்கு பாதிப்பு வரக்கூடாது.

பால்கனகராஜ்:- தற்போது இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு இந்த பெண் காணாமல்போன சம்பவம் தான் காரணம். எனவே, இந்த பெண்ணை பெற்றோரிடம் தற்போது அனுப்பினால், தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நீதிபதிகள்:- தற்போது பவித்ரா எங்கே வசிக்கிறார்?

பவித்ரா:- சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் உள்ளேன்.

நீதிபதிகள்:- அதே விடுதியில் 2 வாரத்துக்கு தங்கி இருக்க வேண்டும். இவருக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

ஜூலை 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு[8]: இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அம்பத்தூரில் ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்து கடை ஒன்றில் வேலை செய்துவருவதாகவும், தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் பவித்ரா கூறினார். ஆம்பூர் கலவரம் பற்றியும் இங்கே கூறினார்கள். எனவே இந்த வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று பவித்ரா நேரில் ஆஜராக வேண்டும். அதுவரை தற்போது அவர் தங்கி இருக்கும் விடுதியிலேயே தங்கியிருக்க வேண்டும். அவருக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] தினத்தந்தி, ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான பவித்ரா சென்னையில் தங்கி இருக்க உத்தரவு, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூலை 07,2015, 5:15 AM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூலை 07,2015, 4:36 AM IST

[2] தி இந்து, ஆம்பூர் பவித்ரா உயர் நீதிமன்றத்தில் ஆஜர்: 23-ம் தேதி வரை விடுதியில் தங்கியிருக்க உத்தரவு, Published: July 7, 2015 07:33 ISTUpdated: July 7, 2015 15:21 IST

[3] 4. Conditions relating to solemnization of special marriages

Notwithstanding anything contained in any other law for the time being in force relating to the solemnization of marriages, a marriage between any two persons may be solemnized under this Act, if at the time of the marriage the following conditions are fulfilled, namely:

(a) Neither party has a spouse living;

1[(b) Neither party-

(i) Is incapable of giving a valid consent to it in consequence of unsoundness mind; or

(ii) Though capable of giving a valid consent, has been suffering from mental disorder of such a kind or to such an extent as to be unfit for marriage and the procreation of children; or

(iii) has been subject to recurrent attacks of insanity 2[* * *]

(c) The male has completed the age of twenty-one years and the female the age of eighteen years;

3[(d) The parties are not within the degrees of prohibited relationship;

Provided that where a custom governing at least one of the parties permits of a marriage between them, such marriage may be solemnized, not withstanding that they are within the degrees of prohibited relationship; and ]

4[(e) Where the marriage is solemnized in the State of Jammu and Kashmir, both parties are citizens of India domiciled in the territories to which this Act extends.]

5[Explanation. -In this section, “customs”, in relation to a person belonging to any tribe, community, group or family, means any rule which the State Government may, by notification in the Official Gazette, specify in this behalf as applicable to members of that tribe, community, group or family;

http://www.vakilno1.com/bareacts/splmarriage1954/specialmarriageact.html

[4] http://www.dailythanthi.com/News/State/2015/07/07043612/Root-cause-of-the-Ambur-mishap-pavithra-ordered-to.vpf

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/aambur-violence-pavithra-appear-madras-high-court-230417.html#slide161128

[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-23%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7394400.ece

[7] ஆம்பூருக்குச் சென்றால் அவருக்கு / பவித்ராவுக்கு பாதுகாப்பாக இருக்காது, என்பதும் நோக்கத்தக்கது. யாரால் அவருக்கு அத்தகைய பாதுகாப்பு பாதகம் ஏற்படும் நிலை ஏற்படும் என்றும் யோசிக்கத் தக்கது. முஸ்லிம் அமைப்புகள் கலவரத்திற்கு காரணம் பவித்ரா தான் என்ற பிரச்சாரத்தை, இணைதளம் மூலமும், டிவி-பேட்டிகள் (ராஜ்-டிவி) மூலமும் செய்துள்ளன.

[8] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aambur-violence-pavithra-appear-madras-high-court-230417.html#slide161128

அன்சாரின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

மார்ச் 13, 2014

அன்சாரின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

 

Nellai Muslim married 4 and tries for 5 - 2014

Nellai Muslim married 4 and tries for 5 – 2014

நதிரா பானு என்ற பெண் அன்சார் என்பவர் மீது புகார் (மார்ச்.2014): நெல்லை தச்சநல்லூர் பகுதியில் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நதிராபானு (வயது 25). இவர் தனது 3 குழந்தைகள் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகளுடன் நெல்லை கலெக்டர் மாவட்ட அலுவலகத்திற்கு வந்து 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: “எனக்கும், மேலப்பாளையத்தைச் சேர்ந்த அன்சார் (48) என்பவருக்கும் கடந்த 30.5.2009 அன்று இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. அன்சார் நெல்லையில் பல இடங்களில் ஓட்டல் நடத்தி வருகிறார். தனது முதல் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதாலேயே, என்னை திருமணம் செய்து கொள்வதாக அன்சாரி கூறியிருந்தார். ஆனால், ஏற்கனவே அவருக்கு ஏற்கெனவே இரண்டாவது மனைவி நூர்ஜஹான், மற்றும் மூன்றாவது மனைவி என்று மொத்தம் மூன்று மனைவிகள் இருப்பது பின்னர் தெரியவந்தது[1]. இதுதவிர அவர் ஏராளமான பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளார் என்பதும் எனக்கு தெரிய வந்தது”. நான்கு மனைவியர் கூட ஐந்து, அதுவில்லாமல் மற்ற பெண்களிடம் தகாத தொடர்பு வைத்துள்ளது என்றால், இஸ்லாம் எப்படி இவற்றை அனுமதிக்கிறது, மற்றும் அதற்கும் குரான், ஷதீஸ் மற்றும் ஷரீயத்தில் ஆதாரம் உள்ளது என்று காட்டுவார்களா, அப்படியென்றால், முஸ்லிம் பெண்களின் கதியென்ன?

 

அன்சார் பிரச்சினை இஸ்லாமா இல்லையா 2014

அன்சார் பிரச்சினை இஸ்லாமா இல்லையா 2014

5வது திருமணம் செய்ய முயன்ற போது, 4வது மனை புகார்: நதிராபானு தொடர்கிறார், “சில நாட்கள் கழித்தே எனது கணவர் என்னை 4வதாக திருமணம் செய்தது தெரியவந்தது.  எனக்கு 10 பவுன் நகை சீதனமாக எனது பெற்றோர் கொடுத்தனர்[2]. எங்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் என்னிடம், ‘‘எனக்கு 4 மனைவிகள், 14 குழந்தைகள் உள்ளனர். இதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் என்னுடன் நீ வாழ முடியாது”, என்றார். ஏழ்மை காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் திடீரென அவர் வேறு பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என்று கூறி என்னை கையெழுத்து போட சொல்கிறார். நான் மறுக்கவே சாப்பாடு போடாமல் என்னை பட்டினி போடுகிறார். அவரது கொடுமை தாங்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன்”[3]. அதாவது நான்காவதாகத்தான் இப்பெண்னை திருமணம் செய்து கொண்டுள்ளார், பிறகு வற்புறுத்தி ஒப்புதல் கடிதம் வாங்கிக் கொண்டு, இன்னொருத்தியை நிக்காஹ் செய்து கொள்ள முயல்கிறார் என்றாகிறது.

 

நதிரா பானு - அன்சார் - 5-நிக்காஹ் 2014

நதிரா பானு – அன்சார் – 5-நிக்காஹ் 2014

4வது மனைவியைக் கொடுமைப் படுத்தியது: நதிராபானு தொடர்கிறார், “இதைத் தட்டிக் கேட்ட என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதுகுறித்து எனது அவரிடம் கேட்ட போது என்னை அடித்து சித்ரவதை செய்து தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். ஒரு முறை என்னிடம் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு, விரட்டியடித்தார். பின்னர் மறுபடியும் என்னிடம் வந்து தனியாக வீடு வாங்கி காஞ்சிபுரத்தில் குடிவைத்தார். என்னுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி அழைத்து சென்றார். மீண்டும் நான் கார்ப்பமானோன். ஆனால் அவர் கட்டாயப்படுத்தி அதை கலைத்தார் அங்கு வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பை வளர்த்து கொண்டார். இதை நான் கண்டித்தபோது, என்னை வீட்டில் அடைத்து வைத்து மேலும், மேலும் சித்ரவதை செய்தார். இந்நிலையில் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டி வருகிறார். தற்போது மீண்டும் வீட்டை விட்டு என்னை அடி த்து துரத்தி விட்டார்”[4].

 

5வது திருமணம் முஸ்லிம்

5வது திருமணம் முஸ்லிம்

முதல் மனைவி, அவரது மகன், கணவன் என்று எல்லோரும் கூட்டு சேர்ந்துள்ளது எதைக் காட்டுகிறது?: நதிராபானு தொடர்கிறார், “அதன் பின் அந்த வீட்டை காலி செய்து விட்டு மேல்பாளையம் வந்தோம். அங்கும் வேறொரு பெண்ணை அழைத்து வந்தார். தட்டி கேட்ட என்னை அடித்து மிதித்து வீட்டின் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அதில் கூறியுள்ளார். எனவே  அடித்தும் மிரட்டியும் சித்ரவதை செய்த என் கணவர் அன்சாரி மீதும் அவருக்கு உடந்தையாக உள்ள மூத்த மனைவி நூர்ஜஹான், அவரது மகன் ரஷீத் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்[5]. இந்த சம்பவத்தால் மேலப்பாளையமே அதிர்ந்து போய் கிடக்கிறது.  மனு அளிக்கும் இயக்கத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் ஸ்ரீராம் உடன் இருந்தார். முதல் மனைவி, அவரது மகன், கணவன் என்று எல்லோரும் கூட்டு சேர்ந்துள்ளது, முறையான தாம்பத்தியத்தை, இல்லறத்தைக் காட்டுகிறாதா அல்லது அதற்கும் மீறிய காரியங்களைக் காட்டுகிறதா என்று மனசாட்சியுடன் சம்பந்தப்பட்டவர்கள் தாம் விளக்க வேண்டும்.

 

இஸ்லாம் பலதார மணத்திற்கு உபயோகப் படுத்தப் படுகிறது

இஸ்லாம் பலதார மணத்திற்கு உபயோகப் படுத்தப் படுகிறது

இது இஸ்லாம் பிரச்சினையா, பெண்கள் பிரச்சினையா அல்லது சமூகப் பிரச்சினையா?: மறைந்த அதிமுக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சைக்கு மூன்று மனைவிகள். அவரது மகன் ஆசிக் மீராவின் மீது தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்து சில நாட்கள் தாம் ஆகியுள்ளன[6]. அதற்குள் இப்படி இன்னொரு புகார் வந்துள்ளது. முன்னர் யுவன் சங்கர் ராஜாவே பலதார திருமணத்திற்காக இஸ்லாம் மாறினார் என்ற செய்திகள் வந்தன[7]. இணைதளங்களில் முஸ்லிம்கள், இதை ஏதோ பெரிய வெற்றி போல விவரங்களை வாரி அளித்தனர்[8]. ஆர். எஸ். அந்தணன் என்ற புனைப்பெயரில் இஸ்லாம் ஏதோ சாதிக்கிறது என்பது போல வரைந்து தள்ளினர்[9]. பைசூல்-பர்வீன் விவகாரமும் எப்படி இஸ்லாம் பலதார மணத்திற்கு உதவுகிறது, பெண்களை ஒரு அற்ப செக்ஸ்-பண்டமாக உபயோகப் படுத்த பயன்படுத்தப் படுகிறது என்று அவர்களே எடுத்துக் காட்டிக் கொண்டார்கள்[10]. அதில் ஒரு முஸ்லிம் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் செக்ஸுக்கு உட்படுத்தி கொள்ளலாம், பணம் கொடுத்து சரிகட்டலாம், நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டலாம் என்றெல்லாம் கூட வெளியாகின[11]. இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

  1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[12]
  2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[13]
  3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[14]

இவ்விவகாரத்தில் குறிப்பாக, பைசூல் திருமணம் செய்து கொள்ளாமலேயே பர்வீனுடல் குடும்பம் நடத்தி வந்தார், உடலுறவு கொண்டார், அதனை வீடியோ எடுத்து பர்வீனை மிரட்டினார் என்ற குற்றங்கள் இருப்பதுக் கவனிக்கத் தக்கது.

 

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

முஸ்லிமாக  மாறி  ஒன்றிற்கு  மேலாக  மனைவியை  வைத்துக்  கொள்ள  சினிமாக்காரர்கள்  பயன்படுத்தி  வருகிறார்கள்[15]: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[16]. இப்பிரச்சினை  பல உச்சநீதி மன்ற தீர்ப்புகளிலும் அலசப்பட்டு தான் 1995ல் பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதி மன்ற ஒரு தீர்ப்பில் ஆணையிட்டது[17]. 2003 தீர்ப்பிலும் இது மறுபடியும் கூறப்பட்டது[18].

 

© வேதபிரகாஷ்

12-03-2014

 


[17] Smt Sarla Mudgal vs UOI & Ors – 1995 AIR 1531

[18] July 23, 2003: The Supreme Court today called for a common civil code for all citizens of the country, holding that it would not go against the two key constitutional provisions governing religion. The court said the effort to secure a uniform civil code across India — Article 44 — would not come in the way of the right to freedom of religion or the freedom to manage religious affairs as laid down in Articles 25 and 26 of the Constitution. Rather, it would “help the cause of national integration”.

http://www.telegraphindia.com/1030724/asp/frontpage/story_2194921.asp