Archive for the ‘பெரியார்’ category

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [2]

பிப்ரவரி 7, 2021

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [2]

1972ல் பெரியார் அழுதது, பேசியது: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “முன்னதாக காயிதே மில்லத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த புதுக் கல்லூரிக்குப் பெரியார் வந்தார். அப்போது அங்கே கடுமையான கூட்டம். பெரியாரின் நெருங்கிய நண்பரான ஈரோடு கே.ஏ.எஸ். அலாவுதீன் சாஹிப், கூட்டத்தினரை விலக்கிவிட்டு பெரியாரை காயிதே மில்லத் உடல் அருகே அழைத்துச் சென்றார். அப்போது தேம்பிய பெரியார், “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. உத்தமமான மனிதர். முஸ்லிம் சமுதாயத்துக்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம்,” என்று அனைவரின் காதுகளிலும் விழும்படி கூறினார். இதை அலாவுதீன் சாஹிபே பதிவுசெய்திருக்கிறார். பெரியார் சாதாரணமாக யாரையும் புகழ மாட்டார். அப்படிப்பட்ட பெரியாரிடம் இருந்து காயிதே மில்லத் பற்றி வெளியான இந்த வார்த்தைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு காயிதே மில்லத்தின் பெயரைச் சூட்டி அவரைப் பெருமைப்படுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு முஸ்லிம் சமுதாயத்துக்கு வெளியே காயிதே மில்லத்தின் மேன்மையைப் புரிந்துகொண்டு அரசியல் தலைவர்கள் கடமை ஆற்றினார்கள்.,” என்று எழுதி முடித்தது. காயிதே மில்லத்தின் நினைவிடம், சென்னை திருவல்லிக்கேணியில் வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 2016ல் ஈவேரா துலுக்கர் ஆனார் என்று கதைகட்டி விட்டனர். ஆனால், எடுபடவில்லை.

இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா, எதிர்த்தரா - அட்டை

பெரியார் துலுக்கர் ஆனாரா?- முகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[1]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்[2]. “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார்[3]. இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[4]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[5]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.

பெரியார் முஸ்லிம்

ஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929)[6]. ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை[7]. ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[8].

சாவதற்கு முன்னார் கலிமா சொல்லி மரணிப்பேன் - பெரியார்

பிரச்சாரம் கட்டுக்கதைகள் ஆராய்ச்சி ஆகாது: இவ்வாறு, துலுக்கர் அடிக்கடி, புதிய கதைகளை உருவாக்கி, பிரபலமடையச் செய்து, பரப்பி வருவதில், பெரிய விற்பன்னர்கள் எனலாம். இப்பொழுது, இன்னொரு கதையைக் கிளப்பி விடுகிறார்கள் போலும். இந்துத்டுவ வாதிகள், முக்கியமாக, ஆவணங்களை சரிபார்த்து ஆராய்ச்சி செய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஏதோ, ஒருபக்கமாக ஒரு சாரார் பேசியதாக அச்சில் வந்துள்ளவை என்றெல்லாம் வைத்து, முடிவுக்கு வருவது, தொடரும் போக்கு தெரிகிறது. தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது,” என்று இப்பொழுது, இத்தகைய விசயங்கள் வெளிவருவது விசித்திரமாக இருக்கிறது..“முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று / போன்று பிதற்றினாரா?,” என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆன்மா இல்லை, ஆவி இல்லை …..என்றெல்லாம் பேசி, கிண்டலடித்து வந்த பெரியார், பெரிய சித்தர் என்றெல்லாம் சிலர் போற்றி வந்த நிலையில், அவர் அழுதார், அரற்றினார், உடன் இறக்க முயன்றார்… என்று செய்தி உருவானது திகைப்பாக இருக்கிறது. மூலம் / உண்மை ஒன்று என்றால், சமீபத்தை நிகழ்வுகள் பற்றி ஒன்றிற்கு மேலான விவரங்கள் வருவது சிந்திக்க வேண்டிய பொருளாக மாறுகிறது

© வேதபிரகாஷ்

07-02-2021


[1] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[2] வேதபிரகாஷ், நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!, 02-04-2016.

[3] https://dravidianatheism.wordpress.com/2016/04/02/converting-periyar-to-islam-falsification-of-recent-history-by-muslims/

[4] https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[5] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html

[6] வேதபிரகாஷ், 19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில் இருந்தாரா, இல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாராபெரியாருக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!, 02-04-2016.

[7] https://dravidianatheism.wordpress.com/2016/04/02/islamization-of-dravidian-movement-by-making-periyar-a-mohammedan/

[8] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013, http://bushracare.blogspot.in/2013/09/5.html

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக-பகுத்தறிவு-கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (2)!

மார்ச் 19, 2017

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திகபகுத்தறிவுகம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாதுஇருந்து விமர்சித்தால் கொலை தான் (2)!

Farooq - Ukkadam scrap market

தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென அழைத்து கொலை செய்யப் பட்டது: கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பாரூக் (31). உக்கடம் “பிலால் மார்கெட்டில்” பழைய இரும்பு சந்தையில் வியாபாரம் செய்து வந்தார். இரும்பு வியாபரமே பெரிய அளவில் கள்ளத்தனமாக, வரியேப்பில் தான் நடந்து வருகிறது[1]. அதில், முகமதியர்கள் கில்லாடிகள். 16-03-2017 வியாழக்கிழமை அன்று பாரூக்கை செல்போனில் அழைத்த மர்ம நபர் தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென, உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு சென்ற பாரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க தொடங்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த பாரூக் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கடைவீதி காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Farooq murder, one surrendered - DM - 18_03_2017_012_036

அன்சர்ந்த், என்ற முஸ்லிம் கோவை 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 17-03-2017 அன்று சரணடைந்தது: அதற்குள் விசயம் அறிந்த திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யப் பட்டு தண்டிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர். இந்நிலையில் போத்தனூர் பகுதியை சேர்ந்த அன்சர்ந்த், கோவை 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 17-03-2017 அன்று சரணடைந்தார். தாடி வைத்த முகத்துடன் அவனது புகைப்படமும் நாளிதழ்களில் வெளியாகியது. இவரை வருகின்ற மார்ச் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தேடும் பணியை தீவிரபடுத்தி உள்ளனர். கொலையாளிகளுள் ஒருவன் முஸ்லிம் என்றதும் தமிழக ஊடகக்கள் அடங்கி விட்டன. மற்றவர்கள் வேலூரைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் யூகிக்கிறார்கள். ஆக, முஸ்லிமின் கொலைக்கு காரணம் முஸ்லிம் தான், காரணம் மதசமாசாரம் தான் என்று தெரிந்து விட்டது.

Muslim to atheist - Farooq murdered

பகுத்தறிவுநாத்திககம்யூனிஸ்டுகளின் மௌனநிலை: முஸ்லிம் விவகாரம் என்றால் சொல்ல வேண்டுமா, பகுத்தறிவு-நாத்திக-கம்யூனிஸ்டுகளின் நிலை மேலே எடுத்துக் காட்டப்பட்டது. தமிழக இச்செய்தியை ஓரம் தள்ளி விட்டன. ஆர்.கே. நகரை பிடித்துக் கொண்டன. செக்யூலரிஸ சித்தாந்தம் இப்படித்தான், சுதந்திரமாக செயல்படுகிறது போலும். மஹாராஷ்ட்ராவில், கர்நாடகாவில் நாத்திகன் கொலை செய்யப் பட்டால் குதிக்கிறார்கள். வீரமணி பக்கம்-பக்கமாக எழுதி தள்ளினார்! ஆனால், தமிழகத்தில், ஒன்றுமே நடக்காதது போல அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. “பெரியார் பிறந்த மண்ணில்” பிறந்தவர்களின் யோக்கியதையும் அந்த அளவுக்கு இருக்கிறது. அதாவது, இந்துமதம், இந்துகடவுளர்களை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அது செக்யூலரிஸ உரிமை என்று போற்றப்படும், ஆதரிக்கப் படும். முஸ்லிம்கள், கிருத்துவர்கள், நாத்திகர்கள், ஏன் இந்து-விரோதிகள் கூட அவ்வாறு செய்யலாம், “கருத்து சுதந்திரம்” என்று ஆராதிக்கப் படும். ஆனால், முஸ்லீமாக இருந்தால் கூட, இஸ்லாத்தை விமர்சிக்கக் கூடாது. செய்தால் கொலைதான்! செக்யூலரிஸ சித்தாந்திகள் இவ்வாறு இருப்பதும் நோக்கத்தக்கது.

Farooq murdered - Coimbatore- DM -17_03_2017_015_011_001

முஸ்லிம் நாத்திககனாக இருக்க முடியாது: கொலை செய்யப்பட்ட பாரூக் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவரை இஸ்லாம் மார்க்கத்திலிருந்து நீக்கி உள்ளனர். அதாவது, பத்வா போட்டு, மதபகிஷ்காரம் செய்துள்ளார்கள். உண்மையில், ஆசார இஸ்லாமியத்தின் படி, ஒரு முஸ்லிமை முஸ்லிம் அல்லாதவனாக ஆக்க முடியாது. இல்லை, முஸ்லிமாக பிறந்தவனும், இஸ்லாத்திலிருந்து வெளியேற முடியாது. ரகசியமாக, விளம்பரம் இல்லாமல் செய்யலாம் அது வேறு விசயம். ஆனால், முறைப்படி செய்வதானால், சாவு தான் அவனுக்கு முடிவு[2]. பாருக்குக்கு அதுதான் நேர்ந்துள்ளது. ஆனால், எந்த செக்யூலார்வாதியும் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலை தளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவேற்றம் செய்ததால் ஆத்திரமுற்று சிலர் கொலை செய்ததாக தெரியவருகிறது என்கிறது ஒரு இணைதள செய்தி. வாட்ஸ்அப் குரூப் நடத்தி வந்த பாரூக் அதில் கடவுள் மறுப்பு கொள்கையை தெரிவித்து வந்துள்ளார்[3]. தனது பேஸ்புக் பக்கத்திலும் மத மூட நம்பிக்கைகள், கடவுள் மறுப்பு விஷயங்களை தொடர்ந்து எழுதி வந்துள்ளார்[4]. அதாவது, ஒரு முஸ்லிம் கடவுள் இல்லை என்று சொல்லக் கூடாது, ஆனால், முஸ்லிம் கடவுள் இருக்கிறது, மற்ற கடவுள்கள் இல்லை என்று சொல்லல்லாம். இதுதான் இஸ்லாத்தின் செக்யூலரிஸவாதம். “லா இலா இல்லல்லஹ” என்பதற்கு, “அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்றுதான் விளக்கம் கொடுக்கிறார்கள். “இல்லை-இருக்கிறது” என்ற குழப்பத்தில் தோன்றிய இறையியலில், கடவுளின் தன்மை அவ்வாறு இருக்கிறது.

Farooq Coimbatore scrap dealer murdered - DM -17_03_2017_015_010

பாரூக்கின் வாட்ஸ்அப், பேஸ்புக் பதிவுகள் எதிர்க்கப்பட்டன, கண்டிக்கப் பட்டன: கடந்த மாதம் பிப்ரவரி, பாரூக்கின், நான்கு வயது குழந்தையின் பிறந்த நாள் விழா நடந்தது[5]. அதில், ‘கடவுள் இல்லை’ என்ற வாசகத்தை எழுதி, அவரது குழந்தை பிடித்திருந்த பதாகையுடன், போட்டோ போடப்பட்டது. இதன்பின், சிலர் அவரை மிரட்டியுள்ளனர். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. கருத்துரிமை என்று ஆதரித்து குரல் கொடுக்கவில்லை. யார்-யாரோ பேஸ்புக், டுவிட்டர் “குழாயடி” விவகாரங்களை னெல்லாம் செய்திகளாக்குகிறார்கள். ஆனால், இது யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில், முஸ்லிம் பிரச்சினை, இஸ்லாம் விவகாரம், நமக்கேன் வம்பு என்றுதான் ஒதுங்கியது மட்டுமல்லாமல், விசயத்தையும் அமுக்கப் பார்க்கிறார்கள். இஸ்லாத்தை ஒரு முஸ்லிம் கூட விமர்சிக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக இக்கொலை நடந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது[6]. இவைதான் அவரது உயிரை பறிக்க காரணமாக இருந்துவிட்டன என கூறப்படுகிறது. கருத்து சுந்திரத்திற்கு எதிராக கொலையாகவே இது பார்க்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் சிலரை கோபப்படுத்தியுள்ளன. அந்த குரூப்தான் இவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம் என்று கோவை துணை கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார். கோவையில் தாலிபானிசம் தனது முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளதா என அஞ்சியுள்ளனர் மக்கள். பாரூக் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல, திகவினருக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்[7]. இதனால், சாலை மறியலில் ஈடுபட்டனர்[8].

© வேதபிரகாஷ்

19-03-2017

Farooq murder - malaimalar - 18349983

[1] இதைப்பற்றியெல்லாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. தொழிலில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்தகைய வரியேய்த்த கள்ள வியாபார, கள்ளப் பணம் தாம், தீவிரவாத, சமூகவிரோத காரியங்களுக்கு உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

[2] “Takfeer” (Arabic: تكفير‎‎ takfīr) refers to the practice of excommunication, one Muslim declaring another Muslim as kafir (non-believer). The act which precipitates takfir is termed the mukaffir. An ill-founded takfir accusation is a major forbidden act.

[3] தமிழ்.ஒன்.இந்தியா, மதத்திற்கு எதிராக, வாட்ஸ்அப், பேஸ்புக்கில் கருத்து கூறியதற்காக வாலிபர் கொலை! அதிர்ச்சியில் கோவை, By: Veera Kumar, Published: Saturday, March 18, 2017, 15:44 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-man-hacked-death-over-atheistic-fb-posts-277287.html

[5] தினமலர், தி.வி.., பிரமுகர் கொலை கோவையில் ஒருவன் சரண், பதிவு செய்த நாள். மார்ச்.18, 2017, 00.48.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1732501

[7] தினகரன், கோவையில் திராவிடர் விடுதலை கழகம், விசிக உள்ளிட்ட கட்சிகள் சாலை மறியல், Date: 2017-03-17 15:52:18

[8] http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=287911